எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

மேகம் போலே என் வானில் வந்தவளே - கதை திரி

Status
Not open for further replies.

Nandhaki

Moderator

மேகம் - 01


பெங்களூர் சாலைகளின் டிராஃபிக் ஊடே மிதந்து வந்தது அந்த ஸ்கூட்டி. அங்கிருந்த பிரபலமான ஐடி கம்பனியின் பார்க்கிங்கில் பார்க் செய்தவள் பைக்கை விட்டு இறங்கி அண்ணாந்து பார்த்தாள்.

வளைந்து நெளிந்து நின்றது பட்டாண்டுர் அக்ரஹாராவில் அமைந்திருந்த அந்த டெக் பார்க்.

வான் நீல டெனிம் ஜீன்ஸ்சின் மேல் கருப்பு நிற ஷேர்ட் கண்ணில் கூலர், தோளில் பேக் பாக்குடன் அலுவலக கட்டிடத்தை நோக்கி நடந்தாள். இன்னும் ஒரு வருடத்தில் முப்பதை எட்டிப் பிடித்து விடுவாள். ஆனாலும் இருபத்தி ஐந்து வயதைத் தாண்டி மேலே ஒரு வயது கூற முடியாதா தோற்றம். அழகி ஒரு வார்த்தையில் கூறி விடலாம். அமைப்பான முகம், தேன் நிற நிறம். ஹிந்தி நடிகை ராணி முகர்ஜிக்கு பின் அவளுக்குதான் இந்த நிறம் அழகு.

வாசலில் ஐடி கார்டை ஸ்கேன் செய்து விட்டு உள்ளே சென்றாள். ஏறி செல்ல எஸ்காலேட்டர் ஓடிக் கொண்டிருக்க அதில் ஏறி நின்றவள் கூலரை சட்டையில் மாட்டி ஃபோனில் பார்வையைப் பதித்தாள். சோஷியல் மீடியாவை ஒன் செய்தால் அவன் முகம்தான் முன்னால் வந்தது.

பெருவிரலால் அவன் முகம் வருடினாளா இல்லை மேலே தட்டி விட்டாளா என்று தெரியவில்லை. அனைத்திலும் அவன்தான் இருந்தான்.

“ஹாய் வர்ஷி” என்ற குரலில் நிமிர ஃபோனில் செக் இன் பெங்களூர் என்ற மெசேஜ் தட்டுப் பட்டு மேலே சென்றது. அவள் கண்கள் உணர்ச்சியற்று அவனை நோக்கியது.

“ஓஹ் காமன் வர்ஷீ, நீ ஒகே சொல்ல உன் பின்னால் இன்னும் எத்தனை நாள் சுற்ற வேண்டும்.” என்றவனை முறைக்க “இல்ல சொன்னா வசதியா இருக்கும் இல்ல” வழிந்தான்.

“நானும் நல்ல பையன்தான். அம்மா அப்பாவுக்கு ஒரே பிள்ளை. நாத்தனார் பிரச்சனை இல்ல. அம்மா அப்பா எல்லோரும் ஊரில் தான். எப்போதாவது அங்கு போய் வந்தால் சரி. மாமியார் பிரச்சனையும் இல்ல. கார் இருக்கு சொந்த வீடு வாசல், எட்டாவது தளம் முழுதும் என் கம்பனிதான். விரும்பினால் என் கம்பெனியை நடத்தலாம் இல்லையா வேலைக்கு போகலாம். உன் விருப்பம்” என்றவன் ஆர்வமாய் அவள் முகம் பார்த்தான்.

ஆள் பார்ப்பதற்கு ஆறடி உயரத்தில் சிவந்த நிறத்தில் அழகாய்தான் இருந்தான். பணக்கார களை வேறு.

‘சொல்லி முடித்து விட்டயா?’ என்பது போல் பார்த்தவள் ஐந்தாவது தளத்தில் இறங்கிச் செல்ல ஆழ்ந்ந்து மூச்சுவிட்டான். அவளின் திறமையை பார்த்துதான் அவளை நெருங்கினான். ஆனால் அவளது வித்தியாசமான குணதிசயங்கள் அவனை ஈர்த்துவிட்டது. பணக்காரன் சொந்தமாய் கம்பனி நடத்துகிறான். அந்த கட்டிடத்தில் பாதி பெண்கள் அவனுக்கு ரூட் விட அவனே அவள் மீதான விருப்பத்தை சொல்லியும் ஒரு தரம் மறுத்தததோடு சரி அதற்கு பின் என்ன சொன்னாலும் பதில் மௌனம்தான். அவனிடம் மட்டுமில்லை. அந்த கட்டிடத்தில் வேலை செய்யும் யாருடனும் வேலையை தவிர வேறு விடயமாக கதைத்து பார்த்ததில்லை. கூட வேலை செய்யும் டீம் மேட்டிடம் மட்டும். அளவான புன்னகை. அவ்வளவுதான், அதை மீறி செல்ல யாராலும் முடியாது.

அவனும் இந்த மௌனத்தை உடைக்கத்தான் பார்க்கிறான். ஆனால் முடியவில்லை.

தன் கேபினுள் நுழைந்தவள் பாக்கை அதற்குரியஇடத்தில் வைத்தாள், லப்பை எடுத்து மேஜையில் வைத்து சார்ஜரை போட்டாள். மேசையில் இருந்த பூச்சாடியில் இருந்த பழைய பூவை எடுத்து விட்டு தான் கொண்டு வந்த புதுப் பூவை வைத்தாள். ஜன்னல் கண்ணாடியை திறந்து பறவைக்கு வைத்திருந்த தண்ணீரை மாற்றிக் கொண்டிருக்க உள்ளே வந்தால் அவளின் கீழ் வேலை செய்யும் சுஷ்மிதா முகர்ஜி.

“குட் மோர்னிங் மாம்”

சிறு புன்னகையுடன் “குட் மோர்னிங், எனிதிங் இம்போர்டன்ட்” அவளுக்கு தமிழ் வராது இவளுக்கு ஹிந்தி வராது. சம்பாசனை பொதுவாய் ஆங்கிலத்தில் செல்லும்.

“யெஸ் மாம், இன்று லண்டனில் இருந்து ஓர் முக்கியமான கிளைன்ட் வராதாம் டேட்டா அனலிசிஸ் எங்கள் டீம்தான் செய்ய வேண்டுமாம்”

“ஒல்ரைட் செய்திருவோம்” சாதரணமாய் கூறியவள் பறவைக்கான தீனியை எடுத்து வைத்தாள்.

“அதில் ஒரு சிக்கல்”

‘என்ன’ என்பது போல் பார்த்தாள்.

“அந்த ப்ராஜெக்ட் மிஸ்டர் பத்ரியுடன் சேர்ந்து செய்ய வேண்டும்” கவனத்துடன் அவள் உணர்வுகளை ஆராய்ந்தவாறே கூறினாள்.

“யூ மீன் எயிட் ப்ளோர் பத்ரி”

தலையை ஆட்டி வைத்தாள் சுஷ்மிதா.

தீனியை போட்ட விரல்கள் ஒரு கணம் செயல்பாட்டை நிறுத்தி விட்டு “நோ ப்ரோப்ளம்” என்றவள் தொடர்ந்து தீனியை போட இவளை எந்த கட்டகரியில் போடலாம் என்று யோசித்துக் கொண்டிருந்தாள் சுஷ்மிதா.

கையை கழுவி விட்டு தன் காஃபி மக்கை எடுத்தவளை பார்த்து கேட்டாள் “நீங்க எப்படி இவ்வளவு நீட்டா எல்லா வேலையும் செய்யுறீங்க?”

அவள் கேள்வியில் “உனக்கு கொஞ்சமாவது நீட் என்றால் என்னவென்று தெரியுமா? ஒரு டிஸ்ப்ளின் இருக்கா?” ஒரு குரல் மூளைக்குள் கடுரமாய் அதட்டியது.

சிறு முறுவலுடன் “ஐ லேர்ன் இட் இன் ஹர்ட் வே” என்றவள் “சுஷ்மிதா” ஒரு மாதிரி அழைத்தாள்.

“மாம்”

“உங்களுக்கு பத்ரியை பிடித்திருந்தால் அவரிடம் சொல்லுங்கள்”

திடுக்கிட்டுப் போய்ப் பார்த்த சுஷ்மிதாவின் தோளில் தட்டி விட்டு அலுவலகத்தின் இன்னொரு பகுதியில் இருந்த இடத்தில் இருந்து காஃபி எடுக்க சென்றுவிட்டாள்.

தன் மேசைக்கு வந்து வேலையில் ஆழ்ந்தவள் இடையிடையே டீம் மெம்பர்களை அழைத்து சிலதை விளக்கிக் கூறி வேலையை பிரித்துக் கொடுத்தாள். ஆரம்பத்தில் அவளின் கலந்து பழகாத தன்மை சற்று வித்தியாசமாய் இருந்தாலும் போக போக அவர்களுக்கு பழகிவிட்டிருந்தது. கூடவே மற்ற டீம் லீடர்களைப் போல் திட்டமால் அழகாய் புரியும் விதமாய் சொல்லித் தரும் பாங்கும் பிடித்திருந்தது. அதோடு நால்வரில் யாரவது ஒருவருக்கு வீட்டில் ஏதாவது பிரச்சனை அலுவலகம் வர முடியவில்லை என்றால் அலுவலகத்தில் முழு ஆதரவு கொடுத்து மேலதிக வேலைகளை அவளும் சேர்ந்து செய்வாள். அந்த நால்வரும் அவள் சொன்னால் அதை தலை கீழாக நின்று செய்து முடிக்கும் நிலையில் இருந்தார்கள்.

அவர்களின் வேலை டேட்டா அனலிசிஸ். சற்று தலையுடைக்கும் வேலை. ஒரு டைம் பெரிய ப்ராஜெக்ட்காக என்று கோடிங் டீமில் இருந்து வந்தவர்கள் கூட அவளுடனே வேலை செய்ய விருப்பம் தெரிவித்து இருந்தார்கள்.

சிஸ்டத்தில் இரண்டு மணிக்கு எச்ஆர் உடனும் மனஜேருடனும் மீட்டிங் என்று காட்டவே நால்வரையும் குரூப் சாட்டிங்கில் அழைத்தாள். அதில் இருவரின் வேலை இன்னும் முடியவில்லை என்று பதில் வரவே சுஷ்மிதாவை மட்டும் வர சொல்லி விட்டு மீட்டிங்கை அட்டென்ட் செய்தாள்.

“ஹெலோ சேர்”

“லண்டனில் இருந்து எம்கன் மொபைல் என்று ஒரு நிறுவனம் டேட்டா அனலிசிஸ் செய்து தர கேட்டு இருக்கின்றார்கள். அங்கே உள்ள அவர்களின் ப்ரொடக் இங்கே ஆரம்பிக்க போகும் ப்ரோடேக் இரண்டுக்கும் வேண்டுமாம். இரண்டு வருட ப்ராஜெக்ட். உங்களால் தொடந்து செய்ய முடியுமா?” கேள்வியை முன் வைத்தார் எச்ஆர்.

ஏனெனில் அவள் ஏற்கனவே ரெசிகினசன் பற்றி அறிவித்திருந்தாள். இரு விரலால் மேஜையில் தளமிட்டபடி சாய்ந்து அமர்ந்தவள் முகம் சிந்தனையை காட்டியது.

“நிச்சயமாய் இரண்டு வருடம் என்னால் வேலை செய்ய முடியாது. ஆனா சுஷ்மிதாவை இந்த ப்ரொஜெக்டை செய்ய விடலாம். அடுத்த ஆறு மாதங்களுக்கு முழுமையான ட்ரைனிங் கொடுக்க முடியும்” என்றவளை அதிர்ந்து போய்ப் பார்த்தாள் சுஷ்மிதா.

நாடியை தடவிய எச்ஆர் ராவ் “அவளால் முடியும் என்று உங்களுக்கு தோன்றுகிறதா? ஏனென்றால் இது பிக் ப்ராஜெக்ட் இந்தியா காசு பத்து சி வரும். அதோடு லாபத்தில் குறித்த பங்கு அலவன்ஸ் போல் உங்களுக்கும் வரும்” அவளை ஆழ்ந்து பார்த்த ராவ் “எதற்கும் நன்றாக யோசித்து விட்டு முடிவை இரண்டு நாள் கழித்து சொல்லுங்கள்” என்றார்.

“நிச்சயமாய் மிஸ் முகர்ஜியால் முடியும். அதோடு நான் ரிசைன் லெட்டர் கொடுத்து இருக்கிறேன் அப்படியே இந்த ப்ரொஜெக்டை எடுத்தாலும் ஒரு வருடத்தின் பின் இன்னொருவரிடம் கொடுக்க வேண்டும். அப்போது அவர்களுக்கு சம்மதமாய் இருக்குமா?”

“பிரச்சனையே அவர்கள் உங்களை கேட்பதுதான் மிஸ் வர்ஷி” என்றார் அவ்வளவு நேரம் அவர்கள் உரையாடலை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த மனேஜர் பிரம்மானந்தம்.

“நீங்கள் போன வருடம் செய்து கொடுத்த வேலை, இப்போது அமெரிக்க கம்பனிக்காக செய்து கொண்டிருக்கும் வேலை என்று அனைத்தையும் பார்த்து விட்டு உங்களை தான் டிமான்ட் செய்கிறார்கள்” மனேஜரின் வார்த்தையில் என்ன சொல்வது என்று தெரியாமல் பார்த்தவள் “நான் யோசித்து சொல்கிறேன்” என்று விட்டு வந்துவிட்டாள்.

“நாளை காலைக்குள் உங்கள் முடிவைச் சொல்லுங்கள். மத்தியானம் எம்கன் கம்பனியில் இருந்து இங்கே வருவார்கள்” என்றே அனுப்பி வைத்தார்.

தன் மேசையில் வந்திருந்தவளுக்கு தலையிடி பிடித்துக் கொண்டது. எம்கன் கம்பனி யாருடையது என்று அவளுக்கு நன்றாகவே தெரியும். என்னை டிமான்ட் செய்திருகின்றார்கள் என்றால்... நிச்சயமாய் என் ப்ரோபைல் பார்த்திருப்பார்கள், அதிலுள்ள என் போட்டோவையும். அதன் ஓனருக்கு தெரியுமா இல்லை மனேஜர் லெவலில் உள்ளவர்கள் எடுத்த முடிவா?

ஏதோ தோன்ற போனை எடுத்து பார்த்தவள் அதிர்ந்தாள். அவன் இன்று காலை பெங்கலூர் ஏர்போர்ட்டில் செக் இன் ஆகியிருந்தான். நிச்சயமாய் இது மனேஜர் லெவலில் எடுத்த முடிவு இல்லை. அவன் எடுத்திருக்கும் முடிவு. மீண்டும் அதே துன்பத்தை தாங்க முடியுமா? தலைக்குள் ரயில் ஓடுவது போலிருந்தது. மேற் கொண்டு எந்த வேலையும் ஓட மாட்டேன் என்று அடம் பிடிக்க லீவு போட்டுவிட்டாள்.

அருகேயிருந்த பார்க்கில் போய் அமர்ந்திருந்தவள் மனம் சமப்பட மறுத்தது. செக் இன் போட்டோவில் அவன் அம்மா லோகா அண்டியும் இருந்தார். அவருக்கு தான் தன்னிடம் எத்தனை அன்பு. இப்போதே சென்று லோகா அண்டியை பார்க்க வேண்டும் போலிருந்தது. ஆனால் எப்படி போவது. அவர்கள் இருக்கும் விலாசம் கூட தெரியாது. குனிந்து கைகளில் முகத்தைப் புதைத்தவளையே சற்று தூரத்தில் மார்புக்கு குறுக்கே கை கட்டியபடி நின்று பார்த்துக் கொண்டிருந்தான் அவன்.

அவன் அகம்பன் மன்யு.


கருத்து திரி மறக்கமால் உங்கள் கருத்துகளை இங்கே சொல்லி செல்லுங்கள்
https://www.narumugainovels.com/threads/19747/

 
Status
Not open for further replies.
Top