எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

STN அத்தியாயம் 24

Lufa Novels

Moderator

சக்கரை தழுவிய நொடியல்லவா!


அத்தியாயம் 24


ஆதவன் செல்லும் போதே அங்குத் தங்குவதற்கான ஏற்பாட்டையும், அவன் பிறந்த நாளுக்கான ஏற்பாட்டையும் கைபேசி மூலமாகவே முடித்துவிட்டான். அங்குப் போய் இனி சித்தார்த்தை சந்திப்பது மட்டுமே வேலை.


அவளோ மனதிற்குள் இப்போதே அவனுடன் டூயட் பாடிக் கொண்டிருப்பாள் போலும். முகம் முழுக்க அவ்வளவு சந்தோஷமும், வெட்கமுமாகச் சிரித்துக்கொண்டே அமர்ந்திருந்தாள்.


“புருஷன பார்க்கனும்னா அவ்ளோ சந்தோஷமா.. இப்படி இளிச்சமேனிக்கே வர” என ஆதவன் கிண்டல் செய்ய,


“சித்தத்துக்கு சர்பிரைஸா இருக்கும்ல?”


“ஹ்ம்ம். ஆமா” என்றான் சிரிப்புடன்.


“அய்யோ! எனக்குச் சந்தோஷமா இருக்கு..”


“அதான் மூஞ்சிய பார்த்தாலே தெரியுதே” எனக்கூற, சந்தோஷத்தில் மேலும் சிரித்தாள்.


“உன்னை உன் சித்தத்து கிட்ட விட்டுட்டு நான் என் பிரண்ட பார்க்கத் திருப்பூர் போய்டுவேன் சரியா. நீ உன் ஆளு கூட சந்தோஷமா இரு. நாளைக்கு சாயந்தரம் இரண்டு பேரும் நேரா ஸ்டேஷன் வந்துருங்க”


“ஏன் ஆது நீயும் எங்க கூடவே இரு”


“எதுக்கு சிவபூஜையில கரடியாவா?” எனக்கேட்க, அன்று ஒருநாள் சித்தார்த் அவனைக் கரடி எனக்கூறியது நினைவுவர, விழுந்து விழுந்து சிரித்தாள்.


“நீ சிரிக்கிற பார்த்தா அல்ரெடி உன் புருஷர் என்னை கரடினு சொன்னாரா? எனக்கேட்க, சிரித்துக்கொண்டே தலையசைத்தாள்.


“நான் என்னடி கரடி வேலை பார்த்தேன் உங்களுக்கு? சேர்த்து தான வச்சேன்”


“இல்ல இல்ல அன்னைக்கு அவர பார்க்கனும்னு துணைக்கு உன்னை கூட்டிட்டு வரேனு சொன்னேன். அப்போ சொன்னார்”


“இப்பவும் என்னத்தான் கூட்டிட்டு போற நீ..”


“அததான் நினைச்சேன்.. சிரிப்பு வந்துருச்சு”


“இருடி இன்னைக்கு கரடி என்ன வேலை பார்க்கும்னு அவருக்குக் காட்டுறேன்”


“டேய்!!”


“நான் நல்லவனா இருக்கனும்னு நினைச்சேன்.. ம்கூம் கரடி தான் இன்னைக்கு உங்களுக்கு”


“போ லூசு” எனச் சிரித்தாள். அவனும் சிரித்துக்கொண்டே எழுந்து அவள் தலையில் கொட்டிவிட்டு அவனிடத்தில் அமர்ந்தான். இப்படியே பேசிக்கொண்டு இவர்கள் கோயம்புத்தூரை நோக்கிவர அவர்களுக்கு முன் வந்துவிட்டான் சித்தார்த் அவன் தங்கியிருக்கும் இடத்திற்கு ஆனால் தான் வந்ததை யாரிடமும் தெரியப்படுத்தவில்லை. அவள் தனக்கு தந்த அதிர்ச்சியை திருப்பி அவளுக்குக் கொடுக்க நினைத்துவிட்டான் போலும்.


ஆதவனுடன் கோயம்புத்தூருக்கு வந்துவிட்டாள் தன் சித்தத்துவை தேடி. இருவரும் இரயில் நிலையத்திலிருந்து நேராக வந்தது சித்தார்த்தின் பயிற்சி மையத்திற்கு தான். அங்குள்ள அலுவலகத்தில் சென்று சித்தார்த்தை விசாரிக்கச் சென்றனர்.


ஆதவன் “சார்! சித்தார்த்.. அவங்களப் பார்க்கனும்” எனக்கூறி அவன் ஐடி எண்ணைக்கூறினான்.


அலுவலகர் “சித்தார்த் இளங்கோவன்?” எனக் கேள்வியாகக் கேட்க,


“ஆமாங்க சார். அவரே தான்” எனக்கூறினான் ஆதவன்.


“அவர் நாளைக்கு லீவு சொல்லிட்டு காலையிலயே ஊருக்குக் கிளம்பிட்டாரே” எனக்கூறி இருவருக்கும் அதிர்ச்சியளிக்க, மதுவின் முகம் அழுகும் நிலைக்குச் சென்றுவிட்டது.


ஆதவன் “கொஞ்சம் நல்லா செக் பண்ணி பாருங்க சார்”


“காலையில ரிஜிஸ்டர்ல சைன் பண்ணிட்டு தான் வெளியே போயிருக்கார் இன்னும் திரும்பி வரல” எனக்கூற, இருவரும் என்ன செய்வதெனத் தெரியாமல் முழித்துக்கொண்டு வெளியே வந்தனர். இதை அத்தனையையும் வெளியே மறைந்து நின்று பார்த்துக்கொண்டிருந்தான் சித்தார்த். முகத்தில் குறுநகையும், மனதில் சந்தோஷ ஆர்ப்பரிப்புமாக.


மதுவின் முகத்தில் வந்து போன உணர்வுகளைப் பார்த்துச் சிரித்துக் கொண்டிருந்தான். ‘எப்படி எப்படி.. என்னை சர்ப்ரைஸ் பண்ண போறியா நீ.. ஹா ஹா ஹா இப்போ என்னோட சர்ப்ரைஸ் எப்படிடீ இருக்கு என் பொண்டாட்டி’ என விழுந்து விழுந்து சிரித்தவன் அவர்கள் வெளியே வரும்போது மறைந்து நின்று கொண்டான்.


ஆதவன் “என்ன அவர் ஊருக்கு வரலனு சொன்ன.. இப்போ அவர் அங்க போயிருக்கார்னு சொல்றாங்க”


“தெரியல ஆது. அவர் அப்படி தான் சொன்னார்”


“ஒருவேலை ஊருக்குப் போய்ட்டு நம்மளை தேடி தான் கால் பண்ணிருப்பாரோ?”


“இருக்குமோ? நான் ஆசையா வந்தேன் சித்தத்துவ பார்க்க ஆனா இப்படி ஆகிடுச்சு” என அழுகவே ஆரம்பித்து விட்டாள் மது.


“அழாத மது.. திரும்ப ஊருக்குக் கிளம்பலாமா?”


“அவரே இல்ல அப்புறம் இங்க என்ன வேலை கிளம்பலாம்” எனக்கூறி கண்ணீரைத் துடைத்துக் கொண்டே திரும்பிப் பார்க்க, அருகில் உள்ள மரத்தில் ஒரு காலை மரத்தில் ஊன்றியபடி கைகளை மார்புக்கு குறுக்காகக் கட்டி மரத்தில் சாய்ந்து நின்று அவளைப் பார்த்துக்கொண்டிருந்தான்.


அவளோ மீண்டும் கண்களைக் கசக்கிப் பார்க்க, அவளைப் பார்த்து ஒற்றைக் கண்ணைச் சிமிட்டி, காற்றில் பறக்கும் முத்தத்தை அனுப்ப, வில்லிலிருந்து புறப்பட்ட அம்புபோல அவனை நோக்கி ஓடினாள் மது.


அவள் வந்த வேகத்தைக் கணக்கிட்டு, கால்களை ஊண்டி நிலையாக நிற்க, பாய்ந்து வந்து கட்டிக் கொண்டாள் அவன் அருமை தாரா.


“ஹேய் பார்த்துடி” என்றான் அவளைத் தன்னோடு இறுக்கி அணைத்து,


“நீ ஊருக்குப் போய்ட்டதா சொன்னாங்க” என அவன் நெஞ்சிலேயே சாய்ந்து முகத்தை மட்டும் நிமிர்த்திக் கேட்டாள்.


“ஆமா. உன்னை சர்ப்ரைஸ் பண்ணலாம்னு நான் காலையிலயே கிளம்பிட்டேன். அங்க போய் உன்னை தேடுனா எனக்குப் பெரிய பல்ப் கொடுத்துட்டு நீ இங்க வந்துட்ட. அதான் ஃபிளைட்ட பிடிச்சு உன்னைப் பார்க்க ஓடிவந்துட்டேன்” எனக்கூற, அவன் நெஞ்சில் முத்தம் பதித்து, நிமிர்ந்து அவன் முகத்தைப் பார்த்தாள். கண்களில் காதல் மின்ன அவள் பார்க்க அவனோ குனிந்து அவள் நெற்றியில் முத்தம் வைத்தான்.


ஆதவன் “க்கூம் நானும் இங்க தான் இருக்கேன்”


“தெரியுது. கரடிய கூட்டிட்டு வராதனு அன்னைக்கே சொன்னேனே கேட்குறியா நீ” என அவளை விடாமல் அணைத்துக்கொண்டு சிரித்தபடி அவனும் கேட்க,


“லந்து புருஷனுக்கும் பொண்டாட்டிக்கும்.. வச்சிக்குறேன் இனி சித்துவ பார்க்கனும் மத்துவ பார்க்கனும்னு என்னைக் கூப்பிடுங்க இரண்டு பேரும் அப்புறம் இருக்கு” என அவனும் விடாமல் பேசினான்.


மெல்ல அவளைத் தன்னிடமிருந்து விடுவித்தவன்,


“நிஜமா நீ இங்க வருவனு நான் எதிர்பார்க்கவே இல்ல” என அவளைத் தோளோடு அணைத்து நிறுத்தினான்.


“உன்னைப் பார்க்கனும் போல இருந்தது சித்தத்து. உன் பெர்த்டேல சோ உன் கூட இருக்கனும்னு தோனிட்டே இருந்துச்சு அதான் வந்தேன்” என அவளும் கூற, மூவரும் சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தார்கள்.


“சாப்பிட்டியா மது?”


“இல்ல சித்தத்து. நேரா உங்கள தான் பார்க்க வந்தோம்” எனக்கூற,


“சரி ஊசிய போடு. சாப்பிட போலாம்” என்றான் சித்தார்த். அவள் எங்குப் போனாலும் அவளுக்கான ஊசியை ஐஸ்பேக்கில் வைத்துத் தன்னுடன் எடுத்துக் கொண்டே செல்வாள். அங்குச் சென்று குளிர்சாதனப் பெட்டியில் வைத்துக்கொள்வாள். அதே போல் கொண்டுவந்த ஊசியைப் போட்டாள். மூவரும் ஆதவன் கூறிய உணவகத்தில் சென்று இரவு உணவை முடிக்க, அவர்களிடம் ஒரு அறைச்சாவியை கொடுத்து,


“சித்தண்ணா உங்க பெர்த்டேக்கு என்னால முடிஞ்ச சின்ன கிப்ட். இந்தாங்க ரூம் கீ” எனக்கொடுத்தான்.


“என்னடா இது?”


“உங்களுக்கு இங்க சூட் ரூம் புக் பண்ணிருக்கேன்”


“எதுக்குடா இதெல்லாம்”


“உங்க கல்யாணத்துக்கும் நான் ஒன்னும் பண்ணல.. அதான்”


“கல்யாணமே உன்னால் தான் ஆச்சு. அதுக்கு நாங்க தான் உனக்கு நன்றி சொல்லனும்”


“அண்ணா!” என எழுந்து அவனை அணைத்துக்கொள்ள, ஆதவனின் நண்பனும் வந்துவிட்டான்.


“சரிண்ணா! அட்வாண்ஸ் பெர்த்டே விஷ்ஷஸ். நீங்க உங்க பெர்த்டே செலப்ரேட் பண்ணுங்க.. நான் நாளைக்கு ஈவினிங் நேரா ரயில்வே ஸ்டேஷன் வந்துருரேன் நீங்க மதுவ கூட்டிட்டு அங்க வந்துருங்க” எனக்கூற,


“ஏய்! நான் சும்மா தாண்டா கரடினு சொன்னேன். நீ எங்களோடயே இரு”


“இல்ல இல்ல இது உங்களுக்கான டே. எஞ்சாய் யுவர் டே. பாய் அண்ணா! பாய் மது. நைட் 12ஓ க்ளாக் பிரிஜ் ஓபன் பண்ணி பாரு மது” எனக்கூறி அவன் நண்பனுடன் கிளம்பிவிட்டான் ஆதவன்.


அவன் கிளம்பவும் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டே அமர்ந்திருந்தனர் அந்த உணவகத்தில். இருவருக்கும் அடுத்து என்ன பேசுவதென்றே தெரியவில்லை. இருவருக்கும் அவரின் துணையின் அருகாமையை ஆழ்ந்து அனுபவித்துக் கொண்டிருந்தனர்.

அன்பெனும் தூண்டிலை.. நீ வீசினாய்.. மீனாகிறேன் அன்பே!

உன் முன்பு தானடா.. இப்போது நான்.. பெண்ணாகினேன் அன்பே!

தயக்கங்களால்.. திணறுகிறேன்..

நில் என்று சொன்ன போதிலும் நில்லாமல் நெஞ்சம் ஓடுதே இதோ உந்தன் வழி....

விழிகளில் ஒரு வானவில்.. இமைகளைத் தொட்டுப் பேசுதே! இது என்ன புதுவானிலை.. மழை வெய்யில் தரும்!

உன்னிடம் பார்க்கிறேன்.. நான் பார்க்கிறேன்.. என்தாய் முகம் அன்பே!

உன்னிடம் தோற்கிறேன்.. நான் தோற்கிறேன்.. என்னாகுமோ இங்கே!

முதல் முதலாய் மயங்குகிறேன் கண்ணாடி போல தோன்றினாய் என் முன்பு என்னைக் காட்டினாய் கனா எங்கும் வினா!

விழிகளில் ஒரு வானவில் இமைகளைத் தொட்டுப் பேசுதே இது என்ன புதுவானிலை மழை வெய்யில் தரும்!


ஒருவர் கண்ணை மற்றொருவர் பார்த்துக்கொண்டு அமர்ந்திருந்தனர். இருவரிடமும் அமைதி மட்டுமே அந்த அமைதியை முதலில் களைத்தது சித்தார்த்.


“மது.. எவ்ளோ நேரம் இப்படியே இருக்கறதா ஐடியா?”


“ம்ம். ஒரு மாசம் ஆச்சு சித்தத்து. ஆசை தீர பார்த்துக்கிறேனே”


“என்னடி பார்க்காதவன பார்த்த மாதிரி இப்படி பார்க்குற.. எனக்கே கூச்சமா இருக்கு” எனப் பின்னந்தலையை கோதிக்கொண்டவன் முகம் அழகாய் சிவந்திருந்தது.


“சித்தத்து.. நீ பிளஷ் ஆகுற.. உன் கன்னம் சிவக்குது” என எட்டி அவன் கன்னத்தைக் கிள்ளி வாயில் போட்டுக்கொண்டாள். அதில் மேலும் சிவந்தவன்.


“ஏய்! லூசுப் பொண்ணே! என்னை என்ன பண்ணுற? அடி வெளுக்க போறேன் பாரு”


“அழகா இருக்க சித்தத்து”


“நீயும் தான் அழகா இருக்க. இப்போ இல்ல பிறந்ததுலருந்து அழகி டி நீ”


“எனக்குத்தான் தெரியுமே! இத நீ ஓராயிரம் என்ன லட்சம் தடவைக்கும் மேல சொல்லிருப்ப” என அவள் கூற, மெலிதாய் சிரித்துக் கொண்டவன்,


“நான் உண்மைய தான் சொல்றேன். ஆனா நீ இப்போ என்னை கேலி பண்ண தான சொல்ற?”


“இல்லையே நானும் உண்மைய தான் சொல்றேன். இப்போ நீ வெட்கப்பட்ட மாதிரி முன்னாடி பண்ணதில்லையே! இப்போ அழகா தெரிஞ்சமாதிரி முன்னாடி தெரியலயே! அப்போ நானும் உண்மைய தான் சொல்றேன்”


“அடி கழுத.. அப்போ முன்னாடி நான் அழகா இல்ல.. அப்படி தான சொல்ல வர”


“ம்கூம் அப்படி இல்ல முன்னாடி நீ என்னை பார்க்கும் போது ஒரு கண்ணியம் இருக்கும்.. அப்போ உன் கண்ணுல பாசம் மட்டும் தான் தெரியும்.. ஆனா.. ஆனா”


“ஆனா என்னடி சொல்லு” என்றான் ஆழ்ந்து பார்த்தபடி,


“இப்போ உன் கண்ணுல கண்ணியம் இல்ல.. நீ எங்கெங்கயோ பார்க்குற, வெட்கப்படுற, தலை கோதுற.. இதெல்லாம் எனக்கு புதுசா இருக்கு” எனக்கூறியவள், பின் திக்கி திணறி “ஆ.. ஆனா இப்போ தான் உன்னை ரொம்ப பிடிக்குது” எனக்கூற அட்டகாசமாகச் சிரித்தான்.


“சரிதான். கெட்டு போய்ட்ட டீ நீ”


“அதுக்கு காரணமும் நீ தான்”


“ஓஹ்ஹோ அப்படி.. ம்ம் சரிதான்” என்றவன், இருக்கையை அவள் அருகில் போட்டு அவள் கையைப் பிடிக்க, இவ்வளவு நேரமும் பேசிவளுக்கு நாக்கு மேலண்ணத்தில் ஒட்டியது போலப் பேச்சே இல்லை பெண்ணிடத்தில்.


கைகளைப் பிடித்தவன் அதைத் தடவிக்கொண்டே “நல்லா இருக்கியா? ஒன்னும் பிரச்சனை இல்லல?”


“இல்ல சித்தத்து” எனத் தடுமாற்றமாகப் பதில் கூறினாள்.


“வாய் ஓயாம பேசுற ஆனா உன் கண்ணு எனக்கு வேற என்னமோ சொல்லுதேடி” என்றான் கவலையாக.


“அதெல்லாம் ஒன்னும் இல்ல சித்தத்து”


“எனக்காக மறைக்கிறியா? நான் எதாவது உன்கிட்ட மறைக்கிறேனா? ஓப்பனா தான இருக்கேன். என்கிட்ட ஏன் இந்த ஒளிவு மறைவு? எல்லாத்தையும் என்கிட்ட ஒப்படைச்சுட்டு நிம்மதியா இருடி. உன்னை உள்ளங்கையில வச்சு தாங்க நான் ரெடியா இருக்கேன்”


“அப்போ.. இப்போ என்ன என்னை உன் உள்ளங்கையில வச்சு தாங்க மாட்ட நீ?” என எழுந்து நின்று கையை இடுப்பில் வைத்துக் குண்டுக் குண்டுக் கண்ணை உருட்டி மிரட்ட, அவனுக்குச் சிரிப்பு தான் வந்தது. அவள் கையைப் பிடித்து இழுந்து மீண்டும் அமற செய்தவன்,


“பேச்சை நைசா மாத்துற.. ராங்கி வச்சிக்கிறேன் டீ உன்னை”


“வச்சிக்கோ வச்சிக்கோ.. நான் வேணான்னா சொன்னேன்”


“வச்சுக்கோனு சொல்லிட்டு இங்கயே இருக்க.. ரூம்க்கு போலாமா?” என ஹஸ்கியாகக் கேட்க, இப்போது சிவப்பது அவள் முறையாயிற்று.


“பிளஷ் ஆகுறடீ”


“போ சித்தத்து” என முகத்தை மறைத்தவள் கையைப் பற்றி எழுப்பி அறையை நோக்கி நடந்தான். அறையைத் திறந்தவர்களுக்கு மூச்சடைத்தது. முதலிரவுக்கு அலங்காரம் செய்தது போல அறை முழுவதும் சிவப்பு நிற இதய வடிவ பலூன்களும், கட்டிலில் இதய வடிவத்தைச் சிவப்பு ரோஜா இதழால் அலங்கரித்து, வாசனை மெழுகுவர்த்தியோடு அவ்வறையே இரம்மியமாக இருந்தது.
 

santhinagaraj

Well-known member
மது நீ எல்லாம் அவனுக்காக மறைக்கற ஆனா எப்போ உன்னை புரிஞ்சுக்க போறானோ.
வீட்டுக்கு போனப்போ அவன் அம்மா அவனிடம் பேசியது வைச்சே தெரியலையா அங்க நீ எப்படி இருப்பேன்னு அது புரியாம உன்கிட்ட வந்து நல்லா இருக்கியான்னு கேள்வி கேட்டுட்டு இருக்கான் இவன் எல்லாம் என்ன போலீசோ 🙄🙄
 

Lufa Novels

Moderator
மது நீ எல்லாம் அவனுக்காக மறைக்கற ஆனா எப்போ உன்னை புரிஞ்சுக்க போறானோ.
வீட்டுக்கு போனப்போ அவன் அம்மா அவனிடம் பேசியது வைச்சே தெரியலையா அங்க நீ எப்படி இருப்பேன்னு அது புரியாம உன்கிட்ட வந்து நல்லா இருக்கியான்னு கேள்வி கேட்டுட்டு இருக்கான் இவன் எல்லாம் என்ன போலீசோ 🙄🙄
Trainee police தான அதான் கொஞ்சம் மக்கர் பண்ணுது😜

Thank you so much dear🥰🥰
 
Top