எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

STN அத்தியாயம் 27

Lufa Novels

Moderator

சக்கரை தழுவிய நொடியல்லவா!


அத்தியாயம் 27


ஆதவன் வீட்டில் அவன் தாய், தகப்பன் இருவரும் ஆதவனிடம், “இனி மது வீட்டுக்குபோக கூடாது ஆது. அதான் அவளுக்கு அவ பிடிச்ச வாழ்க்கைய கொடுக்குறேனு அவனுக்குக் கட்டி வச்சிட்டில போதும். இனி அவளாச்சு, அவ புருஷனாச்சு இனி அங்க போகாத.


சும்மாவே அந்தப் பொம்பள எப்படி பேசும்னு தெரியும்ல இப்போ ஊர்காரங்க வேற உன்னையும் அவளையும் சேர்த்து பேச ஆரம்பிச்சுட்டாங்க போல. இனி ஓவரா ஆடும்”


ஆதவன் “ம்மா அவ பாவம்மா”


எழில் “அவளுக்கு அவங்க வீட்ட சமாளிக்க தெரியும். அவ வாழ்க்கைய அவ வாழுவா. எங்க பேச்சைக் கேட்காம திரும்பவும் அங்க போய் அவளுக்கும் சேர்த்து கெட்ட பேர் வாங்கி குடுக்காத. அகிலா வேற மாசமா இருக்கா தேவையில்லாம இந்த நேரத்துல அந்தப் பொம்பள வாய்ல நம்ம விழுக வேண்டாம் ஒழுங்கா நாங்க சொல்றத கேளு” எனக்கூறி விட்டனர். அவனுக்கும் என்ன செய்வதெனத் தெரியவில்லை. சரி முடிஞ்சவரை அங்குச் செல்வதை தவிர்க்கலாமென அவனும் நினைத்துவிட்டான்.


சிந்து மருத்துவமனை செல்லும் போதே அசூசையாக உணர்ந்தாள். மருத்துவரிடம் செல்லும் முன்பே லேசாக உதிரப்போக்கு தெரிய, பயந்து விட்டனர். பயத்தில் கோபத்தைகூட மறந்து இளங்கோவை அழைத்து விஷயத்தைக் கூறியிருந்தார் ஆனந்தி.


மருத்துவர் பரிசோதித்துவிட்டு “சாரி. பேபி அபார்ட் ஆகிடுச்சு. டிஅன்சி பண்ணலாம் ஆனா யூட்ரஸ்ல சின்னதா கட்டி போலவும் இருக்கு அதானல மைனர் சர்ஜரி ஒன்னு உடனே பண்ணனும் இல்ல உயிருக்கே ஆபத்தா முடியலாம்” எனக்கூற, உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்து, சிகிச்சை அளிக்கப்பட்டது.


தினமும் மது தான் மூன்று வேலைக்கும் சமைத்து கொடுப்பாள். காலையும், இரவும் இளங்கோ கொண்டு வந்து கொடுக்க, மதியம் மட்டும் சிந்து கொண்டு வந்து கொடுத்துச் செல்வாள்.


வருடக்கணக்கில் காத்திருந்து கிடைத்த பொக்கிஷம் கைநழுவி போவதன் வலியை அனுபவித்தாள் சிந்து. முன்பு இதே சிந்து தான் சித்தார்த்தை மதுவிடமிருந்து பிரித்து அவளுக்குப் பிரிவுத்துயரை கொடுக்க நினைத்தாள். அப்போது பிரிவுத்துயர் எப்படி இருக்குமென்றே அவளுக்குத் தெரியவில்லை ஏனெனில் அவளுக்கு அஸ்வந்த் மேல் இருந்தது உரிமை உணர்வுதானே ஒழிய காதல் இல்லை.


ஆனால் இன்று தன் வயிற்றில் மலர்ந்த, தன் இரத்தில் உருவான, தன் காதலுக்கும், வாழ்க்கைக்கும், காத்திருப்புக்கும் கிடைத்த பொக்கிஷம் கைநழுவி செல்லும்போது தான் அதன் வலியை உணர்ந்தாள். கூடவே மது அவளுக்காகப் பார்த்துப் பார்த்துப் பக்குவமாகச் சமைத்து கொண்டு வந்து கொடுக்க, அவளுக்குச் செய்த பாவத்திற்கு தண்டனையாகத் தான் கடவுள் தன் குழந்தையைப் பறித்துக் கொண்டார் போலும் என நினைத்தவள் மதுவைப் பார்த்தால் தலைகவிழ்ந்து கொள்வாள்.


இப்படியே மூன்று நாட்கள் சென்றது. சித்தார்த்துக்கும் மதுவுக்கும் இடையில் உள்ள உறவு மார்கழி மாத பனித்துளிபோல மகிழ்ச்சியாகச் சென்றுகொண்டிருந்தது. ஆதவனும் ஆனந்தி வீட்டில் இல்லையெனத் தெரிந்துகொண்டான், எனவே அவளுக்குச் சாப்பாட்டுக்கும் சரி, மற்ற விஷயத்திலும் சரி பிரச்சனை இருக்காது என நினைத்தவன் அவ்வப்போது அலைபேசியில் அழைத்து நலம் மட்டும் விசாரித்துக் கொள்வான்.


அன்று மதியம் சிந்துக்கு சாப்பாடு கொடுக்கச் சென்றாள் மது. அன்று தன் தயக்கத்தை விடுத்து,


சிந்து “மது! சாரி மது”


“எதுக்கு அண்ணி இப்போ போய் சாரி அது இதுனுட்டு”


“இல்ல மது. அஸ்வந்த் அத்தான் எனக்குக் கிடைக்கலனு கோபத்துல நான் உன் மேல வன்மத்தை வளர்த்துக்கினேன். அண்ணனை உன்கிட்ட இருந்து பிரிக்க நினைச்சேன். உன் கல்யாணத்துக்கு அப்பால வயத்துல குழந்தைய வச்சிக்கினே உன்ன கஷ்டப்படுத்திட்டேன். இதல்லாம் பார்த்து அம்மா தப்பானவ நினைச்சு எம்புள்ள என்னவுட்டு போயினுச்சு” என முகத்தை மூடி அழுதாள்.


உண்மையிலுமே அவள் தான் செய்த தவறுக்காக வருந்தித் தான் அழுதாள் ஆனால் அதுவும் ஆனந்தி மனதிற்குள் தவறாக விழுந்தது. இவளால் தான் தன் மகளுக்கு இப்படியாகி விட்டது. இவள் தான் தன் மகளுக்குச் சாபமளித்து விட்டாளென நினைத்து மேலும் அவருக்கு அவள்மேல் வன்மம் தான் கூடியது.


“அண்ணி அப்படிலாம் இல்லண்ணி. கண்டிப்பா உங்களுக்கு அடுத்து ஒரு பாப்பா கிடைக்கும் பாருங்க. அழாதீங்க”


“கிடைக்குமா! கடவுள் குடுத்தத நான் இழந்துபுட்டேனே”


“கிடைக்கும் அண்ணி அழாதீங்க” என அவள் அருகில் அமர்ந்து அவளுக்கு ஆறுதல் கூற,


“என்னை மன்னிச்சிடு. அண்ணன் வந்ததும் உண்மைய சொல்லி மன்னிப்பு கேட்டு, மாமா வீட்டுலயும் நான் மன்னிப்பு கேட்கனும். என்னால தான் இவ்ளோ பேஜாரு”


“அதெல்லாம் விடுங்க. இப்போ உங்க உடம்ப பாருங்க அண்ணி. நான் போய்ட்டு நைட்டுக்கு சாப்பாடு மாமாகிட்ட கொடுத்துவிடுறேன்” எனக்கூறிக் கொண்டு கிளம்பினாள்.


மாலைபோலச் சிந்து மாமியார் மருத்துவமனை வர, அவரை அவளுக்குத் துணைக்கு வைத்துவிட்டு, குளிப்பதற்காக வீட்டுக்கு வந்தார். உண்மையிலுமே அவர் குளிப்பதற்காக வரவில்லை. இன்று சிந்து அவளிடம் பேசியது அவர் மனதில் வேறு விதமாகத் தாக்க, அவளை இன்றோடு தன் குடுப்பத்திலிருந்து அப்புறப்படுத்துவதற்காகத் தான் வந்தார்.


வீட்டிலோ மது வேலைகளை எல்லாம் முடித்துவிட்டு, ஒரு குளியலையும் போட்டு அழகாய் ஒரு புடவையை எடுத்து அணிந்துகொண்டாள். தாமதமானலும் இன்று இரவு எப்படியும் வந்துவிடுவேன் எனச் சித்தார்த் கூறியிருந்தான். அதனால் அவனுக்காகப் பார்த்துப் பார்த்து அழகாகத் தயாராகி இருந்தாள் மாலையே.


மேல் பாதி எலுமிச்சை நிறமும், கீழ் பாதி ஆகாயநீலமுமாக உடல் முழுவதும் ஆங்காங்கே பொட்டு வைத்து, குட்டி கரை வைத்த ஷிஃபான் புடவை, அதற்குப் பொறுத்தமான குட்டி கை வைத்த ஒரு சட்டை. அழகாகக் கட்டியிருந்தாள், அவளுக்குப் பாத்தமாகப் பொறுந்தியிருந்தது.


அலையலையான கேசத்தை அழகாகப் பின்னலிட்டு, தெருவில் வந்த பூக்கார அம்மாவிடம் முதன்முதலாக இரண்டு முலம் பூவை வாங்கி தலையில் சூடினாள். அல்லி விழிகளுக்கு அஞ்சனம் மட்டுமே இட்டாள் ஆனால் அதுவே அவளைப் பேரழகியாகக் காட்டியது.


கண்ணாடியில் தன்னை பார்த்தவள் திருப்தியாக இருக்கவும், தன் கைபேசியில் அழகாக ஒரு செல்ஃபியை எடுத்துச் சித்தார்த்துக்கு அனுப்பி கீழே “வெயிட்டிங் ஃபார் யூ” என எழுதி அனுப்பி கூடவே ஒரு முத்தமிடும் பொம்மையையும் அனுப்பி வைத்தாள்.


அதைப் பார்த்துவிட்டு உடனே அழைத்துவிட்டான்.


“என்ன ஃபங்ஷன் முடிஞ்சதா சித்தத்து”


“இல்ல நடக்குது. ரெஸ்ட் ரூம்க்கு வந்தேன். நீ பிக் அனுப்பவும் கால் பண்ணிட்டேன். அழகா இருக்க” என்றான்.


“ம்ம். தங்க்யூ. எப்போ முடியும்?”


“தெரியல. பேசிட்டு இருக்காங்க. நான் எல்லாம் பேக் பண்ணி வச்சிட்டேன் முடியவும் டிரைன் இருக்கானு பார்க்கனும் இல்லைனா பஸ் பிடிக்கனும். காலையில தான் வருவேன்” எனக்கூறவும் அவள் முகமே மாறிவிட்டது.


“சரி சித்தத்து” எனக்கூற அவள் குரலிலே வருத்தம் தெரிய,


“சாரிடா. டோண்ட் ஃபீல் சூயரா காலையில அங்க இருப்பேன்” எனக்கூறி, அவளைச் சமாதானம் செய்துவிட்டு விமான நிலையத்திற்குள் நுழைந்தான்.


அவளிடம் விளையாட்டாகவே அப்படி கூறினான். உண்மையிலுமே கிளம்பிவிட்டான் தன்னவளைக்காண.


இவளும் அறையிலிருந்து வெளியே வந்து வீட்டில் உள்ள அனைத்து வேலைகளையும் பார்க்க ஆரம்பித்தாள். வேலை எல்லாம் முடிந்து ஓய்வாக அமர்ந்தவள் டிவியை போட்டுப் பார்த்துக் கொண்டிருக்க, வீட்டிற்குள் நுழைந்தார் ஆனந்தி. அவரைப் பார்க்கவும் எழுந்து சென்று டிவியை அணைத்துவிட்டு அறைக்குள் செல்ல முயன்றாள் மது. அதற்குள் அவளை மேலிருந்து கீழ் பார்த்தார் ஆனந்தி.


அவள் இன்று தன்னை சற்று அலங்கரித்திருக்க, வன்மமாய் பார்த்தார் ஆனந்தி.


“நாங்க அங்க புள்ளை போய்டுச்சேனு அழுது, தவிச்சுக்கினு இருக்கோம், நீ எவன மயக்க இப்படி மினுக்கிக்கிட்டு நிக்கிற.. அந்த ஓட்டல் காரன் இன்னமும் வாரானோ? அதான் மினுக்கினு க்கீறயோ?”


“அத்தை!” எனக் கத்தினாள். அவளால் காதில் கேட்டதை ஜீரனிக்கவே முடியவில்லை. ‘என்ன பேசிவிட்டார்? என்னை என்ன பேசிவிட்டார்? என்னையும் ஆதுவையும் ச்சை இது வாயா? காவாயா? இப்படி பேசுது.. அன்னைக்கும் இப்படி தான் பேசி அசிங்கப்படுத்துச்சு இன்னைக்கும்’ என நினைக்க அவள் கைக்கால் எல்லாம் ஒரு மாதிரி உதறல் எடுக்க ஆரம்பிக்க, அதை எல்லாமா ஆனந்தி கவனிக்க? அவர் அவர் பாட்டுக்கு..


“என்புள்ளை புள்ளைதாட்சி புள்ளைய என்ன கரிச்சு கொட்டிகினியோ? உன் கண்ணுனால தான் எம்புள்ளைக்கு இப்படி ஆகிபோச்சு” எனத் தலையில் அடித்து அழுதவர் தொடர்ந்து,


“உனக்கெல்லாம் அந்தப் பாக்கியமே கிடையாதுடி சீக்கு புடிச்சவளே.. உடம்பு முழுக்க சுகர் இவளுக்கு எல்லாம் புள்ள நிக்குமா அதான் என்புள்ளைக்கு நீ வேணாமுனு தலைபாடா அடிச்சுக்கினேன் ஆராது கேட்டாங்களா? அப்படியே நின்னாலும் அதும் உன்னைமாதிரி சீக்காதான நிக்கும் காலம் முழுதும் சீக்குக்காரிகளுக்கு சேவகம் பண்ணவா என் புள்ளை இருக்கான்?” என அசராமல் குண்டைத் தூங்கி அவள் தலையில் போட்டார்.


துடித்துவிட்டாள் மது. ‘எனக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்காதா? சித்தத்து எவ்வளவு ஆர்வமாகக் கேட்டாங்க என்ன எப்போ அப்பாவாக்குவனு? அப்போ அவர் அப்பாவாக முடியாதா? என்புள்ளை என்னமாதிரி தான் இருக்குமா?’ என நினைத்தவள் நிலைதடுமாற பிடிமானத்திற்கு பக்கத்திலிருந்த ஒரு சேரை பிடித்துச் சுவற்றில் சாய்ந்து நின்றாள். அதற்குள்,


“கண்டவனோட ஊர் மேஞ்சுட்டு திரியிற நீயெல்லாம் ஒரு பொண்ணா? கல்யாணத்துக்கு முன்னயே என்புள்ளைய வளைச்சுபோட்டுக்கிட்டே அந்த ஓட்டல்கடைக்காரனுக்கு கழுத்த நீட்ட ரெடியான.. இப்போ எம்புள்ளைய கட்டிகினு அவனோட ஊர் மேயுற. ஏன் உனக்கு ஒருத்தன் பத்தாத? எவன் புள்ளையோ வயுத்துல வாங்கி அத எம்புள்ள தலையில கட்ட போறியோ?” எனக்கேட்க வெகுண்டு விட்டாள் மது.


“ஏய்! நிறுத்து நிறுத்து” எனக் கத்த,


“இன்னாது ஏய்யா?” என அடிக்கக் கையோங்கிட்டு வர, அவர் கையைப் பிடித்துத் தள்ளிவிட, நிலைதடுமாறி பின் சமாளித்துக்கொண்டு,


“என்னையேவா தள்ளிவிடுற? போடி வீட்ட எவ்வுட்டு.. இனி இந்தாண்ட ஒரு நிமிஷம் நின்ன நான் இன்னா பண்ணுவேனே தெரியாது போடி” என அவளைப் பிடித்துத் தள்ளத் திமிறியவள்,


“நீ எல்லாம் பொம்பள தானா? உனக்கும் ஒரு பொம்பள புள்ள இருக்குல.. ஏன் அவங்களும் கூட எங்கண்ணனை லவ் பண்ணாங்கள.. அப்போ நான் அவங்கள சொல்லலாமா? எங்கண்ணன வச்சிக்கிட்டு வேறொருத்தர் கூட வாழுறாங்கனு” எனக் கேட்க,


“என்புள்ளைய பத்தின பேசுன நாக்க அறுத்துபுடுவேன். எடுபட்ட நாயே என்புள்ளையவா பேசுற”


“உம்புள்ளைய பத்தி பேசினா உனக்குக் கோபம் வருதுல அப்படி தான அடுத்தவங்களுக்கு வரும்? அன்னைக்கு வீட்டுக்கு வந்து என்னா பேச்சு பேசின? இப்போ கூட என் ஒழுக்கத்தை பத்தி தப்பா பேசுற? இனி ஒரு வார்த்தை என்னைப் பத்தி உன் வாயில வந்துச்சு” எனச் சுட்டுவிரலை நீட்டி எச்சரிக்க,


“அப்படி தாண்டி பேசுவேன் என்மவ உங்கண்ணன் கூட பேசினது கூட இல்லடி.. ஆனா நீ ஷிப்ட் போட்டு மாத்தி மாத்தி ஒவ்வொருத்தன் கூடவே ஊர் மேயுற” எனத் திரும்பத் திரும்பப் பேச,


“நீ பாத்தியா? நான் ஊர் மேஞ்சத நீ பார்த்தியா? இவ்ளோ நாள் உன் வயசுக்கு தான் மரியாதை குடுத்தேன் இனி ஒன்னும் இருக்காது.. என்னைப் பத்தி இனி பேசுன.. செவுல திருப்பிருவேன்”


“என்னையவே அடிப்பியோ போடி வெளியில” என அவளை வெளியில் பிடித்துத் தள்ள, சித்தார்த் வீட்டிற்குள் வரச் சரியாக இருந்தது. சித்தார்த் நெஞ்சில் தான் விழுந்தாள். அவள் விழாதவாறு அவளைத் தன்னோடு அழுத்திப் பிடித்தவன் தாயை தீப்பார்வை பார்த்தான். அதில் கொஞ்சமே கொஞ்சம் பயம் வரத்தான் செய்தது. ஆனாலும் சமாளித்துக் கொண்டு,


“பாத்தியா சித்தார்த்து இவ அம்மாவ அடிக்க வராடா.. தங்கச்சிய அசிங்கமா பேசுறாடா.. இவள வெட்டிவிட்டுட்டு வா.. அம்மா உனக்கு நல்ல வாழ்க்கை அமைச்சு தரேன். இந்த எழவெடுத்தவ நமக்கு வேணாம்” எனக் கண்களில் கண்ணீருடன் நடிக்க,


“அவ செய்யாததெல்லாம் இவ்ளோ அழகா சேர்த்து உண்மை மாதிரியே சொல்லி நடிக்கிறியே.. ஆனா நீ பேசுனத பத்தி ஒன்னும் சொல்லல.. எல்லாம் கேட்டுட்டு தான வரேன்.. அன்னைக்கு நான் உன்னைத் திட்டிட்டு போயும் திருந்தல இல்ல..” எனக் கேட்க அவன் நெஞ்சில் சாய்ந்திருந்தவள் அவனிடமிருந்து பிரிந்து,


“சித்தத்து! சித்தத்து! என் வயித்துல குழந்தை வராதா?” என உதடுகள் தந்தியடிக்க கேட்க, அவள் தலையைப் பிடித்து மீண்டும் தன்னுடன் சேர்த்தான் தாயை முறைத்துக் கொண்டே. அவனிடமிருந்து மீண்டும் திமிறியவள்,


“அப்படி வந்தாலும் அது என்னை மாதிரி தான் இருக்குமா?” எனக் கண்ணில் அத்தனை பரிதவிப்புடன் கேட்கத் தாயை தீயாய் முறைத்தான். ஏனெனில் அவன் தாய் பேசிய பொழுதெல்லாம் அவன் வரவில்லை கடைசியாக மது பேசும் தான் வந்தான். ஆனால் மது அப்படி பேசத் தாய் தான் காரணமாக இருக்கக்கூடும் என்ற நம்பிக்கையில் தான் மதுவுக்கு ஆதரவாக நின்றான்.


அவள் கேள்வியையும், அவள் தவிப்பையும் பார்த்தவனுக்கு இன்னும் என்னனெல்லாம் பேசி நோகடித்தார்களோ என எண்ண நெஞ்சில் இரத்தம் தான் வந்தது. இவர்களை நம்பி அவளை விட்டிருக்க கூடாதோ எனக் காலந்தவறி யோசித்தான்.


“இந்தாடி இன்னும் என்ன என்புள்ளைகிட்ட நாடகமாடுற.. இந்தா சித்தார்த்து இவ தாண்டா அம்மாவ பேசினா அம்மா ஒன்னியும் பேசல.. அவ பேசினதுக்கு பதில்தான் அம்மா பேசினே.. அவதே நடிக்கிறாடா.. இவ நீயில்லாதப்ப என்னல்லாம் செஞ்சா தெரியுமா?


நித்தமும் அவன் அவந்தான் அந்த ஓட்டல்கடைக்காரன் வருவாண்டா.. இவ அவன இட்டுகுனு ரூம்குள்ளாண்ட போயிடுவா.. என் கண்ணு மின்னுக்க அவனோடு எம்பூட்டு கூத்தடிச்சா தெரியுமா? இங்க வூட்டுல அம்புட்டு சாப்பாடு இருக்கத்தக்கன அவேன் கடையில இருந்து இவளுக்குக் கொண்டாந்து கொண்டாந்து குடுக்க, இவ அவனோட ரூம்ல தனியா கொட்டமடிக்க, ஏன்னு கேட்டா என்னையயே மிரட்டுனான் தெரியுமா?


நம்பாதடா இரண்டு பேரும் உன்னை ஏமாத்துறாங்டா.. கேளு அவன் வந்தானா சாப்பாடு தந்தானானு கேளு அவகிட்டயே.. ஊர்ல கூட கேளுடா அத்தனை பேரும் கலீஜா பேசுறாங்கடா.. என்னைய பார்த்து நானும் தான் இவங்களுக்கு ஒத்து.. நான் விளக்குபுடிக்கிறேனு ஊரே என்னைய கேவலமா பேசுதுடா..


அந்த அளவுக்கு நம்ம குடும்ப மானத்தை வாங்கிட்டாடா.. நம்மாத அவள நம்மாத” என அழுது, அரட்டி நாடகமாட மதுவே ஒருநிமிடம் அவர் குற்றச்சாட்டலில் ஆடிப் போனாள்.


“சித்தத்து நான்.. நான் தப்பானவ இல்ல சித்தத்து.. ஆது வந்தான் தான் சாப்பாடு தந்தான் தான் ஆனா இது எல்லாம் பொய்.. என்னை நம்பு சித்தத்து” எனக்கூற, அவனோ சிலையென நின்றான். அவனோ தன் தாய் அவன் மனைவிமேல் போட்ட பொய் பலியால் அவரைக் கொன்றுகுவிக்கும் ஆத்திரத்தை அடக்கியபடி நிற்க, அவளுக்கோ அவனும் தன்னை சந்தேகப்படுகிறானே எனத்தோன்றியது.


“சித்தத்து.. என் வயித்துல குழந்தை இருக்கானு எனக்கு இப்போ தெரியாது ஆனா ஒருவேல இருந்தா அது உன் குழந்தை மட்டும் தான்” எனக்கூறியபடியே மயங்கிச் சரிந்தாள்.


“டேய் மது.. மதும்மா.. தாரா..” என விதவிதமாகக் கூப்பிட அசைந்தாளில்லை. “தாரா.. தாரா” எனக் கத்தினான் ம்கூம் அசையவே இல்லை. அவள் கேட்க விரும்பிய அழைப்பு.. அவன் அழைக்க மறுத்த அழைப்பு.. இன்று பலமுறை அழைத்தான் ஆனால் அவள் தான் எழவேயில்லை. இது தான் விதியின் சதியோ!

 

santhinagaraj

Well-known member
இந்த ஆனந்தி எல்லாம் எப்பவும் திருந்தாத ஜென்மம்.

டேய் சித்தார்த் இதுக்கு மேலயும் நீ பொறுமையா இருந்தா நீ எல்லாம் மனுசனே இல்ல
 

Lufa Novels

Moderator
இந்த ஆனந்தி எல்லாம் எப்பவும் திருந்தாத ஜென்மம்.

டேய் சித்தார்த் இதுக்கு மேலயும் நீ பொறுமையா இருந்தா நீ எல்லாம் மனுசனே இல்ல
ஆமா திருந்தாத ஜென்மம். இனிமே சித்தார்த் பொறுமையா இருந்தே ஆகனும்🤧🤧
 

Mathykarthy

Well-known member
ஆனந்தி எல்லாம் திருந்தாத ஜென்மம் 🤬🤬🤬🤬🤬🤬🤬
அம்மாவும் பொண்ணும் பண்ணின பாவத்துக்கு தான் சிந்துக்கு தண்டனை கிடைச்சிருக்கு அவ உணர்ந்துட்டா....... ஆனா இவங்க 😈😈😈😈😈😈😈
 

Lufa Novels

Moderator
ஆனந்தி எல்லாம் திருந்தாத ஜென்மம் 🤬🤬🤬🤬🤬🤬🤬
அம்மாவும் பொண்ணும் பண்ணின பாவத்துக்கு தான் சிந்துக்கு தண்டனை கிடைச்சிருக்கு அவ உணர்ந்துட்டா....... ஆனா இவங்க 😈😈😈😈😈😈😈
ஆமா அது திருந்தாத கேஸூ..
 
Top