Sakthivel. K
Moderator
வாழையில் வகைகள் உண்டு !
வாழையை வாழவைக்கும்
வானத்திலும் வகைகள் உண்டு!!
நாய்களில் வகைகள் உண்டு !
நாய்கள் வாழும்
மண்ணில் வகைகள் உண்டு!!
மனிதரில் வகைகள் உண்டு !
மனிதரோடு வாழும்
மாட்டிலும் வகைகள் உண்டு !
ஆட்டிலும் வகைகள் உண்டு !
பொன் வகையிலும் வகைகள் உண்டு !
வாய் நகைப்பிலும் வகைகள்
உண்டு !
காணும் காட்சிகள் யாவும்
கணிக்கும் வகைகள் பற்பல...!
உள்ளத்தின் உன்னதம் அன்பு !
அந்த அன்பிலும் வகைகள் உண்டு!
ஆய்ந்தறியும் அன்பர்களே !
அன்பின் வகைகள் கேளும்...!!
ஈன்ற தாய்க்குக்
குழந்தைகள் பற்பல -ஆயினும்
அவளின் அதிக அன்பு
ஏதோ ஒரு குழந்தையிடம்
அதுவே தாயின் தாக அன்பு...!
கற்பிக்கும் ஆசிரியருக்கு
மாணவர்கள் பற்பல - ஆயினும்
ஆசிரியரின் அதிக அன்பு
மனம் தொட்ட ஒரு மாணவனிடம்
அதுவே குருசிஷ்ய அன்பு...!
நேசிக்கும் நண்பருக்கு
நண்பர்கள் பற்பல - ஆயினும்
நண்பனின் அதிக அன்பு
காயப்படுத்தாத ஒரு நண்பனிடம்
அதுவே ஆறாத அன்பு...!
ஆலை அதிபருக்கு
நண்பர்கள் பற்பல - ஆயினும்
அதிபரின் அதிக அன்பு
தன் மனமொத்த ஒரு தொழிலாளியிடம்
அதுவே சமநிலை அன்பு...!
அரசியல் தலைவருக்குத்
தொண்டர்கள் பற்பல - ஆயினும்
தலைவரின் அதிக அன்பு
வாரிசாக ஒரு தொண்டனிடம்
அதுவே இலக்கின் அன்பு...!
நல்ல வியாபாரிக்கு
வாடிக்கையாளர்கள் பற்பல - ஆயினும்
வியாபாரியின் அதிக அன்பு
மனசாட்சியுள்ள ஒரு வாடிக்கையாளரிடம்
அதுவே இலாப அன்பு...!
மனித அன்பை
மாய்ந்து கேட்ட மானிடமே !
மலருக்கும் அன்பு உண்டு...!
இறுமாப்பு இல்லா இதயங்கள்
இயற்கை உள்ளத்தோடு உய்தால்
மலரின் அன்பு புரியும் ...!
மனம் தரும் மலருக்கு
விருந்தான பூச்சிகள் பற்பல - ஆயினும்
மலரின் அதிக அன்பு
தன்னிதழ் நோகா ஒரு பூச்சியிடம்
அதுவே...! அதுவே தான்...!!
தன்னைப்போல் பிறரையும்
நேசிக்கும் அன்பு...!!!
எல்லா அன்பும்
எனக்குப் பிடிக்கும் எனினும்
மறக்க முடியாதது !
மறைக்க முடியாதது !!
மறுக்க முடியாதது !!!
மகத்தான மலரின் அன்பே...!!!
என்றும் தமிழ்த்தாகமுடன்
சாத்தூர் சக்தி
வாழையை வாழவைக்கும்
வானத்திலும் வகைகள் உண்டு!!
நாய்களில் வகைகள் உண்டு !
நாய்கள் வாழும்
மண்ணில் வகைகள் உண்டு!!
மனிதரில் வகைகள் உண்டு !
மனிதரோடு வாழும்
மாட்டிலும் வகைகள் உண்டு !
ஆட்டிலும் வகைகள் உண்டு !
பொன் வகையிலும் வகைகள் உண்டு !
வாய் நகைப்பிலும் வகைகள்
உண்டு !
காணும் காட்சிகள் யாவும்
கணிக்கும் வகைகள் பற்பல...!
உள்ளத்தின் உன்னதம் அன்பு !
அந்த அன்பிலும் வகைகள் உண்டு!
ஆய்ந்தறியும் அன்பர்களே !
அன்பின் வகைகள் கேளும்...!!
ஈன்ற தாய்க்குக்
குழந்தைகள் பற்பல -ஆயினும்
அவளின் அதிக அன்பு
ஏதோ ஒரு குழந்தையிடம்
அதுவே தாயின் தாக அன்பு...!
கற்பிக்கும் ஆசிரியருக்கு
மாணவர்கள் பற்பல - ஆயினும்
ஆசிரியரின் அதிக அன்பு
மனம் தொட்ட ஒரு மாணவனிடம்
அதுவே குருசிஷ்ய அன்பு...!
நேசிக்கும் நண்பருக்கு
நண்பர்கள் பற்பல - ஆயினும்
நண்பனின் அதிக அன்பு
காயப்படுத்தாத ஒரு நண்பனிடம்
அதுவே ஆறாத அன்பு...!
ஆலை அதிபருக்கு
நண்பர்கள் பற்பல - ஆயினும்
அதிபரின் அதிக அன்பு
தன் மனமொத்த ஒரு தொழிலாளியிடம்
அதுவே சமநிலை அன்பு...!
அரசியல் தலைவருக்குத்
தொண்டர்கள் பற்பல - ஆயினும்
தலைவரின் அதிக அன்பு
வாரிசாக ஒரு தொண்டனிடம்
அதுவே இலக்கின் அன்பு...!
நல்ல வியாபாரிக்கு
வாடிக்கையாளர்கள் பற்பல - ஆயினும்
வியாபாரியின் அதிக அன்பு
மனசாட்சியுள்ள ஒரு வாடிக்கையாளரிடம்
அதுவே இலாப அன்பு...!
மனித அன்பை
மாய்ந்து கேட்ட மானிடமே !
மலருக்கும் அன்பு உண்டு...!
இறுமாப்பு இல்லா இதயங்கள்
இயற்கை உள்ளத்தோடு உய்தால்
மலரின் அன்பு புரியும் ...!
மனம் தரும் மலருக்கு
விருந்தான பூச்சிகள் பற்பல - ஆயினும்
மலரின் அதிக அன்பு
தன்னிதழ் நோகா ஒரு பூச்சியிடம்
அதுவே...! அதுவே தான்...!!
தன்னைப்போல் பிறரையும்
நேசிக்கும் அன்பு...!!!
எல்லா அன்பும்
எனக்குப் பிடிக்கும் எனினும்
மறக்க முடியாதது !
மறைக்க முடியாதது !!
மறுக்க முடியாதது !!!
மகத்தான மலரின் அன்பே...!!!
என்றும் தமிழ்த்தாகமுடன்
சாத்தூர் சக்தி