எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

மனதிலாடும் காதல் மந்தாரா - 4

subasini

Moderator
மனம் - 4

காதலில் கவிதைகள் அழகு
கவிதையின் அழகு வலியில்
தெரிவதில்லை…

தாரிகாவின் காதல் அழகானது அவளுக்கு, அது தன் தந்தையின் கௌரவத்தைக் காவு வாங்க வந்த கோடாரிக் காம்பாகப் பார்த்தாள் தாரா…

தந்தையின் மாசற்ற நேசமான முகம் அவள் கண் முன் வந்து வந்து போனது…

எப்படி அவரிடம் இதெல்லாம் சொல்லி இந்தப் பிரச்சினைச் சரி செய்ய என்று சிந்தித்துக் கொண்டே அந்த இரவைக் கடத்திக் கொண்டு இருந்தாள் தாரா…

உடல் சோர்வின் காரணம் உறக்கத்தில் இருந்தாள் தாரிகா…

யாரிந்தச் சதீஷ் என்று மண்டையைக் குழப்பிக் யோசித்தாள்…‌

ஆண் தோழன் இருக்கிறான் என்றால் தேவையில்லாத வம்புகள் வரும் என்று‌ வீட்டில்‌ யாரிடமும் சொல்லாமல்‌ மறைத்திருந்தாள்‌, தாரிகா.

விடியட்டும் முதலில்… அவளிடம் இதெல்லாம் விசாரிக்க வேண்டும் என்று மனதில் நினைத்தவள் தாரிகாவின் முகத்தைப் பார்த்தாள்…

பாவமாக இருந்தது..‌

என்ன செய்ய இந்தக் காலகட்டத்தில் காதல் என்ற‌ப் பெயரில், எல்லாம் வேகமாக வாழ்ந்துப் பார்த்து விடும் இளம் கூட்டத்தில் அவளும் ஒருத்தியாக அவளுக்குத் தோன்றியது…

காதல் தவறில்லை தான் ஆனால் காதல் எது காமம் எது‌ என்று‌ உணராமல் எல்லைத் தாண்டிய அவள் செயலில் என்ன சொல்ல என்று புரியவில்லை…

காமமும் காதலின் அங்கம் தானே… ஆனால் காமம் கடந்த காதல் இருப்பதில்லை எங்கேயும்…

தன் கைத் தடம் அவள் கன்னத்தில் பதிந்து இருந்ததைப் பார்த்து மெல்ல அவள் அருகில் வந்து "சாரி டி, தாரு"… என்று‌ அவள் கன்னத்தில் முத்தமிட்டாள் தாரா…

அவள் வயிற்றில் மெல்ல வருடி விட்டவள் அந்தக் குட்டிச் சிசுவினை‌ உணர‌ முயன்றாள்…

எப்படி இந்தப் பிரச்சினைச் சரி செய்வது என்று சிந்தித்துக் கொண்டிருந்தாள் தாரா.

நடுத்தர வர்க்கத்தினர் மானம் அவமானம் பற்றிய பயம் அவள் மனதினை ஆட்டிப் படைத்தது. தன் தாயிடம் என்ன என்று சொல்லுவாள்…

ஆயிரம் தடவை எடுத்துச் சொன்னாளே.. பெற்றவள் அல்லவா.. அவளுக்கு மகளின் வாழ்க்கையில் பயம் முன் கூட்டியே வந்து எச்சரிக்கைச் செய்தது போல…
இனி எப்படித் தன் அம்மாவின் முகம் பார்க்கப் போகிறேன் என்று மனதில் நினைத்தவள் கண்களில் நீர்ப் பெருக்கெடுத்தது…

ஐயோ… ஆண்டவா.. இந்தப் பிரச்சினை எப்படியாவது சரி செய்ய எதாவது உதவிப்பண்ணேன் என்று ஓராயிரம் முறை வேண்டினாள்…

இரவு முழுவதும் இப்படிப் புலம்பியும்.. அழுதுமாகக் கடத்தியவளுக்கு‌த் தெரியவில்லை இன்றோடு தன் வாழ்க்கையில் விடியல் என்பது இல்லை என்று…

மெல்ல இருளை விளங்கியது வானம்...
அந்த ஒளிக்கீற்றுத் தன் உடன் இணைந்துப் பிறந்தவளுக்குக் கிடைக்க வேண்டும் என்று‌ நினைத்தவள் தனக்கொரு அழகான வாழ்க்கை வேண்டும் என்று சிந்திக்க வில்லை…

விடிந்ததும் தாரிகாவின் ஃபோனில் நளினி அழைத்தாள் தாரா.

“ஹாலோ நான் தாரா, பேசறேன்… உங்களுக்குச் சதீஷ் யாரையாவது தெரியுமா?” என்று‌ நேரடியாகக் கேட்டாள் தாரா.

தாராவின் கேள்வியில் எதோ சரியில்லை என்று‌ உணர்ந்தவள். தன் நண்பனுக்கு எதாவது பிரச்சனையா என்று‌ யோசித்தாள்... உடனே அவன் காதல் தன் பதிலால் தோல்வி அடையக் கூடாது என்ற எண்ணத்தில் தெரியாது என்று கூறியவள் எதற்கு அவனை விசாரித்தாள் என்று கேட்டு இருக்கலாமோ…

நளினிக்கும் தெரியவில்லை என்றால் அப்போ இவள் காதலன் யாராக இருக்கும்... இவளைக் காதல் என்று சொல்லு ஏமாற்றி இருப்பானோ என்ற எண்ணம் மனதில் வலுப்பெற்றதுத் தாராவிற்கு…

கடைசி நாள் என்பதால் கண்டிப்பாக அவன் வந்து அவளைப் பார்க்க வாய்ப்பு இருக்கிறது அதனால் இன்று அவள் கல்லூரிக்குச் செல்கிறாளா என்று பார்க்க வேண்டும் என்று‌ மனதில் நினைத்தவள் தாரிகா, கண் விழிக்கக் காத்திருந்தாள்…

மெல்லக் கண் விழித்துப் பார்த்த, தாரிகாவிற்கு மெதுவாக நேற்றைய நினைவுகள் வலம் வந்ததும் பதறிப் போய் எழுந்து அமர்ந்தாள்…

இனி என்ன செய்ய.. முதலில் சதீஷிடம் எல்லாம் சொல்ல வேண்டும்… அப்பறம் தான் முடிவு எடுக்க முடியும் என்று‌ நினைத்தவள், மெல்ல எழுந்துத் தன் காலைக் கடன் முடித்தவள் அவனுக்கு அழைப்பை விடுத்துக் காத்திருந்தாள்…

தாரிகாவின் அழைப்பைக் கண்டதும் வீட்டிற்குச் செல்லும் போது தன் காதலியைக் கண்டு விட்டுச் செல்லாம் என்று‌ நினைத்து எப்படி அவளைக் காண என யோசித்தவானுக்கு அவளின் ஃபோன் அழைப்பு ஆனந்தத்தை அள்ளித் தந்தது…


வேகமாக அழைப்பை ஏற்றவன் “ சொல்லுத் தாரிகா... தானே உன்னைப் பார்க்கனும் நினைச்சுட்டு இருந்தேன்…ஆனால் நீயே அழைத்து விட்டாய். எங்கே மீட் பண்ணலாம்” என்று‌கேட்டான்…

“நாம் எப்போதும் பார்க்கும் அதே இடத்தில்” என்றவள் கண் கலங்கியது…
இதெல்லாம் கவனிக்காமல் கவனித்த தாரா அவளைப் பின் தொடர‌த் திட்டமிட்டாள்…

சதீஷிடம் தன்னுடைய சூழலை எடுத்துக் கூறி, அடுத்து என்ன செய்வது எனத் தீர்மானிக்க வேண்டும் என்று மனதில் எண்ணியபடித் தயாரானாள் தாரிகா…

தாரிகாவை ஒரு முறைப் பார்த்துவிட்டுத் தன் வீட்டிற்குப் போகலாம் என்று எண்ணி வந்தான் சதீஷ்.

சோர்ந்து போய்ச் சோகத்தின் பிறப்பிடமாக் காட்சித் தந்தத் தாரிகாவை‌க் கண்டதும் வேகமாக அவளிடம் வந்தவன் அவளை மென்மையாக அணைத்தவன் “என்ன ஆச்சுத் தாரிகா, ஏன் ஒரு மாதிரி இருக்கிறாய், காய்ச்சலா‌ உனக்கு" என்று‌ அவள்‌ நெற்றியைத் தொட்டுப் பார்த்தான்..

இல்லை சதீஷ் என்று தலையை ஆட்டியவள் வார்த்தைகள் எதுவும் இன்றி மௌனமாக மெல்ல விசும்பினாள்…
"ஏய் என்ன ஆச்சு... ஏன் அழற, நீ சொன்னால் தானே தெரியும்... இப்படி அழுதால் தான் என்ன பண்ண" என்று அவளை அணைத்தவன், "சொல்லுமா" என்றான்…

எப்படிச் சொல்ல ‌‌வார்த்தைகள் எல்லாம் வறண்டு போனது அவளுக்கு…

"யாராவது உன்னை எதாவது சொல்லிட்டாங்களா" என்று‌க் கேட்டான் 'இல்லை' என்று தலையை ஆட்டினாள்….

"அப்பறம் நான் ஊருக்குப் போறது உனக்குப் பயமாக இருக்கிறதா... இல்லை உன்னை ஏமாற்றி விடுவேன் என்று பயமாக இருக்கிறதா" என்றான்.

அதற்கு இல்லை என்றவளின் செயலில் லேசாக எரிச்சல் அடைந்தவன் "என்ன டி, பிரச்சினை... சொன்னால் தானே தெரியும், நீ பாட்டிற்கு வந்ததில் இருந்து அழுதுக்கொண்டு இருந்தால்... என்ன செய்ய நான்" என்றான்…

அவன் சினம் கண்டு.. மெல்ல அவனிடம் "நான் பிரெக்னெட் சதீஷ்" என்றாள்…

முதலில் புரியவில்லை.. பின்னர் அவள் வார்த்தைகளின் அர்த்தம் புரிந்தவன் அவள் அருகில் வந்து வேகமாக அணைத்தவனுக்கு மெல்ல எதார்த்தம் புரியவும் என்ன செய்ய என்று சிந்திக்கத் தொடங்கினான்.

மெல்ல அங்கும் இங்கும் நடந்தவன் அவளிடம் வந்து… " நான் உன்னை ஏமாற்றி விடுவேன் என்று நினைக்கிறாயா, தாரிகா" என்று நேரடியாகவே கேட்டான்…


அவன் மேல் இருக்கும் காதல் அவனை நம்பச் சொல்லியது…


"உங்க மேலே எனக்கு நம்பிக்கை இருக்குச் சதீஷ்" என்றாள் தாரிகா…

"அப்போ நான் சொல்வதைக் கேட்பாயா" என்றான்…

"என்ன சொல்லுங்க" என்றாள் தாரிகா…

"நமக்கு இப்போ இந்தக் குழந்தை வேண்டாம் தாரிகா…
எனக்கு மேலே படிக்கனும்…‌ அப்பறம் ‌என் அண்ணா கம்பெனியில் எனக்கென்று அடையாளம் உருவாக்க வேண்டும்… நீயும் உன்னோட கேரியர் பார்க்கனும்.. அதனால் இந்தக் குழந்தை இப்போது நமக்கு வேண்டாம்... இதைக் கலைத்து விடலாம்" என்ற சதீஷ் கடைசியாக உதிர்த்த வார்த்தையைக் கேட்டப் படியே அங்கே வந்த தாராவிற்கு அவன் கூறியச் சொற்கள் எல்லாம் அவள் இதயத்தில் பெரிய பிரளையத்தை உண்டாகாகியது…

அந்தக் கோபத்தில் தாரிகா, பதில் சொல்ல முயலும் முன்னமே, அவன் அருகில் வந்தவள் அவனைப் பளீர் என்று‌ அடித்திருந்தாள்…

"எவ்வளவு தைரியம் இருந்தாள் இப்படிப் பேசுவ… என்ன பணத்திமிரா" என்று‌ அவன் சட்டையைப் பிடித்திருந்தாள்…
தாரிகாவை‌ ஏமாற்றி விட்டான் என்று அவள் நம்பி விட்டாள். அவன் வார்த்தைகளின் அர்த்தம் அவளுக்கு அப்படிதான் உணர்த்தியது…


"ஏய்… யார் நீ" என்றான். அவள் கைகளைத் தன் சட்டையில் இருந்து எடுக்க முயன்றப் படி…

"நான் யாரா… ராஸ்கல் எவ்வளவு தைரியம் உனக்கு" என்றவள் ஆங்கிலத்தில் ஒரு கெட்ட வார்த்தையை உச்சரித்த படியே அவன் அடித்திருந்தாள் …

தாராவின் இந்தச் செயலைச் சற்றும் எதிர்பார்க்கவில்லை சதீஷ் மற்றும் தாரிகா…

தன் உடன் பிறந்தவளைத் தடுக்க முயன்றத் தாரிகாவின் முயற்சிகள் எல்லாம் தோல்வியில் முடிந்ததது…

"என்னயைவே‌ அடித்து விட்டாய் இல்லையா, நீ ரொம்ப வருத்தப்பட்டுவாய்" என்றவனின் அகங்காரம் அவன் காதலை வென்றது…‌

அங்கே கூடியிருந்த அனைவரின் கவனத்தையும் இவர்கள் மோதல் ஈர்த்ததில் மிகவும் அவமானமாக உணர்ந்தான் சதீஷ்…


தாராவின் கோபத்தின் பின் இருக்கும் நியாயமான காரணங்கள் புரிந்தது தாரிகாவிற்கு அதுமட்டுமின்றித் தன் மேல் இருக்கும் அவளின் மாசற்ற அன்பும் அவளைச் சிலையாக நிறுத்தியது…

இந்தச் சம்பவம் அனைவரின் வாழ்க்கையிலும் பல‌ மாற்றங்களை உண்டுப் பண்ணும் என்று‌ அறியாது மூன்று‌ப் பேரும் நிற்க... சதீஷ் மற்றும் தாராவின் சண்டை அடுத்தக் கட்டத்திற்குச் சென்றது…

"என்னடி வார்த்தைகள் விடற" என்ற தாராவின் கையை முறுக்கியவன் அவளைக் கோபத்தில் கை ஒங்க முயன்றப் போது, மீண்டும் ஒர் அடியை வைத்தவள் "உன்னை என்ன பண்ணுவேன் என்றே தெரியாது… ஒழுங்காக அவளுக்குச் செய்தத் தூரோகத்துக்கு‌ மன்னிப்புக் கேட்டு‌, அவளுக்கு நியாயமான முறையில் நடந்துக்கோ" என்று‌க் கத்திக் கொண்டு இருந்தாள் தாரா...

தன் கையை மீறிச் சென்று கொண்டிருந்த சூழ்நிலைக் கையாளக் தெரியாமல் “ வேண்டாம் தாரா…‌விடு…‌” என்று‌ அழுக்கொண்டே பேசினாள் தாரிகா…

"என்ன தாரு விட… அவன் திமிரைப் பார்த்தாயா, எவ்வளவு பெரிய வார்த்தை ஈஸியாகச் சொல்றான்… உன்னைப் பற்றி யோசிக்கவே இல்லை பார்த்தாயா" என்று கோபத்தில் கத்தினாள் தாரா…

சதீஷ் கூறிய வார்த்தைகளில் என்ன நினைத்து இதெல்லாம் பேசுகிறான்... தன்னை‌ ஏமாற்றப் போகிறானா என்ற‌க் கேள்வி மெல்ல மேலெழும்பிய நேரம்... தாரா வந்து அவனை அடித்து, எல்லாம் வேறு மாறிப் போய்க் கொண்டிருந்தது…

சதீஷோ... "தாரிகா அவள் சொல்லுவதைக் கேட்காதே... என்னை நம்புகிறாய்த் தானே"…என்றான் அவனைப் பார்த்து…

தாரிகாவின் முகத்தில் இருக்கும் சோர்வும்… அவளை மீறிய‌குழம்பமும்… அவன் காதலைக் கேள்விக் குறியாக மாற்றியது…

"அப்போ உனக்கு என் மேல், என் காதல், மேல் நம்பிக்கை இல்லையா, தாரிகா…
உன்னை‌ ஏமாற்றி விடுவேன் நினைக்கிறாயா?" என்று அவளைப் பார்த்து அவன் கேட்டக் கேள்வியில் அவன் காதல்… அவனுக்கு நடந்த அவமானத்திற்குப் பதிலாகத் தன்னை நம்புகிறேன் என்ற தாரிகாவின் வார்த்தைகள் தான் தாராவிற்கான பதிலடி என்று எண்ணிக் கேட்டான்…

கர்ப்பக் காலத்தில் தொடக்கத்தில் இருக்கும் அவளுக்குள் ஏற்பட்ட மாற்றங்கள் அவளைச் சிதைக்க என்ன பேச என்று தெரியாமல் "தாரா எனக்குக் கெடுதல் நினைக்க மாட்டாள்…உங்க வார்த்தைகள் நீங்களே யோசித்துப் பாருங்கள் சதீஷ்… உங்கள் காதலை நம்பி இருக்கும் என்னை ஏமாற்றி இருக்கீங்க" என்றாள் தாரிகா…


காதலியின் வார்த்தைகள் எல்லாம் மேலும் அவமானமாகப் போனது தாராவின் முன்…

தன் காதலைக் கொன்றுவிட்டாள் என்ற கோபம்… இப்போ இருக்கும் சூழலில் இரண்டு பேருக்கும் நல்லதுத் தானே சொன்னேன் என்று மட்டுமே அவன் மூளைச் சிந்தித்தது... குழந்தை வேண்டாம் என்று கூறியது அவனுக்குத் தவறாகப் படவில்லை என்பதைக் காட்டிலும் அவனுக்கு அது‌ மனதிலேயே பதியவில்லை... இந்த வார்த்தைகள் தான் தாராவின் கோபத்திற்குக் காரணம் என்று…

அவள் நடந்து கொண்ட விதத்தில் அவனுக்கு எல்லாம் மறந்துப் போனது…

ஒரு பெண் தன் காதலியின் முன் அசிங்கமாக‌ப் பேசி, தன்னை அவமானம் படுத்தி விட்டாள் என்று எண்ணியவன் அங்கிருந்து வேகமாகச் சென்றான், தன் இருசக்கர வாகனத்தில்… மனம் அறவோ... சமாதானம் அடையவோவில்லை… என்ன செய்ய எங்கே போக என்பதெல்லாம் தெரியவில்லை அவனுக்கு...

என்றும் துன்பமோ ஆனந்தமோ தன் சகோதரனிடம் பகிர்ந்தே‌ப் பழகியவனுக்கு இப்போது தன் அண்ணன் துணையை‌ நாடியது மனம்…

வேகமாகத் தன் அலைபேசியில் அழைப்பை விடுத்து அதை‌ப்ளூடூத்தில்‌
கனெட்‌ச் செய்தவன் தன் வண்டியின் வேகத்தை மட்டும் குறைக்கவே‌ இல்லை…
தம்பியின் அழைப்பைத் தன் அலைபேசியில் பார்த்ததும்

"சொல்லுடா... எப்போ வீட்டிற்கு வர… எங்கே இருக்க… என்னடா டிரைவிங் இருக்கும் போது கால் பண்ணக் கூடாது என்று எவ்வளவு முறைச் சொல்லி இருக்கேன்" என்று பாசமான கண்டிப்பு அதியமான் பேச்சில் இருந்தது…

அண்ணா!!! என்றவனின் குரலில் அழுகையை உணர்ந்தான் அவன் அண்ணன்…

"என்னடா என்ன ஆச்சு" என்று பதட்டத்தோடு கேட்டான் தம்பியின் துயரம் அவனைக் கொன்றது…


"சது… என்னம்மா ஆச்சு" என்ற அவன் மூத்தவனின் வார்த்தைகளில் எல்லாம் தடைகளையும் தகர்த் தெரியும் சக்தி இருந்தது…

அண்ணா ஒரு பொண்ணு என்னைய அடிச்சு அசிங்கமாகப் பேசிட்டாள்‌" என்று தாரா அவனைக் கூறித் திட்டிய வார்த்தைகள் எல்லாம் அவன் அண்ணாவிடம் கூறி அழுதான் சதீஷ்…

"எனக்கு ரொம்ப அவமானம் ஆக இருக்கிறது அண்ணா, நான் உருகிக் காதலித்த என் காதலியின் கண் முன்னே என்னை அசிங்கப் படுத்தி, என் காதலைக் கொன்னுட்டாள் அண்ணா.. எனக்கு உயிரோட இருக்கவே பிடிக்கவில்லை… அந்த இடத்தில் உடலில் துணி இல்லாமல் நின்றது போல அவமானமாக இருக்கிறது… நான் செத்தறேன் அண்ணா காதலியின் முன் என் காதல் என் மேல் இருந்த நம்பிக்கை எல்லாம் தகர்ந்துப் போச்சு…

அவள் இல்லாமல் எனக்கு வாழ்கையே இல்லை... ஆனால் அவளுக்கு என் காதல் என் மேல் இருக்கும் நம்பிக்கை எல்லாம் செத்தே போச்சு… இனி‌ நான்‌உயிரோட‌ இருந்து என்ன‌‌ப் பிரியோஜனம்‌" என்று‌ மரணத்தை அழைத்துப் பேசிய‌ அவன் வார்த்தைகள் எல்லாம் காலனின் காதில் விழுந்ததோ…

இருசக்கர வாகனத்தில் பேசிய படி ‌ஓட்டியவனுக்குக் கண்ணீர் வந்து எதிரே இருக்கும் வாகனத்தை மறைத்த அந்த நொடிப் போதுமானதாக இருந்தது காலனின் எண்ணம் நிறைவேற…


தன் தம்பியின் வாகனத்தை எதோ வந்து இடிக்கும் ஒலியோடு அந்த அழைப்புத் துண்டிக்கப் பட்டது…

சதீஷ் என்று அலறியவனுக்குப் புரிந்தது என்ன நடந்திருக்கும் என்று…

வேகமாகத் தன் அலுவலகத்தில் இருந்து பறந்து கொண்டு தன் தம்பியைக் காண வந்தான் அதியமான்…

ஐ . டி. தொழிலில் தனக்கெனத் தனி இடம் பதித்து, வளர்ந்து வரும் கம்பெனி அவனுடையது…

தன் தம்பியை வெளி நாடு அனுப்ப எல்லாம் ஏற்பாடுகள் செய்துவிட்டு அவன் எப்போது வீட்டிற்கு வருவான் என்று கேட்டு அழைத்த அழைப்பு, அவனுடைய மரணத்திற்கு ஆன அழைப்பு என்று நினைத்துப் பார்க்க வில்லை அதியமான்…

யார் அந்தப் பெண் எப்படி என் தம்பியை இப்படிப் படுக்க வைக்கலாம் காதலிப்பது அவ்வளவு பெரிய தேசக்குற்றமா... காதலித்தால் அவனை‌ அவமானப் படுத்துவாளா…
என்று தாராவின் மேல் வன்மத்தை வளர்த்திக்கொண்டு இருந்தான்…

பார்க்காமலேயே காதல் கொண்ட ஆட்களுக்கு நடுவில் பார்க்காமலே ஒரு பெண் மேல் வன்மத்தை வளர்த்திக்கொண்டு இருந்தான் அதியமான்…

அவளை அப்படியே விட அவனுக்கு மனம் வர வில்லை…
இப்போ தன் தம்பியை முதலில் காப்பாத்த வேண்டும் அது‌ மட்டுமே அவனுக்கு முதல் வேலையாக இருந்தது…

அவனை அனுமதித்து இருக்கும் மருத்துவ மனைக்கு வந்தவன் தன் தம்பியைக் காணக் காத்திருந்தான்…

அவசரப் பிரிவில் இருக்கும் அவனை எந்தப் பிரச்சனையும் இல்லாமல் திரும்பி வரவேண்டும் என்பது மட்டுமே எண்ணமாக இருந்தது அவனுக்கு…

அவன் மனதில் இப்பொழுது எதுவுமே இல்லை
'தம்பி தம்பி' என்பது மட்டுமே…

அவனைச் சிறு துரும்புக் கூடப் படாமல் வளர்த்தியவனுக்கு இப்படி அடிபட்டு உயிருக்குப் போராடிக் கொண்டிருப்பது… அவனால் தாங்க முடியாமல் தவித்தான்…
சிறு வயதிலேயே தந்தையை இழந்தத் தாயோடு வாழ்க்கைப் போராடத் தொடங்கிய போது கூட இவ்வளவு தவித்தது இல்லை... அண்ணன் என்ற‌‌ப் போதும் தன் தம்பிக்குத் தந்தையாக மாறி அவனை வளர்த்துக் கண்ணுக்குக் கண்ணாகப் பார்த்துக் கொண்டான் அதியமான்…. தன் தம்பி வாழ்க்கையில் எல்லாம் சிறப்பானதாக இருக்க என்ன வேண்டும் என்றாலும் செய்யத் தயாராக இருப்பவனுக்கு அவன் காதல் ஒரு பொருட்டே இல்லை…

அந்தக் காதல் என்ற‌பெயரில் வேறொருத்தி அவனை‌ இப்படி மரணத்துடன்‌, போராட விட்டதில் அவன் உள்ளே கனன்று கொண்டு இருக்கும் வெப்பம் எப்பொழுது
அவளை‌தாக்கும் என்று தெரியவில்லை…


‌பல‌மணி நேரத்திற்குப் பின் அவனை‌க் காண‌ வந்த மருத்துவர்…
“ பேஷண்ட் ரொம்பக் கிரிட்டிகல் ஸ்டேஜ்‌ இருக்காரு… இன்னும் ஆறு‌மணி நேரத்தில் அவரு‌, கண்‌ முழிக்கனும்…இல்லை என்றால் கஷ்டம்... அது‌மட்டும் இல்லை கண் விழித்தாலும்… அவர் எழுந்து நடக்க எப்படியும் சில‌மாதங்கள்‌ஆகும்… நாம‌ நன்றாகப் பார்த்துக் கொள்ள வேண்டும். அவரை‌ப் பழைய படி நடக்க வைக்க முடியும் என்றார்…

"நான் போய்ப் பார்க்கலாமா, டாக்டர்" என்ற அதியமான் கேள்விக்கு "தாராளமாகப் போய்ப் பாருங்கள்"… என்றவர் தன் கடமை முடிந்தது என்று‌ அங்கிருந்துச் சென்றார்…



தன் தம்பியை‌க் கண்டதும் கண் கலங்கிச் சிவந்தது அதியமானுக்கு…
உன்னை இந்த நிலைக்குத் தள்ளியவளை‌ச் சும்மா விட மாட்டேன் டா‌, என்று‌ மனதிலேயே‌க் கருவினான்…

யாரவள்…‌ எங்கு இருக்காள்... எப்படி என் தம்பியை அடிக்கலாம் அவள்…
காதலித்தால் அடிப்பாளா… இரு டி வரேன் வந்து உன்னை‌ என்ன செய்யப் போறேன் மட்டும் பாரு என்று‌க் காணாத பெண்ணின் மேலே‌ வன்மத்தை வளர்த்திக் கொண்டு இருந்தான் அதியமான்…

அவளை‌ப் பற்றிய‌த் தகவல்கள் அவனுக்குத் தேவையாக இருந்தது…
தன் செயலாளரிடம் தேவைகளைக் கூறியவன் எவ்வளவு வேகமாக இதெல்லாம் முடிக்க முடியுமோ அது‌ப் பாருங்கள் என்றவன் மீண்டும் தன் கோபத்தை அடக்க முடியாமல் அங்கும் இங்கும் நடந்தான்… இன்னேரம் அவன் கையில் சிக்கி இருந்தாள் பெண்ணவளைச் சிதைத்து இருப்பான்…

தாயிக்குத் தலைமகனாக் பொறுப்பான குடும்பத் தலைவனாக... தம்பியின் உயிராக வலம் வரும் இந்த அண்ணன் ஒரு பெண்ணிற்குத் தீங்குச் செய்வான் என்று கூறினால் யாரும் நம்ப மாட்டார்கள்.. ஆனால் வரும் காலத்தில் செய்யப் போகிறான் அதனால் அவள் படும் வேதனைகளை எண்ணி மாளாது…

காதல் இல்லாமல்
பெண்ணைவளைக் காதலில் விழ‌வைக்கப் போகிறான்…

வன்மத்தைத் திணிக்கப் போகிறவனின்
முன்னே தன்மையாகச் சிரித்து
சிவக்கப் போகிறாள்…

சிதைக்க நினைப்பவன்
சிந்தையில் நின்று காதலால்
அவனைச் சின்னாபின்னமாக்கும்
அவள் விழியசைவினை
கண்டு காதல் கொள்ள
போராடும் அவனின் காதலை
கண்டுபிடிக்க வருவாளா…

தொடரும்…
 
Top