அமுதத்திற்குச் சென்று வேலை செய்யும் மனநிலை அவனிடம் இல்லை. அங்கு சென்றால் நிச்சயம் வேலையில் கவனத்தைச் செலுத்த முடியாது. வீட்டிற்கே போவோம். அங்கே போனால் தான் அபியைப் பற்றி யோசிக்க முடியும் என்று முடிவெடுத்தான். சிலவேளை அபி திரும்பவும் வீட்டிற்கு வந்திருக்கலாம். அந்த சந்தோஷத்தை காணவாவது வீட்டிற்கு போவோம். ஆனால், அபி ஏன் இன்று எதுவும் சொல்லாது தன் அம்மா வீட்டிற்குப் போனாள். நான் நேற்று சொன்னதில் அவளுக்கு ஏதும் பிடிக்கவில்லையா? அல்லது என்னைத் தவறாகப் புரிந்து விட்டாளா? நிச்சயம் இருக்காது. அவள் அப்படி யோசிப்பவள் அல்ல எனப் பலவாறு சிந்தித்தபடி வீடு வந்து சேர்ந்தான். அந்நேரத்தில் அவன் வீட்டிற்கு வரவும் நிலா பதட்டமானார். அவன் வேலையென்று சென்றால் வீட்டையே மறந்து விடுபவன். இன்று வேலை நேரத்திலேயே வீட்டிற்கு வந்துள்ளான். அதிலும் அவன் முகம் மிகவும் சோர்ந்து போய் இருக்கவும் பயந்தே விட்டார்.
"இனியா உனக்கு உடம்புக்கு முடியலையா? காய்ச்சல் ஏதும் காய்கிறதா? அப்பாவை ஃபோன் பண்ணி வரச் சொல்லுறன். கொஞ்சம் பொறுப்பா" என்றவர் அலைபேசியில் தன் கணவரை அழைக்கச் சென்றார்.
"அம்மா, அப்பாவை கூப்பிட வேண்டாம். எனக்கு ஒன்றுமில்லை. கொஞ்சம் தலைவலிக்குது. வேற எதுவும் இல்லை. டேப்லற் இருக்குது. அதைப் போட்டு ரெஸ்ட் எடுத்தால் சரியாகிடும்மா"
"ம்ம்… ஓகேபா... காஃபி போட்டுத் தரவா? தலைவலிக்கு நன்றாக இருக்கும்"
"வேணாம்மா... நான் கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கிறன்" என்றவன் தங்கள் அறைக்கு வந்தான்.
அறைக்குள் நுழையும்போதே அபிராமி அந்த அறைக்குள் வளைய வருவதுபோல் உணர்வு தோன்றியது. அவள் வந்துவிட்டாள் போலும் என நினைத்தவன் அறையின் இருபகுதியிலும் சுற்றுமுற்றும் தேடினான். சந்தேகத்தில் குளியலறைக்கும் சென்று பார்த்தான். அவள் அங்கே இல்லையெனவும் அது தன் பிரம்மை என்பதை உணர்ந்தான். தலையைக் குலுக்கி விட்டு வந்து கட்டிலில் அமர்ந்தான். அந்தக் கட்டிலும் அவள் நினைவை இன்னும் தூண்டியது. இந்த இடத்தில்தானே அவள் தூங்குவது என்று நினைத்தபடி படுக்கையைத் தடவிக் கொடுத்தான். அவளது தலையணையை எடுத்தவன் அதனை இறுக்கி அணைத்தான். அந்தத் தலையணையில் தன்னவளின் வாசம் உணர்ந்தவன் சிறிதுநேரம் கண்களை மூடி அந்த சுகத்தை அனுபவித்தான். அதனை மீண்டும் வைத்தவன் எழுந்து பால்கனிக்கு செல்ல முயன்றான். அப்போதுதான் அவன் கண்களில் அந்தக் காகிதம் உறுத்தியது.
கட்டிலுக்கு அருகிலே போடப்பட்டிருந்த சிறிய மேசையில் காகிதம் ஒன்று மடித்து வைக்கப்பட்டிருந்தது. அது பறக்காமல் இருக்க பேப்பர் வெயிட் அதன் மேல் வைக்கப்பட்டிருந்தது. அதனை எடுக்கும்போது ஏதோ புரிவது போல் இருந்தது அவனுக்கு. முன் தினம் மாலையில் இருந்து அபி பேசாததற்கு இந்தக் கடிதத்தில்தான் பதில் இருக்கின்றது என்பது புரிந்தது.
அந்தக் கடிதத்தின் ஆரம்பமே அவனை உலுக்கி விட்டது.
"என் அன்பின் தமிழுக்கு, தமிழ் என்று அழைப்பதற்கு மன்னித்துக் கொள்ளுங்கள்." என்று ஆரம்பித்திருந்தாள். தமிழ் என்ற அழைப்பே அவனைக் கிறங்கடித்தது. இதுவரை யாரும் அவனை அப்படி அழைத்ததில்லை. எல்லோரும் இனியன் என்றே அழைப்பார்கள். தன் பொண்டாட்டி முதல் முறையாகத் தன்னைச் செல்லப் பெயர் கொண்டு அழைத்திருக்கின்றாள் என்று சந்தோசத்தில் மிதந்தான். ஆனால், அந்தச் சந்தோசம் அடுத்த நொடியே காணாமல் போனது.
அடுத்த வரியிலேயே “இனிமேல் உங்கள் வாழ்விலிருந்து நான் விலகிக் கொள்கிறேன்..." என்று கடிதத்தை தொடர்ந்து எழுதியிருந்தாள்.
தன் அபியின் கடிதம் தந்த அதிர்ச்சியில் சற்று நேரம் இமைக்கவும் மறந்து அந்தக் கடிதத்தையே வெறித்தவாறு அமர்ந்திருந்தான்.
'என் அபி என்னைப் பிரிந்து போய்விட்டாளா? என்னை இங்கே தவிக்கவிட்டுவிட்டு ஒரேயோரு கடிதம் மூலம் இருவருக்குமான பந்தத்தை பிரித்துவிட்டுச் சென்றுவிட்டாளா? எதற்காக? நான் தான் கூறினேனே. எனக்கு நீயும் முக்கியம் என்று. ஆனால் அவள் அதைப் புரிந்து கொள்ளவில்லையா? எந்தத் துன்பத்தையும் என்னால் தாங்கிக் கொள்ள முடியும். ஆனால் அபிம்மா நீயில்லாத ஒரு நாள் கூட என்னால் சந்தோஷமாகவோ நிம்மதியாகவோ வாழ முடியாது. என் சுவாசமே நீதானம்மா...' மனதுக்குள் புலம்பியவாறு அமர்ந்திருந்தான். அவனால் நம்பவும் முடியவில்லை. பித்துப் பிடித்தது போல் ஆகிவிட்டது. கடிதத்தை மேற்கொண்டு வாசிக்க முடியாமல் கண்கள் இருட்டுவது போல் இருந்தது. கண்களை இறுக மூடினான். அவனது மூடிய இமைகளை மீறி ஒருதுளி கண்ணீர் வெளிப்பட்டது.
சில நிமிடங்கள் கழித்துத் தன்னைச் சுதாரித்தவன் மேற்கொண்டு தன்னவள் எழுதியிருப்பதை வாசித்தான்.
"என் அன்பின் தமிழுக்கு, தமிழ் என்று அழைப்பதற்கு மன்னித்துக் கொள்ளுங்கள். உங்களுக்கு நான் அப்படி அழைப்பது பிடிக்குமோ தெரியாது. ஆனால் எனக்கு நீங்கள் எப்போதுமே தமிழ்தான்.
இதுவரை என்னால் நீங்கள் பட்ட கஷ்டங்கள் எல்லாம் போதும். இனிமேல் உங்கள் வாழ்விலிருந்து நான் விலகிக் கொள்கிறேன். நீங்கள் சந்தோசமாக வாழ வேண்டும்.
இதை நேரில் சொல்லும் மனத் தைரியம் என்னிடத்தில் இல்லை. நேற்று இரவு முழுவதும் தூக்கமின்றி யோசித்துத்தான் இந்த முடிவை எடுத்தேன்.
இதுவரை நாளும் என்னால் நீங்கள் பட்ட வேதனையெல்லாம் போதும். என்னை வெறுக்கவும் முடியாமல் சேரவும் முடியாமல் நீங்கள் தினம்தினம் மனதுக்குள் மருகுவது எனக்குப் புரிகின்றது. ஏனெனில் அந்த வேதனையை நேரடியாக அனுபவித்தவள் நான்.
எனவேதான் பல தடவை இல்லை பல்லாயிரம் தடவை யோசித்துத்தான் இந்த முடிவை எடுத்தேன். என் முடிவு உங்களுக்கு நிச்சயம் பிடிக்காது. மனவேதனையைத் தரும் என்பதை அறிவேன். உங்களுக்கு நான் எப்போதும் இடைஞ்சலாக இருக்க விரும்பவில்லை. இடைஞ்சல் என்று நீங்கள் கருதாவிட்டாலும் உண்மை அதுதான். உங்களை நான் மணந்தது உங்களுக்கு நான் இழைத்த மிகப் பெரிய தவறு. இந்தக் கல்யாணத்தை நிறுத்திவிடுமாறு நீங்கள் எத்தனை தடவை என்னிடம் கேட்டீர்கள். ஆனால், என் அப்பாவின் உடல் நிலையை நினைத்துப் பிடிவாதமாய் நம் கல்யாணத்தை நடத்தினேன். ஆனால், அப்பாவிற்கு உடல் சுகவீனம் என்பது மட்டும் காரணம் என்று சொல்ல மாட்டேன். ஆம் தமிழ், உங்களை மணப்பதற்கு வேறு காரணமும் இருக்கு. உங்களை விட்டுப் பிரிவதற்கு முன் ஒரு தடவையேனும் அதைச் சொல்லிவிடுகின்றேன் என்னை மன்னித்து விடுங்கள். தமிழ் உங்களை நான் காதலித்ததே நம் கல்யாணத்தைத் தடுக்காமல் நடத்தக் காரணம்.
நான் கூறுவதை உங்களுக்கு நம்பக் கடினமாக இருக்கலாம். ஆனால், உண்மை அதுவே. உங்கள் படத்தை முதல் தடவை பார்த்ததுமே எனக்கு ரொம்பப் பிடித்துப் போய்விட்டது. நீங்கள் எனக்காகவே பிறந்தவர் என்று என் மனம் அடித்துச் சொல்லியது. பார்க்கப் பார்க்க ஏதோ முன் ஜென்ம பந்தம் என்றே நான் உணர்ந்தேன். நீங்கள் மறுக்கவும் வேறு யாரையும் காதலிப்பது போல் தோன்றாததாலும் அப்பொழுது கல்யாணம் செய்வதில் ஆர்வம் இல்லாமல்தான் மறுக்கின்றீர்கள் என நினைத்தேன். சில நாட்களில் என் மீது உங்களுக்கு பிடிப்பு வந்து விடும். எப்படியாவது நீங்கள் என்னை ஏற்றுக் கொள்வீர்கள் என்றும் நம்பியிருந்தேன். அந்த நம்பிக்கை தான் நமக்குள் ஒரு பந்தத்தை உருவாக்கியது.
ஆனால், அந்த பந்தம் நிலையற்றது என்று எனக்குத் தெரியவில்லை. நீங்கள் இப்படி ஒரு இக்கட்டான சூழ்நிலையில் இருப்பீர்கள் என்று நான் சற்றும் நினைத்துப் பார்க்கவில்லை. நிச்சயமாக உங்களில் ஒரு சதவீதம் கூட தப்பு இல்லை.
தமிழ்... நீங்கள் தவிப்பதை என்னால் பார்த்துக் கொண்டிருக்க முடியாது. உங்கள் பிரச்சினைக்கு நான் தான் தீர்வு காண முடியும். அது மட்டும் எனக்கு நன்கு புரிகின்றது. என் சுயநலத்தால் அந்தக் குழந்தை வினுவைக் கஷ்டப்படுத்த நான் விரும்பவில்லை. நீங்களும் நிம்மதியாக இருக்கணும், வினுவின் எதிர்காலமும் சிறப்பாக அமைய ஒரேயொரு தீர்வு மட்டுமே உள்ளது.
நான் சொல்வதை நீங்கள் ஏற்றுக் கொள்ள மாட்டீர்கள் என்று புரியும். ஆனால் எனக்காகவும் வினுவுக்காகவும் அதை நீங்கள் செய்து தான் ஆகணும்.
நீங்கள் காயத்திரியைக் கல்யாணம் செய்து சட்டப்படி அவனுக்கு அப்பாவாக மாறனும். அந்தக் குழந்தையின் எதிர்காலம் உங்கள் கைகளிலேயே உள்ளது. இதற்கு வேறு எந்தத் தீர்வும் இல்லை. நான் எடுத்த முடிவுதான் சரியானது.
எனவே... இது குறித்து நான் எங்கள் வீட்டில் பக்குவமாக எடுத்துக் கூறி விரைவில் நாம் பிரிவதற்கு ஏற்பாடு செய்கிறேன். நீங்களும் காயத்திரியுடனான திருமணத்திற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளுங்கள்.
உங்கள் மீது எனக்கு எந்த வருத்தமும இல்லை. உங்கள் இக்கட்டான சூழ்நிலை எனக்குப் புரியும். என் மீதும் கோபிக்காதீர்கள். ஒரேயொரு விஷயம் கூறிவிட்டு கடிதத்தை முடிக்கிறேன். எனக்கு நான் ஏன் காயத்திரியாகப் பிறந்திருக்கக் கூடாது என ஏங்குகிறேன். இவ்வளவு அன்பும் அக்கறையும் காட்டும் ஒரு நண்பன் எனக்குக் கிடைத்திருப்பானே" என்று முடித்திருந்தாள்.
கடிதத்தின் முடிவில் 'உங்கள் அபி' என்று எழுதிவிட்டு அதனை வெட்டிவிட்டு அபிராமி என்று கையொப்பம் இட்டிருந்தாள்.
கடிதத்தை வாசித்து முடித்ததும் தமிழினியனின் மனம் பெரும் தவிப்பில் மூழ்கியது.
'அபி சொல்வது போல என்னால் முடிவெடுக்க முடியாது. இது அவளுக்குப் புரியவில்லையே. அவளைப் பிரிந்து என்னால் வாழ முடியாது. இந்த சூழ்நிலைக்கு இது தீர்வல்ல. வேறு யோசிக்க வேண்டும். அபியைப் பிரிந்து ஒருநாள் கூட என்னால் வாழ முடியாது.'
'ஆனால்... அப்பா அப்பா என்று உருகி நிற்கும் வினுவுக்கு என்ன பதிலைச் சொல்வது...? அபியிடமும் நீ என்ன முடிவெடுத்தாலும் ஓகே என்றேன். ஆனால் இப்பொழுது அவள் பிரிவை என்னால் தாங்க முடியாதுள்ளதே. அவள் தான் என் உயிர் மூச்சு. அவளின்றி என்னால் சுவாசிக்கக்கூட முடியாது. இது அவளுக்குப் புரியலையா? இல்லை. அவளுக்கு என் அன்பு தெரியும். எனக்காக மட்டும் தான் அவள் இந்த முடிவை எடுத்திருக்காள்' யோசிக்க யோசிக்க தலையை வலிப்பது போல இருக்கவும் இரு கைகளாலும் தலையை அழுந்தப் பிடித்தபடி அமர்ந்திருந்தான்.
பிற்பகல் வரை என்ன செய்வதென்றே புரியாமல் தவிப்போடு அறையையே வலம் வந்தான். மதிய உணவைக் கூறி அறைக்கு வரவழைத்தவன் சாப்பிடுவதாகக் கூறி தாயை அனுப்பி வைத்தவன் சாப்பிடாது அப்படியே வைத்துவிட்டான்.
யாரிடமாவது பேசினால் ஆறுதலாக இருக்கும் என்று நினைத்தான். அவன் உயிர் நண்பர்களில் காயத்திரியிடம் இதைச் சொன்னால் நிச்சயம் திட்டுவாள். திட்டினாலும் பரவாயில்லை. தன்னாலும் வினுவாலும் என் வாழ்க்கைக்கு ஏதும் இடைஞ்சல் ஏற்பட்டுவிட்டதோ என்று எண்ணிக் கலங்குவாள். அவளுக்கு இது தெரியவே கூடாது என்று நினைத்தவன் லக்ஷ்மனுக்கு அழைப்பெடுத்தான்.
“ஹாய் மச்சி, இப்பவாவது என் நினைப்பு வந்ததே. கல்யாணம் ஆனதும் தான் ஆச்சு ஒரு ஹோலுக்குக் கூட மாப்பிள்ளைக்கு டைம் இல்ல. நாங்க ஹோல் பண்ணினாலும் அப்புறம் பேசுறேன் என்று உடனேயே கட் பண்ணிடுவாய். ஆமா மச்சி என்ன திடீர் ஹோல்? ஏதும் விஷேசமா? அபிராமி எப்படியிருக்காங்க?” என்று மூச்சு விடாமல் பேசி முடித்தான்.
“டேய்.. இப்படி ஹாப் விடாமல் கேள்வி கேள்வி கேட்டால் எப்படி பதில் சொல்றது. ஆமா நீ எப்போ எனக்கு ஹோல் பண்ணி நான் ஆன்ஸர் பண்ணாமல் விட்டேன்?”
“அது… அது..”
“மகனே பக்கத்தில் இருந்திருந்தால் தெரியும். நீ வுட்பியோடு கடலை போட டைம் பத்தாமல் இருக்காய். எப்போ ஹோல் பண்ணாலும் பிஸி. அப்புறம் கலாய்க்கிறாய்”
“சரிடா மச்சி விடு விடு… காயத்திரியப் பார்த்து வன் வீக் ஆயிடுச்சுடா. எப்படியிருக்காள்? அபிராமி எப்படியிருக்காங்க?”
“காயத்திரியக் காலையில்தான் பார்த்தேன். வினுவுக்குத்தான் ஃபீவர். டொக்டரிடம் காட்டி மருந்து எடுத்துக் கொடுத்திட்டு தான் வந்தேன்”
“ஓஓ சரிடா அவளுக்கு ஹோல் பண்ணுறேன். அபிராமி எப்படியிருக்காங்க?”
“மச்சி அது வந்து… உன்கிட்ட பேசணும் இப்போ வீட்ட வர முடியுமாடா? பிளீஸ்டா”
“டே வாடா என்றால் வரப் போறேன். அதுக்கேன் பிளீஸ் எல்லாம் போடுறாய். ஹால்வ் அன் ஹவரில் வந்திடுவேன்.” என்று சொன்னவன் குறிப்பிட்ட டைமிற்குள் வந்துவிட்டான்.
“என்ன மச்சி, என்ன அவசரம் சொல்லுடா” என்றான் லக்ஷ்மன்.
அவன் கேட்டதும் எல்லாவற்றையும் சொல்லி முடித்தான் தமிழினியன். அதிர்ச்சியோடு அவன் சொன்னவற்றைக் கேட்டுக் கொண்டிருந்தவனுக்கோ எதுவும் பேச நா எழவில்லை.
“என்னடா எதுவும் சொல்லாமல் இருக்காய்”
“மச்சி நீ ரொம்ப ரொம்ப புத்திசாலி என்று நாங்கள் பெருமைப்பட்டால், நீ இப்படி அடிமுட்டாளாய் இருக்கியே”
“ஏன் மச்சி அப்படிச் சொல்லுறாய்?”
“பின்ன என்னடா… நீயும் அபிராமிய லவ் பண்ணினாய். அவங்களும் உன்னை லவ் பண்ணுறதாய் சொல்லுறாய். அப்புறம் என்ன? கல்யாணம் பண்ணி சந்தோஷமாய் இருக்காமல் இப்படி லைவ் வீணாக்குறியே”
“இல்லடா.. நான் வினுவை யோசித்துப் பார்த்தேன். அவன் என் வாழ்வில் இருப்பது அபிக்கு பிடிக்காமல் என்னை விட்டு போகணும் என்று நினைத்தால்… அதுதான் அவள் எப்படி வந்தாளோ அப்படியே போகணும் என்று நினைத்தேன். அதுதான்…”
“இப்போ போயிட்டாங்களே விட வேண்டியது தானே? அவங்களாவது சந்தோஷமாய் இருக்கட்டும் ”
“மச்சி.. என்னால் அபி இல்லாமல் வாழ முடியாது என்று இப்போ தோணுதடா”
தமிழினியனின் தவிப்பைப் பார்க்க அவன் ஆருயிர் நண்பனுக்கு உள்ளம் உருகியது. அவனை அணைத்தவன்
“மச்சி… காதல் என்றால் இப்போது எனக்கும் புரியும். நான் கோபத்தில் சொன்னேன். ரிலாக்ஸ்டா.. நீ வினுவையோ காயத்திரியையோ பற்றி யோசிக்காதடா. அவங்களை நாம எல்லோரும் சேர்ந்து சந்தோஷமாய் வாழ வைப்போம்”
“அது எனக்கு தெரியாதாடா.. வினு என்னைத்தான் தன் அப்பா என்று நம்புறான். நானும் அவனை என் மகனாகவே நினைக்கிறேன். அவனைக் கஸ்டப்படுத்தவோ விட்டுக் கொடுக்கவோ என்னால் முடியாது. அவன் குழந்தைடா… அவன் வளர்ந்து உண்மை அறிந்து கொள்வான். ஆனால், இப்போ… வெளியில் போகும்போது அவன் அப்பா என்று அழைத்தால் அபி சங்கடப்பட்டு அதனால் வீண் மனஸ்தாபம் வேண்டாம் என்றுதான் அபியிடம் சொன்னேன். ஆனால், அபி இப்படி முடிவெடுத்தாளே”
“மச்சி… அபிராமியும் உன் மேல் காதலுடன் தான் இருக்காங்க. இப்படி இருவரும் பிரிஞ்சிருந்து வேதனைப்படுவதால் எந்த நன்மையும் இல்லை. ஒரே வழிதான். நீ அவங்களை நேரில் போய் பார். இந்த முடிவு தப்பு என்று அவங்களுக்கு உணர்த்து. உன் மனசுக்கு உனக்கு எந்தக் குறையும் வராதுடா”
லக்ஷ்மன் சொன்னதுதான் சரி என்ற தீர்மானத்துடன் எழுந்தான். அபியின் வீட்டிற்குச் செல்ல முடிவெடுத்தான்.