அதீனா ஜார்ஜ்
Moderator
அத்தியாயம் - 1
மெல்ல மெல்ல விண்மேகங்கள் வெள்ளை நிறத்திற்கு மாறி இருக்க, ஆகாயத்தில் பகலவன் உதயமாகும் தருணம் நெருங்கிக் கொண்டிருந்தது.
பொழுது புலரத் தொடங்கி இருந்தாலும் இன்னும் சில மக்கள் புலராமல் நித்திரையின் பிடியில் தான் இருந்தனர்.
நரேந்திரன் ஆழ்ந்த சயனத்தில் போர்வைக்குள் சுருண்டிருந்தான். சில நொடிகள் கடந்து அவனின் உறக்கத்தை கலைத்தது காற்றில் கலந்து வந்த கந்த சஷ்டி கவசம் பாடல். அதுவும் அவன் அன்னை குமுதாவின் குரலோடு.
"சஷ்டியை நோக்கச் சரவண பவனார்...
சிஷ்டருக் குதவும் செங்கதிர் வேலோன்..
பாதம் இரண்டில்..
பன்மணிச் சதங்கை..
கீதம் பாடக் கிண்கிணி யாட.."
என்று சூலமங்கலம் சகோதரிகள் பக்தியுடன் பாடி இருந்த பாடல் அந்த வீட்டை நிறைக்க, கூடவே இவன் அன்னையும் அவர்களின் குரலோடு தன் குரலை கலக்க விட்டு காஃபியை கலக்கத் துவங்கி இருந்தார்.
அன்னையின் குரலில் தான் தினமும் நரேந்திரனுக்கு திருப்பள்ளி எழுச்சி நடைபெறும்! இன்றும் அப்படியே!
மெல்லிய புன்னகை இதழ்களை எட்ட, போர்வையை விலக்கி எழுந்தவன் தன் அருகில் குறட்டை விட்டு தூங்கி கொண்டு இருக்கும் தனது தம்பியின் முதுகில் ஒரு தட்டுத் தட்டி "எழுந்திரு நவீன். டைம் ஆச்சு. இன்னைக்கு எக்ஸாம்னு வேற சொன்ன" என்றபடி தன் போர்வையை நேர்த்தியாய் மடித்து தலையணை மீது வைத்து விட்டு பல் துலக்கச் சென்றான்.
காலை வாக்கிங்கை முடித்து விட்டு தலைக்குக் கொடுத்திருந்த குள்ளாவை கழட்டியபடி வீட்டிற்குள் நுழைந்தார் அவ்வீட்டின் தலைவர் மயில்வாகனம்.
மனைவி கையாலான காஃபி வாசத்தை ஆழ்ந்து நுகர்ந்தபடி அடுக்களைக்குள் வந்தவர்,
"குமுதா காஃபி ரெடியா....." என்று கேட்க,
"இதோ ரெடி" என்றபடி காஃபி டம்ளரை அவரிடம் நீட்டினார் குமுதா.
மஞ்சள் பூசி, நெற்றியில் வட்டமாக குங்குமம் இட்டு, ஆங்காங்கே தென்பட்ட நரை கூந்தலுடன் சிவப்பு நிற சேலையில் மங்கலகரமாக இருந்தவரை காணக்காண மயில்வாகனத்திற்கு தெகிட்டவில்லை!
கைகள் காஃபியை கணவனிடம் கொடுத்து விட்டு அடுத்த வேலைக்கு தாவி இருக்க, மனைவி முணுமுணுக்கும் கந்த சஷ்டி கவசத்தை தானும் முணுமுணுத்தபடி ஹாலிற்கு வந்து அமர்ந்தார் மயில்வாகனம்.
கந்த சஷ்டி கவசம் காலை வேலையை என்றும் ரம்மியமாக மாற்றும்! தினந்தோறும் அதைக் கேட்கவில்லை என்றால் அந்த வீட்டில் இருக்கும் யாருக்கும் பொழுதே நகராது! இனிக்காது!
பேப்பரை கையில் எடுத்த நொடி, நரேந்திரன் வந்திருந்தான்.
"குட் மார்னிங் ப்பா"
"குட் மார்னிங்டா நரேன்!" என்றவர், "நவீன் எங்க?" என்று இளைய மகனைக் கேட்டார்!
"உங்க சின்ன புள்ள செம தூக்கம்! இப்போ தான் முதுகுல ரெண்டு தட்டுத் தட்டி 'இன்னைக்கு எக்ஸாம்னு சொன்னியேடா'ன்னு சொல்லி எழுப்பி விட்டு வந்திருக்கேன்" என்றான்.
"நரேன்.. இந்தா காஃபி" டம்ளருடன் வந்தார் குமுதா.
அதைப் பெற்றுக் கொண்டவன் "நானே வந்து வாங்கி இருப்பேனே ம்மா" என்றபடி ஒரு மிடறு விழுங்கினான்.
"அதனால என்னடா?" என்றவர், "எங்க நவீன் இன்னும் ஆளைக் காணோம்?" என்று பார்வையை அறையின் பக்கம் திருப்ப, அவரைக் கண்டு செல்லமாய் முறைத்தவன் "இங்க குத்துக்கல் கணக்கா கண்ணு முன்னாடி இருக்க பெரிய மகன் உங்க கண்ணுக்கு தெரியல. இன்னும் எழுந்து வராத சின்ன மகன மட்டும் எங்க காணோம்னு தேடுறீங்க" என்றான் சிறு பிள்ளையாய்.
"போச்சு குமுதா. உன் பெரிய மவன் காலங்காத்தாலயே உரிமை போராட்டத்தை ஸ்டார்ட் பண்ணிட்டான்" என்று சலித்துக் கொள்ள, அவரையும் செல்லமாய் முறைத்தான் நரேந்திரன்.
"நரேன் ண்ணா... எருமை மாடு மாதிரி வளந்தாலும் இன்னும் சின்ன பிள்ளை மாதிரி என் கூட அம்மாக்காக பொறாமை படுற!" என்றபடி அங்கே கையில் பெரிய இரண்டு புத்தகங்களுடனும், ஒரு நோட் பேடுடனும் வந்தான் நவீன்குமரன்!
நரேந்திரனுக்கு அடுத்துப் பிறந்தவன்! வீட்டின் செல்லப் பிள்ளை! நரேன் அவன் மீது படும் பொறாமை எல்லாம் செல்லப் பொறாமைகளே! ஏனென்றால் அவனுக்கும் நவீன் செல்லத் தம்பி தான்!
"யாரு பொறாமை படுறா? நீயா? இல்ல நானா? நேத்து நைட் ஆஃபிஸ் விட்டு வரும் போது ரொம்ப டயர்டா இருக்கேன்னு அம்மா மடியில படுத்ததுக்கு, அமைதியா படிச்சுட்டு இருந்தவன் படார்னு எழுந்து வந்து 'அதெப்படி நீ மட்டும் படுக்கலாம். நானும் வருவேன்'னு இன்னொரு பக்கட்டு வந்து என் மண்டைய இடிச்சிட்டு படுத்த தானே?????" என்று தம்பியிடம் வாயாடத் துவங்க,
புத்தகத்தை மரத்தாலான டீப்பா மீது டொம்மென வைத்தவன் "போடா நானெல்லாம் பொறாமை எல்லாம் படல! பட்.... லைட்டா..... பொறாமை பட்டேன்" என்றான் அன்னையின் கழுத்தை கட்டிக் கொண்டு!
"சரியான அம்மா கோண்டு!!!!" என்று நரேன் நக்கல் செய்ய, "நீ மட்டும் என்ன..? நம்ம மயில் வண்டி கோண்டாக்கும்! அடங்குண்ணா... நீயும் நம்ம குமுதா கோண்டு தான்" என்றான் சிரித்தபடி!!
"ஐயோ ராமா.... இவனுங்க இமிசை தாங்க முடியலடா சாமி!!!!!" என்று கவுண்டமணி பாணியில் சொல்லி காதைப் பொத்திக் கொண்ட மயில்வாகனம் தன்னை நோக்கிச் சிரிக்கும் மூவரையும் கண்டு,
"இப்படி மூணு பேரும் ஒரு கட்சியா இருந்து என்னை தனிக் கட்சியா சுத்த விடுறீங்கள்ள! முருகா எனக்கு ஒரு மக பிறந்திருக்க கூடாதா?" என்று அன்னாந்து பேசியவர்,
"இந்த நவீன் பயலுக்கு பதிலா பொண்ணு பொறந்து இருக்கலாம்!" என்று போலியாக அலுத்துக் கொண்டார்.
மூவரும் இன்னும் சிரிக்க, "போங்கடா.. என்னோட மருமகளுங்க வரட்டும். அப்புறம் நானும் இந்த வீட்ல தனி கட்சி ஆரம்பிச்சு கூட்டணி போடுறேன்" என்று முறுக்கிக் கொள்ள, "ஆமா... இவரு பெரிய அரசியல் மன்னன்! கட்சி.. கூட்டணின்னு..!" என்று கணவனை கட் பண்ணிய குமுதா,
"டேய் சின்னவனே நீ போய் படி! பெரியவனே நீ வேலை இருந்தா பாரு. இவரு இப்படித் தான் பேச ஆரம்பிச்சாருன்னா நிறுத்த மாட்டாரு!" என்றபடி அடுப்படிக்குள் நுழைய, நவீன் வெளியே இருந்த சிட் அவுட்டிற்கு சென்று புத்தகமும் கையுமாக அமர்ந்து கொண்டான்.
காலை வேளை இனிதே ஆரம்பித்து இருக்க, அனைவரின் முகத்தில் புன்னகையும், மனதில் மகிழ்ச்சியும் நிறைந்து இருந்தது.
மயில்வாகனம் - குமுதா தம்பதியினரின் குடும்பம் மிகவும் அழகான, அன்பான குடும்பம்!
மித மிஞ்சிய பணக்கார வர்க்கத்தை சேர்ந்தவர்களும் இல்லை!
மிக ஏழ்மை வர்க்கமும் இல்லை!
சாதாரண நடுத்தர வர்க்கத்து குடும்பம் தான்.
மயில்வாகனம், ஒரு தனியார் கல்லூரியில் அட்மினிஸ்ட்ரேஷன் பிரிவில் உள்ள அலுவலக பணியில் இருக்கிறார். அளவான சம்பளம் தான் என்றாலும், நிறைவான வாழ்க்கை அவரினுடையது!
மனதை புரிந்து கொண்டு இல்லம் நடத்தும் அவரின் வாழ்க்கைத் துணை குமுதா அவருக்குக் கிடைத்த வரம் என்று தான் சொல்ல வேண்டும்! அவருக்குப் பிறந்த இரு பிள்ளை செல்வங்ளும் வரம் தான்!
மூத்தவன் நரேந்திரன்!
இருபத்தினாளு வயது முடிந்து இருப்பத்தைந்து வயதிற்குள் காலடி எடுத்து வைக்கப் போகும் வாலிபன்!
மயில் வாகனத்தின் வேலைக்கு அளவான சம்பளம் தான் என்றாலும், வங்கியில் லோன் பெற்று மகன் விரும்பிய என்ஜினீயரிங் படிப்பை படிக்க வைத்தார். அதன் பலன், கல்லூரி இறுதி ஆண்டிலேயே கேம்பஸ் இன்டர்வியூவில் செலக்ட்டாகி இருந்தான் நரேந்திரன்.
இதோ இரண்டரை ஆண்டுகளாய் அந்த மென் பொருள் நிறுவனத்தில் ஜூனியர் சாஃப்ட்வேர் டெவலப்பராக பணி புரிந்து வருகிறான்.
ஸ்டார்ட்டிங்கில் இருபத்தைந்து ஆயிரம் அவனின் ஊதியம்! இரண்டு ஆண்டுகள் சென்ற பின்னர், அது வளர்ந்து ஐம்பதாயிரமாக மாறி இருந்தது.
அவன் சம்பாத்தியத்தை என்றும் வீன் போக விட்டதில்லை. தேவை இல்லாத ஒரு செலவினை கூட செய்ய மாட்டான். இந்த இரண்டரை ஆண்டுகளில் அவனின் படிப்பிற்காக வாங்கி இருந்த வங்கிக் கடனை அவனே சுயமாக அடைத்து இருந்தான்.
மயில்வாகனம் வேண்டாம் என்று சொல்லியும் இவன் கேட்கவில்லை. "நெக்ஸ்ட் நவீன் படிப்புக்கு உங்க சேவிங்க்ஸ் இருக்கட்டும் ப்பா. அவனும் இன்ஜினியரிங் தான் படிக்க ஆசைப் படுறான்" என்று தடுத்து விட்டான்.
மகனின் பொறுப்பான குணம் என்றுமே பெற்றவர்களின் உள்ளத்தை குளிர்விக்கும்! அவனின் ஒவ்வொரு செயலிலும் ஒரு நேர்த்தி இருக்கும்! ஒரு பொறுப்பான இளைஞன் என்று சொன்னால் அது மிகையாகாது!
அலுவலக வேலை எதுவும் இல்லாத காரணத்தினால், அன்னைக்கு உதவ வேண்டி அடுக்களைக்குள் புகுந்து விட்டான் நரேந்திரன்.
இது வழக்கமான ஒன்று தான். அந்த வீட்டில் பெண் பிள்ளை இல்லை என்றாலும், பெண் பிள்ளைகள் செய்யும் வேலைகள் அனைத்தும் மயில்வாகனத்தில் மக்கள் செய்வர்!
பெண் பிள்ளைகள் தான் இந்தந்த வேலைகளை செய்ய வேண்டும்! இது அவர்களுக்கே உட்பட்ட வேலை! ஆண் அதை எல்லாம் செய்யக் கூடாது என்று சமூகம் இட்ட கோடுகள் எல்லாம் குமுதா வீட்டில் இடம் பிடிக்கவில்லை!
மகன்கள் இருவரும் தாய்க்கு அத்தனை உதவியாய் இருப்பர். சின்னவன் சேட்டை என்றாலும், படிப்பு, குடும்பம் என்று வந்துவிட்டால் மிக மிக பொறுப்பானவன்!
இது தான் இவர்கள்!
அளவான சம்பாதியத்தில் அன்பால் இணைந்து வாழும் உள்ளங்கள்!
இங்கே இவர்களின் விடியல் அத்தனை அமைதியும், ஆனந்தமுமாய் இருக்க, அங்கே ராதாவின் வீட்டில் காச் மூச் என்ற சத்தத்தோடு பொழுது விடிந்தது!!!
************
"பிள்ளையாடி பெத்து வச்சு இருக்க? வாயி....வாயி.... வாய் இல்லைன்னா உன் பொண்ண நாய் தூக்கிட்டு போய்டும்! பாரு இந்த கத்து கத்துறேன். எப்படி தூங்குறான்னு" என்று கடுப்பில் இரைந்து கொண்டிருந்தார் கண்ணபிரான்.
"ஏங்க விடிஞ்சதும் விடியாததுமா இப்படி கத்தறீங்க? அவ நேத்து நைட்டு முழுக்க படிச்ச பின்னாடி தான் தூங்குனா" என்றார் அவருக்கு வாழ்க்கைப் பட்ட தர்மபத்தினி தெய்வானை!
மனைவியின் பேச்சில் மேலும் கோபம் கிளற, "ஆமா.. படிச்சு.. கிழிச்சு.. கேப்பய நட்டா உன் பொண்ணு! என்ன தான் படிச்சாலும், இன்னும் முத வருஷத்துல மிச்சம் வச்சிருக்க அரியரையே முடிக்கல! இப்போ செக்கண்ட் யியர் வந்துட்டா? போன வருஷத்துல ரெண்டு அரியர் வச்சிருக்கா! இந்த வருஷத்துல எத்தனை அரியரை வைக்கப் போறாளோ???" என்று புலம்பினார்.
இப்படிப் புலம்பிக் கொண்டிருக்கும் கண்ணபிரானுக்கு மொத்தம் மூன்று மகள்கள்!
மூத்தவள் கீதா!
இரண்டாமவள் லதா!
இளையவள் ராதா!
முதல் இரண்டு மகள்களையும் தன்னால் முடிந்த அளவிலான சீர்களை கொடுத்து கட்டிக் கொடுத்து விட்டார் கண்ணபிரான்!
சிறிய மருந்துக் கடையின் சொந்தக்காரார்! அடுத்தவருக்கு நோய் வந்தால் தான் இவரின் பிழைப்பு ஓடும்! அது மட்டுமல்லாமல் இப்போது அரசாங்கமே இலவச மருந்துக் கடைகள் எல்லாம் வைத்து, அரசு மருத்துவமனையிலேயே பாதி மருந்துகள் மலிவு விலையிலும், இலவசமாகவும் கிடைப்பதால் கண்ணபிரானின் வருமானம் சற்று கவலைக்கிடம் தான்!
இருப்பினும், வரும் சம்பாத்தியத்தில் குடும்பத்தை தலைமை தாங்கினார். அவரின் மனைவி தெய்வானை கைத் தொழிலான தையல் தொழிலில் கை தேர்ந்தவராக இருக்க, அவரின் வருமானமும் குடும்பத்தை கொண்டு செலுத்த வசதியாக இருந்தது.
முதல் மகள் கீதா குடும்ப நிலை உணர்ந்தவள். நன்கு பொறுப்பானவளும் கூட! பத்தாவது முடிந்த உடனேயே தந்தையிடம் படிக்கிறேன் என்று கூறி அவருக்கு சுமையாக மாறாமல், தாயுடன் சேர்ந்து தையல் தொழிலில் ஈடு படுகிறேன் என்று கூறி அவளால் முடிந்த வருமானத்தை ஐந்து ஆண்டு காலமாக குடும்பத்திற்கு பெற்றுத் தந்தாள்.
பின் அவளின் இருபத்து ஓராம் வயதில் ஒரு அளவான குடும்பத்தில் இருந்து வரன் வர, விசாரித்த வரை மாப்பிள்ளை நல்ல குணமும் மனமும் கொண்டவன் என்றதும் அவனுக்கு கட்டிக் கொடுத்து விட்டார் கண்ணபிரான்.
கீதாவின் கணவன் கதிரவன்! அவனின் குடும்பமும் நல்ல குணம் கொண்டவர்களாக இருக்க கண்ணபிரானுக்கு ஒரு படகினை கரை சேர்த்து விட்ட நிம்மதி!
ஆனால், ஐந்து ஆண்டுகளாக மகள் கூடவே இருந்து உதவியதால் நன்கு பலனாக இருந்தது தெய்வானைக்கு!
அவள் திருமணம் ஆகிப்போனது தொட்டு தனக்கு ஒரு கையே உடைந்தது போல் உணர்ந்தார்.
பின் பெண் பிள்ளைகளின் வாழ்க்கையே இப்படித் தானே என்று தன்னைத் தானே தேற்றிக் கொண்டு தையல் வேலையை தானே கவனித்துக் கொண்டார்.
இப்போது கீதாவிற்கு இரு மக்கள்! ஸ்வாதியும், அபினேஷும்! அவர்களும் இங்கே சென்னையில் தான் வாசம் செய்கின்றனர்.
அடுத்து பிறந்தவள் லதா! அமைதிக்கு பெயர் போனவள்! அதிர்ந்து பேசத் தெரியாதவள்! அக்கா கீதா பத்தாம் வகுப்பு முடிந்த பின்பு தன் வாழ்க்கையை குடும்பத்திற்கு அர்ப்பணித்தாள் என்றால் இவள் பன்னிரெண்டாம் வகுப்பு முடித்த பின்பு தன்னை அர்ப்பணித்தாள்.
பின்பு அவளுக்கும் வரன் பார்த்து அவளின் இருபத்து இரண்டாம் வயதில் மனம் முடித்து கொடுத்தார் கண்ணபிரான். கீதாவின் கணவன் வீட்டினரை போல அல்லாமல் இவர்கள் அனைத்திலும் சற்று கட்டுப்பட்டியாகவே இருந்தனர்.
வட்டா வட்டம் விஷேசம் என்றாலோ, வேறு எதுவும் முக்கியமான வைபவம் என்றாலோ அத்தனை முறைகள் செய்ய வேண்டும் என்று எதிர் பார்த்தனர். அதிலும் லதாவிற்கு வாய்த்த கணவன் அவளைப் போலவே அமைதிக்கு பேர் போனவனாக இருந்தான்.
அதுவே, அவனை அவன் குடும்பத்தை மீறி பேச விடாமல் செய்தது! இயல்பிலேயே அமைதியான குணம் கொண்ட லதாவும் புகுந்த வீட்டினை சமாளித்து, முடிந்த வரையில் தன்னைப் பெற்ற உள்ளங்களுக்கு அவப்பெயர் வாங்கிக் கொடுத்து விடாமல் நல்ல மருமகளாக இருந்தாள்.
அவளுக்கும் ஐந்து மாதங்களுக்கு முன்னர் தான் ஒரு பெண் குழந்தை பிறந்திருந்தது.
அடுத்ததாக ராதா! மூத்தவர்களின் வாயை இவளுக்கு வைத்து படைத்து விட்டான் அந்தக் கடவுள் என்று தான் சொல்ல வேண்டும்!
சற்று நேரத்திற்கு முன்னர் கண்ணபிரான் சொன்னதை போல வாய்....வாய்......வாய்.....!
யாராக இருந்தாலும் நேருக்கு நேராக முகத்திற்கு முன்னாள் பட்டென பொட்டில் அடித்தார் போல் யோசிக்காமல் சட்டென்று பேசிவிடுவாள். அதற்கு அவளின் அசட்டுத்தனமான தைரியம் தான் மிக முக்கிய காரணம்.
நேருக்கு நேர்..
முகத்துக்கு நேர்..
இப்படி பல டைமன்ஷணில் பேசுபவள்! ஆனால், பேசி விடுவாள்! பேசாமல் அவளால் இருக்க முடியாது!
மேலும் அவளைப் பற்றி சொல்ல வேண்டும் என்றால் பிடிவாதத்திற்கென்றே பிறந்தவள்! இவள் விட்டாலும், இவளை பிடித்த பிடிவாதம் இவளை விடாது!
ஆகையினால் தான் அக்காள்களை போல குடும்ப பொறுப்பை படிப்பை நிறுத்தி விட்டு பார்க்கப் பிடிக்காமல், கல்லூரிப் படிப்பு படித்தே ஆக வேண்டும் என்று ஒற்றை காலில் நின்று தந்தையிடம் போராடி படிக்க சம்மதம் பெற்றாள்!
அப்படி சம்மதம் வாங்கியதும் ஒரு வகையில் அது விழலுக்கு இறைத்த நீராய் போனது தான் கொடுமையிலும் கொடுமை!
அந்தக் கொடுமையால் தான் படித்து முன்னேற வேண்டும் என்று நோக்கம் கொண்டிருந்தவள், அரியர் வைத்து படித்துக் கொண்டிருக்கிறாள்!!!!
அரியருக்கு காரணம் அவளைப் படிக்க வைத்த கண்ணபிரான் என்று தான் சொல்ல வேண்டும்!
ஆம்! கண்ணபிரான் தான்!
கண்ணபிரானினால் அவள் தேர்ந்தெடுத்த படிப்பு தான் அவளின் தொடர் அரியர்களுக்கு முழு முதற்காரணம்!
அவளின் விருப்பம் பி. ஈ. சேர வேண்டும் என்பது. ஆனால், ஆயிரக் கணக்கவோ, லட்ச லட்சக் கணக்காகவோ ஃபீஸ் கட்டி படிக்க வைக்க கண்ணபிரானுக்கு வசதி போதவில்லை. பணமும் இல்லை! அது தான் சத்தியமான உண்மை!
எனவே, சின்ன மகளின் பிடிவாதம் உணர்ந்து ஒரு கவர்மென்ட் காலேஜில் பி.ஏ. தமிழ் படிப்பில் சேர்த்து விட்டார்.
தமிழா????????
நம் தித்திப்பான தாய் மொழி தமிழ் தான்! இருந்தாலும் ராதாவிற்கு அது கசந்தது.
அவளைப் பொறுத்த மட்டில் தாய் மொழி என்றால் அது பேசுவதற்கு மட்டுமே சரளமாக வரும்! படிக்கவெல்லாம் வராது!
அதிலும் குறிப்பாக இலக்கணம், இலக்கியம், சொற்றொடர், என அனைத்தும் வந்த போது அவளால் சுத்தமாக முடியவில்லை.
என்ஜினீயரிங் கல்லூரி சேர்ந்து, நன்றாக படித்து, ஒரு மென்பொருள் நிறுவனத்திலோ, MNC கம்பெனியிலோ வேலை பார்க்க வேண்டும் என்று நினைத்தவளுக்கு தாய் மொழியில் கிடைத்த பட்டப் படிப்பு எட்டிக்காயை விட மிக மோசமாக கசந்தது.
கல்லூரி சென்று ஒரு வாரத்திலேயே "ஊஹூம்... என்னால் முடியாதுடா சாமி! இதற்கு மேல் நான் படிக்க மாட்டேன். என்னால் முடியவும் இல்லை!" என்று வீட்டில் சொன்னதற்கு கண்ணபிரான் ஒரு ஆட்டம் ஆடினாலும், மறு நாளே ஒரு கண்டிஷன் போட்டார்.
ஒன்று.. கட்டிய பீசிற்கு ஒழுங்காக படி! இல்லை என்றால்.. இப்போதே திருமணம் செய்து கொள்!!!! என்பது தான் அந்தக் கண்டிஷன்!
திருமணமா?????!!!!!???????!??!!?
இதற்கு தமிழே பரவாயில்லை என்று தோன்றியது அவளுக்கு!
ஆனாலும் சட்டென்று ஒப்புக் கொள்ளவில்லை ராதா. தன்னை என்ஜினீயரிங் கல்லூரியில் சேர்த்து விடச்சொல்லி தந்தையிடம் சண்டை போட்டாள்! உண்ணாவிரதம் இருந்தாள்! அழுது கரைந்தாள்!
எதற்கும் கண்ணபிரான் அசைந்து கொடுக்கவில்லை. ஒன்று இந்த தமிழ் படிப்பையே படி! அதற்குத் தான் என்னால் ஃபீஸ் கட்ட முடியும்! இல்லை என்றால் திருமணம் செய்து கொள்! ஒரே அடியாக உன்னை மூட்டை கட்டி விடுகிறேன்!
இது தான் அவரின் வாதமாக இருந்தது. இருவருக்கும் இடையே நடந்த போராட்டத்தில் தெய்வானை தான் நொந்து போனார்.
தந்தை மகள் போராட்டத்தில் இறுதியில் தந்தையே வென்று விட, திருமணம் செய்ய வேண்டி ஒப்புக் கொள்ள மனம் இல்லாமல் தமிழே மேல் என்று வேண்டா வெறுப்பாய் படித்துக் கொண்டு இருக்கிறாள் ராதா!
அந்த வேண்டா வெறுப்பு தந்த பரிசு தான் அரியர்!
முதல் முறை அரியர் என்று கேள்வி பட்டதும் அவளுக்குமே சற்று அதிர்ச்சி தான்!
பின்னர் "நா ஆசைப் பட்டதை படிக்க வச்சு இருக்கணும்! அதை விட்டுட்டு கண்டது கடியத படிக்க வச்சா இப்படித் தான்" என்று தமிழையும் தந்தையையும் திட்டித் தீர்த்தாள்.
வீட்டில் சொன்ன போது கண்ணபிரான் அடி பின்னி எடுத்து விட்டார்! ஆம்! வேப்ப மரக் குச்சி ஒன்று எப்போதும் வீட்டில் இருக்கும். அடிப்பதற்கென்றே! அடி வெளுத்து விட்டார்.
"உனக்கு என்ன நோக்காடு? உன் அக்காளுங்க எல்லாம் எப்படி இருந்தாங்கன்னு பாத்தவ தான நீ? ஆனா, நீ இப்படி அடம் பிடிக்கிறியேன்னு தெரிஞ்சு காலேஜு போக வச்சு.. உனக்கு ஆயிரத்து சில்ற கணக்குல பீசும் கட்டினா???? பெயில் ஆகிட்டு வரியா???? கழுதை.... கழுதை" என்று சொல்லி தர்ம அடி அடித்தார்.
அவர் அடித்த அடியை நினைத்தால் இன்னமும் உடல் நடுங்கும் ராதாவிற்கு! தெய்வானை தான் "வயசுக்கு வந்த பொண்ண இப்படி அடிக்கிறீங்க? அதுவும் மாட்ட போட்டு அடிக்கிற கணக்கா.. முதல்ல விடுங்க அவளை" என்று தடுத்து மகளை காப்பாற்றினார்.
அந்த ஏக போக கடுப்பு இன்னும் கண்ணபிரானிற்குள் மிச்சம் இருந்தது.
இன்று ராதாவிற்கு இரண்டாம் ஆண்டின் முதல் இன்டர்ணல் தேர்வு தொடங்கவிருக்கிறது. ஆனால், அவளோ பொழுது விடிந்து ஒரு மணி நேரம் ஆகியும் நல்ல நித்திரையில்...!
ஆகையால் தான் இரைந்து கொண்டிருந்தார் கண்ணபிரான்!
தாய் சமாதானம் கூறுவதும், தந்தை அதற்கு இரைந்து கொண்டிருப்பதும் ராதாவின் தூக்கத்தை கெடுக்க முழிப்பு வந்து விட்டது அவளுக்கு.
எழுந்து அமர்ந்தவள் போர்வையை தூக்கி கீழே போட்டு விட்டு அறையை விட்டு வெளியே வந்தாள்.
அது ஒரு சிறிய வீடு தான். இருந்தாலும் கண்ணபிரானின் சொந்த வீடு. இரண்டு அறை. ஒரு அடுக்களை. ஒரு ஹால். பின்னால் சிறிய ஒரு தோட்டம். அவ்வளவு தான்.
அறையை விட்டு வெளியே வந்தவள் தந்தை புறம் மறந்தும் பார்வையை திருப்பாமல் பின் பக்கட்டிற்கு சென்று முகம் கழுவி காலை வேலைகளை முடித்து வந்தாள்.
புத்தகத்தை கையில் எடுத்துக் கொண்டு அவள் அமர்ந்த பின்னரே ஓய்ந்தார் கண்ணபிரான். தெய்வானை மகளிற்கு டீ கொண்டு வந்து கொடுத்தார்.
"காலைலயே உன் புருஷன் ஏன்மா இப்படி கத்துறார்? தூக்கமே கெட்டுடுச்சு" என்று காலைக் குற்றப் பத்திரிகை வாசிக்க, "கத்தாத ராதா. உன் அப்பாக்கு கேட்டுச்சுன்னா திரும்ப அவரோட பல்லவிய பாட ஆரம்பிச்சுடுவாரு" என்றார் மெதுவாக.
"போமா. நைட் கொஞ்ச நேரம் கண் முழிச்சு படிச்சேன் தான!" என்று குறை பட்டுக் கொண்டவளிடம் எந்த சமாதானம் கூறினாலும் பேச்சு வளர்ந்து கொண்டே தான் போகும். வளர்த்துக் கொண்டே தான் போவாள் தன் மகள் என்று உணர்ந்தமையால் அமைதியாய் அவ்விடம் விட்டு அகன்றார்.
கையில் இருக்கும் புத்தகத்தை வெறித்து பார்க்க ஆரம்பித்தவள் இரண்டு மிடறு டீயினை குடித்த பிறகு படிக்கத் துவங்கினாள்.. இந்த முறை எந்தத் தேர்விலும் ஃபெயிலாகி விடக் கூடாது என்னும் தலையாய நோக்கத்துடன்!

Last edited: