அதீனா ஜார்ஜ்
Moderator
அத்தியாயம் - 2
"நரே இந்தா உனக்கு சாப்பாடு" என்றபடி மகனின் கையில் மதிய உணவிற்கான பேக்கை நீட்டியவர் நவீனிடம் "இந்தா உனக்கு சாப்பாடு. அப்புறம் கேண்டீனில எதாவது வாங்கி சாப்பிடு. பரிச்சை எழுதி முடிச்ச உடனே பசிக்கும்" என்றார் அவன் கையில் பணத்தை திணித்தவாறே.
"குமுதா அண்ட் கோ மூலியமா என் வயிறு என்னைக்கும் வாடாம இருக்கு" என்றபடி பணத்தை பெற்றுக் கொண்டவன் தன்னை முறைத்த வண்ணம் கையில் வாட்சை மாட்டிக் கொண்டிருக்கும் அண்ணனை கண்டு பளிப்பு காட்டினான்.
"ம்மா... எங்கையோ கருகுற வாடை வருதே" என்று நவீன் நமட்டுச் சிரிப்புடன் தாய் செய்து வைத்திருந்த பொடி இட்லியை சுவைக்க, "கருகுறது இருக்கட்டும். முதல்ல சீக்கிரம் கிளம்பி வா. எனக்கு ஆஃபிஸ்கும் டைம் ஆகுது. உனக்கு எக்ஸாம்கும் டைம் ஆகுது" என்றான் அண்ணன்காரன்.
"இதோ இதோ" என்று அவசர கதியில் சாப்பிட்டவனை அதட்டி மெதுவாக சாப்பிடச் சொன்னவன் தானும் உண்டு முடித்தான்.
சாமியிடம் வேண்டிக் கொண்டவன் அண்ணன் கையால் கொடுத்த பேனாவை வாங்கிக் கொள்ள, "நல்லா எழுதிட்டு வா நவீனா!" என்று மயில்வாகனம் மற்றும் குமுதா மகனை வாழ்த்தி அனுப்பினர்.
மயில்வாகனம் தனது ஸ்கூட்டியில் கல்லூரிக்கு கிளம்ப, நவீனை தன் பைக்கில் ஏற்றிக் கொண்ட நரேந்திரன் அவன் கல்லூரியில் இறக்கி விட்டு "ஆல் த பெஸ்ட் நவீ. எல்லா குவெஷ்டின்ஷையும் அட்டன் பண்ணிடு. எதையும் மிஸ் பண்ணாத!" என்று அவனுக்கு ஹாண்ட் ஷேக் கொடுத்தவன் அலுவலகம் நோக்கி வண்டியை செலுத்தினான்.
உயர்ந்தோங்கி கம்பீரமாய் எழுந்து நின்றிருந்த அந்த பெரிய கண்ணாடிகளால் ஆன கட்டிடத்தின் பார்க்கிங் ஏரியாவில் தன் பைக்கை நிறுத்தி விட்டு உள்ளே நுழைந்தான் நரேந்திரன்.
முதுகில் அவன் கம்பனி லோகோ பதிந்த லேப்டாப் பேக் இடம் பெற்று இருக்க, ரைட் பேண்ட் பாக்கெட்டில் இருந்த தன் ஐ.டி. கார்டை செக்கியூரிட்டி ஸ்கேனிங் மெஷினில் காமித்து விட்டு அதை கழுத்தில் அணிந்தபடி தன் ஃப்ளோரிற்கு வந்தான்.
தனது இருப்பிடம் வந்து அமர்ந்ததும் "குட் மார்னிங் நரேன்" என்றான் அஷோக். இந்த அலுவலகத்தில் பணி புரிய தொடங்கியதில் இருந்து நரேந்திரனுக்கு கிடைத்த ஒரே நண்பன்!
இப்போது ஆருயிர் நண்பன் ஆகி உள்ளான்! இரண்டரை ஆண்டு கால பழக்கம் இருவருக்கும் ஒரு நல்ல சுமூகமான நட்பை ஏற்படுத்தி இருந்தது.
"குட் மார்னிங் அஷோக்" என்றவன் "நேத்து நைட் உனக்கு நா அனுப்பின மெயில் பாத்தியா? கோடிங் எல்லாம் கரக்ட்டா இருக்கான்னு செக் பண்ணிட்டயா?" என்று கேட்க,
"இன்னும் இல்லடா இனிமேல் தான் பண்ணனும். நேத்து பண்ணலாம்னு தான் நினைச்சேன். பட், செம டயர்ட். நல்லா தூங்கிட்டேன். மார்னிங்கும் எழுந்தது லேட் தான். அதனால, கொஞ்சம் பாக்க முடியல. இப்போ தான் பாக்க போறேன்" என்றவன், "சாரி மேன்" என்றான்.
அவன் தோளில் தட்டியவன் "நோ இஷியூஸ் மேன். மதியம் ரெண்டு மணிக்கு மேல தான மீட்டிங் அரேஞ்சு பண்ணி இருக்காங்க! அதுக்குள்ள பாத்திட்டு எனக்கு ஈமெயில் செண்ட் பண்ணு!" என்றான்.
வேலைகள் துவங்கி இருக்க அவரவர் தடுப்பிற்குள் ஒவ்வொருவராக வரத் தொடங்கி இருந்தனர். சற்று நொடிகளில் எல்லாம் டப் டப் என்று லேப்டாப் பட்டன் சத்தமும், கம்ப்யூட்டர் கீ போர்ட் சத்தமும் அந்த தளத்தயே நிறைக்க, அந்த ஓசையை எழுப்பும் இயந்திரம் போல் அனைவரின் நேரமும் இயந்திர கதியில் சுழல ஆரம்பித்தது.
********************
கல்லூரியில் மகளை இறக்கி விட்ட கண்ணபிரான் "ஒழுங்கா எழுது. இந்த பரிச்சைல கோட்ட விட்டுட்டு வந்து நின்ன அப்புறம் நா மனுஷனா இருக்க மாட்டேன்" என்று மிரட்டி விட்டுச் சென்றார்.
அவர் தலை மறைந்ததும் "மனுஷனா இல்லாம.... மாடாவா மாற போறீங்க?" என்று சத்தம் வரமால் தனக்குத் தானே கேட்டுக் கொண்டவள் "முருகா... எப்படியாவது இந்த இன்டர்ணல்ல என்னை காப்பாத்திடு. உனக்கு புண்ணியமா போகும்" என்று முருக பகவானுக்கே புண்ணிய கணக்கை சொல்லியவள் தேர்வெழுத உள்ளே சென்றாள்.
இவளது தோழிகளும் தோழர்களும் பரிட்ச்சையை எண்ணி டென்ஷனாக தான் இருந்தனர். ஆனால், ராதாவோ டென்ஷனோ டென்ஷனாகி இருந்தாள்.
தன்னைக் கொண்டு வந்து விடும் போது தந்தை மிரட்டி விட்டுச் சென்றது வேறு கண் முன் விரிய, அதை ஒதுக்கி இறுதி நொடிகளில் எவ்வளவு பக்கத்தை புரட்ட முடியுமோ அவ்வளவு பக்கங்களையும் புரட்டி வாய்க்கு வந்ததை படித்து, மூளைக்குள் ஏற்றுவதை ஏற்றி என ஒரு மாதிரியான பீதி மன நிலையில் எக்ஸாம் ஹாலிற்கு சென்றாள்.
வினாத்தாள் கையில் வந்ததும் சற்று நடுங்கத் தான் செய்தன கைகள்! இருப்பினும் இறுக்கமாக பேனாவை பற்றிக் கொண்டு ஒவ்வொரு கேள்வியாக வாசிக்க ஒரு சில கேள்விகளுக்கு மட்டுமே விடை தெரியாமல் இருந்தது.
மற்ற அனைத்து கேள்விகளுக்கும் விடை தெரிந்தது. "முருகா... ராதா இந்த செமஸ்டர்ல பாஸ்! கண்ணபிரானோட ஏச்சுப் பேச்சு கிட்ட இருந்தும், தர்ம அடி கிட்ட இருந்தும் எஸ்கேப்" என்று மனதிற்குள் சொல்லிக் கொண்டவள் நிம்மதி மூச்சு விட்டுக் கொண்டு பரிச்சையை எழுதினாள்.
*******************
மதிய வேளையில் ஆஃபிஸ் மீட்டிங் முடிந்ததும் cafeteria பக்கம் நகர்ந்தனர் அசோக்கும், நரேந்திரனும்!
"ஹப்பப்பா இந்த டீம் லீடர் கூட ஓவரா பண்றது இல்லடா.. ஆனா, இந்த சீனியர் புரோகிராம் டெவலப்பர் எல்லாம் கொடுக்குற குடைச்சல் அண்ட் பில் டப்பை பார்த்தாலே நாலு அப்பு விடணும் போல தோணுது" என்றான் அசோக் எரிச்சலுடன்.
நண்பன் கூறியதை கேட்ட நரேந்திரனுக்கும் பெரு மூச்சு கிளம்பியது.
இன்று மதிய மீட்டிங் சற்று ஸ்மூத்தாக செல்லவில்லை. இவர்கள் டீமில் இருக்கும் ஜூனியர் புரோகிராம் டெவலப்பர்கள் மீது எந்த தவறும் இல்லை. இருப்பினும், மற்ற இரண்டு டீமில் உள்ள ஜூனியர் செய்த தவறிற்கு இவர்களும் சீனியர் மெம்பர்கள் வாயில் அரை பட்டனர்!
ஒரு வகுப்பு மாணவன் செய்த தவறிற்கு எப்படி அந்த மொத்த வகுப்பையுமே குறை சொல்லி சுட்டிக் காட்டுவார்களோ அதே போல் தான் இங்கு அலுவலகத்திலும் நடந்தது!
மற்ற ஜூனியர்கள் சொதப்பியதில் மொத்த ஜூனியர்களும் பேச்சு வாங்கி இருந்தனர்.
சற்று டென்ஷன் ஆனது தான்! இருப்பினும் அதை எல்லாம் பார்த்தால் ஐ.டி. ஃபீல்டில் சஸ்டெயின் ஆக முடியாது என்று புரிந்து கொண்டவன் நண்பனை சமாதானம் செய்தான்.
"விடுடா. நம்ம சைட்ல இருந்து எந்த தப்பும் போகல இல்ல. வீ டன் எவ்ரிதிங் பெர்பெக்ட்லி! தட்ஸ் ஆல்!" என்றான் தோளை குலுக்கிக் கொண்டு!
"ஹ்ம்ம்... நாம இவனுங்கள மாதிரி ஹையர் பொசிஷன் எல்லாம் போனா.. சத்தியமா இவனுங்க மாதிரி இருக்கக் கூடாதுடா மச்சான்!" என்றான் அஷோக் தீவிரக் குரலில்.
"நிச்சயம் இருக்க மாட்டோம் மச்சான். டோண்ட் ஃபீல்!" என்றவன் "wrong people always teach us Right lessons.. சோ, எல்லாத்தையும் லேர்ன் பண்ணிக்குவோம். நல்லதையும் கெட்டதையும்." என்று கூறி புன்னகைக்க நண்பனின் பேச்சும், அவன் குடித்த காஃபியும் அசோகிற்கு ஒரு வித புத்துணர்ச்சியை கொடுத்தது!
இவர்கள் டீமில் எந்த வித குளறுபடிகளும் இல்லாததால் வேலை ஒன்றும் அதிகமாய் இருக்கவில்லை. ஐந்து மணிக்கெல்லாம் கிளம்பி விட்டனர்.
கிளம்பும் சமயம் நவீனிற்கு அழைத்தான் நரேந்திரன்.
"சொல்லுண்ணா"
"எக்ஸாம் எப்படிடா பண்ண?" என்றான் பைக்கில் உள்ள சாவி துவாரத்தில் சாவியை நுழைத்தவாறே.
"நல்லா பண்ணி இருக்கேன் ண்ணா" என்றவனிடம் "நீ எங்க காலேஜ்ல இருக்கியா? இல்ல வீட்டுக்கு போய்ட்டியா?" என கேட்டான்.
"இல்லண்ணா. இன்னும் காலேஜ்ல தான் இருக்கேன். நாளைக்கு எக்சாம்கு நோட்ஸ் எடுக்க வந்தேன். அப்படியே ப்ரெண்ட்ஸ் கூட குரூப் ஸ்டடில உட்கார்ந்துட்டேன்" என்றான்.
அசோக் பைக்கை உயிர்ப்பித்து விட்டு இவனுக்கு போய் வருவதாக கை அசைக்க அவனுக்கு விடை கொடுத்தவன் தம்பியிடம் பேசத் துவங்கினான்.
"ஓகே. நா இப்போ வீட்டுக்கு தான் கிளம்புறேன். உன்னை வந்து பிக் அப் பண்ணிக்கட்டுமா?"
"ஹ்ம்ம்.... ஓகேண்ணா. நீ வா. எப்படியும் ட்ராஃபிக்ல நீந்தி வர ஹாஃப் அ நவர் ஆகிடும். அதுக்குள்ள நா லைப்ரரில மீதம் எடுக்க வேண்டிய புக்ஸ்ஸ எல்லாம் எடுத்து வைக்கிறேன்"
"ஒண்ணும் அவசரம் இல்ல.. நீ பொறுமையாவே எடு. நா வந்தாலும் வெயிட் பண்றேன்" என்றபடி அழைப்பை துண்டித்தான்.
நவீனும் நரேந்திரன் படித்த அதே என்ஜினியரிங் கல்லூரியில் தான் அவன் ஆசைப் பட்ட பி.ஈ. படிக்கிறான். அதுவும் நரேன் எடுத்துப் படித்த அதே பிரிவு!
கல்லூரியில் படித்த காலங்களில் நரேன் படிப்பில் கெட்டி என்பதால் அவனை அனைத்து ஆசிரியர்களுக்கும் நன்கு தெரியும்!
இப்போது நவீன் அவனின் தம்பி என்றும் தெரியும்! அவனின் தம்பி என்பதனால் மட்டும் அல்ல, அண்ணனை போல் தம்பியும் படிப்பில் படு கெட்டி என்பதால் நவீனும் அனைவருக்கும் பரிச்சயம் தான்.
அண்ணனுக்கு தப்பாமல் பிறந்த தம்பி என்று தான் சொல்லுவர் அனைவரும்!
தம்பியை பிக்கப் செய்ய வந்தவன் அவன் சொன்னது போல் நல்ல ட்ராஃபிக்கில் மாட்டிக் கொண்டான்.
ட்ராஃபிக் சிக்னல் மாற இன்னும் நூற்றி பத்தொன்பது நிமிடங்கள் இருக்க ஹெல்மெட்டை கழட்டி தலையை கோதிக் கொண்டான்.
அவன் நின்று கொண்டிருக்கும் அதே ட்ராஃபிக்கில் தான் தன் தந்தையுடன் அவரின் இரு சக்கர வாகனத்தின் பின்னால் அமர்ந்து இருந்தாள் ராதா!
அதுவும் நரேனின் இடது பக்கத்தில் தான் கண்ணபிரானின் வண்டி நின்று கொண்டிருந்தது!
மேலே தெரிந்த எலக்ட்ரிக் போர்டில் நொடிகள் குறைந்து கொண்டே வர, அதை கண்ட ராதா "98... 97... 96...." மெல்லிய குரலில் எண்ணிக் கொண்டு இருக்க அது அவளின் வலது புறத்தில் ஹெல்மெட்டை கழட்டி விட்டு நின்று இருந்த நரேந்திரனுக்கு நன்றாகவே கேட்டது!
"யாருடா இது.. சிக்னல் செக்கண்ட்ஸ்ஸை எண்ணுவது" என்று எண்ணியபடி பார்வையை திருப்ப, அவளின் முகம் அவனுக்கு இடது புறமாக இருந்ததால் முழுதாய் தெரியவில்லை. பக்க வாட்டாய்.. பாதி முகம் மட்டுமே தெரிந்தது.
அவள் விடாமல் எண்ணிக் கொண்டே இருக்க, இருபது கிட்ட நொடிகள் குறைந்ததும் தன் தந்தையின் தோளில் படபடவென தட்டி "அப்பா.. அப்பா.. ரெடி ரெடி.. க்ரீன் சிக்னல் போடப் போறாங்க..." என்க, அப்போது தான் தானும் அதை கவனித்தவன் தன் ஹெல்மெட்டை மாட்டிக் கொண்டு மீண்டும் அவளை பார்த்தான்..
"ஃபைவ்... ஃபோர்...!" என சொல்லி கொண்டிருந்தவள் அதற்குள் தந்தையை துரிதப்படுத்த ஆரம்பித்து விட்டாள்.
"அப்பா.....அப்பா...கெட் ரெடி. க்ரீன் கலர் வந்தவுடனே சீக்கிரமா போனும்...இல்லாட்டி திரும்பி சிக்னல் போட்டுற போறான்....!" என இழுக்க கண்ணபிரானுக்கோ கடுப்பானது.
"உடனே எங்கயாவது சிக்னல் போடுவாங்களா? சும்மா இரு!" என அதட்ட ராதா கண்டு கொண்டாள் இல்லை.
"அட சீக்கிரமா போங்கோப்பா!" என்க, கண்ணபிரானும் வண்டியை கிளப்பினார்.
இந்த நூற்றி பத்தொன்பது நொடிகளாக அவளை கவனித்தவனின் உதடுகள் புன்னகையை தத்தெடுத்திருக்க, தனக்கு வலது திசையில் செல்லும் அவளையே பார்த்தபடி "வாயாடி..." என்று முணுமுணுத்து கொண்டு இடது புறமாக வண்டியை திருப்பினான்!!!
ஒரே பாதையில் வாழ்க்கையில் இணையவிருக்கும் இருவரும் இன்று வெவ்வேறு பாதையில் அவரவரின் நோக்கத்துடன் பயணப் பட்டனர்!
ஒரு பாதையில் இணையவிருக்கும் இரு
வரின் வாழ்வும் ஆனந்த ஊற்றில் நனைந்து மூழ்குமா? இல்லை தத்தளித்து ஊசலாடுமா???
இறைவனுக்கே வெளிச்சம்!!!