எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

கவிதைப் பெட்டகம் 6

நாட்குறிப்பு



மற்றவருக்கு
நாட்குறிப்பு
எனக்கு
உன் நினைவுகள்
தந்த
நினைவுகளின்
குவிப்பு..

 
நினைவுகள்


தொலைந்து
போனது
நீ தான்
ஆனால்
உன் நினைவுகள்
என்றும்
எனக்குத் துணையாக
என் அருகாமையில்
என்னைத்
தவிக்கவிடாமல்
தொடரும்
 
நானும் நீயும்


காதலும்
கவிதையும் போல
நினைவுகளும்
உணர்வுகளும்
போல
சேர்ந்தே
இருப்பது...
நானும் நீயும்
 
உருட்டு


நான்
கவிதை என்கிறேன்
நீ
உருட்டு என்கிறாய்
உண்மை தான்
கவிதைக்குப்
பொய்கள்
அழகு தானே..
 
புத்தகம்


சிறுவயதில்
நட்பு இது..
வளர்ந்த பின்
எனக்கு
வழித்துணை..
 
Top