அதீனா ஜார்ஜ்
Moderator
அத்தியாயம் - 4
ஒரு மாத காலம் கரைந்து போய் இருக்க, அன்று எப்பொழுதும் போல் காலை கந்த சஷ்டி கவசம் நரேந்திரனின் இல்லத்தில் கேட்கத் துவங்கியது. அனைவரும் எழுந்து விட்டிருக்க, தாய்க்கு உதவிக் கொண்டிருந்தனர் நரேனும் நவீனும்! மயில்வாகனம் வழக்கம் போல் வாக்கிங் சென்றிருந்தார்.
"டேய்.. நவீனா இந்த தக்காளிய நறுக்கித்தா. நரே.. நீ இந்த மசாலா தூள் காலி ஆகிடுச்சு. அதை போய் எடுத்துட்டு வா" என்றார்.
தாய் சொல்லை தட்டாத இரு மகன்களும் அவர் சொன்னதை செய்ய, காலை உணவாக சப்பாத்தி குருமா தயார் செய்து வைத்தனர். மதியத்திற்கு சாம்பாரும் உருளை மசாலாவும் வைத்துக் கொண்டிருந்தார் குமுதா.
மகன் கொடுத்த மசாலா தூளை வாங்கியவர் அவனுக்கு நேரம் ஆவதை உணர்ந்து "போதும்டா நீங்க கிளம்புங்க. மணி ஆகிடுச்சு. இனி நா பாத்துக்குறேன்" என்று எண்ணெய் காய்ந்தவுடன் கடுகையும் உளுந்தையும் போட்டு கருவேப்பிலையை போட அடுத்த நொடி ஆவென கத்தி இருந்தார்.
இடது கண்ணில் கடுகு தெரித்திருந்தது.
"அம்மா...." என்று இரு மகன்களும் பதட்டமாக அவர் அருகே வர, "ஒன்னும் இல்லடா.. கத்தாதீங்க. கடுகு கண்ணுல பட்டுடிச்சு" என்றவர் கையை கண்ணில் இருந்து விலக்க, நன்கு சிவந்து போய் விட்டது.
"என்ன ஒன்னும் இல்ல? இங்க பாருங்க எப்படி சிவந்து போச்சுன்னு!!! நீங்க வாங்க முதல்ல. பாத்து போடுறது இல்லையா" என்று நரேன் கடிந்து கொள்ள, நவீன் ஒரு துண்டை நனைத்து எடுத்து வந்தான்.
அடுப்பை அணைத்து விட்டு ஹாலிற்கு வந்து விட்டனர் மூவரும். நவீன் தாயின் கண்ணில் ஈரத் துண்டை வைத்து மெல்ல அழுத்தினான்.
"அடேய்.. ஒன்னும் இல்லைடா. சமைக்கும் போது இதெல்லாம் சகஜம். விடுங்கடா ரெண்டு பேரும். போட்டு அலப்பறை பண்றானுங்க" என்றபடி கண்ணை மூடி மூடி திறந்தார்.
இன்னும் சிவப்பாக தான் இருந்தது. கூடவே எரிச்சலாகவும் இருந்தது.
"ஏன் குமுதா... உன் மகனுங்க அப்படி என்ன அலப்பறை பண்றானுங்க?" என்று வாசலில் குரல் கேட்க மூவரும் ஒரு சேர அங்கே திரும்பினர். வந்திருந்தவரை கண்டு மூவருக்கும் புன்னகை பிறந்தது.
"அடடே.. வா மஞ்சுளா. என்ன அங்கேயே நின்னுட்ட?" என்று அவரை வரவேற்றார் குமுதா. மஞ்சுளா அவர்களின் உறவுக்கார பெண்மணி தான். குமுதாவிற்கு நல்ல பழக்கம்! நல்ல தோழியும் கூட!
"வாங்க அத்தை." என்று நரேனும் நவீனும் அவரை வரேற்றனர்.
"என்ன.. கண்ணு சிவந்து போய் இருக்கு" என்றபடியே உள்ளே வந்தார் மஞ்சுளா.
குமுதா துண்டால் கண்ணை துடைத்துக் கொண்டே நடந்ததை சொல்ல, "ஐயோ.. பாத்து தள்ளி நின்னிருக்க வேண்டியது தானே குமுதா" என்று சொல்ல,
"இதென்ன? சகஜம் தான" என்றவர் "இரு மஞ்சுளா பசங்க ரெண்டு பேத்துக்கும் ஆஃபிஸ்கும் காலேஜுக்கும் டைம் ஆச்சு. அவனுங்கள தாட்டி விட்டுட்டு வரேன்" என்று எழுந்து கொள்ள,
அவரின் தோள் பற்றி அமர வைத்த நரேன் "நீங்க எங்க வரீங்க? கிச்சன் பக்கம் போனீங்கன்னா அவ்ளோ தான். உக்காருங்க அமைதியா. நானும் நவீனும் எல்லாம் பாத்துக்குறோம்" என்றவன் மஞ்சுளாவிடம் திரும்பி,
"நீங்க பேசிட்டு இருங்க அத்தை" என்று எழுந்து நவீனுடன் கிச்சனுக்கு சென்று விட்டான். உருளை மசாலாவை தயாரிக்க வேண்டி அதை நவீன் கட் பண்ணி கொடுக்க, நரேன் சாம்பாரை தாளித்து விட்டு அதை தயார் செய்தான்.
"ரெண்டு மகனுங்களையும் தங்கமா வளர்த்திருக்க குமுதா" என்று சிலாகித்து கொண்டார் மஞ்சுளா. "பசங்கள பாத்து கண்ணு போடாத மஞ்சுளா" என்று அவரிடம் முறைப்பும், புன்னகையுமாக கூறியவர் "சரி சொல்லு.. என்ன விஷயம்.. காலைலயே வீட்டுப் பக்கம் வந்திருக்க?" என்று கேட்டார் குமுதா.
"இன்னக்கி வெள்ளிக் கிழமை இல்லையா? அதான் இங்க இருக்க அம்மன் கோவிலுக்கு வந்தேன். அப்படியே உன்னையும் பாத்துட்டு போலாம்னு வந்தேன்" என்று அவர் சொல்லிக் கொண்டிருக்கும் போதே மயில்வாகனம் வந்து விட்டார்.
"அடடே.. வா மஞ்சுளா.. என்ன இந்த பக்கம்?" என்று கேட்க, "ஏன் அண்ணே.. நா வரக் கூடாதா?" என்று மஞ்சுளா சிரிப்புடன் கேட்டார்.
"ஏன் வராமா... தாராளமா வரலாம். நம்ம வீட்டுக்கு வரதுக்கு என்ன தயக்கம்" என்றவர் குமுதாவின் அருகில் அமர்ந்து கொள்ள அவரிடம் ஒரு காஃபி டம்ளரை வந்து கொடுத்த நரேன், "இந்தாங்க அத்தை காஃபி" என்று அவருக்கும் ஒன்றினை நீட்டினான்.
"ஹ்ம்ம்... நரேந்திரா காஃபி மணமே ஆள அள்ளுது போ" என்றவர், "நானும் கோவிலுக்கு வரோம்னு பச்ச தண்ணி கூட பல்லுள படாம வந்தேன். கொண்டா அதை" என்று பிகு செய்யாமல் வாங்கிக் கொண்டார்.
மஞ்சுளா குமுதாவின் குடும்பத்திற்கு நல்ல பழக்கம் தான் என்பதால் தயங்கவெல்லாம் இல்லை.
காஃபியை பருகிய மயில்வாகனம் அப்போது தான் மனைவியின் கண்ணை கவனித்தார். "என்ன குமுதா? கண்ணு சிவந்து போய் இருக்கு? சமைக்கும் போது என்னவாவது நடந்திடுச்சா?" என்றார் சரியாக கனித்தவராக!
"ஆமாங்க..." என்றவர் நடந்ததைக் கூறி "நீங்க ஒன்னும் பதறாதீங்க. உங்க மகனுங்க இப்ப தான் ஒரு அலப்பறை பண்ணி முடிச்சாங்க" என்றார் சிரிப்போடு.
"சரியா கவனிச்சு பண்றதில்லயா?" என்று மயில்வாகனம் அக்கறையாக கூற, "இப்ப தான சொன்னேன்" என்று கணவரை முறைத்தார் குமுதா. "சரி சரி..." என்று அமைதியாகி விட்டார் மயில்வாகனம்!
நடப்பதை பார்த்து புன்னகைத்து படி காஃபியை அருந்தினார் மஞ்சுளா. குமுதா தான் அந்தக் குடும்பத்தின் ஆணி வேர்! பல முறை இதை உணர்ந்து இருக்கிறார். அதே சமயம் அவரில்லாமல் மூன்று ஆண்களுக்கும் ஒரு நொடி கூட நகராது! அவர்களின் உலகம் குமுதாவை சுற்றித் தான்!
அன்பான மனிதர்கள். மரியாதையான குடும்பம். அழகான வாழ்க்கை! இவர்களின் வாழ்க்கையில் தன் மகளையும் இணைக்க வேண்டி தான் இங்கே வருகை தந்திருந்தார் மஞ்சுளா.
நரேனும் நவீனும் அனைத்து வேலையும் முடித்து உண்டு விட்டு கிளம்பி விட, மயில் வாகனமும் கிளம்பி விட்டார். மஞ்சுளாவை "உண்டு விட்டு தான் செல்ல வேண்டும்" என்று மூன்று பேருமே சொல்லி விட்டு சென்றனர்.
"சொல்லு மஞ்சுளா.. இந்நேரம் வரை பசங்க இருக்காங்கன்னு வாயத் திறக்கவே பின்னிக்கிட்டு கிடந்த! இப்ப சொல்லு" என்றார் அவரின் முகம் காட்டும் பாவனையை வைத்து.
"எப்படி தானோ குமுதா. மூஞ்சியை வச்சே கண்டு பிடிச்சிடிற?" என்றார் ஆச்சர்யமாக. குமுதாவோ "வா சாப்பிட்டிட்டே பேசுவோம்" என்று இருவருக்கும் தட்டை எடுத்து வந்தார்.
"அது வந்து குமுதா.. பெரிய மகனுக்கு இப்ப வரன் எதுவும் பாக்குறியா?" என்று நேராக விஷயத்திற்கு வந்து விட்டார் மஞ்சுளா. அதைக் கேட்டு குமுதா தான் மெல்ல அதிர்ந்து விட்டார்.
"அடி பாவி மஞ்சுளா.. காலைலயே இந்தப் பேச்சா?" என்றவர் சற்று அதிர்ந்து போய் கேட்டாலும், சிரித்து விட்டு "வெள்ளிக் கிழமை.. நல்ல சகுனம் பாத்து தான் வந்து இருப்ப போல" என்றார் சப்பாத்தியை பிட்டு குருமாவில் நனைத்தபடி.
"கிண்டல் பண்ணாம சொல்லு குமுதா" என்று மஞ்சுளா கேட்க, பெரு மூச்சு விட்டவர் "அதெல்லாம் இப்ப நான் யோசிக்கவே இல்ல மஞ்சுளா. அவனுக்கு இப்ப இருபத்து அஞ்சு வயசு தான் நடந்திட்டு இருக்கு. இப்ப கல்யாணம் பண்ணிக்கிறியான்னு கேட்டா என் மகன் என்னை உண்டு இல்லைன்னு பண்ணிடுவான். இன்னும் ஒரு ஒன்னு ரெண்டு வருஷம் போகட்டும்னு பாக்குறேன்" என்றார் தன் எண்ணத்தை.
"என்ன குமுதா இப்படி சொல்லிட்ட?" என்று மஞ்சுளா காற்றுப் போன பலூனாகி விட, "ஏன்.. நீ ஏன் ஒரு மாதிரி ஆகிட்ட?" என்று சந்தேகம் கேட்டார் குமுதா.
"அதில்ல... நம்ம மோனிக்காவுக்கு நரேனை கல்யாணம் பண்ணலாமான்னு....." என்று அவர் இழுக்க..... இப்போது நன்றாகவே அதிர்ந்து விட்டார் குமுதா.
"மஞ்சுளா......." என்று அதிர்வாக அவரை அழைக்க, "ஏன் குமுதா என் பொண்ணு உன் வீட்டு மருமக ஆகுறதுல உனக்குப் பிடிக்கலயா?" என்று ஒரு மாதிரி வருத்தமான குரலில் கேட்டார் மஞ்சுளா. அவருக்கு மோனிகா ஒரே மகள்!
"அப்படி நான் எப்ப சொன்னேன்?" என்று குமுதா கேட்க, "அப்புறம் என்ன? என் பொண்ணுக்கு உன் பெரிய மகனை கட்டி வைக்க என்ன இடிக்குது?" என்றவர், "நான் நல்ல நகை நட்டு போட முடியாதுன்னு பாக்குறியா" என்றார் மேலும் வருத்தம் இழையோட!
"இதென்ன பேச்சு? எனக்கு நகை நட்டெல்லாம் முக்கியம் இல்ல. பொண்ணு.. அவ குணம்.. நல்ல பொண்ணா நல்ல குணமா இருந்தா போதும். நம்ம மோனிய பத்தி எனக்கு தெரியாதா? தங்கம்டி அவ?" என்றார் அவரின் மகள் மோனியை நினைத்தவாறே..
"அப்புறம் என்ன குமுதா யோசிக்கிற? உனக்கு என்ன இடிக்குது?"
"வயசு தான் இடிக்குது!" என்றார் பளிச்சென்று!
மஞ்சுளாவிடம் மௌனம்.
"நம்ம மோனி இப்ப தான் பிளஸ் டூ முடிச்சு இருக்கா? அதுக்குள்ள ஏன்டி சின்ன பிள்ளைக்கு போய் கல்யாணம் பேசுற?"
"அதான் பன்னன்டாப்பு முடிச்சிட்டாள்ல! போதும் குமுதா. இதுக்கு மேல படிக்க வச்சு என்ன பண்ண? எப்படியும் பொட்ட பிள்ளை வாழ்க்கை வீடும், அடுப்படியும் தான்" என்றார் அவருக்குத் தெரிந்த மிக முக்கியமான நிதர்சனத்தை!
"மஞ்சுளா... இப்ப எவ்ளோ பொண்ணுங்க படிச்சு வேலைக்கு போகனும்னு நினைக்கிறாங்க. நீ என்ன இப்படி சொல்ற?"
"அதுக்கில்ல குமுதா.. எங்களுக்கு இருக்கிறது ஒரே மக! அவள ஒரு நல்ல இடத்தில கட்டிக் கொடுத்திட்டா நிம்மதி. எனக்கு அவ கல்யாணம்னா பளிச்சுன்னு நியாபகம் வர்றது உன் வீடு தான்" என்றார் வெளிப்படையாக.
"மஞ்சுளா எனக்கு நம்ம மோனிய பிடிக்காம இல்ல. ஆனா, நரேனுக்கும் அவளுக்கும் வயசு வித்தியாசம் ஜாஸ்தி. நரேனுக்கு அடுத்த ரெண்டு வாரத்துல பிறந்த நாள் வரப் போகுது. இருபத்து அஞ்சு வயசாகிடும். நம்ம மோனிக்கு இன்னும் பதினெட்டு வயசு கூட முடியல. எப்படி மஞ்சுளா? கிட்டத்தட்ட எட்டு வருஷம்..!!!" என்று அவர் பெரு மூச்சு விட, மஞ்சுளாவிற்கு முகமே விழுந்து விட்டது.
"இப்ப எதுக்கு மூஞ்சிய இப்படி தொங்க போடுற?"
"நா ஒன்னு நினைச்சேன். ஆனா, அந்த ஆண்டவன் வேற கணக்கு போடுறான் போல. நீ சொல்றதும் சரி தான் குமுதா. ஆனாலும், உன் வீட்டுக்கு தான் என் பொண்ணைக் கொடுக்கணும்னு மனசு அடிச்சிக்குது. என் வீட்டுக்காரருக்கும் அதே சிந்தனை தான்"
"புரியுது. எனக்கும் நம்ம மோனிய மறுக்க எந்தக் காரணமும் இல்ல. இருந்தாலும், வயசப் பாக்கணும்ல? அதுவும் நரேன்.. அவனுக்கு நம்ம மோனி மேல அப்படி எல்லாம் எண்ணம் இருக்காது. அவனை பொறுத்த வரை அவ சின்ன பொண்ணு. ரெண்டு பேரையும் கட்டி வச்சோம்னா மனசு ஒத்து வாழுறது கஷ்டம்!" என்றார் மகனின் மனம் அறிந்தவராக.
எதாவது கோவிலிலோ, விஷேஷங்களிலோ மோனியும், நரேந்திரனும் பார்த்துக் கொண்டால் கூட, இவன் அவளிடம் ஒரு தங்கையிடம் பேசுவது போல் தான் பேசுவான். மோனியும் அப்படியே!
ஆகையினால், குமுதா மிகவும் தயங்கினார். மற்றொன்று மோனிகா இன்னும் காலேஜ் கூட செல்லவில்லை. இத்தனைக்கும் அவள் நன்கு படிக்கும் பெண்! நிச்சயம் அவள் படிப்பிற்கு மஞ்சுளா தான் தடா போடுவாள் என்று தோன்றியது குமுதாவிற்கு.
உண்டு முடித்த இருவரும் ஹாலில் வந்து அமர,
"நீ ரொம்ப வருத்தப் படாத! முதல்ல மோனியை படிக்க வை! அவ நல்ல படிக்கிற பொண்ணு. படிக்கிற பொண்ணுக்கு கல்யாணம் பேசி அவ படிப்பை பால் பண்ணிடாத. இப்போ பொண்ணுங்களுக்கு படிப்பு எவ்ளோ முக்கியம் தெரியுமா?"
"முக்கியம் தான்.. இருந்தாலும் வாழ்க்கையும் முக்கியம் தான!" என்றார் மஞ்சுளா மற்றொரு முக்கிய காரணமாக!
"மஞ்சுளா.. நீ என்ன இப்படி சொல்ற????? முதல்ல பிள்ளை படிப்பை முடிக்கட்டும். அப்புறம் கல்யாணம் பேசு!" என்றார்.
"சரி படிக்க வச்சா உன் வீட்டு மருமகளாக்கிறயா?" என்றார் அப்போதும் விடாமல்!
"ஐயோ... இதென்னடி உன்னோட பெரிய ரோதனையா போச்சு. என் பெரிய மகனுக்கு நீ மோனியை முடிச்சுப் போடுற விஷயம் தெரிஞ்சது அவ்ளோ தான். கோபமாகிடுவான்" என்றார் மகனை அறிந்து.
"அவனை விடு. இந்த வீட்டுல குமுதாவ மீறி ஒரு அணுவும் அசையாது. எல்லாத்தையும் உன் அன்பால கட்டிப் போட்டு வச்சிருக்க. நீ சொன்னா உன் மகன் தட்ட மாட்டான்" என்றார் பெரும் ஆர்வத்துடன்.
குமுதாவிற்கு புரிந்து போனது! மஞ்சுளா மோனிகாவை தன் குடும்பத்தில் கொடுப்பது என முடிவு செய்து விட்டார் என! அவருக்கும் மோனிகாவை மறுக்க எந்தக் காரணமும் இருக்கவில்லை.
எதை எதையோ எண்ணி ஒரு சில நிமிடங்களில் ஒரு சிறு கணக்கினை போட்டுப் பார்த்தவர் 'வயசு பிரச்சனை தானே.. அதை வேறு மாதிரி தீர்த்து விடலாம்' என்று எண்ணியவர் "சரி. நீ முதல்ல மோனியை படிக்க வை! அப்புறம் பாக்கலாம்!" என்றார் எதையும் உறுதியாய் கூறாமல்!
"இப்படி சொன்னா எப்படி குமுதா?"
"அதெல்லாம் அவ்ளோ தான் சொல்ல முடியும். நான் இன்னும் என் வீட்டுக்காரர் கிட்டையும் கலந்து பேசனும்ல. என் மகன் கிட்டயும் பேசணும். அதுக்கெல்லாம் இன்னும் வருஷம் இருக்கு" என்றவர்,
"நீ ஒழுங்கா மோனியை படிக்கவை! எல்லாம் அப்புறம் பாக்கலாம். எல்லாம் நல்லாவே நடக்கும்" என்று அவரின் மனம் கோணாமல் சொல்லி அவருக்கு விடை கொடுத்து அனுப்பி வைத்தார் குமுதா! மஞ்சுளா தான் முகத்தில் ஒரு திருப்தி இல்லாமல் சென்றார்.
மஞ்சுளா சென்றதும் யோசனையில் ஆழ்ந்த குமுதா பின்னர் தான் நினைத்தது சரி தான் என்று ஒரு முடிவுக்கு வந்து விட்டு பூஜை அறைக்குள் சென்று சாமிக்கு காசெடுத்து முடிந்து வைத்தவர்,
"கடவுளே.. நா நினைச்சது சரின்னா அதை நடத்தி வை. என் ரெண்டு மகனுங்க வாழ்க்கையும் அவனுங்க குணம் போலவே தங்கமா அமையனும்! அவ்ளோ தான். எல்லாரும் சந்தோஷமா இருக்கணும். எல்லாம் நல்லா நடக்கணும்" என்று கடவுளிடம் கோரிக்கை வைத்தார்.
அவர் கோரிக்கையை கேட்ட கடவுள் மென்மையாய் புன்னகை சிந்தினார்!!!!
************
அன்று கல்லூரிக்கு மிகுந்த டென்ஷனும் பீதியுமாக சென்றாள் ராதா! வந்ததும் அவள் முகம் இருந்த இருப்பை வைத்தே புரிந்து கொண்டனர் அவளின் நட்புக்கள். அவளின் டென்ஷனிற்கான காரணத்தை!
அவளின் நெருங்கிய தோழி திவ்யா தான், "ரிசல்ட் நல்லபடியா தான் வரும் ராதா. ஏன் இப்படி டென்ஷன் ஆகுற.. கண்டிப்பா எல்லாத்துலயும் பாஸ் ஆகி இருப்ப. கவலை படாத!!" என்றாள் அவளை தேற்றும் விதமாக!
அனைவரும் சொல்லும் போது வராத தைரியம், இப்போது திவ்யா சொல்லும் போது சற்றே எட்டிப் பார்த்தது. அனைவரும் அவளுக்கு தோழமைகள் தான். இருப்பினும் திவ்யா அவளின் பெஸ்ட் ப்ரெண்ட். அவளின் தமிழ் குரு என்று கூட சொல்லலாம்.
ராதாவிற்கு பி.ஏ. தமிழ் படிக்க மிகவும் உதவியாய் இருப்பாள். ஆரம்பத்தில் இருந்தே இருவரும் நன்கு பழகி இருக்க, அவர்களின் பழக்கம் படிப்பிலும் மிகுந்த உதவிகரமாக இருந்தது. குறிப்பாக ராதாவிற்கு தான் உதவியாக இருந்தது.
இப்போது இன்டர்ணல் தேர்வின் ரிசல்டிற்காக தான் அனைவரும் வெயிட் செய்து கொண்டு இருந்தனர். அதுவும் அவர்கள் கிளாசின் முன்னாள் இருந்த நோட்டீஸ் போர்டின் அருகே ஈக்கூட்டமென மொய்த்துக் கிடந்தனர்.
சற்று நொடிகளில் எல்லாம் அவர்கள் டிபார்ட்மண்ட்டின் பியூன் வந்து ரிசல்ட் பேப்பர்களை நோட்டீஸ் போர்டில் பின் செய்து விட்டுப் போனார்.
சட்டென்று அனைவரும் பரபரப்பாக நோட்டீஸ் போர்டின் அருகில் செல்ல, "திவ்வி.. நா போய் பாக்கல! நீயே போய் பாத்துட்டு வந்து எனக்கு சொல்லு" என்று தன் ரிசல்ட்டை திவ்யாவின் கையில் கொடுத்து பார்க்கச் சொல்லி விட்டு கிளாஸ் ரூமிற்குள் சென்று அமர்ந்து கொண்டாள்.
சிறிது நொடிகளில் எல்லாம் திவ்யா அமைதியாய் உள்ளே வர, மற்ற தோழர்களும் அவளுடன் அமைதியாய் வந்தனர்.
"என்ன திவ்வி.. இவளோ சைலண்ட்டா வர? பா..சா... இல்ல... ஃபெயிலா.." என்று கலக்கமாய் கேட்டவளை கண்டு திவ்யா பெரு மூச்சு விட "போச்சு.... இந்த தடவ எத்தனல கோட்டை விட்டு இருக்கேன்!" என்றாள் தலையில் கை வைத்து கொண்டு.
"இந்த தடவ..........." என்று திவ்யா முடிக்காமல் நிறுத்த, தந்தையின் அடியையும் வசைபாடுகளையும் நினைத்து தொண்டைக் குழியில் பய பந்து சுழன்றது ராதாவிற்கு.
"டக்குன்னு சொல்லிடு திவ்வி. என்னால இந்த டென்ஷனை எல்லாம் அனுபவிக்க முடியாது" என்றாள் படபடவென.
"இந்த தடவ...." என்று மீண்டும் திவ்யா இழுத்து நிறுத்தி சுற்றி நின்ற நண்பர்களை பார்க்க, அவர் எல்லோரும் கோரசாக "இந்த தடவ... எல்லாத்துலயும் பாஸ் நீ!!!!!!!" என்று கத்தினர்.
ராதா அதிர்ந்து தான் போனாள். 'உண்மையாகவே பாஸ் தானா? நானா' என்று குழப்பம் அடைந்தவள் "ஏய்.. எல்லாரும் என்னை ஓட்டுறீங்களா?" என்று கேட்க, அனைவரும் அவளை ஒன்று போல் முறைத்தனர்.
"நம்பு.. நீ பாஸ் தான்" என்க, அப்போதும் நம்பாமல் நோட்டீஸ் போர்ட் சென்று பார்த்த பின்னர் தான் நம்பினாள். "இத்தனை பேர் சொல்றோம்.. நம்பாம போய் பாத்துட்டு வர" என்று திவ்யா இடுப்பில் கை வைத்து முறைக்க,
"உண்மையாவே நம்ப முடியல தான் திவ்வி. அதான் போய் பாத்துட்டு வந்தேன். பாத்த பின்னாடியும் நம்ப முடியல" என்றாள் கைகளை கிள்ளிக் கொண்டபடி.
"அடியே.. நம்பு! பாஸ் தான்." என்றாள் திவ்யா ராதாவின் தலையில் தட்டி. "நம்புறேன். நம்புறேன். அப்பாடா.. எப்படியோ இந்த இன்டர்ணல் என்னை காப்பாத்தி விட்டுடுச்சு!" என்றாள் பெரு மூச்சுடன்.
அவள் குரலில் ஒரு வித நிம்மதி தெரிந்தாலும், அதில் ஒரு வித இயலாமையும் ஒலிப்பதை காண முடிந்தது அனைவராலும்! இந்தப் படிப்பு அவள் விரும்பாத.. விரும்பி இராத ஒன்று! அதுவும் தந்தையின் கட்டாயத்திற்கு வேண்டி படிக்கிறாள்.
அவள் கனவு என்ஜினியரிங் படிப்பது தான். ஆனால், தான் படிக்க வேண்டும்.. படித்தே ஆக வேண்டும் என்று அடம் பிடித்ததால் வந்த வினை தான் இந்தப் படிப்பு. சரி இது வேண்டாம் என்று தூக்கி எறிய நினைத்தாலும் அடுத்து திருமணம் செய்து கொள் என்று அவளுக்கு செக் வைத்திருக்கிறார் அவளின் தந்தை.
இந்தக் கூத்தெல்லாம் அவர்கள் அனைவருக்கும் தெரியா விட்டாலும், திவ்யாவிற்கு நன்கு தெரியும். ஒரு சில நாட்களில் மனம் பொறுக்கமால் அனைத்தையும் திவ்யாவிடம் கொட்டி விடுவாள் ராதா.
படிக்கும் பிள்ளை எங்கிருந்தாலும் படிக்கும் தான். ஆனால், என்னவானாலும் படித்து விடாதே!!!!! இயல்பிலேயே ஒரு பிடித்தம் இருக்க வேண்டும். ஒரு பேசிக் இன்ட்ரெஸ்ட் கூட இல்லை என்றால் எப்படி படிக்கப் பிடிக்கும்?
திவ்யாவிற்கு ராதாவை நினைத்து கவலை சிந்தனைகள் ஓட ஆரம்பித்தது. சில நேரங்களில் திவ்யா கூட சொன்னது உண்டு "பேசாம நீ கல்யாணம் பண்ணிக்கோ ராதா. இங்க வந்து இவளோ கஷ்ட பட்டு பிடிக்காதத படிச்சு.. சிரமப் பட்டு, உங்க அப்பா கிட்ட பேச்சு வாங்கி.... பேசாம ஒரு நல்ல மாப்பிள்ளையா பாத்து செட்டில் ஆகிடு!" என்று.
அதற்கு ராதா கூறிய மறு பதில் இன்றளவும் திவ்யாவால் மறக்க முடியாது!
"எனக்கும் சம் டைம்ஸ் இப்படி தாட் வந்திருக்கு தான் திவ்வி! பட், கொஞ்சம் டீப்ப்பா யோசிச்சு பாத்தா நா எவ்ளோ பெரிய சுயநலவாதின்னு தான் நினைக்க தோணும்" என்றவளை திவ்யா ஆச்சர்யமாகவும் குழப்பமாகவும் பார்க்க,
"ஆமா திவ்வி. எவ்ளோ பேரு படிக்கணும்னு ஆசை பட்டு படிக்க முடியாம போய் இருக்காங்க! பிளஸ் டூ வரைக்கும் படிச்சிட்டு அதுக்கு மேல படிப்பு வேண்டாம். பொம்பள புள்ளைக்கு எதுக்கு படிப்புன்னு நினைக்கறவங்க எத்தன பேரு? ஏன் எங்க வீட்லயே எங்க அக்கா ரெண்டு பேருமே படிக்கல. சில பேர் படிக்க ஆசை இருந்தும் காசு இல்லாம எவ்ளோ கஷ்ட படுறாங்க. நிறைய பேருக்கு வறுமை நிறைய கொடுமைய கொடுக்குது",
"ஆனா, எனக்கு எதோ ஒரு ரூபத்துல ஆண்டவன் ஒரு படிப்ப கொடுத்து இருக்கான். அதை ஏன் வேண்டான்பானேன்! படிப்போம். வர்ற அளவுக்கு படிப்போம். முடிஞ்ச அளவுக்கு படிப்போம்" என்று கூறி திவ்யாவை மேலும் வியப்பில் ஆழ்த்தி இருந்தாள்.
அந்த வார்த்தைகள் ராதாவின் மேல் ஒரு பெரும் மரியாதையை கொண்டு வந்திருந்தது. இன்றும் அவள் விடாது போராடிப் படிப்பது பாஸ் ஆகினால் போதும் என்று
தான். ஆனாலும் அது அர்த்தம் நிறைந்ததாக தான் தெரிந்தது அவளுக்கு. அந்தப் போராட்டம் இந்த இன்டர்ணல்லில் அவளை கை விடவில்லை என்று எண்ணி சந்தோஷப் பட்டுக் கொண்டாள் திவ்யா.