அதீனா ஜார்ஜ்
Moderator
அத்தியாயம் - 5
அன்று காலை அலுவலகத்தில் இடைவேளையின் போது cafeteria-வில் அமர்ந்து இருந்தனர் அசோக்கும் நரேந்திரனும். ஆளுக்கு ஒரு பிரட் சான்விச்சும் காஃபியும் ஆர்டர் செய்து இருந்தனர்.
ஆர்டர் செய்தது வந்ததும் அதை உண்டபடி உலக நடப்புகளை பற்றியும், ஆஃபிஸ் கதைகளையும் சிரித்து பேசிக் கொண்டிருக்க அப்போது அவர்களிடம் வந்தாள் யுவந்திகா.
அவர்கள் டீமின் ஹெட்! மிக மிக திறமை வாய்ந்த யுவதி! நல்ல மார்டன் அழகி! வேலையில் என்றும் கறார் பார்ட்டி தான். கொஞ்சம் டாமினன்ட் மைண்ட்டெட் பெர்சனாலிட்டி! கொஞ்சம் கர்வமும், நிறைய திமிரும் கொண்டவள்.
அவளின் வேலை அத்திமிரை பரிசளித்து இருந்தது. கூடவே, இளம் வயதில் இது போன்ற பொசிஷனில் இருப்பது அவளுக்கு ஒரு வித மமதையை கொடுத்து இருந்தது என்று தான் சொல்ல வேண்டும்!
தங்கள் அருகில் வந்து நிற்கும் யுவந்திகாவை கண்ட இருவரும் "குட் மார்னிங் மேம்" என்று மரியாதையாக சொல்ல,
"மே ஐ ஜாயின் வித் யூ" என்றாள் நுனி நாக்கு ஆங்கிலம் நாக்கில் நர்த்தனம் ஆட!
இருவரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டாலும், "எஸ் மேம்.." என்று அவளுக்கு இடம் கொடுத்தனர்.
அசோக் சென்று நரேந்திரனின் அருகில் அமர்ந்து கொள்ள, இருவரின் எதிரில் உள்ள இருக்கையில் அமர்ந்தாள் யுவந்திகா.
"ஒன் பர்கர்" என்று தனக்கு வேண்டியதை ஆர்டர் செய்தவள் அசோக்கை ஒரு பார்வை பார்த்து விட்டு நரேனிடம் "நரேன்.. ஐ ஹாவ் சம்திங் பர்சனல் டூ ஸ்பீக் வித் யூ" என்றாள் கால் மேல் கால் போட்டபடி.
நரேனுக்கு மட்டுமல்ல அசோக்கிற்குமே ஆச்சர்யம் கலந்த அதிர்ச்சி தான்!
இவளுக்கு என்ன நரேந்திரனிடம் பேச உள்ளது? அதுவும் பர்சனல் என்று சொல்லிக் கொள்ளும் அளவிற்கு?
அவள் தங்களின் டீம் ஹெட்! நல்ல திறமை வாய்ந்தவள்! தங்களை விட வயதில் மூத்தவள் கூட! மிகவும் திறமையாக அவளுக்கு கீழ் இருக்கும் நபர்களை வேலை வாங்கி, வேலை கொடுத்து என டீமை வெகு சிரத்தையாக வழி நடத்துபவள்.
இதை தவிர வேறு எதுவும் யுவந்திகாவை பற்றி அவர்களுக்கு தெரியாது. இப்போது திடீரென வந்து பர்சனலாக பேச வேண்டும் என்றால் என்ன பதில் சொல்லுவது என்று நரேன் குழம்ப, அசோக் நரேனை பார்த்து விட்டு எழுந்து கொள்ளப் போனான்.
அவன் கை பற்றி தடுத்த நரேன், "என்ன விஷயம் மேம். எதுனாலும் அசோக் இங்கேயே இருக்கட்டும். பிக்காஸ் இட்ஸ் அவர் டூகெதெர் டைமிங்" என்றான் தெளிவாக.
"ஓகே ஃபைன்" என்று தோள்களை குலுக்கிக் கொண்ட யுவந்திகா "ஐ பர்சனல்லி லைக் யூ நரேன். ஐ மீன்.... ஐயம்.... இன் லவ் வித் யூ. கேன் வீ மூவ் வித் லிவ் இன் ரிலேஷன்ஷிப்" என்று கேட்க, இன்னுமின்னும் அதிர்ச்சியாக இருந்தது இருவருக்குமே!!!!!!
என்ன??????
இவள் பாட்டிற்கு வந்தாள். ஐ லவ் யூ என்கிறாள்.. விருப்பத்தை கூறிய அடுத்த நொடி லிவ் இன் ரிலேஷன்ஷிப்பில் இருக்கலாமா என்று கேட்கிறாள்.. கேட்டுக் கொண்டிருந்தவர்களுக்கு தலை சுற்றியது.
அதுவும் யுவந்திகாவிடம் இருந்து இப்படி ஒரு பேச்சையும், செயல்பாடையும் எதிர் பார்த்திருக்கவில்லை. சுற்றி இருக்கும் அனைவரும் தத்தம் வேலையை கவனித்துக் கொண்டு உண்டபடி இருந்தாலும், ஒரு சிலரின் பார்வை இவர்கள் டேபிள் அருகில் தான் படிந்திருந்தது.
அதுவும், யுவந்திகா யாரோடும் இப்படி சட்டென்று பேசுபவள் அல்ல! அதுவும் சரிக்கு சமமாக அமர்ந்து பேசும் ரகம் அல்லவே அல்ல!
தங்களின் சீனியர் ஒன்றிரண்டு பேர் இங்கே தான் குறுகுறுவென பார்த்துக் கொண்டிருப்பதை உணர்ந்த நரேன் நிலமை மிகவும் மோசமாகி விடக் கூடாது என்று "மேம்..." என்று ஆரம்பிக்க,
"வெயிட் நரேன். நல்லா யோசிச்சு நீ எனக்கு பதில் சொன்னா போதும். இப்பவே சொல்லணும்னு கட்டாயம் இல்ல. டேக் யுவர் ஓன் டைம்" என்றவள் தன்னுடைய பர்கரை நிதானமாக உண்ண ஆரம்பிக்க,
"மேம்.. ப்ளீஸ்... சுத்தி கொஞ்ச பேர் நம்மள தான் நோட் பண்றாங்க. அண்ட் சீனியர்ஸ் டூ லுக்கிங் அட் அஸ் ஒன்லி!" என்று பெரும் சங்கடத்துடன் கூறியவனின் முகம் கடுகடுவென மாறி இருந்தது.
கடித்து துப்ப வேண்டும் போல் இருந்த வார்த்தைகளை பார்த்து கவனமாக உபயோகித்தான் நரேந்திரன். இல்லை என்றால் யுவந்திகாவின் பகைமைக்கு ஆளாக நேரிட்டாலும் ஆச்சரியப் படுவதற்கொன்றும் இல்லை!
எனவே, பொறுமையாய் அவளிடம் எடுத்துக் கூற முயன்றான்.
"மேம்....."
கை அமர்த்தி அவனை தடுத்தவள் "எதையும் உடனே சொல்லணும்னு அவசியம் இல்ல நரேன். ஐ நோ (know) நீ ஏன் ஹெஸிடேட் ஆகுறேன்னு. உன்னோட ஏஜ்.. என்னோட ஏஜ்.. நம்ம ஒர்க் பொசிஷன், நா கேக்குற லிவ் இன் விஷயம், ஃபேமிலி.. இப்படி நிறைய வேரியேஷன்ஸ் இருக்கு.. அதனால தான் உன்னை யோசிச்சு, டேக் யுவர் ஓன் டைம்ன்னு சொல்றேன்" என்றாள் அவனை நேர் பார்வை பார்த்துக் கொண்டே. அவள் குரலில் அப்படி ஒரு தீவிரமான அழுத்தம் தென்பட்டது.
"அதனால தான் மேம் நான் உடனே என்னோட அப்ஜெக்ஷனை இப்பவே சொல்ல நினைக்கிறேன். பிகாஸ், ஐ டோண்ட் ஹாவ் எனி இன்ட்ரஸ்ட் இன் லவ் அண்ட் லிவ் இன் ரிலேஷன்ஷிப். அண்ட் ஆஃப் கோர்ஸ் நீங்க சொன்ன மாதிரி நிறைய வேரியேஷன்ஸ் இருக்கு. குறிப்பா ஃபேமிலி... சோ,ப்ளீஸ் இனிமேல் இந்த டால்க் நமகுள்ள வேண்டாம்" என்று தன்மையும், பொறுமையாக சொன்னவன்,
"I respect you mam. I admire your dedication towards our team work. பட், நீங்க கேக்குற விஷயம் நிச்சயம் பாசிபில் இல்ல! ஐயம் சாரி" என்றவன் அவளின் பதிலை எதிர் பாராது எழுந்து கொண்டான்.
அசோக்கும் அவனோடு எழுந்து கொள்ள, "இதை மறந்திடுங்க மேம். ஹாவ் அ நைஸ் டே!!!" என்று விட்டு cafeteria விட்டு வெளியே சென்று விட்டான்.
ஆனால், யுவந்திகாவால் அப்படி செல்ல முடியவில்லை. அவன் முகத்தில் தெரிந்த மறுப்பை அவளால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை! அதுவே அவளை இன்னும் தீவிரமாக பேச வைத்தது.
எங்கே அவன் மறுத்து விடுவானோ என்று அவள் உள்ளுக்குள் பயப்பட அதற்காகவே அவனை பேச விடாமல் செய்தாள். ஆனால், அவள் செயலை தன் பேச்சினால் முறி அடித்து இருந்தான் நரேந்திரன்.
"லெட்ஸ் சீ நரேன்! டைம் வில் கம்.. லெட்ஸ் சீ" என்று செல்லும் அவனை நோக்கி மௌனமாய் முணுமுணுத்து கொண்டாள் யுவந்திகா!
நரேன் தன் இடத்தில் வந்து அமர, "இந்த யுவந்திகா இப்படி சொல்லும்னு நினைக்கல மேன்" என்றான் அசோக் தலையை குலுக்கிக் கொண்டு.
"ஹ்ம்ம்... நானுமே எக்ஸ்பெக்ட் பண்ணல அசோக்"
"சட்டுன்னு சொன்னதும் நா அப்படியே ஷாஆஆக் ஆகிட்டேன்" என்றான் வடிவேலு பாணியில்.
நரேன் சட்டென்று சிரித்து "ஊஃப்" என்று பெரு மூச்சு விட, "நல்ல வேலை நீ உடனே பதில் சொல்லிட்ட. இதுல அந்த லூசு யோசிச்சு வேற சொல்ல சொல்லி, இன்னும் உன்னை டார்ச்சர் பண்ணி இருக்கும்" என்க,
"விடு மேன். சட்டுன்னு சொன்னதும் நானும் ஃப்ரீஸ் ஆகிட்டேன் தான். அப்புறம் எப்படியோ ஹேண்டில் பண்ணிட்டேன். எப்படி இவுங்களுக்கு இந்த மாதிரி ஒரு தாட் வந்ததுன்னே தெரியல" என்றான்.
"அடிக்கடி மீட்டிங் அப்போ எல்லாம் உன் மேல அவுங்க கண்ணு பாயும் போதே எனக்கு டவுட்டு... இப்போ தான புரியுது.. அந்த லுக்குக்கான ரீசனே"
"இது... இந்த நிமிஷத்தோட முடிஞ்சிடுச்சின்னா பரவாயில்லை. பட், யுவந்திகா லேஸ்ல விடுற ஆள் கிடையாது" என்றான் நெற்றி ஓரத்தை தேய்த்துக் கொண்டபடி.
அவன் கூறியதை அசோக்கும் ஆமோதிக்க, "பாக்கலாம்.. எப்படி வந்தாலும், இனி சமாளிச்சு தான் ஆகனும்" என்றபடி தூங்கிக் கொண்டிருந்த சிஸ்டம்மை ஆன் செய்தவனின் மனம் வேலையில் லயிக்க முயன்றது.
அன்று முழுவதும் யுவந்திகாவின் பேச்சும், அது கொடுத்த அதிர்ச்சியும், பின்னால் என்ன மாதிரியான விளைவுகளை ஏற்படுத்தப் போகும் என்கிற சிறு சஞ்சலமும் அவனைப் போட்டு அலைக்களித்தன.
இருப்பினும் முகத்தில் எதையும் எட்டாமல் பார்த்துக் கொண்டான். இன்று மாலை நவீனை அழைத்துக் கொண்டு வீடு செல்லலாம் என்று முடிவு பண்ணியவன் விரைவாகவே கிளம்பினான்.
எப்போதும் நவீன் கல்லூரி முடிந்து விட்டால் பேருந்தில் இல்லம் வந்து விடுவான். ஒரு சில நாட்களில் வேலை இல்லாத போதோ, சீக்கிரம் கிளம்பினாலோ தம்பியை அழைத்துக் கொண்டு போவது நரேந்திரனின் வழக்கம்!
அசோக்கும் அவனோடு கிளம்பி வர, பார்க்கிங் ஏரியாவில் "அந்த லூசு ஹெட் பேசினதயே நினைச்சு குழம்பாத மேன். லெட் இட் கோ" என்றான் இன்று முழுவதும் சரியில்லாத அவனின் முகத்தை வைத்து.
"சியூர் மேன்! பை.." என்று அசோக்கிடம் இருந்து விடை பெற்றவன் அலுவலகத்தில் இருந்து நேராக வண்டியை கல்லூரி நோக்கி விட, வழக்கம் போல் ட்ராஃபிக் சிக்னலில் மாட்டி நின்று கொண்டான்.
"ச்சே... இன்னும் டூ மினிட்ஸ் முன்னாடி வந்திருந்தா போய் இருக்கலாம்" என்று பெட்ரோல் டாங்கின் மேல் கை வைத்துத் தட்டியவன் ஹெல்மெட்டை கழட்டி விட்டு பார்வையை சுழல விட்டான். அந்த பெரிய ட்ராஃபிக்கில் அவன் கண்கள் அந்தப் பெயர் தெரியாத பெண்ணை தேடியது!
கண்களின் தேடல் தொடங்கி இருக்க, அவன் தேடும் காரிகை வழக்கம் போல் சிக்னல் திரையில் தெரிந்த எலக்ட்ரிக் போர்டில் குறைந்து கொண்டே வரும் நொடிகளை எண்ணிக் கொண்டு இருந்தாள்.
இந்த சிறு தினங்களாக ட்ராஃபிக் சிக்னலில் நிற்க வேண்டிய சூழ்நிலை வந்த போது மூன்று அல்லது நான்கு முறை ராதாவை பார்க்க வாய்ப்பு கிடைத்தது நரேந்திரனுக்கு.
அதுவும், ட்ராஃபிக் அறிக்கைகள் விடும் நேரம் சரியாக அவளும் அந்த நேரத்தில் அந்தக் கூட்டத்தோடு கூட்டமாக இருப்பாள்.
ஒரு நாள் இவனுக்கு முன்னர் இருப்பாள். இல்லை என்றால், பக்கவாட்டாக இருப்பாள். எப்படியும் ட்ராஃபிக்கில் நின்று விட்டான் என்றால் அவளை பார்க்க நேரிடும்! இன்றும் அவனின் கண்கள் தன்னைப் போல அவளைத் தேட, இன்னும் ஆளைக் காணவில்லை.
"ஹ்ம்ம்.... இந்த ஒன் டுவென்டி செக்கண்ட்ஸை விடாம எண்ணுற ஆளை இன்னைக்கு காணோமே" என்று அவன் எண்ணிக் கொண்டபடி அவனின் வலப்பக்க மிரரில் பார்க்க ராதாவும் கண்ணபிரானும் வந்திருந்தனர்.
"இதோ வந்தாச்சு...." என்றவன் மெல்ல சிரித்துக் கொண்டே நொடிகளை பார்க்க, அது நூற்றி ஐந்தில் இருந்து குறைந்து கொண்டிருந்தது. இவனுக்கு பின்னால் தந்தையுடன் அமர்ந்து இருந்த ராதா வழக்கம் போல் நொடிகளை எண்ண ஆரம்பித்து இருந்தாள்.
"ஹ்ம்ம்... இதோ ஸ்டார்ட் பண்ணியாச்சு" என்று புன்னகைத்து கொண்டவனின் எண்ணங்கள் சற்று இதமாக இருப்பது போல இருந்தது.
காலையில் இருந்து யுவந்திகாவின் பிரச்சனை அவனின் மூளையை சூடேற்றி இருக்க, இப்பொழுது ராதாவின் செயலைக் கண்டவனுக்கு யுவந்திகாவின் பேச்சு மூளையில் பின் தங்கிப் போனது!
இன்னும் அறுபது நொடிகள் இருக்க, நரேனுக்கு அழைப்பு வந்தது. ரைட் பாக்கட்டில் இருந்த மொபைலை எடுத்த போது அவனின் ஐ.டி. கார்ட் விழுந்துவிட அதை அவன் கவனிக்கவில்லை.
ஆனால், அவன் பின்னால் நின்று கொண்டிருந்த கண்ணபிரான் கண்களுக்கு அது தெளிவாக தெரிய, ' அச்சோ அந்த தம்பியோட கார்ட் கீழ விழுந்துடுச்சே' என்றவர் "தம்பி தம்பி...." என்று அழைக்க, மொபைலில் கவனம் வைத்திருந்த நரேந்திரனுக்கு அது காதில் கேட்கவில்லை.
சட்டென்று மகளிடம் சொன்ன கண்ணபிரான், அதை எடுத்து அவனிடம் கொடுக்குமாறு சொல்ல, "அப்பா.. யாரோ என்னவோ.. அவன் கவனம் இல்லாம இருக்கான். நாம என்ன பண்ண முடியும்? பாருங்க க்ரீன் சிக்னல் வேற போட போறாங்க" என்று ராதா தந்தையிடம் எரிச்சல் பட,
"அட.. இதுல என்ன இருக்கு.. சரி நீ இரு. நானே எடுத்து கொடுக்கிறேன்" என்று அவர் இறங்கிக் கொள்ளப் போக "ப்ச்.. சிக்னல் டைம்ல என்ன கூத்து அப்பா இது.." என்றவள் தந்தையை இறங்க விடாது தானே கீழே இறங்கி ஐ.டி. கார்டை எடுக்க எத்தனிக்க, அனைவரும் அவளையே பார்ப்பது போல் உணர்ந்தாள்!
அதுவும் இவ்வளவு ட்ராஃபிக்கில் தான் மட்டும் வண்டியை விட்டு இறங்கி இப்படி குரங்கு சேட்டை போல் செய்தால் பார்க்காமல் என்ன செய்வார்கள் என்று எரிச்சலாக எண்ணிக் கொண்டு ஐ.டி. கார்டை குனிந்து எடுக்க, அதற்குள் சிக்னலும் மாறி, நரேந்திரன் வண்டியை கிளப்பிக் கொண்டு போயே போய் இருந்தான்!!!
"அச்சோ....." என்று இவள் தலையில் கை வைத்து நின்று விட, அதற்குள் அத்தனை ஹாரன் ஒலிகள் ஒலிக்க ஆரம்பித்து இருந்தன! கண்ணபிரான் வண்டியை வேக வேகமாக ஸ்டார்ட் செய்ய, ஹாரன் ஒலியை தாங்காது காதை பொத்திக் கொண்டு தந்தையின் பின்னால் வந்து ஏறி அமர்ந்து கொண்டாள் ராதா.
இரண்டு நொடிகளில் எப்படி ஹாரனை அடித்து தள்ளுகிறார்கள் என்று ராதா பெருமூச்சு விட, கூடவே தந்தை மீதும் அந்த முகம் தெரியாத ஆசாமி மீதும் அத்தனை கடுப்பு வந்தது.
' லூசு மாக்கான்... ஐ.டி. கார்ட் விழுந்தது கூடவா தெரியாது. எப்படி கேர் லஸ்ஸா இருக்காங்க...' என்று பொருமியபடி அமர்ந்திருந்தாள்.
வண்டியை ஓரம் கட்டி நிறுத்திய தந்தையை இவள் முறைக்க, "எங்க.. அந்த தம்பிய ஆள காணோம்? இப்போ இந்த கார்டை எப்படி கொடுக்குறது?" என்றார் சுற்றும் முற்றும் பார்த்தபடி!
"அதுக்கு தான் அப்போவே சொன்னேன். பாருங்க... இப்ப. ட்ராஃபிக்ல வேற எல்லாரும் என்னையே பாத்த மாதிரி இருந்தது. போங்கப்பா" என்று ராதா எரிச்சல் கொள்ள,
"சரி.. விடு..." என்றவருக்கு மெடிக்களில் வேலை செய்யும் பையன் மருந்து ஆர்டர் விஷயமாக அழைக்க, இந்த விஷயத்தை மறந்து போனவராக மகளை வீட்டில் விட்டு விட்டு கடைக்கு சென்று விட்டார் கண்ணபிரான்.
வீட்டிற்குள் வரும் போதே மகளின் முகம் கடுகடுவென இருப்பதை கண்ட தெய்வானை, தையல் மிஷினை நிப்பாட்டி விட்டு தைத்து முடித்த பிளவுசை மடித்தபடி "என்னடி.. ஒரு மாதிரி இருக்க? தலை வலிக்குதா?" என்று கேட்டார்.
"ஹ்ம்ம்.. அம்மா..ஒரு டீ போட்டு கொடேன்" என்றாள் தலையை பிடித்துக் கொண்டபடி.
"ஹ்ம்ம்.. போட்டு வைக்கிறேன். நீ போய் கை கால் முகம் எல்லாம் கழுவிட்டு வா" என்றார்.
எழுந்து அறைக்குள் சென்றவள் தன்னுடைய துண்டை எடுத்துக் கொண்டு குளியலறை நோக்கி நகர்ந்தாள். மகளுக்கும் தனக்கும் சேர்த்தே டீ போட்டு எடுத்து வந்தவர்,
அவள் இன்னும் வராததை கண்டு டீயோடு கூடத்தில் அமர்ந்து விட, அப்போது தான் கவனித்தார் அவள் காலேஜ் பேகின் மீது ஒரு நீண்ட டேகுடன் இணைத்த ஐ.டி கார்ட் இருப்பதை!
"யாரோடதுடி இது?" என்று அருகே வந்தமர்ந்த மகளிடம் கேட்க, "அதை ஏன்மா கேக்குற!" என்றவள் ட்ராஃபிக்கில் நடந்த கூத்தை சொல்ல,
"உங்க அப்பா இருக்காரே... எவனோ எப்படியோ போனா.. விடுவாரா.. அதை விட்டுட்டு... நல்ல வேளை... ட்ராஃபிக்ல வேற எதுவும் ஆகாம இருந்ததே" என்றவர், "இதை என்ன பண்றது? யாருகிட்ட கொடுக்கிறது?" என்று கேட்டார்.
"ப்ச்.. யாரு என்னன்னே தெரியாம என்னமா பண்ண முடியும்? அவ்ளோ தான். எதோ ஐ.ட்டி. ஆளு தான்! ஆனா, கண்டாக்ட் நம்பர் ஐ. டி. கார்ட் பின்னாடி இருக்கு. கூப்பிட்டு வேணும்னா சொல்லலாம்" என்க, தெய்வானை வேண்டாம் என்று விட்டார்.
"அதெல்லாம் ஒன்னும் வேண்டாம்டி. நீ சொன்ன மாதிரி யாரோ என்னவோ? நமக்கு எதுக்கு ஆகாத வேலை! விடு!" என்றவர் "இதை தூக்கிப் போட்டுட்டு அடுத்த வேலைய பாரு...." என்று தையல் வேலையை தொடரச் சென்று விட்டார்.
அறைக்குள் வந்த ராதா "நரேந்திரன். B.E.
*** Tech solutions" என்று அந்த ஐ.டி. கார்டை கையில் வைத்து அதில் இருந்தவற்றை வாசித்து விட்டு அதில் பாஸ்போர்ட் சைஸ் அளவில் பிரிண்ட் செய்யப் பட்ட அவனின் முகத்தை பார்த்தவள்,
"எந்த மகராசனோ!! இப்படி ஐ.டி. கார்டை தொலச்சிடுச்சு" என்று எண்ணிக் கொண்டு
அதை இப்படியும் அப்படியும் திருப்பி திருப்பி பார்த்தவள் அதை தன் செல்ஃபில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த புத்தகத்தோடு போட்டு வைத்தாள்.