அதீனா ஜார்ஜ்
Moderator
அத்தியாயம் - 7
ஒரு முக்கியமான விஷயம் பேச வேண்டும் என்று அன்னை கூறிய போது என்னவென்று தெரியாமல் நரேந்திரன் கூடத்திற்கு செல்ல குடும்பம் மொத்தமும் அங்கே அமர்ந்தனர்.
"என்ன குமுதா??? எதோ முக்கியமான விஷயம் பேசணும்னு சொன்ன?" என்று மயில்வாகனம் பேச்சை தொடங்கி வைக்க, "எல்லாம் நல்ல விஷயம் தான்" என்று பெரிய மகனைப் பார்த்தவர்,
"நம்ம நரேனுக்கு இப்ப இருபத்தி அஞ்சு வயசு ஆகிடுச்சு. இது கல்யாணம் பண்ற வயசு தான். ஒன்னும் தப்பு சொல்றதுக்கு இல்ல. அதனால நம்ம நரேனுக்கு கல்யாணம் பேசலாமான்னு ஒரு யோசனை! அதான் உங்க எல்லாரையும் இங்க ஆஜர் ஆகச் சொன்னேன்"
குமுதாவின் பேச்சில் நரேன் அதிர்ந்து தான் போனான்! எதோ முக்கியமான விஷயம் என்று புரிந்து இருந்தது தான்.
ஆனால், அது தன் திருமண விஷயமாக இருக்கும் என்று எதிர் பார்க்கவில்லை! தந்தையின் முகத்தை பார்க்க, அவர் முகத்திலும் ஆச்சர்யம் கலந்த யோசனை பாவம் இருப்பதை கண்டவன் அவருக்கும் இது புது செய்தி என்று தெரிந்து கொண்டான்.
"என்ன இது... நா என்னத்த சொல்லிட்டன்னு இப்ப எல்லாரும் அமைதியா இருக்கீங்க?" என்று மகன்கள் இருவரையும் பார்த்து சொன்னவர், "என்னங்க நீங்க? நீங்களும் அமைதியா இருக்கீங்க? பதில் சொல்லுங்க.! நம்ம நரேனுக்கு வரன் பேசலாம் தானே?" என்று கேட்க, மயில்வாகனம் சிறிது யோசித்தார்.
ஆனால், நரேந்திரனுக்கு தான் உள்ளத்தில் பெரும் போராட்டம் எழுந்தது. இன்று தான் கோவிலில் அவளைப் பார்த்து தனக்கு அப்படி ஒரு உருவமில்லா உணர்ச்சி ஒன்று உருவாகி உள்ளது.
அதன் தாக்கத்தில் இருந்தே வெளி வர முடியவில்லை! இப்போது அன்னை சொன்ன விஷயம் மேலும் அவனுள் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியது!
'ஆண்டவா!!!!! என்ன இது சோதனை? இந்தப் பிறந்தநாள் தனக்கு என்ன இப்படி இன்பமும், குழப்பமுமாக ஆரம்பித்து உள்ளது' என்று எண்ணியவன் தன் அன்னையிடம் என்ன கூறுவதென்று தெரியாமல் அமைதியை தொடர்ந்து அமர்ந்து விட்டான்.
மயில்வாகனம் சிறிது நேரம் யோசித்து விட்டு பின்னர், "குமுதா... நம்ம நரேனுக்கு வரன் பேசுறது தப்பில்லை.. ஆனா.. இருபத்து அஞ்சு வயசு.. எனக்கு ரொம்ப கம்மியா தெரியுது! இன்னும் ஒன்னு ரெண்டு வருஷம் போகட்டுமே?"
"என்னங்க கம்மி வயசு? இருபத்த்த்து அஞ்சாச்சு" என்று குமுதா முகத்தை சுருக்கி சிறு பிள்ளை போல் சொல்ல, "இந்த வயசுல கல்யாணம் பண்ணலாம் தான் குமுதா. அதுவும் நம்ம நரேனுக்கு தாராளமா பண்ணலாம். நம்ம பையன்றதுக்காக நான் பெருமை அடிக்கல! உண்மையாவே அவன் சொக்கத் தங்கம்! ரொம்ப பொறுப்பானவன் தான்!" என்று தெளிவாகக் கூறியவர் சற்று நிறுத்தி,
"இருந்தாலும் இன்னும் ஒன்னு ரெண்டு வருஷம் போகட்டும்னு என் மனசுக்கு படுது குமுதா!" என்றார் தன் யோசனையை!
குமுதாவும் யோசனையாக பெரிய மகனின் முகத்தை பார்க்க, அவன் முகம் தீவிரமாக இருக்க, எதையோ பலமாக யோசித்துக் கொண்டிருக்கிறான் என்று கட்டியம் கூறியது!
மயில்வாகனம் மனைவியின் முகத்தை பார்த்து "என்ன குமுதா திடீர்னு நம்ம பையன் கல்யாணம் விஷயம் பத்தி பேசுற? யாரும் எதுவும் கேட்டாங்களா?" என்று கணக்காய் கேட்க, குமுதா சட்டென்று அமைதி ஆனார்!
நிச்சயம் மஞ்சுளா வந்து பேசி விட்டுச் சென்றதை பற்றி கூறினால் அனைவரும் அதை நல்லவிதமாக எடுத்துக் கொள்ள மாட்டார்கள் என்று குமுதா யோசிக்க, அந்த சில நொடி யோசனையே சொல்லாமல் சொல்லிற்று, யாரோ கேட்டு இருக்கிறார்கள் என!
"சொல்லு குமுதா? யாரும் கேட்டாங்களா?" என மயில்வாகனம் மனைவியிடம் மீண்டும் கேட்க,
"ஹான்... அது தெரிஞ்சவங்க ஒருத்தர் கேட்டாங்கங்க. அதான்.... நானும் யோசிச்சேன்!" என்றார் பாதி உண்மையை மட்டும்! மீதி உண்மையை கூற மனது தடுத்தது!
"கேட்டாங்க சரி.. நீ என்ன சொன்ன?"
"நான் என்னங்க சொல்ல போறேன்? பையனுக்கு வயசு கம்மின்னு தான் யோசிச்சேன்! ஆனா, எனக்கும் நரேனுக்கு இப்ப பண்ணிடுறது நல்லதுன்னு பட்டது அதான்!" என்றார் தன் எண்ணத்தை.
அங்கே மீண்டும் அமைதி நிலவ, நரேந்திரன் ஒரு முடிவையும் எடுக்க முடியாமல் தட்டுத்தடுமாறினான். இன்று கோவில் சன்னதியில் பார்த்து, உள்ளத்தில் உறைந்த அந்த அழகு முகம் வேறு அகத்தில் மின்னி மின்னி மறைந்து கொண்டிருக்க, தலை வெடிக்காத குறை தான்!
"நரே... நீ என்னபா சொல்ற?" என்று மயில்வாகனம் கேட்க, "அப்பா... நா.. நான் என்ன சொல்ல?" என்றான் பெற்றவர்களின் பேச்சில் தலையிட முடியாமல்!
"நீ தான் சொல்லணும் நரே! ஏன்னா உன்னோட முடிவு இதுல ரொம்ப முக்கியம்! நாங்க உனக்கு பொண்ணு பாத்தாலும் உன் விருப்பம் தேவை! இல்ல... எங்களுக்கு நீ வேல வைக்காம நீயே பொண்ணு பாத்து வச்சிருந்தேன்னா ரொம்ப சந்தோஷம்" என்று வெகு தீவிரமாக தன் பேச்சை ஆரம்பித்தவர் மிகவும் குறும்பாக முடிக்க,
"ப்பா....." என்று நரேன் திகைத்து தான் போனான்!!!!!!
"என்னடா 'ப்பா'...? நான் உண்மையா தான் சொன்னேன்!" என்றார் மீண்டும் குறும்புடன்.
நரேனுக்கு குப்பென்று வியர்த்தே போனது!!! எங்கே தந்தை தான் கோவிலில் அந்தப் பெயர் தெரியாத பெண்ணை கண்டு தன்னிலை தடுமாறிப் போனது தெரிந்து போனதோ என்று ஒரு நிமிடம் திகைத்தவன் அடுத்த நொடி மேலும் திகைத்தான்!
அப்படி என்றால்.....
தன் மனது அவளை தான் வாழ்நாள் துணையாக நாடுகிறதா? இப்போது தந்தை கேட்டதற்கு எனது மனதில் அவள் முகம் ஏன் மின்னி மறைய வேண்டும்? இதென்ன புது விதமான அவஸ்த்தை! அதுவும் புரியாத அவஸ்த்தையாக அல்லவா உள்ளது!
"நரே........"
"ஹான்.... சொல்லுங்க ப்பா..."
"நா என்னடா சொல்றதுக்கு இருக்கு? நீ தான் சொல்லணும்! அதுவும் நீ இப்படி யோசிக்கறதை பாத்தா... என்னவோ ஒன்னு இருக்கும் போலயே?" என்று மயில்வாகனம் மகனை குறுகுறுவென பார்க்க,
நவீனும் இது தான் சாக்கென்று "ண்ணா... யாரையும் லவ் பண்றியா?" என்று மிக ஓப்பனாகவே கேட்டு விட, "டேய்......" என்று தம்பியின் தலையில் நங்கென குட்டு வைத்தான் நரேந்திரன்.
"நரே.. யாரையும் விரும்புறியா ராஜா?" என்று குமுதாவும் மகனின் கன்னத்தை தடவி கேட்க, "ம்மா...!!!! நீங்களுமா... ப்ளீஸ் ம்மா!!!!" என்று கெஞ்சியபடி சிரித்து விட்டான் நரேந்திரன்.
காதல் என்று வந்தால் பல குடும்பங்களில் எதிர்ப்பு தான் முதலில் வரும்! ஆனால், தன் குடும்பத்தில் எதிர்ப்பார்ப்பு வந்திருப்பதை கண்டு அவனுக்கு சற்று சிரிப்பு வந்தது.
கூடவே, தன் குடும்பத்தை நினைத்து பெருமிதமாகவும் இருந்தது!
"சொல்லு நரே.. உன் ஆசைக்கு இங்க தடை இல்லை. நிச்சயம் நீ ஒரு பொண்ணை விரும்பி இருந்தா அது நம்ம குடும்ப மகாலக்ஷ்மியா தான் இருக்கும்! எனக்கு தெரியாதா என் பையன் செலக்ஷன் பத்தி" என்று குமுதா மகனின் முகத்தை திருஷ்டி கழிக்க,
நவீன் பலமாக இருந்தது கைத்தட்டி "அட.... அட... அட... வாட் அ மம்மி..... தாய்க்குலமே... நீங்க எங்கேயோ போய்ட்டீங்க! அவன் அவன் லவ் பண்ணா வீட்டுல இருந்து முதல் பாம் வெடிக்கிறதே மம்மி சைட்ல இருந்து தான் வெடிக்கும்!..",
"ஆனா... நம்ம ஃபேமிலி டோட்ட்ட்டல் டிப்பரன்ட்ட்!!!" என்று வடிவேலு பாணியில் கூறியவன் தாயிடமும் அண்ணனிடமும் இரண்டு செல்ல அடிகளை பெற்றுக் கொண்டான்!
"சொல்லு நரேன்....?" என்று குமுதா மகனை ஊக்குவிக்க, மெய்யாகவே என்ன கூறுவதென்று தெரியாமல் முழித்தான் நரேந்திரன்.
இன்னும் தன் மனதிலேயே ஒரு தெளிவு இல்லாமல் இருக்க.. எதைக் கூறுவது? என்று ஓரிரண்டு நொடிகள் யோசித்தவன் பின் தெளிவாக "இல்லமா.. எனக்கு இப்ப கல்யாணம் பண்ணிக்க விருப்பம் இல்ல. அப்பா சொன்ன மாதிரி இன்னும் டூ யியர்ஸ் எனக்கு டைம் கொடுங்க. அப்புறம் பாக்கலாம். எனக்கும் யோசிக்க நேரம் வேணும்" என்றான்.
அவனின் பதிலில் குமுதா முகம் ஒரு நிமிடம் சுடர் இழந்தாலும் தன் மகனின் விருப்பத்தையும் குடும்பத்தின் விருப்பத்தையும் கருத்தில் கொண்டு அவர்களின் இஷ்டப்படியே விட்டு விட்டார்.
*******************
அன்றைய விடியலே அத்தனை எரிச்சலை கொடுத்தது ராதாவிற்கு! அதுவும் நேற்று இரவு முழுவதும் கண்ணபிரான் அவளை கன்னாபின்னாவென்று திட்டி இருந்தார்!
நேற்று இரவு நடந்ததை மீண்டுமொருமுறை நினைத்துப் பார்க்கவே ராதாவினால் முடியவில்லை! ஆனால், நினைத்தாள்!
நேற்று இரவு உணவு முடிந்த பின்னர் ராதா அறைக்குள் செல்லப் போக, "நில்லு ராதா" என்று மகளை தடுத்து நிறுத்தியிருந்தார் கண்ணபிரான்.
"சொல்லுங்க ப்பா" என்றபடி அவரின் முன்னாள் வந்து நின்றாள் பெண், அவர் என்ன கூறப் போகிறார் என்று அறிந்திருந்தவளாக. அவளுக்குத் தெரியாதா தன் தந்தை குறித்து?
ஆகையினால், அவர் கூறப் போகும் விஷயத்திற்கு முன்னமே தன்னுடைய பதிலை தேர்ந்தெடுத்து வைத்திருந்தாள். "நாளைக்கு உன் பெரியப்பா பொண்ணு ஸ்வேதாவுக்கு கல்யாணம்! நாம எல்லாரும் குடும்பமா போய் வரணும். நாளைக்கு காலையில கிளம்பி ரெடியா இரு" என்றார் கட்டளை போலவே!
கண்ணபிரானின் கட்டளையை கண்டிராதவளா இவள்?
"இல்லப்பா. எனக்கு காலேஜ் இருக்கு நாளைக்கு! அதுவும் நா அரியர் வச்ச எக்சாம்க்கு ரீ- அட்டம்ப்ட் நாளைக்கு தான். அதனால என்னால வர முடியாது ப்பா. நீங்களும் அம்மாவும் போய்ட்டு வாங்க" என்று அவரைப் போலவே முடிவை மட்டும் முன்னிறுத்தி பதில் அளித்தவள்,
அன்னையின் புறம் திரும்பி "அம்மா எனக்கு நாளைக்கு சாப்பாடு வேண்டாம். கேன்டீன்ல வாங்கிக்றேன்" என்றாள் கூடுதல் பதிலின் இணைப்பாக!
மகளின் பதிலில் பெற்றவர்கள் அயர்ந்து போய் பார்த்தாலும், கண்ணபிரான் அவளுக்கே தந்தை ஆகிற்றே! அவளின் பதிலில் முகம் கடுகடுவென மாறியிருந்த போதிலும் அதை வெளிக் காட்டிக் கொள்ளவில்லை அவர்!
ஏனென்றால், அந்த அரியர்களை மகள் க்ளியர் செய்ய வேண்டும் என்று முதலும் முடிவுமாக நினைப்பது அவர் தானே! ஆனால், இப்படியே விட்டால் மகள் அவள் போக்கிற்கு சென்று ஆடுவாள் என்று புரிந்து கொண்டு "பரவாயில்ல லீவ் போட்டு வா" என்றார் சற்றும் அலட்டிக் கொள்ளாமல்!
"அப்பா..." என்று தந்தையை திகைப்பாய் அழைத்தவளிடம் "என்ன காரணமும் சொல்ல வேண்டாம் ராதா. அரியர் பரிச்சை தானே? அடுத்தவாட்டி கூட எழுதிக்கலாம். நாளைக்கு கிளம்பி எங்களோட வா" என்றுவிட்டு அவர் எழுந்து கொள்ள,
"நான் வர மாட்டேன் ப்பா. என்னால முடியாது" என்று ஸ்திரமாய் மறுத்தாள் ராதா. கண்ணபிரானுக்கு கோபம் சுள்ளென்று வந்தது.
"ஏன்?" என்றார் ஒற்றை வார்த்தையாக. அவ்வார்த்தையில் மறைந்திருக்கும் சூடு ராதாவை நடுங்கச் செய்தாலும் வெளியே திடமாக மறுத்தாள்.
"எனக்கு வர இஷ்டமில்லை ப்பா. அங்க வந்தா உங்க அண்ணன் குடும்பம் எதாவது பேசுவாங்க. எதோ அவுங்க கிட்ட தான் பணம் இருக்க மாதிரி நடந்துக்குவாங்க. அவுங்க பேச, நான் பேசன்னு எதாவது ஏடாகூடமாகிடும். அதுக்கு தான் வரலேன்னு சொல்றேன். இது உங்களுக்கும் புரியும்" என்றாள் 'நீங்கள் என்னைப் பற்றி அறிந்தவர் தானே' என்னும் செய்தியை கண்ணில் தேக்கி!
கண்ணபிரானும் மகளைப் பற்றியும் அவளின் துடுக்கான பேச்சைப் பற்றியும் அறிந்திருப்பவர் தான்! அப்படி அறிந்திருந்ததால் தான் அவளை தங்களோடு அழைக்கிறார்.
ஆம்!
அறிந்து தான் அழைக்கிறார். முன்பென்றால் அவளை வீட்டில் விட்டுவிட்டு செல்லவே எண்ணி இருப்பார். ஆனால், இப்போது அவளும் நாலு வெளி இடங்களுக்கு சென்றால் தான் பொறுப்பு வரும். அவளின் வாயும் அடங்கும். கூடவே, தனக்கும் திருமண வயதை தொட்டு விடப் போகும் பருவத்தில் ஒரு பெண் இருக்கிறாளென ஊர் அறிந்து கொள்ள வேண்டும்!
அவளை இப்படியே விட்டால், பிடி கொடுக்காமல் போய் விடுவாள் என்று பயந்து போய் தான் மகளையும் அழைத்து செல்லலாம் என்று முடிவு செய்திருந்தார் கண்ணபிரான்.
அதற்கான மிக முக்கிய காரணம், புகுந்த வீட்டிலும் சென்று இப்படி பேசித் திரிந்தாள் என்றால், என்னவாகும்? பிறந்த வீடு ஏற்றுக் கொள்ளும் பெண்களின் குணங்களை எல்லாம் புகுந்த வீடு ஏற்றுக் கொள்ளுமா என்ன? நிச்சயம் அவரின் பதில் அதற்கு இல்லை தான்!
புகுந்த வீட்டிலும் மகள் இப்படி வாயாடினால்???? அதனால் பின் விளைவுகள் மோசமாக வந்து விட்டால்??? நினைக்கவே பதறியது மனிதருக்கு! அவருக்கு மூன்று மகள்களாயினும் என்றுமே அதற்காக வருத்தம் கொண்டதில்லை.
முதல் இரண்டு மகள்களும் மிகவும் பொறுப்பானவர்கள். அமைதி குணம் கூட. ஆனால், ராதாவை நினைத்து இப்போதெல்லாம் அடிக்கடி வருத்தம் வருகிறது மனதில்! என்ன தான் அவளை அடித்து, கடிந்து கொண்டு, கோபத்தில் அவளிடம் காய்ந்தாலும் அவரின் மகள் ஆகிற்றே!
அவளையும் மூத்த பிள்ளைகளை போல ஓர் நல்ல இடத்தில் கட்டிக் கொடுத்து விட வேண்டும் என்கிற எண்ணம் அவரின் மனதில் சிறிது நாட்களாக தோன்றிக் கொண்டே இருக்கிறது.
அவளின் பதிலை கேட்டு நிதானமாக "பரவாயில்ல. நீ நாளைக்கு கல்யாணத்துக்கு வரணும். விஷேச வீட்டுக்கு வந்து பேசாமயிருக்க கத்துக்க!" என்றவர்,மகள் எதோ கோபமாக வாய் திறப்பதை கண்டு அவளை கையமர்த்தி தடுத்து,
"எதுவும் எதிர்த்து பேசாத ராதா. இந்த பழக்கத்தை முதல்ல மாத்த பழகு! நா சொன்ன மாதிரி நீ நாளைக்கு கிளம்பி வரணும். வந்து அங்க அமைதியா விஷேஷத்தை முடிச்சு கொடுத்துட்டு நாம வரணும். என்ன தான் இருந்தாலும் நான் அவருக்கு தம்பி. அதை மாத்த முடியாது. அவரு எப்படி வேணும்னாலும் இருந்துட்டு போகட்டும். எனக்கு அதைப் பத்தி கவலை இல்ல. நா போய் என்னோட கடமைய என்னோட குடும்பத்தோட செய்யணும்னு நினைக்கிறேன்" என்று நீளமாக பேசியவர்,
"என் பேச்சை நாளைக்கு மீறினா என்னோட பொல்லாத கோபத்துக்கு நீ ஆளாகிடுவ ராதா! நியாபகம் இருக்கட்டும்!" என்று அவளை எச்சரித்து விட்டே சென்றார். புயல் வந்து ஓய்ந்தது போல் இருந்தது வீடே!
தந்தையின் பேச்சை கேட்டு சமைந்து போய் நின்றிருக்கும் மகளிடம் "ராதா. போய்ட்டு வந்திடுவோம்டி. தேவை இல்லாம உன் அப்பா கிட்ட அடி வாங்காத. நாமவாட்டுக்கு போய்ட்டு சட்டுன்னு தாலி கட்டி முடிச்சதும் வந்திடுவோம்" என்றார் சமாதானமாக தெய்வானை.
தாயை நோக்கி ஒரு உணர்வற்ற பார்வையை வீசியவள் ஒன்றும் பதில் சொல்லாமல் அறைக்குள் தஞ்சம் அடைந்துவிட்டாள். இதோ இப்போது அதை எல்லாம் நினைத்து பெரும் எரிச்சல் பொங்க எழுந்தவள் வெளியே வர, தெய்வானை குளித்து தயாராகி இருந்தார். திருமணத்திற்கு செல்ல!
"ராதா. நேரம் ஆச்சுடி. எட்டு மணிக்கு முகூர்த்தம். அதுக்குள்ள போகனும். டக்குன்னு போய் குளிச்சிட்டு வா" என்றார் பரபரப்பாக கிச்சனில் டீயை கொதிக்கவிட்டபடி.
"அம்மா... நா வந்தே ஆகணுமா?" என்று காலையில் எழுந்து வந்ததும் வராததுமாக இப்படிக் கேட்டவளை ஆன மட்டுக்கும் முறைத்தவர், "உங்க அப்பாகிட்ட பேசிக்க" என்று விட்டு டீயை வடிகட்டினார்.
"ப்ச்... போம்மா... உன்னோட புருஷன்கிட்ட நீ தான் பேசணும்" என்று அதிருப்தியும் எரிச்சலுமாக மொழிந்தவளால் தந்தையின் சொல்லை மீற முயன்ற துணிவு இல்லாமல் தனது பெரியப்பா
மகளின் திருமணத்திற்கு கிளம்பி இருந்தாள்! 'அங்கே சென்று எந்த கலாட்டாவும் செய்து விடக் கூடாது கடவுளே' என்ற வேண்டுதலுடன்!