எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

பூந்தென்றலாய்.. பூஞ்சாரலாய்..9

அத்தியாயம் - 9

காசிநாதன் கடைசி மகளின் திருமணத்துக்கு சென்று வந்ததில் இருந்து நரேந்திரனுக்கு ராதாவின் நினைப்பு அதிகமாகி இருந்தது.

அதுவும் இத்தனை நாட்கள் பெயர் அறியாமல் அவளை கண்டிருந்தவன், இப்போது பெயருடன் அவளை நினைத்துக் கொண்டிருந்தான்.

அவனின் நெஞ்சம் "ராதா ராதா.." என்று அவளின் பெயரையே கூச்சலிட "பைத்தியம் ஆக்கிடுவா போல" என்று தன்னைத் தானே எண்ணி சிரித்துக் கொண்டான்.

அவளைப் பிடித்தது அவனுக்கே ஆச்சர்யமாக தான் இருந்தது. சிக்னலில் அவளின் செயலை முதல் முறையாக கண்ட போதே அவளை புன்னகையுடன் விளையாட்டாய் ரசித்திருந்தான்.

அவள் தந்தையிடம் அவள் வாயாடிய போது அப்போதே வாயாடி என்று பெயரும் சூட்டி இருந்தான். ஆனால், நேற்று திருமணத்தில் அவளின் வாயாடலை கண்ட போது அதிர்ந்து அசந்தே போனான் என்று தான் சொல்ல வேண்டும்!

இவள் மற்ற பெண்கள் போல் வளவளவென வாயாடும் ரகம் அல்ல என்று நேற்று தெக்கத் தெளிவாக புரிந்து போனது அவனுக்கு!

"வாயாடி தான்! போல்ட் அண்ட் பிரேவ் வாயாடி!" என்று சற்று கர்வமாக கூட சொல்லிக் கொண்டவன்,

"எதிர எவனாவது ஒரு சொல் தப்பா சொல்லிட்டா அவன் வாய் காலி தான் போல" என்றும் எண்ணிக் கொண்டான். அவனுக்கு அவளின் நேர்முக பேச்சு வெகுவாக பிடித்தே விட்டது. அது தான் உண்மை!

"கரெக்ட்டா பேசினா தான். என்ன அவுங்க அப்பா தான் டென்ஷன் ஆகிட்டார்" என்று கண்ணாபிரானை எண்ணி வருத்தம் கொண்டவன், "அவ அப்பாவால அவளை சமாளிக்க முடியாத இயலாமை நேத்து அவரு கிட்ட தெரிஞ்சது... ஹ்ம்ம்.. பெத்த மனுஷன்.. அவராலேயே முடியல.. கல்யாணம் பண்ற ஐடியால இருக்க நீ என்னடா நரேன் பண்ண போற?" என்று அவனை அவனே கேட்டுக் கொள்ள,

"வாயாடினா நாமளும் அதுக்கு ஏத்த மாதிரி லெக்சர் அடிக்க வேண்டியது தான்" என்று அவனை அவனே கலாய்த்துக் கொண்டான்!

ஆக, நரேந்திரன் ராதாவை தான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்கிற உறுதியை அன்று ஏற்று இருந்தான்.

எப்படியும் வீட்டில் அவன் விருப்பத்திற்கு தடை இருக்கப் போவதில்லை தான். அதற்கு அவனின் பிறந்தநாள் அன்று திருமணம் குறித்த பேச்சு வார்த்தை நடந்ததே அதற்கு பெரும் சாட்சி.

ஆனால், தனக்குப் பிடித்தது போல் தன் குடும்பத்திற்கும் அவளைப் பிடிக்க வேண்டும் என்று வேண்டிக் கொண்டான் நரேந்திரன்.

இதயத்தில் ராதாவே ஒய்யாரமாய் வீற்றிருக்க, அன்றைய தினம் மிக உற்சாகத்துடன் அலுவலகம் சென்றான் நரேந்திரன்.

அசோக்கும் அவனின் முகம் கண்டு "என்ன மேன்? குஷியா இருக்க மாதிரி தெரியுது?" என்று கேட்க,

"ஜஸ்ட் ஹேப்பி மேன்" என்று மட்டும் அவனிடம் சொன்னவன் அன்றைய வேலைகளையும் அதே உற்சாகத்துடன் துவங்கினான்.

மதிய உணவு நேரம் வரும் போது அசோக்கிடம் ராதாவை பற்றி சொல்லலாம் என்று எண்ணி இருக்க, அவனின் எண்ணத்திற்கு தடா போட்டு விட்டது யுவந்திகாவின் வருகை!

அன்று போல் இன்றும் அவர்கள் அமர்ந்திருக்கும் டேபிலில் வந்து அமர்ந்து கொண்டு "நரேன்.. மே ஐ ஜாயின் வித் யூ?" என்று கேட்டாள் நரேனில் அழுத்தம் கொடுத்து.

அதிலேயே அசோக்கிற்கு புரிந்து தான் இந்த இடத்தை விட்டு காலி செய்ய வேண்டும் என்று! அவன் எழ ஆயத்தமாக, "இரு அசோக்.. நீ சாப்பிடு. நான் மேடம் கூட போய் பேசி சால்வ் பண்ணிட்டு வந்துடுறேன்" என்று நரேன் எழுந்து கொண்டான்.

அசோக் அவனை விழி விரித்து பார்க்க, யுவந்திகாவும் அவனை ஆச்சர்யமாக தான் பார்த்தாள்.

"நீ போய் பேசிட்டு வா நரேன்.. நான் வெயிட் பண்றேன்" என்று அசோக் சொல்ல, சரி என்று அவனிடம் தலை அசைத்தவன்,

"வாங்க மேம்!" என்று இன்னொரு டேபிலில் சென்று அமர்ந்து கொண்டான்.

யுவந்திகாவும் ஒரு முடிவோடு அவன் எதிரே சென்று அமர்ந்தாள்.

சுற்றி இருந்தவர்களின் பார்வை இவர்கள் மேல் படிந்தாலும் நரேனிற்கு இன்று அதைப் பற்றி எந்த ஒரு கவலையும் இருக்கவில்லை!

பேசி தீர்த்து விட வேண்டும் இல்லை என்றால் இவளின் நச்சரிப்பும் குடைச்சலும் தாங்காது என்று தான் தனியே எழுந்து வந்து விட்டிருந்தான்!

"சொல்லுங்க மேடம்!"

"நான் சொல்ல வேண்டியது தான் அன்னைக்கே சொல்லிட்டேன் நரேன்! இனி நீ தான் பதில் சொல்லணும்"

"நானும் அன்னைக்கே.. அந்த செக்கண்டே என்னோட பதிலை சொல்லிட்டதா நியாபகம்"

"நரேன்.. அன்னைக்கு பிராக்ஷன் ஆஃப் செக்கண்ட்ல யோசிக்காம பதில் சொல்லிட்ட? அதெப்படி நான் அக்செப்ட் பண்ணிக்க முடியும்? அதான் நீ யோசிச்சு சொல்லட்டும்னு இத்தனை நாள் டைம் எடுத்து எதுவும் கேட்காம இருந்தேன். இப்ப உன் பதிலை யோசிச்சு தெளிவா சொல்லு"

அன்றே தெளிவாய்.. தெக்கத் தெளிவாய் சொல்லி விட்டான்! இனியும் இவளுக்கு தெளிவாய் சொல்ல வேண்டுமா என்று கடுப்பாகி விட்டது நரேந்திரனுக்கு!

"அன்னைக்கும் தெளிவா தான் மேம் சொன்னேன். உங்களுக்கு அது ப்ராக்ஷன் ஆஃப் செக்கண்ட்டா இருக்கலாம்! ஆனா எனக்கு அந்த ப்ராக்ஷன் ஆஃப் செக்கண்ட்ல தெளிவான முடிவை எடுக்கக் கூடிய அளவுக்கான பிரபோசலை தான் நீங்க என் முன்னாடி வச்சீங்க" என்று அழுத்தமாக சொன்னவன்,

"இப்பையும் என்னோட பதில் அதே தான் மேம். எந்த மாற்றமும் இல்லை! இனி நீங்க future ல எத்தனை முறை வந்து கேட்டாலும் இதே தான என் பதிலா இருக்கும்னு இப்பையே முன் பதிவு பண்ணிக்கிறன்" என்றவன்,

மேலும், "ஏன்னா நெக்ஸ்ட் நீங்க இதே மாதிரி வந்து என்கிட்ட "யோசிச்சு சொல்லுன்னு சொல்லிட கூடாது பாருங்க" என்று சொல்லியே விட, யுவந்திகா ஆத்திரமாக அவனை முறைத்தாள்.

"நீ என்னை இன்சல்ட் பண்ற நரேன்" என்றாள் கோபமாக.

"இல்ல மேடம்! உங்களோட கேள்விக்கு உங்களுக்கு புரியிற மாதிரி பதில் சொன்னேன்" என்றான் கட்ஸுடன்!

"நரேன்.. நான் கேட்டதுல என்ன தப்பு? எனக்கொண்ணும் தப்பா தெரியல" என்றாள் அலட்சியமாக.

"நீங்க தப்பா கேட்டீங்கன்னு நான் எங்க சொன்னேன் மேம்? லவ் பிரப்போஸ் பண்றது உங்க உரிமை! அதே மாதிரி லிவ் இன் ல இருக்கலாமான்னு கேட்டது உங்க விருப்பம்! ஏஜ் ஃபேக்டர் பெருசா கண்சிடர் பண்ணாதது உங்களோட தாட்! ஆனா, இதெல்லாம் எனக்கும் இருக்கணும்னு நீங்க எப்படி எதிர் பாக்குறீங்க. எனக்கு உங்க பிரபோசலை அக்ஸப்ட் பண்ணுகிற ஐடியா எப்பையும் இல்ல! அதுவும் லிவின்... சுத்தமா வாய்ப்பே இல்ல! அண்ட் நீங்க பெருசா கன்சிடர் பண்ணாத ஏஜ் ஃபேக்டர் எனக்கு மிகப் பெரிய வேறுபாடா தெரியுது" என்று மீண்டும் ஒரு முறை அவளுக்கு எடுத்து விளக்கியவன்,

"பிளீஸ் மேம்.. இன்னொரு முறை இப்படி என்னை எக்ஸ்பிளைன் பண்ண வைக்காதீங்க" என்று விட்டு அவளின் பதிலிற்கும் கூட காத்திராமல் எழுந்து சென்று விட்டான்.

செல்லும் அவனை ஆத்திரமாக பார்த்த யுவந்திகா "உன்னை எக்ஸ்பிளைன் பண்ண வைக்க கூடாதா? என் டீம் தான நீ!!! இரு.. நெக்ஸ்ட் வீக் பிராஜெக்ட் டெலிவரி மீட்டிங்ல உன்னை எப்படி எக்ஸ்பிளைன் பண்ண வைக்கிறேன்னு" என்று வன்மத்துடன் சொல்லிக் கொண்டவள், சுற்றி இருந்த ஒருசிலர் இவளை நக்கலாக நமட்டு சிரிப்புடன் பார்ப்பதை உணர்ந்து,

"வாட்.. லுக் அட் யுவர் ஃபுட்.. இடியட்ஸ்" என்று கத்தி விட்டு அங்கிருந்து எழுந்து சென்று விட்டாள். அவள் கத்திய கத்தல் நரேந்திரனுக்கும் கேட்டது தான். கேட்டவன் கண்டு கொள்ளாமல் உண்ண வந்து விட்டான்.

"என்னடா.. இன்னுமா இந்த லூசு உன்னை விடல" என்று அசோக் கேட்க,

"விடாது கருப்பு தான்" என்ற நரேன்... "இப்ப எதுக்கும் பயப்படாம சொல்லிட்டு வந்துட்டேன். இனியாவது இதை பத்தி பேசாம இருந்தா நல்லா இருக்கும்" என்றவன்,

"நிச்சயம் இனி என்னை ஒன்னு ஒன்னுக்கும் வச்சு செய்வாங்க" என்றான் நரேந்திரன்.

"விடுடா.. இன்னும் சிக்ஸ் மந்த்ஸ்குள்ள நமக்கு சீனியர் டெவலப்பர் போஸ்ட் வந்திடும். அண்ட் நெக்ஸ்ட் மந்த் டீம் லீடும் நமக்கு மாற போறாங்க தானே! இந்த யுவந்திக்கா வேற டீம் போய் அங்க இருக்க எவனையாவது புடிச்சு படுத்தட்டும்" என்று அசோக் சொல்ல, நரேந்திரன் அமைதியாய் உணவினை உண்ண ஆரம்பித்தான்.

எப்படியும் இனி யுவந்திகா சும்மா இருக்கப் போவதில்லை என்று மட்டும் விளங்கியது அவனுக்கு!

அன்றைய நாளின் உற்சாகமே யுவந்திகாவால் வடிந்து விட "டிஸ்கஸ்டிங் கேரக்டர்" என்று எரிச்சலாக சொல்லிக் கொண்டான் நரேன்!

இல்லம் வந்து அன்னையின் மடியில் படுத்து கண் மூடும் வரையில் அந்த எரிச்சல் அவனை விட்டு நீங்கவில்லை.

"என்னடா நரேன்.. ஒரு மாதிரி இருக்க?" என்று குமுதா மகனின் முகத்தில் தெரிந்த மாற்றத்தை கண்டு கேட்க, "கொஞ்சம் டீம் லீடால பிரச்சனை அம்மா" என்று மட்டும் கூறினான்.

அவனின் தலையை கோதியபடி "பிரச்சனை முடிஞ்சது தானே? இல்ல இன்னும் இருக்கா?" என்று குமுதா கேட்க,

"இருக்கு தான்மா. இல்லைன்னு சொல்ல முடியாது" என்றவன் "ஸால்வ் பண்ணிடுவேன். கவல படாதீங்க" என்றான்.

"நான் எதுக்கு கவல பட போறேன். என் பையன் பொறுப்பானவன். எப்படியும் அவனுக்கு எந்த பிரச்சனை வந்தாலும் அதை சரியா கையாள தெரியும்" என்று மகனை பெருமையாய் சொன்னவர்,

"ஆனா நீ இப்படி சோர்ந்து போய் இருக்கதை தான் பாக்க முடியல நரேன்" என்றார் வருத்தமாய்.

"ஹ்ம்ம்.. கொஞ்சம் டென்ஷன்மா. அதான் விடுங்க" என்றான் அவரிடம்.

நவீன் வந்ததும் அன்னையின் மடியில் அண்ணன் உறங்குவதை கண்டு "இவனை முதல்ல யாரு தலைலயாவது கட்டி வைங்கமா. கல்யாணம் பண்ணா தான் உங்க மடிய எனக்கு விட்டுக் கொடுப்பான் போல" என்று அன்னை மடிக்காக அண்ணனுடன் போர் தொடுக்க,

"பொண்டாட்டி வந்தாலும் அம்மா மடிய விட்டுத் தர மாட்டேன்டா நவீன்" என்று தம்பியிடம் வம்பிழுத்து வாய் அடித்தவனுக்கு, பொண்டாட்டி என்று சொன்னதும் ராதாவின் நினைவு தான் வந்தது.

அவளின் நினைவு வந்ததும் இருந்த கொஞ்ச நஞ்ச எரிச்சலும் போய் விட, அவள் மடியில் தான் படுத்திருப்பதை போல் கற்பனை செய்து சிரித்துக் கொண்டான்.

அந்த நாள் எப்போது வருமோ என்னும் சிறு ஏக்கமும் நரேந்திரனுக்கு வந்து விட, நாட்கள் அந்த ஏக்கத்தில் பறக்கத் தயாராகி இருந்தன!

**********************

அன்றைய தினம் கல்லூரியில் தன் தோழி திவ்யாவிடம் நேற்று திருமண விழாவில் நடந்த கூத்தை எல்லாம் சொல்லி பெரு மூச்சை விட்டாள் ராதா.

அவள் சொன்னதை எல்லாம் கேட்ட திவ்யா "நீ என் ராதா டென்ஷன் எடுத்துக்குற விடு" என்று தோழியை கூலாக்க முயல,

அவளோ "எப்படி திவ்யா கூலா இருக்க முடியும்? இதுக்கு தான் நான் கல்யாணத்துக்கு வரலைன்னு எங்க அப்பா கிட்ட சொன்னேன். அரியர் எக்ஸாம் இருக்குன்னு சொல்லி பாத்துட்டேன். எதுக்குமே கேக்கல! பிடிவாதம் பிடிச்சு என்ன கூட்டிட்டு போனாரு. அங்க போய் அந்த மாமாவை திட்டித் தீர்த்து நேத்து நைட்டு எங்க அப்பா கிட்ட சக்கையா பேச்சு வாங்கினது தான் மிச்சம்" என்று தலையில் அடித்துக் கொண்டவள்,

"ஒழுங்கா நேத்து காலேஜ் வந்து இருந்தா அரியர் எக்ஸாம் ஆச்சு எழுதி இருந்திருப்பேன். இப்ப பாரு... எக்ஸாம் போச்சு... இனி அடுத்த அட்டம்ப்ட்ல தான் நான் எழுதி கிளியர் பண்ணனும். காலேஜ் முடிஞ்சு போனாலும் போவேன் போல ஆனா இந்த அரியர் என்ன விட்டு போகாது போல" என்று விரக்தியாக சொல்லிக் கொண்டாள் ராதா.

"அதெல்லாம் போயிடும் போயிடும். நீ ஏன் அரியரை நினைச்சு பீல் பண்ற. அதெல்லாம் கிளியர் பண்ணிக்கலாம் ராதா. பெரிய விஷயம் இல்ல" என்ற திவ்யா,

"நீ பேசாம உங்க அப்பாகிட்ட இன்னும் கொஞ்சம் போராடி இன்ஜினியரிங் காலேஜ்லயே ஜாயின் பண்ணி விட சொல்லி இருந்திருக்கலாம்"

"அட போ திவ்யா! உண்ணாவிரத போராட்டமே இருந்து பாத்துட்டேன். எங்க அப்பா எதுக்குமே அசரல. உறுதியா என்னால அதுக்கெல்லாம் பீஸ் கட்ட முடியாது. கடன் வாங்குற மாதிரி ஆயிடும்னு வேணவே வேணாம்னு சொல்லிட்டாரு. நான் படிச்சு வேலைக்கு போய் அந்த கடனை அடைக்கிறேன்னு கூட சொல்லி பாத்துட்டேன். அதுக்கும் எங்க அப்பா காது கொடுத்து கேட்கவே இல்லை. அப்புறம் நானும் என்னதான் பண்ண முடியும். இது கூட பரவால்லடி... சொன்னாரு பாரு....! ஒன்னு இந்த டிகிரியை படி! இல்லன்னா நான் உனக்கு கல்யாணம் பண்ணி வைக்கிறேன். இங்கிருந்து பொட்டியை கட்டுன்னு.. என்னால அதை தான் திவ்யா தாங்கிக்கவே முடியல. கல்யாணம் பண்றதுக்கு தமிழ் டிகிரியே பரவால்லன்னு சொல்லிட்டு குருட்டு நம்பிக்கையில் படிக்க வந்துட்டேன்.. ஆனா வந்ததுக்கப்புறம் தான் தெரியுது... தமிழ் நமக்கு இவ்வளவு தகடு தத்தமா இருக்குன்னு!!"

"விடு ராதா நான் ஒன்னு சொல்லவா.. நீ இன்ஜினியரிங் படிச்சு ஐடி ஃபீல்டு குள்ள போகணும் தானே ஆசைப்பட்ட. பேசாம ஒரு நல்ல ஐடி மாப்பிள்ளை பார்த்து கல்யாணம் பண்ணிக்கோ"

திவ்யா ஐடியாவை கேட்டு "அட போடி லூசு! எந்த ஐடி மாப்பிள்ளை உனக்கு தமிழ் படிச்ச பொண்ண கல்யாணம் பண்ணிக்கிறேன்னு வந்து நிக்கிறான். நடக்கிறத பேசு! நிதர்சனத்தை பேசு!" கிண்டலாக ஆரம்பித்தவள் சீரியஸ் டோனில் முடிக்க,

"நீ வேணும்னா பாரு உனக்கு ஐடி மாப்பிள்ளை தான் அமையும்" என்றாள் திவ்யா எதோ ஆரூடம் சொல்பவள் போல!

"ஆமா.. பெரிய குறி சொல்றா.. போடி.. வேற வேலை இருந்தா பாரு" என்று ராதா அவளை விரட்ட, "ஏன் ஐ.டி. மாப்பிள்ளை வந்தா வேணாம்னு சொல்ற ஐடியாவா உனக்கு?" என்று திவ்யா நூல் விட்டு பார்க்க,

"அடியே வந்தா தானடி... நான் வரவே வராதுன்னு சொல்றேன். இதுல இவ வேற காமெடி பண்ணிக்கிட்டு" என்றவள்,

"கல்யாணத்தை பத்தி எந்த ஒரு ஐடியாவும் இப்ப வரைக்கும் இல்ல திவ்யா. டிகிரி முடிச்சிட்டு இந்த டிகிரிக்கு ஏத்த மாதிரி ஏதாவது ஒரு வேலைக்கு போகணும். அதுக்கு நான் முதல்ல இந்த அரியர் எல்லாம் கிளியர் பண்ணனும் காலேஜ் முடிகிறதுக்குள்ளையே" என்று தீவிரமாக சொன்னவள்,

"வேலை தான் என்ன பண்றதுன்னு தெரியல. ஒண்ணுமே புரியல" என்று ராதா இப்போதே புலம்ப ஆரம்பிக்க,

"டி ராதா.... எனக்கு ஒரு ஐடியா சொல்லவா?" என்று திவ்யா இதற்கும் ஆரம்பிக்க, "என்னடி... இன்னைக்கு ஐடியா மணியா மாறிட்ட போல.. சரி இருந்தாலும் சொல்லு கேட்போம்" என்றாள் ராதா.

"நம்ம சீனியர் அக்கா ஒருத்தவங்க இலக்கியா.. ஞாபகம் இருக்கா?"

"ம்ம்.. இருக்கே. இப்ப அவங்க ஏதோ எப்.எம்ல ஆர் ஜே ஆயிட்டாங்க இல்ல"

"ம்ம்.. அவங்களே தான். அவங்க மாதிரி நீயும் ஆர்ஜே ஆனா நல்லா இருக்கும். உனக்கு அவ்வளவு நல்ல வாய்ஸ் இருக்கு. போல்ட் வாய்ஸ் கூட. நீ பேசாம ஏன் ஆர். ஜே ஆய்ட கூடாது? நீ ஃப்ளுயன்டா பேசுவ. உனக்கு ஆர். ஜே. செட் ஆகும்" என்று திவ்யா சொல்ல,

"ஆர். ஜேவா.. நானா..." என்று ராதா விழி விரித்து ஷாக்காகி கேட்க, "நீ தான்.. பின்ன உங்க அப்பாவா" என்று கிண்டல் செய்தவள், "ட்ரை பண்ணு.. நிச்சயம் உனக்கு செட் ஆகும். நம்ம இலக்கியா அக்கா கூட பேசி கேட்டு பாரு" என்க, "பாக்கலாம்" என்று மட்டும் சொல்லி வைத்த ராதா, ஆர். ஜேவிற்கு எல்லாம் தந்தை ஒப்புக் கொள்வாரா என்று யோசிக்க ஆரம்பிக்க நிச்சயம் ஒப்புக் கொள்ள மாட்டார் என்று தான் தோன்றியது.

அவள் நினைத்தது போலவே தான் நடந்ததும் கூட!

கல்லூரி படிப்பு முடிய முடியவே ராதா அரியரை கிளியர் செய்திருக்க, கூடவே அந்த சீனியர் இலக்கியாவின் காண்டாக்டை பிடித்து அவள் ஆர்.ஜேவாக பணி புரியும் எஃப். எம்மில் இவளும் விண்ணப்பித்து இருந்தாள்.

இன்டர்வியூ பிராசசில் நன்றாக பெர்பார்ம் செய்து செலெக்ட் ஆகி இருக்க,
அதனை கண்ணபிரானிடம் வந்து சொன்ன போது காலில் சலங்கை கட்டி ஆடாத குறையாக நெற்றிக் கண்ணைத் திறந்து கண்ணபிரான் ருத்ரபிரானாக மாறி ஆட ஆரம்பித்து விட்டார்!

 
Top