அதீனா ஜார்ஜ்
Moderator
அத்தியாயம் - 10
வானத்துக்கும் பூமிக்கும் குதித்துக் கொண்டிருந்தார் கண்ணபிரான். மகள் வந்து சொன்ன விஷயத்தில் அவரின் கோபம் எக்குத் தப்பாய் வெளி வந்திருந்தது.
"யாரை கேட்டு இவ இப்படி ஒரு வேலைக்கு போய் செலெக்ட் ஆகி வந்திருக்கா? என்னைக் கேட்டாளா?" என்று உச்ச பட்ச கோவத்தில் தொண்டை கிழிய கத்தியவர் மனைவி தெய்வானையை பார்த்து,
"இல்ல உன் கிட்ட தான் கேட்டாளா?" என்று கேட்க, ராதாவோ தந்தையின் கத்தலுக்கு எல்லாம் அலட்டிக் கொள்ளாமல்,
"உங்க கிட்ட கேட்டிருந்தா நிச்சயம் ஓகே சொல்லி இருக்க மாட்டீங்க. அதான் நானே போய் அட்டன் பண்ணிட்டு வந்தேன். இப்ப அந்த எஃப். எம்ல ஆர். ஜேவா செலக்ட்டும் ஆகி இருக்கேன்!" என்று சொன்னவள், தந்தை தன்னை தீயாய் முறைப்பதை கண்டு,
"இப்ப என்னப்பா உங்க பிரச்சனை? எனக்கு பிடிக்காத படிப்பை படிக்க வச்சீங்க! இப்ப எனக்கு இந்த வேலை பிடிச்சு இருக்கு. போகனும்னு ஆசை படுறேன். இதுக்கும் தட போட்டா என்ன தான் பண்ண முடியும்?" என்று கோபத்தில் ஆரம்பித்தவள் விரக்தியில் முடித்திருந்தாள்.
"இதென்ன வேலை.... ஊரே கேக்குற மாதிரி...! இதெல்லாம் சரி பட்டு வராது ராதா!!! நாலு பேருக்கு தெரிஞ்சா அது வேற! நீ ஆர். ஜேன்னு சொல்றது ஊருக்கே தெரிய வரும்..! யாருக்கும் தெரியாத மாதிரி இருக்கிறது தான் நமக்கு மரியாதை! நம்மோட வாழ்க்கை முறைக்கு எல்லாம் பொது வாழ்க்கை சரி வராது"
"அப்பா........." என்று பல்லை கடித்த ராதா... "நான் என்ன சினிமால ஹீரியினாவா ஆக போறேன்... ஜஸ்ட் ஆடியோ பிளாட்ஃபார்ம் அப்பா. குரல் மட்டும் தான் வெளிய வரும்! நீங்க ஏன் இப்படி நினைக்கிறீங்க? யாருக்கும் அவ்ளோ சீக்கிரம் வாய்ப்பு கொடுக்கக் கூடிய எஃப்.எம் இல்லப்பா. நான் செலெக்ட் ஆகி இருக்கிறது எவ்ளோ பெரிய விஷயம் தெரியுமா? காலேஜ்ல எல்லாருமே சந்தோஷமா பாராட்டினாங்க. அது ஏன் அங்க வேலை பாக்குற என்னோட சீனியர் இலக்கியா அக்கா கூட சொன்னாங்க.. நம்ம காலேஜ்ல இருந்து எனக்கு அப்புறம் நீ தான் செலெக்ட் ஆகி இருக்க. வேற யாரும் வரலேன்னு!" என்று ஆதங்கத்துடன் சொன்னவள்,
"எனக்கு பிடிச்சு இருக்குபா. விடுங்களேன். போய் தான் பாக்குறேன். நல்ல சேலரி பேக்கேஜ் அப்பா" என்று என்றைக்கும் காட்டாத கெஞ்சலுடன் தந்தையிடம் மன்றாடினாள் ராதா.
"அதெல்லாம் விட முடியாது ராதா. மீடியா லைன் இதெல்லாம். நமக்கு சரி பட்டு வராது. யாரும் பார்த்து என்ன உங்க பொண்ணு இப்படி இங்க வேலை பாக்குறாளாமேன்னு என்னை பாத்து ஒரு சொல் சொல்லிட்டா என்னால அதை கேட்டு சும்மா இருக்க முடியாது!" என்று அவர் பிடித்த பிடியில் உறுதியாய் இருந்தார் கண்ணபிரான்!
ராதாவால் அதற்கு மேல் அவரிடம் கெஞ்ச முடியவில்லை. முயலவும் இல்லை! அவ்வளவு கோபம் வந்தது தந்தையின் மீது!
என்ஜினீயர் படிக்க வைக்காத போதும் கோபம் வந்தது தான். ஆனால், அதற்கு வலுவான காரணம் இருந்தது தந்தையின் பொருளாதார நிலையை எண்ணி தன்னைத் தானே தேற்றிக் கொண்டு கிடைத்த படிப்பை படித்தாள்.
ஆனால், இப்போது கிடைத்திருக்கும் வேலை அவளின் திறமைக்கே உரித்தானது எனும் போது அதற்கும் இப்படி குறுக்கால் நின்று முட்டுக் கட்டை போடும் தந்தையை எண்ணி கோபம் எல்லையை கடந்தது.
ஆனால், அவரின் பேச்சிலேயே புரிந்து போனது அவளுக்கு!!! தந்தை இந்த வேலைக்கு தன்னை விடப் போவதில்லை என்று. இருந்தும் நம்பிக்கையை விடாமல் அவரிடம் இறுதியாக ஒரு முறை கெஞ்சிப் பார்க்கலாம் என முடிவு செய்தவள் தந்தையை நேராக பார்த்து,
"இது குரல் சார்ந்த வேலை தான்பா. பேசுறது தான் வேலையே! அதுக்கு ஏன் நீங்க தடை சொல்றீங்கன்னு எனக்கு புரியல! சரி உங்களுக்காக சொல்றேன்.. ஒரு ரெண்டு மாசம் போய்ப் பாக்குறேன். சரியா வரலேன்னா அப்புறம் நீங்க சொல்ற மாதிரி கேக்குறேன். ப்ளீஸ் அப்பா" என்று உருக்கமாக வேண்டினாள் தந்தையிடம்.
தெய்வானைக்கே மகளின் நிலை கண்டு கண்ணீர் வந்தது. இது வரை எதற்கும் அழுது கெஞ்சியது இல்லை அவள்! இது தான் வேண்டும் என்றால் வேண்டும் என்று அடம் பிடிக்கும் ரகம்!
எப்படியேனும் அதை சாதித்துக் கொள்ளும் பிடிவாத குணம் கொண்டவள். அப்படித் தான் படிப்பிலும் பிடிவாதம் பிடித்தாள். கண்ணபிரானும் படிக்க வைக்காமல் விட மாட்டாள் என்று உணர்ந்து தான் முயன்றதை படிக்க வைத்தார்.
ஆனால் இப்போது இந்த ஆர். ஜே. வேலையை அவரால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. ஆர். ஜே வி.ஜேவாக மாறலாம்.. பின்பு காலப் போக்கில் எப்படி எல்லாம் மாறுமோ? என அவரின் பயம் வேறு விதமாய் இருக்க, சுத்தமாய் ஒப்புக் கொள்ள மனம் வரவில்லை அவருக்கு.
"நீ என்ன சொன்னாலும் நான் ஒத்துக்க போறதில்லை ராதா! இதெல்லாம் சரி பட்டு வராது.. வெறும் பேசுறது தான் வேலைன்னு சாதாரணமா சொல்ற! இங்க நம்ம சொந்த காரங்க கிட்ட பேசுறது எல்லாம் பத்தாதுன்னு அங்க வேற போய் பேச போறியா? நீ பேசி அங்க இருக்கவங்க எல்லாருகிட்டயும் சண்டை தான் இழுத்து வைப்ப. அதெல்லாம் ஒண்ணும் வேணாம்" என்று அவர் தயவு தாட்சண்யம் இன்றி சொல்லி விட, ராதாவின் மன நிலை அப்படியே மாறிப் போனது.
வேறு எதுவும் அவரிடம் கேட்கப் பிடிக்கவில்லை. தன்னையும் தன் நிலையையும் நினைத்து அழுகை தான் அளவுக்கு அதிகமாக வந்தது.
இருந்தும் கட்டுப் படுத்திக் கொண்டு திடமாக நின்றாள். தன் கனவுகளை கட்டிப் போடும் தந்தையின் முன்பு இனிமேல் அவளின் கண்ணீரை காட்டக் கூட அவளுக்கு பிடிக்கவில்லை!
தெய்வானை தான் மனது கேட்காமல் மகளுக்காக ஒரு முறை கேட்டுப் பார்ப்போம் என்று கணவனிடம்
"ஏங்க. அதான் இவளோ தூரம் சொல்றாளே.. போய் தான் பாக்கட்டுமே"
"நீ என்ன அவளுக்கு பேசுற. சும்மா இரு. இன்னைக்கு உன் மக ரெண்டு மாசம்னு சொல்லுவா.. அப்புறம் ரெண்டு வருஷன்னு உக்காந்து பிடிவாதம் பிடிப்பா! இதெல்லாம் ஆகுற காரியம் இல்ல தெய்வான! இப்படியே போனா எப்ப அவளுக்கு கல்யாணம் பண்றது? இவளை இவ அக்காலுங்க மாதிரி கட்டிக் கொடுத்து இருக்கணும். அதை பண்ணாம இவ இஷ்டத்துக்கு படிக்க வச்சேன் பார். அதான் இப்படி ஆடிட்டு திரியிரா.." என்று அவர் பேசிக் கொண்டே போக அதற்கு மேல் ராதாவால் அங்கே நிற்க கூட முடியவில்லை.
"ஒன்னு இங்க நம்ம வீட்டுக்கு பக்கத்துலயே இருக்க பிரைமரி ஸ்கூலுக்கு வேலைக்கு போ. அங்க தமிழ் டீச்சருக்கு வேலைக்கு ஆள் வேணும்னு கேட்டிருந்தாங்க. அப்படி இல்லையா கல்யாணம் பண்ணிக்க சம்மதம் சொல்லு" என்று மீண்டும் அவளுக்கு செக் வைத்தார் கண்ணபிரான்.
அவரின் பேச்சை எல்லாம் கேட்க கேட்க கோபமும் ஆதங்கமும் ராதாவை கண்ணீர் உகுக்க வைத்து. அதற்கு மேல் சுத்தமாய் அங்கே நிற்க முடியவில்லை அவளால். விருட்டென்று உள்ளே சென்று விட்டாள். செல்லும் அவளை பெரு மூச்சுடன் பார்த்த கண்ணபிரான் அழும் மனைவியை பார்த்து முறைத்தார்.
"என்னங்க இவ? ஒண்ணுமே சொல்லாம போறா"
"பின்ன உன் பொண்ணு என்ன சொல்லுவா? சொல்லுற மாதிரியா நான் கேட்டிருக்கேன்?"
"நீங்களும் கொஞ்சம் உங்க பிடிவாதத்தை தளர்த்தலாம் தானே? ஏன் அவளை போட்டு இந்த பாடு படுத்துறீங்க?"
"அவளை இப்ப இறுக்கி பிடிக்க வேண்டிய இடத்தில இருக்கோம் நாம!அவ லேசு பட்டவ இல்ல தெய்வான. வேலைக்கு விட்டோம்னா சம்பாதிக்க ஆரம்பிச்சுடுவா. அவ இவளோ நாளா எதிர் பார்த்த அந்த ஒரு விஷயம் இது! மரியாதை காசுனால தான் கிடைக்குதுண்ணு ரொம்ப நம்புறவ நம்ம பொண்ணு! அதுக்கு நாமளும் ஒரு காரணம்! எங்க அண்ணன் கிட்ட நான் ஏமாந்து போனது அவ மனசுல கல்லா பதிஞ்சு போய் கிடக்கு! அதான் இப்படி ஆகிட்டா. வேலைக்கு விட்டா சம்பாத்தியம்.. காசு... சுய கவுரவம், சுதந்திரம்.. அது இதுன்னு அவ மாறிடுவா. அப்புறம் அவளுக்கு மாப்பிள்ளை பாத்தாலும் கல்யாணம் பண்ணிக்க சம்மதம் சொல்ல மாட்டா. அதனால தான் இப்படி சொன்னேன்! நிச்சயம், பெரிய அடி தான் இது ராதாவுக்கு! ஆனா, வேற வழியும் இல்ல. என் இஷ்டத்துக்கு அவளை வலைக்கிறேண்ணு உனக்கு தோணலாம். ஆனா அவ நல்லதுக்கும் எதிர் காலத்துக்கும் பயந்து தான் அவளை அனுப்ப நான் மறுக்கிறது" என்று நீண்ட விளக்கம் சொன்னவர்,
மேலும் "பொம்பள பிள்ளைங்களோட முன் பாதி நிரந்தரமான வாழ்க்கை அம்மா வீடுன்னா... பின் பாதி நிரந்தரமான வாழ்க்கை புருஷன் கூட தான்! அதனால அவளுக்கு மாப்பிள்ளை பாத்து கட்டி வைக்கிறது உசித்தம்!" என்று சொல்லி விட்டு சென்று விட்டார்.
தெய்வானையும் கணவரின் கூற்றில் இருந்த உண்மை புரிந்து அமைதியாக கேட்டுக் கொண்டார். வழக்கம் போல் அவர் மகளின் பக்கமும் கணவரின் பக்கமும் இருக்கும் இரு தரப்பு நியாயத்தையும் உணர்ந்து தான் இருந்தார். ஆனால் யாருக்கு பேசுவது என்று அவருக்கும் புரியவில்லை. எனவே வழமை போல் அமைதியை கடை பிடித்தார்.
உள்ளுக்குள் மகளை எண்ணி கவலை ஒரு புறம் என்றால்,.. கணவனை எண்ணியும் கவலை தான் வந்தது அவருக்கு. அனைத்தையும் போட்டு வெகு நேரமாக யோசித்து முடித்தவர், தப்பித் தவறி கூட ராதாவின் அறை பக்கம் செல்லவில்லை
சென்றார் என்றாள் நிச்சயம் அவளின் கோபம் பன்மடங்காக உயரும் என்பது உறுதி! எனவே அவளிடம் பிற்பாடு பேசிக் கொள்ளலாம் என்று விட்டு விட்டார்.
அறைக்குள் வந்த ராதாவோ தலையை பிடித்துக் கொண்டு அழத் தொடங்கி விட்டாள். சிறு வயதில் இருந்து இழந்தது எல்லாம் கண் முன்னர் வர இப்போது அவளின் வேலையையும் தந்தைக்காக இழப்பதை எண்ணி அத்தனை அழுகை வந்தது. அனைத்திற்கும் சேர்த்து வைத்து அழுதாள்.
அழுது கொண்டிருக்கும் பொழுதே வெளியே தந்தையின் பேச்சை கேட்டு அழுகையுடன் ஆத்திரமும் சேர்ந்து வந்தது.
"கல்யாணமாம் கல்யாணம்....!!!! வேலைக்கு போறேன்னு சொன்னா கல்யாணத்தை பத்தி பேசுறதே வேலை.." என்று கோபத்தை இரைந்தவள் "அப்படி எந்த மகராசன எனக்காகன்னு கொண்டு வந்து இவரு நிப்பாட்டுறாருன்னு நானும் பாக்குறேன்" என்று சவால் போல் சொல்லிக் கொண்டவள் அப்படியே கட்டிலில் சாய்ந்து உறங்கிப் போனாள்.
இந்த இரண்டு ஆண்டுகளில் ராதா அவரின் கல்லூரி படிப்பை வெற்றிகரமாக எந்த ஒரு அரியரும் இன்றி முடித்து இருந்தாள்.
படிப்பை முடித்த கையோடு அவளின் ஆருயிர் தோழி திவ்யா சொன்னதை மனதில் வைத்து இலக்கியா அக்காவை தொடர்பு கொண்டு அவள் மூலம் அவள் வேலை செய்யும் எஃப்.எம்மில் ஆர்.ஜேவாக பணிபுரிய இன்டர்வியூ அட்டென்ட் செய்து அதில் தேர்ச்சியும் பெற்று நல்ல சேலரி பேக்கேஜ் கிடைத்து இருந்தது ராதாவுக்கு.
உறுதியாக ஆர்ஜேவாக ஜாயின் செய்துவிடலாம் என்று நம்பிக்கை கொண்டு இருந்தவளின் எண்ணத்தை புல்டவுசர் வைத்து இடிக்காத குறையாக ஒரே இடியில் இடித்து தள்ளி இருந்தார் கண்ணபிரான்!
உறுதியாக மகள் பிரைமரி ஸ்கூலுக்கு வேலைக்கு செல்ல மாட்டாள்! அது அவளின் விருப்பமும் இல்லை என்று உணர்ந்தவர் தனது பிடிவாத மகளுக்கு மாப்பிள்ளை பார்க்கும் படலத்தில் இறங்கி விட்டார்!
***********
நரேனின் வீட்டில்......
இரண்டு ஆண்டு காலம் எவ்வித மாற்றமும் இன்றி தான் சென்றது நரேனின் குடும்பத்தினருக்கு.
இப்போது நரேன் வேறு மென் பொருள் நிறுவனத்திற்கு மாறி இருந்தான்.
டீம் ஹெட் என்னும் பிரமோஷனுடன்!!!!!!
பழைய அலுவலகத்தில் யுவந்திகாவின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்ல, அவனால் ஒரு கட்டத்திற்கு மேல் பொறுக்க முடியாமல் போனது.
அவள் மீது புகார் கொடுக்க வேண்டும் என்று மனம் எண்ணினாலும் தேவையற்ற சாக்கடையில் ஏன் சென்று காலை விடுவானேன் என்னும் எண்ணத்தோடு வேறு கம்பெனிக்கு மாறி இருந்தான்!
அந்த நிறுவனத்தில் ஆரம்பத்தில் சீனியர் டேட்டா அனலிஸ்ட்டாக தேர்வாகி இருந்தான். அவனின் திறமையை கண்டு அந்த நிறுவனமும் அவனின் டீம் மேனேஜரும் அவனுக்கு டீம் ஹெட் பதவியை கொடுத்திருந்தனர்.
இப்போது அவனுக்கு கீழ் கிட்டத்தட்ட பதினொரு பேர் வேலை செய்தனர். அவர்களை வேலை செய்ய வைக்கும் பொறுப்பில் இருந்தான் நரேந்திரன்!
இந்த இரண்டு ஆண்டு கால கட்டத்தில் அவனின் தோற்றம் அவனின் பதவிக்கு ஏற்ப சற்றே மெருகேறி இருக்க கூடவே ஒரு ஆளுமை திறனை வேலைக்காக வளர்த்து கொண்டான் நரேந்திரன்!
ஆனால், மனதில் என்றும் போல் ராதா தான் அவனை ஆட்டிப் படைத்துக் கொண்டிருந்தாள்.
புது அலுவலகம் மாறி ஒன்றரை ஆண்டு காலம் ஓடிப் போய் இருந்தது. அதிலிருந்தே அவன் வரும் பாதை வேறாக மாறி இருக்க, அடிக்கடி அவளை சந்திக்கும் சிக்கனில் அவனால் செல்ல முடியவில்லை.
எனவே ராதாவையும் அவள் சிக்னல் நொடிகளை என்னும் அழகையும் வெகுவாய் இழந்தான் நரேந்திரன்!
ராதா என்று எண்ணும் போதே அவள் முகத்தில் மென்மையும் புன்னகையும் உடனே வந்து விடும்!
இப்போதும் அப்படியே!!!
அலுவலகம்முடிந்து இல்லம் வந்தவனிடம் "சீக்கிரம் ஃப்ரெஷ் அப் ஆகிட்டு வா நரே.. உன்கிட்ட முக்கியமான விஷயம் பேசணும்" என்றார் குமுதா!
"என்னமா? கல்யாண விஷயமா!" என்று நரேன் கேட்க, குமுதா சிரிப்புடன்... "பின்ன வேறென்ன சொல்ல போறேன்.." என்றவர், "ரெண்டு வருஷமா போக்கு காட்டிக்கிட்டு இருக்க! இனி உன்னை நான் விடுறதா இல்லை! சொல்லு கல்யாணம் பண்ணிக்க சம்மதமா?" என்று ஆர்வமாக கேட்ட அன்னைக்கு மறுக்க முடியாத அளவுக்கு,
"சம்மதம் தான் அம்மா" என்று ஒப்புக் கொண்ட நரேன்...
"சம்மதம் தான்! ஆனா, பொண்ணு நீங்க பாக்க வேணாம்!" என்று சொல்லி விட, குமுதாவின் கண்கள் மகனின் பேச்சை கேட்டு அதிர்ச்சியில் விரிந்து கொண்டது !
"என்னடா சொல்ற?"
"உண்மைய சொன்னேன்!"
"விளையாடாம சொல்லு நரேன்! யாரையும் விரும்புறியா?" என்று குமுதா தீவிரமாக , ஆர்வமாக கேட்க,
"ஆமாமா" என்று ஒப்புக் கொண்
ட நரேனும்,
"ராதா....!" என்று மட்டும் சொல்ல, "யாரு ராதா?" என்று குழம்பிப் போய் மகனை பார்த்தார் குமுதா!