எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

அத்தியாயம் 02

Simma

Moderator
அத்தியாயம் 02

“ கபி, எல்லா பக்கமும் மூடி இருக்கா என்று சரி பார்த்துவிட்டு படு”, என்று இதிகாவை தூக்கி வைத்தவாறு கூறிவிட்டு தன் அறையை நோக்கி நடந்தான். பிடிக்குதோ பிடிக்கலையா அங்கே நின்று காட்சி பொருளாக விரும்பாமல் இலஞ்சிதா இரினாவை அழைத்துக் கொண்டு அவனை பின் தொடர்ந்தால். ஒரு பெருமூச்சியை இழுத்து விட்ட யசோதா, “ அப்பனே செந்தில் ஆண்டவனே இந்த பிள்ளைகளுக்கு ஒரு தெளிவையும் மன நிறைவான வாழ்க்கையையும் கொடுங்கள்”, என்று கூறிவிட்டு அவர் படுக்கப் போனார். “அதை எல்லாம் அண்ணா பார்த்துக் கொள்வார் நீங்க புலம்பாதீங்க”, என்று விட்டு கபியும் விடைபெற்றான்.

கொஞ்சம் பெரிய படுக்கை அறை தான் ஹாளை விட .இவர்கள் வருவார்கள் என்று இன்ஷித் அதை சற்று விரிவுபடுத்தி இருந்தான். நான்கு பேர் படுக்கக்கூடிய மாஸ்டர் கட்டில் மெத்தையோடு புதிதாக வாங்கி போட்டிருந்தான். அவர்கள் உடைமாற்ற வசதியாக ஒரு மரத்தடுப்பை போட்டு திறைசீலை போட்டு மறைத்திருந்தான். ஜன்னல்களில் அழகான திரைச்சீலைகள் குளிரூட்டி என்ற சகல வித வசதிகளுடன் புதிதாக செய்யப்பட்டிருந்தது அந்த அறை. தங்களுக்காக தான் என்று காலடி எடுத்து வைத்த அதை சுற்றிப் பார்த்த இலஞ்சிதாவுக்கு புரியத்தான் செய்தது. இதிகாவை கட்டிலின் அருகில் சென்று இறக்கிவிட்டு தனது அலமாரியை திறந்து தனக்கு வேண்டியதை எடுத்துக் கொண்டு அந்த மரத்தடுப்புக்கு பின்னால் சென்று மாற்றி விட்டு வந்தான். அவன் திரும்பி வரும் வரை ஆசையாமல் தான் நின்றனர் தாயும் செய்யும் இருவரும். வந்தவன் அவர்களைப் பார்த்தவுடன் ரொம்ப கஷ்டம் என்று மனதுக்குள் புலம்பியவன், அதை வெளிய காட்டிக் கொள்ளாமல், “ இரினா போய் படு, நீ உனக்கு வேண்டியதை எடுத்துக்கொண்டு போய் மாற்றி வந்து படு”, என்று அழுத்தமான ஒரு பார்வையோடு கூறிவிட்டு இதிகாவுடன் ஒருபுறம் படுத்து விட்டான் .

“ நீ போய் படு”, என்று முதன்முதலாக தன்னால் வாயை திறந்தால் இலஞ்சிதா. இரினா அசையாமல் இருக்க அவளையும் அழைத்துக் கொண்டு அவளுக்கு தேவையானதையும் எடுத்துக்கொண்டு மரத்தடுப்புக்கு பின்னால் சென்றாள். துணியை மாற்றி விட்டு இரினாவை அழைத்து வந்து இதிகாவின் மறுபக்கம் படுக்க வைத்தாள். இவளும் இரினாவுக்கு பின்னால் படுத்துக்கொண்டாள். இவர்கள் படுத்தவுடன் இன்ஷித் விளக்குகளை அணைத்துவிட்டு இரவு விளக்கை ஒளிர விட்டு குளிரூட்டியை சரியான அளவில் வைத்துவிட்டு தனக்கும் இதிகாவுக்கும் போர்வையை சேர்த்து பொருத்திக்கொண்டு படித்துவிட்டான். மனதில் ஆயிரம் சஞ்சனங்கள் இருந்தாலும் நால்வரும் தூங்கிப் போயினர் .இதிகாவின் அசைவில் சுயத்துக்கு வந்தவன் அவளை பக்கத்தில் கிடைத்துவிட்டு எழுந்தான் மற்ற மூவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்க தன்னை சுத்தப்படுத்திக் கொண்டு வந்து மணியை பார்க்க அது ஐந்தரை என்று காட்டியது. தன் காலை ஓட்டத்திற்கு கிளம்பி சென்று விட்டான் .

அவன் தன் வீட்டை விட்டு ஒரு சுற்று சுற்றி வெளியே வந்து முகாமை சுற்றி ஓட துவங்க அவனின் எதிரில் ஒரு ஐந்து நபர்கள் இவனின் வயதை ஒத்த வயதினர் இவனை கடந்து சென்றார்கள். ஆனால் அதில் ஒருவன், அவன் பெயர் மதி ,அவனின் கண்களில் மட்டும் இவனை கடக்கும்போது ஒரு கோபம் எழுந்ததை இன்ஷித் அறிவான். ஆனால் இருவரும் ஒன்றும் சொல்லாமல் அகன்று போனார்கள். “ என்னடா மதி அவன் திருமணம் செய்ய மாட்டான். அதனால் இந்த நாட்டில் இருக்க மாட்டான் என்று சொல்லிக் கொண்டிருந்தாயே, ஆனால் பார்த்தியா அவன் திருமணத்தை முடித்து விட்டான். இங்கு நிரந்தர குடி உரிமைக்கும் பெறுவதற்கும் பதிந்துவிட்டான். இனிமேல் அவனை ஒன்றும் அசைக்க முடியாது”, என்றான் மதிவுடன் வந்த ஒருவன் .ஆனால் மதியின் முகம் எரிச்சல் மூல, “ டேய் நீ வேறு அவனை உசுப்பேத்தாத”, என்றான் மற்றொருவன். “ இதுல என்ன இருக்கு உசுப்பேத்த, உண்மை தானே சொல்கிறேன்”, என்றான் மீண்டும், “ என்னவோ அவன் ஆசைப்பட்டு கட்டிக்கிட்ட மாதிரி பேசுற ஏற்கனவே திருமணம் ஆன ஒரு பொண்ணை தானே”, என்று மதி இலக்கமாக கூற வர, “ டேய் அது எப்படியோ அவனை ஏற்கனவே முகாம்கள் தலையில் தூக்கி வைத்து தான் ஆடுவாங்க .இனிமே சொல்லவா வேணும்”, என்றான் அதில் அப்படியே கலைந்து போனார்கள்.

இன்ஷித் தன் ஓட்டத்தை முடித்துக் கொண்டு தன் வீட்டின் அருகில் வர, அங்கே அவனது வீட்டின் முன் தோரணம் அமைக்கும் பணி நடந்து கொண்டிருந்தது .இவன் யோசனையாக வர அங்கே திரும்பி நின்று ஆட்கள் இடம் வேலை வாங்கி கொண்டு இருந்தவனை திருப்பி, “ டே மாப்பிள்ளை இது”, என்று இன்ஷித் ஆரம்பிக்க, அதற்குள் அங்கே வந்த யசோதா ஏதோ கூற வர, “ மாமி இவன உள்ள போயி தயாராகி குடும்பமாக சமுதாய கூட்டத்துக்கு வர சொல்லுங்க 9 மணிக்குள்ள, எனக்கு தலைக்கு மேல வேலை கிடக்குது, மாப்பிள்ளையா மாப்பிள்ளை, அப்படின்னு நினைச்சிருந்தா யாரோ மூனாவது ஆட்கள் சொல்லி எனக்கு என்ற மச்சானுக்கு கல்யாணம் ஆனது தெரிய வருமா”, என்று முகத்தை திருப்பிவிட்டு அவன் நடக்க, “ரேவன்த், மாமி சொன்னேன் தானே எல்லாம், பின்னே என்ன அப்பு இன்னும் கோபம்”, என்று யசோதா அவனை இடைமறைத்து நின்றார். “ அம்மா நீங்க போங்க என்று மாப்பிள்ளை இடம் கொஞ்சம் கதைத்து விட்டு வருகிறேன்”, என்றான் இன்ஷித் கோபமாக இருந்தவன் மேல் தன் கையை போட்டு. “ மாமி”, என்று இவன் பல்லை கடிக்க , “அட போடா உங்க மாமியை கூப்பிட்டா, எனக்கு பயமா”, என்று இன்ஷித் அவனை இழுத்துக்கொண்டு நடக்க, “ விடுடா என்று இவன் முறுக்க, “ அடப்போடா என்னமோ நான் விரும்பி கல்யாணம் பண்ணிக்கிட்டு அதை உன்கிட்ட மறைச்ச மாதிரி கோவப்படுற நானே சந்தர்ப்ப சூழ்நிலை”, என்று இன்ஷித் தங்கு தடையின்றி அனைத்தையும் சொல்லிக் கொண்டே அவன் சொன்ன சமுதாயத்தைக் கூடத்துக்கு அவனை இழுத்துக்கொண்டு வந்து நின்றவன், பிரமித்து தான் போனான்.

அந்த காலையிலேயே ஒரு விருந்துக்கு தயாராகும் விதமாக ஒரு பக்கம் சமையல் மறுபக்கம் அலங்காரம் என்று வேகமாக வேலை நடந்து கொண்டிருந்தது .ஒரு பக்கம் இன்ஷித் இலஞ்சிதா இரினா இதிகாவோடு ஒரு குடும்பமாக கண்ணை கவர்ந்த வண்ணமாக ப்ளக்ஸ்சில், கீழே வரவேற்புக்கு வரும் அனைவரையும் வரவேற்கும் பொதுவான பொதுமக்கள் என்று இருந்தது. அவனுடைய கூட்டாளிகள் அனைவரும் பம்பரமாக சுழன்று கொண்டிருந்தன .இதுவரை அவன் பேசியதை கேட்டுக் கொண்டு வந்த ரேவன்த் அவனது பேச்சற்ற தன்மையை கண்டு, “ டேய் மச்சான் நீ செய்தது பெரிய காரியம், ஆனா எத்தனை நாள் அவர்களை அப்படியே விட முடியும் .இது நல்லதுக்கு தான் அவர்கள் நல்ல முறையில் உன் உறவுகளாக முகாமுக்கு தெளிவு படுத்துவது நம் கடமை. அது அவங்களுக்கும் தனி மரியாதையும் பாதுகாப்பையும் ஈன்று கொடுக்கும்”, என்று இவனது மௌனத்தை கலைக்க முயன்றான். “ மாப்பிளை நீ சொல்வது சரிதான்”, ஆனால் என்று அவன் தயங்க, “ மச்சான் இதுல தயங்காது .உன்னோட இடத்தை விட்டுக் கொடுக்காத. நீயும் அவங்களும் ஒரு குடும்பம் என்பதை உணர்த்திகிட்டேயிறு”, என்று ரேவன்த் கூற இலஞ்சிதா இரினாவின் இறுக்கமான முகம் தன் மனதில் தோன்றி மறைந்தது. “ எதுக்குடா இப்ப”, என்று இன்ஷித் மறுபடியும் ஆரம்பிக்க, “அண்ணா இது இப்படின்னு ரேவன்த் கேட்க, அப்போ நான் இது எல்லாம் சரியா வராது என்று வேண்டாம் என்று தான் சொன்னேன். ஆனா அம்மா தான் இது கண்டிப்பா நடக்கட்டும். உங்களுக்கு இப்போ தெரிஞ்சா போதும்னு சொல்லிட்டாங்க”, என்று கபிணேஷ் யசோதாவின் முடிவு இது என்று சொல்ல, “சரிடா பாத்துக்கலாம், நீங்க இங்கே பாருங்க. நான் போய் அவர்களை அழைத்துக்கொண்டு வருகிறேன்”, என்று பெருமூச்சு விட்டவன் , நினைவு வந்தவனாக, “இன்பா, இலஞ்சிதா வீட்டு ஆட்கள்”, என்று அவர்களுக்கு அழைப்பு கொடுத்தாச்சா என்ற வினாவ, “ அண்ணா”, என்று குரல் கேட்க அங்கே மூவரும் திரும்பினார். வினோத் சண்முகம் இலஞ்சிதாவின் மாமாவின் இளையவர் ரமேஷ் நின்று இருந்தார். “ சித்தப்பா” வாங்க என்று மூவரையும் தனித்தனியாக கைகூப்பி வரவேற்றான் இன்ஷித். அதையே ரேவந்த் கவினேஷ் செய்ய , ரேவன்த்தை தன் அப்பாவின் தங்கை மகன் என்று சொல்லாமல் அத்தை மகன் என்று மட்டும் அறிமுகப்படுத்தினான். “ வரவேற்பு வேலை எப்படி நடக்குது, அண்ணா கேட்டாங்க. டேய் ஏதாவது கேட்டு தயங்காத”, என்றார் சண்முகம் மூத்தவராக. “ சரி சித்தப்பா”, என்றவன் , இலஞ்சிதாவின் மாமா ரமேஷிடம் திரும்பி, “ வீடு பக்கத்தில் தான் வாங்க சித்தப்பா”, என்றான் முறையாக அவரிடம் . “இருக்கட்டும் தம்பி அண்ணாக்கள் எல்லாரும் வரட்டும் நான் ஏதாவது உதவிக்கு தான்”, என்றார் ரமேஷ் பதிலாக. “அண்ணா நீங்கள் போய் அண்ணி குழந்தைகளை அழைத்து வாருங்கள்”, என்று வினோத் இன்ஷித்தை வீட்டுக்கு கிளம்பச் சொன்னான். “ ஆமா டா நீ போ அப்பதான் சரியா வரும்”, என்று சண்முகம் கூற கபிணேஷ் ரேவன்திடம் அனைத்தையும் பார்த்துக் கொள்ளுமாறு கூறிவிட்டு அவன் ஓட்டத்தை வீட்டை நோக்கி தொடர்ந்தான்.

தொடரும்
 
Top