அத்தியாயம் 1
நெருக்க நெருக்கமாக அமைந்திருந்த குருவிக்கூண்டு போல் போன்ற சிறு சிறு வீடுகள். நடுவே சிறு மண்சாலை மிகவும் நேர்த்தியாக பராமரிக்கப்பட்டிருந்தது ,அந்த இலங்கை மறுவாழ்வு முகாம். முகாமின் நடுவே சிறு ஊரணி அதுவும் சுத்தமாக பராமரிக்கப்பட்டு இருந்தது. அதை சுற்றி வேலி அடித்து சிமெண்ட் நடைபாதை அமைத்திருந்தனர். அங்கே சிறு சிறு செடிகள் மரங்கள், சாலையில் இரு பக்கமும் வேலி அடித்து நின்றது. ஒரு சினை விநாயகர் கோயில், சிறு மாதா கோயிலும் இருந்தது. முகாமின் நுழைவாயிலில் இருந்து சரியாக பத்து வீடு தள்ளி இரண்டு வீட்டையும் சேர்த்து புதுவிக்கப்பட்ட இருந்தது யசோதாவின் இல்லம். வாகனம் நிறுத்துவதற்கு எல்லாம் இங்கே இடமில்லை, என்பதால் சற்று முன்னே வந்து சுற்றி சென்றாள் ,அங்கே அவர்களின் கொள்ளை இருக்கிறது. அங்கேதான் இந்த வீட்டில் இருப்புதல்வர்களின் வாகனம் நிற்கும். கொள்ளை முழுவதும் விதவிதமான செடிகள் பூக்கள் வீட்டுக்கு தேவையான காய்கள் பழங்கள் அனைத்தும் வளர்த்து பராமரித்திருந்தனர். ஒருபுறம் முழுவதும் கூண்டு அடைத்து புறா, குருவி வகைகள் வளர்கிறார்கள். “என்னடா இவள் சுற்றுப்புறத்தை பற்றியே இப்படி பேசுற கதைக்கு வர மாட்டேங்கிறா, அப்படித் தானே பார்க்குறீங்க. என்ன செய்ய இது எல்லாம் நம்மளோட கடைசி வரை பயணிக்க போகுது. அதனால்தான், சரி வாங்க நம்ம வீட்டுக்குள்ள போவோம்”.
சூரியன் அழகாக தன் கதிர்களை மேற்கு வானத்தில் பறப்ப, சந்திரன் மெல்ல விடுதலைப்பட்டு இருள் சூழ்ந்த வானம் வெளிச்சத்தை பரப்பியது. நேற்றுதான் நம் கதையின் நாயகன் தன் குடும்பத்தோடு தன் வீட்டுக்குள் கிரகப்பிரவேசம் செய்திருந்தான். ஆம் இதுவரை இன்பாவின் குடும்பமாக இருந்தது, இன்ஷித் குடும்பமாக மாறி இருக்கிறது. நேற்று வந்திருந்த இன்பாவின் குடும்பத்தினர் அனைவரும் செல்வதற்கு மணி பத்தை கடந்திருந்தது. இன்பாவின் 30 நாள் படைப்பு முடிந்து இன்ஷித்துடன் இலஞ்சிதா மற்றும் குழந்தைகள் பாலு மீனா இன்பாவின் அப்பா அம்மா முறையாக வந்து அவர்களை ஒப்படைத்து விட்டு சென்றிருந்தனர். மணி அதிகாலை 5 நெருங்க என்றும் முழிப்பது போல் இன்றும் இன்ஷித்திற்கு முழிப்பு தட்டியது. முழித்தவனுக்கு ஏனோ தன் உடலை அசைக்க முடியவில்லை. பழக்கமற்று கனத்த தன் உடலை தன் கண்கள் கசக்கி நன்றாக முழித்துப் பார்த்தான். பார்த்தவனுக்கு தன்னால் புன்னகை பூத்தது.
ஆம் தான் பிறவா மகளான இதிகா அவனை தன்னோடு இறுக்கி அணைத்து ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தால். அவளின் தலையை வாஞ்சையோடு தழுவியவன் சற்று தள்ளி படுத்திருந்த தன் மற்றொரு பிறவா மகளான இரினாவையும் தன் மனையாளையும் அதே வாஞ்சையோடு பார்த்தான். இருவர் முகமும் ஆழ்ந்த நித்திரையில் இருந்தாலும் ஒரு இறுக்கம் இருக்கத்தான் செய்வது. தன்னால் அவனுக்கு நேற்று இரவு நடந்தது ஞாபகம் வந்தது அனைவரும் சென்றதும் ஹாளில் ஓரத்தில் சாய்ந்து நின்றிருந்த தன் மனையாலையும் தன் இரு மகள்களையும் கண்டவனுக்கு சிறு புன்னகை அரும்பியது. ஆனால் சிரித்தால் சரியாக வராது என்று அவனுக்கு தெரியும். அதனால் தன்னை அமைதிப்படுத்திக் கொண்டு வழக்கமான தன் இறுக்கத்தை தத்தெடுத்துக் கொண்டான்.
எப்பவும் அவனோடு இணக்கமாக இருக்கும் இதிகா கூட புதிய இடத்தை கண்டு மிரண்டு தான் நின்றாள். இன்பாவின் வீடு விசாலமானது அனைத்து வசதியும் கொண்டது. இன்ஷித் என்னதான் இரு வீடுகளையும் சேர்த்து ஒரு வீடாக கட்டி இருந்தாலும் ஒரு தளம் கொண்ட வீடு தான். அது போக இன்பா வீட்டின் பாதி அளவு தான் இலஞ்சிதாவின் பிறந்து வீடு. இதைவிட சற்று பெரியது என்னதான் நன்றாக சம்பாதித்து இருந்தாலும் இன்ஷித் வேறு இடத்தில் வீடு கட்ட நினைக்கவில்லை .மனையாக 20 சென்ட் நிலம் வாங்கி இருந்தாலும் அதில் தோட்டம் தான் அமைத்திருந்தான் .ஒரு பக்கம் முழுவதும் மா மரங்களும் மறுபக்கம் தென்னை மரமும் அமைத்திருந்தான். இந்த வீடு அவனுக்கு இதுவரை போதுமானதாகவே இருந்தது .ஆனால் இப்போது அவனுக்கு சற்று பெரிதாக கட்ட வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது .அவர்கள் கண்களில் இருந்து மிரட்சியை அதற்கு காரணமாக இருந்தது. அவர்கள் பிறந்த இடத்திற்கும் வாழ்ந்த இடத்திற்கும் இந்த இடத்திற்கும் மலைக்கும் மகடுக்கும் வித்தியாசம் இருந்தது. போர் தண்ணீர் கிடையாது நல்ல தண்ணீரை மோட்டார் வைத்து இங்கே நிறைத்து வைத்து அதை பயன்படுத்திக்கொள்ள வேண்டும். அதை தவிர்த்து அனைத்து வசதியும் கொண்டதுதான் இன்ஷித் வீடு. தார்சு வீடாக இல்லாமல் ஃபால்ஸ் சீலிங் அமைத்து வீடு முழுவதும் குளிரூட்டி பொறுத்து இருந்தான்.
தன் சிந்தனைக்குள் அவன் சுழன்று கொண்டிருக்க தன் தாய் யசோதையின் குரலில் நிகழ்காலத்துக்கு வந்தான். “இன்ஷி”, என்றவாறு அவர்களை கண்ணால் காட்டினார். அவன் கண்களை ஒரு முறை மூடித் திறந்து தான் பார்த்துக் கொள்வதாக அவர்களுக்கு சமீங்கை செய்துவிட்டு, “பட்டுக்குட்டி”, என்றான் தன் கைகளை விரித்தவாறு அங்கே இலஞ்சிதா அருகில் ஒன்றி நின்றிருந்த இதிகாவை பார்த்தான். அதில் நிமிர்ந்து இதிகா அவன் கண்களை நேராக பார்த்தவள், என்ன கண்டாளோ, “ இன்ஷிபா”, என்று வந்து சரணடைந்தால். அதில் அவன் மூச்சு பலமாக வெளியே வந்தது .அந்த நிமிடம் தான் உணர்ந்தான் இவ்வளவு நேரம் தனக்குள் இருந்து இறுக்கத்தை. அவளை ஒரு கையில் தூக்கி இரினாவை நோக்கி வருமாறு கையசைத்தான். ஆனால் அவள் இன்னும் இலஞ்சிதாவோடு ஒன்றி நிற்க, அவன் இலஞ்சிதாவிடம் ஒரு அழுத்தமான பார்வையை செலுத்தினான்.
அவன் அவன் தன்னை அழுத்தத்தோடு பார்ப்பதை உணர்ந்தாலும் தன்னை அனைத்து நின்றவளை தனக்கு ஒரு ஆதரவு கிட்டியாதாக நினைத்து இறுக பற்றி கொண்டால் பெண்ணவள். அவன் தன் அழுத்தமான காலடிகளுடன் இதிகாவை தூக்கி வைத்தவாறு இவர்களை நோக்கி வர, தாயும் சேய்யும் அவன் முன்னே வரும் ஒவ்வொரு அடிக்கும் அவர்கள் பின்னே நகர்ந்தனர். அந்தோ பாவம் வீடே சிறியது தானே ஹாள் எவ்வளவு இருந்து விடப்போகிறது. பின் சுவர் முட்டி நின்றார்கள். இதில் இன்ஷித் முகம் தன்னால் புன்னகை பூத்துக் கொண்டது. அவன் நிற்காமல் முன்னேற இருவரும் சுவற்றுக்குள் புதைந்து தான் போனார்கள். அவன் நெருங்க இவர்கள் பயத்தில் தன்னால் கண்களை இறுக மூடிக் கொண்டனர்.
சற்று நேரம் எந்த ஒரு செயலும் நடக்காமல் போக இலஞ்சிதா மெல்ல கண்களைத் திறந்தால். திறந்த கண்களை ஆச்சரியத்தில் விரித்தாள். அந்த நிசப்தா அமைதியில் இரினாவும் கண்களை திறந்து பார்த்தால். அன்னை முகத்திலிருந்து அதிர்ச்சியில், அவள் தன் அன்னையின் பார்வையை பின் தொடர்ந்தால். அங்கு இன்ஷித்தோ சோபாவில் இதிகாவை மடியில் அமர்த்தி அமர்ந்திருந்தான்.
“அண்ணி”, என்ற குரல் மிக அருகில் கேட்க இலஞ்சிதா அதே அதிர்ந்த கண்களுடன் குறல் வந்த திசையை பார்த்தால். “என்ன அண்ணா, அண்ணிக்கு வீடு சுற்றி காட்டலையா”, என்று அவளின் அதிர்ந்த முகத்தை பொறுப்பெடுத்தாமல் அவன் கேட்க, “ எங்கடா ,சுற்றி இருந்த இடத்தை விட்டு நகர்ந்து முதல்ல வந்து சோப்பால அமரச் சொல்லுங்க அண்ணியையும் உன்னோட பெண்னையும்” , என்றான் இன்ஷித் , “அது”, என்று இலஞ்சிதா தடுமாற, “ டேய் இரினா சித்தப்பா கிட்ட வா, அம்மா வருவாங்க”, என்று அவளின் கையை பிடித்து இழுத்து வந்து மற்றொரு சோப்பாவில் அமர்ந்தான். இப்போது எங்கே சென்று அமர்வது என்று இலஞ்சிதா யோசிக்க, “அம்மா நீங்க இன்ஷித் பக்கத்துல உட்காருங்கள் வாங்க”, என்று ஒரு கையில் டம்ளர்கள் அடுக்கப்பட்ட ட்ரேயுடன் மற்றொரு கையில் அவளையும் அழைத்து வந்து தன் மகனின் பக்கத்தில் அமர்த்தினார். இன்ஷித் முகத்தில் புன்னகை விரிந்தது.
இரினாவுக்கு கபிணேஷ் பாலை அருந்த கொடுக்க இதிகாவிற்கு இன்ஷித் கொடுத்தான். அவர்கள் இருவரும் அருந்தி முடிக்கவும். “ டேய் வாங்கடா பட்டு லட்டு ரெப்ரெஷ் பண்ணிட்டு வருவோம்”, என்று கபிணேஷ் அழைத்துச் செல்ல, இன்ஷித்திடம் இருக்கும் தயக்கம் ஏனோ இரினாவுக்கு ஏனோ கபிணேஷிடம் கிடையாது. இருவரும் சென்றவுடன் மீதம் இருந்த ஒற்றை டம்ளர் பாலை யசோதா இன்ஷித்திடம் கொடுத்து நீ குடித்துவிட்டு மீதியை இலஞ்சிதாவிடம் கொடுக்குமாறு கொடுத்தார். இன்ஷித் அதில் நிமிர்ந்து தன் அன்னையைப் பார்க்க இலஞ்சிதாவோ அசையவே இல்லை. ஆனால் அவள் உடல் இறுகுவதை இன்ஷித்தால் உணர முடிந்தது. ஆனால் இவள் இப்பிடி நத்தை தன் கூட்டுக்குள் ஒடுங்குவது போல ஒதுங்கினால் இரினாவும் அதை தானே செய்வாள் என்று உணர்ந்தவன், ஒரு முடிவுக்கு வந்தவனாக டம்ளரை எடுத்து அதை சரிபாதி அருந்திவிட்டு தன் சரிபாதியிடம் நீட்டினான். அவள் சோப்பாவின் நுணியை தன் இரு கைகளால் இறுக பற்றிக் கொள்ள, அவள் வாங்காமல் இருப்பதை பார்த்து யசோதா , “ அம்மா இந்தா அவன் குடித்து நீட்டுகிறான் பாருங்கள், வாங்கி அருந்துங்கள், நேரம் ஆகிறது பிள்ளைகள் நாளை பள்ளி செல்ல வேண்டும் அல்லவா, கால காலத்தில் போய் படுங்கள்”, என்றார் அவளின் தயக்கத்தை கண்டு கொள்ளாதவாறு .அவள் அசையாமல் இருக்க என்ன நினைத்தானோ இன்ஷித் , “இந்தா இலஞ்சி”, என்று அவள் வாயின் அருகில் அவன் கொண்டு செல்ல ,அவள் செய்வது அறியாது வேகமாக அதை வாங்கி ஒரே மூச்சில் பருங்கிக் கீழே வைத்தாள். அதில் அவனது புன்னகை மேலும் விரிந்தது. “ சரிடா பிள்ளைகள் என்கூட”, என்று யசோதை ஆரம்பிக்க, “ அது சரி வராது அம்மா”, என்று இன்ஷித் முடித்து விட்டான். இதில் அடுத்து என்ன வரப்போகிறதோ என்று இலஞ்சிதா யோசிக்க, “ இரி இதி வாங்க”, என்று இன்ஷித் குரல் கொடுக்க , “இன்ஷிப்பா”, என்று இதி இரவு உடையில் மாறி அவர்கள் இருவரும் கபிணேஷோடு வந்தனர். “ வாடா பட்டு”, என்று எழுந்து அவளை தூக்கி, “ அப்பம்மாக்கு இரவு வணக்கம் சொல்லுங்க தூங்க போகலாம்”, என்றான்.
இரினா வந்தவள் இலஞ்சிதா அருகில் நிற்க, “ குட் நைட் அப்பம்மா”, என்றாள் இதிகா அழகாக இருக்கைகளை கூப்பி. “ குட் நைட் சித்தா”, என்றால் கபிணேஷிடம். அவன் இரினாவை பார்க்க அவள் பேசாமல் நிற்க, கபி அதை கவனித்து விட்டு, “ குட் நைட் மை டியர்”, என்று இருவரையும் கண்ணம் தொட்டுக் கொஞ்சி, “ போய் படுங்கடா பிள்ளைகளா அம்மாச்சி போங்க”, என்றார் யசோதா இலஞ்சிதாவிடம். திரும்பி அவள் மெல்லமாக தலையாட்டினாள். பின்தான் இரினா போதுவாக இருவருக்கும் , “ குட் நைட்”, சொன்னால். இதை பார்த்த இன்ஷித்துக்கோ முதலில் இவளை சரி செய்தால் தான் இரினா வழிக்கு வருவாள் என்ற முடிவுக்கு வந்தான்.
தொடரும்