எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

வேதம் - 01

admin

Administrator
Staff member

வணக்கம் நண்பர்களே!

நீண்ட இடைவெளியுடன் உங்களை சந்திக்க வந்துவிட்டேன். புதிய தொடக்கம் புத்திய புதினம். நீயே என் ஜனனம் என் முதல் புதினம் என் எழுத்துக்கு கிடைத்த பெரிய அங்கீகாரம் அது. அதன் கதாபாத்திரங்களான அக்கண்யன் மற்றும் ஜனனியின் வாரிசின் கதை. பலரின் மனதை கொள்ளை கொண்ட உங்கள் அக்கண்யனின் இடத்தை அவர்களின் வாரிசு நிரப்பும் என்று நம்புகிறேன்.
என் எழுத்தை படிக்கிறவர்கள் உங்கள் கருத்துக்களை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள்.
நன்றி

அன்புடன்
ப்ரஷா


அத்தியாயம் - 1

“சிவ ஷக்திய தூயது பவதி ..​

1735826961240.png

சத்தியப் பிரபிவிதும் ..​

நசே தேவம் தேவோனகள​

குசலஹச்பந்திதுமபீ ..​

அகஸ்த்மாம்.. ஆராத்யாம்..​

ஹரிஹர விரிஞ்சாதி பிறவி..​

ப்ரனம்தும் ஸ்தோதும் ம ..​

கதமஹிர்த்த புண்யாக பிரபாவதி... ஆ..​

ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ​

ஜகத் காரணி நீ பரிபூரணி நீ​

ஜகத் காரணி நீ பரிபூரணி நீ​

ஒரு மான் மழுவும் கூன் பிறையும்​

சடை வார் குழலும் பிடை வாகனமும்​

கொண்ட நாயகனின் குளிர் தேகத்திலே​

நின்ற நாயகியே இட பாகத்திலே​

ஜகன் மோஹினி நீ சிம்ம வாஹினி நீ.."​

பாடலைத் தொடர்ந்து பூஜை மணி ஓசை. இதயம் தொடும் தேன் கானம் ஒரு கானக்குயிலின் நாத இசையாக மூகாம்பிகையை நோக்கி ஓர் உன்னத துதி. அவள் பல வருடங்களுக்கு முன்னர், ஓர் கர்விக்கென பிரம்மன் பார்த்து பார்த்து வரைந்த அழகோவியம்..​

அவள் ‘ஜனனி அக்கண்யன்'​

என்றுமே மனைவியின் கீர்த்தனைக்கு பூஜையறை வாசலில் தவம் இருப்பவன், இன்றும் அவள் குரலில் தானாக தடம் தேடி வர, ஆரத்தி தட்டோடு ஜனனி பூஜை அறையிலிருந்து வெளியே வரவும் சரியாக இருந்தது. அன்று அக்கண்யனை கொள்ளை கொண்ட அதே அழகு மனைவி. வெள்ளிக் கம்பிகள் போல் ஆங்காங்கே சில வெள்ளை முடிகள். மற்ற படி சாந்தமும், அன்பும் அவனைக் காணும் பார்வையில் இருக்கும் காதலிலும் துளி மாற்றமில்லை. இதழ்கள் மெல்ல விரிய ஆரத்தி தட்டை கணவனை நோக்கி நீட்டியவள் பார்வை, ஆறடி உயரத்தில் துளி மாறாத கம்பீரத்தோடு மீசையில் ஓர் ரெண்டு வெள்ளை முடிகள், அதுவும் அவனுக்கு கொள்ளை அழகு சேர்க்க, தன்னில் குறையா காதலோடு நின்று கொண்டிருக்கும் கணவனில் தொட்டு மீண்டது.​

ஆரத்தியை கண்களில் ஒற்றிக் கொண்டவன், தட்டில் இருக்கும் குங்குமத்தை ஜனனிக்கு வைத்து விட்டான். பூஜை தட்டை உள்ளே வைத்து விட்டு வெளியே வந்தவள், கணவனுக்கு காப்பியை கொண்டு வந்து கையில் கொடுத்தாள்.​

அருகிருந்த மனைவியின் முகத்தில் இருக்கும் துளி வேதனையின் சாயல், அவன் குத்தீட்டி விழிகளிலிருந்து தப்பவில்லை. சும்மாவா? முப்பத்தியாறு வருட திருமண பந்தம்! மூன்று ஆண் குழந்தைகள், இரு பெண் பிள்ளைகளென கண்ணுக்கு நிறைவான குடும்பம்.​

மூத்தவன் ஆத்வீக், இவன் உயிர்த் தோழனான அரவிந்தனின் மூத்த மகள் ராகவியைக் காதலித்து கைபிடித்து, ஐந்து வருடத்தில் நான்கு வயதில் ஒரு பெண் குழந்தை. இன்று தந்தையின் தொழிலை திறம்பட நடத்தி, இலங்கையின் பெரும் இளம் தொழிலதிபர்களில் அவனும் ஒருவன்.​

இரண்டாவது மகன் ஆதவ் மென்மை ஆனவன். லண்டனில் மருத்துவம் முடித்த நியூரோ சர்ஜன். இந்தியாவில் ஜனனம் மல்டி நெஷனல் ஹாஸ்பிடலின் சேர்மன். தமிழ் நாட்டில் ஒரு ஆசிரமத்தை சேர்ந்த நர்மதா என்ற வெகுளிப் பெண்ணைக் காதலித்து கைபிடித்த மூன்று ஆண்டில், ஒரு வயதுப் பெண் குழந்தை இருக்கிறாள்.​

ஐவரில், அக்கண்யனை போல ஜனனியை அதிகம் தேடுவதும் இவன் தான். அடுத்த இரட்டை பெண் வாரிசுகளான அனிகா, அனன்யா இருவரும் ஆதவ்வின் நண்பர்களான, தமிழ் நாட்டை பூர்வீகமாகக் கொண்ட லண்டன் தொழிலதிபர்களான அர்ஜுன், அஜய் எனும் இரட்டையர்களை திருமணம் செய்து குழந்தைகளோடு லண்டனில் வசிக்கின்றனர்.​

இப்படி ஒரு பெரிய குடும்ப அமைப்பின் தலைவன். அனைவரையும் வழி நடத்தும் அவனுக்கா தெரியாது, மனைவியின் சுணக்கம்.​

ஜனனியின் எண்ணங்களில் உலா வந்த அதே நபரைத் தான் அக்கண்யனும் நினைத்தான். அந்த ஒருத்தன் மட்டுமே, அத்தனை பேரின் தலையிலும் நித்தமும் அமர்ந்து ஆளுகிறவன்.​

தன் சிந்தையில் கலைந்தவன், மனைவியை கையைப் பிடித்து தன்னருகில் அமர்த்திக் கொண்டு..​

“ஜானு என்னாச்சு? உன் முகம் சரியில்லையே?"​

அவன் தாடையைத் தடவ, ஒரு இன்ஸ்டன்ட் விரிந்த புன்னகையோடு..​

“என்னத்தான் எனக்கென்ன? நான் நல்லா தானே இருக்கேன்."​

“ஓ! இஸ் இட்? என் பொண்டாட்டி எப்ப சிரிப்பா, எப்ப சிணுங்குவா, எப்ப அழுவான்னு தெரியாதவனா நான்? ஹம்.. நான் அக்கண்யன்டி!"​

என்றவன் மீசையை முறுக்க. அவன் குறையாத கர்வத்தை, ஒற்றைப் புருவம் ஏறி இறங்கப் பார்த்தவள்.​

“மாறவே இல்லை"​

“என்னவாம்.."​

அவனைப் போலவே தொனியில்,​

“நான் அக்கண்யன்டின்ற தற்பெருமை தான்"​

அவளைச் செல்லமாக முறைத்தவன்,​

“பேச்ச மாத்தாத பேபி. வாட் ஹப்பன்?" அவளிடம் நீண்ட மௌனம்.​

“ஆத்விக், ராகவி, குட்டி எல்லாம் எங்க?"​

பெரிய மகனை எண்ணியதும், முகம் கொள்ளாப் புன்னகையோடு,​

“அரவிந்த் அண்ணா வீடு வரைக்கும் போயிருக்கான். இன்னைக்கு ஏதோ ஸ்பெஷல் பூஜைன்னு அண்ணி வரச் சொன்னாங்க. நான் தான் மூனு பேரையும் அனுப்பி வைத்தேன்."​

“ஹம்.. ஓகே!" என்றவன் ஒரு மிடறு அருந்தி விட்டு,​

“காபி குடிச்சியா ஜனனி?"​

“ம்ம்.. ஆமாங்க"​

“சாப்பிட்டியாடி?"​

“ஹூ..ஹூம்.. உங்களோட தாங்க"​

“கவலையா இருக்கியா பேபி?"​

“ஆமாங்க.."​

‘இஸ்!' என்றவள் நாக்கை கடித்துக் கொண்டு.​

“அது எப்படி அத்தான் என் வாயவே எனக்கு எதிராக திருப்பி விடுறீங்க? நானும் நீங்க பேசும் போது, உஷாரா இருக்கணும்னு தான் நினைக்கிறேன், எங்க? முடிய மாட்டேங்குது!"​

இதழ் பிரியா புன்னகை ஒன்றை உதிர்த்தவன்,​

“ஜனனி!" என்றான் அழுத்தமாக. அந்த ஒற்றை உச்சரிப்பு சொன்னது, பதில் சொல்லியே ஆக வேண்டும் என்று. ‘இனியும் கணவனிடம் மறைக்க முடியுமோ?’​

“அ.. அவள பார்த்தேங்க.."​

புருவம் சுருக்கி மனைவியை அக்கண்யன் கேள்வியாக நோக்க..​

“அது சர்.. சர்வா.. ம.."​

“ஜனனி!" என்றவன் குரலின் கடுமையில் விழியோரம் ஒரு துளி கோடாக வழிய.. அத்தனை நேரம் இறுகிப் போயிருந்தவன்,​

“ஹம்ச்.. என்னம்மா இது காலம் காத்தால அழுதுக்கிட்டு"​

அவளை இழுத்து அணைத்தவன், “என்ன தான்டி பண்றது? உன்கிட்ட அமைதியா பேசணும்னு நினைச்சாலும், அப்போ அப்போ பிறவிக் குணம் எட்டிப்பார்க்குதே!"​

அவள் இரு கன்னங்களையும் கைகளில் தாங்கியவன், மனைவியின் விழிகளை ஆழமாக நோக்க, அவள் வாய்ப் பூட்டு, தானாகத் திறந்தது.​

“அவளப் பார்த்தேங்க. ஸ்ரீலங்கா இல்ல, இந்தியால. அதும் டீவில..." என்றவள் எச்சிலை வேதனையோடு சேர்த்து விழுங்கியவள்.​

“தமிழ் நாட்டு மினிஸ்டரோட வைஃப் லீட் பண்ண ஈவன்ட்ல நடந்த வாக்குல (walk) அவளும் இருக்கிறதைப் பார்த்தேன். அந்த ஃபங்ஷன லைவ் ஈவன்டா, டீவில டெலிகாஸ்ட் பண்ணி இருந்தாங்க. அதப் பார்க்கவும், என்..னால.. என்னால.. தாங்கிக்க முடியல அத்தான்.​

சர்வா! என்னோட சர்வா! ஐயோ! அத்தான்..! நான் தானே, நான் தானே காரணம். இது எல்லாத்துக்கும் நான் தானே காரணம். அவன் என்னை விட்டு தூரப் போகவும், நான் தானே காரணம். இப்போ அவ..ன்.. அவன் இந்த நிலைமைக்கு ஆளாகவும், நான் தானே காரணம்!"​

அவள் கதற, மனைவியின் அழுகையில் உடல் இறுக, அவள் அழுகைக்குக் காரணமான அத்தனை பேரையும் கொன்று குவிக்கும் வெறியே எழுந்தது. நொடியில் கணவனின் மாற்றத்தைக் கண்டு கொண்டவள்.​

“நான் ஒரு கிறுக்கச்சி. போதும் அத்தான், டென்ஷன் ஆகாதீங்க. நான் ஏதோ ஆதங்கத்துல பேசிட்டேன்."​

“ஹம்.." என்றவனும் அமைதி காத்தான்.​

அங்கே நிலவிய அமைதியை அவன் மனைவியே கலைக்கும் வண்ணம்..​

“அத்தான்"​

“பேபி!"​

“எனக்கு அவன.. பாக்கணும்"​

“ஜனனி!" அவன் அதட்டலில்.​

“ப்ளீஸ் அத்தான், மறுத்துறாதீங்க..."​

“ஹம்ச்!"​

“எனக்காக.. ப்ளீஸ் அத்தான். நீங்க நினைத்தா முடியும்!"​

“பிடிவாதக்காரன்டி.."​

“உங்களையும் விடவா?"​

“நீ நினைக்கிற தோற்றத்தில், நினைக்கிற குணத்தோட அவன் இல்லைடி!" என்றவன் மட்டுமே அறிந்த உண்மைகளை, மனைவி அறிய நேர்ந்தால் தாங்கிக் கொள்வாளா? அக்கண்யனுக்கு இதயம் வலித்தது.​

“அவன் எப்படி இருந்தாலும், நமக்கு சொந்தமானவன் தானே அத்தான்."​

பெருமூச்சை விட்டவன்.​

“ஜனனி நீ ரட்சகன்னு நினைக்கிறவன், ராட்சசன்டி!"​

“எனக்கு அவனைப் பாக்கணும். அதுவும் அவன் ஸ்ரீலங்கா வரணும். உங்களால முடியுமா முடியாதா?"​

குரலில் அழுத்தமும் பிடிவாதமும் மண்டிக் கிடக்க.. மனைவி கேட்டு ஒன்றை அக்கண்யன் இல்லை என மறுப்பதா?​

“பிடிவாதக்காரிடி நீ. அவன் என்னை மாதிரினு சொல்லுவ. பட் உன்னை மாதிரி அவன் பிடிவாதக்காரன்."​

அவள் முகத்தில் இறுக்கிப் பிடித்திருந்த பிடிவாதத்தில்,​

“ஆல்ரைட் அவன் வருவான். ஆர் யூ ஹேப்பி பேபி?"​

வேகமாகத் தலையாட்டியவள், அவன் தோளில் சாய்ந்து கொண்டாள்.​

காலங்கள் சென்றாலும் காதலுக்கு வயதாகுவதில்லையே இங்கும் அதே.​

அரவிந்தன் வீடு..​

“ஆத்விக் இன்னையோட பழைய எக்ஸ்போர்ட் ஆர்டர் எல்லாம் முடிச்சிடலாம். நெக்ஸ்ட் வீக்ல இருந்து வந்து புது எக்ஸ்போர்ட் ஆர்டர, கோ த்ரூ பண்ணலாம்."​

“ஓகே மாமா, தாராளமா பண்ணிடலாம்."​

என்றவன் நேரத்தை பார்த்து மனைவிக்கும் கண்ணைக் காட்டிவிட்டு,​

“நானும் கிளம்புறேன் மாமா. வந்து ரொம்ப நேரம் ஆச்சு. அம்மா மட்டும் தனியா இருப்பாங்க. நானும் ஆபீஸ் போகனும். சாயங்காலமா அப்பாவோட அம்மா வருகிறதா, சொல்லச் சொன்னாங்க."​

“சரி கண்ணா." எனவும், அருகில் அமர்ந்திருந்த கவிதா தயக்கத்தோடு,​

“ஆத்விக்!" என மெதுவாக அழைத்தாள்.​

என்னதான் அவர் மீது தீராத கோபம் இருந்தாலும், அவன் அதை அவ்வளவு எளிதில் காட்டிக் கொள்வதில்லை. ஒன்று அவர் வயது, இன்னொன்று தன் தந்தையின் உயிர்த்தோழன், தன் பிரிய மாமனின் மனைவி, மேலும் தன் மனைவியின் தாய், இதையெல்லாம் விட முக்கிய காரணம், அவன் அன்பு அன்னை ஜனனி. அவர் ஒற்றை சொல், ஒரு துளிர் கண்ணீர் போதுமே அக்கண்யனையும் அவன் இரத்தங்களையும் அசைக்க. ஆத்வீக்கையும் அதுவே கட்டிப் போட்டது. வயதில் மூத்தவர் அழைக்கையில் நிராகரிக்க விரும்பாதவனாக,​

“சொல்லுங்க."​

அவன் வெகு நாசுக்காக ‘அத்தை' என்னும் சொல்லைத் தவிர்த்ததை, அங்கிருந்தவர்கள் கண்டு கொண்டாலும், எதிர் கேள்வி கேட்கவில்லை.​

“கண்ணா.. இந்த அத்தையை மன்னிக்க மாட்டியா?"​

பெருமூச்சு விட்டவன், “மன்னிக்கிற அளவு ஏதும் தப்பு செய்தீங்களா, என்ன?"​

அவரை நோக்கி வெகு அலட்சியமாக நக்கல் பார்வையோடு கேள்வி எழுப்ப, என்னதான் மனைவியில் பிழை என்றாலும், அதை சகிக்க முடியாத அரவிந்த்...​

“ஆத்விக்!" என்றார் அழுத்தமாக. அதை விட அழுத்தமாக,​

“சொல்லுங்க மாமா!" என்றான்.​

தந்தையும், கணவனும் எதிரெதிரே புலியும், சிங்கமுமாக உறுமிக் கொண்டிருக்க, ராகவி பயந்து போனாள்.​

“என்னங்க ப்ளீஸ்.."​

தன் தோளை அழுத்திப் பிடித்த மனைவியின் கரத்தின் மீது கரம் வைத்து அழுத்தியவன், அவளைப் பார்த்து கண்ணை சிமிட்டி விட்டு அமைதி காக்க, மீண்டும் கவிதாவோ,​

“ஆத்விக், நான் அவளைப் பார்த்தேன், கண்ணா."​

ஆத்வீக்கின் முகத்தில் ரௌத்திரம் வெடிக்கத் தொடங்கியது. நடந்த பாவத்தில் பெரும் குற்றம் அன்னை புரிந்தது என ராகவி அறிந்தே இருந்தாள். அவரின் இந்தச் செய்கை, அத்தனை மனதுக்கு ஒப்பானதாக இருக்கவில்லை.​

“கவிதா, அமைதியா இருக்க மாட்டியா?"​

அரவிந்த் அதட்டவும், கண்கலங்கியவள்.​

“என்னங்க நீங்க? என்ன இருந்தாலும், அவ நம்ம இரத்தங்க. எப்படிங்க விட முடியும்?"​

“கவிதா!" என்று அரவிந்த் இறுகிய குரலில் கத்த. அதையெல்லாம் இறுகிய முகத்தோடு பார்த்துக் கொண்டிருந்த ஆத்விக், நேரடியாகத் தன் அத்தையை நோக்கி,​

“சோ.. என்ன செய்யணும்னு நினைக்கிறீங்க?"​

“இல்ல கண்ணா, அவளைப் பார்க்கணும் போல இருக்கு."​

“அது உங்க பிரச்சனை. இதுல என்னோட பங்கு என்ன இருக்கு?"​

“அவ இங்க வந்தா நல்லா இருக்கும்னு தோணுது. நான் கூப்பிட்டுக்கட்டுமா? நாம ஏன் அவள மன்னிச்சு சேர்த்துக்கக் கூடாது?"​

அவ்வளவுதான், அதுவரை காத்த பொறுமை காற்றில் பறக்க, பட்டென்று எழுந்தவன் கைபடும் தூரத்தில் இருந்த அலங்கார சாடியை, கையால் குத்து விட, நொறுங்கிச் சிதறியது. அவன் கோபம் அத்திப் பூப்பது போல்.. வெகு அபூர்வமானது. ஆனால், கோபம் கொண்டால் ஆத்விக் அக்கண்யனை விட ஆபத்தானவன்.​

இது அரவிந்தனுக்கு நன்கு தெரியும். மனைவி தெருவில் போன தேரைப் பிடித்து இழுத்து விட்டாள் என்று அறிந்தவன் பதட்டத்தோடு,​

“ஆத்விக் கண்ணா! அவ ஒரு முட்டாள் கிறுக்கி இவ்வளவு பட்டும் புத்தி வரல. இவ சொன்ன மாதிரி இந்த வீட்டுக்குள்ள அவ வந்தா, இவளுக்கு என் வாழ்க்கையில் இடம் இல்லைன்னு இவளுக்கே நல்லாத் தெரியும்!"​

என்றதும் கவிதா தேம்பிக் கொண்டே,​

“பாவங்க, தனியா இருக்கா. நாம ஆதரிக்காம யாரு ஆதரிப்பதா? அவ வாழ்க்கை வேணாம்னா இப்படியே விட முடியுமா?"​

அதை கேட்டவன் மீண்டும் ரௌத்திரமாகி,​

“நான் அக்கண்யனும் இல்ல, அங்கே இருக்கானே ஒருத்தன் அவனும் இல்ல. நான் ஆத்விக் அக்கண்யன். அவன் மன்னிக்கவும், மறக்கவும் மட்டும் தான் செஞ்சான். என்னோட அப்பா தள்ளி நிறுத்தச் செய்தார். ஆனால் நான் அப்படி செய்யமாட்டேன். அவ இந்த ஸ்ரீலங்கால கால் எடுத்து வைக்கிற தினம் தான், கடைசி நாளா இருக்கும்.​

எங்க அம்மா பேச்சைக் கேட்டு ஒரு முறை விட்டுட்டேன். ஆனால், இனி உருத் தெரியாம அழிச்சிடுவேன். மன்னிக்கவும் மாட்டேன். மறக்கவும் மாட்டேன். எவ்வளவு ஈசியா பேசிட்டீங்க, நீங்க! செஞ்ச காரியத்துக்கு உங்க மூஞ்சிலேயே முழிச்சிருக்கக் கூடாது. இந்த வாசப்படிய, நானும் என் பொண்டாட்டி பிள்ளையும் மிதிச்சு இருக்கவே கூடாது. ஆனா.. வந்து போறேன்னா, இதோ நிக்கிறாரே..."​

என்று அரவிந்தன் இதயத்தின் மீது கை வைத்துக் காட்டியவன்.​

“இந்த மனுஷனுக்காகவும், வருணுக்காகவும் என் பொண்டாட்டிக்காகவும் மட்டும்தான். அதையும் கெடுத்துறாதீங்க. அங்க ஒருத்தன் அரக்கனாகவே மாறி இருக்கான். அவனை நினைச்சாலே அவளைக் கண்டந்துண்டமா வெட்டி களனி ஆத்துல வீசணும்னு வெறி, வெறியா வருது. என்னை சாந்தமானவன்னு நினைச்சுறாதிங்க, எங்க அம்மாவ மறுபடியும் தூண்டிவிடலாம்னோ, இல்ல.. பச்சாதாபத்தை உண்டாக்கலாம்னோ, அவளை மறுபடியும் உள்ள கொண்டு வரலாம்னோ நினைச்சீங்க, எனக்குள் இருக்க சாத்தான பார்க்க வேண்டி வரும். அந்த நேரம் இதோ இங்கே இருக்கிறாரே, அவரால கூட என்னைக் கட்டுப் படுத்த முடியாது!"​

என்றவன் விழிகளை மூடி தன்னைக் கட்டுப்படுத்தியவன். தன் மாமனை அணைத்து விடுவித்து.​

“சாரி மாமா! நானும் கண்ட்ரோலா இருக்கணும்னு தான் நினைக்கிறேன். ஆனா ஒவ்வொரு முறையும் இவங்க என் பொறுமையை சோதிக்கிறாங்க! நாங்க மறக்கணும்னு நினைக்கிறோம். எங்களை மறக்க விடச் சொல்லுங்க. பட்ட அவமானமும், அடியும் நெருப்பா காந்துது. அந்த ரணங்கள் ஆறுமான்னு தெரியல. உங்களுக்குத் தெரியாததா மாமா, அப்பா எவ்வளவு ப்ராப்ளம் பேஸ் பண்ணுனாரு?​

இதோ இன்றைக்கு வரைக்கும், எங்க அம்மாவோட கண்ணீரப் பார்க்க முடியாமல் துடிக்கிறோம்.​

உங்களுக்கு தெரியாததா மாமா? அம்மா இல்லாம, பத்து நாள் கூட அதிகமா ஆதவ் இருக்க மாட்டான். அவன் லண்டன்ல படிக்கப் போன ஒரு வருஷமும், அம்மா அவனோட லண்டன்ல தங்குனாங்க. அப்படிப்பட்டவன் அம்மாவோட கண்ணீரைப் பார்த்து, கையாலாகாத தனத்தோடு இந்தியால ஓடி ஒளிஞ்சிட்டான். இது எல்லாத்துக்கும் காரணம், இதோ நிற்கிறாங்களே இவங்களும், அவளும் தான்.​

என்னையாவது மனுஷனா இருக்க விடச் சொல்லுங்க மாமா. ஏன்னா எங்க வீட்டுல இருந்த ஒருத்தன ஆல்ரெடி அரக்கனா மாத்திட்டாங்க. ஒரு வீட்டுக்கு ஒருத்தன் போதுமே..?"​

வேதனையோடு வெடித்துச் சிதறிய கணவனின் குமுறலைக் கண்டவள், மகளை தூக்கிக் கொண்டு,​

“போதும் அத்து. நீங்க ஏன் ஃபீல் பண்றீங்க. தவறு செய்தவங்க துளி வருத்தம் இல்லாம அதை ஊருக்கே வெளிச்சம் போட்டுக் காட்டிட்டு இருக்காங்க. நாம ஒன்னும் முற்போக்குவாதிகள் இல்லையே! இந்த சமூகத்தோடு ஒத்துப் போறவங்க தானே? இப்படி இருந்தும், நமக்குச் செய்த செயல் கொஞ்சம் நஞ்சம் இல்லை.​

எது நியாயம், தர்மம்னு அவங்களுக்கே தெரியும்! நீங்க யாருக்கும் விளக்கம் சொல்லத் தேவையில்ல. எனக்காகவும் பொறுமையா இருக்கணும்னு அவசியம் இல்ல. நான் இப்பவும் உங்க பக்கம் தான் நிற்பேன்!"​

என்ற மனைவியை தோளோடு அணைத்துக் கொண்டவன், அங்கிருந்து நீங்கி தன் இல்லம் நோக்கிச் செல்ல, அரவிந்தன் அப்படியே தோய்ந்து அமர,​

“நா..நான்.. ஆதங்கத்தில் பேசிட்டேன், அர்வி. நானும் தாய் தானே?"​

“ப்ளீஸ் கவிதா! என்னைக் கஷ்டப்படுத்தாத! உன் உணர்வுகளை ஆதரிக்க முடியாத இடத்துல, உன் தவறுகள் இருக்கு."​

வேதனையோடு கண்களை இறுக மூடிக் கொள்ள, அவன் கண்களுக்குள் ஒரு ஆறடி உருவம் அட்டகாசமாக, இதழ் பிரியா புன்னகையோடு வலம் வந்தது. காரை செலுத்திக் கொண்டிருந்த ஆத்விக்கும், அந்த உருவத்தின் மெல்லிய புன்னகையை எண்ணிப் பார்த்துக் கொண்டிருந்தான். அதே நேரம் ஜனனியை நெஞ்சில் சாய்த்திருக்கும் அக்கண்யனும் அவனையே எண்ணிக் கொண்டிருந்தான்.​

அவர்கள் எண்ணங்களின் நாயகன், இவர்களுக்கு வண்ணங்களை வாரி இறைக்கப் போவதில்லை எனும் உண்மை தெரியும் நாள் நெருங்கியது. அவன் ஒரு புதிய வேதம்! அதை அறிந்து கொள்வது அத்தனை எளிதல்ல.​

 

santhinagaraj

Well-known member
எல்லாரும் கோபப்படுற அளவுக்கு இருக்குற அந்த அவனும் அவளும் யாரு??
 

admin

Administrator
Staff member
எல்லாரும் கோபப்படுற அளவுக்கு இருக்குற அந்த அவனும் அவளும் யாரு??
அதுல தான் அக்கா சஸ்பென்ஸ் இருக்கு
 

shasri

Member
Ellarum amma maela romba anba irukaanga ❤ akkanya ❣️ janani love paaka romba nalla iruku ❤ avanga story padikanumae sis ❤❤ intha kadai kutty life la paerusa enna mo nadanthuruku. first episode ay suspense superb 👏👏
 

admin

Administrator
Staff member
Ellarum amma maela romba anba irukaanga ❤ akkanya ❣️ janani love paaka romba nalla iruku ❤ avanga story padikanumae sis ❤❤ intha kadai kutty life la paerusa enna mo nadanthuruku. first episode ay suspense superb 👏👏
அவங்க ஸ்டோரி அமேசான் ல இருக்கு டா நீங்க ஆடியோ novel கேட்பீங்கனா லிங்க் தாறேன்
 

shasri

Member
அவங்க ஸ்டோரி அமேசான் ல இருக்கு டா நீங்க ஆடியோ novel கேட்பீங்கனா லிங்க் தாறேன்
Super naan audio novel ah kaytukuray sis 😁😁
 
Top