எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

எனதுயிரினில் நீ! கதை திரி

Status
Not open for further replies.
உயிர் - 1

"இடியட், ஒரு வேல கொடுத்தா உங்களால அத சரியா செய்ய முடியாதா.. என்ன பண்ணி வெச்சிருக்கீங்க?" என்று உச்சகட்ட கோபத்தில் கர்ஜித்து கையிலிருந்த கோப்பை அவன் முன் மிரட்சியுடன் தலையை குனித்து நின்றிருந்தவர்கள் முகத்திலேயே தூக்கியெரிந்தான் ரிஷி வர்மன்.


ஆறடி உயரமும் அவணிந்திருந்த கோர்ட்டையும் மீறி வெளிவரத்துடிக்கும் படிக்கட்டு தேகமும் கொண்ட ஆணழகனவன்.

ஒற்றை பார்வையே பெண்களை சுண்டி இழுக்கும் வசீகரம் மிக்கது. ஆனால் அவன் கூர்விழிகளோ எவரொருவரையும் அவ்வளவு இலகுவில் அவனருகே நெருங்கவிடாது. இறுகிய தாடைக்குள் மறைந்திருந்த அதரங்கள் இளகுவதற்கான அறிகுறி இதுவரை காலமும் இருந்ததில்லை.

அவன் இத்தொழில் துறையில் காலடி எடுத்து வைத்து தற்போது ஐந்து வருடம் பூர்த்தியாகி விட்டது. சிறு முதலீட்டின் மூலம் ஆரம்பிக்கப்பட்ட அவனது நிறுவனமானது தற்போது சுற்று வட்டாரத்தில் ஆணிவேராய் பற்றி பல கிளைகளை பரப்பி அசைக்கமுடியா ஆலமரமாய் பரந்து விரிந்து காணப்படுகினது.

வளர்ந்து வரும் இளம் தொழிலதிபர்களின் பட்டியலில் முதன்மை இடத்தை தன் வசப்படுத்தி தொழில் துறையில் அழிக்க முடியா அரியாசனமிட்டமர்ந்திருக்கும் பிரபல தொழிலதிபர்களுள் ஒருவனாய் திகழ்கிறான்.

ஊசி விழுந்தால் கூட அரவம் எழும் வகையில் அமைதிப் பரவிக் காணப்பட்ட அந்த ஆறு மாடிக்கட்டிடம் இறுதித்தளம் அவன் உச்சஸ்தானி தொனியில் ஓர் நொடி அதிர்ந்தடங்கியது.

அவ்வளவு நேரம் தங்கள் வேலையில் மும்முரமாய் ஈடுபட்டுக்கொண்டிருந்த ஊழியர்களைப் பற்றி கேட்கவும் வேண்டுமா! அவன் எதற்காய் இப்படி கத்துகிறான் என்று அங்கு வேலை பார்க்கும் ஊழியர்களுக்கு புரியாது போகுமா என்ன?..

தங்கள் வேலையில் சிரந்தையோடு ஈடுபட்டுக் கொண்டிந்தவர்கள் கவனம் பன்மடங்கு அதிகரித்தது.

"த்ரீ க்ரோஸ்‌ ப்ராஜெக்ட்.. என்ன பண்ணி வெச்சிருக்கீங்க? கொஞ்சமாச்சும் பேஸிக் சென்ஸ் வேணாமா.. நாம பண்ற ப்ராஜெக்ட்னால டீலர்ஸ் இம்ப்ரஸ் ஆகணுமே தவிர்ந்து ஒரு சின்ன மிஸ்டேக்னாலயும் அவங்க அன் கம்ப்டபலா பீல் பண்ணகூடாது" என்றவன் தான் அமர்ந்திருந்த‌ சுழழும்‌ நாட்காலியிலிருந்து எழுந்து வேகத்தில் அந்நாட்காலி இரண்டடி பின்னோக்கிச் சென்று விழுந்தது.

அவன் முன் நின்றிருந்த ஐந்து ஊழியர்களுக்கும் உள்ளுக்குள் உதறல் எடுத்து விட்டது.

குறுகிய காலம் முடிக்க வேண்டிய ப்ரொஜெக்ட் என்பதால் கால அவகாசம் குறைவு காரணத்தால் அவசர அவசரமாய் செய்யப் போய் ஒருவன் தன் கவனயீனத்தால் விட்ட ஒரு கோட்டையின் வெளிப்பாடின் பிரதிபலிப்பே இது..

அக்குழுவின் தலைவனாக நியமிக்கப்பட்டிருந்த தினேஷ் எச்சிலை கூட்டி விழுங்கியபடி, "சார்…" என்று பேச முன் வந்தவன் வார்த்தைகள் ரிஷியின் கனல் கக்கும் ஒற்றை பார்வையில் தொண்டை குழியிலேயே சிக்கிக் கொண்டன.

"சட் அப் தினேஷ். எந்த எக்சியூசும் சொல்ல நினைக்காத. இந்த ஒரு சின்ன மிஸ்டேக்கால நான் என்னோட கம்பெனியோட பேருக்கு எந்த விதத்துலயும் பங்கம் விளைவிக்க விரும்பல. இனாப்.. நான் உங்களுக்கு கொடுத்த டைம் முடிஞ்சி போச்சு. ஆல் ஒப் யூ கெட் லாஸ் ஒப் மை ஆபிஸ்" கை முஷ்டியை இறுக்கி அடங்கா கோபத்துடன் அவன் கூறவும் அந்த ஐவருக்கும் தூக்கிவாரிப் போட்டது.

"ப்ளீஸ் சார் இனி இப்படி ஒரு தப்பு நடக்காது.." என்று ஈனஸ்வரத்தில் தினேஷ் இரைஞ்ச..

இன்னொருவன், "சார் இந்த தடவ மட்டும் எங்கள மன்னிச்சிடுங்க. இனி இப்படி ஒரு தப்பு நடக்காது சார் பிளீவ் மீ" என்றான் மன்னிப்பை யாசிக்கும் விதமாய்...

இதற்கெல்லாம் அசைப்பவனில்லையே அவன். இளக்கம் அடியோடு அழிந்து விட்டது.

"நான் இங்க யாருக்கும் நீங்க பண்ற சொதப்பலுக்காக மாசம் மாசம் பேமன்ட் கொடுக்கல, உங்ககிட்டயிருந்து வர பெஸ்ட் ஒர்க்காக மட்டும் தான் கொடுக்குறேன்.. உங்ககிட்ட இருந்து எந்த பெஸ்ட்டும் இல்லாத பட்சத்துல எதுக்கு நான் உங்கள என் ஆபீஸ்ல வெச்சிட்டிருக்கனும்?. நதிங் யூஸ். சோ நீங்களா ஒழுங்கு மரியாதயா இங்கிருந்து வெளிய போயிடுங்க.. அது தான் உங்களுக்கும் நல்லது எனக்கும் நல்லது" என்றவன் இத்தோடு முடிந்து விட்டது எனும் வகையில் வாசலை நோக்கி கையை நீட்டி சுட்டிக்காட்டினான்.

இனி எந்த வார்த்தையிற்கும் ரிஷியிடத்தில் சலுகையில்லை என்பது அவன் கூறிய தோனியிலேயே புரிந்து விட்டது. இனி அவர்கள் ஐவருக்கும் அங்கு என்ன வேலை.


மறுபேச்செதுவுமின்றி எதிர்வினை ஆற்ற இயலாதவர்களால் அவர்கள் ஐவரும் அங்கிருந்து வெளியேறினர்.

அவர்கள் அங்கிருந்து வெளியேறியிருந்தாலும் ரிஷியின் கோபம் தனிந்தபாடில்லை. எதற்காக இந்த அதீத கோபம் என்று அவனிற்கே சில வேலை புரியாது செல்கிறது.

மேசை ட்ராயரை திறந்து அதிலிருந்த சிகரட் பெட்டியை எடுத்தவன் அதில் அடங்கியிருந்த சிகரட்டுக்களில் ஒன்றை வாயில் திணித்தான்.

அவனணிந்திருந்த கோர்ட், சர்ட், ஜீன்ஸ் என பாக்கட்டுக்களை துலாவி லைட்டரை கண்டெடுத்தவன் சிகரட்டை பற்ற வைத்து அதன் புகையை ஆழ்ந்து உள்ளே இழுத்து பெரிய பெரிய புகை வலையங்களாய் வெளியேற்றினான்.

கனன்றுக் கொண்டிருந்த மனதிற்கு இதமான உணர்வை கொடுக்கும் ஒளடதமாய் திகழ்ந்தது இந்த மடத்தனமான சிகரட் பாவனை..

அவன் அறைக் கதவை திறந்து கொண்டு உள்ளே நுழைந்தான் அதிரன். கதவை திறந்தவுடனேயே கப்பென நாசியை துளைத்தது ரிஷி எப்பொழுதும் பாவனைக்குட்படுத்தும் சிகரட்டின் ஒருவிதமான பிரத்யேக மணம்.

"எப்படித்தான் இந்த கருமத்த பிடிக்கிறானோ.. இவன் பாவிக்குற சிகரட்டோட ஸ்மெல் மட்டும் ஏன் தான் இப்படி அடுத்தவனயும் சேர்த்து டெம்ட் பண்ணுதோ" சிகரட்டின் வாசனையை நுகர்ந்து கைகளால் விசிறியவாறு வாய் விட்டு புலம்பியவனை வெறுமனே ஒரு பார்வை பார்த்து புகையை வெளியேற்றி தள்ளினான் ரிஷி.

"இப்போல்லாம் உனக்கு ரொம்ப கோபம் வருதுல. இப்படியே அளவுக்கு மீறி கோபப்பட்டுகிட்டேயிருந்தா சீக்கிரம் முடி நரைச்சு கிழவனாகிடுவ" இன்றைய அதிரடி சம்பவம் அறிந்து அதிரன் கூறிவும் அது ரிஷியின் செவிகளில் விழுந்தாலும் அதற்கான எதிர்வினை அவன் ஆற்றவில்லை..

கையிலிருந்த சிகரட்டை நிலத்தில் போட்டு நசுக்கி விட்டு தன் இருக்கையில் வந்து அமர்ந்தவன் "என்ன விஷயம்,ஈஸ் தெயார் எனி ப்ரோப்லேம்" என்றான்.

அதிரனால் பெருமூச்சு மட்டுமே விட முடிந்தது. ரிஷியிடமிருந்து எதிர்பார்த்தது தான் இது. அவனின் இந்த ஒட்டாத பேச்சுக்கள் அதிரனுக்கு ஒன்றும் புதிதல்லவே.

இத்தனை காலப்பகுதியில் ரிஷி அலுவலக விடயத்தை தவிர்ந்து மேலதிகமாய் எதை பற்றியும் அதிகம் பேசுவதில்லை.

அவனின் முழு நேரத்தையும் வேலையே ஆக்கிர்மித்து விடுகிறது. ஏன் அவன் அதற்காகவே தன்னை முழுவதும் அர்ப்பணித்து விட்டான் என்றே கூறலாம். அதுவும் நல்லதிற்கே என்று ஒருபுறம் தோன்றினாலும் மறுபுறம் தன் நண்பனின் தொலைந்து போன சுயத்தை எண்ணி மனம் வருத்தம் கொள்ளவே செய்தது.

"இந்த மன்தோட கான்ட்ராக்ட் என்ட் அக்கவுண்ட் டீடைல்ஸ் எல்லாம் இதுல இருக்கு. செக் பண்ணி பாரு" என்ற அதிரன் கையிலிருந்த கோப்புக்களை ரிஷியிடம் நீட்டி விட்டு அவன் முன் இருக்கையில் அமர்ந்து கொண்டான்.

அந்த கோப்புக்களை கையிலெடுத்த ரிஷி அவற்றை சரி பார்த்தபடி "எம் சி சி கம்பெனியோட டீலிங் என்னாச்சு?" என்றான்.

"ஈஸ் டன்.. பிளாட்போர்ம்க்கு வர முதல்ல அவங்களுக்கான பணத்த செட்டில் பண்ணி கம்பனிய உன் பேர்க்கு ரெஜிஸ்டர் பண்ணாச்சு. அண்ட் அதுக்கான டாக்கிமன்ட் கூட அந்த பைல்ல இருக்கு" என்று மேசையிலிருந்த ஒரு கோப்பை அதிரன் சுட்டிக்காட்டவும் ரிஷியின் கவனம் அக்கோப்பில் பதிந்தது.

"அப்புறம் ஸ்டாப்" அதிரன் ஆரம்பிக்கும் முன், "நியூ ஸ்டாப்க்காக இன்டெர்வியூ, அப்பாய்மாண்ட் எக்ஸக்ட்ரா.. எக்ஸக்ட்ரா.. இட்ஸ் இனாப். இதுக்காக எல்லாம் டைம்ம வேஸ்ட் பண்ண வேண்டிய அவசியமில்ல. இருக்குற ஸ்டாப்பையே ஹோல் பண்ணி வைக்க சொல்லி மேனேஜர்கிட்ட சொல்லிடு. மத்தத நான் பார்த்துக்குறேன்" என்று அதிரன் கூற வந்த விடயத்தை அறிந்து அதற்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டான்.

அதிரன் ஆமோதிப்பாய் தலையை ஆட்டினான்.

"எம் சி சி கம்பனி இனி இந்த ரிஷி வர்மனோட ஆர் வீ கான்டிரெக்ட்டிங் கம்பனியா சேன்ஜ் ஆகிடிச்சு. அந்த கம்பெனிய இன்னும் கொஞ்சம் இம்ரூ பண்ண வேண்டியிருக்கு. சோ நானே போய் கொஞ்ச நாள் அந்த கம்பனிய மெயின்டன் பண்ணலாம்னு இருக்கேன். நாளைக்கே பெங்களூர் கிளம்புறேன்.. இங்க எல்லாத்தையும் கவனிச்சிக்க வேண்டிய முழுப்பொறுப்பு உன்னோடது. இன்னிக்கு நடந்தது போல இனி ஒரு போதும் நடக்காதுன்னு நான் நம்புறேன்" என்றான் கடைசி கூற்றை அழுத்தி..

"இத நீ சொல்லி தான் செய்யனும்குற அவசியமில்ல, நீ வர வர உன்னோட ஆபீஸ்ச பார்த்துக்க வேண்டியது என்னோட பொறுப்பு. நீ போய் உன்னோட வேலைல கான்ஸப்ரேட் பண்ணு நான் இங்க எல்லாம் பார்த்துக்குறேன். " சிறு புன்னகையுடன் அதிரன் உறுதியாய் கூற ரிஷி சிறு தலையசைப்பை பதிலாய் வழங்கினான்.

அதிரனின் வேலையில் காட்டும் மும்முரத்தை ரிஷி நன்கு அறிவான். அவனுக்கு அவன் மீது இருக்கும் நம்பிக்கையை விட பன்மடங்கு நம்பிக்கையை அதிரன் மீது வைத்திருக்கிறான். அவனை நம்பி மிகப் பெரிய பொறுப்பை விட்டுச் செல்வதில் ரிஷியிற்கு எந்த விதத்திலும் நெருடலிருக்கவில்லை.

"அப்புறம் இந்த ப்ராஜெக்ட்.." கேள்வியாய் சிறிது நேரத்திற்கு முன் அந்த ஐவராலும் தவறிழைக்கப்பட்ட ப்ராஜெக்ட்டை சுட்டிக்காட்டி அதிரன் வினவ, "இத நானே இன்னிக்கு நைட்டுக்குள்ள கம்ப்ளீட் பண்ணி சப்மிட் பண்ணிடுறேன்" என்றான் ரிஷி.

ரிஷி அதை முடித்து விடுவான் என்று அறிந்தாலும் சிறு கால அவகாசத்தில் முடித்து விட முடியாத சாத்தியத்தில் "ஆனா நைட்குள்ள எப்படி? நான் வேணா சப்போர்ட் தரட்டா " என்று வினவினான் அதிரன்.

நிதானமாய் கையிலிருந்த கோப்பை மேசையில் வைத்தி விட்டு விழியுயர்த்தி ரிஷி அதிரனை ஏறெடுத்து பார்க்கவும் அவன் பார்வையில் அர்த்தத்தை அறிந்த அதிரன் அசடு வழிய இழித்து விட்டு தன் வேலையை கவனிக்க அங்கிருந்து வெளியேறினான். அவன் சென்றதும் ரிஷியும் தன்னுடைய வேலையில் மும்முரமாய் மூழ்கிப்போனான்.



**

பன்முகதன்மை வாய்ந்த மக்கள் கலப்பாய் வாழக்கூடிய பெங்களூர் நகரில் மக்கள் தொகையிற்கு பஞ்சமேயில்லை.

தகவல் தொழில் நுட்பக் கேத்திரமாய் திகழும் வானை தொடுமளவு உயரமாய் எழுப்பப்பட்டிருந்த கட்டடங்கள் பார்ப்போரை வாயை பிளக்க செய்தது.

யன்னல் வழியே தெறிப்படைந்து வந்து விழுந்து ஒளிக்கற்றைகள் அவள் வதனத்தை மென்மையாய் வருடி இடையூறு விளைவிக்கும் வகையில் விழிகளை கூசச் செய்தாலும் இமைகளை படபடக்க விட்டு கணினித்திரை பதித்திருந்த
விழிகளை அகற்றாது சுட்டியை அசைத்து மும்முரமாய் வேலை செய்து கொண்டிருந்த தீக்ஷிதா அருகே அவளை உரசியபடி வந்தமர்ந்தாள் சுஜிதா.

"ஏய் உனக்கு ஒன்னு தெரியுமா நம்ம கம்பெனிய டாப்ல இருக்க ஒரு பிஸ்னஸ் மேன் நைட்டோட நைட்டா டீல் பேசி வாங்கிட்டாராம்.. நாளைக்கு அவர் இங்க வரப்போறாராம்" என்றாள் ஓர் குதூகலிப்புடன்..

"ஓ அப்படியா.. " என்ற வார்த்தைகள் மட்டுமே அவளிதழிலிருந்து வெளி வந்ததே தவிர்ந்து அவள் கவனம் முழுவதுமோ அப்பொழுதும் கணினித் திரையிலே பதிந்திருந்தது.

சுஜிதா சொன்னது யாருக்கு கேட்டதோ இல்லையோ அவர்கள் பின்னால் அமர்ந்திருந்த கவிதாவின் காதில் துல்லியமாய் விழுந்தது.

"உனக்கு எப்படி தெரியும்? யாரு சொன்னா" என்ற கேள்வியுடன் சுழலும் நாட்காலியை சுழற்றி அவர்கள் அருகே வந்து ஆர்வமாய் வினவினாள் அவள்.

"அது எப்படி டி உனக்கு மட்டும் பத்து கிலோ மீட்டர் தூரத்துலயிருந்து பேசினா கூட அச்சுப்பிசகாம அப்படியே தெளிவா வந்து காதுல விழிந்திடுது" சுஜிதா நாடியில் கை வைத்து நக்கல் தொனியில் கவிதாவை நோக்கி வினவ..

கவிதா நமட்டு சிரிப்பை உதிர்த்த படி, "ஆமா இது இப்போ ரொம்ப முக்கியம் பாரு, முதல்ல நீ என்ன சொல்ல வந்தியோ அத முழுசா சொல்லு. இல்ல என் மண்ட வெடிச்சிடும். உனக்கு எப்படி இந்த நியூஸ் கெடச்சிது? யாரு சொன்னா?" படிப் படியாய் அவள் கேள்வி கணைகளை தொடுக்க சுஜிதாவோ தலையில் கையை வைத்துக் கொண்டாள்.

கவிதாவிற்கோ உடனே விடயத்தை அறிந்து கொளளும் ஆவல்.

"ஏய் எதுக்கு டி இவ்ளோ அவசரப்படுற. நிதானமா கேளு. நானும் அந்த விஷயத்ததானே சொல்ல வந்தேன். மேனேஜர் சொன்னதா சித்தார்த் தான் சொன்னான்" என்றாள் சுஜிதா.

"கம்பெனி வேற ஒருத்தர் கைக்கு போயிடுச்சுன்னா அப்போ புது எம் டி எங்கள வேலய விட்டு தூக்கிடுவாரா" திகிலுடன் கவிதா வினவவுமே அவ்வளவு நேரம் அவர்கள் பேச்சை காதில் ஏற்காத தீக்க்ஷியின் விழிகள் ஓர் நிமிடம் கணினித்திரையில் நிலைக்குத்தி நின்றது.

அவளின் பார்வை சுஜிதாவின் மேல் கேள்வியாய் படிந்தது.

"நான் கூட எங்க எல்லாரையும் சேர்த்து தூக்கிடுவாரோன்னு நெனச்சி பயந்தேன் ஆனா அவரு இருக்குற ஸ்டாப் அப்படியே அவங்க ஒர்க்க கண்டினியூவ் பண்ணட்டும் ன்னு சொல்லியிருக்காராம்" என்றாள் சுஜிதா.

அவள் அப்படி கூறிவுமே தீக்க்ஷியின் மனதிற்குள் அவளை மீறி உருவாகிய பதற்றம் தனிந்தது.

"நிஜமாவா சொல்ற? ரொம்ப நல்லதா போச்சு. வேலய விட்டு மட்டும் தூக்கியிருந்தா நான் என் குடும்பத்தோட பிளாட் போர்ம்ல பிச்சை எடுக்க வேண்டியதா இருந்திருக்கும்.. " பெருமூச்சொன்றை இழுத்து விட்டபடி கூறினாள் கவிதா.

திடீரென ஏதோ யாபகம் வந்தவளாய் "ஆமா முக்கியமான ஒன்ன கேட்கவே மறந்துட்டேன்.. ஆளு பார்க்க எப்படி இருப்பாரு? முன்ன இருந்த கோமாளி மாதிரி தேராத பீசா என்ன" அதிமுக்கியமான சந்தேகத்தை முன் வைத்தாள் கவிதா.

கவிதா கேட்ட கேள்வியில் சுஜிதாவின் கண்கள் பளபளக்க மேசையில் கையை குற்றி கன்னத்தில் தாங்கிய வண்ணம் "அத ஏன் கேட்குற, ஆள் பார்க்க சும்மா அமோகமா சும்மா ஜம்முன்னு ஹாட்டா இருக்காரு.. சிங்கள் வேற" சிலாகித்துக் கூறி ஏக்கமான பெருமூச்சொன்றை இழுத்துவிட்டாள்.

"அதுக்குள்ள எங்கடி அவர பார்த்த" என்று கவிதா கேட்க, "இப்போ சோசியல் மீடியா இன்ட்ரர்நெட் இதெல்லாம் எதுக்கிருக்கு. பேர சொன்னவுடனே சேர்ச் பண்ணி மொத்த பயோவையும் பார்த்துட்டோம் ல" என்று ஏதோ சாதித்த மிதப்பில் பெருமிதமாய் காலர் இல்லா சட்டையை தூக்கி விட்டுக்கொண்டாள்.

"ஏய் அவர் நேம் சொல்லேன் நானும் சர்ச் பண்ணி பார்க்குறேன்" என்ற கெஞ்சலுடன் கவிதா அவள் கையை துருவ "அட ச்ச கைய எடு. பேர் தானே வேணும் அதுக்கு எதுக்கு கைய சொறிஞ்சிகிட்டிருக்க" என்று அவள் கையை தட்டி விட்டாள் சுஜிதா.

"ஏய் அதான் சொல்றன்னு சொன்னல்ல. இப்போ சொல்லாம இருக்க.. சொல்லு.." கவிதா கொஞ்சலுடன் சிணுங்க, " ரிஷி வர்மன் டி அவரோட பேரு" அவளுக்கு ஈடாய் சிணுங்கி கூறினாள் சுஜிதா.

சுஜிதா அவன் பெயரை கூறியதும் அடுத்த நொடியே கவிதா தன் தொலைபேசியை எடுத்து வலையத்தளத்தினுள் அவன் பெயரை தட்டி அவன் புகைபடத்தை தேடத்துவங்கிவிட்டாள்.

"பேருலயே வர்மன் இருக்குன்னா ஆளு கூட பார்க்க ஆதித்ய வர்மனாட்டம் சாக்லேட் பாய் கணக்கா ஹாட்டா இருப்பாருல்ல" என்று கவிதா பார்வையை தொலைபேசியில் அலைய விட்டபடி கூற, "நீ பாரேன்.. நீ மட்டும் அவர் போட்டோ வ பார்த்துட்டு ஆதித்யவர்மன் யாரு ரிஷி வர்மன் யாருன்னு கன்பியூஸ் ஆகி கேட்கப் போற" என்றாள் சுஜிதா.

அவள் கூறி முடிக்கவும் ரிஷி வர்மனின் புகைப்படம் தொலைபேசித்திரையில் வந்து மின்னவும் சரியாக இருந்தது.

"ஏய் சுஜீ பேஜராகிட்டேன்டி. செம்ம ஹன்சம்.. நான் முடிவு பண்ணிட்டேன் இவர் தான் இனி என்னோட ஆளு" அவன் புகைபடத்தை வைத்த கண் வாங்காது நெஞ்சில் கை வைத்து வாயெல்லாம் பல்லாய் கூறினாள் கவிதா.

"ரொம்ப வலியுது தொடச்சிக்க" என்று கையிலிருந்த கைக்குட்டையை சுஜிதா நீட்ட கவிதா உதட்டை சுளித்தாள்.

"என்னதான் ரூட்டு போட்டாலும் ட்ரேக்கு எங்க இருக்கோ அங்க தானே ட்ரைனு ஓடும்.சோ வீணா ஆசய வளர்த்துக்காத. என்ன இருந்தாலும் அவரு நம்மளோட கம்பெனி எம். டி ங்குறது மனசுல இருக்கட்டும்" என்று கவிதா தோளை வருடி அறிவுரை கூறினாள் உத்தமி சுஜிதா.

அவர்கள் சம்பாஷனை ஒரு புறமிருக்க அது காதில் விழுந்தாலும் அவற்றில் ஈடுபாடின்றி தன் வேலையில் சிந்தையை பதித்திருந்த தீக்ஷிகா தன் கைக்கடிகாரத்தை ஒரு முறை நோட்டமிட்டுக் கொண்டாள்.
நேரம் சரியாக ஐந்தை தொட்டு விட்டது.

அவள் முகத்திலோ ஓர் புத்துணர்வு வந்து ஒட்டிக்கொள்ள டைப் செய்ய வேண்டியிருந்த கடைசி வரியை தட்டச்சு மூலம் தட்டியவள் தனக்கு கொடுக்கப்பட்ட வேலையை முழுதாய் முடித்த திருப்தியில் கணினியை அணைத்து விட்டு தன் கையைப் பையை தூக்கிக் கொண்டு கிளம்ப ஆயத்தமாகிவிட்டாள்.

தீக்ஷிகா செல்ல ஆயத்தமாவதை கண்டதும் "அதுக்குள்ள பைவ் வ கிளாக் ஆச்சா.." என்ற சுஜிதா பெயருக்காய் சுவர்கடிகாரத்தை எட்டிப்பார்த்து உறுதி செய்து கொண்டாள்.

“ஹேய்.. நான் கிளம்புறேன் பாய்.." என்று இருவரையும் பார்த்து கூறிவிட்டு அவசரமாக தீக்ஷிகா அங்கிருந்து நகர, "ஏய் தீக்ஷிகா.. நம்ம புது எம் டியோட போட்டோவாச்சும் பார்த்துட்டு போலாம் ல" அவளிற்கு கேட்கும் வகையில் சத்தமாக அழைத்தாள் சுஜிதா.

"அதான் நாளைக்கு இங்க வரார்ல நேரடியாகவே பார்த்துக்கலாம்" என சிறு புன்னகையுடன் அவர்கள் புறம் திரும்பி கூறி விட்டு அங்கிருந்து வெளியேறியிருந்தாள் தீக்ஷிகா.


"சரியா எப்போவும் பைவ் க்கு சார்ப்பா வீட்டுக்கு கிளம்பிடுரா. அவ ஹஸ்பண்ட் கூட வெளியூர்ல தானே இருக்காரு.. அப்புறம் எதுக்காக இந்த எக்ஸாய்ட்மன்ட் " தீக்ஷிகா சென்ற வழியை வினோதமாய் பார்த்தபடி பலநாள் மனதில் எழும் கேள்வியை வெளிப்படையாய் சுஜிதா கேட்டு வைக்க கவிதாவும் அதே பார்வையுடன் தெரியாது எனும் வகையில் தோலை குலுக்கினாள்.
 
Last edited:
உயிர் - 2


அது ஐம்பதுக்கும் மேற்பட்டவர்கள் குடும்பமாக வகிக்கும் அடுக்குமாடிக் கட்டிடம்.

பத்துக்கு மேற்பட்ட தளங்களை கொண்டுள்ள அந்த அடுக்குமாடி கட்டிடத்தில் நான்காவது தளத்திலேயே தீக்ஷிகாவின் அபார்ட்மெண்ட் உள்ளது.

ஸ்கூட்டியை பார்கிங்கில் நிறுத்தி விட்டு வீட்டை நோக்கி வந்தவள் வாசலை அடைந்ததுமே உள்ளேயிருந்து ஒலித்த கணீர் குரலில் அவ்விடமே நிலைகுத்தி நின்று விட்டாள்.

எதற்காக இந்த சலசலப்பு என யூகிக்காமலே அவளால் புரிந்து கொள்ள முடிந்தது.
தலையில் கையை வைத்துக் கொண்டாள்.

'இன்னிக்கு என்னன்னு தெரியலையே' உள்ளுக்குள் குமுறியபடி வீட்டினுள் நுழைய அங்கு அவளுக்கு முன் ஆஜராகியிருந்த பக்கத்து வீட்டு ஜீவநதி அவளை ஏகத்துக்கு முறைத்து பார்த்தார்.

வந்ததும் வராததுமாய் "இங்க பாரும்மா உன் பொண்ணு என்ன பண்ணியிருக்கானு.." முன்னே கன்னத்தில் கையை வைத்து அப்பாவியாட்டம் நின்றிருந்த அவரின் பேரன் யுவராஜை முன்னே இழுத்து நிறுத்தி தன் புகார் கடிதத்தை வாசிக்கத் துவங்கிவிட்டார்.

"இன்னும் முளச்சி மூணு இல விடல்ல அதுக்குள்ள ஓர் ஆம்பளப் பையனப் போய் கை நீட்டி அடிச்சிருக்கா.. எவ்வளவு தைரியம் இவளுக்கு" என்றார் விழிகளை உருட்டி தொண்டை கிழியும் விதமாக அதீத தொனியில்..

தீக்ஷிகாவின் விழிகளோ தற்போது இந்த மாநாட்டிற்கு காரணமான முக்கிய காரணக்கருத்தாவாகிய அவள் உதிரத்தில் உதிர்ந்த பிஞ்சு மொட்டை தேடியது.

அவளுக்கு அதிகம் சிரமம் கொடுக்கவில்லை அவள் அருமை புதல்வி. அவள் வந்ததிலிருந்து அவளையே நோட்டம் விட்டுக் கொண்டிருந்த அந்த நீள்விழிகள் அவள் பார்க்கவும் சட்டென தாழ்த்திக் கொண்டது.

முழுதாய் தீக்ஷிகாவின் மகள் அவள் ஜாடை என்று கூறி விட முடியாது, இருப்பினும் அந்த சிறிதாய் பிளந்த மொட்டு இதழ்களும் அந்த படபடக்கும் மொச்சுக் கொட்டை விழிகளும் அவளின் நகலாகவே கொண்டு தரை இறங்கி வந்த இறக்கை முளைக்காத குட்டி தேவதையாய் புலப்பட்டாள் அவளின் நான்கு வயதேயான குட்டி இளவரசி.

குழந்தையருகே சென்று அவளுயரத்திற்கேற்ப குனிந்து "அம்மு அவங்க சொல்றது உண்மையா? நீ யுவராஜ அடிச்சியா? "என்று சிறு கண்டிப்புடன் வினவினாள் தீக்ஷிகா.

கை கட்டி தலையை குனிந்து திருட்டு முழி முழித்துக் கொண்டிருந்த அவளருமை புதல்வி அம்ரிதா தலையை தூக்கி "ஆமா மம்மி, நா தான் அச்சேன்" என்றாள் மழலை மொழி ததும்ப..

"பார்த்தியாம்மா உன் பொண்ணுக்கு எவ்வளவு நெஞ்சலுத்தமுன்னு. அடிச்சது மட்டுமில்லாம அத எவ்வளவு தைரியமா ஒத்துக்கிறா பாரு.. " கன்னத்தை கை வைத்து வாயை பிளந்து ஜீவநதி வையவும் அவ்வளவு நேரம் கடினப்பட்டு பொறுமையை கடைபிடித்துக் கொண்டிருந்த அகிலாவின் பொறுமை அதற்கு மேல் தாங்காது என பறந்துப் போய்விட்டது.

"செஞ்ச தப்ப பசங்க ஒத்துக்காட்டி தான் ஆண்ட்டி நாங்க கவலப்படனும், அந்த விதத்துல நாங்க எங்க பொண்ண பத்தி கவல பட வேண்டிய எந்த வித அவசியமும் கிடையாது. முதல்ல எதுக்காக அவ உங்க பேரன அடிச்சான்னு கேட்போம் அதுக்கு அப்புறம் இருக்கு உங்களுக்கு.." என்று கடைசி வார்த்தைகளை மட்டும் உதட்டுக்குள்ளேயே முணுமுணுத்துக் கொண்டாள்.

மேலும் பேசுவதற்கு வாயெடுப்பதற்குள் தீக்ஷிகாவின் இறைஞ்சும் பார்வை அவளை கட்டிப் போட்டது.

"எதுக்கு அடிச்ச" கண்டிப்புடன் அம்ரிதாவை நோக்கி உதிர்ந்தது தீக்ஷிகாவின் வார்த்தைகள்.


"நீங்க தானே மம்மி தொல்லியிருக்கீங்க தப்பு செஞ்சா கண்டிக்கனும் னு.. அவன் தான் சுசிய கருப்பா இருக்கன்னு சொல்லி அவ மனசு நோகுற மாதிரி கிண்டல் பண்ணினான். அதான் இனி அப்படி யார்கிட்டயும் அவன் நடந்துக்கக் கூடாதுன்னு அவனுக்கு புரியிர மாதிரி கன்னத்துலயே ஒன்னு வெச்சேன்" என்றாள் அவளருமை மகள்.

தான் அடித்ததையும் தைரியமாய் ஒப்பு கொண்டு அதற்கான காரணத்தையும் விளக்கங்களுடன் கூறும் தன் மகளை எந்த துறையில் சேர்ப்பது என்று தீக்ஷிகாவிற்கு புரியவே இல்லை.

அது மட்டுமின்றி கன்னத்தில் கை வைத்து சிம்பசியை உருவாக்கிக் கொண்டிருந்த யுவாராஜை வெளிப்படையாகவே முகத்தை சுருக்கி முறைத்துத் தள்ளிக் கொண்டிருந்தாள்.

தீக்ஷிகாவிற்கு தலையே சுற்றியது..

தினமும் இவ்வாறான பிரச்சனைகள் வீடு தேடி வந்தாலும் ஒவ்வொரு முறையும் புது புது விதமாய் பிரச்சனைகளை இழுத்து வைத்து விட்டு வருகிறாள் அவளருமை மகள்.

ஒவ்வொரு முறையும் அவற்றை தீர்த்து வைப்பதிலேயே அவள் பாதி உயிர் போய் விடுகிறது.

"என்ன இருந்தாலும் நீ அந்த பையன அடிச்சிருக்க கூடாது அம்மு. எதுவா இருந்தாலும் அவனுக்கு புரியுர மாதிரி சொல்லியிருக்கனும். இல்ல அவங்க அம்மாகிட்ட இல்லன்னா என்கிட்ட சொல்லியிருக்கனும். திஸ் ஈஸ் நொட் ரைட் வே.. போ போய் அந்த பையன்கிட்ட சாரி கேட்டுட்டு வா.. "

சிறுவர்கள் இருவருக்குமிடையே நிலவும் வேண்டாத கோபத்தை தற்போதே தீர்த்து வைக்க எண்ணி தீக்ஷிகா கூற அவள் புதல்வியோ முடியாது எனும் விதத்தில் மறுபுறம் திரும்பி நின்று கொண்டாள்.

"நாங்க தப்பு செய்யாத வர நாங்க யாருகித்தயும் மன்னிப்பு கேட்க வேண்டிய அவசியமில்ல மம்மி. யாரு தப்பு செஞ்சாங்களோ அவங்க தான் எங்ககித்த வந்து மன்னிப்பு கேட்கனும்.. என்னால அவன்கித்த எல்லாம் மன்னிப்புக் கேட்க முடியாது வேணும்னா அவனுக்குப் போய் சுசிகித்த மன்னிப்பு கேட்க்க சொல்லுங்க" என்றவள் மழலை மொழியில் சிறிது குமுறலிருந்தாலும் தெள்ளத் தெளிவாய் வந்து விழுந்தது அவள் வார்த்தைகள்.

அந்த நொடி பேதையவளின் மனக்கண்ணில் அவளனுமதியின்றி தோன்றி மறைந்தது அவளவன் பிம்பம்.

அதே கம்பிரத் தோரணை!

சற்றும் மாறாத அதே அணுகுமுறை! தான் தப்பு செய்யாத பட்சத்தில் அடுத்தவர் முன் தலை குனிந்து நிற்கத் தடையாயிருக்கும் அதே வீம்பு குணம்!
முகப்பாவனை என சில செயல்களின் மூலம் அவனின் குணத்தை அச்சு அசலாய் வெளிப்படுத்துகிறாள் அம்ரிதா. அதை தீக்ஷிகாவால் நன்றாக உணர முடிகிறது.

'தந்தையை தப்பிப் பிறவா புதல்வி’' தனக்குள்ளே கூறி சிரித்துக் கொண்டாள்.

"அம்மு" தீக்ஷி ஆரம்பிக்க முன் ஜீவநதி குறுக்கிட்டு "இதான் நீ குழந்த வளத்திருக்க லட்சணமா ம்மா.. ஏதோ ரவ்டி போலல்ல உன்னோட பொண்ணு நடந்துக்கிறா. மன்னிப்பு கேட்க சொன்னா எவ்வளவு திமிரா பேசுறா பாரு. எல்லாம் அவள சொல்லி குத்தமில்ல வளர்த்திருக்க உங்கள சொல்லணும். இருக்காதா பின்ன.. ஆம்பள துண இல்லாத வீடில்லயா இப்படியும் நடந்துபீங்க இதுக்கு மேலயும் நடந்துபீங்க" வேண்டுமென்றே கடைசி வார்த்தைகளில் அழுத்தம் கூட்டி நக்கல் தொனியில் குத்தலாய் அவர் கூற அவ்வார்த்தைகள் தீக்ஷியின் மனதை சருக்கெனத் தைத்தது.

ஜீவநதியின் வாயைப் பற்றி அவள் நன்கு அறிவாள். வார்த்தை எனும் கூறிய ஆயுதம் கொண்டு இல்லாத பொல்லாததை இட்டுக்கட்டி வருவோர் போவோர் மனதை காயப்படுத்துவதில் வல்லமை மிக்கவர். இவ்வளவு நாள் அடுத்தவர் வார்த்தைகளால் கூறி அறிந்திருந்தவள் இதோ இன்று முதல் முறையாக பட்டு உணர்ந்து விட்டாள்.
ஏனோ அவர் கூறிய வார்த்தை உள்ளுக்குள் அதீத வலியை பரவச் செய்தது.

அவ்வளவு தான்.. இனியும் பொறுமை காத்தல் வாய்க்கு வந்தபடி பேசி கொச்சைப்படுத்தி விடுவார். அகிலாவின் பொறுமை பொங்கல் சாப்பிடச் சென்று விட்டது.

"என்னங்க நீங்க, ஏதோ அவ உங்க பேரன அடிச்சிட்டாலேங்குற ஒரு காரணத்துக்காக உங்கள பேச விட்டு வேடிக்க பார்த்தா நீங்க என்னன்னா வாய்க்கு வந்த படியெல்லாம் பேசுக்கிட்டு போறீங்க. வீட்டுல ஆம்பள துண இருந்தாதான் பொழப்பு நடக்குமா என்ன? அப்படி பார்த்தா வெளியூர்க்கு வேலைக்கு போற ஆம்பளைங்களயெல்லாம் பொழப்பு நடத்த விடாம வீட்டுல உக்கார வெச்சி அழகு பார்க்கத்தான் இருக்கு.. அமோகமா குடும்பம் தலைக்கும் நீங்க வேணா ட்ரை பண்ணி பாருங்களேன்." அவர் கூறியதை வைத்தே தகுந்த விதமாய் அவள் பதிலடி கொடுக்கவும் அவர் முகம் கறுத்துப் போய்விட்டது.

"இங்க பாருங்க ஆண்ட்டி நாங்க எப்படி நடந்துக்கனும் னு எங்களுக்கு நல்லாவே தெரியும். அதுமட்டுமில்லாம எங்க பொண்ண நாங்க அடுத்தவன் மூக்கு மேல கை வைக்குற அளவுக்கு நல்லா வளர்த்திருக்கோம்.. நீங்க எங்கள விட வயசுல ரொம்ப பெரியவங்க உங்களுக்கே நல்லது எது கெட்டது எதுன்னு நல்லா தெரியும்னு நினைக்குறேன், சோ நீங்க இப்போ இங்கயிருந்து வெளிய போறீங்களா.." என்று சிரித்தவாக்கிலே அவரை வாரி விட்டாள் அகிலா.

இவர்கள் வாக்குவாதத்தில் விழி பிதும்பி போய் நின்றிருந்த யுவராஜ்ஜின் புறம் திரும்பி அவனை விழிகள் சுருக்கி பார்த்தவள், " ஆளும் மூஞ்சியும் பாரு. முட்ட போண்டா சைஸ்ல இருந்துகிட்டு அடுத்தவங்கள கிண்டல் பண்றியா.. மரியாதையா உங்க பாட்டிய கூட்டிட்டு இங்கிருந்து ஓடிப் போயிடு. இல்ல அடுத்த அடி என் கையாலதான் வாங்க வேண்டியிருக்கும்" அவனிற்கு மட்டும் கேட்கும் விதத்தில் அகிலா மிரட்டவும் அவனோ விழி விரித்து அவளை பார்த்தான்.

"பாட்டி எதுவும் வேணாம்.. வா நாம போலாம்" ஜீவநதியின் கரத்தை பற்றி அவன் இழுத்துக் கொண்டே சென்று விட்டான்.

அதே சமயம் அம்ரிதாவை முறைத்துப் பார்க்கவும் அவன் தவறவில்லை.

செல்லும் போது ஜீவநதியின் வாய் சும்மா இருக்குமா என்ன? "உண்மைய சொன்னா உளுக்குதாக்கும்" என்ற முணுமுணுப்புடன் சென்று விட்டார்.


அவர் கூறியது விழ வேண்டியவள் காதிலோ நன்றாக வந்து விழுந்தது. கேட்கத்தானே கூறினார்.

அலுவலகத்திலிருந்து வரும் போது எழுந்த புத்துணர்வு முழுதாய் இப்பொழுது வடிந்து போய் விட்டது.

கண்களை அழுத்த மூடித் திறந்தவள் எதுவும் பேசாது அறைக்குள் நுழைந்துக் கொண்டாள்.

அகிலாவிற்கு அவள் மனநிலை நன்றாக புரிந்தது. அவள் மனநிலையை மாற்றியமைக்கக் கூடிய ஒரே புத்துணர்வாக்கி அவள் மழலை மட்டுமே..

தீக்ஷிகாவின் அறையையே முக வாட்டத்துடன் வெறித்துக் கொண்டிருந்த அம்ரிதா அருகே சென்று அவள் உயரத்திற்கு குனிந்து "என்னாச்சு? எதுக்கு பாப்பா முகம் வாடியிருக்கு" என்று வினவினாள் அவள்.

"அம்மாக்கு என்னாச்சு? எதுக்கு சாடா இருக்காங்க? கோச்சிகிட்டாங்களா?.. " இதழை பிதற்றி வினவியது அம்மழலை.

"அம்மா எப்போவாச்சும் அவங்க அம்மு மேல கோபிச்சிகிட்டிருக்காங்களா என்ன?. கொஞ்சம் மூட் ஓப் ஆவிட்டாங்க அவ்ளோ தான். அவங்க மூட எப்படி சரி பண்ணனும்னு உனக்கு தெரியாதா என்ன.." புருவமுயர்த்தி அவள் மூக்கை நுனியை பிடித்து ஆட்டி அகிலா கேட்க,அம்ரிதா குறும்புச்சிரிப்பொன்றை உதிர்த்து விட்டு தன் தாயை காண குடுகுடுவென ஓடிவிட்டாள்.

தீக்ஷிகா கட்டிலில் பக்கவாட்டாய் முகத்தை இரு கைகளாலும் மூடியபடி அமர்ந்திருக்க அவள் முன்னே ஏதோ நிழல் ஆடவும் தலையை மெதுவாக தூக்கிப் பார்த்தாள்.

வேறு யாரு அவளின் அருமை புதல்வி தான்.

முகத்தை சோகமான முகபாவனை கொண்ட வட்ட வடிவ பொம்மையொன்றால் மறைத்தவாறு "சாரி" என்றாள்.

தீக்ஷியிடமிருந்து பதில் வராது போக மெல்ல அதை விலக்கி அவளை ஏறிட்டுப் பார்த்தவள்,"சுசி ரொம்ப அழுதா. எனக்கும் ரொம்ம்ம்ப கஷ்தமா போச்சு.. அதான் அவன அச்சேன். நான் செஞ்சது தப்பா?.. தப்புன்னா சொல்லுங்க நான் போய் சாரி கேட்டுத்து வரேன்" என்று கூறி முகத்தை தொங்க வைத்துபடி அங்கிருந்து செல்ல முயற்சித்தவளை இழுத்து அணைத்துக் கொண்டாள் தீக்ஷிகா.

பெற்றவளால் குழந்தையின் சிறு முகவாட்டத்தையும் தாங்கிக்கொள்ள முடியவில்லை என்பதே மெய் கருத்து.

"நீ பண்ணது தப்புன்னும் சொல்ல முடியாது அதே நேரம் அது சரின்னும் ஆகிடாது. யுவராஜ் பண்ண அதே விஷயத்த தான் நீயும் பண்ணியிருக்க.. யுவராஜ் சுசிய வார்த்தையால ஹர்ட் பண்ணான்னா, நீ யுவராஜ உன்னோட செயலால ஹர்ட் பண்ணியிருக்க. இதனால எதுவும் மாறிடப் போறது இல்ல.. ஒருத்தர அடிச்சி அவங்களுக்கு அவங்க பண்ண தப்ப புரிய வைக்கிறத விட அவங்களுக்கு புரியுர மாதிரி எடுத்து சொல்லி புரிய வைக்கிறது தான் புத்திசாலித்தனம். அதனால இனி யாராச்சும் தப்பு பண்ணா தப்பு அவங்க மேலயே கூட இருந்தாலும் சரி நீ யாரையும் கை நீட்டி அடிக்க கூடாது.. புரியுதா" என்று குழந்தையிற்கு புரியும் படி அவள் எடுத்துக் கூற அவளோ கண்களை உருட்டி அனைத்தையும் அமைதியாய் உள்வாங்கிக் கொண்டாள்.

குழந்தையை தன் அணைப்பிலிருந்து விலக்கி "ம்ம் ஓகே வா.. மம்மிக்கு ப்ரோமிஸ் பண்ணி கொடு இனி இப்படி நடந்துக்க மாட்டேன்னு " என்று கையை நீட்டி விரலை வலைத்து அவள் கேட்கவும், அவள் விரல்களினுள் தனது பிஞ்சு விரலை நுழைத்து, "இனி நான் யாரையும் அச்ச மாட்டேன். ப்ராமிஸ். மறுபடியும் யுவா எதாச்சும் பண்ணான்னா அவனுக்கு புதியிர மாதிரி சொல்லி புதிய வைக்குறேன்” என்று கண்களை சிமிட்டி தலையை அசைத்தாள்.

"இப்படி சொல்லிட்டு மறுபடியும் அவன் கூட ஏதாச்சும் வம்புக்கு போக கூடாது சொல்லிட்டேன்" கண்களை சுருக்கி செல்லமாக கண்டித்து வைத்தாள்.

அவளறிய மாட்டாளா என்ன அவள் மகளின் பெரும்பான்மை குணத்தை..

திருட்டு முழியுடன் முத்துப் பற்கள் வரிசையாக தெரிய சிரித்து வைத்தாள் அம்ரிதா.

அவள் முகபாவனையில் தீக்ஷிகாவின் இதழ்களும் சிரிப்பை தத்தெடுத்துக் கொள்ள "கேடி" என்று செல்லமாய் அவள் கூந்தலை கலைத்து விட்டாள்.

ஏதோ யாபகம் வந்தவளாய் "ஆமா மம்மி எங்க அம்முக்குஊஊ.." என்று இழுவையாக கேட்டு கையை நீட்டினாள் அம்ரிதா.

"இன்னிக்கு அம்மு பண்ண வேலைக்கு அம்முக்கு எதுவும் கிடையாது. மம்மிக்கு மறந்து போச்சு " மறுபுறம் திரும்பி அமர்ந்தபடி பாவலா செய்தாள் தீக்ஷிகா.

"ஓ அப்பதியா.." என்ற வினவளுடன் கூடிய ஒரப்பார்வையுடன் கட்டிலின் மேல் ஏறிய அம்ரிதா தீக்ஷிதா எதிர்பாரா விதமாய் அவளுக்கு கிச்சுகிச்சு மூட்டத் துவங்கி விட்டாள்.

வயிறை முட்டிக் கொண்டு வந்த சிரிப்பு வெடித்துச் சிதற வாய் விட்டுச் சிரித்தாள் தீக்ஷிதா.
சிறிது நேரத்திற்கு முன் தொற்றிக் கொண்ட மனபாரம் குழந்தையின் செயலால் எங்கோ போய் விட்டது.

வடிந்துச் சென்ற புத்துணர்வு மீண்டும் வந்து ஒட்டிக்கொண்ட உணர்வு.

குழந்தையின் அருகாமை எந்த தாயிற்குத்தான் கசப்பை கொடுக்கும். அதில் தீக்ஷிதா மட்டும் விதிவிலக்கா என்ன..

"ஹஹ்ஹஹ்ஹா.. அம்மு போதும். ஹஹ்ஹஹ்ஹா.. அம்மு போதும் போதும்" அவளுடன் சேர்ந்து கிளுகிளுத்து சிரித்துக் கொண்டிருந்த குழந்தையை கடினப்பட்டு விலக்கினாள்.

"போதும் அம்மு. மம்மியால இதுக்கு மேல முடியாது" வயிரை பிடித்துக் கொண்டு புன்னகை மாறா முகத்துடன் கூறியவள் தன் பையை எடுத்து அதில் எப்பொழுதும் போல் வரும் போது கையோடு வாங்கி வந்த டெய்லி மில்க் சாக்லேட்டை எடுத்து அம்ரிதாவிடம் நீட்டினாள்.

விழிகள் ஜொலிக்க "எனக்கு தெரியும் மம்மி பொய் சொன்னீங்கன்னு.. நாட்டி கேர்ள்" எனச் செல்லமாய் தீக்ஷிகாவின் கன்னம் கிள்ளிக் கூறி அவள் கன்னத்தில் நச்சென ஓர் முத்தம் வைத்தாள்.

"ஆமா மம்மி தான் நாட்டு கேர்ள் என் பொண்ணு குட் கேர்ள்" என்ற தீக்ஷி அவள் கொடுத்ததையே இரு மடங்காக அவளுக்குத் திருப்பிக் கொடுத்து அணைத்துக் கொண்டாள்.

"அப்போ நானு" என்றவாறு முறைப்புடன் வந்து நின்றாள் அகிலா.

தீக்ஷிதா மற்றும் அம்ரிதா ஒருவரின் முகத்தை ஒருவர் குறும்புடன் பார்த்தவர்கள் அடுத்த நிமிடம் ஒன்று சேர்ந்து அகிலாவின் கையை பற்றி இழுத்து அவளை கட்டிலில் கிடத்தி கிச்சுகிச்சு மூட்டத் துவங்கி விட்டனர்.

மூவரின் சிரிப்பொலியும் முற்றுப்பெறாது அவ்வறையை முழுவதும் ஆட்கொண்டது.

..

ரிஷி தான் பொறுப்பேற்ற ப்ராஜெக்ட்டை முடித்து அதை தகுந்தவர்களிடம் ஒப்படைத்து விட்டு மீதமிருந்த ஓர் சில வேலைகளையும் முடித்து விட்டு வீடு திரும்புகையில் மணி ஒன்றை தாண்டி விட்டது.

தன் வசமிருந்த மேலதிக சாவியை பயன்படுத்தி வீட்டினுள் நுழைந்தான்.


வீடு முழுவதும் இருள் சூழ அமைதி மயமாய் காணப்பட்டது. பல நாள் கழித்து வீட்டினுள் நுழைகிறான்.

தொழில் சம்பந்தமாக பிரமுகர் ஒருவரை சந்திக்க வெளிநாடு சென்றிருந்தவன் இன்று தான் இந்தியாவிற்குத் திரும்பினான். வந்ததும் வராததுமாய் ஆபீஸிற்குச் சென்று விட்டான். இப்பொழுது தான் இப்படி ஒரு இடம் இருக்கிறது என யாபகம் வந்தது போலும்..

திடீரென வரவேற்பரையில் விளக்குகள் ஒளிர்ந்தது. அது ரிஷியின் கவனத்தில் விழுந்தாலும் பொருட்டாகக் கொள்ளாது மாடிப் படிகளில் ஏறினான்.

"என்ன ரிஷி எப்போப்பா வந்த? அப்பாவ காணலயா? இல்ல கண்டும் கண்டுகாம போறியா" என்ற தமோதரனின் நக்கல் தொனி கலந்த பேச்சில் ரிஷியின் நடை தடை பட்டது.

"கேள்விக்கான பதில உங்ககிட்டயே வெச்சிக்கிட்டு எதுக்கு கேள்விய என்கிட்ட கேட்குறீங்க" என்றான் அதே விதத்தில்..

அவன் பேச்சு அவருக்கு அதீத கோபத்தை ஏற்படுத்தினும் அதை வெளிப்படுத்தாது, "ம்ம்ம் அப்புறம் டீலிங் எல்லாம் எப்படி போகுது. எம் சி கம்பெனிய ஸ்மார்ட்டா டீல் பேசி வாங்கிட்டியாம். ரொம்ப ஸ்மார்ட் தான் " என்று பேச்சை வளர்த்துக் கொண்டே சென்றார் அவர்.

ரிஷி நெற்றியை நீவி ஆழ்ந்த மூச்சை இழுத்து விட்டான்.

அவர் எதற்காக காய் நகர்த்துகிறார் என்று அவனுக்கு புரியாது போய் விடுமா..

"டேட் என்ன மேட்டர்? எதுவா இருந்தாலும் ஸ்ட்ரைட்டா சொல்லிடுங்க. எனக்கு இந்த சுத்தி வலைச்சி பேசுறது பிடிக்காதுன்னு உங்களுக்கே ரொம்ப நல்லா தெரியும். அப்புறம் எதுக்கு இப்படி சீப்பா ட்ரை பண்றீங்க" முகத்திற்கு நேராய் கூறி விட்டான்.

"இனாப் ரிஷி.. இதுக்கு மேல என்னால பொறுமையா இருக்க முடியாது. இன்னும் எத்தன நாளைக்கு தான் இப்படியே இருக்குறதா உத்தேசம்.. நான் கேட்டதுக்கு யோசிச்சு பதில் சொல்லுறதா சொன்ன. ஆனா இன்னும் உன்கிட்டயிருந்து எந்த பதில் வந்தபாடில்ல" என்றார் தமோதரன் எரிச்சலாக..

அவர் கூற்றிலே அவர் எதை பற்றி சொல்ல வருகிறார் என புரிந்து கொண்டவன் அவர் பேச்சை செவியில் வாங்காது அங்கிருந்து முன்னேறினான்.

"உனக்காகவே காத்துட்டிருக்க பூஜாவுக்கு நீ என்ன பதில் சொல்ல போற?" என்று அவர் அடுத்த கேள்வியை எழுப்பவும் நின்று நிதானமாய் அவரை திரும்பிப் பார்த்தவன் ஒற்றை புருவமுயர்த்தி, "நான் ஒன்னும் யாரையும் எனக்காக காத்திருக்க சொல்லலயே.. அது அவ டிஷிசன். இட்ஸ் நோட் மை போல்ட்" என்று தோலை குலுக்கிக் கூறி விட்டு படிகளிலில் வேகமாய் ஏறினான்.

"ஏன் உனக்காகவே காத்துக்கிட்டிருக்க பொண்ண உன்னால ஏத்துக்க முடியாதா?.."

"பூஜாவ உன்னால உன் வாழ்கை துணையா ஏத்துக்க முடியாததுக்கு காரணம் ஒரு வேல உன் மனசுல வேற யாராச்சும் இருக்காங்களா?, இல்ல உன் மனசு வேற எந்த பொண்ணுக்கும் இடம் கொடுக்க மறுக்குதா?" என்று தமோதரன் எதார்த்தமாய் வினவும் பொருட்டு இரு பொருட்பட கூறவும், அவன் நடை சட்டென தடைபட்டது.

விருட்டென அவர்புறம் திரும்பினான்.

கடுமை பரவிய முகத்துடன், ”இனாப் டேட்!! இவ்ளோ தான் உங்க லிமிட்.. இதுக்கு மேல எதுவும் பேசாதீங்க.. உங்க லிமிட்குள்ள இருக்குறது உங்களுக்கு எவ்வளவு நல்லதோ அவ்வளவு எனக்கும் நல்லது” என விரல் நீட்டி எச்சரித்தவன் தலை அழுத்தக் கோதிக்கொண்டான்.

"இப்போ உங்களுக்கு என்ன வேணும்.. நான் பூஜாவ கட்டிக்கனும் அவ்ளோ தானே சரி கட்டிக்கிறேன்.. கட்டிக்கிறேன்.. போதுமா.." என ஆக்ரோஷமாய் கத்தினான் அவன்.

தமோதரன் எதுவும் பெரிதாக கூறிவிடவில்லை. ஆனால் அவனுள் அவ்வார்த்தைகள் வீரியத்தை ஏற்படுத்தி விட்டது.

தெரிந்தல்லவா தமோதரன் காயை கட்சிதமாய் நகர்த்தினார்.

அவருக்கு அளவு கடந்த மகிழ்ச்சி. அவனிடம் இந்த ஒற்றை சம்மதத்தை வாங்குவதற்காகவல்லவா இவ்வளவு காலமாக போராடுகிறார்.

‘இது தெரிந்து இருந்தால் எப்பொழுதோ அவனிடம் சம்பந்தம் வாங்கியிருக்க முடியுமல்லவா.. முட்டாள் ‘எனத் தன்னையே நொந்து கொண்டார்.

எது எப்படியோ கடைசியில் அவர் நினைத்தது நிறைவேறிவிட்டதன் விளைவாய் அவர் இதழ்கள் தாராளமாக விரிந்து கொண்டது.

"ஆனா ஒன்னு என்னால உடனே மேரேஜ் பண்ணிக்க முடியாது.. நிறைய ஒர்க் பெண்டிங்ல இருக்கு பெங்களூர் போய் வந்ததுக்கு அப்புறம் எதுவானாலும் பார்த்துக்கலாம்" வெறுமையாய் கூறிவிட்டு அவர் பதிலை எதிர்பாராது சென்று விட்டான்.

அவனின் இந்த வேண்டுகோள் தமோதரனுக்குப் பெரிதாகப் புலப்படவில்லை. இவ்வளவுக்கும் நவீன கால ரோபோட் போல் இயங்கிக் கொண்டிருப்பவன் இவ்வளவு தூரம் இறங்கி வந்ததே பெரிய விடயம். கைக்கு எட்டிய வெண்ணெய்யை முடியாது அது இது எனக்கூறி நழுவ விட அவர் தயாராக இல்லை..

அவன் வேலை முடிய குறைந்த பட்சம் ஒரு மாதம் இரண்டு மாதம் எடுக்கும் அவ்வளவு தானே.. இத்தனை வருடங்கள் பொறுமை காத்தவருக்கு அது ஒன்றும் பெரிதாகத் தெரியவில்லை.

முகம் கொள்ளா புன்னகையுடனும் மன நிறைவுடனும் ஒருவன் உறக்கத்தை கெடுத்து விட்டு அவர் நிம்மதியாக உறங்கச் சென்றுவிட்டார்.

ரிஷியின் அறையிலிருக்கும் பொருட்கள் அனைத்தும் நிலத்தில் சில்லு சில்லாய் சிதறிக் கிடந்தது.

கையிலிருந்த சிகரட் முழுதாய் புகைந்து கையை காயப்படுத்துவதை கூட உணராது வானில் அரை குறையாய் தெரிந்த நிலவை பால்கனி வழியால் வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான்.

நேற்று சுற்றிலும் கூட்டமாய் கூடியிருந்த நட்சத்திரங்களுக்கு மத்தியில் இளித்துக் கொண்டிருந்த நிலவு இன்று கருமேகங்களுக்கு மத்தியில் தனித்து விடப்பட்ட நிலையில் ஒடுங்கிக் காணப்பட்டது.


அவன் இதழ்களிலோ இகழ்ச்சி கலந்த ஓர் விரக்திப் புன்னகை தவழ்ந்தது..
 
Last edited:
உயிர் - 3

"மம்மி போதும்ம்" அம்ரிதா சிணுங்க, "அம்மு இன்னும் ஒரு வாய் டா.. என் செல்லம் ல இன்னும் ஒரே ஒரு வாய்.. ஆ காட்டு ஆஆ" ஒரு வழியாக செல்லம் கொஞ்சி பாவலா செய்து தட்டில் மீதமிருந்த கடைசி பிடி உணவையும் குழந்தையிற்கு ஊட்டி விட்டாள்.

கன்னங்கள் உப்ப உணவை மென்று கொண்டே "மம்மி நீங்க சாப்பிடலயா" என்று அவள் குட்டி தேவதை வினவியதிலே தாயவளின் வயிறு பாதியாக நிரம்பிவிட்டது.

தண்ணீரை எடுத்து குழந்தையிற்கு பருகக் கொடுத்தவள், "மம்மிக்கு லேட் ஆச்சு பாப்பா, மம்மி அப்புறமா சாப்பிட்டுகிறேன்" என்று வாயில் ஒட்டியிருந்த உணவுப் பருக்கையை சேலை முந்தானை நுனியாய் துடைத்து விட்டாள்.

சாப்பாடு மேசையின் மேல் அமர்ந்திருந்த குழந்தையை இறக்கி விட்டு தன் கைப்பையை எடுத்து தோளில் மாட்டியவள் குழந்தையின் உயர்த்திற்கு குனிந்தாள்.

"பாப்பா அம்மா வரும் வர எந்த சேட்டையும் பண்ணாம சமத்துப் பொண்ணா இருக்கனும். நேரத்துக்கு சாப்பாடுங்க அப்புறம் யாரு கூடவும் வம்புக்கு போக கூடாது சரியா " மகளின் கூந்தலை கலைத்து விட்டாள்.

"மம்மியோட அம்மு மம்மி வரும் வர எந்த சேத்தையும் பண்ணாம சமத்து பொண்ணா இருப்பேனாம் மம்மி ஆபிஸ் வித்து வந்து அம்முவ பார்க்கு கூட்டிட்டு போவாங்களாம் " என்று தலையை ஒருபுறமாய் சாய்த்து குறும்புடன் கூறி சிரித்தாள் அம்ரிதா.

இந்த முத்துக்களை வாரி இறைக்கும் ஒற்றை புன்னகைக்காய் எதை வேண்டுமானாலும் செய்ய பெண்ணவள் தயார்.

"கண்டிப்பா.. பாப்பா மம்மி வரும் போது ரெடியா இருப்பீங்களாம் மம்மி வந்து என்னோட அம்முவ பார்க்கு அழைச்சிட்டு போவேனாம். சரி இப்போ வாங்க நாங்க கிளம்பலாம்" நேரம் செல்வதை உணர்ந்து குழந்தையை தூக்கிக் கொண்டு சீக்கிரம் புறப்பட்டாள்.

தீக்ஷிகாவின் ஸ்கூட்டி குழந்தைகள் பராமரிக்கும் டே கேர்ரின் முன் நின்றது.

வழக்கம் போல் ஹார்ன் அடித்ததும் அம்ரிதாவை வாசலிற்கு வந்து அழைத்துச் செல்லும் பெண்மணி குழந்தையை வந்து அழைத்துச் செல்ல குழந்தை பார்வையிலிருந்து மறையும் வரை அவளையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

முதல் தடவை குழந்தையை இங்கு விட்டுச் செல்லும் போது குழந்தை அழுததோ இல்லையோ தீக்ஷிதா கண்களிலிருந்து கண்ணீர் தாரை தாரையாக வழிந்தோடியது. ஆனால் இப்பொழுது தன்னை பழக்கப்படுத்திக் கொண்டு விட்டாள்.

நடைமுறை வாழ்கையிற்கேட்ற நம்மை பழக்கப்படுத்திக் கொள்வதல்லவா சாமர்த்தியத்தனம்..

இருப்பினும் எப்பொழுதும் முகத்தில் இழைந்தோடும் கலக்கரேகைக்கு பஞ்சமில்லை.

ஆழ்ந்த மூச்சை இழுத்து விட்டவள் வண்டியை செலுத்த முற்பட அதற்குள் உள்ளிருந்து குடுகுடுவென ஓடி வந்தாள் அம்ரிதா.

வண்டியை நிறுத்தி விட்டு இறங்கி குழந்தையின் அருகே வந்தவள், "அம்மு என்னாச்சு?" எனக் கேட்டாள் படபடப்பாய்..

"மம்மி அம்முக்கு முத்தா.." எனக்கூறி தீக்ஷிதாவின் கரத்தை பிடித்து தன் உயர்த்திற்கு குனித்து எக்கி அவள் கன்னத்தில் முத்தத்தை பதித்தாள் அவள் குட்டி தேவதை.

கலக்கம் பறந்து போய் விட்டது. இதழ்கள் தாமாய் விரிந்து கொண்டது.

"அடடே.. மம்மி அவசரத்துல முத்தம் கொடுக்க மறந்துட்டேன் ல" வெளிப்படையாய் கூறி தலையை தட்டிக் கொண்டவள் குழந்தையின் கன்னத்தை தாங்கி வழக்கத்திற்கு மாறாகவே கன்னம் இரண்டிலும் மாறி மாறி இதழ் பதித்து விட்டே குழந்தையிடமிருந்து விடை பெற்று அலுவலகத்திற்கு வந்து சேர்ந்தாள்.

ஓட்டமும் நடையுமாய் மூச்சு வாங்க தன் இருக்கையில் வந்து அமர்ந்தவளை வித்தியாசமாகப் பார்த்தாள் சுஜிதா.

"என்ன ஒரு அதிசயம். இன்னிக்கு லேட்டா வந்திருக்க" என்ற சுஜிதாவின் கேள்வியிற்கு அவள் பதில் கூற முற்பட, "ஏய் தீக்ஷிகா ஏன் லேட்? அதுவும் இன்னிக்கு போய் லேட்டா வந்திருக்க. இன்னிக்கி புது எம் டி வரார்னு உனக்கு தெரியாதா என்ன? " என்ற கேள்வியுடன் அவளருகே வந்து நின்றான் சித்தார்த்.

தீக்ஷிகா உட்பட ஐந்து பேர் அடங்கிய குழுவின் தலைவன் அவனே..

எப்பொழுதும் காலையில் நேரத்திற்கே எழுந்து குழந்தையை தயார் செய்து தானும் தயாராகுபவள் இன்று ஏனோ கால தாமதமாய் எழுந்து விட்டாள். அது மட்டுமன்றி காலையிலேயே அகிலா நேரகாலத்துடன் வேலையிற்குப் புறப்பட்டுவிட்டதால் அது வேறு தீக்ஷிதாவிற்கு இன்னும் சிரமமாய் போய் முடிந்தது. இல்லையேல் அம்ரிதாவின் தயார் படுத்துவதிலிருந்து அனைத்து பொறுப்பையும் அவளே ஏற்றுக் கொண்டிருப்பாள்.

"அச்சோ ஆமால்ல. இன்னிக்கு புது எம் டி வர தா சுஜி சொன்னா எனக்கு தான் மறந்து போச்சு. இன்னிக்கு கொஞ்சம் லேட்டா எந்திரிச்சுட்டேன் அதான் நேரமாச்சு.. ஆமா எம் டி வந்துட்டாரா? " என படபடத்துக் கொண்டே சென்றவளை அடக்கப்பட்ட சிரிப்புடன் ஏறிட்டான் அவன்.

"ஏய் ரிலாக்ஸ். எதுக்கு இவ்வளவு பதட்டம்? இன்னிக்கு ஒரு நாள் தானே லேட்டா வந்திருக்க அதுக்கு போய் ஏன் இவ்ளோ வியர்டா நடந்துக்குற.. ஆனா ஒன்னு புது எம் டி எப்படின்னு சரியா தெரியல. அவருன்னா சார்ப்பா டைம்க்கு வந்து சேர்ந்துட்டாரு" தோலை குலுக்கி கூறினான் சித்தார்த்.

"ஏய் சித்து இங்க அவ மட்டுமா வியர்டா நடந்துகுறா.. அவவாச்சும் லேட் ஆவிடுச்சேன்னு பதட்டத்துல இப்படி வியர்ட்டா நடந்துகிறா ஆனா இங்க சிலவங்க ஒற்றை பார்வையிலேயே சாஞ்சிட்டாங்கன்னா பார்த்து கோயேன்" அருகே பேனையின் பின் புறத்தை வாயில் வைத்து சப்பியபடி தனக்குத் தானே வெட்கப்பட்டு கனவுலகில் மிதந்து கொண்டிருந்த கவிதாவை சுட்டிக்காட்டி சுஜிதா கூறவும் கவிதாவின் கோலம் கண்டு சித்தார்த் பக்கென சிரித்து விட்டான்.

அவர்கள் சிரிப்பொலியில் நிகழ்வுக்கு மீண்ட கவிதா தீக்ஷிகாவை அருகில் கண்டவுடன் ஏதோ திடீரென எங்கிருந்தோ உதயமானவள் போல்,"நீ எப்போ தீக்ஷிகா வந்த?" என விழி விரித்து அவள் வினவிய விதத்தில் தீக்ஷிகாவால் சிரித்து அடக்க முடியவில்லை.

அவர்கள் மூன்று பேரும் ஒருவரை ஒருவர் பார்த்தவாறு வாயை மூடி சிரிக்க கவிதா எதுவும் புரியாது மலங்க மலங்க விழித்துக் கொண்டிருந்தாள்.

அந்நேரம் "தீக்ஷிகா மேடம் உங்கள எம் டி சார் கூப்பிடுறாரு" என்று கூறி விட்டுச் சென்றான் அங்கு வேலை செய்யும் சிற்றூழியர் ஒருவர்.

"நான் போய் பார்த்துட்டு வரேன்" என்று சிறு புன்னகையை சிந்தி விட்டு தீக்ஷிகா எம். டி அறையை நோக்கி செல்லவும், செல்லும் அவளையே இமைக்காது பார்த்துக் கொண்டிருந்தான் சித்தார்த்.

'எனக்கு என்னாச்சு?.. எதுக்கு இப்படி எல்லாம் பண்ணிட்டிருக்கேன்' என்று தன்னிடமே கேட்டுக் கொண்டவன் இதழ்கள் லேசாக விரிந்து கொள்ள வெட்கி நெஞ்சை நீவிக் கொண்டான்.

"எக்சியூஸ்மீ சார்" என்று வெளியிருந்து குரல் கொடுக்கவும் "எஸ் கமிங்" என்ற கம்பிரமான குரல் உள்ளிருந்து ஒலித்தது.

ஏதோ பரீட்சயமான குரலை கேட்பது போல் அவளுக்குத் தோன்றியது.

புருவங்கள் யோசனையில் நெறிக்க தலையை உலுக்கிக் கொண்டவள் கதவை திறந்து கொண்டு உள்ளே நுழைந்தாள்.

"சார்.." அழைக்க வந்தவள் வார்த்தைகள் முன்னே அமர்ந்து கோப்புக்களை புரட்டிக் கொண்டிருந்த ரிஷியை கண்டதும் தொண்டையிலேயே சிக்கிக்கொண்டது.

சிரித்த முகமாய் உள்ளே நுழைந்தவளின் முகம் அந்த கணம் சிரிப்பை தொலைத்து வெளிரிப் போய் காணப்பட்டது.

தடக் தடக் என வெளியே கேட்குமளவு இதயத்துடிப்பு ஏகத்திற்கு எகிறியது.

"மிஸிஸ் தீக்ஷிகா ரைட்.." என்று அவள் முகத்தில் விழிகளை பதித்து கூறியவன் மீண்டும் அவள் ஆவணங்கள் அடங்கிய கோப்பில் விழிகளை அலைய விட்டான்.

"மெரீட்.." என்றவன் பார்வை அவனையும் மீறி அவள் கழுத்தில் பதிந்து மீண்டது.

"ஆமா நீங்க இன்னொருத்தரோட ஆபீஸ்ல ஒர்க் பண்றீங்கங்குற மைண்ட் செட் உங்களுக்கு இருக்கா இல்லையா? இதான் நீங்க ஆபீஸ் வர டைமா?" அவள் முகம் நேருக்கும் நேர் பார்த்து அவன் வெகுசாதாரணமாவும் அதே வேலை அழுத்தமாகவும் வினவினான்.

ஆனால் அவளால் அப்படி இருக்க முடியவில்லை. அவள் விழிகளோ அவன் மேல் நிலைத்திருந்தது.

"உங்ககிட்ட தான் கேட்குறேன் மிஸிஸ் தீக்ஷிகா, இதான் நீங்க ஆபீஸ் வர டைமா" அவன் மறுபடியும் சற்று குரல் உயத்தி வினவவும் பிரம்மை பிடித்தவள் போல் சிலையாய் நின்றவள் திடுக்கிட்டு மீண்டான்.

"ஹான்ங்.. அ.. அது" நா வறண்டு வார்த்தைகள் தொண்டை குழியில் சிக்கி வெளி வர மறுத்தது.

"என்ன அது இதுன்னு கிட்டு. இர்ரெஸ்பான்ஸிபிளிடி கை" என்று பல்லை கடித்து கை முஷ்டியை இறுக்கி எரிச்சலுடன் அவன் மேசையை தட்டவும் அதை எதிர்பாராத தீக்ஷிதாவின் உடல் ஒருநொடி தூக்கி வாரிப்போட்டது.

சட்டென கண்கள் கலங்கி விட்டது. இவ்வளவு கோபம்.. முதல் முறை அவனிடமிருந்து எதிர்நோக்குகிறாள். கால்கள் அனிச்சையாய் இரு அடி பின் வாங்கிக் கொண்டது. கண்களை இறுக்கி மூடி தன் உணர்ச்சிகளை கட்டுப்படுத்த வெகுவாக போராடினாள்.

"ஆபீஸ்னா அதுக்குன்னு சில ரூல்ஸ் என்ட் ரெகுலேசன் இருக்கு. முன்ன இங்க நீங்க எப்படி நடந்துகிட்டீங்கங்குறது எனக்கு முக்கியமே கிடையாது, இனி இந்த கம்பெனியோட சியார் மேன் அண்ட் எம்.டி எல்லாமே நான் தான்.. எஸ் அ ஸ்டாபா நான் சொல்றத கேட்டு தான் இங்க இருக்க எல்லாரும் நடந்துக்கனும்.. சோ உங்க வேலைய விட்டு தூக்கிற ரைட்சும் என் கைல இருக்குங்குறத மறந்து நடந்து கொள்ளாதீங்க” என அவளை சுட்டிக்காட்டிக் கூறினான்.

"இது ஒன்னும் சத்திரம் கிடையாது நீங்க வர நேரத்துக்கு வரவும் போக வேண்டிய நேரத்துக்கு போகவும்" என்று அவன் கூறவும் தீக்ஷி விழுக்கென அவனை நிமிர்ந்து பார்த்தாள்.

அவனும் அவளைதான் பார்த்துக் கொண்டிருந்தான்.

"இது ஆர் வீ கான்டிரெக்ட்டிங் கம்பனி. இந்த ரிஷி வர்மனோடது. இங்க வேல பார்க்கனும்னா அதுக்கு ஒரு குவாலிட்டி வேணும், இப்படி உங்களுக்கு நெனச்ச மாதிரி நேரத்துக்கு இங்க வரதுன்னா நீங்க தாராளமா உங்க வீட்லயே இருந்துக்கலாம்" என்றான் கடுமையான குரலில்..

அப்போ இப்போ என கண்களில் கண்ணீர் குளம் கட்டிக் காணப்பட பார்வையை தாழ்த்தியபடி,"சா.. சாரி.. சாரி சார்.." என்றாள் நலிந்த குரலில்..

அடுத்த நிமிடமே "உங்க சாரிய தூக்கி குப்பைல போடுங்க" என்று அவள் மன்னிப்பை அவளுக்கே விட்டெறிந்தான்.

அவள் நிமிரவில்லை. கால் விரல்களால் நிலத்தை முடியுமானளவு அழுத்திக் கொண்டாள்.

எந்த மாதிரியான உணர்வின் வெளிப்பாடு இது?..

அவனை பொறுத்தவரை முதலாளி திட்டுவதால் ஓர் சராசரி ஊழியராய் அவள் காட்டும் எதிர்வினையே இது.

"ஹலோ மிஸிஸ் தீக்ஷிகா" முடியுமானளவு அழுத்தத்தை கூட்டி அழைத்தான்.

சட்டென தீக்ஷிகா அவனை நிமிர்ந்து பார்த்தாள்.

"திஸ் ஈஸ் தி லாஸ்ட் வார்னிங்.. இனி இப்படி நடக்கக் கூடாது. ஆல் வேஸ் ஐ அம் வாட்சிங் யூ.. தென் கெட்ட அவுட் ஒப் மை கேபின்" என்றான் கடுமையாய்..

"சாரி சார் இனி இப்படி நடக்காது" சிறு தடுமாற்றத்துடன் கூறியவள் அடுத்த நிமிடமே அங்கிருந்து வெளியேறியிருந்தாள்.

அவன் பார்வையோ வெறுமையாய் அவள் சென்ற திசையிலேயே வெறித்துக் கொண்டிருந்தது.

ஊழியர்களின் பட்டியலை ஆராயும் போது அவள் பெயரை கண்டு கொண்டு விட்டான். அவளை காண முன்னே அவள் தான் என மனம் அடித்துக் கூறியது.

அவனுக்கு உரிய அறை முழுவதும் கண்ணாடியை கொண்டு நிர்மானிக்கப்பட்டிருந்தது. வெளியிருந்து பார்ப்போருக்கு எப்படி உள்ளிருப்பவர்கள் வெளியே புலப்பட மாட்டார்களோ அதற்கு மாறாய் உள்ளிருந்து பார்ப்போருக்கு வெளியே உள்ள அனைத்தும் துல்லியமாய் புலப்படும் வகையில் நுட்பமான கண்ணாடி பொறுத்தப் பட்டிருந்தது.

அவள் அலுவலகத்தில் நுழைந்ததிலிருந்து சித்தார்த்துடன் சிரித்து பேசியதிலிருந்து அனைத்தும் அவன் ஹேசர் விழிகளில் நேரலையாய் ஒளிபரப்பாகியது.

முகத்திலிருந்த இறுக்கம் மேலும் மெருகேறியது.

வெளியே வந்த தீக்ஷிகாவின் நெங்சிக்கூடு ஏறி இறங்கியது.

அனைவரின் பார்வையும் அவள் மீதே பதிந்திருக்க அது அவள் கண்ணோட்டத்தில் விழவில்லை.

கதவு சரியாக அடைக்கப்பட்டிருக்காததால் அவனின் கடுமையான பேச்சு அனைவர் காதுகளையும் வந்தடைந்து விட்டது.

தன்னிடத்தில் வந்தமர்ந்தவளிடம் "என்னாச்சு தீக்ஷிகா.. லேட் டா வந்ததுக்காகவா இப்படி கத்துராரு?" வியப்பு குறையாது வினவினாள் சுஜிதா.

"தீக்ஷிகா ஆர் யூ ஓகே" அவள் முகமாற்றத்தை கண்டு உண்மையான அக்கறையுடன் சித்தார்த் வினவ அவை அனைத்தும் அவள் செவிகளில் விழுந்தால் தானே.

"நான் கொஞ்சம் வாஷ் ரூம் போய்ட்டு வரேன்" என்றவள் தன் கை பையை எடுத்துக் கொண்டு நேரே சென்று பெண்கள் கழிவறைக்குள் நுழைந்து கொண்டாள்.

நெஞ்சுக்கூடு இறுக்கத்தை தத்தெடுக்க சுவாசக்குழாய் அடைத்து கொண்டது. இதயம் வேகமாக படபடத்தது. சுவாச செயற்பாடு தடைபட்டு விட்டது.

நெஞ்சாங்குழி விம்மி புடைக்க நெஞ்சில் கையை வைத்து வாயை திறந்து வேகவேகமாய் மூச்சை உள்ளே இழுத்து வெளியே இட முயற்சித்தாள்.
மூச்சு விடுவது சிரமமாகி விட்டது.

அவசரமாக கையிலிருந்த பையை துழாவி அதிலிருந்த இன்ஹேலரை எடுத்து ஒரே மூச்சாய் உள்ளே உறிஞ்சினாள்.

அப்படியே சுவரில் கண்ணை மூடி சாய்ந்து கொண்டாள். விழிகளிலிருந்து விழிநீர் வழிந்தது. கடினமான சுவாச செயன்முறை இன்ஹேலரின் உபயத்தால் மெல்ல மெல்ல சீர் நிலைக்கு திரும்பியது.

எவ்வளவு நேரம் அப்படி சாய்ந்திருந்தாள் என்று அவளுக்கே தெரியவில்லை யாரோ வரும் சத்தம் கேட்கவும் விருட்டென கண்ணீரை துடைத்துக் கொண்டு அங்கிருந்து நகர்ந்தாள்.


**


விமான நிலையத்திற்கு முன் முகத்தை மறைக்கும் விதமாய் மாஸ் அணிந்து கூந்தலை லேசாக கொண்டை இட்டு தொப்பியினுள் அதை முழுவதும் அடக்கி ஜீன்ஸ், டீ சர்ட் அதற்கு மேல் கட்டம் போட்ட சர்ட் சகிதம் கையில் பெயர் பலகையுடன் நின்று கொண்டிருந்தாள் அகிலா.

நேற்றே ஒருவர் நேரகாலத்துடன் டெக்ஸியை பதிவு செய்திருந்ததால் விடியற்காலையிலேயே நேரத்திற்கு கிளம்பி வந்து விட்டாள்.

சுற்றும் முற்றும் பார்வையை அலைய விட்டவள் பெயர் பலகையை ஒருமுறை எட்டிப் பார்த்தாள். அருண் ஷ்ரேஸ்திரி.

'ஷ்ரேஸ்திரி' உதட்டுக்குள் முணுமுணுத்துக் கொண்டவளுக்கு அந்த பெயர் வேடிக்கையாய் புலப்பட்டது.

"எக்சியூஸ் மீ" என்ற குரலில் விருட்டென ஏறிட்டுப் பார்த்தாள்.

அகிலாவின் கையிலிருந்த பெயர் பலகையையும் தன்னையும் சுட்டிக்காட்டி தான் தான் அது எனும் விதமாய் சைகை செய்தான் அருண் ஷ்ரேஸ்திரி.

பெயரை பார்த்ததும் ஏதோ வயதானவராக இருக்கும் என எண்ணி விட்டிருக்க அவனோ கண்களில் கூலர்ஸ், ஜீன்ஸ் வெள்ளை நிற சர்ட் மேலே ஜாக்கெட் என பார்ப்பதற்கு வாட்டசாட்டமான வாலிபனாய் காணப்பட்டான்.

எனக்கு எதற்கு இந்த வீண் ஆராய்ச்சி வந்த வேலையை பார்ப்போம் என தலையை உலுக்கிக் கொண்டாள்.

முழுவதுமாய் ஆராய்ச்சி முடிந்ததன் பிறகே இந்த எண்ணவோட்டம் அவள் மனதில்..

அவனுக்கு சிறு தலையசைப்பை பதிலாய் வழங்கியவள் தன் வண்டியை நோக்கி நடக்க அவனும் அவளை பின் தொடர்ந்து நடந்தான்.

அவனின் பெட்டிகளை அவள் வண்டி டிக்கியில் எடுத்து வைக்க முயல "ஐ வில் டேக் கேர்" என்றவன் அவனே அவனது பெட்டிகளை பின்புறம் அடுக்கினான்.

அவள் தடுக்கவில்லை சிறு தலையசைப்புடன் கடந்து சென்று வண்டியை ஆயத்தமாக வைத்துக் கொள்ள அவன் வந்து பின்புறம் ஏறிக்கொள்ளவும் வண்டியை அவன் செல்ல வேண்டிய இடத்தை நோக்கிச் செலுத்தலானாள்.

ஆனால் இதுவரை இவனை போல் ஒருவரும் தங்கள் பெட்டியை தாங்களே எடுத்து வந்ததாய் தெரியவில்லை.

அது எவ்வளவு எடை கொண்டதாக இருப்பினும் கண்டமேனிக்கு அதிகாரமாய் அவ்விடமே விட்டுச் சென்று வண்டியில் ஒய்யாரமாய் அமர்ந்து விடுவார்கள்.

பணம் கொடுத்துத்தானே செல்கிறோம் என்ற உயர்ந்த எண்ணோட்டம் அவர்கள் மனதில்..

ஒருமுறை அதிக எடை கொண்ட பெட்டியை தூக்கி ஒருவாரமாய் கை வலியில் தவித்ததை அவள் மட்டுமே அறிவாள்.

வண்டி அதிவேகப் பாதையில் சீரான வேகத்தில் சென்று கொண்டிருக்க அவன் மொபைல் அலறியது.

"ஹலோ.. ஆ சொல்லுங்க அம்மா.. ஆ ஒரு ஹாப்னவர் முன்னாடி தான் ரீஷ் ஆனேன்" என்றான் அவன்.

எதிர்புறத்திலிருந்து என்ன சொல்லப்பட்டதோ "இப்போ தான்ம்மா ஹோட்டல்ல இறங்கி வயிறு முட்ட சாப்பிட்டேன்.. நீங்க சாப்டிங்களா? நான் வரும் வர வெயிட் பண்ணாம முதல்ல போய் சாப்பிடுங்கம்மா" என்று அவன் கூறவும் அகிலாவின் விழிகள் அனிச்சையாய் கண்ணாடியினூடாக அவன் மேல் பதிந்து மீண்டது.

அவள் ஒன்றும் அவன் பேச்சை ஒற்று கேட்கவில்லை, இருப்பினும் அவன் தாயிடம் கூறிய பொய் அவள் செவிகளை ஈர்க்கச் செய்தது.

பல நிமிடங்கள் கடந்த போதிலும் அவன் சிறிதும் முகம் சுளிக்காது தாயுடன் சிரித்து சிரித்து பேசிக் கொண்டிருந்தான். ஒரே விடயமே பல முறை கேட்கப்பட்டது போலும் சிறிதும் அலட்டிக் கொள்ளாது அதே பதிலை மீண்டும் கூறிக்கொண்டிருந்தான்.

"ஓகேம்மா ஓகே.. டேக் கேர்.." என்று அழைப்பை துண்டித்தவன் பார்வையை அகிலாவின் மேல் பதித்தான்.

அகிலா தன்னை பார்த்ததை அவன் கண்டு கொண்டிருக்க வேண்டும், "என்ன ப்ரோ, இவ்ளோ நேரம் உங்க கண் முன்னாடி இருந்துகிட்டு இப்போ தான் சாப்பிட்டேன்னு பொய் சொல்றேன்னு யோசிக்குறீங்களா?.. என்ன பண்றது அம்மா போண்ட் அப்படி. நாங்க சாப்பிடல்லன்னா அங்க அவங்க பட்டனி கிடக்கவும் தயங்க மாட்டாங்கல்ல, அதான் சும்மா ஒரு பொய்ய அடிச்சி விட்டேன்" என்றான் புன்னகை முகமாய்..

அவள் என்ன ஓட்டத்தை சரியாகக் கணித்து அவன் பதிலையும் கூறியிருக்க அதில் அகிலாவிற்கு ஒன்று மட்டும் நன்றாகப் புரிந்து போய் விட்டது.

அவள் தோற்றத்தை வைத்து அவன் தன்னை ஆண் என எடை போட்டு விட்டான்.. அப்படித்தான் அவள் தோற்றமும் புலப்பட்டது. உடலில் ஒட்டாத ஆடை அவளின் உடல் வாகையை வெளிப்படுத்தவில்லை. முகத்தை முழுமையாய் மறைத்திருந்த மாஸ் மற்றும் கண்ணை மறைக்கும் அளவு பணித்து போடப்பட்டிருந்த தொப்பியும் அவள் அடையாளத்தையே முற்றிலும் மறைத்தது.

இதுவும் நல்லதுக்கே என்று எண்ணியவள் அவன் கூற்றுக்கு எந்த எதிர்வினையும் பயக்கவில்லை. அதை அவன் எதிர்பார்க்கவுமில்லை.

அவன் இது உன் பார்வையிற்கான விளக்கம் அவ்வளவே எனும் விதமாய் கூறிவிட்டு மொபைலில் பார்வையை பதித்துக் கொண்டான்.

வண்டி பாதி தூரம் சென்றிருக்க இடையில் "வண்டிய அந்த மெடிக்கல் ஷாப்கிட்ட நிறுத்துங்க" என்றான்.

அகிலா வண்டியை மருத்துக் கடையின் முன் நிறுத்த அருண் உள்ளே சென்று வாங்க வேண்டியதை பொருளை வாங்கி வந்தான்.

அகிலாவின் பார்வை எதர்ச்சையாய் கடையை விட்டு வெளியே வந்தவன் கரத்திலிருந்த பொருளின் மீது பதிந்து மீள அவள் முகமோ சுணங்கிப் போனது.

இதுவரை அவள் சென்றுள்ள சவாரிகளில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாய் இருப்பார்கள். ஓர் சிலர் மணிக்கணக்காய் மொபைலில் காதலியுடன் காதல் பேச்சுக்களை ஆர்ப்பரிப்பதிலும் சில்மிஷப் பேச்சிகளில் ஈடுபடுவதுமாயிருப்பார்கள்.

மேலும் ஒரு சிலர் எங்கு ஏறினோம் எங்கு இறங்குகிறோம் என்று கூட தெரியாது பயணத்தை முழுக்க உறக்கத்திலேயே கொண்டு செல்வார்கள்.

ஏன் வஞ்சகமின்றி ஆளை பார்வையாலே விழுங்குபவர்களும் ஏராளம். இப்படி பல கோணலிள் கடந்து வந்தவர்கள் மத்தியில் தாயுடன் கொஞ்சி பேசும் மகனான இவன் அவளுக்குத் தனித்துவமாய் தெரிந்தான்.

ஆனால் இப்பொழுது அவன் கையிலிருந்த காண்டம் பக்கட்டை கண்டவுடன் அவள் கடந்து வந்த சராசரி ஆண்களை போல் தான் இவனும் என எண்ணி அலட்சியமாய் முகம் சுளித்தாள்.

'விவஸ்த கெட்டவன்.. எப்படி காட்சி பொருளா எடுத்துட்டு வரான் பாரு, இங்கிதம் தெரியாதவன்' என்று வாய்குள் முணுமுணுத்துக் கொண்டவள் அதற்கு பின் அவனை துச்சமாகவும் கண்டு கொள்ளவில்லை.

சூரியன் உச்சந்தலையில் நின்று தாளம் போடும் உணர்வு.. அகிலாவால் அடிக்கும் வெயிலை தாங்கிக் கொள்ள முடியவில்லை.

அவள் அணிந்திருந்த ஆடை வேறு வியர்வையை வஞ்சனையின்றி தத்தெடுக்கச் செய்தது.

யன்னல் வழியாய் வீசும் காற்று அவளுக்கு திருப்தியளிக்கவில்லை.

நல்லவேலையாய் அருண் ஓர் குறிப்பிட்ட இடத்தில் வண்டியை நிறுத்திமாறு கூறினான்.

அவன் வண்டியை விட்டு இறங்கிச் செல்லவும் அகிலாவும் வண்டியினுள் அடிக்கும் உஷ்ணத்திலிருந்து சிறிது நேரம் தப்பிக் கொள்ள எண்ணி வண்டியை விட்டு இறங்கினாள்.

அது ஓர் அடுக்குமாடி கட்டிடம்.. கட்டிடத்தை சுற்றிலும் மரங்கள் வளர்க்கப்பட்டிருந்ததால் இயற்கை காற்றிக்கு பஞ்சமற்ற சூழல்..

பறந்து வந்த மெல்லிய காற்று அவள் உடலை மென்மையாய் வருடிச் சென்றது.

இருப்பினும் அந்த இதத்தை முழுதாக அனுபவிக்க விடாது அவள் அணிந்திருந்த கவசங்கள் தடுத்தது.

தலை மட்டும் திருப்பி அருணை பார்த்தாள்.

கொஞ்சம் தூரமாக அவன் யாரோ ஒரு பெண்ணுடன் உரையாடிக் கொண்டிருந்தான். அவன் வர சற்று தாமதமாகும் என எண்ணியவள் தான் அணிந்திருந்த தொப்பியையும் மாஸ்க்கையும் உடனடியாக கழட்டினாள்.

லேசாக கொண்டையிடப்பட்டிருந்த கூந்தல் அவள் தொப்பியை உருவவும் போட்டிப் போட்டு விசிறி வந்து விழுந்தது.

கூந்தலை கோதி விட்டவாறு இமைகளை மூடி இதமான வீசிய காற்றினை உள்வாங்கி நின்றாள்.

இதமாய் வீசிய காற்றும் அந்த சூழலும் அவளிற்கு சுகமான உணர்வினை கொடுத்தது.

அவள் மெய் சிலிர்த்து போய் நிற்க அங்கு ஒருவனோ அவள் கோலம் கண்டு மூர்ச்சையாகி விட்டான்.

அகிலாவின் கணிப்பு தவறாய் போய் விட்டது, அவள் அருணை பார்த்து விட்டு திரும்பிய அடுத்த நொடியே கையிலிருந்த பொருளை பரிசோதனை ஒன்றிற்காய் வாங்கி வருமாறு கூறிய நண்பியிடம் ஒப்படைத்தவன், "தியா இனி இப்படியான திங்ஸ்ச என்கிட்ட வாங்க சொல்லாதே தாயே.. உன்னோட ப்ரக்டிகல நீயே வெச்சிக்க, பார்க்குறவங்க நான் ஏதோ எனக்காக வாங்கினேன்னு நெனச்சிக்க போறாங்கடி" கெஞ்சலுடன் கூறிவிட்டுத் அவளிடம் விடைபெற்று திரும்பியவன் கண்களில் ஐக்கியமானாள் அகிலா.

விழிகள் அவளை விட்டு இம்மியளவும் அசைய மறுத்தது. இதுவரை எந்த ஒரு பெண்ணையும் ஏறெடுத்து பார்க்காதவன் விழிகள் இன்று இந்த பெண்ணின் மேல் மாத்திரம் நிலைகொண்ட மாயம் என்ன!

மை தீட்டப்படாத கண்கள் முத்தை பாதுகாக்கும் சிப்பியாய் மூடிக்காணப்பட வலது பக்க கன்னத்தில் சிறிதாய் ஓர் மச்சம்.

அந்த சிறிய மச்சம் அவன் கண்களில் மட்டும் தெளிவாக வந்து விழுந்தது.

'அட இது பையனில்லப்பா பொண்ணு' மனசாட்சி எடுத்துரைத்தது.

ஆரம்பத்தில் அவளை சரியாக கவனிக்கவில்லை, இல்லையேல் பார்த்தவுடனேயே சரியாக புரிந்திருந்து கொண்டிருப்பான்.

ஓர் சில முடிக்கற்றைகள் அவள் விழிக்களில் வருடி சில்மிஷம் செய்ய அவற்றை பொருட்டாய் கொள்ளாது வண்டியில் சாய்ந்து கைகட்டி இயற்கை தேவியை அனுபவித்துக் கொண்டிருந்தவளை ஆழமாய் உள் வாங்கிக் கொண்டன அவன் விழிகள்.

ஏதோ ஒரு நெருடலில் சட்டென கண்களை திறந்தாள்.

கதிர் வீச்சை விட பார்வை வீச்சிற்குத்தான் ஊடுருவும் சக்தி அதிகம் போலும்..

விழுக்கென அவள் அருணை திசையை நோக்கி திரும்பவும் அவனோ சட்டென மறுபுறம் திரும்பிக் கொண்டான்.

அவன் விரல்களோ காய்களே காணப்படாத மாங்காய் மரத்தில் மாம்பழங்களை விரல் விட்டு எண்ணத் தொடங்கிவிட்டது.

கூந்தலை அள்ளி எடுத்து தொப்பியினுள் அடக்கியவள் மறுபடியும் முகத்தை மூடி பழைய நிலைக்கு மாறி வண்டியில் ஏறியமர்ந்தாள்.

கடைகண்ணால் அவள் நோட்டமிட்டவன் அவள் வண்டியில் ஏறி அமர்ந்திருப்பதை கண்டு பெருமூச்சுடன் வண்டியில் வந்து ஏறிக்கொண்டான்.

"ஏன் இந்த திருட்டுத்தனமான பார்வை?" மனசாட்சி எழுப்பிய கேள்விக்கு அவனிடத்தில் பதிலில்லை.

அதன் பின் அவன் அவளை ஏரெடுத்துக் கூட பார்க்கவில்லை.

நீண்ட நேரப்பயணம்.. அவன் சேர வேண்டிய இடம் வந்து விட்டது. மொபைலில் மூழ்கியிருந்தவன் தான் இறங்க வேண்டிய இடம் வந்தது இறங்கிக் கொள்ளவும் அகிலா தன் கடமை முடிந்து விட்டது என அங்கிருந்து கிளம்பி விட்டாள்.
 
உயிர் - 4


"வாட் இஸ் திஸ்" பலமுறை இதே கேள்வியுடன் தீக்ஷிகா ஒப்படைத்த கோப்புகள் அனைத்தும் ரிஷி வர்மனால் அவள் முகத்திலேயே விட்டெறியப்பட்டது.

இதற்கு மேல் முடியாது, சோர்ந்து போய் மேசையில் தொப்பென சாய்ந்து விட்டாள்.

காலையிலிருந்து தண்ணீர் சொட்டுக் கூட பல்லில் படவில்லை. மனசோர்வுடன் சேர்த்து உடல் சோர்வும் ஆளை வாட்டியெடுத்தது.

தலைக்கு மேல் வேலை பழுவை தூக்கி சுமத்தினான் ரிஷி.

ஒரே நாளில் பெல்ட்டை நிமிர்த்து விடுவான் போலும்..

அவளை சுற்றியிருந்தவர்களுக்கே அவளை பார்க்க பாவமாக இருந்தது. ஆனால் அந்த கொடுங்கோலனுக்கு இரக்கமென்பதே சிறிதுமின்றி அவளை படாத பாடு படுத்தியெடுத்துக் கொண்டிருந்தான்.

"ஹேய் தீக்ஷிகா நீ இன்னும் சாப்பிடல்லல்ல.. வா சாப்பிட்டு வரலாம்" என்று அவள் முன் வந்து நின்றான் சித்தார்த்.

பசி வயிற்றை கிள்ள எதையும் யோசிக்காது சட்டென எழுந்து கொண்டவள் செல்ல முற்பட அவள் மேசையில் சில தாள்களை எடுத்து வந்து வைத்தான் சிற்றூழியர்.

அவன் கூற முன் அவளுக்கு புரிந்து போய் விட்டது. எழுந்தவள் இருக்கையில் அப்படியே அமர்ந்து விட்டாள்.

"மேடம் இந்த கிராப் பேப்பர்ச சார் கரெக்ட் பண்ணி எடுத்துட்டு வர சொன்னாரு" என்று விட்டுச் சென்றான்.

அந்த தாள்களை கையிலெடுத்துப் பார்த்தாள். மூன்று பேர் சேர்ந்து செய்ய வேண்டிய வேலை அவள் தலையில் கட்டப்பட்டிருந்தது.

ஊணை பார்த்தால் வேலை முடிந்த போல் தான்.. "சித்தார்த் நீங்க போய் சாப்பிடுங்க நான் அப்புறமா சாப்பி
ட்டுக்கிறேன்" என்று விட்டாள்.

"ஆர் யூ சுவர்?" அவள் சோர்வான வதனத்தை வைத்து அவன் யோசனையுடன வினவ,


"யாஹ் நீங்க போங்க நான் அப்புறமா சாப்பிட்டுக்கிறேன்.." என்று அதோடு அவன் பேச்சிற்கு முற்றுப் புள்ளி வைத்தவள் மூச்சை இழுத்து பிடித்து வேலையில் மூழ்கிவிட்டாள்.

இவை அனைத்தையும் கண்ணாடியினூடாக பார்த்த வண்ணம் காபி அருந்திக் கொண்டிருந்த ரிஷியின் விழிகள் அளவு கடந்த வெறுப்பை உமிழ்ந்தது.

மணி ஐந்தை எட்டி விட்டது ஆனால் கொடுக்கப்பட்ட வேலை இன்னும் முடிந்தபாடில்லை.

இருக்கும் குறுகிய நேரத்திற்குள் முடித்து விட்டு செல்வது என்பது சாத்தியமற்ற விடயம்..

அதற்கு மேல் தீக்ஷிகாவிற்கு இருப்பு கொள்ளவில்லை. குழந்தையிடம் வாக்கு கொடுத்து விட்டு வந்திருக்கின்றாள். நேரத்திற்கு செல்லாவிடின் காத்திருக்கும் குழந்தையின் எதிர்பார்ப்பு சுக்கு நூறாகி விடுமல்லவா..

நேரே எழுந்து எம்.டி அறையை நோக்கிச் சென்றாள்.

உள்ளே நுழையும் முன் மூச்சை இழுத்து விட்டவள், "எக்சியூஸ்மீ சார்" என்றாள்.

"எஸ் கமிங்"

உள்ளிருந்து அனுமதி வரவும் உள்ளே நுழைந்தாள்.

லேப்டாப்பில் இருந்த பார்வையை விலக்காது "ம்ம் சொல்லுங்க?" என்றான் ரிஷி.

"சார் நீங்க கொடுத்த க்ராப்ஸ் ல இருக்க பால்ஸ என்னால முடிஞ்ச அளவு கரெக்ட் பண்ணிட்டேன். முழுசா கரெக்ட் பண்ணி முடிக்க இன்னும் நேரமாகும்.. மிச்சத்த நான் நாளைக்கு காலைல ஏர்லியா வந்து கரெக்ட் பண்ணி குடுக்கட்டுமா? இப்போ நேரமாச்சு நாம் கிளம்பட்டுமா?" தயங்கி தயங்கி இழுவையாய் கேட்க வந்ததை கேட்டுவிட்டாள்.

இருக்கையில் வலது கை முட்டியை குற்றி விரல்களை நெற்றியில் பதித்தபடி நிதானமாய் அவளை நிமிந்துப் பார்த்தான் ரிஷி.


"மிஸிஸ் தீக்ஷிகா நீங்க இப்போ வீட்டுக்கு போய் புருஷனுக்கு பணிவிட தானே செய்ய போறீங்க? இல்லன்னா வேற எதாச்சும் கமிட்மண்ட் இருக்கா? " என்ற அவன் கேள்வியில் அதிகபடியாய் கேலிக்கை அடங்கியிருந்தது.

அவன் கேள்வியில் விருட்டென அவனை நிமிர்ந்துப் பார்த்தாள்.

"இருக்கா? இல்லையா? " என்று மறுபடியும் அழுத்தமாக வினவினான்.

'நீ கூறாது உன்னை விடமாட்டேன்' அப்படியாய் ரிஷியின் பார்வை அவள் மீது பதிந்திருந்தது.

இல்லை எனும் விதமாய் இடவலமாய் தலையை ஆட்டினாள்.

நேரடியாய் எறியப்படும் வார்த்தைகளை விட மறைமுகமான இறக்கப்படும் வார்த்தைகளே அதிகம் வீரியம் வாய்ந்தது.
உயிர் வரை சென்று தாக்குகிறதல்லவா..

சேலை நுனியை இறுக்கமாக பற்றிக் கொண்டது அவள் விரல்கள்.

"இல்லை ல.. அப்புறம் என்ன? நான் தானே எந்த கம்பெனி எம் டி. நான் சொல்றேன், இன்னிக்கு நீ அந்த கிராப்ஸ் ச கம்ப்ளீட் டா கரெக்ட் பண்ணி கொடுத்துட்டு தான் இங்கிருந்து போகனும்.. இட் ஸ் மை ஒர்டர்" என்று அதிகாரமாய் உரைத்தவன் தன் வேலையை விட்ட இடத்திலிருந்து தொடர்ந்தான்.

அதற்கு மேல் இவனிடம் அனுமதி கேட்பதும் தானே கூரிய வாளை அலேக்காக வயிற்றில் இறக்கிக் கொள்வதுமொன்று என புரிந்து போய் விட்டது. தளர்வான நடையுடன் தன் இருக்கையில் வந்து அமர்ந்தாள்.

'சாரி அம்மும்மா' மானசீகமாக மகளிடம் மன்னிப்பை வேண்டியவள் அடுத்து அகிலாவிற்கு,தான் வரத் தாமதமாகும் என்ற தகவலை கூறி குழந்தையை வீட்டு அழைத்து செல்லுமாறும் அவ்வழியே அவளை பார்க்கிற்கு அழைத்துச் செல்லுமாறும் மெசேஜை தட்டி விட்டு தனது வேலையில் கவனம் செலுத்தத் தொடங்கிவிட்டாள்.


கொடுக்கப்பட்ட வேலைகளை முடிகையில் மணி ஆறை தொட்டு விட்டது.

வரைபுகள் அனைத்தையும் மீண்டும் ஓர் முறை சரி பார்த்து விட்டே ரிஷியிடம் ஒப்படைத்து விட்டு வீடு திரும்பினாள்.

வீட்டுக்குள் காலடி எடுத்து வைத்தவுடன் "மம்மி" என ஓடி வந்து அவள் காலை கட்டிக் கொண்டாள் அம்ரிதா.

மகளின் முகத்தை பார்த்ததும் பீறிட்டு வந்த கண்ணீரை கட்டுப்படுத்துவது பெரும்பாடாய் போனது.

"ரொம்ப டயர்டா இருக்கு அம்மு. நான் போய் ரெஸ்ட் எடுக்குறேன்" என்றவள் அங்கு நிற்காது அறைக்குள் சென்று கதவை சாத்திக் கொள்ள, அவள் வந்ததிலிருந்து அவளையே பார்த்துக் கொண்டிருந்த அகிலாவால் அவள் முகமாற்றத்தை நன்றாக புரிந்து கொள்ள முடிந்தது.

தீக்ஷிகா அறைக்குள் நுழைந்தவுடன் கடினமுயர்ச்சியுடன் சிரமப்பட்டு கட்டுப்படுத்து வைத்திருந்த விழிநீர் தடாகம் உடைப்பெடுத்து கன்னம் நனைத்தது.

பையை ஒரு ஓரமாய் தூக்கி வீசியவள் கட்டிலின் மேல் கால்களை குறுக்கி அமர்ந்து சத்தமின்றி அழத்துவங்கி விட்டாள்.

"ஐ அம் சாரி வித்யுத், ஐ அம் ரியலி ரியலி சாரி.." மனமானது நொடிக்கொரு முறை மானசீகமாய் அவளவனிடம் மன்னிப்பை யாசித்துக் கதற சத்தம் போட்டு கதறியழத் தோன்றியது.

இதயம் வெம்பித் துடித்தது.. கண்ணீரானது வற்றா நதியாய் வழிந்தோடியது. உள்ளுக்குள் எழும் குமுறல்கள் அனைத்தும் அழுத்தத்தை கொடுத்து மூச்சுக் குழாயை அடைக்கச் செய்ய மூச்சு முட்டியது.. ஆனால் எதிர்வினை பயக்க மனமின்றி அப்படியே அமர்ந்திருந்தாள்.

ஏதோ ஒரு குறுகுறுப்பில் அம்ரிதாவை பக்கத்து வீட்டுக் குழந்தையுடம் விளையாட விட்டு விட்டு தீக்ஷிகாவின் அறைக்குள் நுழைந்தாள் அகிலா.

வாயை திறந்து மூச்சுக்காய் தவித்துக் கொண்டிருந்த தீக்ஷிதாவை கண்டு விக்கித்துப் போனாள்.

"ஹேய் தீக்ஷி!" கத்தியே விட்டாள்.

நொடியும் தாமதிக்காது "இன்ஹேலர எங்கடி வெச்ச" என்ற கேள்வியை நா எழுப்பினாலும் கைகள் அவசர அவசரமாய் அனைத்து இடங்களையும் அலசி இன்ஹேலரை தேடியது.

ஒரு ஓரமாய் நிலத்தில் விழுந்திருந்த தீக்ஷிகாவின் கைப்பை தென்பட அவசமாய் அதை எடுத்து ஆராய்ந்தவளுக்கு இன்ஹேலர் கைகளில் சிக்கியதுமேயே இருந்த படபடப்பு சிறிதாகக் குறைந்தது.

நொடியும் தாமதிக்காது அதை எடுத்து தீக்ஷிதாவின் வாயில் வைத்து அழுத்தினாள்.

அதன் பிறகே தீக்ஷிகாவின் நிலை சீராக மாறியது.

"கொஞ்ச நேரத்துல உயிரே போயிடுச்சு தெரியுமா.. என்னாச்சு உனக்கு? உனக்கு ப்ரீதிங் ப்ரோப்லேம் இருக்குன்னு தெரிஞ்சும் எதுக்கு இவ்ளோ கேயார்லெஸ் சா இருக்க.. எதுக்கு அழுதுட்டு இருக்க?” சிலை போல் அமர்ந்திருந்தவளின் தோளை பற்றி கலவரமாக வினவவிய அகிலாவை பாய்ந்து அணைத்துக் கொண்டாள் தீக்ஷிகா.

தீக்ஷியை பொறுத்தவரை அவளுக்கே அவள் ஆறுதல் தேடிக் கொள்ளும் வழியிது. அதை அகிலாவும் நன்கு அறிவாள்.

அவளின் முகபாவனையை வைத்து ஏதோ சரியில்லை என உணர்ந்தவள் ஆறுதலாய் அவள் முதுகை தட்டிக் கொடுத்தாள்.

"என்னாச்சு?"

"எதுவும் என்கிட்ட கேட்காத ப்ளீஸ், என்ன இப்படியே கொஞ்ச நேரம் இருக்க விடு" என்று தெளிவில்லா விசும்பலும் கூறினாள் தீக்ஷிதா.

அதற்கு மேல் அகிலா எதையும் கேட்கவில்லை. அழுகியினூடே மனஅழுத்தத்தை தீர்த்துக் கொள்ளட்டும் என விட்டு விட்டாள்.

..


எக்குத்திக்கிலும் அவள் முகமே மின்னியது.

எங்கு சென்றாலும் தேடி வந்து வதைக்கிறாள்.

அவள் முகம் பிரதிபலித்த முகம் பார்க்கும் ஆளுயரக் கண்ணாடி ரிஷியின் கைவரிசையாய் சில்சில்லாக உடைந்து நிலத்தில் சிதறியது.

ஆனால் அதோ பரிதாபம் நிலத்தில் சிதறிக் கிடந்த கண்ணாடி துண்டுகளிலும் அவள் முகமே பிரதிபலித்தது. மென்மையாய் புன்னகைத்து அவனை சித்திரவதைக்குள்ளாக்கியது.

"யூ டாமிட்.. ஐ ஹேட் யூ.. ஐ ஸ்டில் ஹேட் யூ" என்று தனக்கே உரைக்க வேண்டும் என்பதற்காவோ தெரியவில்லை அந்த அடுக்குமாடி இல்லமே அதிரும் வரை கத்தி பூட்ஸ் காலால் சிதறிக் கிடந்த கண்ணாடி துண்டுகளை மேலும் சிதறடித்தான்.

அப்படியே கால்களை குறுக்கி தொப்பென நிலத்தில் மண்டியிட்டு அமர்ந்து விட்டான்.

கண்ணாடியை பதம் பார்த்த கரத்திலிருந்து வழிந்த இரத்தத்துளிகள் பளிச்சிட்ட மாபில் தரையில் சொட்டு சொட்டாய் சிதறி அவனை பார்த்து பல்லிளித்தது.

வலியில் உடலினுள் கடத்தப்பட்ட எரிச்சல் காயப்பட்ட மனதிற்கு சுகமான உணர்வை கொடுக்க தனக்கு தானே சிரித்துக் கொண்டான்.

'நீ எதை நிரூபிப்பதற்காய் இப்படி
எல்லாம் செய்கிறாய்' மனசாட்சி எள்ளி நகைக்க கடைசியாய் அவள் உரைத்த வார்த்தைகள் காதுகளில் ரீங்காரமிட்டது.

"ஆமா நான் டைம் பாஸ்க்காக தான் உன் கூட பழகினேன் போதுமா.. கொஞ்சம் தொட்டு பேசிட்டா அது காதலாகிடுமா.. நீ எந்த காலத்துல இருக்க? கொஞ்சம் ப்ராக்டிக்கலா யோசி" அவள் கூறிய வார்த்தைகளும் அவளது அலட்சியப்பார்வையும் உயிரின் ஆழம் வரை சென்று பதித்திருக்க எப்படி அவளை மறக்க முடியும்.

"அவள் என்ன என்னை வேண்டாம் என்கிறது எனக்குக் கூட அவள் வேண்டாம்.. வேண்டாம்.. இப்பொழுது என்னிடத்தில் அவளுடையது என எஞ்சியிருப்பது அவள் மீதான வெறுப்பு மட்டுமே" உள்ளுக்குள் சத்தமாக கூவி உரைத்து நிலத்தில் கை முஷ்டியை இறுக்கிக் கோபமாக குத்தச் சென்றவன் கரம் ஒரு நொடி செயலற்கு அந்தரத்தில் நின்றது .

"உங்க கையி வலிக்கும் ல" விழிகளை உருட்டி இதழ் பிதுக்கி கூறிய மழலையின் முகம் காரணமின்றி கண் முன் தோன்றி மறைந்தது.

முதல் முதலாய் ஒரு மழலையின் பேச்சிற்கு கட்டுப்பட்டு அவன் கரம் பின் வாங்கியது.

அலுவலகத்திற்கு அருகிலேயே ஒரு அடுக்குமாடி கட்டிடத்தில் உள்ள கட்டிடம் ஒன்றை ரிஷி தங்குவதற்காய் பதிவு செய்திருந்ததால் அலுவலகத்திலிருந்து அபார்ட்மெண்ட் திரும்புவதற்கு அவ்வளவாய் நேரம் எடுக்கவில்லை..

அபார்ட்மெண்ட் நோக்கி வண்டியை செலுத்தியவனின் மனம் கணமாய் காணப்பட்டது. எதிலும் ஈடுபாடற்ற வெறுமையான உணர்வு.

என்ன நினைத்தானோ வண்டியை அருகிலிருந்த பூங்காவிற்கு ஓரம் கட்டினான்.

ஒரு ஓரமாக மரத்திற்கு கீழ் போடப்பட்டிருந்த கல்லால் பொறிக்கப்பட்ட இருக்கையில் கைகளை கோர்த்து காலில் குற்றி அமர்ந்தான்.


மாலை நேரம் என்பதால் அவ்விடத்தில் அளவுக்கு அதிகமாகவே மக்கள் நடமாட்டம் காணப்பட்டது. அமைதியை தேடி வந்தவனுக்கு காதில் விழுந்த சலசலப்பு இருந்த மனநிலையில் எரிச்சலை மூட்டியது.

எரிச்சலாய் பல்லை கடித்து கண்களை இறுக மூடி கொண்டான்.

ஓரு விடயத்தை விரும்பி செவிமடுப்பவக்கே அது இரைச்சலொலியாக இருப்பினும் இனிமையான உணர்வையே கொடுக்கும், இவனோ மகிழ்வான தருவாயில் வெளிப்படுத்தப்படும் சிரிப்பொலி, குதூகலமான ஒலிகளை கூட இரைச்சலாய் நினைக்கும் பட்சத்தில் அது எந்நிலையில் அவன் மனதை ஒருநிலை படுத்தும்.

உள்ளே புதைந்து கிடந்த கோபத்தை இவ்வாறான அர்த்தமற்ற விடயங்களுக்காய் வெளிப்படுத்தி தீர்த்துக் கொள்ள முயற்சிக்கிறான்.

தன் ஆதங்கத்தை பல்லை கடித்து கை முஷ்டியை இறுக்கி கோபமாய் கல்லிருக்கையில் குத்தி வெளிப்படுத்தினான்.

கண்ணை மூடியிருந்தவனுக்கு
ஏதோ தன்னை ஊடுருவும் உணர்வு..

கண்களை மெல்லத் திறந்தவன் பார்வை அவனருகே அமந்திருந்த மழலையின் மேல் நிலைத்தது.

சிவப்பு நிற குட்டை கவுனில் அதற்கு ஏற்றாற் போல் தலையிற்கு பேன்ட் அணிந்து கழுத்து வரை வெட்டப்பட்ட மெல்லிய கூந்தல் காற்றில் அலை பாய மொச்சுக்கொட்டை விழிகளை உருட்டி கண் கொட்ட அவனைத்தான் பார்த்துக் கொண்டிருந்தாள்.


இவ்வளவு நேரம் முகத்தில் தொற்றியிருந்த இறுக்கத்தில் சிறு தளர்வு. விழிகள் அந்த பிஞ்சிடமிருந்து மீள மறுக்க கடினப்பட்டு தன்னை மீட்டுக் கொண்டவன் "என்ன?" என்றான் கரகரப்பான குரலில்..

அவன் கேள்வியையே அவனிடம் திருப்பிக் கேட்டது அந்த பிஞ்சு, "உங்களுக்கு என்ன?"

"எனக்கு என்ன?" என்றவன் தன்னையே ஒருமுறை குனிந்து நோட்டமிட்டுக் கொண்டான்.

"எதுக்கு பென்ஷ்க்கு குத்தினீங்க?" என்று விழிகளை சிமிட்டிய வண்ணம்
தெளிவாக மழலை மொழியினால் வினவினாள்.

அவன் கண்ணை மூடியிருந்ததால் குழந்தை வந்தமர்ந்ததை சரியாக கவனிக்கவில்லை, ஆனால் அந்த குட்டி பிஞ்சு அவனது நடவடிக்கைகளை கவனித்து கொண்டிருந்துள்ளது என உணர்ந்தவன் விழிகளை வேறு திசையில் அலைய விட்டவாறு "ஐ பீல் அன்கம்பர்டபல்.. ரொம்ப டிஸ்டர்பா இருக்கு, எதுலயும் இன்ட்ரெஸ்ட் இல்ல.. ஏன் என்னையே தொலைச்ச உணர்வு.. ப்ச்.. அதெல்லாம் உனக்கு புரியாது " என்று முகத்தை திருப்பிக் கொண்டான்.

அவன் மனநிலை அந்த மழலையிற்கு புரியாவிடினும் விழுந்தால் வலிக்கும் என்ற அடிப்படை அறிவை கொண்டிருக்கிறாளல்லவா!

"நீங்க இப்பதி பண்ணா உங்க கையி வலிக்கும் ல" விழிகளை உருட்டி இதழ் பிதுக்கி கூறிய குழந்தையை எந்த விதத்தில் எடுத்துக் கொள்வது எனப் புரியாது இதழை வளைத்து கடைபுன்னகையுடன் பார்த்தான்.

"அப்போ என்னோட மைண்ட என்ன பண்ணி காம்ப்ரமைஸ் பண்றது" என்றான் எடுத்தெறிந்து..

உயரமான இருக்கையிலிருந்து தாவி குதித்து இறங்கியவள் ரிஷியின் முன் வந்து நிற்க அவனோ புரியாது அவளை பார்த்தான்.

சின்னவள் கையை அசைத்து கிட்டே வருமாறு சைகை செய்ய பதிலுக்கு பெரியவன் ஒற்றை புருவமுயர்த்தி ஏன் என வினவினான்.

சிறு புன்னகையுடன் இமைகள் படபடக்க மறுபடியும் வருமாறு அழைக்க அவனுக்கு ஈடுபாடு இல்லையென்றாலும் அவன் உடல் தானாய் அவள் மொழிக்கு கட்டுப்பட்டு வளைந்து கொடுத்தது.

அவன் சிறிதும் எதிர்பார்க்காத விதமாய் தன் உயரத்திற்கு நுனிந்த ஆடவனை அணைத்துக் கொண்டாள் அந்த குட்டி தேவதை.

உள்ளுக்குள் ஓர் மெல்லிய அதிர்வு.. தற்போதே பூமியில் ஜனித்த பிஞ்சு மொட்டை மென்மையாய் அரவணைப்பது போல் வார்த்தையால் கூற முடியாத ஓர் புதுவிதமான உந்தல் உணர்வு. விழிகள் தாமாக விரிந்து கொண்டன. என்ன விதமான உணர்விது?

ஆடவனின் முதுகை தட்டிக் கொடுக்குறேன் பேர் வழி என இடுப்பை தட்டிக் கொடுத்துக் கொண்டிருந்தது அவள் பிஞ்சு கரங்கள்.

அவன் பரந்த கட்டுமஸ்தான உடல்வாகையை இரு கரங்களுக்குள் அடக்கும் அளவு அவள் தோற்றம் ஒன்றும் அவ்வளவு பெரிதல்லவே! அவளால் முடிந்தது அவ்வளவே!

"கவலபடாதீங்க, எல்லாம் ஓகேவாகிதும்" என்று ஆறுதலாய் தட்டிக் கொடுத்தாள் மழலை.

கணத்த மனதை கொண்டவனுக்கு அந்த ஒற்றை வார்த்தையும் அந்த பிஞ்சு விரல்களின் வருடலும் புதுவித மாற்றத்தை உருவாக்கியது. மயிலிறகால் மென்மையாக வருடியது போல் ஓர் சுகமான உணர்வு. அவன் அவளை அணைக்கவில்லை ஆனால் கண்களை மூடி அந்த அணைப்பில் திளைத்து நின்றான்.

"நான் விழுந்து அழும் போது மம்மி இப்பதி தான் பண்ணுவாங்க. மம்மி சொன்னாங்க இப்பதி பண்ணா எங்க மனசுக்கு ஆறுதலா இருக்குமாம், எல்லாம் கவலையும் பறந்து போயிதுமாம்" என்று முத்துப்பற்கள் சிந்த கூறியவள் யாரையோ கண்டு விட்டு அவனிடமிருந்து விலகி ஓடினாள்.

தூரத்தில் யாரோ ஒரு பெண் குழந்தையின் கரத்தை பிடித்து அழைத்துச் சென்றாள்.


ஒரு வேலை அந்த குழந்தையின் தாயாக இருக்கலாம் என கணித்துக் கொண்டான்.

அந்த சிலநொடி அணைப்பு ஏதோ பலத்த பிணைப்பை குறித்துக் காட்டியது. அவன் இதுவரை உணராத ஒரு புது உணர்வை உணரவைத்தது..

ஆனால் அந்த குழந்தை கூறிய கடைசி வார்த்தைகள் மறுபடியும் அவனை யாரையோ நினைவு கூறச் செய்தது.


உன் ஸ்ரூபம் எனை தீண்டும்
ஒவ்வொரு கணமும் வெறுப்பு எனும் ஆயுதத்தை விடாபிடியாய் கையிலேந்துகிறேனடி!
 
Last edited:
உயிர் - 5


பால்கனி வழியே நின்று சிகரட்டை புகைத்துக் கொண்டிருந்தான் ரிஷி.

பௌர்ணமி இரவு.. முழு மதி தனியாக வானில் தனிக்க விடப்பட்டிருக்கையிலும் அதன் ஓளியானது பூமியை விடாது தழுவிக்கொண்டிருந்தது.

தேகத்திற்கு இதமாய் வீசிய குளிர்காற்று ஆடவனின் சிகையை மென்மையாக வருடிச் சென்றது.

கண்களை மூடி ஆழ்ந்த மூச்சை உள்ளே இழுத்தான்.

விழித்திரையில் அவள் முகம்.. ஆம் அவளே தான்.. தீக்ஷிகா.. இன்று புதிதாய் காட்சியளித்த அவள் தோற்றம்.

"மிஸிஸ் தீக்ஷிகா" எல்லளாக இதழ்களுக்குள் முணுமுணுத்தவன் இதழ் வளைத்து தனக்குத் தானே சிரித்துக் கொண்டான்.

கையிலிருந்த சிகரட் துண்டு வஞ்சகமின்றி அவன் கையினுள் சிக்கி கசங்கி கீழே விழுந்தது.

அவன் எண்ணவலைகள் பெண்ணவளை முதல் முதலாய் சந்தித்த கணங்களை நோக்கி நகர்ந்து சென்றது.



ஐந்து வருடங்களுக்கு முன்பு…



சாலையில் சென்று கொண்டிருந்த பெண்மணியொருவரின் பையை கிட்டத்தட்ட பதினைந்து வயதிற்கு உட்பட்ட ஒரு சிறுவன் பறித்துச் செல்ல முயன்றதால் அந்த சிறுவனை சுற்றியிருந்த சிலர் பிடித்து சுற்றி வளைத்து பட்டிமன்றம் நடந்த அந்த இடமே ஒரே சலசலப்பாக காணப்பட்டது.

இவர்களின் சலசலப்பால் வீதியின் நடுவே வேடிக்கைக்காய் சுற்றிலும் மக்கள் கூட்டம் கூடி நிற்க, வாகனங்கள் அங்கிருந்து நகர முடியாத நிலை அங்கு நிலவியது.

காரில் அமர்ந்தவாறு இத்தோடு ஐந்து தடவைகளுக்கு மேல் ஹார்னை அழுத்தி விட்டான் ரிஷி. கூட்டம் கலைந்தபாடில்லை.

நொடிக்கொரு முறை கைக்கடிகாரத்தை நோட்டமிட்டுக் கொண்டிருந்தான். இப்படியே போனால் நேரத்திற்கு காலேஜிற்கு சென்றது போல் தான். பொறுமையை இழுத்துப் பிடித்து அமர்ந்திருந்தான்.

"ஆமாப்பா அந்த பையன் அந்த அம்மாவோட பேக்க திருடிட்டு போக பார்த்திருக்கான்" என்று ரிஷியின் அருகே நின்றிருந்த நபர் தன்னருகே நின்றிருந்தவரிடம் நடந்த விடயத்தை விளக்கிக் கொண்டிருந்தது ரிஷியின் காதுகளையும் எட்டியது.

நிமிடங்கள் கடந்த போதிலும் வாகன நெரிசல் அதிகரித்ததே தவிர்ந்து இருக்கும் நிலை சீராகுவதாய் தெரியவில்லை..

கூடியிருந்தவர்களின் சலசலப்பு எரிச்சலை மூட்ட பொறுமையை இழந்தவன் நெற்றியை நீவிக்கொண்டு வேகமாய் வண்டியை விட்டு இறங்கி முன்னே கூடியிருந்த கூட்டத்தை நோக்கி நடந்தான்.

குறுக்கே நின்றவர்களை நகர்த்தி விட்டு கூட்டத்திற்கு மத்தியில் நுழைந்தவன் சுற்றியிருந்தவர்களை ஓர் பொருட்டாய் கொள்ளாது இவை அனைத்துக்கும் மூலக்காரணமாய் திகழ்ந்த அந்த சிறுவனின் கன்னத்தில் பளாரென ஓர் அறையை விட்டான்.

அவன் செயலில் சுற்றியிருந்தவர்கள் அனைவரும் வாயில் கையை வைத்து வேடிக்கை பார்த்தனரே தவிர்த்து தடுக்க முயலவில்லை.

ரிஷி அறைந்து விட்டு திரும்பிய நொடி அவன் கன்னத்தை இடியாய் விழுந்தது ஓர் அடி.

இதுவரை காலம் அவன் தந்தை கூட அவன் மேல் கை வைக்காத நிலையில் ஒருவர் தன்னை கை நீட்டி அறைந்ததில் ஆடவனுக்கு சுர்ரென கோபம் தலைக்கேற, "யூ!!” பல்லை கடித்தவாறு ஒற்றை விரல் நீட்டி முன்னே நோக்கினான்.

நேருக்கு நேர் சந்திக்குமளவு அவள் உயரமில்லை, சற்று அவனை விட குள்ளமாகவே காணப்பட்டாள்.

கருமணிகள் சிறிது தாழ்ந்து முன்னே நின்ற தீக்ஷிகாவின் மீது பதிந்தது.

விரித்து விட்ட கூந்தல் காற்றில் நர்த்தனமான அதற்குப் போட்டியாய் கருமணிகளும் நிலை கொள்ளாது அலை பாய்ந்தது.

சுடிதார் அணிந்து துப்பட்டாவை கழுத்தில் சுற்றியிருந்தாள்.

விழிகள் கோபத்தின் வெளிப்பாடாய் சுருங்கியிருந்தது.

'யார் மீது என் மீதா?' சம்மந்தமின்றி மனசாட்சி கேள்வியெழுப்ப மூளையோ சாமர்த்தியமாய் விழிகள் போகும் திசையை வைத்து 'இல்லை இல்லை வேறு யார் மீதோ' என்று எடுத்துக் கொடுத்தது.

சுற்றி வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தவர்கள் மேல் தீக்ஷிகாவின் பார்வை படிய "எதுக்கு எல்லாரும் இங்க கூட்டமா கூடி இருக்கீங்க? அந்த பையன் என்ன இங்க இருக்க எல்லாரோட பேகயுமா பறிச்சுட்டு ஓடப் பார்த்தான்?" என்று கேள்வி எழுப்ப அனைவரும் ஒருவரின் முகத்தை ஒருவர் பார்த்தபடி விழித்தனர்.

"இல்லல்ல, அப்புறம் எதுக்கு சும்மா கூடிகிட்டிருக்கீங்க? கொஞ்சம் பின்னாடி திரும்பி பாருங்க. எல்லாரும் கூடியிருக்குறதால ட்ராபிக் ஜாமாயிருக்கு.. " என்று கைகாட்டு சுட்டிக்காட்டவும் அனைவரும் ஓர் முறை எட்டிப் பார்த்து நோட்டமிட்டுக் கொண்டனர்.

"அங்க என்ன பார்க்குறீங்க.. சம்பந்த பட்டவங்க அந்த அம்மாவும் அந்த பையனும் தானே, அப்புறம் எதுக்கு நீங்க எல்லாம் இங்க நின்னு உங்க டைம்ம வேஸ்ட் பண்ணுறீங்க.. எல்லாரும் கொஞ்சம் இடத்த காலி பண்றீங்களா.." சிரித்தவாக்கில் அனைவரையும் வாரி விடவும் ஒவ்வொருவராக மெதுவா அங்கிருந்து நழுவிச் சென்றனர்.

"யாரு மா நீ? இப்போ எதுக்கு கூட்டத்த கலைக்குற? இந்த பையன் பண்ண தப்புக்கு எல்லார் முன்னாடியும் நல்லா அவமானப்படட்டும்.. எல்லார் முன்னாடியும் போலீஸ்ச வரழைச்சு இவனெல்லாம் தர தரன்னு இழுத்துட்டு போனா தான் நல்ல புத்தி வரும்" என்று கடுமையாக தீக்ஷிகாவிடம் பொரிந்துத் தள்ளினார் பாதிக்கப்பட்ட பெண்மணி.

"மேம் கொஞ்சம் நான் சொல்றத கேட்குறீங்களா" என்றாள் தீக்ஷிதா நிதானமாய்..

"நீ சொல்றத எதுக்கும்மா நான் கேட்கனும். நீ என்ன இந்த திருட்டு பையனுக்கு வக்காலத்து வாங்குறியா.. நான் இப்போவே போலீஸ்சுக்கு கால் பண்றேன்” பிடி கொடுக்காது கடுகடுத்தார் அவர்.

போலீஸிற்கு அழைப்பதற்காய் தொலைபேசியையும் கையில் எடுத்து விட்டார்.

"மேம் ப்ளீஸ் நான் சொல்றது கொஞ்சம் கேட்டுட்டு அப்புறம் நீங்க தாராளமா போலீஸ்க்கு கால் பண்ணிக்கலாம்" என்ற தீக்ஷிகாவின் இறைஞ்சும் உறுதியான வார்த்தையகளில் அவர் அவளை ‘என்ன’ என்னும் விதமாய் பார்த்தார்.

“இப்போ என்ன சொல்ல வர?”

“உங்க பேக்க அந்த பையன் திருடிட்டு ஓடப் பார்த்தான்னு இவ்ளோ கோபப்படுற நீங்க ஒரே ஒரு நிமிஷம் அந்த பையன் எதுக்காக இப்படி செஞ்சான்னு கேட்க முயற்சி செஞ்சிங்களா?”" என்ற தீக்ஷிகாவின் கேள்வியில் அவர் விழிகளில் சிறு தடுமாற்றம்.

தீக்ஷிகாவின் பார்வை அந்த சிறுவன் மேல் பதிந்தது.

கண்ணீர் அப்போ இப்போ என வஞ்சனையின்றி கண்களில் தேங்கி நிற்க கன்னத்தில் கையை வைத்து வெளிரிப் போய் நடுங்கிக் கொண்டிருந்தான்.

அவன் அணிந்திருந்த பழைய கத்தை துணியின் ஆங்காங்கே சிறிய சிறிய பொத்தல்கள்..

பெரும்பாலும் இவர்கள் அவனை விரட்டிப் பிடித்திருக்க வேண்டும், அதன் விளைவால் அவன் விழுந்து கைகளில் கால் முட்டி என ஊராய்ந்து லேசாய் இரத்தம் கசிய மண்கள் துகள்கள் சுற்றிலும் ஒட்டியிருந்தது.

தீக்ஷிகா அந்த சிறுவன் அருகே சென்று அவன் உயரத்திற்கு முட்டியிட்டு அவன் கை, கால் என ஒட்டிக் காணப்பட்ட மண்களை தட்டி விட்டவள் தன்னுடைய கை குட்டையால் அவன் காலில் லேசாக இரத்தம் கசிந்து கொண்டிருந்த காயத்தை சுற்றி கட்டி போட்டு விட்டாள்.

ரிஷி உட்பட அந்த சிறுவன், அப்பெண் மூவரும் அவளின் செயலைதான் விழிக் கொட்டாது பார்த்துக் கொண்டிருந்தனர்.

"வேற எங்கயாச்சும் அடி பட்டிருக்கா.." என்று அவள் விழிகளால் அவனை ஆராய்ந்தவாறு வினவ அவனோ விசும்பலுடன் இல்லையெனும் விதமாய் தலையாட்டினான்.

"ஹேய் எதுக்கு இப்போ அழுவுற.. " அவள் கேட்க,

"என்னைய போலீஸ் புடிச்சிட்டு போவாங்களா அக்கா? அப்படி எதுவும் பண்ண வேண்டாம்னு சொல்லுங்கக்கா, நான் ஒன்னும் வேணும்னுல்லாம் அவங்க பேக திருடலக்கா" என்று கேவலுடன் கூறினான் அவன்.

தீக்ஷிதாவின் பார்வையோ அந்த சிறுவனிடமிருந்து விலகி அந்த பெண்மணியின் மீது படிந்து மீண்டது.

அந்த சிறுவனின் அழுகை உள்ளுக்குள் பெரிதாய் ஓர் கலக்கத்தை உண்டு செய்ய "ஹேய் அப்படிலாம் எதுவும் கிடையாது.. அவங்க சும்மா சொன்னாங்க, ஆனா முதல்ல நீ எதுக்காக அவங்க பேக திருடப் பார்த்தன்னு சொல்லு" எனக் கேட்க,

கண்களில் கண்ணீர் வழிய "நாலு நாளா சாப்பிடல்லக்கா.. எனக்கு ரொம்ப பசிக்குதுக்கா.. அதான் வேற வழி தெரியாம அப்படி நடந்துகிட்டேன்" என்றான் அவன்.

அவன் கூறியதை கேட்டவுடன் தீக்ஷிகாவின் விழிகளில் சட்டென கண்ணீர் எட்டிப் பார்த்தது.

இச்சிறுவனின் கண்ணீர் துளியில் கல் நெஞ்சம் படைத்தவர்களாயினும் கரைந்து விடுவார்கள், அப்படி இருக்க அப்பெண்மணி மட்டும் விதிவிலக்கா என்ன!

அவர் பார்வையில் இருந்த கடுமை மறைந்து போக புது பரிவு உருவானது.

துக்கம் தொண்டை குழியை அடைக்க எச்சிலை கூட்டி விழுங்கிய தீக்ஷிகா அச்சிறுவனை நோக்கி "ஆமா உன்னோட அப்பா அம்மா.." என்று மேலும் கேட்க முடியாது தவிக்க அவனோ அவள் கேட்க வந்ததை முழுதாக புரிந்து கொண்டு, "எனக்கு அம்மா இல்லக்கா அப்பா மட்டும் தான். அவரு காலைல போனா ராத்திரி தான் வீட்டுக்கு வருவாரு.. எப்போவும் வீட்டுக்கு வரும் போது குடிச்சிட்டு வந்து என்ன போட்டு அடிச்சு ரொம்ப கஷ்டப் படுத்துவாரு.. அதனால நான் வீட்ட விட்டு ஓடி வந்துட்டேன்" என்றான்.

அவன் மனநிலையை தீக்ஷிகாவால் நன்றாக உணர முடிந்தது. தாய் தந்தை உறவுகளின்றி தனித்து விடப்படும் போது இச்சமுதாயத்தில் இத்தகைய ஒரு நிலைக்கு தள்ளப்படுவோம் என பெற்றோரை இழந்த அவள் நன்கு அறிவாள்.

வெளியே வரத் துடித்த கண்ணீரை உள்ளே இழுத்துக் கொண்டவள் அவன் கன்னத்தை ஏந்தி கண்ணீரை அழுத்தத் துடைத்து விட்டபடி, "வாழ்கைல கஷ்டங்குறது நமக்கு எந்த நிலைல வேணாலும் வரலாம். எந்த நேரத்துல வரும்ன்னு யாராலும் சொல்ல முடியாது.. அதுக்காக கஷ்டம் வருதுன்னு நம்ம சுயத்த நாம இழந்துட கூடாது.. கடவுள் நமக்கு கஷ்டத்த கொடுக்குறான்னா அதுக்கு ஒரு காரணம் இருக்கும், அதுக்காக நாம தப்பான வழிய தேர்ந்தெடுக்குறது நாம கடவுள நிராகரிச்சுறதுக்கு சமம் ல. அதனால இனி எந்த ஒரு நிலைலயும் இப்படி ஒரு தப்பான வழிய நீ தேர்ந்தெடுக்கக் கூடாது, புரிஞ்சுதா.." என்று தீக்ஷிகா கூற அவனோ விழியகற்றாது அவளை பார்த்தபடி தலையை ஆட்டினான்.

"நாம தேர்ந்தெடுக்குற ஒரு தப்பான முடிவு நம்ம வாழ்கைய தல கீழா மாத்திடும். நிறைய பேர் அவங்க செஞ்ச தப்புகள் ல இருந்து விலக முடியாம ரொம்ப கஷ்ட படுறாங்க. ஆனா உனக்கு நீ பண்ண முதல் தப்பு, அத இந்தகணமே நிவர்த்தி செய்து கொள்றதுக்கான வாய்ப்பு கிடைச்சிருக்கு. அத நிவர்த்தி செஞ்சு கொள்வதும் இல்ல தப்பான வழிய தேர்தெடுக்குறதும் இப்போ உன் கையில தான் இருக்கு” என்றவள் அவனையே பார்த்து நின்றாள்.

அவள் கூற வருவதை புரிந்து கொண்டவன் தயக்கத்துடன் அப்பெண்மணியினருகே சென்று "எ.. என்ன மன்னிச்சுடுங்க மேடம். நான் ஒன்னும் திருடன் கிடையாது. எனக்கு வேற வழி தெரியல அதான் நான் இப்படி தப்பா நடந்துகிட்டேன். என்னைய போலீஸ்கிட்ட பிடிச்சு கொடுத்துடாதீங்க ப்ளீஸ்.. நான் இனி யார்கிட்டயும் இப்படி நடந்துக்க மாட்டேன்.. தயவு செஞ்சு என்னை மன்னிச்சிடுங்க" என்று தான் செய்ததுக்காய் வருந்தி அவன் கை கூம்மி மன்னிப்பு கேட்க,

அப்பெண்மணி மனமிறங்கி அவன் சிகையை வாஞ்சையுடன் வருடயவாறு, தீக்ஷிதாவை ஏறிட்டு தன் பதிலை இதழோரம் துளிர்த்த புன்னகையினூடாகவே வழங்கி விட்டு அங்கிருந்து நகர்ந்தார்.

தீக்ஷிகாவின் இதழ்களும் அவருக்கு நன்றியை உரைக்கும் விதமாய் விரிந்துக் கொண்டது.

அச்சிறுவனை நெருங்கி "இனி எதுக்காகவும் நீ அழக்கூடாது. ஒரு வேல உனக்கு யாருமில்லன்னு தோணிச்சுன்னா அப்போல்லாம் இந்த அக்கா உனக்கு துணையா இருக்கேன்னு யாபகம் வெச்சிக்கோ” என்று தலையை சாய்த்து சிரிக்க அவனும் பதிலுக்கு கண்ணீரை துடித்துக் கொண்டு சிரித்தான்.

"சரி வா முதல்ல நாங்க சாப்பிடப் போலாம் " என்று அச்சிறுவனின் கரத்தை பற்றிக் கொண்டு மறுபுறம் திரும்பியவள் முன்னே ஆஜானுபாகுவாக நின்றிருந்த ரிஷியின் மீது மோதி சட்டென ஒரு அடி பின்னே சென்று நின்றுவிட்டாள்.

அவ்வளவு நேரம் கைகட்டி அவளின் செயற்பாடுகளையே கவனித்து கொண்டிருந்தவன் அவள் திரும்பவும் புருவம் சுருக்கி அவளை உறுத்து நோக்கினான்.


ஏதோ ஒரு வேகத்தில் கையை நீட்டி விட்ட நிலையில் அவன் தன்னை வைத்த கண் வாங்காது முறைக்கவும் தீக்ஷிகாவிற்கோ கதி கலங்கியது.

இந்த சிறுவயதில் எதற்கு இந்த பொடுபோக்கான பழக்கம். அவன் தவறான வழியில் செல்ல முயன்றதால் தானே அவனுக்கு இப்படி அனைவருக்கு மத்தியிலும் கூனிக் குறுகி அவமானப்பட வேண்டிய நிலை நிலவுகிறது என்ற கோபத்திலேயே ரிஷி அந்த சிறுவனை கை நீட்டி அறைந்தான்.

மொத்தத்தில் இருவரும் எண்ணமும் ஒன்றே! ஆனால் அதை அவர்கள் வெளிப்படுத்திய விதம் வெவ்வேறு..

ரிஷி கையால் புரிய வைக்க நினைத்ததை தீக்ஷிதா வார்த்தைகளால் அன்பாக எடுத்துக் கூறி புரிய வைத்தாள்.

உதட்டை மடித்து "ஐ அம் சோ சாரி, அப்போ எல்லாரும் சுத்தி இருந்ததால அப்படி நடந்துகிட்டேன்.. நீங்க செஞ்சதும் ஒரு வகைல தப்பு தானே.. இருந்தாலும் ப்ளீஸ் தப்பா எடுத்துக்காதீங்க" என்று இரு கரத்தாலும் காதை பிடித்துக் கொண்டு இறைஞ்சும் குரலில் கெஞ்சினாள் அவள்.

அவள் மேல் அழுத்தமாய் பார்வையை பதித்தவன், "எனக்கு யாராச்சும் ஏதாச்சும் கொடுத்தா அத எப்போவும் திருப்பிக் கொடுத்து தான் பழக்கம்" என்றவன் அடுத்த கணமே அவள் கன்னத்தில் தன் கரத்தை பதித்திருந்தான்.

அவன் அறைவான் என எதிர்பாராதவளின் விழிகள் ஏகத்திற்கு விரிந்து கொள்ள கன்னத்தில் கை வைத்து அவனை பார்த்தாள்.

அவ்வளவு தான் தான் காத்திருந்ததன் நோக்கம் நிறைவேறி விட்டது எனும் ரீதியில் அவன் அங்கிருந்து விறுவிறுவென கிளம்பிவிட்டான்.

பெண்ணவளுக்குத் தான் அதிர்ச்சியிலிருந்து மீள சில நிமிடம் பிடித்தது.
 
உயிர் - 6


நெஞ்சில் தலை சாய்த்து உறங்கும் குழந்தையின் அழகை உள்வாங்கிக் கொள்ள தீக்ஷிகாவிற்கு இரு விழிகள் பத்தவில்லை.

மீண்டும் பல ஜென்மங்கள் ஈடேர தவமிருக்கிறாள் என்றால் அது இந்த பிஞ்சு மொட்டை மார்போடு சேர்ந்து அன்போடு அணைத்து அரவணைத்து கொள்ளவே!..

கையிலிருந்த கதை புத்தகத்தை ஓர்புறமாக வைத்து விட்டு அலுங்காது குலுங்காது அம்ரிதாவை மெல்லமாக கட்டிலில் கிடத்தி கட்டிலின் மறுபுறம் மகள் உறக்கத்தில் உருண்டு விழுந்து விடக்கூடாது என முன் ஆயத்தமாய் சுற்றிலும் தலையணையை அணையாக வைத்தாள்.

தாயின் கதகதப்பான அணைப்பில் சுகமாக உறங்கிக்கொண்டிருந்த அம்ரிதா தாயின் அணைப்பிலிருந்து நீங்கவும் கதகதப்பை இழந்த அசௌகரியத்தில் உறக்கக் கலக்கத்திலேயே நெளிந்து சிணுங்க அவள் உறக்கம் கெடாதவாறு அவளுக்கு பக்கவாட்டாய் ஒருங்களித்து படுத்து அவளை மெல்லமாக தீக்ஷிகா தட்டிக் கொடுக்க சிணுங்கல் குறைந்து குழந்தை மறுபுறம் புரண்டு தனது உறங்கத்தை தொடர்ந்தது.

அவளிடமிருந்து வெளியேறிய சீரான மூச்சுக்காற்றில் அவள் நன்றாக உறங்குகிறாள் என்பதை உறுதிப் படுத்திக் கொண்டவள் கரம் தட்டிக் கொடுப்பதை விட்டு மெல்ல மேல் எழுந்து அவள் கூந்தலை மென்மையாய் வருடத் துவங்கியது.

"உங்களுக்கு ஒன்னு தெரியுமா வித்யுத்.. உங்க பொண்ணு அப்படியே அவ அப்பா மாதிரி, ரொம்ப போல்ட்.. இப்போவே எல்லாத்தையும் தெளிவா கத்துக்கிறா.. யாருகிட்டயும் இறங்கிப் போகாத உங்களோட அதே வீம்பு குணம் உங்க பொண்ணயும் விட்டு வைக்கல, சரியான துடுக்கு" மானசீகமாய் தன்னவனிடம் உரைத்து செல்லமாய் குழந்தையின் கன்னத்தை கிள்ளி பெண்ணவள் தனக்குத் தானே புன்னகைத்துக் கொண்டாள்.

இதழ்கள் புன்னகையை தத்தெடுத்தாலும் உள்ளுக்குள் ஒரு ஓரமாய் சிறு உருத்தல் எப்போதும் போல் தோன்றவே செய்தது.

அறை வாசல் நிலையில் சாய்ந்து படி குரலை செருமினாள் அகிலா.

முகத்தில் இழையோடிய கலக்க ரேகையை மாற்றி சாதாரணமாக வைத்துக் கொண்டவள் குழந்தையின் நெற்றியில் மென்மையாய் இதழை பதித்து போர்வையை எடுத்து போறர்த்தி விட்டு மெல்ல எழுந்து அகிகாவிடம் வந்தாள்.

"தாங்க்ஸ்" என்றாள் தீக்ஷிகா.

"எதுக்கு?" என்று புரியாது விழிகளை சுருக்கினாள் அகிலா.

"அவ ஆசையா பார்க்கு கூட்டிட்டு போக சொல்லி கேட்டா, ஆனா என்னால டைம்க்கு வந்து அவள அழைச்சிட்டு போக முடியல. அந்த இடத்த நீ நிவர்த்தி செஞ்சிட்டல்ல அதான்" என்றாள் புன்னகை இழையோட..

"ம்ம் என்ன மேடம் தாங்க்ஸ் எல்லாம் சொல்லி பிரிச்சி பார்க்குறீங்க?, அவ ஒன்னும் உனக்கு மட்டும் பொண்ணு கிடையாது எனக்கும் பொண்ணுதான். என்னோட பொண்ணுக்கு நான் பண்ணாம வேற யாரு பண்ணுவா.." என்று முகத்தை சுருக்கி போலியாக வரவழைத்த கோபத்துடன் புருவமுயர்த்த,

தீக்ஷிகாவோ பதைபதைத்து,"ஹேய் அகில் நான் ஒன்னும் அப்படி மீன் பண்ணி சொல்லல்ல, எனக்கு இருக்க ஒரே உறவுன்னா அது நீ மட்டும் தான். உன்ன போய் நான் பிரிச்சி பார்ப்பேனா சொல்லு" என்று கலக்கமாய் அவள் கூறவும் அகிலா தலையை தட்டிக்கொண்டாள்.

"நான் சும்மா தமாசுக்கு சொன்னேன்டா.. அதுக்கெதுக்கு கண்ணு கலங்குது?" என்றவள் தீக்ஷியை தோளோடு அணைத்தபடி "ஆனா ஒன்னு இனி தாங்க்ஸ் ங்குற வார்த்தைய யூஸ் பண்ணி என்னை தள்ளி வைக்குற வேலையெல்லாம் வெச்சுகாத, சொல்லிட்டேன்" என்று ஒற்றை விரல் நீட்டி எச்சரிக்க,

“அம்மா தாயே இனி தவறுதலா கூட அந்த வார்த்தைய யூஸ் பண்ண மாட்டேன் போதுமா” என்று கை கூம்பி புன்னகைத்தாள் தீக்ஷி.

புன்னகையுடன் அப்படியே சென்று சோபாவில் அமர்ந்த அகிலா, "ஏதோ இன்னிக்கு எல்லாம் ஒரு மார்க்கமாவே இருக்கு.." என்றபடி மேசையிலிருந்த சாக்லேட்டை எடுத்து ஓர் துண்டை வாயில் திணித்துக் கொண்டாள்.

அவள் எதை கூறுகிறாள் என்று தீக்ஷியிற்கு புரியாது போகுமா என்ன?

அவளருகே சென்றமர்ந்து "நான் இன்னிக்கு அவர பார்த்தேன்" என்க, "யார பார்த்த?" என்று புரியாது விழித்தாள் அகிலா.

அவள் அகிலாவின் முகத்தை ஏறிட்டு “ரிஷி" என்றாள்..

அகிலா கையிலிருந்த சாக்லேட் துண்டு நழுவியது.
"வாட்!" அதிர்ச்சியாக வினவியவள், பின் இதழை குவித்து மூச்சை இழுத்து விட்டு, "நினச்சேன், நீ விம்மி விம்மி அழும் போதே தோணிச்சு. ம்ம்.. என்ன சொன்னாரு உன்னோட எக்ஸ் லவர்" என்று கேள்வியாக தீக்ஷிகாவை பார்த்தாள்.

"சொல்ல என்ன இருக்கு" என்றவளிடமிருந்து பெருமூச்சு வெளியேறியது.

"ஐ க்னோ, சில விஷயங்கள யாராலயும் மாத்த முடியாது.. நம்ம பட்டோலைய அந்த கடவுள் எப்படி எழுதியிருக்கானோ அப்படி தான் எல்லாம் நடக்கும்" என்று வேறுபுறம் பார்வையை திருப்பி விரக்தியாய் கூறவும் தீக்ஷிகா அவளின் தோளை பற்றி அழுத்தினாள்.

அகிலாவின் இதழ்களில் இதழுக்கு வலிக்காது புன்னகை தவழ தீக்ஷிகாவின் புறம் திரும்பி அவள் கரத்தை பற்றியவள், “எதுவா இருந்தாலும் உனக்கு ஒரு பொண்ணிருக்காங்குறத மனசுல வெச்சிக்க.." என்றாள்.

அவள் வார்த்தைகளிலிருந்த அழுத்தம் அப்பட்டமாக உணர முடிந்தது.

தீக்ஷிகாவால் ஆழ்ந்த மூச்சை மட்டுமே உள்ளிழுக்க முடிந்தது.


நேற்று ரிஷியின் கொடுத்த உயர் அழுத்த டோஸ்ஸின் வீரியத்தில் அடுத்தநாள் நேரத்திற்கே ஆபிஸிற்கு கிளம்பியிருந்தாள்.

"தீக்ஷி இன்னிக்கு ஆபிஸ்க்கு லீவு போட்டுடு, நாம ஹாஸ்பிடல் போய்ட்டு வரலாம்" என்று அகிலா பலமுறை கூறியும் தீக்ஷிகா சட்டமாய் மறுத்துவிட்டாள்.

நேற்று நேரம் தாமதமாய் போனதற்கு விழுந்த திட்டுக்கள் பத்தாதா..
இதில் விடுமுறை எடுத்தால் என்னவாகும் என அவளால் நன்றாக யூகிக்க முடிந்தது.

அகிலாவிற்கு அவனை பார்த்ததாகவும் புதிதாய் கம்பெனியை ஒருவர் வாங்கியுள்ளார் என்றும் சொன்னாலே தவிர்ந்து அவன் தான் கம்பெனியின் உரிமையாளர் என்ற விடயத்தை கூறாது தவிர்த்து விட்டாள்.

ஆபிஸ்சிற்கு வந்ததும் வராததுமாய் வேலையில் மும்முரமாய் மூழ்கி விட்டாள்.

..

"சார் கூப்டீங்களா?" என பணிவான வினவலுடன் ரிஷியின் முன் வந்து நின்றார் மேனேஜர் கதிர்.

"ஹா ஆமா.. கதிர் ரைட்..” என்க அவனும் ஆம் என தலையை ஆட்டினான்.

“பிவ் இயர்க்கு மேல இங்க மேனேஜர் போஸ்ட்ல இருக்கீங்கல்ல.. இதுக்கு முன்னாடி இந்த கம்பெனியோட மார்க்கெட் ரொம்ப லீஸ்ட்ல இருந்தது, ஆனா இனி அப்படி இருக்கக் கூடாது.. கம்பெனியோட மார்க்கெட்ட டாப் லெவலுக்கு இங்கிரீஸ் பண்ணனும்னா அதுக்கு ஸ்டாப் எல்லாரோட பெஸ்ட் பெர்பாமெண்ட்ஸ் தேவைப்படுது. எனக்கு அவங்க குவலிபிகேஷன் இம்போர்ட்டண்ட் இல்ல, பெர்போர்மன்ஸ் தான் இம்போர்ட்டண்ட்.. சோ செக் பண்ணிடலாம்.. மீட்டிங்க்கு அரேன்ஞ்
பண்ணி எல்லாருக்கும் டாஸ்க் கொடுங்க.. அப்புறம் இதுவரை பெஸ்ட் பெர்போர்மன்ஸ் கொடுத்த டீம் ம என் முன்னாடி நிறுத்துங்க” என்றான் கட்டளையாக..

“ஓகே சார்.. சூர்” என்ற கதிரோ அவனின் சொல்லிற்கு கட்டுப்பட்டு அடுத்த சில நிமிடங்களில் அவன் கூறிய விடயத்தை நடைமுறைபடுத்தத் துவங்கி விட்டான்.

அந்த அலுவலகத்தில் வேலை பார்க்கும் ஊழியர்களின் பங்களிப்பை பரீட்சிக்க அனைவருக்கும் டாஸ்க் வழங்கப்பட்டு அதற்கான கால அவகாசமும் வழங்கப்பட்டது.

சரியான பங்களிப்பினை வழங்காதவர்கள் தொடக்கம் கால வரையறைக்குள் ஒப்படைக்காதவர்கள் வரை அனைவரும் ரிஷியினால் வேலையை விட்டு நீக்கப்பட்டிருந்தனர்.

குறிப்பாக ஐம்பதிற்கு மேலான ஊழியர்கள் ஒரு சில நிமிடத்திற்குள் அவ்வலுவலகத்தை விட்டு வெளியேற்றப்பட்டிருந்த நிலையில், அவர்களிற்குள் தாமும் அடங்கவில்லை என்ற மகிழ்ச்சியுடன் சுஜிதா மற்றும் கவிதா கதை அளந்து கொண்டிருக்க, தீக்ஷிகாவிற்கோ அப்பொழுதே மனதில் சிறு திருப்தி பரவியது.

இருப்பினும் மறுபுறம் வேலையை விட்டு நீக்கப்பட்ட சக ஊழியர்களை எண்ணி கவலையாகவும் இருந்தது.

அவளால் வருத்தம் கொள்ள மட்டுமல்லவா முடியும்..

அவளிற்கிருக்கும் கடமைகளை நிறைவேற்றவும், சுமைகளை நிவர்த்தி செய்யவும் இந்த வேலை அத்தியாவசியமானது.

மீட்டிங் வைக்கப்பட்டு டாஸ்க் வழங்கப்பட்டதிலிருந்து உள்ளுக்குள் தோன்றிய பதைபதைப்பு தற்போதே தன்னை விட்டு நீங்கியதாக உணர, அவளை முழுமையாக ஆசுவாசமடைய விடாதவாறு அவளுக்கு அழைப்பு விடுத்திருந்தான் ரிஷி.

தன் முன் வந்து நின்றவளை, “மிஸ் தீக்ஷிகா” என்றவன் சட்டென, “இல்ல இல்ல மிஸிஸ் தீக்ஷிகா ரைட்!!” என்றான் புருவமுயர்த்தி..

கண்களை மூடித் திறந்தவள் ஆமோதிப்பாய் தலையசைத்தாள்.

“சிட் ஹியர்” என்று தன் முன்னேயிருந்த இருக்கையை காட்டி அவன் கூற,

“இல்ல “ என மறுப்பு கூற முயன்றவளை, “நான் சிட் பண்ண சொன்னேன்”என்றான் அழுத்தமாய்..

எதிர்வினை பயக்காது அவன் முன் வந்து அமர்ந்தவளை நோக்கி, “உங்களுக்கு என்ன குவலிபிகேஷன் இருக்குன்னு இந்த கம்பெனில சேர்த்தாங்கன்னு தெரிஞ்சிகலாமா?” எனக் கேட்க,

அவனை நிமிர்ந்து பார்த்தவள், “என்ன எதிர்பார்க்குறீங்க சார்” எனக் கேட்டாள்.

இதழை வளைத்தவன், “வெல்.. ஸ்டடீஸ்ச கம்ப்ளீட் பண்ணாம பாதியிலயே ட்ராப் பண்ணிடீங்க, அந்த ஹாப் நாலேஜ்ஜ தவிர உங்ககிட்ட வேற என்ன எதிர்பார்க்கனும்ன்னு நினைக்குறீங்க” எள்ளலாய் வெளிவந்தது அவன் வார்த்தைகள்.

பெண்ணவளோ விழிகளை அழுத்தமாக மூடித் திறந்தாள்.

“இது உங்க டெர்மினேஷன் லெட்டர்” என மேசையிலிருந்த கடிதத்தை அவளை நோக்கி நகர்த்த அவளோ அவனை அதிர்ந்து பார்த்தாள்.

இதற்கு மேல் பொறுமையாக இருக்க முடியவில்லை.

“சார் எனக்கு தெரிஞ்சி நீங்க டெர்மினேஷன் பண்ற அளவு நான் எந்த தப்பும் பண்ணல.. என்னோட குவலிபிகேஷன முன்னிறுத்தி நீங்க என்னை அண்டர் எஸ்டிமேட் பண்றீங்க.. இத என்னால ஏத்துக்க முடியாது” என்று படபடத்தாள்.

மேசையின் மீது கைகளை குற்றி முன்னோக்கி வளைந்து அவள் கூறுவதை கேட்டுக் கொண்டிருந்தவன், “ஓ கோட்!! இப்போ வர மேடம்க்கு சரியா பேச வராதுன்னு நினச்சிட்டிருந்தேன்” என இதழை வளைத்து பிரம்மிப்பாய் கூற,

அவன் கூறியதில், “உங்க டிசிஷன் அன்பேர்ரா இருக்கு” என்றவளின் குரல் நலிந்து ஒலித்தது.


“இருந்துட்டு போகட்டும்.. லாஜிக் பார்த்தா வாழ்கையில முன்னேற முடியாது மிஸிஸ் தீக்ஷிகா”

“எதிக்ஸ்ன்னு ஒன்னு இருக்குல.. என் பக்கம் எந்த தப்பும் இல்லாத பட்சத்துல என்னோட குவலிபிகேஷன முன்னிறுத்தி என்னை வேலைய விட்டு நிறுத்துறது எந்த வகையில நியாயம்” ஆதங்கமாய் வந்தது அவள் வார்த்தைகள்.

“இது என்னோட ஆபீஸ். இங்க யாரு இருக்கனும் யாரு இருக்க கூடாதுன்னு முடிவு பண்ற உரிம எனக்கு மட்டும் தான் இருக்கு, சோ எனக்கு நியாயம் கற்பிக்குற அதிகாரம் இங்க யாருக்கும் கிடையாது.. டூ யூ மைண்ட் இட்!!” கூரிய பார்வையுடன் கடினமாய் வந்து விழுந்தது அவன் வார்த்தைகள்.

விருட்டென எழுந்தவள், “நீங்க சொல்றது சரிதான். அதிகாரம் யாரு கையில இருக்கோ அவங்களால யார வேணும்னாலும் ஆட்டிப் படைக்கலாம்.. உங்க முடிவ நான் ஏத்துக்கிறேன்.. தேங்க் யூ சோ மஷ்..” என்று இதழ் பிரித்து புன்னகை சிந்தியவள் மேசையிலிருந்த கடிதத்தை எடுத்து கொண்டு அங்கிருந்து நகர்ந்தாள்.
 
உயிர் - 7


எழுந்த வேகத்தில் செல்ல முயன்றவளை, “நான் இன்னும் பேசி முடிக்கல” என்ற அழுத்தமான வார்த்தைகள் தடுத்தது.

“ஒருத்தர் பேசுட்டு இருக்கும் போது எந்திருச்சி போக கூடாதுங்குற பேஸிக் சென்ஸ் கிடையாதா?” புருவங்களை ஏற்றி இறக்கினான்.

“நான்!!” அவளை பேச விடாது, “சிட் டவுன்” என்றான் அழுத்தமாக..

சட்டென அதே இடத்தில் அமர்ந்து விட்டாள்.

“வெல் மிஸிஸ் தீக்ஷிகா, நான் உங்களுக்கு ஒரு ஒபர் தரலாம்ன்னு இருக்கேன்” என்றான்.

அவளோ புரியாது அவனை பார்க்க, “உங்க கையில இருக்க லெட்டர்ர ஓபன் பண்ணி படியுங்க” என கண்களால் அவள் கையிலிருந்த கடிதத்தை சுட்டிக்காட்டினான்.

அடுத்து என்ன ஏழரையை கூட்டப் போகின்றானோ என்ற விதிர்ப்புடன் தீக்ஷி அவனை பார்க்க, “படி” என்றான் கண்களை அசைத்து..

ஏதோ ஒரு விறுவிறுப்பில் கடிதத்தை திறந்து படித்தவள் அவனை அதிர்ச்சியாகப் பார்த்தாள்.

“பீ ஏ வா?”

“ஆ பீ ஏ தான்.. நான் இந்த கம்பெனிய அசிஸ்ட் பண்ணும் வர எனக்கு ஒரு பீ ஏ தேவைபடுது. எதுக்கு தேவ இல்லாம இன்டெர்வியூ வைக்கனும்.. மோரோவர் உன்னோட குவலிபிகேஷனுக்கு என்னால கொடுக்க முடிஞ்ச அன்பளிப்பு” அவன் கூறியவற்றை அவளால் கிரகிக்க முடியவில்லை.

பதவி உயர்வடைகையில் அதற்கான பொறுப்பும் பன்மடங்கு அதிகரிக்கிறது.
பொறுப்புக்களோடு சேர்ந்து அதற்காக செலவிடு வேண்டிய நேரமும் அதிகரித்துச் விடுகிறதல்லவா!!

இவை அனைத்து வெறும் சாக்குகள் மட்டுமே..

பெண்ணவளின் தலையாய பிரச்சினையானது அவளது முழு
நேரத்தையும் ரிஷியின் கண்ணோட்டத்திலேயே செலவளிக்க வேண்டி நேர்ந்து விடும் என்பதாகும்.

வேண்டுமென்றே வேலைப் பளுவை அதிகரித்துள்ளான் என்பது அப்பட்டமாய் புரிந்து விட்டது

சிறிதும் யோசிக்காது, “இல்ல சார் என்னால முடியாது.. “ அவள் முடிக்க முன், “நான் முடியுமான்னு கேட்கல வெறும் இன்போர்மேஷன் தான் கொடுத்தேன் ” என்றான்.

அவளிற்கு அவன் முடிவை ஏற்றுக் கொள்ள ஓர் சில காரணங்கள் இருப்பினும் அதை தாண்டி மறுப்பதற்கு பல காரணங்கள் ஒன்றன் பின் ஒன்றாய் வரிந்து கட்டிக் கொண்டு வந்து நின்றது.

தற்சமயம் அவளின் இயலாமை, கோபம் அனைத்தும் மேலுள்ளவனை சாடி நின்றது.

அவனை நேரே பார்த்து,“என்னால இந்த பொறுப்ப சுமக்க முடியும்ன்னு எனக்கு தோணல.. உங்க டிசிஷன் இதான்னா, எனக்கு இதுல துளி கூட இஷ்டம் இல்ல, நான் என்னோட வேலைய ரிசைன் பண்ணிடுறேன்” என்றாள் ஆழ்ந்த மூச்சுடன் திடமாய்..

“சோ இந்த போஸ்ட் பிடிக்கல அதனால இந்த வேலையும் வேண்டாம் அதானே!!” ஆழ்ந்த பார்வையுடன் அவன் கேட்ட கேள்வியிற்கு ஆம் என தலையசைத்தாள்.

“ஓகே!!”

“என்னோட டிசிஷன் எந்த சேன்ஜ்ஜும் இல்ல” இளங்காரமாய் அவன் குரல் ஒலிக்க,

“நான் வேலைய ரிசைன் பண்ணிட்டா உங்க டிசிஷன் எந்த வகையிலயும் செல்லுபடியாகாது” என்றாள் அவளும் இதழ் வளைத்து..

“அதான் இல்ல..நீயா நினைச்சாலும் கூட உன்னால இந்த வேலைய ரிசைன் பண்ண முடியாது”

“ப்ளாக் மெயில் பண்றீங்களா?” எனக் கேட்டவளின் புருவங்களை அவனை நோக்கி வில்லாய் வளைந்துக் கொண்டன.

“நோ டா.. இது கம்பெனி ரூல்ஸ்” தோளை குலுக்கினான்.

பெண்ணவளின் மருண்ட விழிகளும் கீழ் நோக்கி வளைந்த புருவங்களும் அவளிற்கு எதுவும் புரியவில்லை என்பதனை வெளிப்படையாய் எடுத்துக் காட்டியது.

‘ரொம்பத்தான் தெளிவு’ என்ற முணுமுணுப்புடன் கைகளை மேசையில் குற்றியவாறு, “எம் எஸ் கம்பெனிக்குன்னு ஒரு சில ரூல்ஸ் இருக்கு.. அதான் இங்க ஒர்க்குக்கு ஜோஇன் பண்ணும் போது ஒரு அக்ரீமெண்ட் பேப்பர் கொடுத்து சைன் பண்ண சொன்னாங்கல்ல, அதுல இந்த கம்பெனியோட எல்லா கன்டிஷனும் எசம்பில் பண்ணியிருப்பாங்க.. நீ கூட சைன் பண்ணல்ல!! அந்த பேப்பர்ல போத் ரூல் இந்த வேலைய ரிசைன் பண்ணனுங்குர தோட் உங்களுக்கு வந்திருச்சின்னா அதுக்கு நீங்க இங்க பைவ் இயர்ஸ் ஒர்க் கம்ப்ளீட் பண்ணியிருக்கனும்.. அதையும் தாண்டி ரூல்ஸ்ச பிரேக் பண்ணிடீங்கன்னா அதுக்கு லீகளா என்ன ஆக்ஷன் எடுக்கனுமோ அதை எடுக்குற முழு உரிமையும் கம்பெனியோட உரிமையாளருக்கு இருக்கு” என விளக்கமாய் கூறி கண்களை சிமிட்டினான்.

‘இதை எப்படி மறந்து போனேன்’ எனும் நிலையில் பெண்ணவள் தடுமாற்றத்துடன் அமந்திருந்தாள்.

“மிஸிஸ் தீக்ஷிகா நீங்க இந்த கம்பெனில ஜோஇன் பண்ணி இப்போ தானே த்ரீ இயர்ஸ் ஆகப் போகுது” தெரிந்தே அறியத்தருகிறான் என்பதை உணர்ந்து கொள்ள முடியாத அளவு அவள் சிறுகுழந்தையல்லவே!

“எப்போத்துல இருந்து என்னோட ஒர்க்க ஸ்டார்ட் பண்ணனும்” எனக் கேட்டவளின் குரல் அவளின் பிடித்தமின்மையை எடுத்துக் காட்டியது.

வெறுமையான பார்வையுடன், “க்ரேட்!! இந்த நேரத்துல இருந்து நீங்க என்னோட பீ ஏ.. நாளைல இருந்து உங்க கவுண்டர் டவுன் ஸ்டார்ட்” என்றான்.

அக்கணம் இருவரின் விழிகளும் ஒரே நேர் கோட்டில் சந்தித்து மீண்டது.


**

“அகில்”

“சொல்லுடா?”

“வீத்துக்கு போகும் போது எனக்கு ஐஸ்கிரீம் வாங்கி தரியா?” என அவள் முகத்தை நோக்கி அண்ணார்ந்து பார்த்து கேட்டவளின் மூக்கு நுனியை பிடித்து ஆட்டி, “ஓ வாங்கலாமே ” எனக் கூறி புன்னகைத்தாள் அகிலா.

கையிலிருந்த பெயர் பட்டியலை நோட்டமிட்டபடி நர்ஸ், “அம்ரிதா” என்று அழைப்பு விடுவிக்க..

“அடுத்து நாம தான் வா உள்ள போலாம்” எனக் கூறி அம்ரிதாவின் கரத்தை பிடித்துக் கொண்டு வைத்தியரின் அறைக்குள் நுழைந்தாள் அகிலா.

“அம்ரிதா” என்னும் பெயரை உச்சரித்துக் கொண்டே நிமிர்ந்த அருண் ஷ்ரேஸ்திரியின் விழிகள் தன் முன் நின்றிருந்த அகிலாவின் மீது நிலைத்து நின்றது.

மரியாதை கருதி, “ஹலோ டாக்டர்” என்றவளிம் குரலில் சிந்தை கலைந்து, “உட்காருங்க” என்றவன் அதன் பிறகே அவளை கையை பற்றியிருந்த குழந்தையை பார்த்தான்.

எங்கோ கண்ணாடிக் குவளை சில்லுசில்லாக உடையும் ஒலி அவன் காதில் மட்டும் உயிர்தொனியில் கேட்டது.

“இவள் வேறு ஒருவனுக்கு மனைவி என்பதை தாண்டி ஓர் குழந்தை தாய்.. இவளை நினைத்தா இத்தனை நாள் கனவுக் கோட்டை கட்டினாய்.. தவித்திருந்தாய் விவஸ்தை கெட்டவன்..” மனசாட்சியின் சாட்டை அடிக்கு மத்தியில் நெஞ்சை மெல்ல வருடிக் கொண்டான்.

ஒரே இடத்தை பார்த்துக் கொண்டிருந்தவனை விசித்திரமாய் பார்த்தவள், “டாக்டர் ஆர் யூ ஓகே” எனக் கேட்டு விட்டாள்.

“ஹா.. ஐ அம் ஓகே” என்றவன் தடுமாற்றத்துடன், “வாட்ஸ் யுவர் நேம்?” எனக் கேட்க,

உடனே, “அம்ரிதா.. ரிப்போர்ட் ல போட்டு இருக்குமே” என்றாள்.

‘சொதப்பிட்டியேடா’ குரலை செருமிக்கொண்டு, “நான் குழந்தையோட மைண்ட் ட ஸ்டேபல்லா வெச்சிக்கலாம்ன்னு அவ வாயால தெரிஞ்சிக்க நினச்சேன்” என்ற சமாளிப்புடன்,“பாப்பா பேரு என்ன?” என சினேகமான புன்னகையுடன் அம்ரிதாவை பார்த்துக் கேட்டான்.

“அம்ரிதா” எனக் கூறி புன்னகைத்தாள் அம்ரிதா.

“ஓ!! அம்ரிதா நைஸ் நேம்”

சிறு புன்னகையுடன், “தான்க் யூ” என்றாள்.

“க்யூட்..” என்றவன் ஏதோ ஒரு உந்தளோடு, “இது யாரு? இதான் உங்க அம்மாவா?” என்ற கேள்வியுடன் குழந்தையின் பதிலை எதிர்பார்த்து காத்திருந்தவனை விசித்திரமாய் பார்த்து வைத்தாள் அகிலா.

அவனால் அவளுக்கு திருமணம் ஆகி விட்டது என்பதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை.. கழுத்தில் தாலி இல்லை, நெற்றியில் குங்குமம் இல்லை, ஏன் கையில் ஒரு மோதிரம் கூட அணிந்திருக்க வில்லை,

‘ஓருவேளை தான் தவறாக எண்ணிக் கொண்டேனோ.. ஆம் அப்படியும் இருக்கலாம்.. இல்லை இல்லை அப்படித் தான் இருக்க வேண்டும்’ தனக்குள் நடந்தேறிக் கொண்டிருந்த பட்டிமன்றத்தின் நடுவே தன் எண்ணங்கள் பொய்க்க வேண்டும் என்ற எண்ணத்துடன் தன் சந்தேகத்தை நிவர்த்தி செய்து கொள்ளும் உந்தல் அவனுக்கு..

“இன்னிக்கு ராதா மேம் இல்லையா? “ எனக் கேட்டாள் அவள்.

“அவங்க வேற ஹாஸ்பிடக்கு சேன்ஜ் பண்ணிட்டாங்க.. இனி இந்த செக்ஷனக்கு நான் தான் இன்ச்சார்ஜ்.. உங்களுக்கு இதுல ஏதாச்சும் ப்ராப்லம் இருக்கா” என்று அவன் கேட்க, “இல்ல சும்மா தான் கேட்டேன்” என்றவளின் பார்வை வேறு எங்கோ படிந்தது.

அவன் நினைத்திருந்தால் அவளின் கேள்வியை சட்டை செய்யாது தன் வேலையை தொடர்ந்திருக்க முடியும், ஆனால் அவன் நிதானமாய் அவளுக்கு பதிலளித்தான்.

“ஆமா நாங்க எங்க விட்டோம் பாப்பா?” அமித்ரிதாவிடம் விட்ட இடத்திலிருந்து கேள்வியை தொடர, அவளோ “அகில் யாருன்னு கேத்தீங்க ” என்றாள் கண்களை சிமிட்டி..

அகிவாவோ நெற்றியை வருடிக் கொள்ள, அவனிற்கோ பெண்ணவளிண் பெயர் தெரிந்து விட்ட குதூகலம் ஒருபுறம் இருப்பினும், தன்னுடைய எண்ணங்கள் பொய் ஆக வேண்டும் என்ற வேண்டுதலுடன், “பாப்பா அம்மாவ பெயர் சொல்லி தான் கூப்பிடுவீங்களா?” எனக் கேட்டான்.

“பழகிடுச்சி” என்று குழந்தை இழுவையாக கூறி கூரிய அம்பை ஆடவனின் இதயத்தில் இறக்கியிருந்தாள்.

ஆடவனுக்கோ மினி ஹார்ட் அடாக் தாக்கிக் சென்ற உணர்வு!!

அகிலாவோ அம்ரிதாவின் கூந்தலை கலைத்து புன்னகைத்தவாறு
அருணை கேள்வியாய் பார்த்தாள்.

உணர்வுகளை வெளிப்படுத்தும் இடமல்லவே அது!!

ஆழ்ந்த மூச்சுடன் தனது உணர்வுகளை மூட்டை கட்டி வைத்து விட்டு குழந்தையின் எடை,உயரம் என கையில் இருந்த அட்டவணையில் குழந்தையின் வளர்ச்சிப் போக்கினை அவதானித்து விட்டு, “இன்ஜெக்ஷன் போட்டா வலிக்குமா??” என அம்ரிதாவை பார்த்து கேட்டான்.

“நீங்க பயப்பிடாதீங்க.. நான் சின்ன பொண்ணு போல இன்ஜெக்ஷன்க்கு பயந்து அழ மாத்தேன்.. ஐ அம் அ ஸ்ட்ராங் கேர்ள்“ தலையை வளைந்து அவள் கூறிய விதத்தில் அவன் இதழ் விரிந்து கொண்டது.

“ஸ்ட்ரோங் கேர்ள் தான் போல!!” என்றவன் மறந்தும் அகிலாவின் புறம் திரும்ப வில்லை.

குழந்தையுடன் பல சுவாரஷ்யமான கேள்விகளை எழுப்பியும் விடயங்களை பகிர்ந்தும், அவள் உணராதவாறு ஊசியை அவளுள் செலுத்தி விட்டு அவளுடன் சேர்ந்து பாவலா செய்து கொண்டிருந்தான்.

குழந்தையின் ரிப்போர்டை அகிலாவிடம் ஒப்படைத்தவன், “நான் ஒத்துக்கிறேன் பாப்பா ரொம்ப ஸ்ட்ரோங் அண்ட் போல்ட், அப்படியே உங்க அம்மா போல..” என்று ட்ராயரை திறந்து சாக்லேட் ஒன்றை எடுத்து அம்ரிதாவிடம் நீட்டினான்.

“ஆ நான் ரொம்ப ஸ்ட்ரோங் அப்பதியே மம்மி போல, ஆனா மம்மிக்கு ஸ்ட்ரோங் வந்தது அகில் கிட்டயிருந்து” கண்களை சிமிட்டி தீவிரமாய் கூறியவளை விழி விரித்துப் பார்த்தான் மருத்துவன்.

பட்டர்ப்ளை எபெக்ட் கேள்வி பட்டிருக்கின்றான்.. தற்சமயம் நிஜத்தில் உணர்கிறான்.

கையிலிருந்து சாக்லேட்டுடன் இன்னும் இரண்டை சேர்த்து அவளிடம் நீட்டினான்.

“தெரியாதவங்க எது கொடுத்தாலும் வாங்க கூதாதுன்னு மம்மி சொல்லிருக்காங்க” என்றாள் குழந்தை விழிகளை உருட்டி..

“அது தெரியாதவங்க கொடுத்தாலே தவிர நான் கொடுத்தா இல்லையே!! இந்த சாக்லேட்ட வாங்கிட்டா தான் நாங்க பிரண்ட்ஸ் ஆகிடுவோமே. சோ எடுத்துக்கலாம் தப்பில்ல”

அவளோ அகிலாவை பார்த்து விட்டு, அவள் பார்வையில் என்ன கண்டாளோ தெரியவில்லை புன்னகையுடன் அவன் கையிலிருந்த சாக்லேட்களை வாங்கிக் கொண்டாள்.
 
உயிர் - 8


தன்னை நோக்கி நீண்ட கையை பார்த்து விட்டு அவனை விழித்துப் பார்த்தவள், “என்னது இது? “ எனக் கேட்டாள்.

தனது கையை ஒருமுறை பார்த்து விட்டு,“சாக்லேட்” என்றான் அருண்.

“அதான் எதுக்கு?”

“ஏதாச்சும் தொடங்கும் போது ஸ்வீட்டோட ஸ்டார்ட் பண்ணனும்னு அம்மா சொல்வாங்க” என்றான்.

“வாட்!! நீங்க ஏதும் ஸ்வீட்டா ஸ்டார் பண்ண நினைக்குறீங்கன்னா நீங்களே இந்த ஸ்வீட்ட சாப்பிடுங்க, சம்பந்தம் இல்லாம எனக்கு எதுக்கு தரீங்க” என்றாவள் புருவங்கள் இடுக்க..

“அப்போ சம்பந்தம் பேசிட்டு தந்தா எடுத்துபீங்களா?” அடக்கப்பட்ட சிரிப்புடன் கேட்டான்.

அவனை முறைத்தவள், “வந்த வேலை முடிஞ்சிடுச்சு,நாங்க கிளம்புறோம்” என்று அறிவித்தலாய் கூறி விட்டு அம்ரிதாவை அழைத்துக் கொண்டு வாசல் வரை சென்றவளை, “பாய் பாப்பாஸ்!!” என்ற அவனின் குரல் திரும்பிப் பார்த்த வைத்தது.


திரும்பிப் அவனை அழுத்தமாய் பார்க்க, “குழந்தைக்கு பாய் சொன்னேன்” என்று புன்னகைக்க,சிறு முறைப்புடன் அங்கிருந்து வெளியேறினாள்.


அவள் சென்ற திசையை பார்த்தவாறு ‘உன் பாடு ரொம்ப திண்டாட்டம் தான்’ தலையை இருபுறமும் ஆட்டி சிரித்துக் கொண்டான்.


**


அலுப்புடன் வீட்டினுள் நுழைந்தவளை வந்ததும் வராததுமாய் கைப் பற்றி இழுத்துச் சென்று,அவள் மடியில் அமர்ந்தவாறு அன்று நடந்த அனைத்து விடயங்களையும் ஒப்புவித்துக் கொண்டிருந்தாள் அம்ரிதா.

அவள் கூறும் ஒவ்வொரு வார்த்தைகளையும் கோர்த்து சுவாரஷ்யமாய் கேட்டுக் கொண்டிருந்தாள் தீக்ஷிகா.

வீட்டினுள் நுழையும் போது இருந்த அசதி குழந்தையின் புன்னகையில் எங்கோ பறந்து விட்டது.

“மம்மியால அம்மு கூட வர முடியாம போச்சு.. இன்ஜெக்ஷன் போடும் போது பாப்பாவுக்கு வலிச்சதா??” குழந்தையின் கரங்களை தன் கரத்தினுள் அடக்கி, வருடிக் கொடுத்தவாறு கேட்க, “மம்மிய ரொம்ப மிஸ் பண்ணேன்.. பட் அம்மு ஸ்த்ரோங் கேர்ள் ல!! இன்ஜெக்ஷனால அம்முவ என்ன பண்ண முடியும்” என்று புருவங்களை சுருக்கி அவள் கூறிய விதத்தில் தீக்ஷிகாவின் இதழ்கள் தாராளமாக விரிந்து கொண்டது.

“என்னோட ஸ்ட்ரோங் பொண்ண நெனச்சா மம்மிக்கு ரொம்ப பெருமையா இருக்கு!! அப்போ இந்த ஸ்ட்ரோங் கேர்ள்க்கு இன்னொரு இன்ஜெக்ஷன் போட்டா சரி” என அவளை போலவே புருவங்களை சுருக்கி கேட்க, “ஐயோ!! வேணாம்!!” எனக் கத்தியே விட்டாள் அம்ரிதா.

அவளின் அலறலில் சத்தமாய் சிரித்த தீக்ஷிகா குழந்தையை இழுத்து அணைத்து அவள் கன்னத்தில் முத்தம் இட்டாள்.


**


பிரதான வீதியின் இரு மருங்கிலும் பல கட்டிடங்கள் வேரூன்றிக் காணப்பட, ரிஷி தங்கியிருந்த அப்பார்ட்மெண்ட் அமைந்திருந்த அந்த கட்டிடமானது சுற்றியும் எழுப்பப்பட்டிருந்த கட்டிடங்களை விழுங்கி விடுமளவு ஆடம்பரமாய் அமையப் பெற்றிருந்தது.

உயர் வேகத்தில் அந்த ஆடம்பர கட்டிடம் அமைந்திருந்த வளாகத்தினுள் நுழைந்த ரிஷியின் வண்டியின் வேகம் திடீரென குறைந்தது.

தான் அணிந்திருந்த சன்கிளாஸ்சை கழட்டியவனின் பார்வை,அவனது அப்பார்ட்மெண்ட் அமைந்திருந்த அந்த கட்டிடத்திற்கு நேரெதிர் திசையே அமைந்திருந்த கட்டிட வளாகத்தினுள் பதிந்தது.

வெள்ளை நிற குட்டை கவுன் அணிந்து,தன் கைகளில் சிக்காத வண்ணம் சேட்டை செய்துக் கொண்டிருந்த வண்ணத்துப்பூச்சியை கைகளை மேலுயர்த்தி எட்டி பிடிக்கும் முயற்சியில் முழு மூச்சாய் ஈடுபட்டுக் கொண்டிருந்தவள் எப்படி மெயின் கேட்டிற்கு வெளியே வந்தாள் என்பது தெரியவில்லை..

வழிபோக்கர்களிற்காய் இடப்பட்டிருந்த நடைபாதையிற்கும் வீதியிற்கும் இடையே போடப்பட்டிருந்த கட்டினை கவனியாது சுற்றம் மறந்து வேறு எங்கோ பார்வையை பதித்திருந்தவாறு மென்னேறி வந்த மழலை தவறுதலாய் அக்கட்டில் இடரி வீதியை நோக்கி விழப்போக, கணப் பொழுதில் அவளின் கையை பற்றி இழுத்து அணைத்துக் கொண்டது ஒரு வலியகரம்.

பயத்தில் உடல் நடுங்க விழிகளை இறுக மூடியவாறு அப்பிஞ்சு கரங்களும் ஆடவனை இறுக அணைத்துக் கொண்டது.

வழுக்கட்டாயமாய் தன்னை ஒட்டியிருந்த குழந்தையை விலக்கி, “ஆர் யூ மேட்!! அறிவிருக்கா?? இப்படித்தான் சுத்தி என்ன நடக்குதுன்னு தெரியாம வாய் பார்த்துட்டு வரதா.. ஓ கோட்!! நான் மட்டும் கவனிக்கலன்னா என்ன ஆகியிருக்கும்” என்றவன் தன்னிலை மறந்து சற்று கடினமான குரலிலே கத்தியிருந்தான்.

குழந்தையின் செயல் ரிஷி வர்மனின் சுயத்தை மறக்கச் செய்து விட்டது.

ஆம் அவன் சரியான நேரத்தில் வீதியை நோக்கி வந்த குழந்தையை கவனித்ததால் நடக்கவிருந்த நிகழ்வை தடுக்க முடிந்தது,

அவன் கவனிக்காவிடின்!!!, நிகழவிருந்த அசம்பாவிதத்தை அவனால் யூகிக்க கூட முடியவில்லை..

அவனை அறியாது அவனுள் தோன்றிய பதைபதைப்பை அவனாலேயே கட்டுப்படுத்த முயவில்லை. அதன் வெளிப்பாடே குழந்தையை நோக்கி வார்த்தைகளை விட்டிருந்தான்.

விழிகளில் நீர் நிரம்ப ஆழ்ந்த மழலையவளின் பார்வையில், நிதானித்திற்கு வந்தவன், தன்னிலை உணர்ந்து விழிகளை அழுத்த மூடித் திறந்தான்.

“நான்..” அவன் தொடர்வதற்குள், “பட்டர்பிளை தான் சேட்ட பண்ணிச்சுஉ.. எதுக்கு என்கித்த ரூட்டா பேசுறீங்க??” எனக் கேட்டவளின் இதழ்கள் கீழ் நோக்கி வளைய வீறீட்டு அழத் துவங்கிவிட்டான்.

அவள் அழுகையை எதிர்பாராதவன் விழி பிதுங்கி நின்றான்.

முன் பின் குழந்தைகளுடன் பழகியிருந்தாலோ, அவர்கள் நடமாடும் அச்சுற்று வட்டாரத்தில் நடமாடியிருந்தாலோ அல்லவா அவர்களை கட்டுப்படுத்தும் உத்தியை அறிந்திருக்கமுடியும்..

குழந்தைகளின் வாசனையே நுகராதவன் அந்நிலையை கையாளத் தெரியாதவனாய் முழித்து நின்றான்.

எத்தகைய இன்னல் வந்தாலும் தனி ஒருவனாய் எதிர்த்து நின்றத் தெரிந்தவனுக்கு இச்சிறு குழந்தையின் அழுகையை நிறுத்தத் தெரியவில்லை.

“ஹேய்!! நான்!! என்ன சொல்ல!!” வார்த்தைகளில் தடுமாற்றம்..

முதல் முறை செய்வறியாது பேச்சற்று தடுமாறி நிற்கிறான்..

கைகள் பரபரத்தது..

என்ன நினைத்தானோ தெரியவில்லை மண்டியிட்டு அமர்ந்தவாக்கில் அவளை மெல்ல மார்போடு அணைத்துக் கொண்டான்.

“காம்டவுன் பேபி” அவன் கரங்கள் மழலையின் முதுகை மெல்ல வருடிக் கொடுத்தது.

இது அவனிற்கு புது அனுபவம்..

அவனின் அரவணைப்பில் குழந்தை என்ன கண்டதோ, அவள் அழுகை சற்று ஓய்ந்தது.

அதனிடையே குழந்தை வெளியே வந்ததை கவனியாது சாப்பிடுவதற்காய் சென்றிருந்த செக்யூரிட்டி அப்பொழுதே குழந்தையின் அழுகை சத்தத்தில் அவ்விடம் விரைந்து வந்தான்.

குழந்தையின் அழுகையுடன் ரிஷி அவளை அணைத்திருந்ததை வேறு கோணத்தில் கிரகித்துக் கொண்டவன்,“பாப்பா நீ இங்க என்ன பண்ற?? என்ன சார் பண்றீங்க.. ஆள் இல்லாத நேரம் பார்த்து குழந்தைய கடத்திட்டு போக பிளான் போடுறீங்களா?? நான் இருக்குற வரைக்கும் அது நடக்காது” என அவன் பாட்டிற்கு நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு வந்து நின்றார்.

குழந்தையை தன்னிடமிருந்து விலக்கியவன் தன்னுயரத்திற்கு எழுந்து நின்று தனது கோர்ட்டை சரி செய்தவாறு அவரருகே வந்தான்.

செக்யூரிட்டி அவனை புரியாது பார்த்து நிற்க, அவர் எதிர்பாரா வண்ணம் அவர் கன்னத்தில் இடியாய் பதிந்திருந்தது அவன் கரம்.

“என்ன சார் பண்றதயும் பண்ணிட்டு என்னையே கை நீட்டி அடிக்கிறீங்களா?” அவன் சீற, வாயில் விரல் வைத்து “பேசாதே” என்னும் விதம் அவன் செய்கை செய்ய, கப்பென அவனின் வாய் மூடிக்கொண்டது.

“உனக்கு இங்க யாரும் உக்கார்ந்து நேரத்த போக்கிட்டு போறதுக்காக காசு கொடுத்து இந்த இடத்துல உக்கார வைக்கலங்குறத மைண்ட் ல ஏத்திக்க.. குழந்தைங்க இருக்க இடத்துல இப்படித்தான் கேர்லஸ்சா இருக்குறதா?? அந்த பேபிக்கு ஏதாச்சும் ஆகிருந்தா அந்த முழு ரெஸ்பான்ஸ்பிளிட்டியயும் நீ தான் ஏத்துக்க வேண்டி வந்திருக்கும்.. கேர்புல்லா இருந்துக்க” ரிஷியின் விரல் முனையில், கன்னத்தில் கை வைத்தவாறு மிரண்டு நாலாபுறமும் தலையாட்டி வைத்தான்.

எச்சரிக்கும் பார்வையுடன் அழுகை நின்று விழிகளை உருட்டி நின்ற மழலையின் புறம் திரும்பியவன் அவள் உயரத்திற்கு குனிய, அவளோ அரண்டு இரு அடி பின்னே சென்றாள்.

அதை கவனித்தவன், “ஐ அம் சாரி” என்றான் இரு காதுகளையும் பிடித்தவாறு..

“நான் உன்ன ஹர்ட் பண்ணிட்டேன்னு புரியுது.. பட் என் இடத்துல உன்னோட அப்பா இருந்திருந்தாலும் கண்ட்ரோல் இல்லாம அவரும் இப்படித்தான் நடந்துகிட்டிருப்பாரு.. பட் ஒரு தர்ட் பர்சனான நான் கண்ட்ரோல் இல்லாம உன்கிட்ட அப்படி நடந்திருக்க கூடாது.. எதையும் மைண்ட் ல வெச்சிக்காத” என்று கூறி அவள் கூந்தலை கலைத்து விட்டான்.

இமைகள் படபடக்க விழிகளை உருட்டி அவனையே பார்த்து நின்றது அத்தேன்சிட்டு.

“உன்னோட நேம் என்ன?” என்று கேட்க அவளோ பதில் சொல்லாது அவனையே பார்த்து நின்றாள்.

“ஓகே” தன் உயரத்திற்கு எழுந்து நின்றவன், “விருப்பமில்லன்னா விட்டுடு” என்று விட்டு அவளை அழைத்து செல்லுமாறு செக்யூரிட்டியிடம் கண்களை காட்டி விட்டு நகர முயல, அவன் கோர்ட் அப்பிஞ்சுக் கரத்தினுள் சிக்கியிருந்தது.

“அம்ரிதா” மழலை குரல் ததும்ப ஒலித்த வார்த்தைகளில் அவள் புறம் திரும்பினான்.

இதழ்களுள் புன்னகை கீற்றாய் அரும்ப, அவள் உயரத்திற்கு குனிந்தவன் இதழ்கள் அம்ரிதாவின் நெற்றியில் படிந்து மீண்டது.

“நைஸ் நேம்!!”

அவ்வளவு நேரம் கீழ் நோக்கி பிதுங்கியிருந்த குழந்தையின் இதழ்கள் விரிந்துக் கொண்டது.

“அம்ரிதா உன்ன எங்க எல்லாம் தேடுறது?” பதற்றமாய் ஓடி வந்து குழந்தையை அணைத்துக் கொண்டாள் ஒரு பெண்மணி.

அதற்கு மேல் தனக்கு வேலை இல்லை எனும் விதமாய் அங்கிருந்து நகர்ந்தான் ரிஷி வர்மன்.
 
Status
Not open for further replies.
Top