அத்தியாயம் - 04
"அப்பா.. அப்பா.."
“யா, யா ஆது"
சற்றே தயங்கி, “எனி ப்ரோப்ளம் அப்பா?"
அக்கண்யன் புருவங்களை நெறிக்க,
“இல்லப்பா, நான் கூப்பிட்டேன். நீங்க ஏதோ யோசனைல இருந்தீங்க.. அதான்.."
“ஏன் ஆது? அப்பாக்கு வயசாகிருச்சு ஏதும் ஹேண்டில் பண்ண முடியாதுன்னு நினைக்கிறியா?"
நக்கலாகக் கேட்கவும்,
“வாட் அப்பா? எங்க அப்பாக்கு வயசா? நோ வே. அவரு அக்கண்யன் அருளானந்தன்."
ஆத்வீக் குரலில் தன் தந்தையை எண்ணி அத்தனை கர்வம் என்றால், அக்கண்யன் மீசையை முறுக்கிகொண்டே,
“ஹா.. ஹா.." புன்னகைக்க
“அப்பா!" அழுத்தமான அழைப்பில்
“யூ ஆர் ரைட், ஆத்வீக்"
தந்தை விழியசைப்பை படித்த மகனோ, புரிந்து கொண்டான்.
“ஹம்.. முடியுமாப்பா?"
“முடியணும் ஆது. கேட்டது என் ஜனனி."
இந்த வயதிலும் தாய் மீதான தந்தையின் காதலில், ஆத்வீக் இதழோரம் புன்னைகையில் நெளிந்தது. அதை மறைக்காதவன்,
“எப்படிப்பா?" என்றான்.
“நாட் சிம்பிள்! பட் இட் இஸ் பாசிப்பிள்.."
“அப்பா!" என்று ஆத்வீக் இழுக்கவும்,
அவன் முன்னே ஒரு மேகஸினை எடுத்துப் போட்டான்.
அதைக் கையில் எடுத்த ஆத்வீக்கின் புருவங்கள் உயர்ந்து, அதிலுள்ள விஷயத்தின் பொருளில் கர்வத்தில் விரிந்து, தந்தையின் திட்டத்தில் சுருங்கி, புரியாத பாவனையை காட்டியது.
“வாட் ஆது?"
“எஸ்! சர்வேஷ் அக்கண்யன். யூ எஃப் செம்பியன்ஷிப் 2022ல (UFC) மோஸ்ட் வான்டட் கன்டிடெட்!" என்றவன் தன் மகனை எண்ணி மீண்டும் மீசையை முறுக்கிக் கொண்டான்.
ஆம், அந்த மேகஸினில், சர்வேஷ் அக்கண்யன் யூ எஃப் செம்பியன்ஷிப் 2022 என டைட்டிலோடு பிடரி முடி போனிடெய்லில் அடங்க, வெற்று மேலுடன் டட்டு அடித்த கைப் புஜத்தை முறுக்கி கொண்டு போஸ் கொடுத்த புகைப்படத்துடன், அவன் போட்டியில் கலந்து கொள்வதை, அந்தச் செய்தி உறுதிப்படுத்தி இருந்தது.
அது மட்டுமல்லாது “மூன்று முறைகள் வெற்றிக் கோப்பையை தழுவி, ஹட்ரிக் அடித்த நான் ஐந்து முறைகளும் வெற்றி கோப்பையை தொடர்ந்து தழுவதே என்னுடைய கோல். இனி ரிங்கில் சந்திப்போம்.." என்று அவன் பேட்டியும் சேர்ந்து வெளியாகி பட்டையை கிளப்பியிருந்தது. மகனின் வீரத்தில், அவன் வெற்றியில் என்றும் அக்கண்யனுக்கு பெருமை உண்டு.
“அப்பா, வாட் இஸ் திஸ்? லாஸ்ட் டைம் தான் கம்படிஷன்ல ரிப் இஞ்சரி ஆச்சு. அதுக்குள்ள இது ரிஸ்க் இல்லையா? ஹவ் கேன் இட்ஸ் பாசிப்பிள்?"
“சிம்பிள்! அவன் சர்வேஷ்!"
“அப்பா!"
இயலாமையோடு அழைக்க, தன் பிரிய மகனை கனிவோடு பார்த்தவன்,
“ஆதுமா! அவன் நம்ம எண்ணங்களுக்கு அப்பாற்பட்டவன். அவனை கண்ட்ரோல் பண்ண முடியாது. சொல்லுறதை கேட்க, அவன் இப்போ என் பையனா இல்லை, அவன் சர்வேஷ். எஸ் ஹீ இஸ்!"
என்றவன் இருக்கையில் சாய்ந்து வேதனையோடு விழிகளை முடிக்கொள்ள, அக்கண்யனின் தொண்டைக்குழி வேதனையில் ஏறி இறங்கியது.
தந்தையின் வலியினைப் பொறுக்காதவன், அவன் அருகில் வந்து தோளோடு அணைத்துக் கொள்ள, தன் சிந்தையில் கலைத்தவன்,
“ஐ அம் ஓகே ஆது. அவன் இங்க வரணும். தட்ஸ் இட்."
“அப்பா, அதுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்?"
“சும்மா வானு கூப்பிட்டா வரக் கூடியவனா உன் தம்பி? ஹூம்.. அவன் நாலு வருஷமா தன்னிலை மறந்து எழுந்து நிற்க, இந்த பிராக்டிஸும் ஒரு காரணம். அவ்வளவு சீக்கிரம் கிவ் அப் செய்துருவானா என்ன? அவனோடு கோல் அவனைக் கண்டிப்பா இலங்கைக்குக் கொண்டு வரும்!"
“அதான் ஹவ் அப்பா?"
“நான் அக்கண்யன்டா! அவனுக்கே அப்பன். ட்ரஸ்ட் யுவர் டேட் ஆதுமா."
என்றவன் இதழ்களில் மர்மப் புன்னகை. அதில் தந்தையைப் பார்த்து ஒரு நமட்டு சிரிப்பை உதிர்த்தவன், தன் வேலையை கவனிக்கச் சென்றான்.
சரியாக ஒரு வாரத்தில் அக்கண்யன் சொன்னதை செய்து காட்டினான். அதன் பிரதிபலிப்பு கலிபோர்னியாவில் ஒலித்தது.
கலிபோர்னியா..!
“மச்சான்!"
கண்ணாடி கிளாஸ் தன்னை நோக்கி பறந்து வர, மயிரிழையில் ஒதுங்கி தப்பிய வருண், படபடவென அடித்த நெஞ்சில் கை வைத்துக்கொண்டு,
‘யம்மா ஜஸ்ட் மிஸ்! ச்சேக்.. பழைய நினைப்புல மச்சான்னு சொல்லிட்டேன் நல்ல வேலை சங்கறுக்காம விட்டான்.'
“யூ.."
“பாஸ் ப்ளீஸ் நோ பேட் வேர்ட்ஸ். ஒரு முக்கியமான விஷயம் சொல்ல வந்தேன். அதான் ஆர்வக்கோளாறுல உளறிட்டேன்."
என்றதும் நெற்றிக்கண் திறந்தான், சர்வேஷ்.
இருந்தும் எங்கோ ஓர் மூலையில் பழைய சர்வா, தன் நண்பனின் கேலியை ரசிக்கவே செய்தான். ஆனால் பட்ட மரண அடி, அதை வெளிப்படுத்த விரும்பவில்லை.
“என்ன விஷயம் வருண்?"
“பாஸ்... டோர்னமெண்ட் ப்ளேஸ் சேஞ் பண்ணிட்டாங்க."
“எங்க?"
“பா.. பாஸ்.." அவன் தயங்கும் போது,
“எங்கன்னு கேட்டேன்..?"
மென்று முழுங்கியவன். “ஸ்ரீலங்கா!"
என்றதும் ஒருகணம் அதிர்ந்து புருவம் நெறித்தவன்,
“ஆர் யூ கிட்டிங் மீ?"
“நோ பாஸ்! ஐ எம் சீரியஸ்." என்றவன் ஈவெண்ட் சம்பந்தமான மேகஸின் ஒன்றினைக் காட்ட, அதை வாசித்தவன் கோபம் எல்லை கடந்தது.
“ரெடிக்குலஸ்! இவனுங்க இஷ்டத்துக்கு இடத்தை மாத்துனா, என்ன வெண்ணைக்கு நாங்க. கூவி, கூவி வித்தாலும் நான் ரிங்ல இறங்குனா தான், அவனுக்கு டீ ஆர் பி. ப்ளடி.."
என்றவன் காது கூசிய சில பல கெட்ட வார்த்தைகளில் திட்ட,
தன் காதுகளை கைகளில் அடைத்துக் கொண்ட வருண், சர்வேஷ் வாய் அசைவு நிற்கவுமே கைகளை எடுத்தான்.
“யூ இடியட்! இப்படியே நிற்கப் போறியா?" தலையை சொரிந்து கொண்டு,
“பாஸ் நீங்க சொல்லுங்க. செய்துறலாம். பட் காம்பெடிஷன்ல பேக் அடிக்க முடியாது, பாஸ். இது உங்க வெற்றி மட்டுமில்ல, உங்க ரெபுடேஷன் சம்பந்தப்பட்டது"
என்று நாசுக்காக ஊசியேத்தியவன், இந்த திட்டத்தின் சூத்திரதாரியான தன் மாமனுக்கு மனதுக்குள் சபாஷ் போட்டுக் கொண்டான்.
அதேநேரம் வருண் சொன்னதைக் கேட்டு சர்வேஷ் மிக உக்கிரமாக,
“யாரு மேன் பேக் அடிக்கிறது? நான் சர்வேஷ் அக்கண்யன்" என்றவன் கை காப்பை முறுக்கிக் கொண்டு,
“வெற்றியோ தோல்வியோ அது ரிங்குள்ள தான். வெளிய நின்னே பின்வாங்குறதா சரித்திரம் இந்த சர்வேஷ் அகராதியில இருக்கக் கூடாது"
என்றவன் தன் ஈகோவை, அவன் இதய ராணிக்காகத் துறப்பான் என்று, யாரேனும் இப்போது கூறி இருந்தால் அந்நபரை விரட்டி, விரட்டி அடித்திருப்பான்.
“அப்போ பாஸ், ஶ்ரீ..லங்கா போகப் போறமா?"
“எஸ்!" என்றவன் துளி அமைதிக்குப் பின்,
“இவ்வளவு பெரிய டோர்னமெண்ட், இலங்கை போன்ற சின்ன நாட்டுல நடக்கக் காரணம் என்ன, விசாரிச்சுயா வருண்?"
“எஸ் பாஸ். சிலோன்ல எகானமிக் டௌன். சோ இந்த ஈவெண்ட்ட முக்கிய ஐந்து லீடிங் குரூப்ஸ் ஆப் கம்பனிஸ் எடுத்து லீட் பண்ணுறாங்க. முக்கிய எதிர்பார்ப்பு டுவரிஸம் அண்ட் டாலர் பாவனை. சோ கவர்மெண்ட் அப்ரூவ் கொடுத்து இருக்கு, பாஸ். அண்ட் இன்னோரு முக்கியமான மேட்டர்.."
“வாட்?" என்றான் அழுத்தமாக.
“பாஸ் ஐந்துக்கும் லீடிங் ஹெட், ஏஜெ குரூப் ஆப் கம்பனி!" என்றவன் குரல் நடுங்கினான், சர்வேஷ் உறுத்து விழித்த. அந்தப் பார்வை தந்த அச்சத்தில்,
“நீ.. நீங்க விருப்பப்பட்டா.."
“ஹம்ம்.. சொல்லு விருப்பப்பட்டா, ஓடி ஒளிஞ்சிரனுமா, சொல்லு மேன்?" என உறும,
“நீங்க போக விரும்புவிங்களான்னு தெரியல, அதான் பாஸ்.."
“இஸ் இட்?" என்றவன் தாடையை தடவிக் கொண்டு,
“வருண் கோச் கிட்ட போய், பிராக்டீஸ் செடியூல் வாங்கு. அப்படியே அங்க நாம எப்ப போகணும்னு கேளு! அண்ட் அங்க இருக்க ரிங்ல எத்தனை நாள் பிராக்டீஸ்னு செடியூல் எடு."
என்றதும், அவன் நிம்மதிப் பெருமூச்சோடு தலையை ஆட்ட,
“வருண் ஸ்ரீலங்கா போறதுக்கு முன்ன, ப்ரோடியூசிங் விஷயமா இந்தியா போறோம் அண்ட் அந்த பாலிவுட் ஹீரோயின் அங்கிதயாவோட டேட்டிங் நாள் பிக்ஸ் பண்ணிரு. காட் இட்?"
முகம் சுருங்க சம்மதமாகத் தலையாட்டியவன் அவ்விடம் விட்டு அகலவும், விரல் சொடுக்கிட்டு அவனை மீண்டும் அழைக்க, வருண் திரும்பிப் பார்க்கவும்,
“உன் மாமா கிட்ட சொல்லு, அவரோட பிளான் எல்லாம் இந்த சர்வா கிட்ட நோக் அவுட் ஆகிரும்னு. அதோட எனக்கானதை எப்படி அடையணும்னு எனக்குத் தெரியும். அதுவும் அடுத்தவன் தொடும் முன்ன, அது எதுவா இருந்தாலும் சரி, எனக்கானது எனக்கே எனக்கானது தான். அண்ட் தி சேம் டைம் எனக்கு சொந்தமில்லாதததை எப்படி ஓட ஓட விரட்டி அடிக்கணும்னும் நல்லாவே தெரியும்! சோ அவரு ஆட்டத்தை என் கிட்ட ஆட வேணாம்னு சொல்லு..!"
“பாஸ்.."
வருண் அதிர்ந்து நிற்க,
“வருண் உனக்கு அவர் மாமாடா! பட் என் உடம்பில் ஓடுற உயிரே அவரோடது தான். இது உன் மாமனோட ஸ்கெட்ச்னு நல்லாவே தெரியும்.
நீ இப்போ என்ன பண்ற? சொன்ன வார்த்தை மாறாம உன் மாமனுக்குச் சொல்லிட்டு, சொன்ன வேலைய, ஒழுங்காப் பாரு!"
பேய் அடித்ததைப் போல முழித்தவன் நொடியில் அகன்றான். இல்லையென்றால் யார் வாங்கிக் கட்டுவது. இதை அப்படியே அக்கண்யனிடம் சொல்ல, சன்னச் சிரிப்போடு,
“ஹம்ம்.. எதிர்பார்த்தேன் வருண்."
“எதை மாமா?"
“உன் பாஸ் கண்டுபுடிச்சு உனக்கு டோஸ் விடுவாங்கிறதை.."
“மாமா! அப்பாவும், புள்ளையும் ஒரு அப்பாவிப் புள்ளைய நல்லா வச்சு செய்றிங்க."
“ஹா.. ஹா.. வருண் மாமா மேல கோபமா?"
“ச்சே.. அதெல்லாம் இல்ல மாமா. அவர் அங்க வந்தா, நானும் வந்துறலாமேனு ஒரு நப்பாசை."
“வருவான் வருண், வர வைப்பேன். ஓகே நீ போய் தூங்கு. டைம் ஆச்சு, நான் இப்போ தான் ஆஃபிஸ் வந்தேன். வர்க்ஸ் இருக்கு மேன்."
“ஓகே மாமா."
என்றவன் இணைப்பை துண்டித்து விட
தன் மகன் பற்றிய சிந்தனையில் ஆழ்ந்து போக.
அங்கே சர்வா தன் கையில் உள்ள குடும்ப புகைப்படத்தை வெறித்துக் கொண்டிருந்தான்.
‘டேட்! நீங்க மாறவே இல்ல. நினைச்சத்தை முடிச்சிட்டீங்க இல்ல. எல்லாம் உங்க ஜானுக்காக. பட் ஐ அம் சாரி! நீங்க நினைச்சது நடக்கப் போறதில்லை. நான் உங்க பேபிக்காக வந்தா, உங்க பேபி சிரிப்பாங்களா? ஹா.. ஹா.. டேட்! நான் உங்க பையன். வரேன். உங்க பேபிய சிரிக்க வைக்க இல்ல, கதற விட. வந்து மொத்த பேரையும் கதற விடுறேன்..!
நான் பட்ட அவமானம், அடி, பார்த்த அசிங்கம், அனுபவித்த ரணங்கள் எல்லாம், பச்சையா இன்னும் துளி ஆறாம உள்ள சீல் பிடிச்சுப் போய் இருக்கு. அந்த ஊர் தார நினைவுகள் வலிக்குதுன்னு தெரிந்தும், இப்படி செய்துடிங்க டேட். அது எவ்வளவு பெரிய தப்புன்னு புரிய வேணாம்? வாரேன் என்னோட கோலைத் தட்டி தூக்க வாரேன்..'
என்றெண்ணியவன் விழிகளில் அத்தனை ரௌத்திரம், அத்தனை வெறி. அதை தனக்குள் வைத்தே வெந்தவன், இனி வெளியே கொட்டப் போகிறான்.
ஆனால்.. அதைத் தாங்கி, சர்வேஷ் என்பவனில் ஒருத்தி புது வேதம் படிக்கப் போகிறாள். அவள் அதை உணர்வாளா?
அதே நேரம் ஆஃபிஸ் அண்டர்கிரௌண்ட் பார்க்கிங்கில் ஒற்றை காலை மடித்து ஒரு கையில் ரோஜா கொத்தும் மறு கையில் கோல்ட் ரிங் என தன் முன் முட்டியிட்டு அமர்ந்திருந்த ரகுவரனைக் கண்டதும், சாத்வி பயத்தில் நடுங்கி விட்டாள்.
‘இது என்னடா புது ரோதனை?' அவள் மனம் முனங்க, ரம்யாவோ சாத்வியின் காதருகே நெருங்கி,
“என்னடி இவன்? அவசரமாப் பேசணும் பார்க்கிங் வரை வாங்கனு வரச் சொல்லிட்டு, காதல் மன்னன் அவதாரம் எடுத்துட்டான்? ஏதோ சட்டு, புட்டுனு உங்க ப்ரொபசல் டீலிங் எல்லாம் முடிச்சுட்டு வாங்க. யாராவது பார்த்தா வம்பாப் போயிரும்."
அவள் நமட்டுச் சிரிப்போடு சொல்ல, அவளை லேசாக முறைத்தவள்,
“நீ வேற ஏன்டி? எனக்கு பயத்துல பாத்ரூம் வந்துடும் போல இருக்கு. இவர் என்ன இப்படி பண்றாரு?" என்றவள்..