Aandal Venkatraghavan
Active member
எண்ணமே வாழ்வின் வண்ணமே!
அழகிய காலைப் பொழுது அது. தனது வீட்டின் மொட்டை மாடியில் கைப்பிடி சுவரில் முன்னோக்கி சாய்ந்தபடி நின்றுகொண்டு, சூரியன் உதிக்கும் அந்த அழகிய காட்சியை ரசித்துக் கொண்டிருந்தாள் தமிழரசி!
அவளுக்குள் அன்றைய காலை அத்தனை நேர்மறையான உணர்வை மென்மேலும் ஊட்டிக் கொண்டிருந்தது! சூரியனின் கதிர்கள் யாவும் தனக்காகவே படர்வதாய் ஒரு உற்சாகம்.
வானத்தில் சிறகடித்துப் பறக்கும் பறவைகள் யாவும் அவளுக்காவே காணம் இசைத்துச் செல்வதாய் ஒரு உத்வேகம்.
மேனி தீண்டிய காற்று கூட அவளுக்காவே அரவணைத்துச் செல்வதாய் ஒரு சந்தோஷம்…
இது அத்தனைக்கும் காரணம் ஒரே ஒரு வாக்கியத்தின் மாற்றம் தான்… ‘வாழ்க்கையாடா இது?’ என்ற ஒற்றை வாக்கியம், ‘வாழ்வே அற்புதம்’ என்று மாறிய மாற்றத்தின் வெளிப்பாடு!
அவளை மேலும் சந்தோஷப்படுத்திய குறுஞ்செய்தி ஒன்றை எடுத்து மீண்டும் படித்துப் பார்த்தாள்…
ஆனந்தம் என்றால் என்ன? என்ற கேள்விக்கு முழுமுதற் பதிலாய் மின்னியது அவ்வரிகள், அவளது அலைபேசியில்!
‘மொத்தமா வாழ்க்கையே முடிஞ்சு போச்சுனு வெறுப்போட இருந்த வரண்ட பாலைவனம் இன்னிக்கு பசுமை குலுங்கும் பூஞ்சோலையா மாறிருக்கு. இது அத்தனைக்கும் நீங்க தான் மேடம் காரணம். எனக்கு என் நன்றியை எப்படி உங்களுக்கு சொல்றதுனே தெரியலை… அத்தனை சந்தோஷத்தை எனக்குக் கொடுத்த உங்களுக்கு நன்றியைவிட ஒரு நல்லதைக் கொடுக்க முடியுமானு யோசிச்சப்ப எனக்கு தோன்றினது, உங்க பேஜை எனக்கு தெரிந்த, என்னைப்போல கஷ்டபடுற அத்தனை பேருக்கும் அனுப்புறதுனு பட்டுது. அதை தான் செஞ்சிருக்கேன் மேம்' என்ற செய்தி அவளுள் அத்தனை குளுமையைக் கொடுத்துக் கொண்டிருந்தது!
“தமிழு…” என்றபடி தூக்கம் கலையா முகத்துடன் மேலேறி வந்த அவளது தங்கை குரலரசி, அக்காளைப் பின்னிருந்து அணைத்துக் கொண்டு, “குட்டு மார்னிங்” என்றாள்.
அதில் லேசான புன்னகையுடன் அவள் தலைகோதி, “தூங்குமூஞ்சி” என்று கூறிய தமிழ், “வேலைக்கு நேரமாகலையா உனக்கு?” என்று கேட்க,
“ஆகுது தான்.. ஆனா குளிருக்கு ரொம்ப சோம்பலா இருக்குடி” என்று கூறினாள்.
“அதுசரி” என்று சிரித்த தமிழ், “இன்னிக்கு வந்த மெசேஜ்” என்று தனது அலைபேசியைக் காட்ட,
“ஹே.. செம்ம தமிழ்.. சூப்பர்டிமா.. எனக்கு தெரியும் தமிழ். உனக்குள்ள காணாம போன அந்த பாசிடிவிடிய நீ கண்டிப்பா கொண்டுவருவனு நான் நம்பிக்கையோடு இருந்தேன். ஆனா அதை நீ இப்படி இத்தனை பேருக்குக் கடத்தி ஒரு நல்ல விஷயத்தை உருவாக்குவனு நான் எதிர்ப்பார்க்கவே இல்ல. நிஜமா ரொம்ப சந்தோஷமா இருக்கு தமிழ்” என்று அக்காளை அணைத்துக் கொண்டாள்.
“இதுக்கு நீயும் ஒரு காரணம் குரல்” என்று தமிழ் மனமாரக் கூற,
“நான் ஜஸ்ட் ஒரு ஆன்டிஜன் போலத்தான் உனக்குள்ள நுழைஞ்சேன். என்னை அனலைஸ் பண்ணி ஆன்டிபாடி உருவாக்குவதும், இருந்தா இரு, செத்த சாவுனு சும்மா விட்டுட்டு போறதும் வைட்-ப்ளட் செல் ஆகிய உன் கைல தான் இருக்கு. நீ அனலைஸ் பண்ணி ஆன்டி பாடி உருவாக்கி கெட்ட எண்ணங்களை அழிச்ச. அதனால தான் உன் மனநலம் இத்தனை ஆரோக்கியமா இருக்கு இப்ப” என்று குரல் கூறினாள்.
“நீ ஏதோ என்னை புகழுறனு தெரியுது.. ஆனா டஸ்ஸு புஸ்ஸுனு என்னத்தை சொல்றனு தான் புரியலை” என்று தமிழ் கூற,
“போடி காமர்ஸ் கிராஜுவேட்” என்று குரல் சிரித்தாள்.
“உன்ன யாருடி சைன்ஸ் படிச்சு உயிரெடுக்க சொன்னது?” என்று தங்கையின் கழுத்தை பிடித்து ஆட்டியபடி அவள் சிரிக்க,
“ஆ கொலை கொலை..” என்று பொய்யாய் நடித்துத் தானும் சிரித்தாள்.
சில நிமிடங்கள் அங்கு சிரிப்பலையே தொடர்ந்தது!
“நீ நிறைய மாறிட்ட தமிழ்” என்று மகிழ்வானக் குரலில் குரல் கூற,
“ஆங்? நல்லதா இருக்கா? கெட்டதா இருக்கா?” என்றாள்.
“கண்டிப்பா நல்லது தான்… வலியை எப்படி எக்ஸ்பிரஸ் பண்றது, எப்படி கடக்குறதுனு பரிதவிச்சு கண்ணீரோட நெகடிவாவே யோசிக்கும் அந்த தமிழ் இது இல்லவே இல்லை.. தன்னோட லட்சியம், கனவு அத்தனையையும் ஓடிபோய் பிடிச்சு தக்க வச்சுகிட்டதும் இல்லாம, திறமையே இல்லைனு சொல்லிட்டு இருந்த தமிழ் இன்னிக்கு எவ்வளவு பெரிய கன்சல்டரா இருக்கா” என்று பெருமை பொங்க கூறிய குரல், கண்கள் லேசாக துளிர்விட, “ரொம்ப சந்தோஷமா இருக்குடி உன்ன இப்படி பார்க்க” என்றாள்.
தமிழ் இதழில் அழகான புன்னகை! அந்த புன்னகைக்குக் காரணம் அதனில் குடியிருக்கும் உயிர்ப்பு! அந்த உயிர்ப்பை மீட்டுத் தந்ததில் குரலுக்கும் பெரும் பங்கு உண்டு என்பதில் அவளுள் தங்கையிடம் அத்தனை நன்றியுணர்வு!
இருவருக்குள்ளும் அழியா சில நினைவுகள், மேல் எழும்பி தங்களை நினைவுப் படுத்தின…
இருவரும் முதுநிலை கல்லூரியைத் துவங்கிய காலமது!
பெரும் போராட்டத்திற்குப் பின், எப்படியோ தங்கள் வீட்டில் சரிகட்டி கோவையில் தங்களது முதுநிலைப் படிப்பை படித்திட, தங்கள் ஊர் விட்டு வந்திருந்தனர்.
ஒரே கல்லூரி தான்.. ஆனால் தங்கையவள் மருந்தகத் துறையிலும், அக்காள் அவள், வணிக நிர்வாகத்தில் ஆடை வடிவமைப்புப் பிரிவிலும் படித்து வந்தனர்.
அந்த தமிழரசியின் எண்ணங்கள் அத்தனையும் எதிர்மறை தான்…
மாடியில் அமர்ந்து எங்கோ வெறித்தபடி கண்களில் வழியும் கண்ணீரை புறம் தள்ள மனமின்றி அமர்ந்திருந்தவளுக்கு அருகே வந்து அமர்ந்தாள், குரலரசி!
தங்கையின் அருகாமை உணர்ந்து அவள் மடி சாய்ந்தவள், “எல்லாருமே என்னை யூஸ் அன்ட் த்ரோவாவே பயன்படுத்துறாங்க குரல்” என்று கட்டுப்படுத்த இயலாத நிலையில் அடிக்குரலில் குமைய,
அவளது தலையை பரிவாய் வருடிக்கொடுத்தாள்.
“ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொருத்தவங்க உணர்வுகளையும் யோசிச்சு யோசிச்சு செயலாற்றி என் உணர்வுகளைத் தொலைச்சுட்டேன் குரல்.. எப்பவுமே கொடுக்குற பக்கத்துலயே இருந்தேன்.. எந்த இடத்திலாவது அன்பை வாங்கும் பக்கம் இருந்திட மாட்டோமானு ஏக்கமா இருக்கு” என்று கதறியவள், தன் தங்கையிடம் அன்பை வாங்கும் பக்கம் தான் உள்ளோம் என்பதை உணர்ந்திருக்கவில்லை.. அவள் மன வேதனைகள் அதனை உணரவிட வில்லை!
“ஏன் தமிழ்.. என்னாச்சு?” என்று குரல் பரிவாய் கேட்க,
“சின்னச் சின்ன அடிப்படைக்குக் கூட நாம ரொம்ப போராடுறோமோனு தோனுது குரல்.. சிலசமயம் ரொம்ப வெறுமையா இருக்கு. இதோ.. இந்த படிப்பு.. இதுக்குக் கூட நாம வீட்டில் எத்தனை போராடிருப்போம்.. வாழ்க்கைல அடிப்படைனு சொல்லப்படுற அத்தனைக்குமே போராடிதான் வாங்க வேண்டியிருக்கோனு சளிப்பா இருக்கு. இதுல நமக்காகனு நாம வருந்தி நின்னா பிரண்ட்ஸ் துணையா நிற்பாங்கனு வைக்கும் நம்பிக்கை ஒவ்வொரு முறையும் உடையும்போது தாங்கவே முடியலை குரல்.. நான் சொன்னா தப்பா எடுத்துக்க மாட்டன்னு நம்புறேன்.. எனக்கு உன் பிரண்ட்ஸ்லாம் பார்த்தா நமக்கு இப்படி இல்லயேனு பொறாமையா இருக்குடி. என்னை எந்த இடத்திலும் புரிஞ்சுக்காம தேவைக்கு மட்டுமே என்கிட்ட வராங்களோனு தோனுது.. எனக்கு அதை எப்படி எடுத்துக்கனும் தெரியல. இல்ல நாமதான் அதிகமா யோசிக்குறோமானு தோனுது” என்று அழுதாள்.
“ஏன் தமிழ்.. ஒன்னுமில்லடிமா” என்று கூறிய குரல் தனது மெல்லிய சிகை வருடலை ஆறுதலாய் தொடர,
“ஒவ்வொரு இடத்துலயும் எனக்குள்ள தோன்றுற உணர்வுகள உள்ளுக்குள்ளேயே வச்சு வச்சு என்னை நானே தொலைச்சுட்டேனோனு வருத்தமா இருக்கு குரல்.. நீயே சொல்லு.. ஸ்கூல் டேஸ்ல நான் எவ்வளவு பாசிடிவா இருப்பேன்.. இப்பலாம் என்னடா வாழ்க்கைனு இருக்குடி.. எல்லாத்துமேலயும் ஒருவித சளிப்பு.. நான் படிக்க ஆசைபட்டுதான் படிக்குறேன்.. ஆனாலும் எனக்கு எழுபத்தி அஞ்சு பெர்சென்டேஜுக்கு மேல வரமாட்டேங்குது. நான் என்னால முடிஞ்ச முயற்சி அத்தனையும் எடுக்குறேன்.. ஆனா நான் போடுற முயற்சிய நம்ம வீட்ல கூட மதிக்க மாட்றாங்க தானே?
அவங்கள பொறுத்தவரை நான் படிக்காம டேக் இட் ஈசியா இருக்கேன், அதனால மார்க் வாங்க மாட்டேங்குறேன். ஆனா நான் எடுக்கும் முயற்சிகள் எனக்கு தானே குரல் தெரியும்? ஒரு பரிட்சைக்கு நான் எத்தனை தயாரா போறேன்னு எனக்குத்தானே தெரியும்.. நான் இன்னும் கின்டர்கார்டன் படிக்கலையே நூத்துக்கு நூறு வாங்குறதுக்கு. இவ்வளவு தான் போடுவாங்கனு சொன்னா அப்ப உன்னவிட கூட வாங்குறவங்களாம் எப்படி எடுக்குறாங்கனு நம்ம வீட்ல கேட்குறாங்க. என்னிக்காவது நாம அவங்க அப்பா அம்மா அப்படி செய்யுறாங்க, இப்படி செய்யுறாங்க, நீங்க அதெல்லாம் செய்றீங்களானு கேட்டா அவங்களுக்கு எப்படி இருக்கும்? அதேபோல தானே மித்தவங்களோட நம்ம கேபசிடிய கம்பேர் பண்ணும்போது நமக்கும் வலிக்கும்? வீட்ல, காலேஜ்ல, பிரெண்ட்ஸ் மத்தியிலனு எல்லா இடத்திலும் நான் ஜீரோ தானே? எனக்கு பெருசா எந்த திறமையும் கிடையாது. படிப்புலயும் ஆவ்ரேஜ் தான்” என்றாள்.
“அப்படி இல்ல தமிழ். எல்லாருக்குள்ளயும் ஒரு திறமை இருக்கும். ஆனா இதுதான் நம்ம திறமைனு நாம ரெகக்நைஸ் பண்ணிருக்க மாட்டோம். உனக்கு ஒன்னும் வயசாகிடலைடி.. உன் திறமைய நீ கண்டிப்பா பர்ஸியூ பண்ணுவ. கே.எஃப்.சீனா எவ்வளவு ஃபேமஸான கடை. ஆனா அதோட ஓனரே அறுபது வயசுலதான் அதைத் துவங்கினார். வாழ்க்கை எப்ப, எப்படி மாறும்னே தெரியாது தமிழ். நூத்துக்கு நூறு எடுக்குறவனுக்கு தான் நல்ல வாழ்க்கை அமையும்னு பார்த்தா நாட்டில் தொன்னுத்தொம்பது சதவீத மக்கள் நல்லா இல்லாம தான் போகனும்” என்று கூறிய குரல் சிரிக்க,
தன் கண்ணீரைத் துடைத்துக் கொண்டு விரக்தியாய் சிரித்தவள், “ரொம்ப வலிக்குது குரல்.. என்னமோ என்னை நானே தொலைச்சுட்டேனோனு இருக்கு. என் ஆசைக்காக செய்ய எடுத்த விஷயங்கள் கூட, இவங்க என்ன நினைப்பாங்களோ? வீட்ல என்ன சொல்வாங்களோனு பயந்து பயந்து செய்யுற மாதிரி இருக்கு. பிடிச்ச விஷயங்களைக் கூட வெறுத்துடுவேனோனு பயமா இருக்கு” என்று கூறினாள்.
“இல்ல தமிழ்.. கண்டிப்பா நீ நல்ல இடத்துக்கு வருவ. இவளாம் எங்க உருப்புடப்போறானு பேசினவங்களுக்கு உன்னோட உழைப்பும், அதுக்கான ஊதியமும் பதில் சொல்லும்” என்று நம்பிக்கைக் கொடுத்த குரல், அவளை அணைத்துக் கொண்டு, “நான் இருக்கேன்டி உனக்கு” என்று கூற,
நெகிழ்வாய் கண்ணீர் சிந்தியவள், “தேங்ஸ்டி” என்றாள்.
அதையடுத்து தமிழை திசைதிருப்ப வேண்டி மற்ற விடயங்களைப் பேசியவள், அவளோடு சென்று உண்டுவிட்டு உறங்கினாள்.
மறுநாள் காலை எழுந்ததும் தனது அலைபேசியை எடுத்த தமிழ், குரலிடமிருந்து ஏதோ குறுஞ்செய்தி வந்திருப்பதைக் கண்டு, ‘பக்கி பக்கத்துலருந்துட்டே மெசேஜ் பண்ணுது பாரு’ என்று சிரித்தபடி திறந்துப் பார்த்தாள்.
நேர்மறை எண்ணங்களை விதைக்கும் விதமாய், ‘உன்மீது நீ வைக்கும் நம்பிக்கை, உன்னை நீ நினைத்துப் பார்க்க இயலா உயரத்திற்குக் கூட்டிச் செல்லும்' என்ற வசனம் இருக்க, அதற்கு இதயங்களை பதிலாய் அனுப்பினாள்.
அதுவே அவர்களது வாடிக்கையானது!
தினம் ஒரு வசனம். நாளடைவில் அதனைப் படிக்கப் படிக்க, தமிழுக்குள் தன்னால் ஒரு உத்வேகம் பிறந்தது! வார்த்தைகளுக்கு இருக்கும் மகிமையே மகிமை! ஒரு சொல் வெல்லும், ஒரு சொல் கொல்லும் என்பர்… இங்கு சொற்கள் சேர்ந்து வாக்கியமெனும் தோரணமாய் மாறி, தமிழரசியின் வெற்றி மாலையாய் உருவெடுத்துக் கொண்டிருந்தது, அவளே அறியாமல்!
ஒருநாள் அவளது கல்லூரியில் பேராசிரியர் ஒருவர் தற்போதைய தலைமுறை பிள்ளைகளைப் பற்றிய தனது அதிருப்தியை வெளிப்படுத்திக் கொண்டிருந்தார்.
“நான் சொல்றது உங்களுக்கு கோபத்தைக் கொண்டு வரலாம்.. ஆனா நல்லா புரிஞ்சுக்கோங்க இந்த ஜெனரேஷன் பிள்ளைகளுக்கு கணக்கு தெரியுறதில்லை.. ஆம் நாட் ஜோக்கிங்.. எங்களுக்குலாம் கட்டாயம் இருபதாம் வாய்ப்பாடு வரை மனப்பாடம் பண்ணியே ஆகனும். ஸ்கொயர் ரூட் போட தெரிஞ்சிருக்கனும். ஆனா இப்பலாம் உங்களை ஸ்கூல்லயே ஈசியா கேல்குலேட்டர் பயன்படுத்த விட்டிடுறாங்க. பதினேழாம் வாய்பாட மனப்பாடம சொல்லிடுவேன்னு இங்க யாரும் ஒருத்தர் இருப்பீங்களா சொல்லுங்க?
அன்ட் இந்த தலைமுறை பிள்ளைகள் ரொம்பவே எமோஷனலி வீக்கா இருக்கீங்க. நீங்க நம்புறீங்களானு தெரியலை.. ஆனா இந்த தலைமுறையில் விவாகரத்து வழக்குகளும், தற்கொலை வழக்குகளும் அத்தனை அதிகமாயிருக்கு. எல்லாமே தேவையில்லாம நடந்ததுனு நான் சொல்லலை. ஆனா அதில் பல வழக்குகள் ரொம்ப சின்னச் சின்ன காரணங்களுக்காக நடந்தது. ஒன்பது வயசு பொண்ணு, அப்பா அம்மா தன்னோட பிரெண்ட்ஸ் முன்னாடி திட்டிட்டாங்கனு தற்கொலை செய்த வரலாறெல்லாம் உங்க தலைமுறையில் தான் நடக்குது. நீங்க பார்க்குற இணையம் இதுக்கு உங்களுக்கு தூபம் தான் போடுது. எத்தனை பேர் நோடிஸ் பண்ணிருக்கீங்க?
ரொம்ப சோகமா, வாழ்க்கையே நல்லா போகலை, நான் ஒரு கோமாளியா இருக்கேன் என் வாழ்க்கைல, அதிஷ்டமா? அப்படினா என்ன? அப்படினு கேட்கப்படும் போஸ்டுகளுக்கு எத்தனை பேர் லைக் போட்டு, அதைத் தூக்கி உங்க வாட்ஸப் ஸ்டேடஸ்ல வச்சிருப்பீங்க? நெகடிவிடி… வாழ்க்கையில் கஷ்டபடாம யாருமே இருக்க மாட்டாங்க. ஆனா இந்த தலைமுறை பிள்ளைகள் கஷ்டத்தை மட்டுமே தான் பாக்குறீங்க, கஷ்டத்தை மட்டுமே தான் பரப்புறீங்க. அதுவும் இணை கேலிக்கை செயலிகளைப் பொறுத்தவரை, வாழ்க்கைல அத்தனை பேருமே சோகமானவன், வாழத்தெரியாம ஏமாளியா வாழ்றவன், விட்டுகொடுத்து விட்டுகொடுத்து கெட்டுப்போறவன் அன்ட் சந்தோஷம்னா என்னனே தெரியாதவன். இதுல அதுக்குக் கீழயெல்லாம் என் வாழ்க்கையவே நாலு வரில சொல்லிட்ட ப்ரோனு கமென்ட் வேற போடுவீங்க..
கஷ்டத்தையும், ஏமாற்றத்தையும் ஏத்துக்கும் மனப்பக்குவம் இந்த தலைமுறை பிள்ளைகள்கிட்ட சுத்தமா இல்லை. அதுதான் இப்படியான சின்னச் சின்ன விஷயத்துக்கும் உங்களை உடைஞ்சு போக வைக்குது. நாங்கலாம் பத்து மைல் தள்ளி வந்து காலேஜ், ஸ்கூல் படிச்சோம்னு சொல்றவங்களுக்கு இப்ப பூமர்னு வேற பெயர் வச்சுட்டீங்க. உங்க தலைமுறை கஷ்டப்படலைனு நாங்க யாரும் சொல்லலை. நாங்க ஒரு வகையில் கஷ்டபட்டு வளர்ந்தோம், அந்த கஷ்டம் உங்களுக்கு இல்லை. ஆனா அதுக்குப் பதிலா வேற கஷ்டம் இருக்குனு புரியுது. ஆனா கஷ்டத்தை மட்டுமே பார்த்துட்டு உங்களுக்குக் கிடைச்ச அழகான வாழ்க்கையை நீங்க வீணாக்குறீங்களேனு தான் கோபமா வருது.
புரிஞ்சுக்கோங்க பிள்ளைகளா.. சாவு ஒரு முறைதான்.. ஆனா வாழ்க்கை தினம் தினம் உண்டு. ஒவ்வொரு நாளும் ஒரு புது வாழ்க்கை தான். அனுபவிச்சு வாழ்ந்து பாருங்க, சும்மா அடிக்குற காத்துகூட சந்தனமா மணக்கும்” என்றார்.
அவர் பேசியவை தமிழரசியின் மனதில் ஆழமான உணர்வை விதைத்தது. அவர் குறிப்பிட்ட அந்த மனதைரியம் குன்றிய மனிதர்களுக்கிடையில் தானும் அவர்களைப் போலத்தானே நடந்துகொண்டுள்ளோம் என்ற உண்மை பொட்டில் அடித்தார் போன்று விளங்கியது!
மறுநாள் காலைப் பொழுதில் தங்கை அனுப்பிய வசனத்தைப் படித்த தமிழ், “ஏன் குரல்.. நாம ஏன் இன்ஸ்டால ஒரு பேஜ் ஓபன் பண்ணக் கூடாது? இப்படி தினம் நிறைய பாசிடிவான க்வட்ஸ், அன்ட் எனக்கு தோன்றும் நேர்மறை எண்ணங்கள்னு அதுல ஏன் ஷேர் பண்ண கூடாது?” என்று கேட்க,
“ஹே தமிழ்.. ரொம்ப நல்ல விஷயம்டி. பண்ணு தமிழ்.. உனக்கு டெய்லி பின் இன்டிரஸ்ட்ல தேடி அனுப்புற வேலை மிச்சம். நீ போடுற போஸ்டயே உனக்கு சென்ட் பண்ணிடுவேன்” என்று குரல் கூறினாள்.
“பைத்தியம்” என்று திட்டி சிரித்துக் கொண்ட தமிழுக்கு ஏனோ தனது சிந்தையை செயலாக்கிடும் ஆர்வம்…
தங்கையின் உதவியோடு நேர்மறை எண்ணங்களை பரப்புவதற்காக ஒரு இணைபக்கத்தை உருவாக்கினாள்.
முதல் ஒரு வருடத்திற்கு அது அத்தனை ஒன்னும் பிரபலமாகவில்லை… ஆனால் ஒருநாள் அவளுக்கொரு குறுஞ்செய்தி வந்தது!
காதல் தோல்வியில் வாழ்க்கையை வெறுத்து தற்கொலை செய்ய முயற்சிக்கலாம் என்று எண்ணும் அளவு சென்று விட்ட தனது மனதை, நேர்மறையான எண்ணங்கள் கொண்டு திசைதிருப்பி, இன்று சந்தோஷமாக வெற்றியின் பாதையில் பயணிக்க வைத்தமைக்கு மனமார நன்றி கூறிய ஒரு இளைஞனின் குறுஞ்செய்தி அவளை அத்தனை சந்தோஷத்திற்கு உட்படுத்தியது!
எத்தனை ஆழமான நன்றி அவனிடம்! அவள் மனம் குளிர்ந்து போனது. இதில் குறிப்பிடத்தக்க விஷயம், அந்த இளைஞனின் தந்தை ஒரு காவலதிகாரி என்பது. தனது மகனின் மனதைரியத்தை மீட்டுக் கொடுத்தமைக்கு மனமார நன்றி கூறியவர், சிறைக்கைதிகளுக்கு ஆலோசனை வழங்கும் தனக்குத் தெரிந்த மனநல மருத்துவர்களுக்கு இவளது இணைய பக்கத்தை அறிமுகம் செய்து வைத்தார்.
அவரும் ஒரு நல்ல செயலை ஆதரிக்கும் சந்தோஷத்துடன் தனது, வாடிக்கையாளர்களுக்கு இவளது இணைய பக்கத்தை பரிந்துரை செய்தார். அது அவளை பெரும் உயரத்திற்குக் கூட்டிச் சென்றது என்றாலும் மிகையாகாது!
சாதாரணமாக துவங்கிய ஒரு முயற்சி அவளுக்கு இன்று பல லட்ச மக்களின் ஆதரவையும், இதன் மூலமாக சில கல்லூரிகளில் ஊக்கப்பேச்சுக் கொடுக்கும் வாய்ப்புகளையும் அள்ளித் தந்திருந்தது!
தனது படிப்பின் படி ஆடை வடிவமைப்புக் கலைஞராகவும் மாறியவள், ஒருபக்கம் தனது ஆசை மற்றும் ஆர்வத்தையும் சரிசமமாய் கையாண்டு முன்னேறினாள்.
அன்று குரல் கூறிய வார்த்தைகள் மெய்ப்பிக்கும் விதமாய், குடும்பம், நட்பு வட்டம், சொந்த பந்தங்கள், வேலையிடம் என அனைத்திலும் தலைநிமிர்ந்து பார்த்து பெருமைபட்டுக்கொள்ளும் உயரத்தை அடைந்திருந்தாள்!
“நீ இல்லைனா இதை சாதிச்சிருக்க முடியாது குரல்” என்று நினைவுகளிலிருந்து மீண்ட தமிழ் கூற,
“உனக்குள்ள நிறைய திறமை இருக்கு தமிழ். அதை உனக்கு உணர்த்த என்னோட சின்ன செயல் உதவிருக்கு. அவ்வளவு தான்” என்று கூறினாள்.
தங்கையை நன்றியோடு அணைத்துக் கொண்டவள், “இன்னிக்கு ஒரு சிறுவர் சீர்திருத்த பள்ளியில பேச கூப்பிட்டிருக்காங்க” என்று கூற,
“ஆல் தி பெஸ்ட் மை கேர்ள். ஜாலியா போயிட்டு வா” என்று அவளை அணைத்துவிட்டுச் சென்றாள்.
சிறு முயற்சிக்கே தனது வாழ்க்கை இத்தனை அழகாக மாறிவிட்டதே என்று வார்த்தைகள் மற்றும் நேர்மறை எண்ணங்களின் விந்தையில் பூரித்துக் கொண்டவள் தனது வாழ்வில் மென்மேலும் முன்னேரும் அடிகளை எடுத்து வைக்கவேண்டி புறப்பட்டாள்….
நமக்காக நாம் எடுக்கும் சிறு முயற்சி வாழ்வில் எத்தனை அழகான மாற்றங்களை கொடுக்கும் என்று மெய்ப்பித்துக் காட்டிய தமிழரசியைப் போன்ற எண்ணற்ற தமிழரசிகள் உருவாக வேண்டி, அதற்கான முயற்சிகளை நாமும் செயலாற்றிடுவோம்...
-சுபம்...
இதில் வரும் தமிழரசி கதாபாத்திரத்தின் கடந்தகாலம் நான் நேர்ல ஒருத்தர்கிட்ட பாத்திருக்கேன்... அவங்க வாழ்க்கை இந்த தமிழரசியோடது போல சிறப்பா அமையும் எனது ஆசையும் வேண்டுதலுமாய் இக்கதையில்....
உங்கள் கருத்துக்களை கீழே உள்ள திரியில் பகிர்ந்து கொள்ளுங்கள் தங்கம்ஸ்![Smiling face with hearts :smiling_face_with_3_hearts: 🥰](https://cdn.jsdelivr.net/joypixels/assets/6.6/png/unicode/64/1f970.png)

உங்கள் கருத்துக்களை கீழே உள்ள திரியில் பகிர்ந்து கொள்ளுங்கள் தங்கம்ஸ்
![Smiling face with hearts :smiling_face_with_3_hearts: 🥰](https://cdn.jsdelivr.net/joypixels/assets/6.6/png/unicode/64/1f970.png)
எண்ணமே வாழ்வின் வண்ணமே - கருத்துத் திரி
உங்கள் பொன்னான கருத்துக்களை இத்திரியில் என்னுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் தங்கம்ஸ் 🥰
narumugainovels.com
Last edited: