எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

வேதம் - 07

admin

Administrator
Staff member

அத்தியாயம் - 7​

காத்திருக்க காலச் சக்கரத்துக்கு இஷ்டம் இல்லை போலும், சர்வேஷ் இலங்கை வந்து மூன்று மாதங்கள் நொடியில் கடந்து விட்ட உணர்வு.​

“சாத்விகா! அடியேய் கிறுக்கிச்சி!"​

“ஸ்.. ஆ..! ஏன்டி வலிக்குது, இந்தக் கிள்ளு கிள்ளுற?"​

“எருமை உன்னைக் கிள்ளாம என்ன பண்ணவாம். எவ்வளவு நேரம் கூப்பிடுறது, லூசு மாதிரி கேட்டும் கேட்காம நிற்கிற?"​

“நான் எங்கடி அப்படி நின்னேன், ரெடி ஆக வேணாமா? லேட் ஆகிட்டு, ஊபர் வண்டி வேற வந்துருச்சு!"​

ரம்யாவின் முறைப்பில் தானாகச் சரண்டரானவள்,​

“என்னடி?"​

“என்ன வெண்ணெய், என்னடிங்கிற? நாம தான் ஈவெண்ட் ஆர்க்கனைசிங் பண்ணுறோம். இந்த சாம்பியன்ஷிப் ஸ்டேடியம், ஹோட்டல்னு மட்டும் அவங்க நீட்ஸ் பார்த்து, பார்த்து கவனிச்சா போதுமா? ஒரு போட்டியையாவது ஒழுங்காப் போய் பார்க்க வேணாமா?​

நானாவது ஒன்னு, இரண்டு காம்படீஷன் பார்க்கப் போனேன், நீ ஏதுமில்ல. அதும் இன்னைக்கு பைனல் வேற.​

ஹம்.. நம்ம சாரோட பையன் என்னமா பைய்ட் பண்ணுறார் தெரியுமா? மனுஷன் ஹைட்டும், வெய்ட்டுமா என்னமா இருக்காரு, அடடா. அதுவும் அன்னைக்கு போட்டில விட்டாரு பாரு, ஒரு பஞ்ச்! அந்த வெள்ளெலி மூஞ்சி சைடு வாங்கிருச்சு."​

அவளும் டோர்னமெண்ட் நடக்கும் இந்த இரு மாதங்களில், என்ன சொன்னாலும் சாத்வியிடம் மௌனம் மட்டுமே. ராகுவரனால் அவள் வருகை தடைபடும் என்றால், அதுவும் இல்லை. அவன் கொடுக்கை வெட்டியாயிற்று.​

“ஏய் லூஸே! பேசேன்!"​

“ஏன் ரம்யா? நீ வேற ஃப்ரீ ப்ரோமோஷன் பண்ணிக்கிட்டு இருக்கிற? அல்ரெடி இங்க போற இடமெல்லாம், அந்த ஹல்க்கு கட் அவுட் வச்சு இருக்கிறது போதலையா? அதுக்கும் மேல நம்ம கம்பனில, எந்த ப்ரான்ச் போனாலும், இதான் ஹாட் நியூஸ்!"​

“இருந்தும் என்ன போராஜனம், ஒரு மேட்ச்சுக்காவது வந்திருக்கியா?"​

“அதான் இன்னைக்கு வாரனே..!"​

“வந்து இருக்கணும்டி. அவரு பஞ்ச்.."​

அவள் ஆரம்பிக்கும் போதே, நடுவில் புகுந்த சாத்வீ,​

“யம்மாடி, மறுபடியும் முதல்ல இருந்தா? இப்போ சொன்னியே அதுக்கு தான் வரலை. எனக்கு அவ..ரு.. அவரு.. போஸ்ட்டர்.." திணறியவள் எப்படி கூறுவது எனத் தவிக்க,​

அவளை ஒரு மாதிரி பார்த்த ரம்யா, “என்னாச்சு சாத்வி?"​

“ம்ச்! என்னமோ அவங்க முகத்தை, அந்த போஸ்டர்ல கூட நிமிந்து பார்க்க முடியாம உள்ள என்னமோ ஒன்னு பார்க்காதனு அழுத்துது. அதுவே பார்க்கலைனா, நீ பார்க்கலையானு தவிக்குது. உனக்கு தெரியுமா? அன்னைக்கு சார் ரூம்ல அவரு மகனோட அந்த புதருக்குள் மூஞ்சப் பார்த்ததோடு சரி. இன்னை வர பார்க்கத் தோணலை. ஹூம்.. பார்க்கவும் முடியலை."​

அவளுக்கே அவள் மனதின் முரண் புரியாத போது, ரம்யா எங்கனம் புரிவாள். ஒன்றை மறக்க நினைத்தால் நினைக்கத் தோன்றுவதும், கடக்க நினைத்தால் மீண்டும், மீண்டும் தீண்ட தோன்றுவதும் மனித இயல்பு தானே.​

இங்கு சாத்விகாவிற்கு நடந்ததும் அதுவே. இதை எல்லாம் விட இறைவன் போட்ட முடிச்சை அவிழ்க்க நினைப்பது முடியுமோ..!​

“என்னமோ சொல்ற புரியலை. பட் சாரோட பையன் உன்னை டிஸ்டர்ப் பண்ணுறார்னு மட்டும் புரிது." என்றதும்​

சாத்வீ அதிர்ந்து அவள் முகம் நோக்கி, குரல் தடைபட,​

“ஏய்! என்னடி நீ? இல்லாத குண்டை எல்லாம் தூக்கிப் போடுற! அவங்க எங்க, நான் எங்க? இது வேறு. அதை எப்படி சொல்லுறது. ஹம்.. எனக்கு அவரு தோற்றத்துல பயம்னு நினைக்கிறேன். மச்.. அதை விடு. நின்னுட்டே இருந்தா, நீ இப்படி தான் ஏதாவது பேசுவ. வா கிளம்புவோம்."​

இருவரும் ஸ்டேடியம் நோக்கிப் போக,​

அங்கே ரிங்குக்குள் சர்வேஷ் பிடரி முடி சிலிர்க்க, சிங்கமென களத்தில் நின்று விளையாட, போட்டியின் தாக்கம் அவனையும் விட்டு வைக்க வில்லை. அவனுக்கு விழுந்த பஞ்ச்சில் இதழோரம் வெடித்து குருதி கசிய, சூடு பிடித்த போட்டியில் காயங்கள் கொண்டிருந்தது, அவன் உடல். அவனை எதிர்த்துச் சண்டையிடும் இங்கிலாந்தை சேர்த்த கருப்பினத்து வீரனின் மாமிசத் தோற்றத்துக்கு ஏற்ப, அவனுக்கு விழுந்த பஞ்ச்சுகளும் அவனை பலமாகத் தாக்கி இருந்தது.​

“ஸ்.. ஆ... அம்மா.."​

“உஷ்.. ஜனனி என்ன இது?"​

“அத்தான்...!"​

அவளின் குரல் அழுகையில் தழும்ப, மனைவியின் தவிப்பில் தன் முகம் மாறாது காக்கத் தவித்தவன் மெதுவாக,​

“பேபி இப்படி ஒவ்வொரு பஞ்ச்சிக்கும் துடுச்சா எப்படி..டி? இதுக்கு தான் பைனல்ஸ் வரை உன்னை கூட்டிட்டே வரலை. நீ இங்க சாம்பியன் சர்வேஷ் அம்மாவா மட்டும் இல்ல. ஆர்கனைசிங் சேம்பர் சேர்மன் அக்கண்யன் பொண்டாட்டியும் கூட, கொஞ்சம் காம் டௌன் ஆகு.” எனும் போதே,​

“சர்வா!" எனும் கூச்சலோடு இவள் ஒரு புறம் பதற,​

“டேய் தடியா!" எனும் அலறலோடு ராகினி மறுபுறம் அலற, தந்தையும் மகனும் ஒரு சேர தலையை ஆட்டிக் கொண்டனர்.​

“பேபி, உன் பிள்ளைக்கு அப்படி ஒன்னும் வலிக்கிற மாதிரி தெரியலை. ஒரு, ஒரு பஞ்சையும் என்ஜாய் பண்ணுறான். பைனல் மேட்ச்ல இந்த பையர் கூட இல்லைனா, அவன் என்ன சாம்பியன்?"​

இங்கு ஆத்வீக்,​

“ராகி இப்போ மட்டும் நீ தடியானு கூப்பிட்டது அவனுக்கு கேட்டுச்சு. உன்னை ரிங்க்குள்ள புடிச்சி தூக்கிப் போட்டிருப்பான்!" என்றான் நமட்டு சிரிப்போடு.​

அதே நேரம் முதல் முறை அவன் போட்டியைக் காண சாத்விகா அரங்கத்துக்குள் நுழைந்து, ஸ்பெஷல் கார்ட்டை காட்டிவிட்டு, பிளேயர்ஸ் ரிங்க்கு முன் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட இருக்கையில் அமர வரவும், எதிரே நின்றவனை சர்வேஷ் ஓங்கி ஒரு குத்து விடவும் சரியாக இருக்க அதிர்ந்து, வியர்த்து, வியந்து, படபடத்து அவள் இதழ்கள் தன்னையும் மீறி சற்றே சத்தமாக,​

“ராட்சச ராவணன்!" என்று இசையாக வசைபாட, குத்து விட்டு நிமிர்ந்தவன் கண்களுக்கு மிக, மிக துல்லியமாக, அவள் இதழ் அசைவு பிடிப்படவும், அவளைப் பார்த்துக்கொண்டே அடுத்து இரண்டு குத்து, தன் உடலை சற்றே நிமிர்த்தி ஓங்கி விடவும், சொல்பேச்சு கேட்கா அவள் இதழ்கள் மீண்டும்,​

“ஆத்தாடி ஆத்தா! யெம்மாம் பெரிய உருவம். ராட்சச ராவணனே தான்!" என மீண்டும் வசை பாட.​

அது துல்லியமாக அவன் விழிகளில் விழுந்து அவளை அவன் உறுத்து நோக்க, அந்த சத்தம் அவனுக்கு மட்டுமின்றி அருகே இருந்த ரம்யா, அக்கண்யன், ஜனனி, ஆத்வீக், ராகவி காதுகளிலும் மெலிதாக விழுந்தது. அவர்கள் நால்வரும் தங்களை மீறி எழுந்த சிரிப்பை கட்டுப்படுத்த, அவ்வளவு நேரம் அழுகையில் கசங்கிய ஜனனியின் முகம் சிரிப்பிலும், அவளைக் கண்ட மகிழ்வியிலும் விகசிக்க, இது அத்தனையையும் அவன் கூர் புத்தியும், விழிகளும் உள் வாங்கத் தவறவில்லை. அவன் பார்வை இவளில் இருப்பதை கவனித்த வருண், சாத்வியை குறுகுறுவெனப் பார்க்க, ரம்யா ஒரு சங்கடமான சிரிப்போடு,​

“ஆத்தா சாத்வீ! மலையிரங்கு."​

“எங்க இறங்கணும் ரம்யா?" அவள் தெளியாமல் பதில் கூற,​

வருண் அவர்களை இன்னும் சுவாரசியமாக கவனிக்கவும், ரம்யா அவள் கையை வலிக்க கிள்ளி வைத்தாள்.​

“ஸ்ஸ்.." கையை தேய்த்துக் கொண்டே சாத்வீ வலியில் முனங்கவும்,​

“கிறுக்கி! அங்க இருந்து நல்லாத் தானே வந்த. அவரு அம்மா, அப்பாவை பக்கத்துல வச்சுகிட்டே, மகனை கிண்டல் பண்றியே!"​

என்றதும் அதிர்ந்து முழித்தவள், இதழோரம் புன்னகையின் வளைவும், ஒரு அசட்டுப் பார்வையும் பார்த்துக் கொண்டே,​

“அவ்வளவு சத்தமாவா பேசிட்டேன்?"​

“பின்ன இந்த பஞ்ச்சிக்கு வெய்ட் பண்ணிட்டு ஸ்டேடியமே லைட்டா சைலேண்ட் ஆன கேப்ல, நீ கொஞ்சம் சத்தமாப் பேசிட்ட"​

என்றதும் நெளிந்து கொண்டே அமர்த்தவள்,​

ஜனனி புறம் மெதுவாக பார்வையை நகர்த்த, ஜனனி விழி மூடி ஆசுவாசப்படுத்தினாள். ஆனால் இத்தனையிலும் நாகயன் அவளை பார்த்த பார்வை, பெண்ணின் இதயத்தில் ஊசிகளாக துளைத்து உள் நுழைந்தது. கடைசி வெற்றிக்கு இரண்டு பஞ்ச் எதிராளியின் முகத்தை நோக்கி செலுத்தினால் இலக்கை அடையலாம் என்ற பொழுது, அவளை பார்த்த வழி அகற்றவில்லை.​

அந்தப் பார்வையின் பொருளோ பெண்ணின் மனதை அடையவில்லை. அவன் எண்ணத்தின் விளைவும் தெரியவில்லை. சாத்வியை பார்த்துக் கொண்டே சர்வேஷ் ஓங்கி மேலும் இரண்டு பஞ்ச் விடவும், ஒவ்வொரு அடிக்கும் அவள் இமைகள் மூடி, மூடி திறந்தன. அவன் பார்வை இவளிலும், இவளின் அதிர்ந்து, பயந்த பார்வை அவனிலும் நிலைத்திருக்க, சுற்றம் மறந்த அந்த நொடியை சுற்றி இருந்தவர்கள் ஆழ்ந்து உள்வாங்கினர்.​

அங்கு ஒவ்வொருவர் மனநிலையும் ஒவ்வொன்றை தூக்கிச் சுமக்க, நாயகி, நாயகனின் மனநிலையோ பொருளின்றி மயக்கமாயிற்று. அரங்கத்தில் எழுந்த “ஆஆஆ!ஓஓ!" வெற்றி கூச்சலில் சாத்வி தன்னிலை அடைந்து சுற்றும் புறம் பார்க்க அங்கே மைக்கில்,​

“2022 யூ எஃப்சி பைனல் சாம்பியன்(2022 final Ultimate fighting champion)" என்றவன் சற்றே நிறுத்தி அரங்கத்தின் ஆரவாரக் கூச்சலை உள்வாங்கி விட்டு,​

“நாட் ஒன்லி பைனல் சாம்பியன் எட்ரிக் சாம்பியன்(not only final champion Hat - trick champion) மிஸ்டர் சர்வேஷ் அக்கண்யன்!"​

என்று உரக்க அறிவிக்கவும், அவன் கையை நடுவர் மேல் உயர்த்தி, வெற்றியை அறிவித்த நொடி அரங்கமே உற்சாகக் கூச்சல் சிதறல்களாகச் சிதறியது.​

திரண்டிருந்த கூட்டத்திற்க்கு நடுவே வெற்றிக்கோப்பை தாங்கி நின்ற சர்வேஷ் என்னும் ஆறடி அரக்கனை, தங்க மெடலும் சேர்ந்தே அலங்கரிக்க, அவன் உடல் மொழியும், சிலிர்த்து நின்ற பிடரி முடியும் அவன் கர்வத்தைச் சொல்லாமல் சொன்னது.​

இங்கு ஆனந்தக் கண்ணீரோடு ஜனனி அக்கண்யனின் தோள் சாய,​

“இப்ப சந்தோஷமா? உன் மகன் வின் பண்ணிட்டான்!"​

கணவனை ஆழ்ந்து பார்த்தவள், “என் மகன் ஜெயிச்சுட்டான் தான். ஆனால் இந்த வெற்றி இந்தத் தாயோட இதயத்தை நிரப்பலாம். ஆனால் அவளுக்குள் இருக்க ஆன்மாவை நிரப்புமா என்ன?"​

ஒரு நெடிய பெரு மூச்சோடு...​

“ஆனாலும், என் சர்வாவுக்காக இந்த வெற்றியை நான் கொண்டாடத் தான் செய்வேன்."​

இங்கு ரம்யாவோ,​

“சாத்வி சூப்பர் இல்ல. அடி ஒன்னும் சும்மா இடி மாதிரி விழுந்துச்சு. மனுஷன் என்னம்மா இருக்காரு பாரேன்.." என ஆரம்பிக்கவே..​

“ஷ்ஷ்! ஆமா, ஆமா மனுஷன் நல்ல ராட்சச ராவணன் மாதிரி ஆறடியில, ஜட முடியோட, கை முழுக்க டேட்டுவும், மூஞ்சி முழுக்க மீசை தாடியுமா நவீன ராவணன் மாதிரி இருக்காரே!"​

“ஏய் சும்மா இருக்க மாட்டியாடி. நீ முதல்ல சொன்னதே எல்லாருக்கும் கேட்டுருச்சு. பஞ்ச் பார்த்த தானே! உன் மூஞ்சி தாங்குமானு யோசிச்சுக்கோ." என்றதும் திகைத்தவள் வாயை மூடிக்கொண்டாள்.​

அதே நேரம் வெற்றிக் களிப்பிலிருந்து வெளியே வந்த சர்வேஷ், தன்னை நோக்கி வந்த வருணை ஆழ்ந்து பார்த்துக் கொண்டே,​

“ஐ நீட் ஹேர் டீடைல்ஸ்"​

“சார்!" அவன் அதிரவே,​

“ஐ வாண்ட் த டீடைல்ஸ் இமீடியட்லி."​

அவன் அழுத்திக் கூறவும், சர்வேஷ் யாரைப் பற்றி கேட்கிறான் என்பதை புரிந்து கொண்டு சர்வேஷை மீண்டும் அதிர்ந்து பார்க்க,​

“யூ கோ மேன்"​

“சார் அ..ந்..த அந்த பொண்ண நான் எப்படி உங்களுக்கு.."​

வருண் முடிக்கும் முன், ஓங்கி அவன் மூக்கிலேயே குத்து விட,​

“ஆ..ஆ..!" என்ற சத்தத்தோடு இரு கைகளால் அவன் மூக்கை பொத்திக்கொள்ளவே..​

சர்வேஷோ ரௌத்திரத்தோடு,​

“யாரு படுக்கைக்கு, யாரு பந்திக்கு, யாரு பாசத்துக்குனு எனக்கு நல்லாவே தெரியும்!"​

என்றவன் தன் குத்தீட்டி பார்வையோடு,​

“டு யூ திங்க் அபௌட் மி, லைக் அ உமனைசர் ரைட்?"​

அவன் இறுக்கமான கேள்வியில் உடல் அதிரத் திகைத்தவன், “ஏன் இப்படி எல்லாம் கேட்குறீங்க? நான் அப்படி நினைக்கலையே!" அவன் திக்கித் திணறி முடிக்கவும்,​

“ஆமா, பொம்பளப் பொறுக்கி! உங்கள் லோக்கல் பாஷையில. பட்.. இந்த டேக் நான் விரும்பி வந்ததில்லை. வர வச்சது, வர வச்சுக்கிட்டதும்"​

அவன் அழுத்தமான பேச்சில், வருணின் முகம் கன்றிச் சிவப்பதை, வெகு திருப்தியாகப் பார்த்துக் கொண்டு,​

“அவ டீடைல்ஸ் ஹோட்டலுக்கு போய் நான் ரெஃப்ரெஷ் ஆகி பார்ட்டிக்கு வரும் முன்ன, என் கைக்கு வந்து சேரணும். புரிஞ்சுதா?"​

ஆமாம் என்று தலையசைத்தவன், அவ்விடம் விட்டு அகல,​

அகன்ற புன்னகையோடு மகனை நெருங்கிய அக்கண்யன், அவன் தோளில் தட்டி கர்வத்தோடு அணைத்துக் கொள்ளவும், சர்வேஷும் பதிலுக்கு அணைத்து விடுவித்தான்.​

அதே நேரம் தன்னை நோக்கி வந்த அண்ணனை அன்று போல் இன்றும் இடையோடு பிடித்து மேலே தூக்கி விட,​

“நாட்டி பாய்! மை டியரஸ்ட் சாம்பியன் ஆல் தி பெஸ்ட்!" முகம் கொள்ளா சிரிப்போடு தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினான்.​

இதையெல்லாம் ஒரு மூலையில் நின்று கவனித்துக் கொண்டிருந்த சாத்வியின் உள்ளத்திலோ, அவன் உருவம் ராட்சசனாகப் பதிய, ஏதோ ஒன்று அவனை ரட்சகனாகக் காட்டியது. அவனை, அவனோடு அவர்களுக்கு இருந்த குடும்பப் பிணைப்பை ரசித்தாளா, வெறுத்தளா என்பதையெல்லாம் அறியாள். ஆனால் இதயத்தில் ஏதோ ஒன்று தடம் புரண்டது. இதயமோ அவள் சொல் பேச்சு கேட்காமல், தன்னில் ஒரு இடம் கொடுத்தது மட்டும் உண்மை.​

இப்படி ஆரவாரங்களுக்கு மத்தியில் தாஜ் ஹோட்டலில் வெற்றிக் களிப்பைக் கொண்டாடும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்ட விருந்தில் கருப்பு சூட்டில், வெள்ளை ஷேர்ட், தங்க நிறத்தில் டை, மைக்கல் குரூக்ஸ் வாட்ச், கழுத்தில் வழிந்த பிடரி முடியை ஜெல் வைத்து லேசாக வாரி, ஆண்மையின் மிடுக்கோடு சர்வேஷ் கலந்து கொள்ள, குடும்ப உறுப்பினர்களோடு சேர்த்து சாத்வியும் கலந்து கொண்டாள்.​

ரம்யா அவசர மருத்துவ சூழ்நிலையின் பொருட்டு கலந்து கொள்ள முடியாததால், சாத்வி அங்கே கலந்து கொள்ள வேண்டியது கட்டாயம் ஆகியது. வெற்றி ஆரவாரங்களுக்கு நடுவே ஆட்டம், பாட்டம், மது என கலைகட்டிய கூட்டத்திற்கு மத்தியில், இருவர் மட்டும் ஒவ்வாமையில் நின்றனர்.​

ஒருத்தி சாத்விகா, இன்னொருத்தர் ஜனனி. ஜனனியின் மனநிலையை அறிந்த அக்கண்யன் அவளை அழகாக தாங்கிக் கொள்ள, மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல், ஒரு மனநிலையில் சாத்விகா தவித்துக் கொண்டு இருந்தாள்.​

கையில் வைத்திருந்த ஸ்காச் கிளாஸை கைகளில் உருட்டிக் கொண்டிருந்த சர்வேஷ் கண்கள், ரகுவரனின் தீராத தொல்லையில் இருந்து தப்பி ஒரு மூலையில் பம்மிப் பதுங்கி நின்ற சாத்வியைக் கண்டு, அவன் விழிகளோடு, கால்களும் சொல் பேச்சு கேட்காமல் அவளை நோக்கி நகரத் தொடங்கின.​

பார்ட்டிக்கென கருப்பு சில்க் காட்டனில் கோல்ட் நிற குட்டி பார்டர் வைத்து வேலைப்பாடு செய்த புடவையில் பின்னிய கார் கூந்தலும், இமைகளுக்கு நடுவே வைக்க வேண்டிய பொட்டை சற்று மேலே தூக்கி பெரிய கருப்பு பொட்டாக வைத்திருக்க, இரு விழிகளுக்கு மை பூசி, கை, காது, கழுத்தில், சில்வரில் சிறு நகைகள் அணிந்து நளினமாக நின்று கொண்டிருந்தவளை அணு அணுவாகப் பார்வையிட்டவன்.. ரசித்தானா, வெறுத்தானா என்பதை அவன் மனம் தான் சொல்ல வேண்டும்.​

ஆணின் இதயமோ சொல்பேச்சு கேட்காது அவளில் நழுவி விழப் பார்க்க, அவனுக்குள் இருக்கும் அரக்கன் வழி விட மறுத்தான்.​

அவளை அடைந்தவன் வாஷ் ரூம் செல்வதற்காக எழுந்த சாத்விகாவை இமைப் பொழுதில் இடையோடு கையிட்டு ஓரத்தில் தூக்கிச் சென்று சுவற்றோடு அவளை சாய்க்கவும், நொடிப் பொழுதில் அவளைத் தொட்டு தழுவிய முதல் ஆணின் மிக அழுத்தமான ஸ்பரிசமும், திடீரென மூன்றடி மேலே தூக்கப்பட்ட திகைப்பும், முகத்துக்கு நேரே சிவந்த பெரிய விழிகளுடன் சிவந்த முகத்தை மறைக்கும் தாடி மீசை என ஆண்மையில் மிளிர்ந்த அந்த உருவமும் அரக்கத்தனமாகத் தோன்றவே, உள்ளுக்குள் பூச்சி பறக்க,​

“ஐஐ.. அய்யோ! அம்மா!"​

அந்த சிறு கூச்சல் அவள் இதழை விட்டு வெளிவரவும், தன் நீண்ட விரலை சர்வேஷ் அவன் இதழ்களுக்கு நடுவில் வைத்து,​

“உஷ்! சத்தம் வந்துச்சு, சங்கக் கடிச்சிருவேன்!"​

அவள் கழுத்தை நோக்கி லேசாகக் குனியவும்,​

“ஏ.. ஏது சங்க கடிச்சிடுவீங்களா?"​

பயத்தில் அதிர்ந்தவள், தன் ஆள்காட்டி விரலை அவன் முகம் நோக்கிக் கொண்டு சென்று,​

“நீஈஈ.. நீங்.. நீங்க அந்த யூ எஃப் சி சாம்பியன் தானே?" என்றதும்,​

அவளை மேலும் உறுத்து நோக்க, அதில் மேலும் பயந்தவள் இதழ்கள் தந்தி அடித்து,​

“இல்..ல, இல்..ல அப்படி குறுகுறுன்னு பார்க்காதீங்க. அது சங்க கடிச்சிடுவேன்னு சொன்னீங்களா? நேத்து பார்த்த வேம்பையர் படம் ஞாபகம் வந்துருச்சு, அதான்.."​

அவள் அதீத பதட்டத்தில் உளறவும், தன் இதழ்கள் ஓரம் நெளிவதை பெரும்பாடு பட்டு தடுத்தவன் முகம், நொடி பொழுதில் பட்ட மாறா ரணங்களின் தடங்கள் தனக்குள் இன்னும் காந்துவதை உணர்ந்தவன் முகம், கருஞ்சாந்தாக மாறி விறைத்து, இறுக..​

“வாட்?" என்றவனின் கடுமையான ஒற்றைச் சொல்லில் அவள் தளிர் மேனி ஒரு முறை லேசாக அதிரவே ‘இல்லை' என மறுத்து தலையசைத்தவளில், அவன் ஒரு கரம் அவள் இடையில் பதிந்திருக்க, அவனின் கரத்தை மெதுவாக நகர்த்தப் பார்க்கவும், அவன் நீள விரல்கள் மேலும் அவளில் அழுந்திப் பதிய, இறுக்கிப் பிடித்தவன் அவள் விழிகளை உறுத்து நோக்கி கொண்டு,​

“ஹம்.. ராட்சச ராவணன்!" இறுக்கமாக சர்வேஷ் இதழ் அசைக்கவும்,​

 

admin

Administrator
Staff member

அதிர்ச்சியின் உச்சிக்கே சென்றவள் எங்கே பயத்தில் மயங்கி விடுவோம் என அஞ்சி, தன் தள்ளாட்டத்தை மறைக்க அவன் கோட் காலரை ஒற்றை கையில் இறுக்கிப் பிடித்துக் கொண்டு மற்ற கையை தன் நெஞ்சோடு இறுக்கி வைத்து மூச்செடுத்தவள்,​

“இல்ல, இல்ல அது ஏதோ.."​

“மூச்! யாருடி ராட்சச ராவணன்?"​

அவன் உரிமையான ஒருமை விளிப்பில் திகைத்து,​

“இல்ல.. ஏதோ ஒரு ஞாபகத்தில் சொல்லிட்டேன். என்.. என்னை விட்டுருங்களே..."​

“ஓவ்!" அவள் இதழ்களை ஆழ்ந்து நோக்கிக் கொண்டு,​

“இந்த வாய் இருக்குல்ல, வாய்! எதுவும் பேசலாம்னு நினைத்துக்கக் கூடாது. என்னைக்கும் அது நம்ம சொல் பேச்சு கேட்கணும். அப்படி நம்ம சொல் பேச்சு கேட்கலைன்னா, வீண் பேச்சு கேட்க வேண்டி வரும்!"​

சர்வேஷ் தன் இரு விரல்களால் அவள் உதட்டை பிடித்துக் குவித்தவன், தன் உதட்டை அருகில் கொண்டு சென்று அவன் இதழ்களால் அவள் இதழ்களை லேசாக உரசவும், பெண்ணுக்கு உடல் முழுவதும் கூச்செறிந்தது.​

முதல் ஆணின் ஸ்பரிசமே, அவள் சர்வத்தை ஆட்டம் காண வைத்ததென்றால், இந்த தொட்டும் தொடாமலும், பட்டும் படாமலும் உரசி சென்ற ஸ்பரிசம், உயிரை கசக்கிப் பிழிந்தது. எங்கே முன்னேறி விடுவானோ எனும் பயத்தில், அவள் இதழ்கள் மெதுவாகத் தந்தியடிக்க, சாத்வியின் இதழ்களுக்கு அருகே, தன் இதழ்களை லேசாக உரசிக் கொண்டு,​

“மூச்! அசையக் கூடாது. அசைஞ்ச என் உதட்ட உன் உதட்டு மேலயே வச்சு கடிச்சு வச்சுருவேன். பிறகு நீ டீவில பார்த்த வேம்பயர் சீன ரியாலிட்டில பார்க்க வேண்டி வரும் சாத்விகா. ஹம்.. சாத்விகா!"​

அவள் பெயரை அழுத்திச் சொன்னவன்,​

“ஆம் ஐ ரைட்?"​

அவள் ஆம் என தலையாட்டவும்,​

“வாய் திறந்து பதில் சொல்லு." அவன் அதட்டலில்​

“ஆமா. அதான் என் பேரு சார்.."​

“ஓவ்! ஏஜே குரூப் ஆஃப் கம்பெனியில் வேர்க் பண்ற"​

தலையாட்டப் போனவள் அவன் உறுமலில்,​

“ஆமாம்" பதில் சொல்ல​

“நான் யாருன்னு தெரியுமா?"​

“அது அக்கண்யன் சாரோட பையன்.."​

“இஸ் இட்! அவ்வளவு தானா?"​

அவன் குத்தீட்டிப் பார்வையில் பெண்ணின் இதழ்களோ,​

“யூஎஃப்சி 2022 சாம்பியன். எங்களோட ப்ரைடு"​

தாடையை தடவிக்கொண்டே,​

“உன்னோட வார்த்தையெல்லாம் அப்படி இல்லையே!"​

அவன் எதைக் கேட்கிறான் என்று அறிந்தவள் விழிகளை தாழ்த்தப் போக,​

“கண்ணு முழி கீழே அசையக் கூடாது"​

அவள் தன்னைக் காண வேண்டுமென நினைத்தவன்,​

“ஹம்.. சொல்லு! உன்னோட முதலாளிய, ராட்சச ராவணன்னு தான் பட்டப் பெயர் வைத்துக் கூப்பிடுவியா?"​

“அய்யோ இல்லைங்க. இது பட்ட பேரெல்லாம் இல்ல. அது ஏதோ உங்க ஹல்க், பல்க் பாடிய பார்த்து தானா வந்துருச்சு!"​

“வாட் !"​

ஜீவனை உறைய வைக்கும் கடினமான குரலில்...​

“அய்யய்யோ! மன்னிச்சிடுங்க! எனக்கு வாயில வாஸ்து சரி இல்ல. அது வந்து.. தானா வந்துருச்சு!"​

“ஓ! அப்படியா வாய வாஸ்த்து பார்த்து வைச்சுருவமா?"​

“என்ன?" அவள் திகைக்கவே.​

“இனி தானா வரக்கூடாது, வந்தா எனக்கும் சிலது தானா வரும். அதை நீ தாங்க மாட்ட.."​

என்றவன் முழு கோபத்தையும் அவள் இடையில் காட்டி, அவளில் இருந்து பிரிந்தவன் தன் முழு உயரத்திற்கும் நிமிர்ந்து நின்று,​

“ஹாப்ட்ரால் என்கிட்ட கைநீட்டி சம்பளம் வாங்குற ஸ்டாப். பேருக்கு பின்னுக்கு இருக்க இனிஷியலுக்கான முகவரி தெரியாத லோ- கிளாஸ். இந்த சர்வேஷ் அக்கண்யன் பற்றி கிண்டலா பேசலாமா சொல்லு?"​

அவன் வார்த்தைகள் நிதானமாக அதே நேரம் அம்பென அவள் நெஞ்சை அறுக்க, சாத்விக்கோ துக்கமும், வேதனையும், கோபமும் மாறி மாறி அவள் தொண்டையை அடைக்க, எச்சிலோடு விழுங்கியவள்,​

“அது ஏதோ தெரியாம எதார்த்தமா சொல்லிட்டேன். என்ன மன்னிச்சிடுங்க."​

“மன்னிக்கணுமா? சர்வேஷ்க்கு மன்னிக்க தெரியுமா என்ன? அதுவும் ஒரு பொம்பளையை..."​

திமிரும் நக்கலுமாகப் பரிகசிக்கவும் அதுவரையிலும் முதலாளியின் மகன் என்ற எண்ணத்தோடு மன்னிப்பு கேட்டவள்,​

அவன் ‘பொம்பளை' என்ற சொல்லில் நிமிர்ந்தவள்...​

“மன்னிக்கலனா நான் என்ன பண்ண முடியும்? கிண்டலாக் கூட உங்களை நான் அப்படி பேசி இருக்க வேணாம். அதுக்காக மன்னிப்பு கேட்டேன். மன்னிக்கிறதும் மன்னிக்காததும் உங்க இஷ்டம்! பட்.. என்னை அநாதைனு சொல்ல நீங்க யாரு?"​

அவள் கையைப் தன்னோடு வலிக்க இறுக்கிக் பிடித்தவன்,​

“எனக்குப் பிடிக்காத ஒற்றை விஷயம் பொண்ணுங்களோட பாசாங்கு, அதே பொம்பளைகளோட வளைஞ்சு கொடுக்கிற குணம். அதை என்கிட்ட ட்ரை பண்ணாத!"​

பெண்களைப் பற்றிய அவன் புரிதலில் முகத்தைஸ் சுளித்தவள்,​

“நான் ஒன்னும் உங்களோட வம்பு பண்ணலையே சார். நீங்க தானே தேடி வந்து என்கிட்ட ஏதேதோ பேசுறீங்க. இன்னைக்கு தான் உங்களை நானே முதல் முறை பார்க்கிறேன்."​

அவள் வார்த்தை கடைசி வரியில் தடுமாற,​

“ஓ! அப்படியா பட் உன் கண்கள் அப்படி சொல்லலையே...! என்னை நல்லா தெரிஞ்சிருக்குனு சொல்லுதே!"​

விழிகளை அங்கும், இங்கும் திருப்பியவள் படபடத்துப் போய்,​

“எங்க சாரோட மகனாத் தெரியும். மத்தபடி உங்களைத் தெரிஞ்சு வச்சு நான் என்ன சார் பண்ணப் போறேன்? எங்ககிட்ட காசு இல்லனு கைநீட்டி காசு வாங்குறேனா? இல்லையே! ஓசில வயித்த நிறைக்கிற பொழப்பும் செய்யலையே. உழைக்கிறேன், காசு தாரீங்க. அதை இப்படி கேவலமாகப் பேச வேண்டிய அவசியம் என்ன?​

ஒரு பெண்ணோட பாசம் கூட பாசாங்கா தோன்றக் காரணமே, ஒரு ஆணோட பகட்டும் அலட்சியமும் தான்!"​

அவன் விழிகளை ஆழமாகப் பார்த்துக் கொண்டே,​

“அதிகமாப் பேசியிருந்தா மன்னிச்சிடுங்க. ஆனால், உங்க கிட்ட வேலை செய்ற என்னோட பிறப்பைப் பத்திப் பேச, யாருக்கும் உரிமையே இல்ல. ஆமா, நான் அனாதை தான்! என் பெயருக்கு பின்னால் இருக்க இனிஷியலுக்கு முகவரி தெரியாதவ தான். ஆனால், அதுதான் சாத்வினு ஜட்ஜ் பண்ணுனா, அது பிழை. நாங்க எல்லாம் சுயமா கஷ்டப்பட்டு பிழைச்சு முன்னுக்கு வர நினைக்கிற சாதாரண லோவர் கிளாஸ். பட் டன் கணக்கில தன்மானம் உண்டுங்க. இனி என் பிறப்பைப் பற்றி பேசாதீங்க சார்!"​

என்று அந்த இடம் விட்டு மீண்டும் அவள் நகர நினைக்க, அவளைத் தன்னோடு மேலும் இறுக்கிக் கொண்டவன்,​

“இஸ் இட்! நீ பேசாத பேசாதன்னு சொல்லும் போது பேசணும்னு தோணுது. தன்மானத்தை பற்றிப் பேசும் போது, உன் தன்மானத்தை சுக்கு நூறா உடைச்சு சிதறப் போட்டா என்னான்னு தோணுது!"​

மீண்டும் அவன் இதழ்கள் மிக அழுத்தமாக,​

“ராட்ச ராவணன்! இந்த ராட்சச ராவணன் என்ன பண்ணப் போறான்னு, இனி கண்டிப்பா புரிஞ்சிக்குவ..!"​

அவளை ஒரு முறை தன்னோடு இறுக்கி அணைத்து விடுவித்தவன்,​

அங்கிருந்து விரைந்து செல்ல, சாத்விகா சிலையாக சமைந்து போனாள். ‘அந்த உயிருள்ள அகலிகையை நோக்கி ஏன் வந்தான்? ஏன் திட்டினான்? ஏன் அணைத்தான்? ஏன் நெருங்கினான்?’ என்ற கேள்விக்கு அவளிடமும் பதில் இல்லை.​

அதே போல, ‘பெண்ணை விரும்பா வெறுப்பு மனநிலை கொண்டவன், பெண் என்பவள் சுயநலப் பேய்தான், மாயை தான் எனும் எண்ணம் கொண்டவன், ஏன் சாத்விகாவை நெருங்கினான்? அவளுள் ஒரு நொடியேனும் தன்னை மறந்து ஏன் மூழ்க நினைத்தான்? மயங்க நினைத்த தன் மனநிலையை நொந்து, ஏன் வார்த்தையால் அவளை வதைக்க நினைத்தான்? நாசியை தீண்டிய அவள் மனம், உயிருக்குள் செத்துப்போன அவன் நரம்புகளை ஏன் மீட்க நினைத்தது?’ என்ற கேள்விக்கெல்லாம் பதில் இல்லை. ஆனால் ஏதோ ஒன்று இதைத் தொடரச் சொல்ல, ஏதோ ஒன்று அவனை அவளிடம் இருந்து தள்ளி நில் என்று சொல்ல, இருவருக்குள்ளும் சொல்லாமல் கொள்ளாமல் அந்த நொடி ஒரு தீப்பொறி பற்றிக் கொண்டது.​

தூரத்தில் கையில் கிளாஸோடு இருந்த சர்வேஷ், சாத்விகா அங்கிருந்து அகழும் வரை அவளை விட்டுப் பார்வையை வேறு எங்கும் திருப்பவில்லை. முதல் முறை ஒரு பெண்ணின் நிமிர்வுக்கு, மனதுக்குள் சபாஷ் போட்டுக் கொண்டான். அவளை வார்த்தையில் சீண்டி விட்டாலும், அவள் நிமிர்வு பிடித்திருந்தது.​

முதலாளி என்பதற்காக வளைந்து குழைய மாட்டேன் என்ற நேர்மை, அவனுக்கு மிகப் பிடித்திருந்தது. நீண்ட வருடங்களுக்குப் பின் ஒரு பெண்ணை, அவள் குணங்களுக்காகவே ரசிக்கத் தொடங்கினான். இது அவன் இதயத்தில் விழுந்த முதல் மென்சாரல்.​

கைகளுக்குள் மின்னிய திரவத்தை வாயினுள் சரித்தவன்...​

“ராட்சச ராவணன்! ஹம்.. இன்ரஸ்டிங். ராவணன் சீதையை மட்டும் தான் சிறை எடுத்து, சீதைக்காக மட்டுமே வரணும்னு அவசியமா என்ன? மண்டோதரியையும் சிறை எடுக்கலாம். மண்டோதரிக்காகவும் வரலாமே. ராவணன் இஸ் வெயிட்டிங் ஃபார் யூ மை டியர் மண்டோதரி!"​

சொல் பேச்சு கேட்கா இதயத்துக்கு சொந்தமான அவன் இதழ்கள், தன்னை அறியாது அசைந்து இசைந்தது.​

 

santhinagaraj

Well-known member
சர்வேஷ் சாத்வியோட பிறப்பை அவளோட வறுமையை பற்றி பேசியது கொஞ்சம் கூட சரியில்லை 😡😡
 

admin

Administrator
Staff member
சர்வேஷ் சாத்வியோட பிறப்பை அவளோட வறுமையை பற்றி பேசியது கொஞ்சம் கூட சரியில்லை 😡😡
வட்டியும் முதலும் உண்டு அக்கா
 

shasri

Member
Interesting 😍 ராட்சச ராவணன் நல்லா இருக்கு 😍😍 first meet ay pathikuchu
 
Top