எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

அகம் தொலைத்தேன் அசுரனிடம்..

RJ novels

Moderator

அகம் - 1​

அந்த ரிஜிஸ்டர் ஆபீஸில் பணிபுரியும் ஆபிசர், “சீக்கிரமா கையெழுத்து போடு மா.. நேரம் ஆகுது.. அங்க பாரு இன்னும் நிறைய கல்யாணம் ரிஜிஸ்டர் பண்ண வேண்டியது இருக்கு” என்றார் அங்கே திருமண கோலத்தில் நின்றிருக்கும் இனியாவை பார்த்து.​

அவளோ மருண்ட விழிகளுடன்.. வியர்வை முத்துக்கள் முகம் எங்கும் பூக்க.. தன் நடுங்கும் கையால் அந்த நோட்டு புத்தகத்தின் மேலிருந்த பேனாவை எடுத்தவள்.​

அந்த பேனாவை அழுந்த பிடித்தபடி தன் கை நடுக்கத்தை சற்று கட்டுக்குள் கொண்டு வந்தவாறு அதில் கையொப்பமிட்டாள்..​

அவளை பின்தொடர்ந்து கவினும் புன்னகை முகமாக அந்த நோட்டுப் புத்தகத்தில் கையெழுத்திட்டவன் நிமிர்ந்து இனியாவை பார்த்து புன்னகைக்க.​

அவளோ படபடக்கும் இதயத்துடனும், பதட்டமான முகத்துடனும், கலக்கமான புன்னகையை அவனை நோக்கி சிந்தினாள்..​

அதில், கவின் தன் கண்களை மூடி திறந்து அவளை சமாதானம் செய்ய.. இனியாவின் கையிலும் கவினின் கையிலும் இருவரும் மாற்றிக்கொள்ள வேண்டி மாலைகளை கொடுத்தாள் அவள்..​

அவள் ‘ஆதிரை’.. தன் நண்பியின் திருமணத்தை முன்னிருந்து நடத்தி வைப்பவள்.​

ஆதிரை, “என்ன டி இப்படி திருதிருனு முழிச்சுக்கிட்டு இருக்க.. நீ பார்க்கிறதை பார்த்தால் சுத்தி இருக்கிறவங்க எல்லாம் நாங்க ஏதோ உன்னை கடத்துக்கிட்டு வந்து கட்டாய கல்யாணம் செஞ்சு வைக்கிறோம்னு நினைச்சுக்க போறாங்க..” என்றாள் புன்னகை முகமாக.​

தன் நண்பியின் கிண்டலில் கூட அவளுக்கு கிஞ்சித்தும் புன்னகை அரும்பவே இல்லை.. அதற்கு பதிலாக பதட்டம் தான் அதிகரித்தது..​

ஆதிரை சட்டென்று தன் கையில் இருந்த டிஷ்யூ பேப்பரினால் அவளின் முகத்தை துடைத்தபடி, “என்னடி இது.. இப்படி வியர்க்குது.. ஏன் இவ்வளவு நர்வஸ் ஆகுற.. ரிலாக்ஸா இரு..”.​

“இன்னைக்கு உனக்கு மேரேஜ்.. இந்த டே திரும்ப நீயே நினைச்சாலும் வராது.. இதெல்லாம் லைஃப்ல ஒன் டைம் மட்டும் நடக்கிற விஷயம்.. லைஃப் லாங் குட் மெமரிசா இருக்கும். சோ, என்ஜாய் பண்ணு..”.​

கவின், “ஆமா இனி.. அதான் ஆதிரையே சொல்றா இல்ல.. எதுக்காக நீ இவ்வளவு நர்வஸ் ஆகுற.. பாரு, நல்லபடியா மேரேஜ் முடிஞ்சிடுச்சு.. இன்னும் நீ எதுக்காக பயப்படுற என்று தான் எனக்கு புரிய மாட்டேங்குது”.​

இனியா பதை பதைக்கும் மனதோடு, “கவின் என் அண்ணாவை பத்தி உங்களுக்கு தெரியாது.. அவர் எப்போ வேணும்னாலும் இங்கே வருவார்..”.​

“அவருக்கு மட்டும் நம்ம கல்யாணம் பண்ணிக்கிட்ட விஷயம் தெரிஞ்சா என்ன பண்ணுவார் என்றே தெரியாது.. எனக்கு ரொம்ப பயமா இருக்கு” என்றாள் உதடுகள் துடிக்க.​

கவின், “நமக்கு ரிஜிஸ்டர் மேரேஜ் முடிஞ்சிடுச்சு.. இனிமே, யார் நினைச்சாலும் நம்மை பிரிக்க முடியாது. யூ டோன்ட் வொரி.. எல்லாத்தையும் நான் பார்த்துக்கிறேன்.. உங்க வீட்ல நான் எக்ஸ்பிளைன் பண்றேன்” என்றான் அவளின் கைகளில் சற்று அழுத்தத்தை கொடுத்தபடி.​

அதில், சற்றே இனியாவின் பதட்டம் குறைந்தது.​

ஆதிரை, “சரி, சரி.. ரெண்டு பேரும் முதலில் மாலையை மாத்துங்க.. மாப்பிள்ளை சார் தாலி கட்ட வேண்டாமா..” என்றாள் இனியாவை நோக்கி தன் ஒற்றை கண்ணை சிமட்டியபடி குறும்பாக.​

அதில், அழகாக வெட்க புன்னகையை சிந்திய இனியா தன் தலையை தாழ்த்திக் கொள்ள..​

கவின், “பரவாயில்லையே.. என் இனிக்கு வெட்கம் கூட பட தெரியுமா?” என்றபடி அவள் கழுத்தில் மாலை இட..​

இனியாவும் கவினின் கழுத்தில் மாலையிட்டாள். என்ன தான் மூன்று வருட காலங்கள் பழகியவனாக இருந்தாலும் கூட திருமணம் என்றதுமே பெண்மையின் நாணம் அவளை வெட்கி தலை குனிய செய்தது.​

பிறகு, அவளின் சங்கு கழுத்தில் ஆதிரை நீட்டிய மாங்கல்யத்தை அணிவித்தவன்.. அவளை தன்னில் சரி பாதியாக முழு மனதோடு அங்கிருந்தவர்களின் சாட்சியோடு ஏற்றுக் கொண்டான்.​

ஆதிரை, “அவ்வளவு தான்.. மேரேஜ் முடிஞ்சிடுச்சு.. இதுக்கு போய் இவ்வளவு டென்ஷன் ஆகுறியே.. பாத்தியா.. எல்லா ப்ராப்ளமும் சால்வ் ஆயிடுச்சு..” என்று கூறி புன்னகைத்தபடி அனைவரும் அந்த இடத்தை விட்டு வெளியேற.​

காற்றை கிழித்துக்கொண்டு வந்த அந்த கரு நிற ஆடி கார் இவர்களை இடிப்பது போல் இவர்களின் முன்னே வந்து சர்ரென்று சடன் பிரேக் போட்டு நின்றது.​

அவ்வளவு தான்.. இனியாவின் சர்வ நாடியும் அந்த காரை பார்த்த நொடியே அடங்கி விட்டது என்று தான் கூற வேண்டும்.​

மூச்செடுக்க மறந்தவளாக அப்படியே சிலையென சமைந்து நின்று விட்டாள் இனியா..​

அவளின் இதழ் மட்டும், “அண்ணா..!” என்று முணுமுணுத்தது.. அவளுக்கே கேட்காத குரலில்..​

ஆதிரை கோபமாக அந்த காரை நோக்கி விரைந்தவள், “ஸ்டுப்பிட்.. என்ன பெரிய கார்ல வந்தா பிளைட்ல வருவதாக நினைப்பா.. ஆளுங்க நடந்து வருவது தெரிய.. இப்படி கண்ணு மண்ணு தெரியாமல் கார் ஓட்டிட்டு வர.. இறங்கு முதல்ல..” என்று அந்த காரின் கண்ணாடியை தட்டியபடி கத்தினாள்.​

இனியா அவளின் தோள்பட்டையில் கையை வைத்து தன்னை நோக்கி திருப்பியவாறு, “ஆதி சும்மா இரு.. அண்ணா..” என்றாள் அந்த காரை காண்பித்தபடி.​

ஆதிரை அதிர்ச்சியாக திரும்பி பார்க்க..​

காரின் கதவை திறந்து கொண்டு சடாரென்று வெளியே வந்தான் அவன்..​

அவன் ‘ஆருத்ர வர்மன்’.. கருப்பு நிற சட்டையும், ஜீன்ஸ் பேண்டும், கருப்பு நிற கூலர்சும், ஒற்றை கையில் பிலாட்டினத்தில் காப்பும், மற்றொரு கையில் விலை உயர்ந்த கை கடிகாரத்தையும் சுமந்து இருந்தவன்.​

கோபத்தில் முகம் சிவந்த படி அழுத்தமாக கால்களை தரையில் பதித்து இனியாவை நோக்கி நடந்து வந்தவன். அவளின் முன்னே நின்றான்..​

இனியாவிற்கு கை, கால்கள் எல்லாம் வெடவெடக்க தொடங்கி விட்டது. அவனின் முகத்தை வைத்தே அவன் எந்த அளவிற்கு கோபமாக இருக்கிறான் என்பதை கணித்தவளிற்கு நா வறண்டு போய்விட்டது.​

ஆருத்ர வர்மன் கோபமாக தன் கூலர்ஸை கழட்டியவன்.. இனியாவை நெருப்பை கக்கும் விழிகளால் பொசுக்கிய படி, “ஹவ் டேர் யு.. இப்படி ஒரு காரியம் செய்ய உனக்கு எப்படி மனசு வந்துச்சு..”.​

அவனின் கோபத்திற்கு தகுந்தார் போல் வார்த்தைகளிலும் அனல் பறந்தது..​

ஆதிரை, “சார்.. சார்.. ப்ளீஸ்.. லெட் மீ எக்ஸ்பைன்”.​

ஆருத்ர வர்மன் அவளை திரும்பி ஒரு பார்வை பார்த்தவன், “யூ ஜஸ்ட் ஷெட் டப்.. நான் என் சிஸ்டர் கிட்ட பேசிகிட்டு இருக்கேன்.. இது எங்க குடும்ப விஷயம்.. இதில், எக்ஸ்ப்ளைன் பண்ண நீ யாரு?” என்றான் வெடுக்கென்று.​

அண்ணன் தங்கை எங்கள் இருவருக்கும் இடையே பேச நீ யார் என்று அவளை தள்ளி நிறுத்தி விட்டான்.​

சட்டென்று கவினின் சட்டையை பிடித்து தன்னை நோக்கி இழுத்தவன், “ஹவ் டேர் யூ.. என் சிஸ்டரை மேரேஜ் பண்ற அளவுக்கு உனக்கு தைரியம் வந்திடுச்சா..” என்றான் அவனை பொசுக்கி விடுவது போல் பார்த்தபடி.​

இனியா பதட்டமாக, “அய்யோ! அண்ணா அவர் மேல இருந்து கையை எடுங்க.. நான் தான் அவர்கிட்ட கல்யாணம் செஞ்சுக்கலாம்னு சொன்னேன்”.​

“அவருக்கு இந்த மாதிரி ரிஜிஸ்டர் மேரேஜ் பண்றதுல கொஞ்சம் கூட விருப்பம் இல்லை.. வீட்டில் பேசி திருமணம் செஞ்சுக்கலாம் என்று தான் சொன்னார்”.​

“நான் தான் வேண்டாம் என்று அவரை ரிஜிஸ்டர் மேரேஜ் செய்ய வற்புறுத்தி இங்கே அழைச்சிட்டு வந்தேன்” என்ற அவளின் வார்த்தையில் ஆருத்ர வர்மனின் கைகள் அவனிடமிருந்து தானாக நழுவியது.​

இனியாவை நம்பாத பார்வை பார்த்தவன், “நோ..” என்றான் அழுத்தமாக.​

“நீ பொய் சொல்ற.. இவனை காப்பாற்றுவதற்காக உன் அண்ணாகிட்டயே பொய் சொல்ற அளவுக்கு வந்துட்டியா..”.​

இனியா, “ஐயோ அண்ணா ப்ளீஸ்.. நான் சொல்றதை கொஞ்சம் நம்புங்க.. நான் தான் எல்லாத்தையும் பண்ணேன். தப்பு மொத்தமும் என்னோடது தான்..”.​

“எனக்கு அப்பா பார்த்திருக்க மாப்பிள்ளையை கட்டிக்க கொஞ்சம் கூட விருப்பம் இல்ல.. நானும், கவினும் மூணு வருஷமா காதலிக்கிறோம்”.​

“என்னால் அவரை மறந்துட்டு வேற யாருடனும் என் வாழ்க்கையை பகிர்ந்துக்க முடியாது. அதனால் தான் அவரை ரிஜிஸ்டர் மேரேஜ் பண்ணிக்கலாம்னு கேட்டேன்”.​

“இந்த விஷயத்தை வீட்ல சொன்னா கண்டிப்பா நீங்க யாருமே ஒத்துக்க மாட்டீங்க என்று எனக்கு தெரியும்.. எனக்கு வேற வழி இல்லாமல் தான் இப்படி எல்லாம் செஞ்சேன்”.​

ஆருத்ர வர்மன் அப்பொழுதும் அவளை நம்பாத பார்வை பார்த்தவன், “நெவர்! கண்டிப்பா இந்த மாதிரி எல்லாம் நீ யோசிக்கிற ஆளே கிடையாது.. ஐ நோ யு வெரி வெல்.. இதுக்கு பின்னாடி யாரோ இருக்காங்க” என்றான் அழுத்தமாக.​

தன் தங்கையை சிறு வயது முதல் பார்ப்பவனிற்கு தெரியாதா.. அவளின் குணத்தைப் பற்றி.. இப்படி ஒரு காரியத்தை செய்ய துணிபவளா அவள்..​

தங்கள் குடும்ப கௌரவத்திற்கு இழுக்கு வரும் செயலை ஒருக்காலும் தன் தங்கை செய்ய மாட்டாள் என்ற மலை அளவு நம்பிக்கை அவனுக்கு இருந்தது.​

அதிலும், இனியா மிகவும் பயந்த சுபாவம் கொண்டவள்.. அவளா தன் அண்ணன்களை மீறி இப்படி ஒரு காரியத்தை செய்ய துணிவாள் என்று எண்ணியவனுக்கு நிச்சயமாக இதற்கு பின்னால் வேறு யாரோ இருக்கின்றனர் என்று அவனின் உள் மனம் அடித்து கூறியது.​

ஆருத்ர வர்மன் கவினை உறுத்து விழித்தபடி, “இவன் தான.. இது எல்லாத்துக்கும் காரணம் இவன் தான.. இவனை காப்பாத்த தானே நீ என்கிட்ட இப்போ பொய் சொல்லிட்டு இருக்க” என்றான் கர்ஜனையாக.​

இனியா அவசரமாக, “அச்சோ அண்ணா.. இதுக்கும், இவருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.. நான் சொல்றதை நம்புங்க..” என்று கூறும் பொழுதே.​

ஆதிரை, “ஒரு நிமிஷம்..” என்றாள் தன் குரலை உயர்த்தியபடி.​

அதில், வர்மன் திரும்பி அவளை முறைத்து பார்க்க.​

ஆதிரை அவன் முறைப்பிற்கு எல்லாம் சற்றும் பயப்படாமல், “ஆமா, நீங்க சொல்றது 100% கரெக்ட்.. உங்க தங்கச்சியை பத்தி ரொம்ப நல்லாவே புரிஞ்சு வச்சிருக்கீங்க”.​

“இந்த கல்யாணத்துக்கு பின்னாடி நீங்க சொல்ற மாதிரி ஒருத்தர் இருக்கிறது உண்மை தான்.. உங்க தங்கச்சி ரிஜிஸ்டர் மேரேஜ் பண்ணிக்கனும்னு ஃபர்ஸ்ட் ஆஃப் ஆல் நினைக்கவே இல்ல..”.​

“அவளுக்கும், கவினுக்கும் ரிஜிஸ்டர் மேரேஜ் பண்ணி வச்சது நான் தான்.. நீங்க சொன்ன மாதிரி இந்த மேரேஜ்க்கு பின்னாடி இருக்க ஆள் நான் தான்..” என்றாள் தன் நெஞ்சை நிமர்த்தி கொண்டு தைரியமாக.​

வர்மன் அவளை கோபமாக முறைத்து பார்த்துக் கொண்டே, “ஹவ் டேர் யு.. செய்றதெல்லாம் செஞ்சிட்டு இவ்வளவு திமிரா என் முன்னாடியே தைரியமா நின்னு பேசிகிட்டு இருக்கியா..”.​

“எங்க வீட்டு பொண்ணுக்கு எங்களுக்கே தெரியாமல்​

கல்யாணம் செய்து வைக்கிற அளவுக்கு உனக்கு யாரு டி உரிமையை கொடுத்தது?” என்றான் தன் அடி குரலில் சீற்றமாக.​

 

RJ novels

Moderator

அகம் - 2​

பொதுவெளி என்றும் பாராமல் கண்ட மேனிக்கு ஆதிரையை திட்ட தொடங்கி விட்டான் வர்மன்..​

“சொல்லு டி ஸ்டுப்பிட்.. யாரை கேட்டு என் தங்கச்சிக்கு நீ கல்யாணம் செஞ்சு வச்ச.. நீ என்ன அவ்வளவு பெரிய ஆளா.. உனக்கு யார் அந்த உரிமையை கொடுத்தது..” என்றான் ஆத்திரத்தோடு.​

அன்று வழக்கத்தை விட அதிகமாக பதிவு திருமணம் செய்ய ஆட்கள் வந்திருந்தனர். அனைவரும் ஏதோ பட காட்சியை பார்ப்பது போல் ‘ஆ’வென்று வாயை பிளந்து கொண்டு இவர்களின் சண்டையை சுவாரசியமாக ரசித்துப் பார்த்தபடி நின்றனர்.​

ஆதிரைக்கு அனைவரின் முன்பும் வர்மன் இப்படி வரம்பு மீறி வார்த்தையை விடுவது பெரும் அவமானத்தையும், அவளின் ஈகோவையும் தூண்டி விட்டது.​

ஆதிரை, “லுக் மிஸ்டர்! பார்த்து பேசுங்க.. இந்த டி போட்டு பேசுற வேலை எல்லாம் என்கிட்ட வேணாம்.. நான் என்ன உங்க பொண்டாட்டியா? உங்க இஷ்டத்துக்கு வாடி போடினு பேசுறீங்க” என்று சீறினாள்.​

வர்மன் அவளின் முன்னே தன் ஒற்றை கையை நீட்டி பேசாதே என்பது போல் தடுத்தவன், “ஜஸ்ட் ஷெட் டப்! நான் கேட்ட கேள்விக்கு மட்டும் பதில் சொல்லு.. யாரை கேட்டு நீ என் தங்கச்சிக்கு கல்யாணம் செய்து வச்ச?” என்றான் மீண்டும்.​

ஆதிரை, “இங்க பாருங்க.. அவங்க ரெண்டு பேரும் ஒருத்தரை ஒருத்தர் த்ரீ இயர்ஸா லவ் பண்றாங்க.. தே ஆர் மேஜர்ஸ்.. அதனால் தான் கல்யாணம் செஞ்சு வச்சேன்”.​

வர்மன், “லவ் பண்றாங்கனா அவங்களுக்கு கல்யாணம் செஞ்சு வைக்க நாங்க இருக்கோம். நீ யாரு அவங்களுக்கு கல்யாணம் செய்து வைக்க?” என்றான் மீண்டும் அழுத்தமாக.​

ஆதிரை அவனின் அதட்டலுக்கும், கோபத்திற்கும் சற்றும் அஞ்சாதவள்.. அவனை நேர் பார்வை பார்த்தபடி, “அவளோட ஃப்ரெண்ட்!” என்றாள் அதே அழுத்தத்தோடு.​

வர்மன், “ப்ரெண்டுனா கூட சேர்ந்து சுத்துறதோட நிறுத்திக்கணும்.. நாங்க எவ்வளவு ரெஸ்பெக்ட்டான பேமிலி என்று உனக்கு தெரியுமா..”.​

“என் தங்கச்சிக்கு இப்படி ஒரு கல்யாணத்தை செய்து வச்சிருக்க.. இந்த விஷயம் வெளியே தெரிஞ்சா எங்க குடும்பத்துக்கு எவ்வளவு அவமானம் என்று உனக்கு தெரியுமா..” என்றான் ஆக்ரோஷமாக.​

ஆதிரை அவர்கள் பக்க நியாயத்தை பற்றியும் சிந்திக்காமல் இல்லை..​

ஆதிரை, “நீங்க சொல்றது எனக்கு புரியுது சார்.. தப்பு தான்.. ஆனா, எங்களுக்கு வேற வழி தெரியல.. அவ கவினை லவ் பண்ணுறா.. உங்க வீட்ல அவளுக்கு வேற ஒரு மாப்பிள்ளையை பார்த்து இருக்கீங்க..”.​

“உங்க கிட்ட சொல்லவும் பயப்படுறா.. எங்களுக்கு வேற ஆப்ஷன் இல்லாமல் தான்..” என்று அவள் கூறிக் கொண்டிருக்கும் பொழுதே..​

தன் கையில் இருந்த கூலர்சை கோபமாக அவள் முன்னே விசிறி அடித்தான்.. அதுவோ தரையில் பட்டு சிதறியது.. அதில், ஆதிரை சட்டென்று தன் பேச்சை நிறுத்திக் கொள்ள..​

வர்மன், “யூ டேமிட்.. செய்யுறதையும் செஞ்சுட்டு எக்ஸ்ப்ளைன் வேற பண்ணிக்கிட்டு இருக்கியா..” என்றவன்.​

இனியாவை பார்த்து, “இவ தான் அறிவு கெட்ட தனமா சொன்னானா.. உனக்கு எங்க போச்சு புத்தி.. நம்ம குடும்ப கௌரவத்தை இப்படி காத்துல பறக்க விட்டு வந்து நிக்குற..”.​

“யார் என்ன சொன்னாலும் அதை அப்படியே கேட்டுப்பியா.. உனக்குனு ஒரு சுய புத்தி இல்லையா..” என்று கோபமாக சாடினான்.​

இனியாவோ தலை குனிந்தபடி நின்று இருக்க.. கண்களில் இருந்து கண்ணீர் சரசரவென வெளியேறியது.​

ஆதிரை, “இப்போ எதுக்காக அவளை திட்டுறீங்க.. பெருசா கௌரவம் கௌரவம்னு ரொம்ப தான் பேசுறீங்க.. இப்போ ஒரு ரிஜிஸ்டர் மேரேஜ் பண்ணதால் அப்படி என்ன உங்க குடும்ப கவுரவத்துக்கு கேடு வந்திடுச்சு.. அவ‌ பிடிச்சவனை தானே கல்யாணம் செய்திருக்கா..”.​

வர்மன், “நீ வாயை மூடு.. குடும்பத்தில் இருக்கிற பொண்ணு அவங்க குடும்பத்துல இருக்கவங்களுக்கே தெரியாமல் கல்யாணம் செஞ்சுக்கிட்டானா அது அவங்களுக்கெல்லாம் எவ்வளவு அசிங்கம்..”.​

“அதுவும் இவளுக்கு நான் ஒரு அண்ணன் இருக்கும் பொழுதே இவ இப்படி யாரோ ஒருத்தனை திருட்டுத்தனமா கல்யாணம் செஞ்சு இருக்கானா அது எனக்கு எவ்வளவு அசிங்கமா இருக்கும்னு தெரியுமா..”.​

அவனின் தங்கை காதல் திருமணம் செய்தது ஒரு பக்கம் இருந்தாலும்.. ஒரு அண்ணனாக தான் இருக்கும் பொழுது இப்படி அனைவரையும் முட்டாள் ஆக்கிவிட்டு அவள் செய்தது வெகுவாக அவன் ஈகோவை சீண்டியது.​

ஆதிரை, “இதில் அசிங்கப்பட என்ன இருக்கு.. உங்க தங்கச்சி அவளுக்கு பிடிச்சவனை தானே கல்யாணம் பண்ணி இருக்கா.. ஆக்சுவலி, இதுக்கு நீங்க சந்தோஷம் தான் படணும்” என்றாள் ஏளனமான குரலில்.​

வர்மன் அவளை உருத்து விழித்தவன், “சோ, திருட்டு கல்யாணம் பண்ணால் அவங்க குடும்பத்துக்கு எந்த அசிங்கமும், அவமானமும், கௌரவ குறைச்சலும் இல்லைனு நீ சொல்றியா?” என்றான் தன் பற்களை கடித்துக்கொண்டு.​

ஆதிரை, “கல்யாணம் பண்றதுக்கு பொண்ணுக்கும், மாப்பிள்ளைக்கும் முழு மனசோட விருப்பம் இருந்தாலே போதும்.. அவங்க குடும்பத்தில் இருக்கிறவங்க விருப்பத்துக்காக பிடிக்காதவனை கல்யாணம் பண்றதை விட..”.​

“இப்படி பிடிச்சவனை கல்யாணம் பண்ணிக்கலாம். பெருசா மரியாதை, கௌரவம்னு பேசிகிட்டு இருக்கீங்க.. உங்க தங்கச்சியுடைய மனசையும் கொஞ்சம் புரிஞ்சுக்க ட்ரை பண்ணுங்க..”.​

“அவளுக்கு பிடிச்ச வாழ்க்கையை அமைத்து தர முடியலைனா அப்புறம் நீங்க எல்லாம் என்ன ஒரு அண்ணன்..” என்றாள் நெஞ்சை நிமிர்த்தி கொண்டு.​

வர்மன், “சோ, நமக்கு ஒருத்தவங்களை பிடிச்சிருக்குனா நம்ம குடும்பத்தை பத்தி யோசிக்காமல் அவங்களை கல்யாணம் செஞ்சுக்கலாம்..”.​

“இதனால், குடும்பத்தில் இருக்கிறவங்களுக்கு வரும் அவமானம் எல்லாம் பெருசு இல்ல.. நம்முடைய எண்ணம் நிறைவேறினாள் போதும்.. அப்படித்தானே..”.​

ஆதிரை, “என்ன.. திரும்பத் திரும்ப எத்தனை தடவை தான் கேட்பீங்க.. ஆமா, அப்படித்தான்.. நமக்கு பிடிச்சிருந்தா கல்யாணம் செஞ்சுக்கலாம்.. ஒன்னும் தப்பில்லை..” என்றாள் சிடு சிடுப்பாக.​

அங்கே பதிவு திருமணம் செய்வதற்காக ஒரு குடும்பம் தாலியுடன் சென்று கொண்டிருக்க..​

வர்மன் கோபமாக தன் வேக நடையுடன் அவர்களை நோக்கி சென்றவன். அவரின் கையில் இருந்த தாலியை பட்டென்று பறித்துக் கொண்டு ஆதிரையை நோக்கி வந்தான்.​

அவனின் நடவடிக்கைகள் ஒன்றும் புரியாமல் அனைவருமே இவன் என்ன செய்கிறான் என்பது போல் அவனை பார்த்துக் கொண்டு நின்று இருக்க..​

யாருமே சற்றும் எதிர்பார்க்காமல் சட்டென்று ஆதிரையின் கழுத்தில் அந்த மாங்கல்யத்தை அணிவித்தவன்.. மூன்று முடிச்சிட்டு அவளை தன் மனைவியாக்கிக் கொண்டான்.​

கண நேரத்தில் நடந்த செயலால் அங்கே நின்றிருந்த யாருக்குமே ஒன்றும் புரியவில்லை. இவ்வளவு நேரம் சண்டை இட்டுக் கொண்டிருந்த ஆதிரைக்கு வாயடைத்து போய்விட்டது வர்மனின் செயலில்..​

இனியா அதிர்ந்து போய் தன் கண்கள் வெளியே விழுந்து விடும் அளவிற்கு பெரிதாக விரித்துப் பார்த்துக் கொண்டு நின்று இருந்தாள்.​

கவின் பதட்டமான குரலில், “சார்.. சார்.. என்ன பண்றீங்க நீங்க..”.​

ஆதிரைக்கு வர்மனின் அதிரடியில் லேசாக கண்கள் கலங்கிவிட்டதே தவிர, அப்படியே திடமாக அவனை முறைத்துக் கொண்டு தான் நின்று இருந்தாள்.​

கிஞ்சித்தும் அவளின் கண்ணில் பயம் தெரியவில்லை.. தங்கள் குடும்ப கவுரவத்தை பற்றி கவலைப்படாதவளின் கழுத்தில் மாங்கல்யத்தை அணிவித்து அவள் குடும்பத்தாரிடம் இதை எப்படி அவள் கூறுவாள்..​

இப்படி திடீரென்று யாரோ ஒருவனை திருமணம் செய்து கொண்டு அவர்கள் முன் சென்று நின்றாள். அவர்களின் குடும்ப கவுரவம் என்ன ஆகும்.. அவர்கள் அனைவரின் முன்பும் எப்படி தலைகுனிந்து நிற்பார்கள்.​

அனைத்திற்கும் மேலாக அவர்கள் குடும்பத்தில் இருப்பவர்களின் மனம் எவ்வளவு வேதனைப்படும் இத்தகைய செயலால் என்பதை ஆதிரைக்கு உணர்த்த எண்ணியவன்.​

சற்றும் வேறு எதை பற்றியும் சிந்திக்காமல் இப்படி ஒரு காரியத்தை செய்து விட்டான். ஆதிரையின் கழுத்தில் மாங்கல்யத்தை அணிவித்த பிறகு கூட அவன் முகத்தில் எந்த ஒரு குற்ற உணர்ச்சியோ.. தவறு செய்து விட்டோமோ என்ற எண்ணமே தென்படவில்லை.​

திருமணம் என்பது எப்பேர்பட்ட விஷயம்.. இரு மனங்கள் விரும்பி இருவரின் விழிகளும் காதலோடு ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ள.. இருவரின் இதழ்களும் பூரிப்பிலும், மகிழ்ச்சியிலும் புன்னகையை பூசிக்கொள்ள..​

ஒருவர் மனதோடு மற்றொருவர் உறவாடியவாறு தன்னவனால் அணிவிக்கும் மாங்கல்யத்தை பெற வேண்டும் என்று தான் அனைத்து பெண்களுமே எண்ணுவார்கள்.​

ஆனால், ஆதிரைக்கு அப்படி எந்த ஒரு சந்தர்ப்பத்தையும் அளிக்காமல் இப்படி பட்டென்று வர்மன் தாலி அணிவித்து விட்டான்.​

மனதிற்குள் வர்மனின் மேல் கோபத்தீ கொழுந்து விட்டு எரிந்தது. அதை தன் கண்களில் தேக்கியவாறு அவனை முறைத்துக் கொண்டு நின்று இருந்தாள் ஆதிரை..​

வர்மன் அவளுக்கு சற்றும் சலிக்காத பார்வையை அவளை நோக்கி வீசியவன். அவள் முகத்தில் அழுகையோ, ஏமாற்றமோ ஏதோ ஒன்றை எதிர்பார்த்து தோற்றுப் போனான்.​

“போ.. இப்போ போய் உங்க வீட்ல இருக்கவங்க கிட்ட சொல்லு.. எனக்கு உன்னை பிடிச்சிருக்கு அதனால் நான் உன்னை கல்யாணம் பண்ணிக்கிட்டேன்.. போய் சொல்லு..” என்றான் அழுத்தமாக.​

ஆதிரை எதுவும் பேசாமல் அவனை முறைத்து பார்த்துக் கொண்டே நின்று இருக்க..​

வர்மன், “இப்போ தெரியுதா.. குடும்ப கவுரவம்னா என்னனு.. இப்போ எந்த முகத்தை வச்சுக்கிட்டு உங்க வீட்ல நீ போய் சொல்லுவ.. இதை நீ சொன்னால் உங்க வீட்ல இருக்கவங்களால் தாங்கிக்க முடியுமா.. அவங்களுக்கு எவ்வளவு அசிங்கமா இருக்கும்..”.​

“அவங்களுடைய மரியாதையை எல்லாம் காத்துல பறக்க விட்டுட்டு நீ எப்படி அவங்க முன்னாடி போய் நிப்ப.. நாங்க எவ்வளவு கஷ்டப்படுகிறோம் என்று இனிமே தான் உனக்கு புரியும்” என்றான் அழுத்தம் திருத்தமாக.​

ஆதிரை கோபத்தில் முகம் சிவந்தவளாக, “யோவ்.. ஸ்டுப்பிட்.. எனக்கு பேரன்ட்ஸ் யாருமே கிடையாது. நான் ஒரு அனாதை..” என்றாள் அழுத்தமாக.​

அவளின் வார்த்தையில் வர்மனுக்கு தோற்றுப் போன உணர்வு.. அதை அவனால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. தன் வாழ்க்கையில் எதிலுமே தோற்கக் கூடாது என்று எண்ணும் வர்மன்..​

முதல் முறை ஆதிரையின் முன்பு தோற்றுப் போய் நிற்பதை போல் உணர்ந்தான். அதை அவனால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை‌..​

இனியா அப்பொழுது தான் தன் நிலை பெற்றவள், “ஐயோ அண்ணா! என்ன காரியம் பண்ணிட்டீங்க.. பாவம் ஆது.. அவளுக்கு பேரன்ட்ஸ் யாருமே இல்ல.. இப்படி பண்ணிட்டீங்களே.. அவ எனக்காக தான் இது எல்லாமே பண்ணா..”.​

வர்மன் ஆதிரையின் முன்பு தோற்றுப் போக விரும்பாதவன், “சோ வாட்.. பேரண்ட்ஸ் இல்லை என்றால் என்ன.. மனசுக்கு பிடிச்சிருந்தா கல்யாணம் செஞ்சுக்கலாமே ஒன்னும் தப்பு இல்லையே..”.​

“இப்போ நீயும் உன் மனசுக்கு பிடிச்சவனை தானே கல்யாணம் செஞ்சு இருக்க.. அந்த மாதிரி எனக்கும் இவளை பிடிச்சிருக்கு.. அதனால் தான் நான் இவளை கல்யாணம் செஞ்சிருக்கேன்”.​

“என் தங்கச்சிக்கு எங்களுக்கு தெரியாமல் கல்யாணம் செஞ்சு வச்ச இல்ல.. அதுக்கு இனி ஒவ்வொரு நாளும் நீ அனுபவிப்ப டி பொண்டாட்டி..” என்றான் அடி குரலில் சீற்றமாக.​

“டி போட்டு இனிமே நான் உன்னை கூப்பிடலாம் என்று தான் நினைக்கிறேன்.. உனக்கு தான் டி போட்டு கூப்பிட்டா பிடிக்காதே..”.​

“நான் என்ன​

உன் பொண்டாட்டியா என்று கேட்டீங்களே மேடம்.. இப்போ நீங்க என் பொண்டாட்டி தான்.. போகலாமா டி பொண்டாட்டி!” என்றான் உறுமலாக.​

 

RJ novels

Moderator

அகம் - 3​

ஆருத்ர வர்மனுக்கு கண்மண் தெரியாத கோபம்.. என்ன செய்கிறோம் என்று நிலை இல்லை.. எத்தகைய கௌரவ மிக்க குடும்பம் அவர்களது..​

அப்படிப்பட்ட கௌரவமிக்க குடும்பத்தை சேர்ந்த ஒரு பெண்ணிற்கு இப்படி எவளோ ஒருத்தி தங்களுக்கு கூட தெரிவிக்காமல் ஏதோ பெற்றோர் இல்லாதவர்களுக்கு நடத்துவது போல் ஒரு திருமணத்தை தங்களுக்கே தெரியாமல் நடத்தி வைத்திருக்கிறாளே என்ற ஆதங்கமும், சொல்லல்லா கோபமும் அவள் மேல் பெருக்கெடுத்தது.​

அதன் வெளிப்பாடே இத்தகைய காரியத்தை செய்யத் துணிந்து விட்டான்..​

ஆதிரை மிக மிக துணிச்சலானவள்.. எதற்குமே அவ்வளவு எளிதில் கலங்கி போய் விடமாட்டாள்.. உடைந்து போய் விடவும் மாட்டாள்..​

இரும்பு மனம் படைத்தவள்.. எத்தகைய கடினமான சூழ்நிலையாக இருந்தாலும் யாரின் துணையையும் எதிர்பாராமல் தானே போராடி அதிலிருந்து வெளிவருபவள்.​

யாரேனும் இது உன்னால் முடியாது, இதெல்லாம் உனக்கு சரி வராது என்று கூறினாள்.. அதை செய்து காட்டிவிட்டு அவர்களின் முன் சென்று நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு நிற்பவள்.​

அவளுக்கு தன் தாய், தந்தை யார் என்று தெரியாது. அவளுக்கு விவரம் தெரிந்த வயது முதலே ஒரு அனாதை ஆசிரமத்தில் தான் வளர்ந்து வந்தாள்.​

அங்கே, இவளை போன்றே நிறைய பெற்றோர்களால் நிராகரிக்கப்பட்ட குழந்தைகளும்.. பெற்ற பிள்ளைகளால் கைவிடப்பட்ட முதியவர்களும் வசித்து வருகின்றனர்.​

அவர்களின் ஆசிரமத்தை பொறுத்தவரை பள்ளி படிப்பு மொத்தத்தையும் அங்கிருந்தே படித்துக் கொள்ளலாம். ஆனால், கல்லூரிக்கு என்றால் அவர்கள் வெளியே சென்று தான் படித்தாக வேண்டும்.​

அது மட்டுமல்லாமல், 18 வயதை நிரம்பியவுடன் அவர்கள் 18 வயது நிரம்பியவர்களை ஆசிரமத்தை விட்டு செல்லும்படி கூறி விடுவார்கள்..​

அப்படித்தான் தன் பதினெட்டாம் வயதில் தான் வளர்ந்த ஆசிரமத்தை விட்டு வெளியேறினாள் ஆதிரை..​

அந்த ஆசிரமத்தை நிர்வாகம் செய்பவர்களே ஆதிரையை ஒரு ஒர்க்கிங் உமன்ஸ் ஹாஸ்டலில் தங்க ஏற்பாடும் செய்து கொடுத்தனர்.​

அன்று முதல்.. ஒரு புறம், பார்ட் டைம் ஜாபுக்கு சென்று கொண்டும்.. மற்றொருபுறம், கல்லூரிக்கு சென்று கொண்டும்.. தன் படிப்பை தொடர்ந்து கொண்டிருக்கிறாள் ஆதிரை..​

ஆதிரைக்கு திருமணத்தைப் பற்றி பெரிய கனவெல்லாம் கிடையாது. அவளை பொருத்தம் மட்டும், அவளுக்கு திருமணம் நடப்பதே பெரிய அபூர்வம் தான் என்று எண்ணுபவள்.​

மங்கள வாத்தியங்கள் இசை முழங்க.. அலங்கரிக்கப்பட்ட மண்டபத்தில் ஓம குண்டத்தை வளர்த்து ஐயர் மந்திரங்களை உச்சரிக்க..​

தன் மனதிற்கு பிடித்தவரின் கையால் மாங்கல்யத்தை வாங்கிக் கொள்ள வேண்டும் என்ற ஆசை எல்லாம் அவளுக்கு எப்பொழுதுமே இருந்தது கிடையாது.​

ஏனெனில், இதையெல்லாம் எடுத்துச் செய்ய தான் அவளுக்கு யாரும் ஆள் இல்லையே.. தன்னந்தனியாக வளர்ந்தவள்.. இறுதி வரையிலுமே தன் வாழ்க்கையை இப்படியே தனிமையில் கழிக்கவும் மனதளவில் தயாராக தான் இருந்தாள்.​

தனக்கென்று மாப்பிள்ளை பார்க்கவோ, திருமணம் செய்து வைக்கவோ யாரும் இல்லையே என்ற எண்ணம் அவளுக்குள் எப்பொழுதுமே இருந்து கொண்டு தான் இருக்கும்.​

ஆதிரைக்கு பெரிய குடும்பமாக அனைத்து உறவுகளுடனும் வாழ வேண்டும் என்ற ஏக்கம் அவளின் மனதில் சிறு வயது முதலே இருந்து கொண்டிருக்கிறது.​

இருந்தாலும், ஏதோ ஒரு நம்பிக்கை.. திருமணம் என்பது அனைத்து மனிதர்களின் வாழ்க்கையிலுமே நிகழும் ஒரு நிகழ்வு தானே.. அதை பெரிதாக தான் செய்ய வேண்டும் என்ற அவசியம் இல்லையே..​

தன் மனதிற்கு பிடித்தபடி ஒருவனை என்று சந்திக்கிறோமோ.. அவனுடன் பெரிதாக இல்லாவிட்டாலும் இருவரின் மனமும் விரும்பி நல்ல முறையில் திருமணம் செய்து கொண்டாலே போதும்..​

அதன் பிறகு தனக்கும் நிறைய உறவுகள் கிடைப்பார்கள் என்ற கனவு அவளுக்கு எப்பொழுதுமே இருந்து கொண்டு தான் இருந்தது.​

ஆனால், அது அனைத்தையுமே பொய்ப்பிக்கும்படி செய்து விட்டான் ஆருத்ர வர்மன்..​

இருவரின் கண்களிலுமே கிஞ்சித்தும் காதல் இல்லை.. அன்பு இல்லை.. மோகம் இல்லை..​

ஒருவரை ஒருவர் விட்டால் கண்களாலேயே பொசுக்கி விடுவோம் என்பது போல் தான் அனல் வீசும் பார்வையை வீசிக் கொண்டிருந்தனர்.​

இனியா பரிதவிப்பாக, "அண்ணா.. ஏன்ண்ணா இப்படி பண்ணீங்க? பாவம் ஆதிரை..".​

வர்மன், "ஷ்ஷ்.. சும்மா பேசினதையே பேசிக்கிட்டு இருக்காத.. வா வீட்டுக்கு போகலாம்..".​

இனியா தன் கைகளை பிசைந்தபடி தயங்கிக் கொண்டு நிற்க..​

வர்மன், "என்ன அப்படியே நிக்கிற?" என்றான் கர்ஜனையாக.​

இனியா, "அண்ணா.. வீட்ல எல்லார்கிட்டயும் என்ன சொல்றது?" என்றாள் மெதுவான குரலில்.​

வர்மன், "இதையெல்லாம் இப்படி ஒரு காரியத்தை செய்வதற்கு முன்னாடி நீ யோசித்து இருக்கணும். இப்போ நல்ல பிள்ளை மாதிரி பேசுறியா.. வந்து வண்டியில் ஏறு.." என்றவன்.​

கவினை பார்த்து, "உன்னையும் தான்!" என்றான் அழுத்தமாக.​

ஆனால், ஆதிரையை மட்டும் அவன் கண்டு கொள்ளவே இல்லை.. சற்று நேரத்திற்கு முன்பு இவன் தான் ஆதிரைக்கு தாலியை கட்டினானா என்று சந்தேகம் எழும் அளவிற்கு அவன் பாட்டிற்கு கிளம்ப எத்தனித்து விட்டான் ஆருத்ர வர்மன்..​

தன் வேக நடையுடன் சென்று கார் கதவின் மேல் கையை வைக்க சென்ற நொடி..​

ஆதிரை, "ஹலோ மிஸ்டர்.. ஒரு நிமிஷம்.." என்றாள் அதிகாரமாக.​

அவளின் குரலில் அவளை திரும்பி முறைத்துப் பார்த்தவன், "என்ன.." என்றான் சிடுசிடுப்பாக.​

ஆதிரை தன் கைகளை கட்டியபடி இனியாவை பார்த்தவள், "ஹேய் இனியா.. என் புருஷனுடைய பெயர் என்ன?" என்று கேட்ட தோரணையில் ஆருத்ர வர்மனே ஆடிப் போய்விட்டான் என்று தான் கூற வேண்டும்.​

அவன் ஒன்றும் இதை உண்மை திருமணம் என்று நினைத்து செய்யவில்லையே.. அவள் செய்த தவறை அவளுக்கு உணர்த்த வேண்டும் என்று ஏதோ ஒரு உந்துதல்..​

அவனை அப்படிப்பட்ட ஒரு காரியத்தை செய்ய வைத்து விட்டது. ஆனாலும், அவன் செய்ததை மறந்துவிடு என்றும் கூற முடியாது அல்லவா?​

இனியாவோ ஆதிரையின் கேள்வியில் தடுமாற்றத்தோடு, "ஆ.. ஆருத்ர வர்மன்.." என்றாள் திணறியபடி.​

ஆதிரை, "நாட் பேட்.." என்றபடி வர்மனை நேர் பார்வை பார்த்தவள், "என்ன மிஸ்டர். ஆருத்ர வர்மன்.. தாலியை கட்டிட்டு நீங்க பாட்டுக்கு போனால் எப்படி.. பொண்டாட்டியை கூடவே இருந்து கூப்பிட்டு போக வேண்டாமா?" என்றாள் திடமாக.​

அவள் முகத்தில் கொஞ்சமும் இப்படி அவன் செய்ததற்கான வருத்தம் தென்படவே இல்லை.. உண்மையை சொல்லப்போனால், ஆதிரையுமே அவன் சட்டென்று தாலியை அணிவித்ததும் ஒரு நொடி திகைத்து தான் போய்விட்டாள்.​

அவளின் கண்கள் கூட லேசாக கலங்கிவிட்டது.. ஆனாலும், அதை வர்மனின் முன்பு காட்டிக் கொள்ள விரும்பாதவள்.. தான் மிகவும் திடமாக இருப்பது போல் காட்டிக் கொண்டாள்.​

அதற்காக அவளுக்கு வருத்தம் இல்லை என்றெல்லாம் கூற முடியாது. யாருக்கு தான் வருத்தம் இருக்காது.. இப்படி சட்டென்று யாரோ ஒருவனின் கையால் தாலியை அணிவித்தாள்..​

ஆருத்ர வர்மன் தன் பற்களை கடித்துக்கொண்டு, "இங்க பாரு, நீ செஞ்ச தப்பு உனக்கு புரியணும் என்பதற்காக தான் நான் உன்கிட்ட இப்படி எல்லாம் நடந்துக்கிட்டேன். அதை கழட்டி போட்டுட்டு போய் வேற வேலை இருந்தால் பாரு..".​

அவனின் வார்த்தையில் அவனை அதிர்ந்து பார்த்த இனியா, "அண்ணா.. என்ன பேசுறீங்க நீங்க?" என்றாள் அதிர்ச்சியாக.​

ஆனால், அவளுக்கு இருக்கும் அதிர்ச்சி கூட ஆதிரையின் முகத்தில் தென்படவில்லை.. மீண்டும், மீண்டும் ஆதிரையின் முகத்தில் எதுவோ ஒன்றை எதிர்பார்த்து தோற்றுக் கொண்டே இருக்கிறான் வர்மன்..​

அது அவனுக்கு பெரும் கோபத்தை கொடுக்கிறது.. பெரிதாக வேறு என்ன.. அழுகையோ அல்லது வருத்தமோ தான் அது..​

தங்களை வருத்தப்பட வைத்தவள் அவளும் வருந்த வேண்டும் என்ற எண்ணம் தான் ஆருத்ர வர்மனிடம்.. அதை எதிர்பார்த்தே அவளிடம் அதிகப்படியாக வார்த்தைகளை விடுகிறான்.​

ஆனால், எதற்குமே கலங்காத ஆதிரை அவனின் முன்பு நிமிர்ந்து நிற்பது அவனுக்கு ஏமாற்ற உணர்வை தான் அளிக்கிறது.​

அதனால் தான் மீண்டும், மீண்டும் அவளை சீண்டி கொண்டே இருக்கிறான். ஆதிரையோ அவனுக்கு சற்றும் சலைக்காமல் பதிலடி கொடுத்துக் கொண்டே இருக்கிறாள்..​

ஆதிரை நக்கல் சிரிப்போடு, "கழட்டி போட்டுட்டு போகணுமா.. என்ன மிஸ்டர். ஆருத்ர வர்மன் விளையாடுறீங்களா.. என்னை பார்த்தால் உங்களுக்கு எப்படி தெரியுது.. உங்க தங்கச்சிக்கு நான் கல்யாணம் பண்ணி வச்சேன்..".​

"பதிலுக்கு என்னை நீங்க கல்யாணம் பண்ணிக்கிட்டீங்க.. நீங்க பிடிச்சு பண்ணாலும், பிடிக்காமல் பண்ணாலும் எனக்கு தாலி கட்டியது கட்டியது தான்.. நான் தான் உங்க பொண்டாட்டி.. நீங்க தான் என் புருஷன்.." என்றாள் பற்களை கடித்துக்கொண்டு.​

ஆருத்ரவர்மன் தன் கை விரல்களை இறுக்கமாக மூடியபடி தன் கோபத்தை கட்டுக்குள் கொண்டு வர முயற்சித்தவாறு தன் கண்களை மூடி திறந்தவன்.​

"இப்போ என்ன பண்ணனும்னு சொல்ற.." என்றான் எகிரிக்கொண்டு.​

ஆதிரை, "கவின், இனியா ரெண்டு பேரும் என்ன அப்படியே நின்னுட்டு இருக்கீங்க.. அதான் உங்க அண்ணனே காரில் ஏற சொல்லிட்டாரே.. ஏற வேண்டியது தானே.." என்றவள்.​

சற்றும் ஆருத்ர வர்மனை கண்டு கொள்ளாமல் நேராக சென்று முன்னிருக்கையில் அமர்ந்தாள்.​

ஆருத்ர வர்மன் அவளை அதிர வைக்க எண்ணி.. அவளின் செய்கைகளில் இவன் தான் திகைத்துப் போய் நின்று இருக்கிறான்.​

ஆருத்ர வர்மனுக்கு இப்பொழுது தான் தான் செய்த காரியத்தின் வீரியம் புரிந்தது. தன் தங்கையை தவறு செய்ததற்காக கண்டித்தவன்.​

இப்பொழுது, தானும் அதே தவறை தான் செய்துவிட்டு நிற்கிறோம் என்ற நிதர்சனம் உரைத்தது.​

இப்பொழுது, எந்த முகத்தை வைத்துக்கொண்டு தன் வீட்டினரிடம் இதைப் பற்றி கூறுவது என்று எண்ணியவனிற்கு முதல் முறை வாழ்க்கையில் பெரிதாக தோற்றுப்போன உணர்வு..​

அந்த கோபம் மொத்தமும் ஆதிரையின் மேல் தான் திரும்பியது. ஆனால், ஆதிரையோ அவனுக்கு நேர் எதிர் மாறாக மிகவும் கூலாக காரில் பாடலை சத்தமாக ஒளிர விட்டு கேட்டபடி அமர்ந்திருந்தாள்.​

அவளின் முகத்தில் இப்பொழுதும் சற்றும் வருத்தம் தென்படவில்லை. அது வர்மனின் பிபியை மேலும் எகிற செய்தது..​

முதல் முறை தன் வீட்டினரின் முன்பு தடுமாற்றத்தோடு நின்று இருந்தான் ஆருத்ர வர்மன்..​

வர்மனின் பாட்டி அகிலாண்டேஸ்வரி வருத்தமான குரலில், "உன்கிட்ட இருந்து இதை நான் கொஞ்சம் கூட எதிர்பார்க்கல வர்மா.. நீ எங்களை ரொம்பவே ஏமாத்திட்ட..”.​

அவரின் வார்த்தையில் வர்மனுக்கு பெரும் வருத்தமாகி போனது. திரும்பி தன் அருகில் ஜம்பமாக நின்று கொண்டு அந்த வீட்டை சுற்றிப் பார்த்துக் கொண்டிருந்த ஆதிரையை தான் முறைத்தான்.​

அவனின் பார்வையை உணர்ந்த ஆதிரை அவனைத் திரும்பி பார்த்து​

தன் ஒற்றை கண்ணை சிமிட்டியபடி நமட்டு சிரிப்பு சிரித்தாள்.​

மீண்டும் அவனின் கோப விழிகளும், இவளின் குறும்பு விழிகளும் மோதிக்கொண்டன..​

 

RJ novels

Moderator

அகம் - 4​

சற்று நேரத்திற்கு முன்பு,​

அந்த கார் அவ்வளவு வேகமாக பயணப்பட்டுக் கொண்டிருந்தது. ஆருத்ர வர்மன் தன் மொத்த கோபத்தையும் அந்த காரின் வேகத்தில் காட்டிக் கொண்டிருந்தான்.​

அவனின் கையில் அவனின் கோபத்திற்கு ஏற்ப அந்த காரும் சீறிப் பாய்ந்து கொண்டு இருந்தது. கவினும், இனியாவும் பதைபதைக்கும் இதயத்தோடு பின் சீட்டில் அமர்ந்திருந்தனர்.​

ஆருத்ர வர்மனின் வேகத்தில் அவர்கள் இருவரும் மிரண்டு போய் விட்டனர் என்று தான் கூற வேண்டும்.​

இனியாவோ மெதுவாக காரை செலுத்தும் படி தன் அண்ணனிடம் கூற எண்ணும் வார்த்தைகள் அனைத்தும் அவனிடம் கூற முடியாமல் பயத்தில் அவளின் தொண்டை குழி வரை வந்ததே தவிர.. அதற்கு மேல் வெளிவராமல் அடைத்துக் கொண்டது.​

கவினிற்குமே வர்மனின் வேதத்தில் அச்சம் இருந்தாலும் இனியாவின் கையை பற்றிய படி அவளை சமாதானப்படுத்திக் கொண்டு அமர்ந்திருந்தான்.​

ஆனால், இவர்களுக்கு இருக்கும் பயத்தில் துளி கூட ஆதிரையின் முகத்தில் தென்படவில்லை. அவளோ சாவகாசமாக சீட்டில் சாய்ந்து கொண்டு தனக்கு பிடித்த பாடலை சத்தமாக காரில் ஒளிர விட்டபடி கேட்டுக் கொண்டு அவனின் வேகத்தை கண்டு அஞ்சாமல் குதூகலமாக அமர்ந்திருந்தாள்.​

இப்படி அட்வெஞ்சரஸான விஷயங்கள் என்றால் ஆதிரைக்கு அலாதி பிரியம்.. இனியா ஒரு கட்டத்திற்கு மேல் முடியாமல் அழுகவே தொடங்கி விட்டாள்.​

ஆருத்ர வர்மன் சீற்றமாக அடி குரலில், “இப்போ எதுக்கு இவ்வளவு சவுண்டா சாங் ப்ளே பண்ணிட்டு இருக்க.. இட்ஸ் இரிடேட்டிங்.. வால்யூமை கம்மி பண்ணு..”.​

ஆதிரை, “இவ்வளவு ஸ்பீடா கார்ல போகும்பொழுது நல்லா சவுண்டா சாங் வச்சு கேட்டுட்டு போனால் எப்படி இருக்கு தெரியுமா.. வாவ்! இந்த ஃபீலிங்கை வார்த்தையால் சொல்லவே முடியாது.. அப்படி இருக்கு.. இந்த மொமெண்ட்ட என்ஜாய் பண்ண வேண்டாமா? வாட் அ ரைடு”.​

வர்மன், “டு வாட் ஐ சே.. இப்படி எல்லாத்துக்கும் ஆர்கியூ பண்ணிக்கிட்டு இருக்காத” என்றான் சிடுசிடுப்பாக.​

ஆதிரை, “இங்க பாருங்க, உங்க வேலை காரை ஓட்டுவது மட்டும் தான்.. அதை மட்டும் ஒழுங்கா பாருங்க.. எனக்கு இந்த ஆர்டர் போடுற வேலை எல்லாம் வேண்டாம்”.​

“நான் எனக்கு பிடிச்ச மாதிரி தான் எல்லாத்தையும் பண்ணுவேன்” என்றவள் சற்றும் அலட்டிக் கொள்ளாமல் மீண்டும் அந்த பாடலின் இசைக்கேற்ப தன் தலையை ஆட்டியபடி அமர்ந்திருந்தாள்.​

ஆருத்ர வர்மனால் அவளை நன்கு முறைத்து பார்க்க மட்டுமே முடிந்தது..​

சட்டென்று கேட்ட விசும்பல் சத்தத்தில் ஆதிரை பாடலின் ஒலியை குறைத்துவிட்டு யார் என்று திரும்பிப் பார்க்க.. இனியா தான் அழுது வடிந்து கொண்டிருந்தாள்.​

ஆதிரை, “இப்போ என்ன ஆச்சுனு நீ இப்படி அழுதுகிட்டு இருக்க?”.​

இனியா அழுகையினோடு, “எனக்கு ரொம்ப பயமா இருக்கு ஆது” என்றாள் விசும்பிய படி.​

ஆதிரை, “எதுக்கு பயம்?” என்றாள் சலிப்பாக.​

இனியா, “வீட்டுல இருக்கவங்க எல்லாம் இதை எப்படி எடுத்துப்பாங்களோ தெரியல.. ரொம்ப கஷ்டமா இருக்கு..”.​

ஆருத்ர வர்மன், “இதெல்லாம் முன்னாடியே யோசிச்சு இருக்கணும்.. கண்டவங்க பேச்சை கேட்டுகிட்டு தேவையில்லாத வேலை எல்லாம் பார்த்த இல்ல.. இப்போ உட்கார்ந்து அழுதுகிட்டு இருக்கியா” என்றான் கடுமையான குரலில்.​

அது மேலும் இனியாவிற்கு அழுகையை கொடுக்க.. கவின் அவளின் கையில் சற்று அழுத்தத்தை கொடுத்தவன், “இனி எதுவாக இருந்தாலும் நாம் அவங்களுக்கு எக்ஸ்பிளைன் பண்ணலாம். நீ தைரியமா இரு..” என்றான் வர்மனுக்கு கேட்காதவாறு மெதுவான குரலில்.​

ஆதிரை, “இங்க பாரு இனியா.. நடந்தது எதையும் மாற்ற முடியாது. கல்யாணம் முடிஞ்சது முடிஞ்சது தான்” என்றாள் அழுத்தமாக ஆருத்ர வர்மனையும் ஓர பார்வை பார்த்தபடி.​

“சும்மா இப்படி அழாமல் உங்க வீட்ல எப்படி கன்வின்ஸ் பண்றதுனு மட்டும் யோசி” என்றுவிட்டு மீண்டும் பாடலை கேட்க தொடங்கினாள்.​

சற்று நேரத்தில் கார் ‘க்ரீச்’ என்ற சத்தத்துடன் அவர்களின் வீட்டு வாயிலில் நிற்க. அனைவரும் காரை விட்டு கீழே இறங்கினர்.​

அந்த பிரம்மாண்ட வீட்டை பார்த்த ஆதிரை உண்மையிலேயே அசந்து தான் போய்விட்டாள். அவ்வளவு கலை நயமாக வடிவமைக்கப்பட்டு இருந்தது.​

ஆதிரை ஆச்சரியமான குரலில், “ஹே இனியா! இது நிஜமாகவே உங்க வீடு தானா..” என்றவளை ஏளன பார்வை பார்த்தான் வர்மன்.​

ஆருத்ர வர்மன் அவர்கள் குடும்பத்தின் மூத்த வாரிசு.. ஆருத்ர வர்மனின் தாத்தா மைக்கில் இங்கிலாந்து நாட்டை சேர்ந்தவர். சுற்றுலாவிற்கு இந்தியாவை சுற்றிப் பார்க்க வந்தவர்.​

ஆருத்ர வர்மனின் பாட்டி அகிலாண்டேஸ்வரியின் ஆளுமையான குணத்தையும் அவரின் துணிச்சலையும் கண்டு அவரின் மேல் காதல் வயப்பட்டார்.​

ஆரம்பத்தில் மறுத்த அகிலாண்டேஸ்வரியும் பிறகு அவரின் உண்மையான காதலை உணர்ந்து அவரும் சரி என்று ஒப்புக்கொண்டார்.​

அவர்களின் காதலுக்கு சாட்சியாக பிறந்தவர்கள் தான் ஆருத்ரவர்மனின் தந்தை சரித்திரனும், அவரின் தம்பி வேலாயுதமும்..​

ஆருத்ரவர்மனின் பாட்டியை திருமணம் செய்த பிறகு அவனின் தாத்தா திரும்ப தன் நாட்டிற்கு செல்லாமல் இந்தியாவிலேயே தொழில் தொடங்கி இங்கேயே தங்கிவிட்டார்.​

அகிலாண்டேஸ்வரியின் குடும்பமும் நன்கு வசதி வாய்ப்பு மிக்க குடும்பம் தான்..​

அவரின் மூத்த புதல்வன் சரித்திரனுக்கு ஒரே ஆண்மகன் அவன் தான் ‘ஆருத்ர வர்மன்’.. அவன் பாட்டியின் ‘வர்மா’..​

இரண்டாம் மகன் வேலாயுதத்திற்கு இரண்டு பிள்ளைகள் மூத்தவன் ‘ஆதவன்’, இளையவள் ‘இனியா’.​

அவர்களின் குடும்பத்திலேயே முதலில் பிறந்த பெண் பிள்ளை என்பதால் அனைவரிடத்திலும் அவளுக்கு செல்லம் அதிகம்.​

ஆருத்ர வர்மனை முழுக்க முழுக்க வளர்த்தது அவனின் பாட்டி அகிலாண்டேஸ்வரி தான். ஆருத்ர வர்மன் சிறு வயது முதலே அனைத்திலும் நேர்த்தியாக இருப்பவன்.​

தன் தம்பி தங்கையையும் சரியாக வழி நடத்துவான். இனியாவின் விஷயத்தில் அவன் எப்படி கோட்டை விட்டான் என்பது தான் இதுவரை அவனுக்கு புரியாத கேள்வி..​

ஆருத்ர வர்மன் அகிலாண்டேஸ்வரியின் வளர்ப்பில் வளர்ந்ததினால் அவரைப் போன்று கம்பீரமும், ஆளுமையும், துணிச்சலும் அவனுக்கு இயல்பிலேயே வந்துவிட்டது.​

அவர்களின் குடும்ப பிசினஸான கிரானைட் தொழிலை தற்பொழுது இவன் தான் நடத்தி வருகிறான்.​

ஆருத்ர வர்மன் 27 வயது நிரம்பிய கம்பீரமான ஆண்மகன். சிறு வயது முதலே எதிலுமே தோற்கக் கூடாது என்ற குணம் அவன் பாட்டியைப் போன்றே அவனிடத்திலும் உள்ளது.​

அகிலாண்டேஸ்வரியின் விருப்பமிக்க ஆசை பேரன் ஆருத்ர வர்மன் தான்​

யாருமே தன்னை கேள்வி கேட்கும் இடத்தில் இருக்க விருப்பப்பட மாட்டான். அனைவருக்குமே ஒரு முன் உதாரணமாகவே இருக்க வேண்டும் என்று எண்ணுபவன். முதல் முறை அவன் தவறவிட்ட விஷயம் ‘ஆதிரை!’..​

ஆருத்ர வர்மன் கோபத்தில் கை நரம்புகள் புடைக்க.. கண்கள் சிவந்து தன் பாட்டியின் எதிரில் குற்றவாளியாக நின்று இருந்தான்.​

அகிலாண்டேஸ்வரி, “என்ன வர்மா இதெல்லாம்.. நான் உன்னை இப்படி வளர்க்கலையே.. எந்த இடத்துல நீ தவறின..” என்றார் கம்பீரமாக.​

அவருக்கு பதில் உரைக்க முடியாமல் திணறிப் போய் நின்றிருந்தான் ஆருத்ர வர்மன். அவனை கேள்வி கேட்கும் ஒரே ஆள் அகிலாண்டேஸ்வரி தான்.​

இனியாவை பார்த்தவர், “என்ன இனியா இதெல்லாம்? நீ என்ன சின்ன குழந்தையா.. உனக்கு இந்த பையனை பிடிச்சிருக்குனா அதை நீ எங்க கிட்ட தைரியமா சொல்லி இருக்க வேண்டியது தானே..”.​

“நாங்களே உனக்கு கல்யாணம் செஞ்சு வச்சு இருப்போமே.. அதை விட்டுட்டு எதுக்காக நீ இப்படி எல்லாம் செஞ்ச..” என்றார் வருத்தமான குரலில்.​

ஆதிரை, “நல்லா சொல்லுங்க பாட்டி.. நான் கூட அவகிட்ட எத்தனையோ தடவை சொல்லிட்டேன்.. உங்க வீட்டில் இதை பத்தி பேசுனு.. சரியான பயந்தாங்கோலி.. உங்ககிட்ட இதைப்பற்றி பேசவே பயப்படுறா..”.​

“என்ன பண்றது.. நீங்களும் வீட்டில் வேற மாப்பிள்ளை பாத்துட்டீங்க.. வேற வழியில்லாமல் தான் இப்படி கல்யாணம் பண்ண வேண்டியதா ஆகிடுச்சு” என்று படபடவென பொறிந்த ஆதிரையை ஒரு நிமிடம் நிதானமாக பார்த்த அகிலாண்டேஸ்வரியின் பார்வை நேராக ஆருத்ர வர்மனிடம் தான் நிலைத்தது.​

அவரின் பார்வைக்கான அர்த்தத்தை உணர்ந்த ஆருத்ர வர்மனுக்கு என்ன கூறி தன் பாட்டியை சமாளிப்பது என்று தெரியவில்லை. இவன் மீதும் தவறு இருக்கிறதே..​

அகிலாண்டேஸ்வரி, “எனக்கு யாரை குத்தம் சொல்றதுனே தெரியல.. உன் தம்பி தங்கச்சிங்க செய்யுற தப்பை தண்டிக்கிற இடத்துல இருக்க வேண்டிய நீயும் அவங்களோட சேர்ந்து இப்படி ஒரு தவறு செய்திருக்க.. நான் கொஞ்சம் கூட எதிர்பார்க்கல வர்மா..”.​

குடும்பத்தில் உள்ள அனைவருமே அந்த நடுக்கூடத்தில் தான் குடியிருந்தனர். இங்கே நடக்கும் பேச்சு வார்த்தையையே சற்றும் கண்டு கொள்ளாத ஆதிரை அந்த வீட்டை சுற்றி நோட்டமிட்டவாறு நின்று இருந்தாள்.​

வெளியில் இருந்து பார்க்கும் பொழுதே ஆதிரைக்கு இந்த வீடு அவ்வளவு பிடித்து விட்டது. எவ்வளவு கலை நயமாக கட்டியுள்ளார்கள்..​

அகிலாண்டேஸ்வரிக்கு கலை நயம் அதிகம்.. காரைக்குடியில் இருக்கும் வீடுகளை போல் தான் இந்த வீடு அமைய வேண்டும் என்று மாளிகை போல் கட்டி வைத்திருந்தார் அகிலாண்டேஸ்வரி.​

அதன் அழகில் ஆதிரை தொலைந்து போய்விட்டாள் என்று தான் கூற வேண்டும்.​

இனியா அழுகையினோடு, “என்னை மன்னிச்சிடுங்க பாட்டி.. தப்பு என் மேல தான்.. நான் உங்ககிட்ட சொல்லி இருக்கணும்”.​

இனியாவின் தாய் சுப்புலட்சுமி, “பண்றது எல்லாம் பண்ணிட்டு.. இப்போ வந்து சாரி சொல்றியா.. இந்த விஷயம் வெளியில் தெரிஞ்சா நம்ம குடும்பத்துக்கு எவ்வளவு அசிங்கம்”.​

அகிலாண்டேஸ்வரி தன் ஒற்றை கையை நீட்டி அவரின் வார்த்தையை தடுத்தவர், “நடந்தது நடந்து போச்சு.. இனிமே, ஒன்னும் பண்ண முடியாது. அடுத்து என்னனு யோசிக்கலாம்” என்றவர்.​

ஆருத்ர வர்மனை உருத்து விழித்தபடி, “நீ சொல்லு வர்மா.. அடுத்து என்ன செய்யலாம்னு நினைக்கிற?” என்றார் கண்களால் அங்கே தன் பார்வையால் அந்த வீட்டை அலசி ஆராய்ந்து கொண்டிருக்கும் ஆதிரையை காண்பித்தபடி.​

ஆருத்ர வர்மன் ஒரு பெருமூச்சை வெளியேற்றியவன், “தெரியல..” என்றான் முகம் இறுகிப்போய்.​

அகிலாண்டேஸ்வரி கவினை பார்த்தவர், “இங்க பாரு பா.. உங்க ரெண்டு பேருக்கும் இப்போ சட்டப்படி கல்யாணம் ஆகிடுச்சு. இருந்தாலும், இனியா சின்ன பொண்ணு.. இன்னும் அவள் படிப்பையே முடிக்கல..”.​

“இப்போ தான் பைனல் இயர் படிச்சுக்கிட்டு இருக்கா.. அவளுடைய படிப்பு முடியுற வரைக்கும் அவ இங்கேயே இருக்கட்டும்.. அவளுடைய படிப்பு முடிஞ்சதும் எல்லாருக்கும் தெரியுற மாதிரி ரிசப்ஷன் வச்சிட்டு அப்புறமா அவளை நாங்க உங்க வீட்டுக்கு அனுப்பி வைக்கிறோம்” என்று கூறவும்.​

அவரின் வார்த்தையில் கவின் இனியாவை தான் பார்த்தான். இனியாவும் கவினை பார்க்க..​

அகிலாண்டேஸ்வரி, “என்னப்பா நான் சொல்றதில் உங்களுக்கு நம்பிக்கை இல்லையா?”.​

ஆதிரை, “ஆமா.. நீங்க சொல்றதை எப்படி நம்ப முடியும்.. உங்களையும் இந்த வீட்டையும் பார்த்தாலே தெரியுது.. நீங்க எவ்வளவு பெரிய ஆள் என்று..”.​

“இப்போ பேசி கவினை அனுப்புற மாதிரி அனுப்பிட்டு.. நீங்க இனியாவுடைய மனதை மாற்ற ட்ரை பண்ண மாட்டீங்கனு என்ன நிச்சயம்?” என்றாள் அகிலாண்டேஸ்வரியிடமே நேர்பார்வையோடு.​

 

RJ novels

Moderator

அகம் - 5​

ஆதிரையின் வார்த்தையில் அனைவருமே திகைத்துப் போய் பார்த்துக் கொண்டு நின்றனர் இனியா உட்பட..​

இதுவரை அகிலாண்டேஸ்வரியின் பேச்சுக்கு அவர்களின் வீட்டில் மறுபேச்சே கிடையாது. அதற்கு பயம் என்று கூறாவிட்டாலும்.. அவரின் மேல் இருக்கும் மரியாதை என்று கூறலாம்..​

அகிலாண்டேஸ்வரி எடுக்கும் முடிவுகள் அனைத்துமே சரியாக தான் இருக்கும் என்ற நம்பிக்கை என்றும் கூறலாம்.​

இதுவரை அகிலாண்டேஸ்வரியின் முடிவு ஒரு நாளும் தவறியது கிடையாது. அவரின் சரியான முடிவெடுக்கும் திறனுக்கு காரணம் அவரின் அனுபவம் என்றும் கூறலாம்.​

அகிலாண்டேஸ்வரி மிகவும் துணிச்சல் கொண்டவர் என்பதினால் அனைத்து முடிவுகளையும் அலசி ஆராய்ந்து தைரியமாக எடுப்பார்.​

தன் தாயின் மேல் இரண்டு மகன்களுக்கும் இருக்கும் அபார நம்பிக்கையினாலே அவர் என்ன முடிவெடுத்தாலும் அது சரியாக தான் இருக்கும் என்று நம்புவார்கள்.​

அது ஒரு நாளும் பொய்த்ததும் கிடையாது. அப்படிப்பட்டவரை அனைவரின் முன்பும் ஆதிரை கேள்வி எழுப்பவும் அனைவருமே வாய் அடைத்து போய் திகைத்தபடி பார்த்தனர்.​

ஆருத்ர வர்மன், “ஏய்! யாரு கிட்ட என்ன பேசுற நீ?” என்றான் ருத்ர மூர்த்தியாக.​

ஆதிரை அவனை சற்றும் சளைக்காத பார்வை பார்த்தவள், “ஏன் பார்த்தா தெரியலையா.. இவங்க உங்க பாட்டி தானே.. அவங்க கிட்ட தான் பேசிகிட்டு இருக்கேன்” என்றவளை உன்னை வெட்டவா, குத்தவா என்பது போல் பார்த்தான் வர்மன்.​

அகிலாண்டேஸ்வரியின் பார்வை ஆதிரையின் நடவடிக்கைகளை தான் அணு அணுவாக ஸ்கேன் செய்து கொண்டிருந்தது.​

அதிலும், தன் பேரனின் வாயை அடைக்க இவளால் சுலபமாக முடிகிறதே என்று எண்ணியவர் ஆதிரையை மெச்சுதலான பார்வை பார்த்தார்.​

வர்மன், “ஜஸ்ட் ஷெட் டப்! என் பாட்டி என்ன டிசைட் பண்ணாலும் அது சரியா தான் இருக்கும். உன்னை மாதிரி எடுத்தோம் கவிழ்தோம்னு அவங்க எந்த முடிவும் எடுக்க மாட்டாங்க.. அவங்க ஒரு முடிவு சொல்றாங்கனா அதுக்கு பின்னாடி ஆயிரம் அர்த்தம் இருக்கும்”.​

ஆதிரை, “சோ வாட்.. நான் கேட்ட கேள்விக்கு முதலில் அவங்களை பதில் சொல்ல சொல்லுங்க.. அவங்க எடுத்து இருக்க டிசிஷன் எல்லாம் மே பி கரெக்டா கூட இருக்கலாம்”.​

“ஐ டோன்ட் நோ.. பட், அவங்க எதுக்காக இந்த டிசேஷனை எடுத்தாங்க என்பதற்கான எக்ஸ்பிளநேஷனை அவங்க கொடுக்குறது ஒன்னும் தப்பில்லையே..”.​

“அவங்களுடைய எக்ஸ்பீரியன்ஸ்ல அவங்க எடுக்கிற முடிவு எதுவுமே தப்பாதுனு நீங்க சொல்லுறீங்க.. ஓகே பைன்.. அதை நானும் ஒத்துக்கிறேன். அதுக்காக அவங்க என்ன சொன்னாலும் அப்படியே கண் மூடி தனமாக எல்லாம் உங்களை மாதிரி என்னால் நம்ப முடியாது”.​

“இப்போ கவினை இங்கிருந்து அனுப்பிவிட்டு நான் சொல்ற மாதிரி நீங்க எல்லாம் சேர்ந்து செய்ய மாட்டீங்க என்பதற்கு என்ன நிச்சயம்?” என்றவள்.​

தன் கைகள் இரண்டையும் கட்டிக்கொண்டு அவனை நேர் பார்வை பார்த்தபடி கேள்வி எழுப்பினாள்.​

ஆருத்ர வர்மன் கோபமாக அவளிடம் எதையோ கூற வாய் எடுக்க..​

அகிலாண்டேஸ்வரி, “எங்க குடும்பத்தில் யாருக்கும் பொய் சொல்லி பழக்கம் இல்ல.. நாங்க ஒருத்தருக்கு வாக்கு கொடுத்தா அதை கண்டிப்பா காப்பாற்றுவோம்”.​

“இதுவரைக்கும் யாரையும் நாங்க நம்ப வச்சு ஏமாற்றியது கிடையாது.. யாருக்கும் நம்பிக்கை துரோகமும் செஞ்சதும் கிடையாது. அதே போல, இந்த விஷயத்திலும் நீங்க எங்களை தாராளமா நம்பலாம்” என்றார் வாக்களிப்பது போல்.​

வர்மன், “என்ன பாட்டி இதெல்லாம்.. போயும், போயும் இவளுக்காக நீங்க உங்க தகுதியிலிருந்து இறங்கி எக்ஸ்பிளைன் பண்ணிக்கிட்டு இருக்கீங்க.. இவ என்ன அவ்வளவு பெரிய ஆளா.. உங்களையே கொஸ்டின் பண்ணுறா..”.​

அகிலாண்டேஸ்வரி, “அவ அவ்வளவு பெரிய ஆளா என்றெல்லாம் எனக்கு தெரியாது.. ஆனால், அவ இப்போ என் வர்மனுடைய பொண்டாட்டி.. என் வர்மனுடைய பொண்டாட்டி என்னை ஒரு கேள்வி கேட்டா அவளுக்கு பதில் சொல்ல வேண்டிய கடமை எனக்கு இருக்கு இல்ல” என்ற அவனின் பாட்டியின் வார்த்தையில் அவரை அதிர்ந்து விழித்தவன் வார்த்தைகள் அற்றவனாக வாயடைத்து போய்விட்டான் என்று தான் கூற வேண்டும்.​

ஆதிரை அவரின் வார்த்தையில் வர்மனை நோக்கி கேலி பார்வை பார்க்க.. அது மேலும் அவனின் கோபத்திற்கு தூபம் போடுவது போல் இருந்தது.​

மீண்டும் அகிலாண்டேஸ்வரி கவினைப் பார்த்தவர், “நீங்க தாராளமா எங்களை நம்பலாம்.. அவளுடைய படிப்பு முடிந்ததும் நாங்க சொன்ன மாதிரி உங்க வீட்டுக்கு அவளை அனுப்பி வைப்போம்”.​

“அதுக்கு முன்னாடி உங்க குடும்பத்துல இருக்குறவங்களை கூப்பிட்டுக்கிட்டு ஒரு நாள் வீட்டுக்கு வாங்க.. உங்களை மாதிரி எல்லாத்தையும் எடுத்தோம் கவிழ்தோம்னு எங்களால் முடிவு செய்ய முடியாது”.​

“ஏன்னா, இது எங்க வீட்டு பொண்ணுடைய வாழ்க்கை சம்பந்தப்பட்ட விஷயம்.. எதுவாயிருந்தாலும் ஒண்ணுக்கு ஆயிரம் தடவை யோசிச்சு தான் நாங்க முடிவு பண்ணுவோம். உங்க பெத்தவங்களை கூப்பிட்டு வாங்க அவங்க கிட்ட இதை பத்தி நாங்க பேசணும்”.​

கவின், “சரி பாட்டி.. நீங்க சொல்ற வார்த்தையை நம்பி நான் இனியாவை இங்க விட்டுட்டு போறேன்.. சீக்கிரமே என் பேரன்ட்ஸோட இங்க வருவேன்” என்றவன் அனைவரிடமும் விடை பெற்று கிளம்பினான்.​

இனியா, “என்னை மன்னிச்சிடுங்க பாட்டி.. நான் ரொம்ப பெரிய தப்பு பண்ணிட்டேன்” என்றாள் தலைகுனிந்து நின்றபடி.​

அகிலாண்டேஸ்வரி, “காதலிக்கிறது ஒன்னும் அவ்வளவு பெரிய தப்பு இல்லை. நானும் உங்க தாத்தாவை காதலிச்சு தான் கல்யாணம் செஞ்சுக்கிட்டேன்”.​

“ஆனா, அந்த காதலை பெத்தவங்க சம்மதத்தோட திருமணத்தில் கொண்டு வந்து முடிக்கணும். அது தான் ரொம்ப முக்கியம்.. நடந்தது நடந்து போச்சு.. இனி எதையும் மாற்ற முடியாது..”.​

“இனிமேலாவது எடுத்ததுக்கெல்லாம் அவசரமா முடிவெடுக்காமல் நிதானமா யோசிச்சு முடிவு பண்ணு.. முக்கியமான விஷயம் உன் வாழ்க்கை சம்பந்தப்பட்ட முடிவை நீ தான் எடுக்கணும்”.​

“மத்தவங்க கிட்ட உன் வாழ்க்கையை கொடுத்துட்டு அவங்க சொல் பேச்சைக் கேட்டு செய்யுற பொம்மை மாதிரி நிக்காதே” என்றார் ஆதிரையையும் ஒரு பார்வை பார்த்துவிட்டு.​

ஆதிரைக்கு அகிலாண்டேஸ்வரியின் ஆளுமையான தோற்றமும், கம்பீரமும், துணிச்சலும் மிகவும் பிடித்திருந்தது. அவரின் பேச்சை மிகவும் ரசித்தாள்.​

ஆதிரை ஆச்சரியமான குரலில், “அப்போ நீங்களும் லவ் மேரேஜா பாட்டி?” என்றாள் துடுக்குத்தனமாக.​

அகிலாண்டேஸ்வரி, “ஆமா..”.​

ஆதிரை, “ஓ! அதான் உங்க பேத்தியும் உங்களை மாதிரியே லவ் பண்ணி இருக்கா.. இதுக்கு போய் எங்ககிட்ட அவ்வளவு கோவப்பட்டிங்க.. பாருங்க.. உங்க பாட்டி கூட லவ் மேரேஜ் தானாம்..” என்றாள் வர்மனை பார்த்து.​

வர்மனால் அவளை முறைக்க மட்டுமே முடிந்தது. வேறு என்ன செய்ய முடியும்.. இப்பொழுது அவளுக்கு தன் பாட்டியின் சப்போர்ட் வேறு இருக்கிறது அல்லவா..​

இதுவரை அகிலாண்டேஸ்வரியிடம் யாருமே இவ்வளவு இலகுவாக பேசியது கிடையாது. அவரிடம் சகஜமாக பேசும் முதல் ஆள் ஆதிரை தான்..​

ஆதிரையின் துடுக்கு தனமான பேச்சை தடுக்காமல் அவளுக்கு பதில் உரைப்பதிலேயே அனைவருக்கும் தெளிவாக புரிந்து விட்டது.. ஆதிரை அகிலாண்டேஸ்வரியின் மனதில் இடம் பிடித்து விட்டாள் என்று..​

அகிலாண்டேஸ்வரி ஆருத்ர வர்மனை நேர் கொண்ட பார்வை பார்த்தவர் “இப்போ நீ சொல்லு வர்மா.. என்ன காரியம் பண்ணி இருக்க நீ?” என்றார் அவரின் குரலில் சற்று கடுமை தென்பட்டது.​

வர்மன், “பாட்டி.. அது வந்து..” என்று தடுமாற.​

அகிலாண்டேஸ்வரி, “முதல் தடவை என் பேரன் தடுமாறி நிற்கிறதை பார்க்கிறேன்”.​

ஆதிரை, ‘ஓ! சாருக்கு அவங்க பாட்டினா ரொம்ப பயம் போலருக்கே.. நம்ம கிட்ட எல்லாம் புலி மாதிரி சீறினார்.. அவங்க பாட்டிகிட்ட பூனை மாதிரி பம்மிக்கிட்டு நிக்கிறாரே.. ‘ என்று பற்களை கடித்து உதட்டுக்குள்ளேயே சிரித்துக் கொண்டாள்.​

ஆருத்ர வர்மன், “என்னையும் மன்னிச்சிடுங்க பாட்டி.. அவசரத்துல இப்படி பண்ணிட்டேன்”.​

அகிலாண்டேஸ்வரி, “தங்கச்சி மேல இருக்க பாசத்தினால் அவ இப்படி ஒரு தப்பை செஞ்சதும் என்ன பண்ணுகிறோம் என்று தெரியாமல் கோவத்திலும், ஆத்திரத்திலும் நீ இப்படி ஒரு காரியம் செஞ்சியா..”.​

“இல்ல.. அந்த பெண்ணை பிடிச்சு போய் அந்த சூழ்நிலையை பயன்படுத்திக்கிட்டு அவ கழுத்துல நீ தாலி கட்டுனியா?” என்றவரின் வார்த்தையில் திகைத்த ஆருத்ர வர்மன்.​

“ஐயோ பாட்டி! இப்படி ஒரு வாயாடியை போய் யாராவது விருப்பப்பட்டு கல்யாணம் பண்ணிப்பாங்களா.. சத்தியமா சொல்றேன் கோவத்திலும், ஆத்திரத்திலும் தான் இப்படி புத்தி கெட்டு போய் பண்ணிட்டேன்”.​

“லைஃப்ல ஃபர்ஸ்ட் டைம் என்னுடைய நிதானத்தை நான் இழந்து இருக்கேன். அதுக்கு முழு காரணமும் இவ தான்” என்றான்.​

அங்கே இவன் பாட்டியிடம் மாட்டிக் கொண்டு விழி பிதுங்கி நிற்பதை பார்த்து ரசித்துக் கொண்டு நின்றிருந்த ஆதிரையை காண்பித்தபடி.​

ஆதிரை, “இது நல்ல கதையா இருக்கே.. பாட்டி உங்க பேரன் சொல்ற கதையை கேட்டீங்களா.. அவர் சொல்றதை நீங்க உண்மைனு நம்புறீங்களா.. கோபத்துலயும், ஆத்திரத்துலயும் எல்லாருமே திட்டுவாங்க, அடிப்பாங்க..”.​

“ஆனா, உங்க பேரன் ரொம்ப வித்தியாசமா எனக்கு தாலி கட்டி இருக்கார். அவருடைய ஹீரோயிசத்தை காட்டுவதற்காக எனக்கு தாலி கட்டி இருக்கார்” என்றவள்.​

தன் இரு கைகளையும் கட்டியபடி ஒற்றை கையால் தன் தாடையை நீதியவாறு ஆருத்ர வர்மனை சந்தேக பார்வை பார்த்தவள், “எனக்கு என்னமோ உங்க பேரன் மேல சந்தேகமா தான் இருக்கு”.​

“அவர் வேணும்னு தான் இப்படி எல்லாம் செஞ்சாரோனு எனக்கு தோணுது. அது எப்படி கோவத்துல கரெக்டா எனக்கு தாலி கட்டி இருக்கார்”.​

“ஒருவேளை, பாக்குறதுக்கு ரொம்ப அழகா இருக்காளே இந்த சான்ஸை யூஸ் பண்ணி அவ கழுத்துல தாலியை கட்டிடலாம்னு கட்டிட்டாரோ என்னவோ..”.​

ஆருத்ர வர்மன் அவளை பார்த்து கேலியாக நகைத்தவன், “யாரு.. நீ அழகா இருக்கியா.. வாய் இருக்கு என்பதற்காக என்ன வேணும்னாலும் பேசலாம்னு நினைக்காத டி”.​

ஆதிரை, “அப்போ எதுக்கு எனக்கு தாலி கட்டுனீங்க? வாயாலேயே பேசி இருக்க வேண்டியது தானே.. ஏன் சார் தாலி கட்டி தான் நான் செஞ்ச தப்பை எனக்கு புரிய வைப்பீங்களோ” என்றாள் நக்கல் குரலில்.​

ஆருத்ர வர்மன் தன் கைகளை இறுக்க மூடியவாறு, “ஓவரா பேசாத டி.. அப்புறம் நீ தான் அனுபவிப்ப..” என்றான் மிரட்டும் தோணியில்.​

ஆதிரை, “பாத்தீங்களா பாட்டி.. உங்க முன்னாடியே எப்படி எல்லாம் நடந்து கொள்கிறார் என்று.. அப்போ யோசிச்சு பாருங்க ரிஜிஸ்டர் ஆபீஸ்ல எப்படி எல்லாம் என்கிட்ட மிஸ் பிகேவ் பண்ணி இருப்பார் என்று..”.​

இவர்கள் இருவரின் வாக்குவாதத்தையும் சுற்றி இருக்கும் அனைவருமே சுவாரசியமாக பார்த்துக் கொண்டு நின்றனர்.​

முதல் முறை ஆருத்ர வர்மன் ஒருத்தியிடம் சரிக்கு சமமாக சண்டையிட்டு பார்க்கின்றனர். அதுவும் எவ்வளவு உரிமையோடு அவளை ‘டி’ என்று அழைக்கிறான்..​

ஆருத்ர வர்மன் அதிகமாக வார்த்தைகளை வீண் விரயம் செய்ய கூடிய ஆளே கிடையாது. கோபமாக இருந்தாலும் சரி.. அன்பாக இருந்தாலும் சரி.. சுருக்கி​

தான் பேசுவானே தவிர, இவ்வளவு நீளமாக எல்லாம் அவன் பேசுவதை இப்பொழுது தான் முதல் முறை அவனின் குடும்பத்தார் பார்க்கின்றனர்.​

 
Last edited:

RJ novels

Moderator

அகம் - 6​

அவர்கள் இருவரின் கூற்றில் அனைவருமே ஆச்சரியம் கலந்த அதிர்ச்சியோடு ஏதோ காணாததை காண்பது போல் வாயை பிளந்து கொண்டு பார்த்தனர்.​

அகிலாண்டேஸ்வரிக்கு இருவரின் வாக்குவாதத்தில் மெல்லிய புன்னகை அரும்பியது. தன் வர்மனை இப்படி பார்க்க அவருக்கு மிகவும் பிடித்திருந்தது. அதற்கு காரணமான ஆதிரையையும் அவருக்கு மிகவும் பிடித்து விட்டது.​

அகிலாண்டேஸ்வரி, “போதும்.. ரெண்டு பேரும் கொஞ்சம் நிறுத்துறீங்களா.. என்ன பண்றீங்க ரெண்டு பேரும்.. சின்ன பசங்க மாதிரி சண்டை போட்டுக்கிட்டு இருக்கீங்க..” என்ற அவரின் வார்த்தையில் இருவரின் வாயுமே மூடிக்கொண்டது.​

ஆருத்ர வர்மன், “பாட்டி நான் ஒன்னும் பண்ணல.. எல்லாத்துக்கும் காரணம் இவ தான்”.​

மீண்டும் ஆதிரை அவனுக்கு எதுவோ பதில் உரைக்க தன் வாயை திறக்க.​

அகிலாண்டேஸ்வரி, “போதும் வர்மா.. புருஷனுக்கும், பொண்டாட்டிக்கும் ஏதாவது சண்டை போடணும்னா உங்களுடைய பெட்ரூம்ல போய் வச்சுக்கோங்க..”.​

ஆருத்ர வர்மன், “பாட்டி நான் ஏதோ அவசரத்துல அப்படி செஞ்சுட்டேன். ப்ளீஸ், நீங்க இப்படி எல்லாம் பேசாதீங்க.. எனக்கு ரொம்ப குற்ற உணர்ச்சியா இருக்கு”.​

“உங்களுடைய இத்தனை வருஷ நம்பிக்கையையும் குழி தோண்டி புதைச்சிட்டு இப்படி உங்க முன்னாடி நிக்கவே எனக்கு ரொம்ப கில்டியா இருக்கு”.​

அவனின் குரலில் அவ்வளவு வருத்தம் தென்பட்டது.​

ஆதிரை, “இதெல்லாம் என் கழுத்துல தாலி கட்டுறதுக்கு முன்னாடியே யோசிச்சு இருக்கணும். இப்போ ஃபீல் பண்ணி என்ன பண்றது?”.​

அகிலாண்டேஸ்வரி, “இப்போ என்ன பண்ணனும்னு நினைக்கிற.. என்னுடைய நம்பிக்கையை நீ அழிச்சது உண்மை தான். இப்படி ஒரு காரியத்தை பண்ணிட்டு என் முன்னாடி நீ வந்து நிப்பனு நானும் கொஞ்சம் கூட நினைச்சு பார்க்கவே இல்லை. நடந்ததெல்லாம் நடந்து போச்சு.. இப்போ இதையெல்லாம் எப்படி சரி பண்ணனும்னு நினைக்கிற?”.​

ஆருத்ர வர்மன், “பாட்டி இது எல்லாமே ஆக்சிடென்ட்டாக நடந்த விஷயம் தான். முழு மனசோட நான் இவ கழுத்துல அந்த தாலியை கட்டல.. கோவத்துல தெரியாமல் பண்ணிட்டேன். இதுக்கு ஏன் நாம இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கணும்”.​

அகிலாண்டேஸ்வரி அவனை உறுத்து விழித்தவர், “நீ என்ன சொல்றனு புரியலையே வர்மா..” என்றார் அழுத்தமாக.​

ஆருத்ர வர்மன், “பாட்டி ரெண்டு பேருக்குமே பிடிச்சு நடக்கிறது பெயர் தான் கல்யாணம்.. எங்களுக்கு நடந்ததுக்கு பெயர் கல்யாணமே கிடையாது”.​

“இதுக்கு இவ்வளவு இம்பார்ட்டன்ஸ் கொடுக்கணும் என்று எந்த அவசியமும் இல்லை. பேசாமல் நான் கட்டிய தாலியை அவ கழுத்துல இருந்து கழட்டிடலாம். அது தான் ரெண்டு பேருக்குமே நல்லது” என்று அவன் கூறி முடிக்கும் முன்னரே..​

அகிலாண்டேஸ்வரி, “வர்மா..!” என்று அந்த வீடே அதிரும்படி கத்தி இருந்தார்.​

அதில், அனைவருமே திகைத்துப் போய் அகிலாண்டேஸ்வரியை பார்த்தனர்.. ஆதிரை உட்பட..​

அகிலாண்டேஸ்வரி, “என்ன வர்மா.. விளையாடுறியா.. அந்த பொண்ணோட கழுத்துல நீ முழு மனசோட விருப்பப்பட்டு தாலி கட்டுனியோ, இல்லையோ.. அதெல்லாம் தெரியாது”.​

“ஆனா, உங்க ரெண்டு பேருக்கும் எப்படியோ கல்யாணம் நடந்திடுச்சு. அதை யாராலும் மாற்ற முடியாது. உனக்கு பிடிச்சாலும் பிடிக்கலைனாலும் இவ தான் உன்னுடைய பொண்டாட்டி..”.​

“ஏதோ, சாதாரண விஷயம் மாதிரி பேசுற.. கட்டிய தாலியை கழட்டி கொடுத்துட்டு போக சொல்ற.. உனக்கு பிடிச்சாலும் பிடிக்கலைனாலும் அதுக்குண்டான மதிப்பும், மரியாதையும் நாம கொடுத்து தான் ஆகணும்”.​

ஆருத்ர வர்மனின் தாய் மகாலட்சுமி, “அத்தை அவன் தான் இந்த பொண்ண பிடிக்கலைனு சொல்றானே.. பிடிக்காதவனை கட்டாயப்படுத்தி எப்படி வாழ வைக்க முடியும்” என்றார் மெதுவான குரலில்.​

அகிலாண்டேஸ்வரி, “அதுக்கு என்ன பண்ண சொல்ற லட்சுமி? உன் பையன் சொல்ற மாதிரி அந்த பொண்ணு கழுத்துல உன் மகன் கட்டி இருக்க தாலியை கழட்டிகிட்டு அனுப்ப சொல்றியா?” என்றவரின் வார்த்தையில் மகாலட்சுமியின் வாயும் அடைத்துப் போனது.​

அப்படி செய்தால் அது எவ்வளவு அபத்தமான காரியம் என்பதை அறியாதவரா அவர்.. தன் மகன் மேல் தவறு இருந்தாலுமே அவனுக்கு விருப்பம் இல்லை என்னும் பொழுது எங்கே அவன் வாழ்க்கை வீணாகி விடுமோ என்ற பயம் அவரிடம்..​

மகாலட்சுமி இடமிருந்து எந்த ஒரு பதிலும் வராததால் அகிலாண்டேஸ்வரி ஆதிரையை பார்த்தவர்.​

“உன்னுடைய அம்மா, அப்பா எல்லாம் எங்க இருக்காங்க?”.​

ஆதிரை, “எனக்கு அம்மா, அப்பா எல்லாம் யாரும் கிடையாது. நான் எனக்கு விவரம் தெரிஞ்ச வயசுல இருந்தே ஒரு அனாதை ஆசிரமத்தில் தான் வளர்ந்தேன்”.​

“காலேஜ் படிக்க ஜாயின் பண்ண பிறகு தான் எனக்கு இனியா பிரெண்ட் ஆனாள். 10 டேஸா அவளுடைய முகமே சரியில்ல.. என்னனு கேட்டதுக்கு அவளுக்கு வீட்டில் மாப்பிள்ளை பார்த்து இருக்கிறதா என்கிட்ட சொன்னாள்”.​

“கவின் எங்களுடைய காலேஜ் சீனியர்.. அவளும் அவரும் லவ் பண்றது எனக்கு முன்னாடியே தெரியும். திடீர்னு வீட்ல மாப்பிள்ளை பார்த்ததும் என்ன செய்யுறதுனு தெரியலனு டெய்லி அழுதுகிட்டே இருந்தாள்”.​

“உங்ககிட்ட இதை பத்தி எல்லாம் சொல்ல சொல்லி நானும் தினம் தினம் அவ கிட்ட சொல்லி பாத்துட்டேன். ஆனா, அவளுக்கு உங்க கிட்ட இதை பத்தி சொல்லவும் பயம்..”.​

“சரி, நான் வந்து உங்க வீட்டில் பேசுறேன்னு சொன்னதுக்கும் அவ ஒத்துக்கல.. வேற வழி இல்லாமல் தான் இப்படி செஞ்சுட்டோம்”.​

சுப்புலட்சுமி, “அதுக்காக நீ பாட்டுக்கு இப்படி கல்யாணம் பண்ணி வச்சுட்டியே.. எங்ககிட்ட ஒரு வார்த்தை இதை பத்தி சொல்லி இருக்கலாம் இல்ல”.​

ஆதிரை, “தப்பு தான் ஆண்ட்டி.. எங்களை மன்னிச்சிடுங்க.. நீங்க எல்லாம் இவ்வளவு நல்லவங்களா இருப்பீங்கனு நான் கொஞ்சம் கூட நினைச்சு பாக்கல”.​

“ரொம்ப பெரிய பணக்காரங்க என்று சொன்னதும்.. நான் இந்த சினிமாவில் எல்லாம் வருகிற மாதிரி வில்லத்தனமாக இருப்பீங்கனு நினைச்சேன்”.​

“அது மட்டும் இல்லாமல் அவங்க அண்ணனை பத்தி இனியா நிறையவே சொல்லி இருக்கா.. ஏதோ, படத்துல வர வில்லன் ரேஞ்சுக்கு தான் நான் அவரை நினைச்சுகிட்டு இருந்தேன்”.​

அவள் தங்கள் அண்ணனை பற்றி கூறியதை கேட்ட ஆதவன் பக்கென்று சிரித்து விட. அதற்கு தன் அண்ணனின் முறைப்பையும் பரிசாக பெற்று கொண்டான்.​

ஆதிரை, “அதனால் இந்த விஷயம் உங்களுக்கு தெரிஞ்சா நீங்க எல்லாம் இதுக்கு ஒத்துக்க மாட்டீங்கனு நினைச்சு இப்படி செஞ்சிட்டோம்”.​

“ஆனா, கவின் ரொம்ப நல்ல பையன்.. உங்க பொண்ண அவர் நல்லா பாத்துப்பார். அவங்க ரெண்டு பேருக்குமே மனசளவுல ஒருத்தரை ஒருத்தர் பிடித்து இருக்கும் பொழுது நீங்க வேற எந்த மாப்பிள்ளையை பார்த்தாலும் உங்க பொண்ணால் கவினை மறந்துட்டு அவர் கூட சந்தோஷமா வாழ முடியாது”.​

“இருந்தாலும், நான் பண்ணது ரொம்ப பெரிய தப்பு தான் என்னை மன்னிச்சிடுங்க..” என்றாள் தன் கரம் கூப்பி அனைவரின் முன்னிலையிலும்.​

ஆருத்ர வர்மன் கோபமாக, “பெத்தவங்க இருந்திருந்தாங்கனா ஒழுங்கா வளத்திருப்பாங்க.. அனாதை ஆசிரமத்துல ஏனோ தானோனு வளர்ந்தவ தானே நீ..”.​

“உனக்கு எங்க இருந்து குடும்ப கவுரவத்தை பற்றியும், மரியாதையை பற்றியும், அடுத்தவங்களுடைய மனசை பத்தியும் புரியப்போகுது. அதான் இப்படி ஒரு காரியத்தை செஞ்சிருக்க”.​

“உன்னை மாதிரி ஆள் கிட்ட எல்லாம் என் தங்கச்சி பிரண்ட்ஷிப் வச்சிருக்கா பாத்தியா அவளை சொல்லணும்..” என்றவனின் வார்த்தையில் ஆதிரையின் மனதிற்குள் சுருக்கென்ற வலி ஏற்பட்டது என்னவோ உண்மை தான்..​

ஆனால், அதை யாரின் முன்பும் காட்டாமல் திடமாக தான் நின்று இருந்தாள்.​

அகிலாண்டேஸ்வரி, “வர்மா.. என்ன பேசுற நீ..” என்றார் அதட்டலாக.​

ஆருத்ர வர்மன், “இல்ல பாட்டி.. இவ பண்ண காரியம் தப்பு என்று இன்னுமே இவ உணரவில்லை. ஏதோ, இவ செஞ்சது சரி என்ற மாதிரியே பேசிகிட்டு இருக்கா” என்றான் கோபமாக.​

அகிலாண்டேஸ்வரி, “அதுக்காக இப்படித்தான் வார்த்தையை விடுவியா.. அந்த பொண்ணு பாவம்.. பெத்தவங்க இல்லைனு சொல்றா.. அவளை போய் இப்படி கஷ்டப்படுத்துற மாதிரி பேசுற..”.​

“சரி, அந்த பொண்ணுக்கு பெத்தவங்க இல்ல.. அதனால் இப்படி ஒரு தப்பு செய்ய உன் தங்கச்சிக்கு துணை போயிருக்கா.. ஆனா, உனக்கு இத்தனை பேர் இருக்கோம்..”.​

“உன்னை பெத்தவங்களும் இருக்காங்க.. உன் பாட்டி நான் இருக்கேன். நாங்க எல்லாம் சேர்ந்து தானே உன்னை வளர்த்தோம். நீ மட்டும் பண்ணது சரியா..”.​

“அந்த பொண்ணு கழுத்துல நீ எப்படி தாலி கட்டலாம்” என்றவரின் வார்த்தையில் வர்மனுக்கு ஆதிரையின் முன்பு பெரும் அவமானம் ஆகிப்போனது.​

வர்மன் பேசிய அனைத்திற்கும் வாய்க்கு வாய் அவனிடம் எதிர்த்து பேசிக் கொண்டிருந்த ஆதிரையிடம் இப்பொழுது எந்த ஒரு பதிலும் இல்லை.​

அகிலாண்டேஸ்வரி, “எல்லாருக்குமே சேர்த்து பொதுவா நான் ஒரு விஷயம் சொல்லிக்கிறேன். இவ தான் இந்த வீட்டுடைய மூத்த மருமகள்.. என் வர்மனுடைய பொண்டாட்டி..”.​

“இவளை நீ விரும்பி கல்யாணம் செய்துக்கிட்டயோ.. இல்ல, விரும்பாமல் கல்யாணம் செய்துக்கிட்டயோ.. அதெல்லாம் எனக்கு தேவையில்லை. நீ தானே இவ கழுத்துல தாலி கட்டுன..”.​

“அப்போ நீ தான் இவ கூட கடைசி வரைக்கும் வாழ்ந்தாகணும். இதை நான் உனக்கு தண்டனையா நினைச்சு சொல்லல.. கல்யாண பந்தத்துக்குனு ஒரு மதிப்பும், மரியாதையும் இருக்கு”.​

“ஆனா, உங்களுக்கெல்லாம் அது விளையாட்டு விஷயமாக போயிடுச்சு. தாலியை கட்டிட்டு அப்புறமா அதை கழட்டி கொடுத்துட்டு போனு சொன்னா இதெல்லாம் கொஞ்சம் கூட நல்லாவே இல்ல வர்மா”.​

“நீ அப்படி செஞ்சினா என்னுடைய வளர்ப்பு தப்பு என்ற மாதிரி ஆகிடும். அந்த பொண்ணு இனி உன் கூட தான் இருப்பா.. இதை நான் வர்மனுக்கு மட்டும் சொல்லல.. எல்லாருக்கும் சேர்த்து தான் சொல்றேன்” என்றவர் அங்கிருந்து சென்று விட்டார்.​

ஆருத்ர வர்மனும் ஆதிரையை முறைத்து பார்த்துவிட்டு வேக நடையுடன் தன் அறைக்கு சென்று விட்டான். மகாலட்சுமி மிகவும் இளகிய மனம் கொண்டவர்.​

ஆதிரையை தன் மகனுக்கு பிடிக்கவில்லை என்பதால் அவளை அவருமே வேண்டாம் என்று நினைத்தது உண்மை தான். ஆனால், அவள் தனக்கு தாய், தந்தை என யாரும் இல்லை என்று கூறியதுமே.. ஏதோ, ஒரு இனம் புரியாத உணர்வு ஆதிரையின் மேல் அவருக்கு ஏற்பட்டது.​

ஆதிரை மகாலட்சுமியின் முன்பு நின்றவள், “என்னை மன்னிச்சிடுங்க ஆன்ட்டி.. நான் இதெல்லாம் வேணும்னு செய்யல.. இனியா கவினை எவ்வளவு காதலிக்கிறானு நான் கூடவே இருந்து பார்த்திருக்கேன்”.​

“அவ அழுவதை பார்க்க முடியாமல் தான் இப்படி செஞ்சுட்டேன். இருந்தாலும், என் மேலயும் தப்பு இருக்கு. உங்ககிட்ட இதை பத்தி நான் பேசி இருக்கணும்”.​

“அவ பயப்படுகிறாளே என்று நான் உங்ககிட்ட பேசாமல் விட்டது தான் நான் பண்ண பெரிய தப்பு. யாராயிருந்தாலும் அவங்க வீட்டு பொண்ணுக்கு இப்படி கல்யாணம் செய்து வச்சா கோபம் வர தான் செய்யும். எனக்கு புரியுது..”.​

“தயவு செஞ்சு என்னை மன்னிச்சிடுங்க.. ஆனா, நாங்க செஞ்ச விஷயம் இவ்வளவு பெரிய பிரச்சினையாகும்னு நான் சத்தியமா எதிர்பார்க்கவே இல்லை”.​

“உங்களுக்கு என்னை பிடிக்கவில்லை என்றால் நீங்க சொன்ன மாதிரி நான் இங்கிருந்து போயிடுறேன்” என்றவள் வாசலை நோக்கி நடக்க தொடங்கினாள்.​

 

RJ novels

Moderator

அகம் - 7​

உண்மையை சொல்ல போனால் மகாலட்சுமிக்கு ஆதிரையை பார்க்கும் பொழுது அகிலாண்டேஸ்வரியையும், ஆருத்ர வர்மனையும் பார்ப்பதை போல் தான் தோன்றியது.​

சற்றும் பயமின்றி அனைவரிடமும் நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு அவள் பேசும் தோரணையை பார்க்கும் பொழுது அவருக்கு அவரின் அத்தை அகிலாண்டேஸ்வரியின் ரூபம் தான் மனக்கண் முன்பு வந்து மறைந்தது.​

தன் முன்னே படபடவென பொரிந்தவள் திரும்பி நேர் நடையுடன் வாசலை நோக்கி செல்வதை கண்ட மகாலட்சுமி, “எங்க போற?”.​

அவரின் குரலில் ஆதிரையின் கால்கள் அப்படியே நின்றன. திரும்பி மகாலட்சுமியை என்ன என்பது போல் பார்த்தாள் ஆதிரை.​

மகாலட்சுமி அவளின் பார்வைக்கான அர்த்தத்தை உணர்ந்தவர், “என்னுடைய அத்தையே உன்னை இந்த வீட்டில் இருக்க அனுமதிச்சிருக்காங்கனா ஏதோ ஒரு வகையில் அவங்களுக்கு உன் மேல நம்பிக்கை வந்து இருக்குனு அர்த்தம்”.​

“இது வரைக்கும் அவங்களை மீறி நான் எந்த ஒரு விஷயமுமே செஞ்சது இல்ல.. எல்லாத்துக்கும் மேல என் அத்தை என்ன செஞ்சாலும் அது சரியா தான் இருக்கும் என்ற முழு நம்பிக்கை எனக்கு இருக்கு. அவங்க வார்த்தையை மீறி உன்னை இங்க இருந்து அனுப்புறதுக்கு எனக்கு விருப்பமில்லை”.​

சுப்புலட்சுமி மகாலட்சுமியின் அருகில் விரைந்தவர், “என்னக்கா பேசுறீங்க நீங்க.. அப்போ இந்த பொண்ணு செஞ்சதெல்லாம் தப்பு இல்லைனு சொல்றீங்களா?” என்றார் ஆதங்கமாக.​

தன் மகளின் வாழ்க்கை ஆதிரையினால் இப்படி ஆகிவிட்டதே என்ற கோபம் அவருக்குள் இன்னும் இருக்கின்றது அதன் வெளிப்பாடு தான் இது..​

மகாலட்சுமி, “இந்த பொண்ணு தப்பு செய்யலைனு நான் சொல்லல சுப்பு.. ஒரு அம்மாவா உன் பொண்ணுடைய வாழ்க்கை இப்படி ஆயிடுச்சேனு நீ எவ்வளவு ஆதங்கப்படுறனு எனக்கு புரியுது”.​

“ஆனா, அத்தையே இந்த பொண்ண இங்க இருக்கட்டும்னு சொன்ன பிறகு அவளை இங்க இருந்து நாம அனுப்புறது அவங்களுடைய வார்த்தைக்கு நம்ம மரியாதை கொடுக்காத மாதிரி இருக்கும்”.​

“நாம அவங்களை அவமதித்த மாதிரி ஆகிடும். இந்த பொண்ணு அத்தை சொன்ன மாதிரி இங்கேயே இருக்கட்டும். உனக்கு உன் பொண்ணுடைய வாழ்க்கையை நினைச்சு கவலையா இருக்க மாதிரி தான் எனக்கும் இப்போ என் பையனுடைய வாழ்க்கையை நினைச்சு கவலையா இருக்கு” என்றவர் பெருமூச்சு ஒன்றை விட்டபடி அங்கிருந்து நகர்ந்து விட்டார்.​

சுப்புலட்சுமி செல்லும் மகாலட்சுமியை ஒரு பார்வை பார்த்தவர்..​

ஆதிரையை நோக்கி, “அக்கா அப்படி தான்.. ரொம்ப இலகிய மனசு இருக்கவங்க.. அதான் நீ இவ்வளவு பெரிய தப்பு செஞ்ச பிறகும் கூட உனக்கு அவங்க பாவம் பாக்குறாங்க”.​

“ஆனா, நான் அப்படி கிடையாது. உனக்கு எவ்வளவு தைரியம் இருந்திருந்தால் என் பொண்ணுடைய வாழ்க்கையை இப்படி நாசம் செஞ்சு இருப்ப..” என்றார் கோபமாக.​

இனியா, “அம்மா ஆது மேல எந்த தப்பும் இல்லை.. எல்லாமே என்னோடது தான். நானும் கவினும் ஒருத்தரை ஒருத்தர் ரெண்டு வருஷமா காதலிக்கிறோம்”.​

“அதை உங்ககிட்ட எல்லாம் சொல்லாமல் மறைத்தது என்னுடைய தப்பு தான். ஆது என்கிட்ட இதை பத்தி உங்ககிட்ட முன்னாடியே சொல்ல சொல்லி சொல்லிக்கிட்டு தான் இருந்தாள். நான் தான் அவ பேச்ச கேக்கல..”.​

“உங்க கிட்ட எல்லாம் இதை பத்தி பேச பயமா இருந்துச்சு மா. அதான் இப்படி ஒரு தப்பு பண்ணிட்டேன். நான் பண்ண தப்புக்கு என்னை மன்னிச்சிடுங்க..”.​

சுப்புலட்சுமி, “வாயை மூடு இனியா.. நீ என்ன தான் காரணம் சொன்னாலும் நீ பண்ணது ரொம்ப பெரிய காரியம்.. ரொம்ப பெரிய தப்பு.. அதுக்கு உனக்கு இவ துணை போய் இருக்கிறது அதை விட பெரிய தப்பு”.​

“இந்த வீட்ல என்ன நடக்குதுனு ஒன்னும் புரிய மாட்டேங்குது. நீ என்னடானா எவனையோ காதலிக்கிறேன் என்று கல்யாணம் பண்ணிக்கிட்டு மாலையும் கழுத்துமா வந்து நிக்கிற..”.​

“உன் அண்ணன் என்னடானா இந்த பொண்ணு கழுத்துல தாலிய கட்டி கூப்பிட்டு வந்து நிக்கிறான். எல்லா முடிவையும் நீங்களே எடுக்கிறதுக்கு இந்த வீட்ல பெரியவங்கனு நாங்க எல்லாம் எதுக்கு இருக்கோம்”.​

“உன்னை சொல்லி குத்தம் இல்ல.. பெரியவனே இப்படி ஒரு காரியத்தை செஞ்சிருக்கும் பொழுது உன்னை எல்லாம் நான் என்ன கேட்கிறது” என்று கோபமாக சாடியவர் அங்கிருந்து சென்று விட்டார்.​

செல்லும் சுப்புலட்சுமியையே வெறித்து பார்த்துக் கொண்டிருந்த ஆதிரையின் அருகில் வந்த இனியா, “சாரி டி.. அம்மா ரொம்ப கோபப்படுவாங்க.. அம்மா மட்டும் இல்ல..”.​

“எங்க வீட்ல எல்லாருமே ரொம்ப கோவப்படுவாங்க. ஆனா, பெரியம்மா மட்டும் இவங்க அளவுக்கு கோவப்பட மாட்டாங்க. அவங்க ரொம்ப பாசமா நடந்துப்பாங்க”.​

“இதுக்கு பயந்துகிட்டு தான் நான் இவங்க கிட்ட எல்லாம் என்னுடைய லவ் மேட்டரை பத்தி சொல்லவே இல்ல. இப்போ என்னால் உனக்கு தான் திட்டு விழுது.. சாரி..”.​

அப்பொழுது இவர்களை நோக்கி வந்த இனியாவின் அண்ணன் ஆதவன், “கங்கிராஜுலேஷன்ஸ் இனியா.. ஹேப்பி மேரீட் லைஃப்” என்றான் இன்முகமாக.​

இனியா, “போ அண்ணா.. நீ வேற உன் பங்குக்கு கிண்டல் பண்ணாத.. ஏற்கனவே, நிறைய திட்டு வாங்கிட்டேன்”.​

ஆதவன், “இதெல்லாம் நீ லவ் பண்றதுக்கு முன்னாடியே யோசிச்சு இருக்கணும். அட்லீஸ்ட், கல்யாணம் பண்றதுக்கு முன்னாடியாவது யோசித்து இருக்கணும். பண்றது எல்லாம் பண்ணிட்டு இப்போ பீல் பண்றியா..”.​

ஆதவனின் நடை உடை பாவனை அனைத்தும் கிட்டத்தட்ட ஆருத்ரவர்மனை ஒத்து தான் இருந்தது. ஆனால், அவனிடம் இருக்கும் கடுமை இவனிடம் இல்லை. பார்ப்பதற்கே பழகுவதற்கு மிகவும் மிருதுவானவன் போல் தான் தோன்றினான்.​

அதிலும், அவனின் கிண்டல் பேச்சே கூறியது அவன் அனைவரிடமும் இலகுவாக பழகி விடுவான் என்று..​

தன்னையே ஸ்கேன் செய்து கொண்டு நின்றிருக்கும் ஆதிரையை பார்த்து தன் கையை ஆட்டிய ஆதவன், “ஹலோ என்ன அப்படி பாக்குறீங்க?”.​

ஆதிரை அசடு வழித்தபடி, “ஒன்னும் இல்ல.. பார்க்க நீங்களும் உங்க பெரிய அண்ணா மாதிரி தான் இருக்கீங்க. ஆனா, பேசறது எல்லாம் பார்த்தால் டிஃபரண்டா இருக்குனு பார்த்தேன். நீங்க மட்டும் எப்படி இப்படி இருக்கீங்க?”.​

ஆதவன், “அதான் பண்ண வேண்டியது எல்லாம் நீங்க ரெண்டு பேரும் சேர்ந்து செஞ்சு முடிச்சிட்டீங்களே.. நீங்க செஞ்ச காரியத்துக்கு வாங்க வேண்டிய திட்டையும் வீட்டில் இருக்க மொத்த பேர் கிட்ட இருந்தும் வாங்கிட்டீங்க..”.​

“இப்போ நான் வேற உங்களை திட்ட வேண்டுமா.. இப்போ நான் கோபப்படுறதால் நடந்த எதுவும் மாறிட போறது இல்ல” என்றான் மென் புன்னகையோடு.​

ஆதிரை, “ம்ம்.. சாரி.. இந்த விஷயத்துல என் மேலயும் தப்பு இருக்கு” என்றவளை பார்த்த ஆதவன் தன் சிரிப்பை மிகவும் சிரமப்பட்டு அடக்கியும் அது வெளிவந்துவிட்டது.​

தான் மன்னிப்பு கேட்பதை பார்த்து சிரிக்கும் ஆதவனை புரியாமல் பார்த்த ஆதிரை, “இப்போ எதுக்கு சிரிக்கிறீங்க?”.​

ஆதவன், “இனிமே நீங்க தனித்தனியா ஒவ்வொருத்தர்கிட்டயும் போய் மன்னிப்பு கேட்கணும் என்ற அவசியமே இல்லை” என்றவனை புரியாமல் பார்த்த ஆதிரையின் பார்வைக்கான அர்த்தத்தை உணர்ந்த ஆதவன்.​

“என்ன.. நான் என்ன சொல்ல வரேன்னு உங்களுக்கு புரியலையா.. நீங்க செஞ்ச தப்புக்காக தான் என் அண்ணன் உங்களுக்கு தாலி கட்டி உங்களுக்கு பனிஷ்மென்ட் கொடுத்துட்டானே.. பனிஷ்மென்ட் கிடைச்ச பிறகு எதுக்காக நீங்க வேஸ்டா சாரி கேட்டுக்கிட்டு இருக்கீங்க”.​

அவளிடம் இருந்து பெருமூச்சு ஒன்றே வெளியேறியது. இதற்கு தான் என்ன பதில் கூறுவது என்று அவளுக்கு தெரியவில்லை.​

ஆதவன், “எனிவேஸ், உங்களுக்கும் ஹாப்பி மேரிட் லைப்” என்றான் தன் பற்களை கடித்துக்கொண்டு சிரிப்பை கட்டுப்படுத்தியவாறு.​

ஆதிரை, “என்ன நக்கல் பண்றீங்களா.. உங்க அளவுக்கு உங்க அண்ணனுக்கு பொறுமை இருந்திருந்தால் இப்படி எல்லாம் நடந்திருக்காது. நானும் இங்க வந்து எல்லார் முன்னாடியும் இப்படி நின்று இருக்க சிச்சுவேஷன் வந்திருக்காது” என்றாள் சலித்துக் கொண்டு.​

இனியா, “ஹே.. ஆது.. அண்ணா ரொம்ப நல்லவங்க தான் டி”.​

ஆதிரை, “என்ன உன் அண்ணனுக்கு சப்போட்டா.. அவர் பண்ண காரியத்துக்கு நீ சப்போர்ட் வேற பண்ணுறியா..”.​

இனியா, “தப்பு தான்.. என்ன இருந்தாலும் அண்ணா அப்படி செஞ்சிருக்க கூடாது. எனக்கு உன்னுடைய சிச்சுவேஷன் நல்லாவே புரியுது. பட், நீ பீல் பண்ண கூடாதே என்பதற்காக தான் நான் அப்படி சொன்னேன்”.​

“அண்ணா உன்கிட்ட நடந்துகிட்ட விதம் ரொம்ப தப்பு தான். ஆனா, நான் சொன்ன மாதிரி அண்ணா ரொம்ப நல்லவங்க. எல்லார்கிட்டயுமே ரொம்ப அஃபெக்ஷனா இருப்பாங்க”.​

ஆதிரை அவள் கூறுவதை நம்பாமல் பார்த்தவள், “என்ன உங்க அண்ணனை என் முன்னாடி நல்லவரா காட்டுவதற்காக இப்படி எல்லாம் சொல்றியா” என்றாள் நம்பாத குரலில்.​

ஆதவன், “நோ.. நோ.. எங்க அண்ணன் நிஜமாவே ரொம்ப பாசக்காரன் தான். பார்க்க தான் ரொம்ப டெரர் பீஸ் மாதிரி இருப்பான். பட், உள்ளுக்குள்ள அவனுக்கு இந்த ஃபேமிலி தான் எல்லாமே..”.​

“அவன் கூட பிறக்கலைனாலும் என்னையும், இனியாவையும் அவனுடைய சொந்த தம்பி, தங்கச்சி மாதிரி தான் ட்ரீட் பண்ணுவான்” என்றவனின் வார்த்தையில் அதிர்ச்சியின் உச்சத்திற்கே சென்று விட்டாள் ஆதிரை என்று தான் கூற வேண்டும்.​

ஆதிரை தன் கண்கள் வெளியே விழுந்து விடும் அளவிற்கு பெரிதாக விரித்தவள், “வாட்! நீங்க ரெண்டு பேரும் அவருக்கு கூட பிறந்த தம்பி, தங்கச்சி இல்லையா?”.​

ஆதவன், “எஸ்.. நாங்க என் அண்ணாவுடைய சித்தப்பா பசங்க. பட், வர்மன் அண்ணா எங்களை சொந்த தம்பி தங்கச்சி மாதிரி தான் பாசத்தை காட்டுவார்”.​

“நாங்க எது கேட்டாலும் எங்களுக்கு அது கிடைச்சிடும். அதுவும் இனியா என்றால் வர்மன் அண்ணவுக்கு ரொம்ப பிடிக்கும். அவளுக்கு இப்படி ஒரு கல்யாணம் ஆனதை அவரால் தாங்கிக்கவே முடியல”.​

“இன் பாக்ட், இவ லவ் பண்ற விஷயத்தை அண்ணா கிட்ட சொல்லி இருந்தானா.. அண்ணாவே இவளுக்கு இவ லவ் பண்ற பையன் கூட கல்யாணம் செஞ்சு வச்சு இருப்பார்”.​

ஆதிரை, “நிஜமா தான் சொல்றீங்களா.. அப்புறம் ஏன் டி உங்க அண்ணா கிட்ட நீ சொல்லல”.​

இனியா, “பயமா இருந்துச்சு டி”.​

ஆதிரை, “போடி..” என்றவள் தன் பல்லை கடித்துக் கொண்டு, “ஒழுங்கா உன் அண்ணன்கிட்ட சொல்லி இருந்தால் இவ்வளவு பெரிய பிரச்சனை​

யே வந்து இருக்காது. தேவையில்லாமல் இதுக்கு நடுவுல என்ன வேற இழுத்து விட்டுட்ட..” என்றாள் கடுப்பான குரலில்.​

 

RJ novels

Moderator

அகம் - 8​

இனியா, “வர்மன் அண்ணா ரொம்ப பாசக்காரங்க தான் டி.. ஆனா, நான் காதலிக்கிறேன்னு சொன்னா எப்படி ஒத்துப்பாங்க?”.​

ஆதவன், “ஏன் ஒத்துக்க மாட்டாங்க.. நம்ம பாட்டியே ஒரு ஃபாரினரை தான் கல்யாணம் பண்ணி இருக்காங்க. அதுவும் லவ் மேரேஜ்.. உனக்கு இதெல்லாம் தெரியாதா..”.​

“அட்லீஸ்ட், நீ இதை பத்தி என்கிட்டயாவது சொல்லி இருக்கலாம் இல்ல.. நான் உனக்கு ஏதாவது ஐடியா சஜஸ்ட் பண்ணி இருப்பேன். தேவையில்லாமல் இப்படி கல்யாணத்தையே முடிச்சுட்டு வந்து நிக்கிறீங்க இரண்டு பேரும்”.​

ஆதிரை, “எஸ்.. உனக்கு உன் பெரிய அண்ணா கிட்ட சொல்ல பயமா இருந்தால் என்ன.. அட்லீஸ்ட், இவர்கிட்டயாவது சொல்லி இருக்கலாம் இல்ல.. ஏன் டி இவர்கிட்ட கூட சொல்லாமல் மறைத்த?”.​

இனியா, “அதான் சொன்னேன்ல.. பயமா இருந்துச்சுனு..” என்றாள் தயங்கியபடி.​

ஆதிரை, “போடி.. உன் பயத்துல தீயை வைக்க.. எதைக் கேட்டாலும் பயமா இருந்துச்சு, பயமா இருந்துச்சு இதையே சொல்லு.. எப்போ தான் நீ எல்லாம் தைரியமா இருக்க போறியோ தெரியல”.​

“லவ் பண்றதுக்கு மட்டும் உனக்கு எங்கிருந்து வந்தது தைரியம்.. லவ் பண்ணும் போது இருந்த தைரியம் வீட்ல சொல்லும்போது இல்லையா..”.​

இனியா கண்கள் கலங்கி போய், “இப்போ எதுக்கு நீ என்னை திட்டுற.. நீ தானே கல்யாணம் பண்ணா எல்லா பிரச்சனையும் சரி ஆயிடும்னு சொன்ன”.​

ஆதிரை, “ஆமா.. நான் ஒரு முட்டாள்.. எல்லாத்தையும் சரியா விசாரிச்சு இருக்கணும். நீ பெரிய பணக்கார குடும்பத்து பொண்ணு.. உங்க வீட்ல இருக்குறவங்க எல்லாருமே ரொம்ப கோவக்காரங்க..”.​

“உன்னுடைய லவ்வை பத்தி சொன்னால் வீட்டுல ஒத்துக்க மாட்டாங்க.. வீட்ல உனக்கு வேற மாப்பிள்ளை வேற பார்த்துட்டாங்க.. இப்படி சொல்லும் பொழுது நான் என்னடி செய்ய முடியும்”.​

“அந்த சுச்சுவேஷன்ல உங்க வீட்ல வந்து பேசுனா ஒத்துக்க மாட்டாங்களோனு தோணுச்சு. இப்போ கல்யாணம் பண்ணிட்டு வந்து நிக்கிறதை முன்னாடியே வந்து நின்று இருக்கலாம். அவங்களே உனக்கு கல்யாணம் பண்ணி வச்சு இருப்பாங்க..”.​

ஆதவன், “சரி, சரி.. விடுங்க.. அதான் எல்லாம் நடந்து முடிஞ்சு போச்சே.. இனிமே அதை பத்தி பேசுறதால் நோ யூஸ்..”.​

ஆதிரை, “எப்படி விட முடியும் சார்.. இவளுக்கு கல்யாணம் பண்ண போய் உங்க அண்ணன் கோபத்துல என் கழுத்துல தாலியை கட்டிட்டார். நானும் கோவத்துல அவரோட கிளம்பி வந்துட்டேன். இப்போ எனக்கு என்ன பண்றதுனே தெரியல..” என்றவள்.​

தன் தலையை இரு கைகளாலும் தாங்கியபடி அருகில் இருந்த சோபாவில் பொத்தென்று அமர்ந்தாள்.​

ஆதவன், “இனி ஒன்னும் பண்ண முடியாது ஆதிரை.. அதான் கல்யாணம் ஆயிடுச்சே.. இனிமே, இது தான் உங்க வீடு.. இப்படியே இருந்திடுங்க..”.​

அவனின் வார்த்தையில் அதிர்ந்து அந்த சோபாவில் இருந்து வெடுக்கென்று எழுந்த ஆதிரை, “என்ன சொல்றீங்க சார்? நான் எப்படி இங்க இருக்க முடியும்.. அதுவும் எனக்கும் உங்க அண்ணனுக்கும் எல்லாம் சுத்தமா செட்டாகாது”.​

“ஏற்கனவே, ரெண்டு பேரும் கோவத்துல மாத்தி மாத்தி பேச போய் தான் இங்க வந்து நிக்குது. அவர் கூட நான் இருந்தேன்னா திரும்பவும் ஏதாவது பிரச்சனை தான் நடக்கும்”.​

ஆதவன், “டோன்ட் கால் மி சார்.. ஆதவன்னு பேர் சொல்லியே கூப்பிடலாம். என் வர்மன் அண்ணா உடைய பொண்டாட்டிக்கு என்னை பெயர் சொல்லி கூப்பிட எல்லா உரிமையும் இருக்கு அண்ணி” என்றான் கிண்டல் குரலில்.​

அவனின் ‘அண்ணி’ என்ற விளிம்பில் ஆதிரைக்கு சட்டென்று கண்கள் கலங்கிவிட்டது.​

முதல் முறை இப்படி ஒருவர் தன்னை அழைத்து கேட்கிறாள். முதல் உறவு.. அதுவும் உரிமையோடு.. அவளின் உணர்வுகளை விவரிக்க வார்த்தைகளே இல்லை.​

என்ன தான் கோபத்தில் வர்மன் அவளுக்கு தாலியை அணிவித்தாலும் அது கோபத்தில் நடந்த ஒரு விஷயம் தானே.. அவன் பொண்டாட்டி என்று அழைத்தான் தான்.​

ஆனால், அதில் சற்றும் அன்போ, பாசமோ, காதலோ இல்லை. ஆனால், ஆதவன் ‘அண்ணி’ என்று அழைக்கும் பொழுது ஏதோ ஒரு உரிமை உணர்வு இருந்தது.​

அது தன் அண்ணனின் மனைவியாக ஆதிரையை முழு மனதாக அவன் ஏற்றுக் கொண்டதால் இவளுக்கு அப்படி தோன்றுகிறதோ.. என்னவோ..​

முழு மனதுடன் முதல் முறை உறவு முறை வைத்து ஒருவர் தன்னை அழைக்கவும் ஆதிரைக்கு தொண்டையை எதுவோ அடைப்பது போல் இருந்தது.​

கண்கள் கலங்கியது.. ஏதோ ஒரு இனம் புரியாத பரவசம் மனம் முழுவதும் பரவியது. சட்டென்று அவளின் கண்கள் கலங்கி விடவும்..​

ஆதவன், “என்ன ஆதிரை நான் சும்மா உங்களை கிண்டல் பண்றதுக்காக தான் அப்படி சொன்னேன். உங்களுக்கு என்னை எப்படி கூப்பிடனும்னு தோணுதோ அப்படியே கூப்பிட்டுக்கோங்க நோ ப்ராப்ளம்.. இதுக்கு ஏன் கண் கலங்குறிங்க..”.​

ஆதிரை, “ச்ச.. ச்ச.. அதுக்காக எல்லாம் இல்ல.. இதுவரைக்கும் நான் தங்கி இருக்க அனாதை ஆசிரமத்துக்கு வந்து நிறைய பேர் அவங்களுடைய பர்த்டே, ஆனிவர்சரி இந்த மாதிரி செலிப்ரேஷன்சை கொண்டாடுவதற்கு வருவாங்க..”.​

“அப்போ நிறைய பேரை நான் சந்திச்சிருக்கேன். எல்லாருமே என்கிட்ட உன்னை நான் என் பொண்ணு மாதிரி நினைக்கிறேன்.. உன்னை என் தங்கச்சி மாதிரி நினைக்கிறேன்..”.​

“அக்கா மாதிரி நினைக்கிறேன்.. இப்படி தான் சொல்லி இருக்காங்க.. எல்லாமே மாதிரியோட நின்றுவிடும். ஏன்னா, எதுவுமே உண்மை கிடையாது இல்ல..”.​

“நிறைய பேர் ஃபேமிலியோட வந்து எங்க ஆசிரமத்துல செலிப்ரேட் பண்றதை பார்க்கும் பொழுது எனக்கும் ரொம்ப ஆசையா இருக்கும். இந்த மாதிரி ஒரு ஃபேமிலி எனக்கும் இருந்திருக்கலாமேனு தோணும்”.​

“ஆனா, இப்போ நீங்க அண்ணி என்று சொன்னதும் எனக்கு எப்படி ரியாக்ட் பண்ணுவது என்று தெரியவில்லை. என் லைஃப்லையே ஃபர்ஸ்ட் டைம் இந்த மாதிரி ஒரு ஃபீலிங்ஸை நான் எக்ஸ்பிரியன்ஸ் பண்றேன்”.​

ஆதவன், “டோன்ட் வொரி ஆதிரை.. உங்களை இதுவரைக்கும் எல்லாரும் வேணும்னா அக்கா மாதிரி, தங்கச்சி மாதிரி, பொண்ணு மாதிரினு சொல்லி இருக்கலாம்”.​

“ஆனா, இனிமே அப்படி இருக்காது. உங்களுக்குனு ஒரு சர்க்கிள் ஆஃப் ரிலேஷன்ஸ் கிடைச்சிருக்காங்க.. எங்க அண்ணனுக்கும் உங்களுக்கும் எப்படி கல்யாணம் நடந்திருந்தாலும் சரி.. நடந்தது நடந்தது தான்..”.​

“இப்போ உங்களுக்கு உரிமையான உறவு நிறைய பேர் இருக்காங்க.. அத்தை, மாமா, நாத்தனார், கொழுந்தனார், சின்னத்த, சின்ன மாமா, பாட்டி எல்லாருமே கிடைச்சிருக்காங்க. அது மட்டும் இல்ல.. எங்களுக்கு ரிலேட்டிவ்ஸ் வேற ரொம்ப அதிகம்”.​

அவனின் வார்த்தையில் ஆதிரையின் இதழில் மென் புன்னகை ஒன்று படர்ந்தது.​

இனியா, “பாத்தியா.. என் அண்ணா உன் கழுத்துல தாலி கட்டிட்டார்னு அவரை திட்டுனல.. இப்போ பாரு அவரால் தான் உனக்கு இவ்வளவு ரிலேட்டிவ்ஸ் கிடைச்சிருக்காங்க”.​

ஆதிரை அவளை விளையாட்டாக முறைத்து பார்த்தவள், “அதுக்காக உன் அண்ணன் பண்ணது சரினு ஆகிடாது. உனக்கு நான் மேரேஜ் பண்ணி வச்சேன்னா..”.​

“நீங்க ரெண்டு பேருமே மியூச்வலா லவ் பண்ணீங்க.. அதனால் நான் செஞ்சு வச்சேன். ஆனா, உன் அண்ணன் செஞ்சது எல்லாம் ரொம்ப அநியாயம்..”.​

“என்கிட்ட ஒரு வார்த்தை கூட கேட்கல.. அவரை பத்தி எனக்கு ஒண்ணுமே தெரியாது. அவர் பாட்டுக்கு தாலி கட்டிட்டார்”.​

இனியா மெதுவான குரலில், “இருந்தாலும், நீயும் கொஞ்சம் அண்ணா கிட்ட பார்த்து பேசி இருந்திருக்கலாம்.. நீயும் கொஞ்சம் ஓவரா தான் நடந்துகிட்ட ஆது”.​

ஆதவன் இனியாவிடம், “அப்படியா! என்ன நடந்துச்சு இனியா கொஞ்சம் கிளியரா சொல்லேன்”.​

பிறகு, ரிஜிஸ்டர் ஆபீஸில் நடந்த மொத்த கதையையும் இனியா ஆதவனிடம் கூற.​

ஆதவன் பிரம்மிப்பாக ஆதிரையை பார்த்துக் கொண்டு, “வாவ்! ஏதோ படத்துல வர சீன் பார்த்த மாதிரியே இருக்கு.. ரெண்டு பேருக்குமே வாய் ரொம்ப அதிகம் போல இருக்கே..” என்று கூறி நகைக்க.​

அவனை முறைத்து பார்த்த ஆதிரை, “இருந்துட்டு போகட்டுமே.. எதுவாயிருந்தாலும் பேச்சு பேச்சா தானே இருந்திருக்கணும். உங்க அண்ணா இப்படி பொசுக்குனு தாலி கட்டுவார் என்று நான் என்ன கனவா கண்டேன்”.​

இனியா, “ஆமா அண்ணா.. இருந்தாலும், இவளுக்கு கொஞ்சம் வாய் அதிகம் தான். காலேஜ்ல கூட யாருக்குமே பயப்பட மாட்டாள். ஸ்டாப் யாராவது கிளாசுக்கு லேட்டா வந்தாங்கனா அவங்களையே கொஸ்டின் பண்ணுவா.. ரொம்ப தைரியமான பொண்ணு இவ”.​

ஆதவன், “ஓ! உங்க ஹிஸ்டரி ரொம்ப பயங்கரமா இருக்கும் போலயே” என்றான் ஆதிரையை பார்த்து கிண்டலாக.​

ஆதிரை, “அப்படியெல்லாம் ஒன்னும் இல்ல ஆதவ்.. தப்பு பண்றவங்ககிட்ட கேள்வி கேக்குறது ஒன்னும் தப்பில்லையே.. நான் இதுவரைக்கும் யார்கிட்டயும் தேவையில்லாமல் கோபப்பட்டது கிடையாது. நான் கோபப்பட்டு பேசி இருக்கேன்னா அதுக்கு ரீசன் கரெக்ட்டா தான் இருக்கும். வேணும்னா உங்க தங்கச்சிகிட்டயே கேட்டு பாருங்க..”.​

இனியா, “ஆமா அண்ணா.. தேவையில்லாமல் கோபப்பட மாட்டாள். கொஞ்சம் நல்லவள் தான்”.​

ஆதிரை, “அதே மாதிரி தான் உங்க அண்ணா கிட்டயும் பேசினேன். அவரும் ரொம்ப ஓவரா பேசிட்டார்.. அதான் கோபத்துல நானும் ரெண்டு வார்த்தை பேசிட்டேன். அதுக்காக இப்படியா தாலி கட்டுவாங்க..” என்றாள் சிடுசிடுப்பாக.​

ஆதவன் இப்பொழுது சத்தமாக நகைக்க தொடங்கி விட்டான். ஏதோ ஆதிரையிடம் அவனால் மிகவும் இலகுவாக பழக முடிந்தது. வேற்று ஆளாக அவளை பார்க்க தோன்றவில்லை.​

ஆதிரையுமே ஆதவனிடம் எளிதில் பழகிவிட்டாள் என்று தான் கூற வேண்டும்.​

ஆதவன் சிரிப்பினோடு, “இனியா இனிமே நம்ம வீட்ல நிறைய ஃபன் இருக்கும். நமக்கு நல்லா டைம் பாஸ் ஆகிடும் பாரு..”.​

ஆதிரை, “என்னுடைய லைஃபை பார்த்தால் உங்களுக்கெல்லாம் சிரிப்பா இருக்கு இல்ல..”.​

அப்பொழுது வெளியே செல்வதற்காக தயாராகி ஃபார்மல்ஸில் வந்து நின்ற ஆருத்ர வர்மனை கண்டுகொள்ளாமல் நின்றிருந்தாள் ஆதிரை.​

ஆருத்ரவர்மனுக்கு அங்கே சிரித்து பேசியபடி நின்றிருக்கும் ஆதவனை பார்க்க கோபம் தலைக்கேறியது.​

கோபத்தோடு, “ஆதவ் இங்க என்ன பண்ணிக்கிட்டு இருக்க? கிளைன்ட் மீட்டிங்கிற்கு டிலே ஆகுது” என்றான் சீறும் குரலில்.​

ஆதவன் சட்டென்று தன் சிரிப்பை அடக்கிக் கொண்டவன், “நான் ரெடி தான் அண்ணா” என்றான் நல்ல பிள்ளையாக.​

ஆருத்ர வர்மன் இனியாவையும், ஆதிரையையும் முறைத்து பார்த்துவிட்டு அங்கிருந்து சென்று விட்டான்.​

ஆதிரை, ‘எப்​

படி முறைச்சிட்டு போறார் பாரு.. இவர் கூட எல்லாம் யாரு வாழ முடியும்.. சரியான சைக்கோ..’ என்று கோபமாக முணுமுணுத்தாள்.​

 

RJ novels

Moderator

அகம் - 9​

தன் அண்ணன் முறைத்து விட்டு சென்றதும் முகம் வாடிய இனியாவை பார்த்த ஆதிரை, “சரி வா.. கிளம்பலாமா..” என்றாள் சாவகாசமாக.​

இனியா, “எங்கடி.. எங்க கிளம்பலாம் என்று கேட்கிறாய்?” என்றாள் புரியாமல்.​

ஆதிரை அவளின் தோளில் கையை போட்டு தன்னுடன் இருக்கியவள், “உன்னுடைய ரூமுக்கு தான்..”.​

இனியா அவளின் கையை தட்டி விட்டவள் “எதுக்கு?”.​

ஆதிரை, “என்ன எதுக்குனு கேக்குற.. உங்க வீட்டில் ஸ்டே பண்ண வந்து இருக்கேன். வேற எங்கே தங்குவதாம். உன்னுடைய ரூமில் தானே தங்க முடியும்” என்றவளை மேலிருந்து கீழ் ஒரு பார்வை பார்த்த இனியா.​

“என்ன அண்ணி மறந்துட்டீங்களா.. நீங்க கல்யாணம் பண்ணி இந்த வீட்டுக்கு வந்து இருக்கிறது என்னுடைய அண்ணன் ஆருத்ர வர்மனை தான். என்னை ஒன்னும் கிடையாது..”.​

“உங்களுக்கு இங்கே தங்கனும்னா நீங்க என்னுடைய அண்ணன் ரூமில் தான் தங்கனும். அதை விட்டுட்டு என்னுடைய ரூமுக்கு வரேன்னு சொல்றீங்க” என்றாள் கிண்டல் குரலில்.​

ஆதிரை அவளை முறைத்து பார்த்தவள், “திரும்பத் திரும்ப அதை ஞாபகம் காட்டாதே வாயை மூடிக்கிட்டு ஒழுங்கா உன் ரூம் எங்க இருக்குனு காட்டு.. செம டென்ஷன்ல நானே ரொம்ப டயர்டா இருக்கேன்”.​

“இருக்க டயர்ட்க்கு ஒரு தூக்கத்தை போட்டால் தான் மைண்ட் கொஞ்சம் ரிப்ரெஷ் ஆன மாதிரி இருக்கும்” என்றவளை ஆச்சரியமாக பார்த்த இனியா.​

“எப்படி டி நீ இப்படி இருக்க?” என்றாள் ஆயாசமாக.​

ஆதிரை தன் ஒற்றைப் புருவத்தை மேல் நோக்கி தூக்கியவாறு, “எப்படி இருக்கேன்”.​

இனியா, “எவ்வளவு பெரிய விஷயம் நடந்திருக்கு. எனக்காவது பரவாயில்லை லவ் மேரேஜ்.. ஆனா உனக்கு யாருனே தெரியாத ஒருத்தர் தாலி கட்டி இருக்கார். நீ என்னடானா அந்த டென்ஷன் கொஞ்சம் கூட இல்லாமல் தூங்க போறேன்னு சொல்ற”.​

ஆதிரை, “நான் எதுக்கு டென்ஷன் ஆகணும். என் கழுத்துல தாலியை கட்டுனதுக்காக இனி தினம் தினம் உன் அண்ணன் எப்படி டென்ஷன் ஆக போறார்னு பாரு” என்றாள் வன்மமாக கூறுவது போல் விளையாட்டாக.​

இனியா, “இப்படி எல்லாம் பேசாதே.. இதெல்லாம் உனக்கு கொஞ்சம் கூட செட்டே ஆகல” என்றவளை முறைத்து பார்த்தவள்.​

“ரொம்ப பேசாம வாடி..” என்று இழுத்து சென்றாள் ஆதிரை.​

இனியாவின் அறைக்கு சென்றதுமே கட்டிலில் குப்புற படுத்தவள் தான்.. எழுந்திரிக்க சாய்ந்திரம் ஆகிவிட்டது. தூக்க கலக்கத்தில் எழுந்து அமர்ந்தவளுக்கு தான் இருக்கும் இடம் பிடிபடவே சற்று நேரம் பிடித்தது.​

அதன் பிறகு தன் கழுத்தில் தொங்கிக் கொண்டிருக்கும் மஞ்சள் கயிற்றை பார்த்தவளுக்கு அனைத்தும் புரிய.. சலிப்பாக தன் தலையை ஆட்டிக் கொண்டாள்.​

‘வாயை வச்சுக்கிட்டு சும்மா இல்லாமல் என்ன காரியம் பண்ணி வச்சிருக்கனு பாரு.. இப்போ அடுத்து என்னன்னே தெரியல.. இங்க இருக்கிறதா.. இல்லை இங்கிருந்து போறதா.. உனக்கு ஏன் தான் இவ்வளவு கோபம் வருதோ தெரியல.. கொஞ்சம் நிதானமாய் இருந்திருக்கலாம்’ என்று தனக்குத்தானே அறிவுரையை கூறிக்கொண்டு அமர்ந்திருந்தாள்.​

இதே நேரம் அலுவலகத்தில் ஆருத்ர வர்மனோ கோபமாக அமர்ந்திருந்தான். அலுவலகம் வந்தது முதல் அங்கே பணிபுரியும் அனைவரையும் தாளித்து தொங்க விட்டுக் கொண்டிருக்கிறான் என்று தான் கூற வேண்டும்.​

தனக்கு இருக்கும் கோபம் மொத்தத்தையும் மற்றவர்களிடம் காட்டிக் கொண்டிருந்தான். அவனின் கோபத்தை தாக்கு பிடிக்க முடியாமல் அனைவரும் அவனைக் கண்டாலே தெரித்து ஓடினர்.​

ஆதவன், “அண்ணா ஏன் இவ்வளவு கோபப்படுறீங்க?”.​

வர்மன் அவனுக்கு எதுவும் பதில் அளிக்காமல் உர்ரென்று அமர்ந்திருக்க.​

ஆதவன், “அண்ணா எனக்கு உங்களுடைய சிச்சுவேஷன் புரியுது. பட் இருந்தாலும் நீங்க கொஞ்சம் நிதானமாய் இந்த விஷயத்தை ஹேண்டில் பண்ணி இருக்கலாம்”.​

வர்மன், “எப்படிடா நிதானமாக ஹேண்டில் பண்ண சொல்ற? அவளுக்கு எவ்வளவு திமிர் இருந்தால் நம்ம இனியாவுக்கு ஏதோ அனாதை மாதிரி யாரும் இல்லாமல் ரிஜிஸ்டர் ஆபீஸ்ல வச்சு கல்யாணம் செஞ்சு வச்சுருக்கா..”.​

“அவளை மாலையும் கழுத்துமா பார்க்கும்போது எனக்கு எப்படி இருந்துச்சு தெரியுமா.. அவ்வளவு கோபம், ஆத்திரம் அவ மேல வந்துச்சு. அவளை கொன்னு போடுற அளவுக்கு ஆத்திரம் வந்துச்சு..”.​

“விட்டு இருந்தா அவளை அங்கேயே சாவடிச்சிருப்பேன். செஞ்சதோட இல்லாமல் என்கிட்ட எவ்வளவு திமிரா பேசினாள் தெரியுமா.. இடியட்..”.​

“இவ்வளவு பெரிய குடும்பம் அவளுக்கு நாம இருக்கோம். அவளுக்கு கல்யாணம் பண்ணி வைக்க நமக்கு தெரியாதா.. அவ யாரு அவளுக்கு கல்யாணம் செஞ்சு வைக்க..”.​

ஆதவன், “அவ இனியாவோட ஃப்ரெண்டு.. அவகிட்ட இவ சொல்லி அழுது இருக்கா.. அதனால் அவ செஞ்சு வச்சுருக்கா..”.​

வர்மன் அழுத்தமாக, “இருக்கட்டுமே.. கல்யாணம் என்பது என்ன சாதாரண விஷயமா.. இப்படி யார்கிட்டயும் சொல்லாம அவ இஷ்டத்துக்கு செஞ்சு வச்சிருக்கா” என்றவனை அவனின் மனசாட்சி, ‘நீயும் அதே காரியத்தை தானே செய்திருக்கிறாய்’ என்று பல்லை காட்டி சிரித்தது.​

ஆதவன், “அண்ணா அப்படி பார்த்தா அந்த பொண்ணு உங்களையும் பார்த்து இதே கேள்வியை கேட்கலாம் இல்லையா..” என்றவனை உருத்து விழித்தவன்.​

“நான் செஞ்சதும் அவ செஞ்சதும் ஒன்னும் கிடையாது ஆதவ். நான் அவ கழுத்துல தாலி கட்டினதுக்கு காரணம் அவ செஞ்ச தப்பை அவளுக்கு உணர்த்த தான்”.​

“ஆனால், என்னுடைய கெட்ட நேரம் அவளுக்கு பேரன்ட்ஸே இல்லையாம். அது தெரியாமல் அவசரத்துல அவ கழுத்துல தாலியை வேற கட்டி தொலைச்சிட்டேன்” என்றவன் தன் சிகையை அழுந்த கோதினான்.​

ஆதவன், “சரி அண்ணா விடுங்க.. நடந்தது நடந்து போச்சு.. அவங்க கிட்ட பேசிப் பார்த்தேன். அவங்களும் நல்லவங்களா தான் இருக்காங்க. என்ன அவங்களுக்கும் உங்களை மாதிரியே கோபம் மட்டும் அதிகமா வருது”.​

வர்மன், “அவ பண்ண வேலைக்கு அவளுக்கு கோபம் வேற வருதா..”.​

ஆதவன், “சரி அண்ணா இப்போ என்ன பண்ணலாம்னு நினைக்கிறீங்க?”.​

வர்மன், “தெரியல டா.. பாட்டி வேற அவளை வீட்டை விட்டு அனுப்ப கூடாதுனு சொல்றாங்க. அவசரப்பட்டு தேவையில்லாத விஷயத்தை எல்லாம் பண்ணி தொலைச்சுட்டேன். இப்போ என்ன செய்றதுனு தெரியல..”.​

தன் அண்ணனை முதல் முறை இவ்வளவு பதட்டமாக பார்க்கிறான் ஆதவன். எவ்வளவு பெரிய பிரச்சினையாக இருந்தாலும் கூலாக கையாள்பவனை இப்படி பார்க்க ஆதவனிற்கே பெரும் ஆச்சரியமாக தான் இருந்தது.​

இனியா, “என்னடி எழுந்திரிச்சிட்டியா?” என்றவள் கையில் ஒரு காபி கப்புடன் அறைக்குள் நுழைய.​

தாவி குதித்து கட்டிலில் இருந்து இறங்கியவள்.​

அவள் கையில் இருந்த காபி கப்பை வாங்கி ஒரு மிடர் அருந்தியவாறு, “வாவ்! சூப்பரா இருக்குடி.. இதுவரைக்கும் இப்படி ஒரு காபியை நான் குடிச்சதே இல்ல.. பேஷ்.. பேஷ்.. ரொம்ப அருமையா போட்டு இருக்க” என்றாள் புகழ்ச்சியாக.​

இனியா அவளை முறைத்து பார்த்தவள், “இது நான் எனக்காக கொண்டு வந்த காபி”.​

ஆதிரை, “அதனால் என்ன.. உன் அண்ணிக்காக ஒரு காபி கூட தர மாட்டியா..” என்றவள் மீண்டும் ஒரு வாய் அந்த காபியை அருந்தியவள்.​

அதன் வாசத்தை பிடித்தவாறு, “வாவ்! செமையா இருக்கு இனி.. உனக்கு இவ்வளவு சூப்பரா காபி போட கூட தெரியுமா..” என்றாள் ஆச்சரியமாக தன் கண்களை விரித்து பார்த்து.​

இனியா, “இது ஒன்னும் நான் போட்ட காபி இல்ல.. பெரியம்மா போட்டு கொடுத்தாங்க”.​

ஆதிரை, “அதானே பார்த்தேன்.. எங்க உனக்கு இந்த அளவுக்கு எல்லாம் காபி போட தெரியுமோனு ஆச்சரியமாகிடுச்சு” என்றவள்.​

“என்ன குடும்பத்தோடு ஒன்னு சேர்ந்துட்ட போலருக்கே”.​

இனியா, “அதெல்லாம் ஒன்னும் இல்ல.. பெரியம்மா கொஞ்சம் சாப்டான ஆள் தான். அதனால் அவங்க மட்டும் பேசிட்டாங்க.. மத்தவங்க எல்லாம் இன்னும் ரொம்ப கோவமா தான் இருக்காங்க”.​

“பாட்டி சும்மா வளவளனு எல்லாம் பேச மாட்டாங்க.. அம்மா, அப்பா எல்லாம் கோவமா தான் டி இருக்காங்க” என்றவள் சோகமாக சென்று அந்த இருக்கையில் அமர.​

கட்டிலின் விளிம்பில் அமர்ந்த ஆதிரை, “அதுக்கு என்ன பண்றது.. இதெல்லாம் கல்யாணம் பண்றதுக்கு முன்னாடி யோசிச்சு இருக்கணும்”.​

இனியா கோபமாக மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்கியவாறு அவளை பார்த்து முறைத்தவள், “சொல்லுவ டி.. சொல்லுவ.. கல்யாணத்தை நடத்தி வச்சதே நீ தானே.. இப்போ என்னை சொல்லுறியா”.​

ஆதிரை, “நான் ஆயிரம் சொல்லி இருந்தாலும் உனக்கு எங்க போச்சு புத்தி.. நீ, உன் அண்ணன் எல்லாம் ஒரே மாதிரி தான் போலருக்கு.. உங்களுக்குனு சுய புத்தியே கிடையாது”.​

“உங்க அண்ணன் என்னடானா எனக்கு பனிஷ்மென்ட் கொடுப்பதற்காக தாலியை கட்டினேன்னு சொல்லுறார். நீ என்னடானா என் பேச்சைக் கேட்டு தாலி கட்டிக்கிட்டேன்னு சொல்ற.. ஏன் உங்க ரெண்டு பேருக்கும் சுய புத்தியே கிடையாதா”.​

இனியா, “ஆது என்னை பத்தி என்ன வேணும்னாலும் பேசு.. ஆனா, என் வர்மன் அண்ணாவை பத்தி ஏதாவது பேசுன அப்புறம் நான் கோவத்துல என்ன பண்ணுவேன்னே தெரியாது சொல்லிட்டேன்”.​

ஆதிரை தான் குடித்து முடித்த காபி கப்பை டேபிளின் மீது வைத்தவள், “ஓ! உனக்கு உன் அண்ணன் மேல அவ்வளவு பாசம் இருந்தால் அவர் கிட்டயே நேரடியா போய் உன் காதல் கதையை எல்லாம் சொல்ல வேண்டியது தானே.. எதுக்கு டி என்கிட்ட சொல்லி அழுத”.​

“அவ உன்கிட்ட அழுதா.. உடனே அவளுக்கு கல்யாணம் செஞ்சு வச்சுடுவியா?” என்றவனின் குரலில் இருவருமே திரும்பி அறை வாசலை பார்க்க.​

ஆருத்ரவர்மன் தன் கைகளை கட்டிக் கொண்டு கோபமாக முறைத்து பார்த்தபடி நின்று இருந்தான்.​

ஆதிரை, ‘வந்துட்டாரா.. இவருக்கு வேற வேலையே இல்லை. என்கிட்ட சண்டை போடணும்னா உடனே வந்திடுவார் போலருக்கு’.​

வர்மன், “உன் கிட்ட தானே கேட்டுக்கிட்டு இருக்கேன் பதில் சொல்லு.. யாருக்கு சுய புத்தி கிடையாதுனு சொல்ற.. உனக்கு தான் சுய புத்தி கிடையாது”.​

ஆதிரை, “ஹலோ மிஸ்டர் பார்த்து பேசுங்க”.​

வர்மன், “என்ன டி என்ன பார்த்து பேசணும்.. உன் இஷ்டத்துக்கு நீ என்ன வேணும்னாலும் பேசுவ.. என்ன என் பாட்டி உனக்கு சப்போர்ட் பண்ணதும் ரொம்ப திமிர் வந்திடுச்சா..”.​

ஆதிரை, “இங்க பாருங்க.. இந்த வாடி போடினு கூப்பிடுற வேலை எல்லாம் வேண்டாம்”.​

வர்மன், “அப்படி தான் டி கூப்பிடுவேன்.. அதான் நீ சொன்ன மாதிரி லைசன்ஸ் வாங்கிட்டேனே” என்றவனை புரியாமல் பார்த்த ஆதிரைக்கு தன் கண்களால் அவளின் கழுத்தில் மின்னிக் கொண்டிருக்கும் அந்தத் தாலி கயிற்றை காண்பித்தான்.​

ஆதிரை, “யோவ்! என்ன தாலி கட்டிட்டா உங்க இஷ்டத்துக்கு என்ன வேணும்னாலும் பேசலாம்னு நினைச்சுட்டு இருக்கீங்களா”.​

வர்மன், “நீ தான பொண்டாட்டியா இருந்தால் வாடி போடினு பேசலாம்னு சொன்ன.. இப்போ நீ என் பொண்டாட்டி தான டி” என்னும் பொழுதே, “வர்மா!” என்று அதிகாரமாக ஒலித்தது அவனின் பாட்டி​

யின் குரல்.​

அதில், இருவருமே அதிர்ந்து போய் திரும்பி பார்க்க. அகிலாண்டேஸ்வரி தான் இவர்களை முறைத்துக் கொண்டு நின்று இருந்தார்.​

 

RJ novels

Moderator

அகம் - 10​

“வர்மா!” என்ற அதிகார குரலில் ஆதிரையும் ஆருத்ர வர்மனும் ஒருசேர குரல் வந்த திசையை நோக்கி திரும்ப..​

அகிலாண்டேஸ்வரி பாட்டி தான் கோபமாக நின்று இருந்தார். வழக்கம் போல் அவரின் கம்பீர தோரணையில் ஆதிரை மெய் மறந்து அவரை பார்த்தாள்.​

அகிலாண்டேஸ்வரி, “என்ன இது வர்மா.. சின்ன பசங்க மாதிரி இரண்டு பேரும் சரிக்கு சமமா சண்டை போட்டுக்கிட்டு இருக்கீங்க..” என்றவருக்கும் தன் பேரனை இப்படி காண்பதில் உள்ளே மகிழ்ச்சியாக தான் இருந்தது.​

ஆருத்ர வர்மன், “பாட்டி எல்லாம் இவளால் தான்” என்றான் அங்கே நின்றிருந்த ஆதிரையை கை காண்பித்து குற்றம் சாட்டுவது போல்.​

ஆதிரை, “நான் என்ன பண்ணேன்.. பாட்டி நான் பாட்டுக்கு இனியா கூட தான் பேசிகிட்டு இருந்தேன். இவர் தான் வேணும்னே என்கிட்ட வந்து சண்டை போடுகிறார்” என்றாள் தன் பங்கிற்கு.​

அகிலாண்டேஸ்வரி, “நீ இனியா ரூமில் என்ன பண்ணிக்கிட்டு இருக்க? உனக்கு இனியா உடைய ரூமில் என்ன வேலை?”.​

ஆருத்ர வர்மனோ இந்த கேள்விக்கு எங்கே பதில் சொல் பார்ப்போம் என்பது போல் ஆதிரையை நோக்கி ஒரு பார்வையை வீச.​

ஆதிரை, “பாட்டி.. அது வந்து..” என்று தடுமாறினாள்.​

அகிலாண்டேஸ்வரி, “இங்க பாருமா.. உனக்கு கல்யாணம் நடந்திருக்கிறது என்னுடைய வர்மன் கூட.. நீ வர்மனுடைய ரூமில் தானே தங்கனும்.. அதை விட்டுட்டு எதுக்காக இனியாவுடைய ரூமில் தங்கி இருக்க?”.​

ஆதிரை, “ஐயோ பாட்டி! ஒரு நிமிஷம் நான் சொல்றதை கொஞ்சம் கேளுங்க.. எனக்கும் அவருக்கும் சுத்தமா சரி வராது. ஏதோ ஒரு கோவத்துல வீம்புக்காக அவரோடு கிளம்பி வந்துட்டேன். லைப் லாங் எங்களுக்குள்ள ஒத்துப்போகமானு தெரியல.. இதையெல்லாம் இப்போவே முடிச்சுக்கலாமே”.​

அவளின் வார்த்தையில் ஆருத்ர வர்மனுக்கு முகம் பிரகாசமாக.. இவ்வளவு நேரம் அவன் முகத்தில் குடி கொண்டிருந்த கடுமையும் இருந்த இடம் தெரியாமல் மறைந்து போனது.​

ஆருத்ரவர்மன், “ஆமா பாட்டி.. அவளே பண்ண தப்பை உணர்ந்து இந்த லைஃப் வேண்டாம் என்று சொல்லுறா இல்ல விட்டுவிடலாமே.. விருப்பம் இல்லாதவங்களை எதுக்காக போர்ஸ் பண்ணனும்” என்றவனின் வார்த்தையில் ஆதிரைக்கு சுர்ரென்று கோபம் வந்தது.​

“யார் தப்பு பண்ணா.. நான் எந்த தப்பும் பண்ணல.. தப்பு மொத்தமும் உங்க பேர்ல தான் இருக்கு” என்றாள் வர்மனை உருத்து விழித்தபடி.​

ஆருத்ர வர்மன், “நான் என்ன தப்பு பண்ணேன்.. தப்பு பண்ணது நீ தான்.. நீ மட்டும் இனியாவுக்கு கல்யாணம் பண்ணி வைக்காமல் இருந்திருந்தால் இவ்வளவு பெரிய பிரச்சனையே நடந்திருக்காது”.​

ஆதிரை, “சரி, நான் தான் தப்பு பண்ணிட்டேன். உங்களை யாரு எனக்கு தாலி கட்ட சொன்னா.. நான் செஞ்சது தப்புன்னா நீங்க செஞ்சது அதை விட பெரிய தப்பு..”.​

“நானாவது விருப்பப்பட்டவங்களுக்கு கல்யாணம் செஞ்சு வச்சிருக்கேன். ஆனா, நீங்க எனக்கு விருப்பமே இல்லாமல் தாலி கட்டி இருக்கீங்க” என்று படபடவென பொரிந்து தள்ளினாள்.​

ஆருத்ரவர்மன், “இப்போ என்னடி.. என் மேல தான் தப்பு என்று சொல்லுறியா..” என்றான் ஆதிரையை நோக்கி இரண்டு எட்டு எடுத்து வைத்தவாறு அவள் முகத்தருகே அவளை நேர் பார்வை பார்த்தபடி.​

ஆதிரையும் தன் கைகளை கட்டியபடி அவனை நெஞ்சை நிமிர்த்தி கொண்டு பார்த்தவாறு, “ஏன்.. இல்லைனு சொல்றீங்களா..”.​

ஆருத்ர வர்மன், “ச்ச.. உன்கிட்ட மனுஷன் பேச முடியுமா..”.​

ஆதவன், “அண்ணா.. அண்ணா.. கொஞ்சம் பொறுமையா இருங்க”.​

ஆருத்ர வர்மன், “அதை அவ கிட்ட சொல்லுடா”.​

ஆதவன், “ஆதிரை நீங்களாவது கொஞ்சம் பொறுமையா இருங்களேன்”.​

ஆதிரை, “ஆதவ் என் மேல எந்த தப்பும் இல்லை. இவர் தான் நான் சும்மா இருந்தாலும் என்னை தேடி வந்து வம்பு பண்றார். திரும்பவும் அவரை என்கிட்ட வம்பு பண்ண வேணாம்னு சொல்லுங்க..”.​

ஆருத்ர வர்மன், “ஆமா.. எனக்கு ஆசை பாரு.. நீ எங்க இருக்கனு தேடி வந்து உன்கிட்ட வம்பு செய்ய”.​

ஆதிரை, “இப்போ அதை தானே பண்ணிக்கிட்டு இருக்கீங்க..”.​

ஆருத்ர வர்மன் தன் கோபத்தை அடக்கிய குரலில், “பாட்டி இதெல்லாம் சரி வராது.. அவளே அவ செஞ்ச தப்பை உணர்ந்து என் கூட இருக்க பயந்துகிட்டு என்னோட வாழ முடியாதுனு போறேன்னு சொல்றா இல்ல..”.​

“அப்படியே விட்டு தொலைங்களேன்.. எதுக்காக அவளை இங்கே இருக்க வைக்கணும்னு பாக்குறீங்க” என்றவனின் வார்த்தையில் ஆதிரை வெகுண்டு எழுந்து விட்டாள் என்று தான் கூற வேண்டும்.​

கோபமாக உஷ்ண பெருமூச்சோடு, “யாருக்கு பயம்.. எனக்கெல்லாம் எந்த பயமும் இல்லை” என்றவள்.​

அகிலாண்டேஸ்வரியிடம், “பாட்டி யாரைப் பார்த்தும் எனக்கு எந்த பயமும் இல்லை. நான் இங்கேயே இருக்கேன்.. எனக்கு இவர் தானே தாலி கட்டி இருக்கிறார். இவரோடவே இங்கேயே இருக்க எனக்கு முழு சம்மதம் தான்..”.​

“உங்க பேரனுக்கு என்னோட இருக்க பயமா இருக்கானு கேட்டு சொல்லுங்க.. அவருக்கு பயமா இருந்தா வேணும்னா நான் இங்க இருந்து போறதை பத்தி யோசிக்கிறேன்” என்றவளின் வார்த்தையில் வர்மனுக்கு முகம் கோபத்தில் செவ்வண்ணம் பூசிக் கொண்டது.​

“ஏய்! என்னடி திமிரா.. யாருக்கு பயம்.. எனக்கு ஒன்னும் பயமில்லை.. நீ தானே கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி என் பாட்டி கிட்ட சொன்ன.. இதெல்லாம் சரி வராது இதை இதோட முடிச்சுக்கலாம்னு.. இப்போ எனக்கு பயம்னு சொல்றியா”.​

ஆதிரை, “ஆமா சொன்னேன்.. இப்படி கடுகடு என்று கடுவன் பூனை மாதிரி சுத்துற மனுஷன் கூட எல்லாம் எப்படி வாழ முடியும். அதனால் தான் அப்படி சொன்னேன். மற்றபடி, எனக்கு ஒன்னும் உங்களை பார்த்து எந்த ஒரு பயமும் கிடையாது”.​

இனியாவோ படபடக்கும் இதயத்துடன் இவர்களுக்குள் காரசாரமாக நடக்கும் வாக்குவாதத்தை அதிர்ந்து பார்த்துக் கொண்டு நின்று இருந்தாள்.​

‘ஐயோ! என்ன இவ இப்படி அண்ணா கிட்ட சண்டை போடுறா.. இவங்க ரெண்டு பேரோட பஞ்சாயத்து ஒரு முடிவுக்கு வராது போலருக்கே’ என்று எண்ணியபடி தன் பாட்டி ஏதாவது செய்து இவர்களை தடுப்பார் என்று அவரைப் பார்த்தாள்.​

ஆனால், அவரோ நடப்பவற்றை சுவாரசியமாக பார்த்துக் கொண்டு நின்று இருந்தார்.​

ஆருத்ரவர்மன், “யாரை பார்த்து டி கடுவன் பூனைனு சொல்ற.. நீ தான் பஜாரி மாதிரி கத்திக்கிட்டு இருக்க.. உன்னை மாதிரி வாயாடி கூட எல்லாம் தான் யாராலயும் வாழ முடியாது” என்றான் பதிலுக்கு.​

“இப்போ முடிவா என்ன தான் சொல்ற.. உனக்கு தான் என் கூட வாழ விருப்பம் இல்லைனு சொல்லிட்ட இல்ல.. கிளம்புற வழியை பார்க்க வேண்டியது தானே.. எதுக்கு இப்போ இங்க நின்று சண்டை போட்டுக்கிட்டு இருக்க”.​

தான் கூறி தான் தன் பாட்டி ஒப்புக்கொள்ளவில்லை. இப்பொழுது இவளே வலிய வந்து இங்கிருந்து போகிறேன் என்று கூறுகிறாள். இதை வைத்து எப்படியாவது ஆதிரையை வீட்டை விட்டு அனுப்பி விட வேண்டும் என்ற எண்ணம் அவனிடம்.​

ஆனால், அவனின் பாட்டியின் மனதில் இருக்கும் எண்ணமோ வேறாக இருந்தது.​

அகிலாண்டேஸ்வரி, “ஒரு நிமிஷம் வர்மா.. இங்க பாருமா.. என் பேரன் சொல்ற மாதிரி உனக்கு அவனோட வாழ பயமா இருந்தா நீ இங்கிருந்து தாராளமா போகலாம்” என்றவருக்கு தெரியாதா என்ன கூறினால் ஆதிரையை ஆப் செய்ய முடியும் என்று..​

ஆதிரை அவரின் வார்த்தையில் வர்மனை உறுத்து விழித்தவள் அவனை கோபமாக முறைத்து பார்த்துக் கொண்டே தன் கோபத்தை உள்ளடக்கிய குரலில், “பாட்டி எனக்கு யாரை பார்த்தும் எந்த பயமும் இல்லை..”.​

“நான் இவரோட வாழ ரெடியா தான் இருக்கேன். நான் எங்கேயும் போகல.. இங்கேயே இருக்கேன்” என்றவனின் வார்த்தையில் அதிர்ந்து விழிப்பது இப்பொழுது ஆருத்ர வர்மனின் முறையாகிற்று.​

தன் பாட்டி எதற்கு முயற்சி செய்கிறார் என்பதை சரியாக புரிந்து கொண்டான் ஆதவன். இங்கே நடக்கும் அக்கப்போர்களை எல்லாம் பார்த்தவனிற்கு தன் சிரிப்பை கட்டுப்படுத்த முடியாமல் பற்களுக்கிடையே மிக கடினப்பட்டு கட்டுப்படுத்தினான்.​

அகிலாண்டேஸ்வரி, “ரொம்ப சந்தோஷம்” என்கவும்.​

ஆதிரை, “ஆனா பாட்டி என்னால் இவரோட எல்லாம் ஒரே ரூமில் தங்க முடியாது” என்றவளை முறைத்து பார்த்த ஆருத்ரவர்மன் எதுவும் கூறவில்லை.​

அகிலாண்டேஸ்வரி, “ஏன்?”.​

ஆதிரை, “இவரோட நான் போய் ஸ்டே பண்ணா இதே மாதிரி தான் தினமும் சண்டை போடணும். என்னுடைய எனர்ஜி எல்லாம் வேஸ்ட்டா போயிடும்”.​

“எனக்கு இப்போ பைனல் இயர் ப்ராஜெக்ட் வொர்க்கெல்லாம் நிறைய இருக்கு. இவரோட உட்கார்ந்து சண்டை போடுவதற்கு எல்லாம் எனக்கு டைம் இல்ல”.​

அகிலாண்டேஸ்வரி சற்று நேரம் எதையோ சிந்தித்தவர், “சரி, உன்னுடைய விருப்பபடியே இனியாவோட ரூமிலேயே நீ தங்கிக்கலாம்”.​

அதுவரை ஆருத்ர வர்மனிற்கு நிம்மதியாக இருந்தது. தன் அறைக்கு அவள் வரவில்லையே என்று.. கோபத்தில் தன் கைகளை இறுக்கமாக மூடியவன் அவளை முறைத்து பார்த்துவிட்டு அங்கிருந்து சென்று விட்டான். அகிலாண்டேஸ்வரியும் சென்றுவிட..​

ஆதவன், “ப்பா.. கொஞ்சம் நேரத்துல இந்த இடமே அனல் பறந்திடுச்சு” என்றான் கிண்டல் சிரிப்போடு.​

இனியா அதிர்ந்த முகத்தோடு, “என்னடி நீ அண்ணா கிட்ட இப்படி சண்டை போடுற”.​

ஆதிரை, “ஏன் உன் அண்ணா பேசியதெல்லாம் நீயும் கேட்டுகிட்டு தானே இருந்த..”.​

இனியா, “அது கரெக்டு தான் டி.. அதுக்காக இவ்வளவு சண்டை போடணுமா?”.​

ஆதிரை, “அவர் பேசினா.. நானும் பதிலுக்கு பேச தான் செய்வேன். நான் பேச கூடாதுனா உன் அண்ணனை என்கிட்ட பார்த்து பேச சொல்லு. நான் ஹாஸ்டலுக்கு போய் என்னுடைய திங்ஸ் எல்லாம் எடுத்துட்டு வந்துடறேன்” என்றபடி வெளியேறி விட்டாள்.​

ஆதவன், “என்ன இனியா இன்னைக்கு தான் உன்னுடைய பிரண்டை புதுசா பாக்குற மாதிரி பாக்குற..”.​

“அவள் இவ்வளவு கோபப்பட்டு இன்னைக்கு தான் நான் பார்க்கிறேன். கொஞ்சம் கோவக்காரி தான்.. ஆனா, இவ்வளவு எல்லாம் சண்டை போட்டு நான் இதுவரைக்கும் அவளை பார்த்ததே இல்லை”.​

ஆதவன், “ம்ம்.. ஆதிரை எப்படி?”.​

இனியா, “ரொம்ப நல்ல பொண்ணு அண்ணா.. ரொம்ப கைண்ட் ஹார்ட்.. யாராவது ஹெல்ப் கேட்டால் உடனே செய்வா.. எல்லார்கிட்டயும் கலகலனு பேசி சட்டுனு பிரிண்ட் ஆகிடுவா..”.​

“என்னை பத்தி தான் உங்களுக்கு தெரியுமே.. காலேஜ் ஜாயின் பண்ண ஸ்டாட்டிங்ல யார்கிட்டயும் பேசவே எனக்கு கொஞ்சம் சங்கடமா​

இருக்கும். இவ தான் எனக்கு கிடைத்த ஃபர்ஸ்ட் ஃப்ரெண்ட்.. இவளே வந்து என்கிட்ட வலிய பேசி என் கூட பிரண்ட் ஆகிட்டா”.​

 

RJ novels

Moderator

அகம் - 11​

இனியா, “கிளாஸ்ல எல்லார் கூடவுமே நல்லா பிரண்ட்லியா பழகுவா.. யார் எந்த ஹெல்ப் கேட்டாலும் யோசிக்காமல் செய்வா.. ஆனா, யாராவது பொய் சொன்னா இவளுக்கு சுத்தமா பிடிக்காது”.​

“உடனே, முகத்துக்கு நேராவே திட்டி விட்டுடுவா.. ஆனா, அவ இவ்வளவு கோபப்பட்டு நான் இதுவரைக்கும் பார்த்ததே இல்ல. இப்போ தான் பார்க்கிறேன்..”.​

“வர்மன் அண்ணாவுக்கும் கோபம் வரும்.. இவளுக்கும் கோபம் வருது.. ரெண்டு பேருக்கும் செட்டாகுமானு தெரியலையே”.​

ஆதவன், “அதெல்லாம் நல்லாவே செட் ஆகும் பாரு”.​

இனியா, “ஆனா எனக்கு என்னமோ பயமா தான் அண்ணா இருக்கு. ரெண்டு பேரும் ஆப்போசிட் ஆப்போசிட் டைரக்ஷனா இருக்காங்க.. இவங்க ரெண்டு பேரும் எப்படி தான் ஒத்து போக போறாங்களோ”.​

ஆதவன் சிரிப்பினோடு, “ஆப்போசிட் டைரக்ஷன் தான் இனியா அட்ராக்ட் ஆகும். நீ வேணும்னா பாத்துக்கிட்டே இரு.. இவங்க ரெண்டு பேரும் எப்படி ஒன்று சேர போறாங்கனு”.​

இனியா, “எனக்கென்னமோ சுத்தமா நம்பிக்கையே இல்லை”.​

ஆதவன், “அது சரி.. ஆதிரைக்கு நம்ம வர்மன் அண்ணாவை பத்தி ஒன்னுமே தெரியாது. அவர் தாலி கட்டியதும் அவ்வளவு கோவப்பட்டாங்க.. இப்போ எப்படி அவரோடே வாழுறேன்னு ஒத்துக்கிட்டாங்க. அவங்க மனசுல நம்ம வர்மன் அண்ணா இப்படி பண்ணிட்டாரே என்ற வருத்தம் கொஞ்சமும் இல்லையா”.​

இனியா, “அதெல்லாம் நிறையவே இருக்கும். ஆனா, அவ அதை எல்லாம் வெளியில் காட்டிக்க மாட்டா”.​

ஆதவன், “என்ன சொல்ற?”.​

இனியா, “ஆமா அண்ணா அவ அப்படி தான்.. அவளுக்கு எந்த கஷ்டம் இருந்தாலும் அவ்வளவு ஈஸியா வெளியில் சொல்ல மாட்டா..”.​

“மனசுக்குள்ளேயே வச்சிக்கிட்டு வெளியில் பார்க்கும் பொழுது எல்லார்கிட்டயும் சிரிச்சு ஜாலியா இருக்க மாதிரி தான் பேசுவா. அவ மனசுக்குள்ள இருக்க கஷ்டம் என்னனு நம்மால் கண்டுபிடிக்கவே முடியாது”.​

“அவளுக்கு பேரன்ட்ஸ் இல்லைனு கூட நிறைய ஃபீல் பண்ணி இருக்கா.. ஒரே ஒரு தடவை தான் என்கிட்ட அதை பத்தி பேசி இருக்கா.. மத்தபடி நான் எப்போ கேட்டாலும் ஜாலியா இருக்க மாதிரியே பேசிட்டு விட்டுடுவா”.​

ஆதவன் அவள் கூறிய அனைத்தையும் தனக்குள் வாங்கியவாறு, “நீ சொல்றது எல்லாம் கேட்டா ஆதிரையுடைய கேரக்டரும் வர்மன் அண்ணாவுடைய கேரக்டரும் கொஞ்சம் மேட்ச் ஆகுற மாதிரி இல்ல?” என்றான் யோசனையோடு.​

இனியா, “நானே இதை பல தடவை அவ கிட்ட சொல்லி இருக்கேன் அண்ணா.. உன்னை பார்த்தா எனக்கு என் வர்மன் அண்ணா ஞாபகம் வருதுனு பலமுறை சொல்லி இருக்கேன்”.​

“ஆனா என்ன.. ரெண்டு பேருக்கும் கொஞ்சம் டிஃப்ரண்ட்ஸும் இருக்கு.. நம்ம வர்மன் அண்ணா கொஞ்சம் இன்ட்ரோவர்ட்.. யார்கிட்டயும் உடனே சட்டுனு பேச மாட்டார்”.​

“நாம என்ன பேசினாலும் கேட்பார். பட், அவரா அதிகமா பேச மாட்டார். ஆனால், அந்த விஷயத்தில் மட்டும் ஆதிரை அவருக்கு அப்படியே டோட்டல் ஆப்போசிட்.. இவ பேசாதவங்களை கூட பேச வச்சிடுவா” என்றாள் சிரிப்பினோடு.​

ஆதவன், “அதான் இவங்க ரெண்டு பேரும் இன்ட்ரஸ்டிங் பேரா இருக்காங்க. நீ சொல்றதும் கரெக்ட் தான். பேசாத நம்ம வர்மன் அண்ணாவையே இப்படி சண்டை போடுற ரேஞ்சுக்கு கொண்டு வந்து விட்டுட்டாங்களே..”.​

“ஓகே.. இப்போ மேடம் என்ன பிளான்ல இருக்கீங்க?” என்றான் இனியாவை பார்த்து தன் ஒற்றை புருவத்தை உயர்த்தி கேள்வியாக.​

இனியா, “அண்ணா நீங்க என்ன சொல்றீங்கனு புரியல.. என்ன பிளான்?”.​

ஆதவன், “இப்போ தான் மேடம்க்கு கல்யாணம் வேற ஆகிடுச்சு. சோ, இனிமே காலேஜுக்கு போவீங்களா.. இல்ல படிப்பை எல்லாம் அப்படியே பாதியிலேயே விட்டுடலாம்னு இருக்கீங்களா”.​

இனியா சிணுங்களோடு, “அண்ணா நான் பண்ணது தப்பு தான். அதுக்காக திரும்ப திரும்ப அதையே சொல்லிக் காட்டாதீங்க. அதெல்லாம் நான் காலேஜுக்கு போவேன். டிஸ்கன்டினியூ எல்லாம் பண்ண மாட்டேன்”.​

ஆதவன், “கல்யாணத்துக்கு முன்னாடியே ரெண்டு பேரும் அவ்வளவு லவ் பண்ணி இருக்கீங்க. இப்போ கல்யாணம் வேற முடிஞ்சிடுச்சு.. இனிமே உன்னையும் கவினையும் கையிலேயே பிடிக்க முடியாது” என்று தன் தங்கையை கேலி செய்தான்.​

அதில், தன் சிறு தங்கை அழகாக வெட்கப்படுவதை பார்த்தவனிற்கு அவள் எந்த அளவிற்கு கவினை விரும்புகிறாள் என்பது அவளின் முகத்திலேயே அப்பட்டமாக தெரிந்தது.​

அவனின் பெயரை கூறினாலே முகம் சிவக்கும் தன் தங்கை இனியா ஆதவனுக்கு புதியவள்.​

ஆதவன், “சரி, சரி.. ரொம்ப நேரம் கவின் கூட பேசிக்கிட்டு இருக்காமல் படிக்கிற வேலையை பாரு” என்று அவளின் தலையை கோதியவன் அங்கிருந்து நகர்ந்து விட்டான்.​

ஆதவன் அங்கிருந்து விடை பெற்று சென்ற பிறகு இனியாவின் செல்போன் இசைக்க. கவின் தான் அழைத்திருப்பான் என்ற எதிர்பார்ப்போடு சென்று தன் செல்பேசியை எடுத்துப் பார்த்தாள் இனியா.​

ஆனால், செல்பேசியிலோ ‘இதழினி’ என்னும் பெயர் மின்னிக் கொண்டிருந்தது. அதைப் பார்த்தவளின் இதழ்கள் மெலிதாக விரிந்து கொண்டது.​

அணைப்பை ஏற்ற இனியா மெதுவான குரலில், “ஹாய் இதழ்” என்றாள் ‌கிசுகிசுப்பாக.​

இதழினி, “என்னடி ஏதோ கவின் அண்ணா கிட்ட பேசுற மாதிரி கிசுகிசுனு பேசுற”.​

இனியா, “ம்ம்ச்ச்.. இங்க என்னவெல்லாமோ நடந்து போச்சு டி. ரூம் கதவு ஓப்பன்ல இருக்கு. யாராவது கேட்டிட போறாங்கனு தான் மெதுவா பேசுனேன். அப்புறம் இருக்க பிரச்சனையில் இது வேற புது பிரச்சனையாகிடும்” என்ற படியே நடந்து சென்று அறை கதவை மூடிவிட்டு வந்து கட்டிலில் அமர்ந்தாள்.​

இதழினி, “ஏன் டி என்ன ஆச்சு?”.​

இனியா, “இதழ் நான் கவினை லவ் பண்றது பத்தி உன்கிட்ட சொல்லி இருந்தேன் இல்ல”.​

இதழினி, “ஆமா.. நீங்க ரெண்டு பேரும் லவ் பண்றீங்க அதெல்லாம் தான் தெரியுமே.. நான் கூட உன்னை உங்க வீட்ல பயப்படாமல் சொல்லுனு சொன்னேனே.. இப்போ நீ சொன்னியா இல்லையா?” என்றவளின் கேள்விக்கு மெதுவான குரலில்.​

“கல்யாணமே முடிஞ்சு போச்சு” என்றாள் இனியா.​

அதில் அதிர்ந்து விழித்த இதழினி, “ஹே! என்னடி சொல்ற.. நிஜமாவா?”.​

இனியா, “ஆமா டி” என்று கூறிக் கொண்டிருக்கும் பொழுதே அவளின் கையில் இருந்த செல்போன் பறிக்கப்பட்டது.​

அதில், ஒரு நொடி இனியாவின் இதயம் மத்தளம் கொட்ட வெடுக்கென்று திரும்பி பதட்டமாக யார் என்று பார்த்தாள். ஆதிரை தான் நின்று கொண்டு இருந்தாள். அவளை பார்த்த பிறகு தான் இனியாவிற்கு மூச்சே வெளிவந்தது.​

“நீ தானா.. நான் யாரோனு நினைச்சு பயந்துட்டேன். ஏன் டி இப்படி எல்லாம் பண்ற?” என்றாள் கோபமாக.​

ஆதிரை, “என்ன கவின் அண்ணா கிட்ட போன் பேசிக்கிட்டு இருக்கியா.. உங்களுக்கு தான் இப்போ மேரேஜ் ஆகிடுச்சே அப்புறம் எதுக்காக இப்படி ஒளிஞ்சு ஒளிஞ்சு பேசிகிட்டு இருக்க” என்றவள் அவளின் செல்பேசியின் திரையை பார்க்க.​

‘இதழினி’ என்னும் பெயரை பார்த்தவள் உற்சாகமாகி போனாள்.​

செல்பேசியை தன் காதிற்கு கொடுத்தவாறு, “ஹலோ இதழ்.. எப்படி இருக்க? உன்கிட்ட பேசியே ரொம்ப நாள் ஆகிடுச்சு” என்றாள் படபடவென்று.​

இதழினி, “நான் நல்லா இருக்கேன் ஆது.. நீ எப்படி இருக்க?”.​

ஆதிரை, “நீ கேக்குற கேள்விக்கு என்ன பதில் சொல்றதுனு தெரியாமல் இருக்கேன்” என்றாள் பெருமூச்சோடு.​

இதழினி, “அங்கே என்ன தான் டி நடக்குது.. அவளை கேட்டா அவளும் சோகமா பேசுறா.. நீயும் இப்படி பேசுற.. அங்கு ஏதாவது பிரச்சனையா?”.​

ஆதிரை, “எல்லாம் இந்த இனியாவால் தான்..” என்க.​

இனியா, “நான் என்னடி பண்ணேன்?” என்றாள் ஆதிரையின் முதுகில் அடித்தவாறு.​

ஆதிரை, “சும்மா இருடி” என்றவள்.​

இதழினியிடம், “உனக்கு இனியா கவினை லவ் பண்ணதை பத்தி எல்லாம் தெரியும் இல்ல”.​

இதழினி, “ம்ம்.. தெரியுமே.. லாஸ்ட் டைம் பேசும் போது கூட வீட்டுக்கு யாரோ பெண் கேட்டு வந்திருக்காங்கனு சொல்லி அழுதாள். நான் கூட உங்க வீட்டில் உன்னுடைய லவ்வை பத்தி சொல்லிடுனு அவ கிட்ட சொன்னேன்”.​

ஆதிரை, “நானும் அதையே தான் டி சொன்னேன். ஆனா, இந்த மேடம் பயமா இருக்குனு வீட்டில் சொல்ல மாட்டேன்னு சொல்லிட்டாங்க.. டெய்லி காலேஜ்ல ஒரே புலம்பல் தான். அழுதுகிட்டே இருந்தா..”.​

“அதனால் அவளுக்கும் கவின் அண்ணாவுக்கும் மேரேஜ் பண்ணி வச்சுட்டேன்” என்றவளின் வார்த்தையில் அதிர்ந்த இதழினி, “என்னடி சொல்ற? மேரேஜ் பண்ணி வச்சிட்டியா.. ஏதோ சின்ன விஷயம் மாதிரி பேசுற?” என்றாள் அதிர்ச்சி மாறாத குரலில்.​

ஆதிரை, “அப்புறம் வேற என்ன செய்யுறது இவ அவரை தான் கல்யாணம் பண்ணிப்பேன்னு அழறா.. அவங்க வீட்டில் வேற மாப்பிள்ளை பார்த்துட்டாங்க.. அதான் கல்யாணம் செஞ்சு வச்சுட்டேன்” என்று கூறிக் கொண்டிருக்கும் பொழுதே அவளிடம் இருந்து செல்பேசியை பிடுங்கிய இனியா தன் காதில் வைத்தவாறு, “அது மட்டும் இல்லை இதழ்.. நம்ம ஆதிரைக்கு கூட மேரேஜ் ஆகிடுச்சு”.​

அதில், இதழினி அதிர்ச்சியின் உச்சத்திற்கே சென்று விட்டாள் என்று தான் கூற வேண்டும்.​

இதழினி, “என்ன டி சொல்றீங்க.. இப்போ தான் அவ உனக்கு மேரேஜ் ஆச்சுனு சொன்னா.. நீ அதுக்குள்ள அவளுக்கு மேரேஜ் ஆகிடுச்சுனு சொல்ற.. எனக்கு ஒண்ணுமே புரியல. அங்க என்ன தான் நடக்குது?”.​

பிறகு, இனியா ரிஜிஸ்டர் ஆஃபீஸில் நடந்த மொத்த கதையையும் அவளிடம் கூறி முடித்தாள். அதில் இதழினிக்கு கண்கள் இரண்டும் அதிர்ச்சியில் பெரிதாக விரிந்து கொண்டது.​

“அடிப்பாவிங்களா! என்ன காரியம் டி செஞ்சு வச்சு இருக்கீங்க.. உங்க அண்ணா கோபத்துல ஆதிரை கழுத்தில் தாலி கட்டிட்டாரா?” என்னும் பொழுதே இதழினியின் இதயம் படபடவென அடித்துக் கொண்டது.​

இனியா, “ஆமா டி.. வீட்ல செம திட்டு.. பாட்டி லெப்ட் ரைட் வாங்கிட்டாங்க.. அண்ணாவுக்கு என்ன சொல்றதுனே தெரியல.. அவங்களை பார்த்தா தான் ரொம்ப பாவமா இருக்கு” என்னும் பொழுதே அவளின் தோளில் அடித்த ஆதிரை.​

“அப்போ என்னை பாத்தா உனக்கு பாவமா தெரியலையா?” என்பதும் இதழினியின் காதில் நன்கு விழுந்தது.​

இதழினிக்கு அதிர்ச்சியில் வார்த்தைகளே எழவில்லை. ஏன் என்றே தெரியாமல் கண்கள் கலங்கிவிட்டது. நா உலர்ந்து போய் வார்த்தைகளே எழவில்லை. உணர்ச்சிகளின் பிடியில் சிக்கிக் கொண்டு தவித்துக் கொண்டிருந்தாள்.​

இனியா, “ஹலோ இதழ் லைன்ல இரு​

க்கியா?”.​

இதழினி, “ஆங்.. ஆங்.. இருக்கேன்” என்றவளின் ஒற்றைக் கண்ணில் மட்டும் கண்ணீர் விழி கடந்து கன்னம் தொட்டுவிட்டது.​

 

RJ novels

Moderator

அகம் - 12​

இதழினி, “அப்போ உன்னுடைய அண்ணன் உண்மையிலேயே ஆதிரைக்கு தாலி கட்டிட்டாரா?”.​

இனியா அவளின் குரலில் இருக்கும் வருத்தத்தை கவனியாதவள், “ஆமா டி.. ஒரே நாள்ல என்னென்னமோ நடந்து போச்சு.. இவளுக்கும் வாய் ரொம்ப அதிகம் இதழ்.. கொஞ்சம் பொறுமையா பேசி இருக்கலாம். ரொம்ப ஓவரா அண்ணா கிட்ட வாய் பேசிட்டா”.​

ஆதிரை, “யாரு நான் ஓவரா பேசுறேனா.. அப்போ உன் அண்ணன் செஞ்சது மட்டும் சரியா” என்று அவள் கேட்பதும் இவளின் காதில் விழுந்தது.​

இவளால் சற்றும் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. ஒரு தலையாக இனியாவின் அண்ணனை காதலிப்பவளிற்கு இனியா கூறிய செய்தியை கேட்ட பிறகு பேர் அதிர்ச்சியாகிப் போய்விட்டது.​

ஒரு நொடியில் தன் காதல் கோட்டை அப்படியே மணல் கோட்டை போல் சரிந்து விட்டதை உணர்ந்தவளுக்கு அதை ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை.​

இனியா, “ஹலோ இதழ் லைன்ல இருக்கியா?”.​

இதழினி தன் முகத்தை அழுந்த துடைத்தவள் ஆழ்ந்த மூச்சை எடுத்து விட்டவாறு தன்னை சற்று சமன் செய்தவள், “ஆங்.. இருக்கேன் டி. உன்னுடைய பாட்டி என்ன சொன்னாங்க.. உன்னுடைய அண்ணனுக்கு இப்படி திடீர்னு கல்யாணம் நடக்கும்னு அவங்க கொஞ்சம் கூட எதிர்பார்த்து இருக்க மாட்டாங்களே”.​

இனியா, “பின்ன இதெல்லாம் நடக்கும்னு யாருமே எதிர்பார்க்கல.. அதிலும் பாட்டிக்கு ரொம்ப பிடிச்ச பேரன் வேற.. அதுல பாட்டி கண்டிப்பா அப்செட் தான் ஆகி இருப்பாங்கனு நினைக்கிறேன்”.​

“ஆதவன் அண்ணா இப்படி செஞ்சிருந்தா கூட பாட்டி அவ்வளவு வருத்தப்பட்டு இருக்க மாட்டாங்க.. ஆனா, வர்மன் அண்ணா இப்படி செஞ்சது தான் அவங்களால் ஏத்துக்கவே முடியல” என்ற அவளின் வார்த்தையில்..​

தன் இரண்டு கண்களும் வெளியே விழுந்து விடும் அளவிற்கு பெரிதாக விரித்துக் கொண்ட இதழினிக்கு சிரிப்பதா அல்லது அழுவதா என்று தெரியாத உணர்ச்சி பெருக்கில் சிக்கித் தவித்தாள்.​

ஆம், இதழினி ஒரு தலையாக காதலிப்பது நம் ஆதவனை தான். வர்மன் சற்று கடுமையாக நடந்து கொள்பவன். நிச்சயமாக அவன் ஆதிரைக்கு தாலி அணிவித்திருக்க மாட்டான் என்று எண்ணிய இதழினி ஆதவன் தான் கோபத்தில் இப்படி செய்து விட்டானோ என்று எண்ணி வெகுவாக வருந்திப் போனாள்.​

அதிலும், தன் பாட்டியை மீறி வர்மன் இப்படி ஒரு காரியத்தை செய்ய துணிய மாட்டான் என்று எண்ணிய இதழினிக்கு அவளின் ‘அண்ணன்’ என்ற விளிம்பில் ஆதவன் தான் இப்படி ஒரு காரியத்தை செய்தது என்று தீர்மானித்தே விட்டாள் என்று தான் கூற வேண்டும்.​

இப்பொழுது செய்தது ஆதவன் அல்ல வர்மன் என்பதை அறிந்ததும் அவளுக்குள் அப்படி ஒரு மகிழ்ச்சி பரவ தொடங்கியது.​

இனியா, “என்னடி லைன்ல இருக்கியா இல்லையா.. அப்பப்போ பேசவே மாட்டேன் என்கிறாய்”.​

இதழினி, “ஆங்.. இருக்கேன்.. இருக்கேன்.. நிஜமாவே உன்னுடைய வர்மன் அண்ணாவா ஆதிரைக்கு தாலி கட்டினார்” என்றாள் இன்னமுமே அதை முழுதாக நம்ப முடியாமல்.​

இனியா, “ஆமா டி.. பின்ன நான் என்ன விளையாட்டுக்கா சொல்றேன். வர்மன் அண்ணா தான்.. அன்னைக்கு எங்களுக்கு மேரேஜ் நடக்க போற விஷயம் எப்படியோ வர்மன் அண்ணாவுக்கு தெரிஞ்சிருக்கு”.​

“மேரேஜை நிறுத்துவதற்காக கோபமாக கிளம்பி ரிஜிஸ்டர் ஆபீஸ் வந்திருக்கார். அந்த நேரம் பார்த்து இவ வேற ரொம்ப வாய் பேசிட்டாளா.. என்ன நினைச்சாரோ தெரியல.. இவளுக்கு தாலியை கட்டிட்டார்”.​

கண்கள் குளம் கட்டிவிட.. இதழில் படர்ந்த புன்னகையோடு, “என்னால் இதை நம்பவே முடியல இனி” என்றாள் வார்த்தைகள் அற்றவளாக.​

இனியா, “என்னாலும் தான்.. ஆதவன் அண்ணா இப்படி ஒரு காரியத்தை செஞ்சிருந்தா கூட அதை ஏத்துக்கிட்டு இருந்திருக்க முடியும். வர்மன் அண்ணா இப்படி செய்யவும் தான் எங்களுக்கே ரொம்ப ஷாக்கிங்காக இருக்கு”.​

இதழினி, ‘நான் கூட நீ அண்ணா என்று சொன்னதும் ஆதவன் அண்ணாவை தான் சொல்லுறியோ என்று நினைத்துவிட்டேன்”.​

இனியா, “இல்ல டி.. ஆதவன் அண்ணா அப்படியெல்லாம் செய்யல.. அதுவும் நல்லதுக்கு தான்.. இப்படி ஒரு வாயாடியை கட்டி சமாளிக்கிற அளவுக்கு எல்லாம் அவருக்கு திறமை இருக்காது. வர்மன் அண்ணாவால் தான் இவளை சமாளிக்க முடியும். அவர் தான் இவளுக்கெல்லாம் சரியான ஆளு..”.​

இவள் கூறுவதை கேட்டுக் கொண்டே தன் உடமைகளை எடுத்து வைத்துக் கொண்டு இருந்த ஆதிரை இவளின் கடைசி வாக்கியத்தில் தன் இடையில் கை வைத்து ஊன்றியவாறு இவளை முறைத்து பார்த்தாள்.​

பிறகு, சற்று நேரம் தோழிகள் மூவரும் கலகலத்துவிட்டு அணைப்பை துண்டித்து விட்டனர்.​

இதழினிக்கு இப்பொழுது தான் நிம்மதி பெரு மூச்சே வந்தது என்றும் கூறலாம். சற்று நேரத்தில் எப்படி பதட்டப்பட்டு விட்டாள். ஏதோ, தன் வாழ்க்கையே அவ்வளவு தான்.. தன் வாழ்க்கையின் கடைசி கட்டத்தில் இருப்பது போன்ற ஒரு மாயை அவளுக்குள் தோன்றியது.​

யாருக்கும் தெரியாமல் மறைத்து வைத்திருக்கும் ஆதவனின் புகைப்படத்தை தான் தன் செல்போனின் திரையில் பார்த்துக்கொண்டு அமர்ந்திருந்தாள்.​

என்னமோ தெரியவில்லை.. அவனை பார்க்கும் பொழுதெல்லாம் அப்படி ஒரு பூரிப்பு உள்ளுக்குள்.. இதயம் கதகளி ஆட தொடங்கி விடும். இருவரும் இதுவரை ஒரு முறை கூட ஒருவரை ஒருவர் பார்த்ததே கிடையாது.​

ஆம், ஆதவனுக்கு இப்படி இதழினி என்று ஒருத்தி தன் புகைப்படத்தை அனுதினமும் வைத்து ரசித்துக் கொண்டிருக்கிறாள் என்பதே தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அப்படி என்ன தான் காதல் இவளுக்கு அவன் மேல்..​

இதுவரை இருவரும் பார்த்ததே கிடையாதாம்.. பழகியதும் கிடையாதாம்.. ஒரு வார்த்தை கூட பேசியதும் கிடையாதாம்.. ஆனாலும், அவளுக்கு அவன் மேல் மலையளவு காதல்..​

அவனை யாருக்கும் விட்டுக் கொடுக்க முடியாத அளவிற்கு அவனின் மீது காதலில் திளைத்துக் கொண்டிருக்கிறாள்.​

அடுத்த இரண்டு நாட்களும் இனியா மற்றும் ஆதிரையின் கல்லூரிக்கு விடுமுறை என்பதால் வீட்டிலேயே தான் அவர்களின் நாட்கள் கழிந்தது.​

பார்க்கும் இடங்களில் எல்லாம் ஆருத்ர வர்மனும், ஆதிரையும் தங்கள் பார்வையாலேயே உரசி கொண்டனர். முடிந்தவரை அவனைப் பார்ப்பதையே தவிர்க்க தொடங்கினாள் ஆதிரை..​

இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டாலே தேவை இல்லாத சண்டை தான் ஏற்படுகிறது. அதற்கு பார்க்காமலே இருந்து விடலாம் என்ற நிலைக்கு சென்று விட்டனர்.​

அன்று திங்கட்கிழமை காலை அவசரமாக கல்லூரிக்கு தயாராகிக் கொண்டிருந்தனர் ஆதிரையும், இனியாவும்..​

இனியா, “இன்னைக்கு பிராக்டிகல்ஸ் வேற இருக்கு. கொஞ்சம் பயமா இருக்கு டி”.​

ஆதிரை, “எதுக்கு.. நல்லா தானே ப்ரிப்பார் பண்ணி இருக்க.. அப்புறம் என்ன பயம்?”.​

இனியா, “இந்த கல்யாண டென்ஷன்ல நான் ரெக்கார்ட்ஸ் எல்லாம் கம்ப்ளீட் பண்ணவே மறந்துட்டேன்”.​

ஆதிரை, “அது உன் பிரச்சனை.. எது எப்படி போனாலும் நம்ம படிப்பு விஷயத்துல கரெக்டா இருக்கணும். உன்னை யாரு ரெகார்ட் வொர்க் பண்ணாமல் இருக்க சொன்னது” என்றாள் அவளை முறைத்து பார்த்தபடி.​

இனியா பாவமாக முகத்தை வைத்துக் கொண்டவள், “சாரிடி.. நான் தான் எழுதாமல் விட்டுட்டேன்”.​

ஆதிரை, “அப்புறம் இப்போ பீல் பண்ணி என்ன பண்றது”.​

இனியா, “ப்ளீஸ் டி.. எனக்கு அப்படியே கொஞ்சம் எழுதி தாயேன்”.​

ஆதிரை, “உனக்கு இதே வேலையா போச்சு இனி.. எப்போ பார்த்தாலும் லாஸ்ட் மினிட்ல வந்துட்டு தான் இப்படி என்னை போட்டு படுத்துற”.​

இனியா, “நீ மட்டும் எப்படி ஆது எல்லாமே கரெக்டா கம்ப்ளீட் பண்ணிடுற.. என்னால் லாஸ்ட் 2 டேஸ் எதிலுமே கான்சன்ட்ரேட் பண்ண முடியல..”.​

“வீட்டில் நடக்கிற பிரச்சனையே மண்டைக்குள்ள ஓடிக்கிட்டு இருந்துச்சு. ஆனா, நீ அதையெல்லாம் கொஞ்சம் கூட கன்சிடர் பண்ணாமல் கரெக்ட்டா எல்லா வேலையும் முடிச்சிட்டு இருக்கியே”.​

ஆதிரை, “அது வேற டிபார்ட்மென்ட்.. இது வேற டிபார்ட்மென்ட்.. அதை பத்தி யோசிச்சுக்கிட்டு உட்கார்ந்து இருந்தா உன்னை மாதிரி தான் நானும் எதையும் பண்ணாமல் இருக்கணும்”.​

இனியா, “சரி, சரி.. கொஞ்சம் எனக்கு எழுதி கொடு டி.. நைட் எல்லாம் எழுதி, எழுதி கையெல்லாம் வலிக்குது” என்றாள் கெஞ்சலாக.​

தன் நண்பியின் கெஞ்சலில் உடனே மனம் இறங்கிய ஆதிரை, “கொடு” என்றவள் அவசர அவசரமாக எழுத தொடங்கினாள்.​

அதற்குள் இனியா தயாராகி விட்டு வந்துவிட.​

ஆதிரை, “மிச்சத்தை போற வழியில் எழுதிக்கலாம் டைம் ஆகிடுச்சு” என்றபடி அவளுடன் வெளியே நடந்தாள்.​

இருவரும் சாப்பிடுவதற்காக டைனிங் ஹாலை நோக்கி செல்ல. அங்கே அமர்ந்து உணவருந்தி கொண்டு இருந்த ஆருத்ர வர்மன் ஆதிரையின் மீது அழுத்தமாக தன் பார்வையை பதித்தவன் தன் முகத்தை வெடுக்கென்று திருப்பிக் கொண்டான்.​

அதையெல்லாம் சற்றும் சட்டை செய்யாத ஆதிரை தான் வந்த வேலையை பார்ப்பதற்காக அவனுக்கு நேர் எதிரே இருக்கும் இருக்கையில் வந்து இனியாவுடன் அமர்ந்தாள்.​

ஆனால், அகிலாண்டேஸ்வரியின் பார்வையோ ஆதிரையில் தான் படிந்து இருந்தது. அந்த வெள்ளை நிற குர்த்தி அவளுக்கு மிகவும் அழகாக இருந்தது. தன் ஆசை பேரனின் மனைவியை அவரின் பார்வை ஆசையாக வருடியது.​

கிளம்பும் அவசரத்தில் அதையுமே ஆதிரை கவனிக்கவில்லை. இனியா தனக்கு இரண்டு இட்லியும், ஆதிரைக்கு இரண்டு இட்லியும் இரண்டு தட்டில் வைத்தவள்.​

இருவருக்கும் சட்னியை ஊத்த.. ஆதிரையோ இடது கையால் இனியாவின் நோட்ஸை எழுதியவரே வலது கையால் அந்த இட்லியை பிய்த்து சட்டினியில் நனைத்து தன் வாய்க்குள் தள்ளினாள்.​

அகிலாண்டேஸ்வரி, “என்ன இது.. சாப்பிடும் பொழுது எழுதிக்கிட்டு இருக்க?”.​

ஆருத்ரவர்மன், “படிப்புல கவனம் இருக்கணும்.. இல்லைனா.. இப்படி தான் கடைசி நேரத்துல எல்லாத்தையும் அவசர அவசரமா பண்ற மாதிரி இருக்கும்” என்று கிடைக்கும் சந்தர்ப்பத்தை உபயோகித்து அவளை சாடினான்.​

ஆதிரை அவனை முறைத்துப் பார்த்தவள், “ஹலோ சார்.. இது ஒன்னும் என்னுடைய நோட்ஸ் கிடையாது. உங்க ஆருயிர் தங்கச்சி உடையுது.. இப்போ நீங்க சொல்றதெல்லாம் அவளுக்கு தான் போய் சேரும்” என்றவள் மீண்டும் தன் வேலையில் கவனத்தை செலுத்தினாள்.​

ஆருத்ர வர்மனுக்கோ ஆதிரையின் முன்பு ஒவ்வொரு முறையும் மூக்குடைவதே வேலையாகி போய்விட்டது. அவனும் ஒவ்வொரு சந்தர்ப்பத்தையும் உபயோகித்து அவளின் தலையில் கொட்டு வைக்க எண்ண.. ஆனால், நடப்பது அனைத்தும் இவனுக்கே ஆப்பு வைப்பது போல் ஆகிவிடுகிறது.​

அகிலாண்டேஸ்வரி, “நீ லெப்ட் ஹேண்டா..”.​

“ம்ம்” என்று அவருக்கு சிறிய தலையசைப்பை மட்டும் கொடுத்தவள் தன் வேலையை பார்த்துக் கொண்டிருந்தாள்.​

இனியா, “ஆமா பாட்டி.. ஆனா, ஆதிரை உடைய‌ ஹேண்ட் ரைட்டிங் சூப்பரா இருக்கும்”.​

ஆருத்ரவர்மன் இனியாவை முறைத்து பார்த்தவன், “வாய் மட்டும் நல்லா பேசு.. உன்னுடைய வேலையை கூட உன்னால் ஒழுங்கா பண்ண முடியாதா.. இப்படி லாஸ்ட் மினிட்ல தான் அறக்க பறக்க எல்லாத்தையு​

ம் செய்வியா..”.​

“சாரி அண்ணா.. டூ டேஸா வீட்ல நடந்த பிராப்ளமில் ரெக்கார்டு எழுதவே மறந்துட்டேன்” என்றாள் நலிந்த குரலில்.​

 

RJ novels

Moderator

அகம் - 13​

அகிலாண்டேஸ்வரி, “என்ன இது இனியா படிப்பு விஷயத்துல எப்பவுமே நாம தான் கொஞ்சம் கவனமா இருக்கணும். திரும்ப இந்த மாதிரி எல்லாம் பண்ணாத” என்றார் அதட்டலாக.​

இனியா, “சாரி பாட்டி” என்றாள் மெல்லிய குரலில்.​

ஆதிரை, “நல்லா சொல்லுங்க பாட்டி.. இது ஒன்னும் ஃபர்ஸ்ட் டைம் கிடையாது. மேடம்க்கு நோட்ஸ் எழுதலாம் ஞாபகமே இருக்காது.. டைமும் இருக்காது.. தினமும் கவின் அண்ணா கூட போன் பண்ணி பேச சொன்னா நல்லா பேசுவா”.​

“காலேஜ்லையும் இவளுக்கு இதே வேலை தான். கவின் அண்ணாவை மீட் பண்றதுக்கும், அவர் கால் பண்ணா பேசுறதுக்கும் மேடம் கிளாஸை கட் அடிச்சுட்டு எஸ்கேப் ஆகிடுவாங்க.. இவங்களுக்கும் சேர்த்து நான் நோட்ஸ் எடுத்து தரணும்”.​

இனியாவின் ரகசியங்களை அனைவரின் முன்பும் ஆதிரை அம்பலப்படுத்தவும் விழி பிதுங்கி அமர்ந்திருந்தாள் இனியா..​

இனியா அவளின் கையில் சற்று அழுத்தத்தை கொடுத்தவாறு, “ஆது என்ன பண்ற நீ”.​

ஆதிரை, “என்ன இப்போ.. அதான் உனக்கும் கவின் அண்ணாவுக்கும் கல்யாணம் முடிஞ்சிடுச்சே.. இனி இவங்களுக்கு தெரிஞ்சாலும் உனக்கு எந்த பிரச்சனையும் வரப்போவதில்லை அப்புறம் என்ன..” என்றாள் விட்டேட்றியாக.​

அவளின் செயலில் இனியாவிற்கு தான் ‘ஐயோ’ என்று இருந்தது.​

ஆருத்ரவர்மன் வேண்டுமென்றே, “ஏன் இதை கூட உன்னால் செய்ய முடியாதா.. படிக்கிற வயசுல அவளுக்கு கல்யாணம் செஞ்சு வைக்கிறதுக்கு மட்டும் தெரியுது.. அவளுக்கு ஹெல்ப் பண்ணி நோட்ஸ் எடுத்து கொடுத்தால் என்ன குறைந்தா போயிடுவ” என்றவனை அகிலாண்டேஸ்வரி கூட ஆச்சரியம் கலந்த அதிர்ச்சியோடு பார்த்தார்.​

இனியாவோ அதிர்ச்சியின் உச்சத்திற்கே சென்று விட்டாள். தன் அண்ணனா இப்படி எல்லாம் பேசுவது என்று..​

ஆதிரை, “எனக்கு வேற வேலை இல்லை பாருங்க.. உங்க தங்கச்சி லவ்வர் கூட கடலை போடுவா அவளுடைய நோட்ஸை நான் எழுதி தரணுமா”.​

ஆருத்ரவர்மன், “நீ தான் காதலுக்கெல்லாம் ஹெல்ப் பண்றதுக்காகவே பிறந்திருக்கிறாயே.. அப்போ அவளுடைய காதலுக்கும் ஹெல்ப் பண்ணனும் தானே”.​

ஆதிரை, “அதுக்காக டெய்லி என்னுடைய வேலை எல்லாம் விட்டுட்டு அவளுக்கு நோட்ஸ் எடுத்துக்கிட்டு இருக்க சொல்றீங்களா” என்றாள் அவனை முறைத்து பார்த்தவாறு.​

இருவரும் மாற்றி மாற்றி வாக்குவாதம் செய்து கொண்டிருக்க.. அங்கே வந்து சேர்ந்தான் ஆதவன்..​

“என்ன இது.. காலையிலேயே ஆரம்பிச்சிட்டீங்களா ரெண்டு பேரும்” என்றபடி அமர்ந்தவனை பார்த்த ஆதிரை, “இங்க பாருங்க ஆதவ் உங்க அண்ணா தான் என்கிட்ட மறுபடியும் மறுபடியும் வம்பு பண்ணிக்கிட்டே இருக்கார். நான் அவர் பக்கம் போறதே இல்லை.. நான் பாட்டுக்கு என் வேலையை தான் பாத்துகிட்டு இருக்கேன். ஆனா, அவர் தான் வேணும்னே என்கிட்ட வம்பு பண்றார்”.​

ஆருத்ரவர்மன், “ஆமா, எனக்கு ஆசை பாரு உன் கூட வம்பு பண்ணனும்னு”.​

ஆதவன், “இப்போ என்ன பிரச்சனை?”.​

ஆருத்ர வர்மன், “நம்ம இனியாவுக்கு இவ நோட்ஸ் எடுத்து கொடுத்தாலாம் அதை ரொம்ப பெருசா பேசி சீன் போட்டுக்கிட்டு இருக்கா”.​

ஆதிரை, “கொஞ்சம் தெளிவா சொல்லுங்க.. அப்போ தானே அவருக்கும் புரியும். இங்க பாருங்க உங்க தங்கச்சி அவ லவ்வர் கூட டைம் ஸ்பென்ட் பண்ண போனா அவளுக்கும் சேர்த்து நான் நோட்ஸ் எடுத்து வைக்கணுமாம். உங்க அண்ணன் சொல்ற விஷயம் எல்லாம் கொஞ்சமாவது நியாயமா இருக்கா”.​

ஆதவன் தன் நெஞ்சின் மீது கையை வைத்தவாறு, “அண்ணா நீங்களா இப்படி எல்லாம் சொல்றீங்க? இனியா லவ் மேரேஜ் பண்ணிக்கிட்டானு தெரிஞ்சதும் அவ்வளவு கோபப்பட்டீங்க..”.​

“இப்போ அவளுடைய லவ்வுக்கு ஹெல்ப் பண்ணலைனு ஆதிரையை திட்டுறீங்களா” என்றவனின் வார்த்தையில் தான் தான் இவ்வளவு நேரம் பார்த்துக் கொண்டிருந்த வேலையை உணர்ந்தவன்.​

அனைவரின் பார்வையும் தன் மேலேயே இருப்பதில் அமைதியாக தன் உணவில் கவனத்தை செலுத்தினான்.​

ஆதவன், “ஆனா ஒரு விஷயம் மட்டும் உண்மை.. நீங்க ரெண்டு பேரும் இருக்க இடம் கண்டன்டுக்கு பஞ்சமே இல்லாமல் இருக்கு. நல்லா உங்க ரெண்டு பேரையும் வச்சு டைம் பாஸ் பண்ணலாம்” என்றான் கடினப்பட்டு தன் சிரிப்பை கட்டுப்படுத்தியவாறு.​

அதில் ஆருத்ரவர்மன், ஆதிரை என இருவருமே ஒரு சேர ஆதவனை முறைத்து பார்த்தனர்.​

ஆதவன், “ஐயையோ! அவசரப்பட்டு மைண்ட் வாய்ஸ் எல்லாத்தையும் வெளிப்படையா பேசிட்டேன் போலருக்கே.. ரெண்டு பேருமே என்னை கட்டம் கட்டி அடிச்சாங்கன்னா இவங்க வாயில் எல்லாம் என்னால் விழ முடியாது பா” என்று எண்ணியவாறு..​

தனக்கு அழைப்பே வராத செல்பேசியை எடுத்து காதில் வைத்தவன், “இதோ அங்க தான் வந்துட்டு இருக்கேன்” என்றபடி அந்த இடத்தை விட்டு நைஸாக நழுவினான்.​

பிறகு, ஆதிரையும் இனியாவும் அவசர அவசரமாக உண்டு முடித்தவர்கள் கல்லூரிக்கு புறப்பட தயாராக..​

அகிலாண்டேஸ்வரி, “ஒரு நிமிஷம் ரெண்டு பேரும் எப்படி போக போறீங்க?”.​

ஆதிரை, “ஆட்டோவில் தான் பாட்டி”.​

அகிலாண்டேஸ்வரி, “ஆட்டோல எல்லாம் போக வேண்டாம். நம்ம கார்லயே போங்க.. வர்மா இவங்க ரெண்டு பேரையும் காலேஜ்ல இறக்கி விட்டுடு”.​

ஆருத்ர வர்மன், “பாட்டி இனியாவை வேணும்னா நான் கொண்டு போய் விடுறேன். இவளை எல்லாம் என்னால் கூட்டிட்டு போக முடியாது”.​

அகிலாண்டேஸ்வரி, “ஏன்?”.​

ஆருத்ரவர்மன், “பாட்டி எனக்கு நிறைய வேலை இருக்கு. இவளை கார்ல கூட்டிட்டு போனா இவ என்னிடம் சண்டை போட்டுக்கிட்டே வருவா.. அதிலேயே எனக்கு டைம் ஆகிடும்” என்றவனை முறைத்து பார்த்த ஆதிரை.​

“பாட்டி யாரும் வேண்டா வெறுப்பா என்னை அழைச்சிட்டு போக வேண்டாம். நான் ஆட்டோவில் போய்க்கிறேன்.. அவரோட தங்கச்சியை மட்டும் அவரை கொண்டு போய் விட சொல்லுங்க” என்றபடி ஒரு அடி எடுத்து வைக்க..​

அகிலாண்டேஸ்வரி, “நில்லுமா.. நான் சொல்றதை ரெண்டு பேரும் கேட்கவே கூடாது என்ற எண்ணத்தோட இருக்கீங்களா” என்றார் ஆருத்ர வர்மனையும், ஆதிரையையும் உறுத்து விழித்தபடி.​

வர்மன், “இல்ல பாட்டி..” என்று எதுவோ கூற வாய் எடுக்க.​

அவனை தன் கையை உயர்த்தி தடுத்தவர், “நான் சொல்றதை மட்டும் நீ செய் வர்மா.. நீ தான் இவங்க ரெண்டு பேரையும் கொண்டு போய் காலேஜ்ல இனிமே தினமும் டிராப் பண்ணனும்”.​

“இது என்ன பழக்கம்.. இனியாவை மட்டும் தான் அழைச்சிட்டு போவேன்னு சொல்ற.. ஒரு விஷயத்தை நல்லா உன் மனசுல பதிய வச்சுக்கோ.. இனியாவை விட ஆதிரை தான் உனக்கு முக்கியமானவ”.​

“உனக்கு முழுசா சொந்தமானவ ஆதிரை தான்.. மத்தவங்க மேல நீ காட்டுற அக்கறையில் கொஞ்சமாவது அவள் மேல காட்ட பழகு” என்கவும்.​

வேறு வழி இன்றி, “சரி” என்று ஒப்புக்கொண்டான் ஆருத்ரவர்மன்.​

ஆதிரைக்கு பாட்டியின் பேச்சை மீறி ஆட்டோவில் செல்லவும் மனம் வரவில்லை. ‘சரி’ என்று அமைதியாக சென்று காரின் பின் சீட்டில் ஏறி அமர்ந்து கொண்டாள்.​

இனியாவிற்கு தான் இவர்கள் இருவருடனும் தனிமையில் கல்லூரிக்கு செல்ல பதட்டமாக இருந்தது. மீண்டும் இவர்கள் இருவரும் நடு ரோட்டிலேயே சண்டையிட தொடங்கி விடுவார்களோ என்று..​

ஆதிரையோ எதுவும் கூறாமல் அமைதியாக வர.. வர்மன் கண்ணாடியினோடு அவளை முறைத்து பார்த்துக் கொண்டே வந்து கொண்டு இருந்தான்.​

இனியா புத்தகத்தை புரட்டியபடி வந்து கொண்டிருக்க..​

அவளின் தலையில் கொட்டிய ஆதிரை, “என்னடி இது.. இன்னும் நீ படிச்சு முடிக்கலையா”.​

இனியா தன் தலையை தேய்த்துக் கொண்டே, “ஆது இந்த கொஸ்டின் ரொம்ப கஷ்டமா இருக்குடி.. எனக்கு ஒண்ணுமே புரிய மாட்டேங்குது”.​

ஆதிரை, “நான் உனக்கு 2 டைம்ஸ்‌ சொல்லி கொடுத்துட்டேன். திரும்பத் திரும்ப நீ டவுட் கேட்டுக்கிட்டே இருந்தா என்னால் எப்படி சொல்லிக் கொடுக்க முடியும்” என்றவள் கூறி முடிக்கவும்..​

ஆருத்ரவர்மன் சடன் பிரேக் போட்டு வண்டியை நிறுத்தவும் சரியாக இருந்தது..​

அதை சற்றும் எதிர்பாராத இனியா, ஆதிரை இருவருமே தடுமாறி அமர.​

ஆதிரை, “என்ன உங்களுக்கு கண்ணுல ஏதாவது பிரச்சனையா.. பார்த்து வண்டியை ஓட்ட தெரியாதா.. இப்படித்தான் சட்டுனு பிரேக் போடுவீங்களா” என்றாள் முன் சீட்டில் இடித்த தன் தலையை தேய்த்தவாறு.​

ஆருத்ரவர்மன் கண்ணாடியோடு அவளை உறுத்து விழித்தவன், “கொஞ்சம் கீழே இறங்குறியா..” என்றான் கடுமையான குரலில்.​

ஆதிரை புரியாமல் பார்க்க..​

ஆருத்ரவர்மன், “உன்னை தான் சொன்னேன் கீழே இறங்கு..” என்கவும்.​

கோபமாக தன் உடமைகளை எடுத்துக் கொண்டு சட்டென வண்டியை விட்டு இறங்கினாள் ஆதிரை.​

ஆருத்ரவர்மன் எட்டி முன்பக்க கதவை அவளுக்காக திறந்து விட்டவன், “இங்க வந்து உட்காரு”.​

அவனின் வார்த்தைகள் அனைத்தும் அதிகார தோணியிலேயே வெளிவந்தது.​

ஆதிரை, “எதுக்கு?” என்றாள் வெளியே நின்றவாறு.​

ஆருத்ரவர்மன், “உட்காருனு சொன்னேன்” என்றவனின் வார்த்தையில் அவனிடம் வாதிடுவதற்கு தங்களிடம் நேரம் இல்லை என்பதை தன் கை கடிகாரத்தை திருப்பி பார்த்த ஆதிரை..​

உடனே, கல்லூரிக்கு செல்ல வேண்டும் என்பதால் தன் கோபத்தை கட்டுப்படுத்திக் கொண்டு முன்னிருக்கையில் அமர்ந்தாள்.​

ஆதிரை, “சரியான சைக்கோ” என்று முணுமுணுக்க.​

ஆருத்ரவர்மன், “திரும்ப என் தங்கச்சி மேல கை வைக்கிற வேலை எல்லாம் வேண்டாம்” என்றான் வெளிப்படையாகவே மிரட்டுவது போல்.​

ஆதிரை, “இப்போ நான் என்ன பண்ணேன்?”.​

ஆருத்ர வர்மன், “நான் தான் பார்த்தேனே.. எதுக்குடி அவ தலையில் கொட்டின”.​

இனியா, “அண்ணா ஆது சும்மா விளையாட்டுக்கு தான் அப்படி பண்ணா”.​

வர்மன் கண்ணாடியினோடே அவளை பார்த்து முறைத்தவன், “நீ வாயை மூடு இனியா.. உன்னால் தான் எல்லா பிரச்சனையும்.. அவ என்னுடைய தங்கச்சி திரும்ப அவ மேல கை வைக்கிற வேலையெல்லாம் வச்சுக்காத” என்றான் மீண்டும் ஒருமுறை.​

அனைத்து விஷயத்திலுமே தன்னிடம் வீம்புக்காக சண்டையிடுபவன்.. இப்போது கூறுவது வீம்புக்காக அல்ல என்பது அவனின் கோபமே அப்பட்டமாக எடுத்துரைத்தது.​

அவனின் தங்கையின் மீதான அவனின் பாசமும் அவளுக்கு நன்கே புரிந்தது. எனவே, எதுவும் கூறாமல் அமைதியாக சாலையில் தன் பார்வையை பதித்த படி அமர்ந்திருந்தாள்.​

கல்லூரியை சென்று அடையும் வரையிலுமே அமைதியாக சென்றது இவர்களின் கார். கல்லூரி வளாகத்திற்குள் நுழையவும் ஒரு கும்பல் ஆராவாரத்துடன் இவர்களை நோக்கி கூச்சலிட்டவாறு ஓடி வரவும்..​

ஆருத்ரவர்மன் ‘யார் இவர்​

கள்?’ என்று காரில் இருந்து இறங்கியவன் திடுக்கிட்டு விழிக்க..​

ஆதிரையும், இனியாவும் பெரிதாக விரிந்த சிரிப்போடு அவர்களை எதிர் நோக்கினர்.​

 

RJ novels

Moderator

அகம் - 14​

மூன்று ஆண்களும், மூன்று பெண்களும் இவர்களை நோக்கி கூச்சலிட்டவாறு ஓட்டமும் நடையுமாக விரைந்து வர.. அவர்களின் கையில் இரண்டு மாலைகளும் இருந்தன.​

யார் இவர்கள் என்று ஆருத்ரவர்மன் புரியாமல் விழித்தான். அவர்கள் அருகில் வந்தவர்கள் மாற்றி, மாற்றி இனியாவிற்கும், ஆதிரைக்கும் கை குலுக்கியவாறு வாழ்த்துக்களை தெரிவிக்க.​

இருவருமே அவர்களுக்கு நன்றி கூறி முடித்தனர். இவர்கள் அனைவருமே கல்லூரி நண்பர்கள்.​

தினேஷ், “என்ன இது ஆது.. இனியாவுக்கு மட்டும் தானே கல்யாணம்னு சொன்ன.. கடைசியில் சொல்லாமல் கொள்ளாமல் நைசா உன்னுடைய கல்யாணத்தையும் செலவே இல்லாமல் முடிச்சிட்ட போலருக்கே..” என்று அவனை கிண்டல் செய்ய.​

ஆதிரையோ என்ன கூறி சமாளிப்பது இவர்களை என்று தெரியாமல் நின்று இருந்தாள்.​

ஷாலினி, “டேய் அன்னைக்கு என்ன நடந்துச்சுனு உனக்கு தெரியுமா.. நானும் தானே போயிருந்தேன் செம சீனு.. நீ மட்டும் நேரில் பார்த்திருந்த வாயை பிளந்துகிட்டு பார்த்திருப்ப”.​

“ஹீரோ சார் மாஸா வந்து நம்ம ஆதிரை கழுத்துல தாலியை கட்டிட்டாரு.. இவளும் அவருக்கு கொஞ்சமும் சலச்சவ இல்லை என்பது போல் அவர்கிட்ட சரிக்கு சரியா சண்டை போட்டுக்கிட்டு நிக்கிறா.. செமையா இருந்துச்சுடா..” என்றாள் குதூகலாமாக.​

ஆருத்ர வர்மன் அவர்களை முறைத்துக் கொண்டு நின்று இருந்தான்.​

கபிலன், “ஆமா டா.. நான் கூட பார்த்தேன்”.​

தினேஷ், “நான் தான் மிஸ் பண்ணிட்டேன். நானும் வந்திருந்தேன்னா செமையா இருந்திருக்கும்” என்றவன் தன் கையில் இருக்கும் மாலையை ஆதிரையிடமும், ஆருத்ரவர்மனிடமும் நீட்ட.​

இருவரும் என்ன இது என்பது போல் புரியாமல் பார்த்தனர்.​

தினேஷ், “என்ன ரெண்டு பேரும் அப்படி பாக்குறீங்க.. அன்னைக்கு உங்க கல்யாணத்தை என்னால் பார்க்க முடியல.. அதான் எங்களுக்காக நீங்க ரெண்டு பேரும் இப்போ மாலை மாத்திக்கணும்” என்று நீட்டவும்.​

ஆதிரை, “டேய் டைம் ஆகுதுடா கிளாஸ் ஸ்டார்ட் பண்ணிட போறாங்க. இப்போ இதெல்லாம் எதுக்கு?” என்றாள் எரிச்சலாக.​

ஆருத்ரவர்மன் அவனிடம் மறுப்பதற்கு வாயை திறக்கும் முன்பே ஆதிரை பேசி முடித்திருக்க.. ஆருத்ரவர்மன் தான் கூறுவதற்கு முன்னதாகவே அவள் எப்படி கூறலாம் என்று அவளை முறைத்து பார்த்தான்.​

தினேஷ், “என்னடி உன்னோட கல்யாணத்தை தான் நான் பாக்கல இல்ல.. அது மட்டும் இல்லாமல் கல்யாண நாள் அப்போ நீங்க ரெண்டு பேரும் மாலை கூட மாத்திக்கலைனு ஷாலினி சொன்னா..”.​

“அதான் நாங்க எல்லாரும் பிளான் பண்ணி உங்களுக்காக இதை வாங்கிட்டு வந்தோம். எங்களுக்காக இதை சும்மா மாத்திக்கோங்க” என்று அவர்களின் முகத்தருகே நீட்ட..​

ஆதிரை, “இல்லடா..” என்று எதுவோ கூற வாய் எடுக்க..​

ஆருத்ர வர்மன் எதுவும் கூறாமல் அவன் நீட்டிய மாலையில் ஒன்றை வாங்கிக் கொண்டான் . இனியாவும், ஆதிரையும் அவனை அதிர்ந்து போய் திரும்பி பார்க்க.​

அவனோ தன் முகத்தில் எந்த ஒரு பாவனையும் காட்டாமல் உணர்ச்சிகள் துடைக்கப்பட்ட முகத்துடன் நின்றிருந்தான். அவனின் முகத்தை வைத்து அவன் என்ன சிந்திக்கிறான் என்பதை யூகிக்கவே முடியாமல் குழம்பி போய் நின்றனர்.​

தினேஷ், “பாரு மாப்ள சாரே வாங்கிட்டார் ரொம்ப பண்ணாதடி” என்று மற்றொரு மாலையை அவளின் கையில் திணித்தான்.​

கபிலன் கையில் கேமராவோடு தயாராக நின்று இருக்க..​

ஷாலினியும், தினேஷும் தங்கள் கையில் பாப்ஸ்டிக்கை ஏந்தியவாறு காத்திருந்தனர்.​

மற்ற நண்பர்கள் மூவரும் கரகோஷம் எழுப்பி இவர்களை உற்சாகப்படுத்த..​

ஆதிரையால் அவ்வளவு இலகுவாக வர்மனின் கழுத்தில் அந்த மாலையை அணிவிக்க அவளின் கை முன் வரவில்லை. ஏதோ ஒரு தயக்கம்..​

ஷாலினி, “என்னடி அப்படியே நிக்கிற சார் கழுத்துல மாலையை போடு” என்று அவள் கூறி முடிக்கவும்.​

ஆருத்ர வர்மனின் கையால் ஆதரியின் கழுத்தில் மாலை அணிவிக்கப்பட்டது.​

நண்பர்கள் அந்த பாப் ஸ்டிக்கை வெடிக்கச் செய்ய..​

ஆதிரையும் வர்மனின் கழுத்தில் வேறு வழியின்றி அந்த மாலையை அணிவித்தாள்.​

கபிலன், “இரண்டு பேரும் கொஞ்சம் பக்கத்துல நில்லுங்க ஒரு போட்டோ எடுத்துக்கிறேன்” என்கவும்.​

வர்மனின் மீது உரசாதவாறு சற்று இடைவெளி விட்டு அவன் அருகில் நின்றாள் ஆதிரை.​

ஷாலினி, “என்னடி உங்களை பார்த்தால் கல்யாணமான புது ஜோடி போட்டோ எடுக்குற மாதிரியே இல்ல.. இன்னும் கொஞ்சம் நெருக்கமா நில்லுங்க”.​

அவனிடம் சண்டையிட சொன்னால் ஆதிரை நன்றாக சண்டையிடுவாள். ஆனால், வலிய சென்று அவனுடன் நெருக்கமாக நிற்க அவளுக்கு மனம் முரண்டு பிடித்தது.​

அவள் தயங்குவதை உணர்ந்த வர்மன் வேண்டும் என்றே அவளின் தோளை சுற்றி தன் கையை போட்டவாறு அவளை தன்னுடன் நெருக்கமாக நிற்க வைத்தான்.​

ஆதிரை அவனை அதிர்ந்து போய் திரும்பி பார்க்க.. அனைத்துமே அவர்களின் கேமராவில் அழகாக புகைப்படம் ஆகியது. பிறகு, நண்பர்கள் அனைவரும் சேர்ந்து அவர்களுடன் செல்பி எடுத்துக் கொள்ள..​

மணமக்களை வளைத்து வளைத்து புகைப்படம் எடுத்தனர்‌. இனியாவோ தன் அண்ணன் தானா இவர் என்பது போல் ஆச்சரியமாக ஆருத்ரவர்மனை பார்த்தாள்.​

ஷாலினி, “சார் உங்ககிட்ட இவளை பத்தி நிறைய விஷயம் சொல்ல வேண்டியது இருக்கு. பட், இப்போ எங்களுக்கு கிளாஸ்க்கு டைம் ஆகிடுச்சு. அதை பத்தி எல்லாம் பேச டைம் இல்ல.. ஒரு நாள் உங்க வீட்டுக்கு வந்து எல்லாத்தையும் விவரமா சொல்றோம்” என்றபடி அனைவரும் விடை பெற்று கல்லூரி வளாகத்தை நோக்கி நடக்க.​

வர்மன் யாரும் அறியாத வண்ணம் ஆதிரையின் கையைப் பிடித்து பின்னோக்கி இழுத்தவன்.​

அவளை முறைத்து பார்த்தவாறு, “என்ன இதெல்லாம் உன்னோட பிளானா..” என்றான் தன் அடி குரலில் சீற்றமாக.​

ஆதிரை அவனை புரியாமல் பார்க்க, “என்ன பேசுறீங்க நீங்க.. என்ன பிளான்?”.​

வர்மன், “இப்படி எல்லாம் செய்ய சொல்லி நீ தானே உன் பிரெண்ட்ஸ் கிட்ட சொல்லி இருக்க”.​

ஆதிரை, “தேவை இல்லாம பேசாதீங்க.. நான் எதுக்காக இப்படி எல்லாம் செய்ய சொல்ல போறேன்”.​

ஆருத்ர வர்மன், “என்ன இப்படி ஏதாவது செஞ்சு என்னை இம்ப்ரஸ் பண்ணலாம்னு பாக்குறியா.. நீ என்ன செஞ்சாலும் இந்த ஜென்மத்துல நான் உன்னை என் வைஃபா ஏத்துக்கவே மாட்டேன்” என்றான் கம்பீர குரலில்.​

பிற்காலத்தில் அவளின் காதலுக்காக அவளின் பின்னே அலைந்து திரிய போகிறோம் என்பதை அப்பொழுதே அறிந்து இருந்தால் அவ்வாறு கூறியிருக்க மாட்டானோ.. என்னவோ..​

ஆதிரை அவனை நக்கல் சிரிப்போடு எதிர்நோக்கியவள், “இந்த ஆசை எல்லாம் வேற உங்களுக்கு இருக்கா.. இவ்வளவு தெளிவா வைஃபா ஏத்துக்க முடியாதுன்னு சொல்லுறவர் எதுக்காக தாலியை கட்டுனீங்க”.​

ஆருத்ர வர்மன், “அதான் டி.. அதான் நான் பண்ண பெரிய தப்பு.. போயும், போயும் உன்னை மாதிரி ஒருத்தியோட கழுத்துல போய் தாலியை கட்டி இருக்கேன் பாத்தியா..”.​

ஆதிரை, “ஓவரா பேசாதீங்க.. பண்றதையும் பண்ணிட்டு இப்போ இவ்வளவு திமிரா வேற பேசுறீங்களா”.​

ஆருத்ர வர்மன் அவளை எச்சரிக்கும் படி தன் ஒற்றை கையை நீட்டியவன், “இங்க பாரு திரும்பவும் இந்த மாதிரி உன் பிரெண்ட்ஸை வச்சு ஏதாவது பிளான் பண்ணி என்னை இம்ப்ரஸ் பண்ணலாம்னு ட்ரை பண்ணாத..”.​

“நீ என்ன பண்ணாலும் என்கிட்ட எதுவும் வேலைக்காகாது” என்று கோபமாக கூறியவன் அவளின் பதிலை கூட எதிர்பாராமல் விறுவிறுவென காரை கிளப்பிக் கொண்டு கிளம்பி விட்டான்.​

ஆதிரை, “போடா சைக்கோ.. இம்ப்ரஸ் பண்றாங்களாம்.. இவனை இம்ப்ரஸ் பண்ணி நான் என்ன பண்ண போறேன்” என்று முணுமுணுத்தவாறு கோபமாக கல்லூரிக்குள் நுழைந்தாள்.​

அன்றைய நாளின் வேலைகள் மீண்டும் அவளை ஆருத்ர வர்மனை பற்றி சிந்திக்க விடாமல் தனக்குள் இழுத்துக் கொண்டது.​

இனியாவும், ஆதிரையும் பல் மருத்துவம் படித்துக் கொண்டிருக்கின்றனர்.​

ஆதிரை வளர்ந்த ஆசிரமத்தில் இருக்கும் குழந்தைகளுக்கு சில வசதி படைத்தவர்கள் அவர்களே முன்வந்து அவர்களின் மேல் படிப்புக்கான செலவை தாங்களே பார்த்துக் கொள்வதாக ஸ்பான்சர்ஷிப் கொடுப்பதுண்டு.​

அப்படித்தான் ஆதிரைக்கும் அவர்களின் ஆசிரமத்தில் இருப்பவர்கள் ஒரு ஸ்பான்சரை ஏற்பாடு செய்திருந்தனர். அவர்களின் உதவியோடு தான் ஆதிரை கல்லூரியிலேயே சேர்ந்தாள். அதன் பின்னர் தான் இனியாவும், ஆதிரையும் தோழிகள் ஆனதெல்லாம்..​

மாலை நேரமும் வந்து சேர.. இருவரும் பேசியபடியே வெளியே வரவும்.. ஆருத்ரவர்மனின் கார் இவர்களுக்காக காத்துக் கொண்டிருந்தது.​

இனியா பின்பக்க கதவை திறக்க.. ஆதிரையும் அவளுடன் ஏற வேண்டி பின்புறம் நோக்கி செல்ல. ஆருத்ரவர்மன் அவளுக்காக முன்பக்க கதவை திறந்தவாறு தன் கண்களால் முன்னிருக்கும் இருக்கையை காண்பித்தான்.​

இவனிடம் பேசி வாதிட்டு சண்டையிடுவதை விட அமைதியாக சென்றாலே பாதி பிரச்சனை தீர்ந்துவிடும் என்று எண்ணிய ஆதிரை முன்பக்கம் ஏறிக்கொண்டாள்.​

சற்று நேரம் அமைதியாக கார் சென்று கொண்டிருக்க..​

இனியா, “தேங்க்ஸ் ஆது.. நீ மட்டும் ஹெல்ப் பண்ணலைன்னா அவ்வளவு தான்.. இன்னைக்கு நான் மாட்டி இருப்பேன்”.​

ஆதிரை, “இனிமேலாவது இப்படி எல்லாம் செய்யாதே இனி.. எந்த வேலை இருந்தாலும் படிப்பு விஷயத்துல கொஞ்சம் கான்சன்ட்ரேட்டோட இரு” என்று கூறிக் கொண்டிருக்கும் பொழுதே இனியாவின் செல்போன் இசைத்தது.​

இனியா திருதிருவென இருவரையும் பார்க்க..​

ஆதிரை, “என்ன கவின் அண்ணா வா..”.​

இனியா பதில் உரைக்காமல் ‘ஆமாம்’ என்பது போல் தலையசைக்க.​

கண்ணாடியோடு அவளைப் பார்த்து முறைத்தான் ஆருத்ரவர்மன்.​

ஆதிரை, “இப்போ தான் படிப்புல கான்சன்ட்ரேட் பண்ணனு சொன்னேன். அதுக்குள்ள கவின் அண்ணா கால் பண்ணிட்டாங்க..” என்று கூறி நகைக்க.​

இனியா அழைப்பை ஏற்று கிசுகிசுவென கவின் உடன் உரையாட தொடங்கினாள்.​

இப்படியே நாட்கள் உருண்டோட இவர்களின் பஞ்சாயத்து மட்டும் ஒரு முடிவிற்கு வருவதாக தெரியவில்லை. தினமும் ஏதேனும் ஒரு சண்டை, பிரச்சனை இப்படியே சென்று கொண்டிருந்தது.​

அன்று காலை சரித்திரனும், வேலாயுதமும் தோட்டத்தில் போடப்பட்டிருந்த நாற்காலியில் அமர்ந்தபடி ஏதோ பேசிக் கொண்டிருந்தனர்.​

அப்பொழுது ஆதிரை செடிகளுக்கு தண்ணீர் ஊற்றிக் கொண்டிருக்க..​

சரித்திரன், “ஓகே வேலு.. நான் போய் அம்மாவை பார்க்கிறேன்” என்றவாறு எழுந்து இரண்டு அடி எடுத்து வைத்ததும் தடுமாறி கீழே விழ சென்றவரை ஆதிரை சரியாக ஓடி வந்து தாங்கி பிடித்தாள்.​

வேலாயுதம், “என்ன அண்ணா என்ன ஆச்சு?” என்க.​

ஆதிரையும், வேலாயுதமும் சேர்ந்து அவரை மெதுவாக அருகில் இருந்த நாற்காலியில் அமர வைத்தனர்.​

ஆதிரை, “என்ன ஆச்சு உங்களுக்கு ஏன் இவ்வளவு ஸ்வெட் ஆகுது.. உள்ள வாங்க டாக்டர் கிட்ட போகலாம்” என்றாள் படபடப்பாக.​

சரித்திரன், “அதெல்லாம் எதுவும் வேண்டாம் மா” என்றார் தடுமாற்றத்தோடு.​

ஆதிரை உரிமையோடு, “என்ன இப்படி சொ​

ல்றீங்க.. கொஞ்சம் நேரத்தில் கீழே விழுந்து இருப்பீங்க.. இந்தாங்க இந்த தண்ணியை குடிங்க” என்று அருகில் இருந்த டம்ளரை எடுத்து அவருக்கு புகட்டினாள்.​

 
Top