எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

அத்தியாயம் 04

அத்தியாயம் 04

கௌதம் அவள் கூறிய இடத்துக்கு சொன்ன நேரத்தில் வந்து நின்றான்.

உணவகத்தில் கூட்டம் குறைவாக இருக்கவும் உள்ளே நுழைந்து இருவருக்கான இடத்தில் சென்று அமர்ந்தான்.

அவன் வந்த ஐந்து நிமிடத்தில் உணவகத்தில் நுழைந்த ப்ரியா அவன் இருந்த இடத்தை நோக்கி நடந்தாள்.

“ஹாய், தேங்க்யூ ஃபார் கம்மிங்” என்று எழுந்து நின்று அவன் கை கொடுக்க சம்பிரதாயமாக அவளும் கைகுலுக்கினாள்.

இருவரும் எதிர் எதிரே அமர்ந்ததும் வெயிட்டர் மெனு காட்டை கொடுத்துவிட்டு சென்றார்.

“என்ன சாப்பிடுறீங்க?” என்று கௌதம் கேட்டதும் தனக்கு மிகவும் பிடித்த பிஸ்காஃப் பிறப்பே (biscoff frappe) அவள் ஆர்டர் செய்ய அவன் என்ன வாங்குவது என்று தெரியாமல் மறுபடியும் மறுபடியும் மெனுவை புரட்டி பார்த்தான்.

“எதுவுமே புடிக்கலையா?” என்று ப்ரியா அவனிடம் கேட்க,

“அப்படி இல்ல. எனக்கும் உங்களுக்கு ஆர்டர் பண்ணதே ஆர்டர் பண்ணிக்கோங்க” என்றான்.

சரி என்று அவள் அவனுக்கும் ஆர்டர் செய்திட அடுத்து என்ன என்று அவனேயே பார்த்துக் கொண்டிருந்தாள்.

அவளின் பார்வையின் பொருள் புரிந்ததும் குரலை செருமிக் கொண்டு, “சாரி, வீட்ல அம்மா கொஞ்சம் அவசரப்பட்டு உங்க வீட்டுக்கு வந்துட்டாங்க. மகேஷ் எனக்கு போன் பண்ணி சொன்னதும் தான் எனக்கே தெரியும்”என்று உண்மையை கூறினான்.

ப்ரியாவை பெண் பார்த்துவிட்டு வீட்டுக்கு வந்ததுமே அருணா மகளுக்கு அழைத்து பெண் பார்க்க சென்ற விஷயத்தை கூறவும் மகேஷ் மாமியாரின் திட்டத்தில் உடன்பட விரும்பாமல் சம்பந்தப்பட்ட இருவருக்கும் அழைக்க முடிவு செய்தவன் முதலில் கௌதமுக்கு அழைத்து விட்டான். அனைத்தையும் கேட்ட கௌதம் தானே ப்ரியாவிடம் இதைப் பற்றி பேசி மன்னிப்பு கேட்கிறேன் என்று கூறியதால் மகேஷ் ப்ரியாவுக்கு அழைக்கவில்லை.

நடந்த அனைத்தையும் ஒன்று விடாமல் கௌதம் கூறி முடிய ஆர்டர் செய்த பானங்கள் வந்தன.

யாரோ ஒரு பெண்ணிடம் தான் ஏன் இவ்வளவு விளக்கம் கொடுக்கிறோம் என அவனுக்கு தெரியாத போதும் அவளிடம் நல்ல பெயர் வாங்கி விட வேண்டும் என்ற முனைப்பு இருந்தது அவனிடம்.

ப்ரியா ரசித்து குடித்த விதமே கூறியது அவளுக்கு மிகவும் பிடித்த பானம் என்று.

மும்முரமாக பிறப்பே குடித்துக் கொண்டிருந்தவளை பார்த்த கௌதம் “கல்யாணத்தை பத்தி என்ன நினைக்கிறீங்க?”என்று கேட்டான்.

தன்னிடம் மன்னிப்பு கேட்டு விட்டு கிளம்பி விடுவான் என்று அசாத்திய நம்பிக்கையில் இருந்தவளை அசைத்துப் பார்த்தது அவனின் கேள்வி.

அந்த நொடி ஆர்த்தி சொன்னது போல் இருக்குமோ என அவள் நினைக்க இதுவரை தைரியமாக இருந்தவள் படபடப்பு அடைய தொடங்கினாள்.

“கல்.. கல்யாணம்” என்று திக்கியவளுக்கு அதற்கு பின் வார்த்தைகள் வருவேனா என அடம் பிடித்துக் கொண்டிருந்தது.

“ஏங்க கல்யாணத்தை பத்தி தானே கேட்டேன். நம்ம கல்யாணம் பண்ணிக்கலாம்னு கேட்ட மாதிரி பயப்படுறீங்க” என்றான் சகஜமாக சிரித்துக் கொண்டு.

அது தான் பயமே என்பது போல் அவன் முகத்தை பார்த்து வைத்தாள்.

“யாரையாவது லவ் பண்றீங்களா என்ன?” என்று அவன் கேட்டதும் அவளுக்கு எப்பொழுதும் தோன்றும் அருணின் முகம் கண் முன்னே தோன்றி மறைய வெளிப்படையாக தன் மனதில் இருப்பதை கூற தொடங்கினாள்.

“லவ் இல்ல…காலேஜ் டைம் கிரஷ் இருந்துச்சு”என்று தன் கிரஷ் பெயிலியர் ஸ்டோரியை எடுத்துவிட சுவாரசியமாக கேட்டவன் “அவ்வளவுதானா?” என்று கூறி சப்பென்று ஆக்கிவிட்டான்.

அவன் சொன்ன விதம் அவளை கேலி செய்வது போல தோன்ற, “ஏன் உங்களுக்கு ஒரு ரெண்டு லவ்வர் இருப்பாங்களா?” என்றாள் நக்கலாக.

மீதம் இருந்த பானத்தை மொத்தமும் வாய்க்குள் சரித்தவன் அதை முழுங்கி விட்டு மூனு என்று விரலை மடக்கி கூறினான்.

அவள் வாயைப் பிளந்த வண்ணம் அவனை காண,

“ஏங்க நான் பார்க்க நல்லா இல்லையா?எனக்கெல்லாம் மூன்று கேர்ள் பிரண்டு இருக்க கூடாதா என்ன?” என்றான்.

பெரிய நெற்றி, அடர்த்தியான புருவங்கள், நீளமான மூக்கு மற்றும் அவன் பிங்க் உதடுகள் சிகரெட்டை தொட்டதில்லை என கூறும் விதமாக இருந்தது.

வந்ததிலிருந்து ஒவ்வொரு முறையும் அவன் கேசத்தை விரல்கள் கொண்டு கலைக்கும்போது கண்களாலேயே அவனை பருகிக் கொண்டிருந்தவள் இதற்கு என்ன பதில் சொல்வாள்.

“நல்லாதான் இருக்கீங்க” என்றவள் வெட்கத்தை மறைக்கும் பொருட்டு பேச்சை மாற்றி, “அது எப்படி மூன்று?” என்று கேட்டாள்.

“ஒன்னு டென்த் (10th) படிக்கும் போது. அப்புறம் டுவெல்த் (12th) படிக்கும் போது. கடைசியா காலேஜ்ல படிக்கும் போது தேர்ட் இயர். ஸ்கூல் படிக்கும்போது கூட அவ்வளவு சீரியஸ்ஸா லவ் பண்ணல. ஆனா, காலேஜ்ல தீபாளினு ஒரு பொண்ணு. ரெண்டு பேரும் ரொம்ப சின்சியராதான் லவ் பண்ணினோம். காலேஜ் முடிஞ்சதும் அவ வீட்டில போய் பேசினேன். அவங்க அப்பா ரொம்ப ஸ்ட்ரிக்ட். கல்யாணம் பண்ணிக்க கேட்ட போது முடியவே முடியாதுன்னு சொல்லிட்டாரு. கொஞ்ச நாள் கஷ்டமா இருந்துச்சு. அது நடந்த ரெண்டு மாசத்துல அவளுக்கு கல்யாணம் பண்ணி வச்சிட்டாங்க. தீபாளிக்கு இப்போ ரெண்டு குழந்தை இருக்காங்க”

இயல்பாகவே அவளிடம் தன் காதல் வாழ்க்கையை பற்றிய சுருக்கத்தை கூறியவன். வெயிட்டரை வரவழைத்து பில்லுக்கு பணத்தை செலுத்தினான்.

அவன் கூறியதில் இருந்து விடுபட முடியாமல் ஆச்சரியமாக அவனையே பார்த்துக்கொண்டிருந்தவளின் கருத்தில் அவன் வெயிட்டரை வரவழைத்தது, பில்லுக்கு பணத்தை செலுத்தினது என்று ஒன்றுமே பதியவில்லை.

எப்பொழுதோ முடிந்து போன அவன் காதல் அத்தியாயத்துக்காக இப்பொழுது வருந்திக் கொண்டிருந்தாள் பெண்.

“ஹலோ ஹலோ” என்று ப்ரியாவின் முகத்துக்கு முன்னால் அவன் கையசைக்க சுயம் பெற்றாள்.

“கிளம்புவோமா?” என கௌதம் எழுந்து நிற்க அவள் வெயிட்டரை அழைத்தாள்.

“ஏன் இப்ப வெயிட்டரை கூப்பிடுறீங்க?” என்று கேட்டான்.

“பில் பே பண்ணனும்” என்று அவள் இழுக்க,

“சரியா போச்சு அதெல்லாம் பண்ணியாச்சு வாங்க போலாம்” என்றவன் அவளை முன்னே செல்ல விட்டு பின் தொடர்ந்தான்.

அவள் தன் இருசக்கர வாகனத்தில் ஏறி ஹெல்மட்டை போட்டுக்கொள்ள, “பை த வே உங்களுக்கு எப்பயாவது கல்யாணம் பண்ணனும்னு ஐடியா இருந்துச்சுன்னா ஃபர்ஸ்ட் என்கிட்ட சொல்லுங்க” என்று கூறியவன் குளிர் கண்ணாடியை கண்களில் மாட்டிக்கொண்டு கிளம்பி விட்டான்.

அவன் கூறியதை எந்த அர்த்தத்தில் எடுத்து கொள்வது என்று அவளுக்கு விளங்கவில்லை.

************************************

“அப்பா உங்க பக்கத்தில் இருக்க அந்த பொண்ணுக்கு என் வயசு இருக்குமா?” என்று தந்தையிடம் கேட்டுக்கொண்டு இருந்தாள் ப்ரியா.

“ஆமாண்டா. ரொம்ப நல்ல பொண்ணு” என்றார்

“ஆனாலும் அந்த பொண்ண விட நீங்க யாங் ஆஹ் தெரியுறீங்கப்பா“ என்று கூறி அவர் தலையில் ஐஸ் கட்டியை இறக்கி வைத்தாள்.

மகளின் பேச்சு சத்தம் கேட்டு வந்த தாரணி கணவர் நேற்று சென்ற வங்கி அவார்ட் பங்க்ஷன் படங்களை மகளுக்கு காட்டி கொண்டு இருக்கின்றார் என்று புரிந்ததும் தானும் அவர்களோடு இணைந்து கொண்டார்.

சிவகுமாரின் கிளையில் பெரும்பாலும் பெண் ஊழியர்களே இருந்தனர். அவர்களோடு சேர்ந்து எடுத்த குரூப் புகைப்படத்தை பார்த்த தாரணி,

“பாத்தியா ப்ரியா உங்க அப்பா பெரிய கிருஷ்ணன் மாதிரி நடுவுல நிக்க அவர் சுற்றி ஒரே பொண்ணுங்களா இருக்கு” என்று மகளிடம் கூறி கணவரை போலியாக முறைத்தார்.

“ஆமாம்பா. உங்களுக்கு சிவகுமார்னு பேர் வைக்கிறது பதிலா கிருஷ்ணன் என்று பெயர் வைத்திருக்கலாம் ரொம்ப ஹண்ட்சம் பா நீங்க” என்றாள் ப்ரியா.

“அதானே பார்த்தேன். நீ எப்ப எனக்கு சப்போர்ட் பண்ணி இருக்க, உனக்கு எப்பவும் அப்பா அப்பா அப்பா தானே. என் பையன் வரட்டும் உங்க ரெண்டு பேரையும் கவனிச்சுக்குறேன்” என்று தாரணி கூற,

தந்தையின் தோள் மேல் சாய்ந்து கொண்டு அன்னையைப் பார்த்து உதட்டை சுளித்தாள் ப்ரியா.

ப்ரியாவுக்கு தாயை விட தந்தையின் மேல் பாசம் அதிகம். அவரை பற்றி அன்னையே கூட குற்றம் சொன்னாலும் சண்டைக்கு செல்வாள்.

இவர்களின் பேச்சு சத்தம் கேட்டு வீட்டுக்குள் நுழையும் போதே, “அம்மா…அம்மா”என்று சத்தம் எழுப்பிக்கொண்டு வந்து சேர்ந்தான் அரவிந்த்.

“உன் மகன் உன்னை தேடி வந்துட்டான் பாரு”என்று மனைவியிடம் கூறினார் சிவகுமார்.

மலர்ந்த முகத்தோடு சந்தோஷமாக வீட்டினரை எதிர்கொண்ட அரவிந்த், “உங்க எல்லாருக்கும் சர்ப்ரைஸ் இருக்கு. சீக்கிரம் வெளியில் வாங்க”என்று கூறி மூவரையும் வீட்டின் வாசலுக்கு அழைத்து சென்றான்.

வீட்டின் வாசலில் அரவிந்த் தன் சொந்த உழைப்பில் சேர்த்து வைத்து வாங்கிய மினி கூப்பர் பளிச்சென்று கண்ணை பறிக்கும் சிகப்பு கலரில் நின்று கொண்டிருந்தது.

ஆச்சரியமும் சந்தோஷமாக, “அண்ணா எப்ப வாங்கின சொல்லவே இல்ல” என அவனை கட்டி அணைத்து வாழ்த்தினாள்.

மகன் தன் சொந்த உழைப்பில் வாங்கிய காரை பெருமையாக பார்த்துக் கொண்டிருந்தனர் அவனின் பெற்றோர்.

தங்கையின் கையில் கார் சாவியை கொடுத்து ஓட்டுனரின் இருக்கையில் அமர வைத்த அரவிந்த் அவள் அருகில் இருந்த இருக்கையில் அமர பின் சீட்டுகளில் சிவக்குமாரும் தாரணியும் அமர்ந்தனர்.

கடற்கரை சாலை ஓரமாக காரை லாவகமாக செலுத்திக்கொண்டு குடும்பத்தினரோடு இன்பமாக அந்த நேரத்தை கழித்துக் கொண்டிருந்தாள் ப்ரியா.

அரவிந்த் திடீரென பின்னால் அமர்ந்திருந்த பெற்றோரைப் பார்த்து, “நாம ஏன் நாளைக்கு வெளியே எங்கயாவது போயிட்டு வரக்கூடாது” என்று யோசனையை முன் வைத்தான்.

ஞாயிற்றுக்கிழமை என்பதால் அனைவரும் ஆமோதிப்பாக தலையசைக்க தாரணி மட்டும் யோசனையோடு, ”நாளைக்கு உங்க பெரியப்பா வாரேன்னு சொன்னார் டா. மறுபடியும் தாரணிக்கு ஒரு வரன் வந்திருக்கு என்று ஆரம்பிச்சாரு. என்ன சொல்ல போறாருன்னு தெரியல“ என்றார்

“என்னம்மா இது. நாளைக்கு தான் வரணுமா அவரு” என்று சீறியவன், “இப்ப என்ன அவசரம். இன்னும் ரெண்டு வருஷம் போகட்டுமே. அதுக்கப்புறம் ப்ரியாக்கு கல்யாணம் பண்ணி வைப்போம். அவ இல்லாம நம்மளால எப்படி ஜாலியா இருக்க முடியும். இப்போதைக்கு வேணாம்னு பெரியப்பா கிட்ட சொல்லுங்கம்மா” என்றான் ப்ரியாவின் பாசக்கார அண்ணன்.

இவர்கள் உரையாடல் காதில் விழுந்தாலும் கார் ஓட்டுவதிலேயே கவனமாக இருந்தாள் ப்ரியா.

இருந்தும் அவள் மணக்கண்ணில் வந்து நின்று சிரித்து அவளை வசிகரித்தான் கௌதம். மறுபடியும் வரன் பார்க்க தொடங்கி விடுவார்களா என்று யோசிக்க தொடங்க,

“சரி அந்த பேச்ச விடுங்க. நான் அண்ணா கிட்ட பேசுறேன். நாளைக்கு நாமெல்லாம் வெளியில போறோம்” என்று கூறி அந்தப் பேச்சுவார்த்தையை முடித்து வைத்தார் சிவகுமார்.

தொடரும்...
 
Top