அத்தியாயம் - 08
"ஹா.. ஹா.." சிரிப்பொலியை தொடர்ந்து,
“சித்தப்பா!" என்ற மழலையின் சிங்காரச் சிணுங்கள் சத்தத்தில், அந்த வீடு நீண்ட நெடிய வருடங்களுக்குப் பின், மகிழ்ச்சியின் எல்லையை தொட்டு, தொட்டு வந்தது. அவன் ஆறடி ராட்சச உருவத்தில், பல பேர் ஒரு அடி தள்ளி நிற்க, அந்த சின்னஞ்சிறு மொட்டு மட்டும் பயமின்றி
“சித்தப்பா!" எனும் கூச்சலோடு அதிகாலை வேளையில் அன்றைய நாளையே ரம்யமாக்கிக் கொண்டிருந்தாள், ஆத்விக்கின் தவப்புதல்வி ‘ஆக்ரா'
“இன்னாஃப் பேபி! இன்னைக்கு ப்ளே பண்ணது போதும். போங்க, போய் மம்மி கிட்ட ரெடி ஆகுங்க. ஸ்கூல் போயிட்டு வரலாம். நாளைக்கு சேம் டைம், சித்தப்பா கூட ஒர்க் அவுட் பண்ணலாம்."
“ஓகே.., ஓகே.. சித்தப்பா!" என்றவள் அவன் தாடியை அழுத்தி இழுத்து விட்டு ஓட..
“ஸ்.. ஆ..!" என்ற சத்தத்தோடு மெதுவாக தாடியை கோதிக் கொண்டு கைகளை அங்கும் இங்கும் அசைத்து வாம்-அப் பண்ணிக் கொண்டே வீட்டுக்குள் நுழைந்த சர்வேஷை அங்கிருந்தவர்கள் ஒரு நொடி ரசித்துப் பார்க்க மறக்கவில்லை.
அக்கண்யனுக்கு முன் வந்து அமர்ந்தவன் தாடியை அழுத்த வருடுவதும், யோசிப்பதும், தலையைக் கோதுவதுமாக இருக்க, மகனைப் பார்த்தும் பாராமல் அக்கண்யன் அவனை கவனித்துக் கொண்டிருந்தான்.
அதே நேரம் சர்வேஷை நெருங்கிய ஜனனி,
“கண்ணா காபி குடி"
“தாங்க்ஸ்" என்ற சொல்லோடு எடுத்துக் கொண்டவன் திடீரென,
“டாட்!" உரத்து அழைக்கவும், நியூஸ் பேப்பரை சற்றே கீழ் இறக்கியவன், என்ன என்பது போல் மகனைப் பார்க்கவே,
வாய் திறந்து கேட்டால் பதில் கூறுகிறேன் என்று இவனும் அழுத்தமாக இருக்கவுமே, சன்னமான சிரிப்போடு நியூஸ் பேப்பரை ஓரமாக வைத்தவன்,
“சொல்லு சர்வா! என்ன விஷயம்?"
மகனும் தந்தையை நோக்கி ஒரு நக்கல் சிரிப்போடு, “நான் இன்னைக்கு ஆஃபீஸ் வரலாம்னு இருக்கேன்."
அந்த நொடி அங்கிருந்தவர்களின் முகங்கள் வியப்பைக் காட்ட, அக்கண்யன் புருவம் ஒரு முறை ஏறி இறங்கியது.
“ஓ!" என்ற சொல்லோட மகனை ஆழ்ந்து பார்த்தவன்,
“உன்னோட கம்பெனிக்கு நீ வர, என்கிட்ட ஏன் அனுமதி கேட்கிற?"
இதழ் பிரியா புன்னகையோடு
“எஸ், நான் ஏன் அனுமதி கேட்கணும்? இன்னைக்கு வரப் போறேன் டாட். அதுவும் நம்ம எக்ஸ்போர்ட் கம்பெனிக்கு!"
என்ற சொல்லோடு மாடி ஏறவுமே,
“சர்வேஷ்!"
அக்கண்யனின் அழைப்பில் அவன் நடை நிதானித்து தந்தையை நோக்கி,
“ஆஃபிஸ் வரும் போது, ஃபார்மல்ல வா!"
“இஸ் இட்!" புருவத்தை ஏற்றி இறக்கியவன், தடதடவென படி ஏறிச் சென்றான்.
“என்னங்க அதிசயம் இது. நம்ம சர்வேஷா கம்பெனிக்கு வாரேங்கிறான்!"
“இதுக்கே இப்படி ஷாக் ஆனா எப்படி பேபி? சுனாமிய அமெரிக்கால இருந்து வாண்டட்டா கூட்டிட்டு வர வச்சவ நீதானே! பின்ன இங்க புயலடிக்குதுனா என்ன அர்த்தம்? இப்பதானே உன் மகன் ஆரம்பித்து இருக்கான், இனி தான் என்னன்னு பார்க்கணும்!"
“அவனைக் குறை சொல்லவில்லைனா உங்களுக்கு ஆகாது, அத்தான். குழந்தை எவ்வளவு பொறுப்பா இருக்கான்."
“ஹா.. ஹா.." உரக்கச் சிரித்தவன்,
“ஜானு பேபி என்ன வேணும்னாலும் சொல்லு! ஆனா.. உன் மகனை குழந்தைனு மட்டும் சொல்லாத. உன் மகன் குழந்தை இல்ல, ராட்சச ராவணன்!" என்றான் கிண்டல் சிரிப்போடு.
முகம் கொள்ளாப் புன்னகையோடு ஜனனியும்,
“சாத்வி குட்டி தைரியத்தைப் பாருங்களேன். சட்டுனு சொல்லையும், ஒரு கணம் தவிச்சாலும் சிரிப்பா இருந்துச்சு. என்ன அழகா இருக்கா. அவ கால் வைக்கிற தடம், கொடுத்து வைச்ச இடம்!"
அவளின் பெருமூச்சில், மனைவி செல்ல இருக்கும் தடமறிந்தவன்,
“போதும் ஜனனி! சர்வேஷ் ஆஃபீஸ் வரப் போறான். சோ.. அவனுக்காக ப்ரேக்பாஸ்ட் ரெடி பண்ணு."
இப்படியே நேரம் நகர, ஆத்விக்கும், அக்கண்யனும் எதிர்பார்ப்போடு தம்பிக்காக காத்திருக்கவும், அடிடாஸ் பாட்டம், வைட் கலர் அடிடாஸ் டீசர்ட், ஜெகட், அடிடாஸ் கேன்வஸ் சகிதம் முடியை வாரிய ஆஃப் போனிடல் போட்டு நக்கல் சிரிப்போடு சர்வேஷ் இறங்கி வரவே, வீம்புக்கெனவே இந்த உடையில் வந்திருக்கும் மகனின் தோற்றத்தில், அவனை முடிந்த மட்டும் முறைத்த அக்கண்யன்,
“இதை.. நான் உன்கிட்ட எதிர்பார்த்து இருக்கணும்"
“ஓ டேட்! எதையும் எதிர்பார்க்காத நேரம் செய்வது தானே இந்த சர்வேஷ் பழக்கம்!"
அவனைச் சீண்டி விட்டு வாகனத்தை நோக்கிச் செல்ல, அவர்களும் கம்பெனியை நோக்கிச் சென்றார்கள்.
ஏஜே கார்மன்ட்ஸ் காலை வேளை சுறுசுறுப்போடு இயங்கிக் கொண்டிருக்க,
“சாத்வி, மெட்டீரியல் குவாலிட்டி செக் பண்ணிக்க, லாஸ்ட் டைம் மெட்டீரியல்ஸ்ல பேச் விழுந்ததா, ரிட்டன் வந்திருக்கு. சோ.. பார்த்துக்கோடி!"
“ஓகே ரம்யா. இங்க கொஞ்சம் சூப்பர்வைசிங் பார்க்க இருக்கு. முடிச்சிட்டு ஆஃபீஸ் ரூமுக்கு போகணும்."
சிறிது நேரத்தில், அவளை நோக்கி வந்த ஆஃபீஸ் பாய்,
“சாத்விகா அக்கா" அழைக்கவும்.
“சொல்லுங்க ரவி, என்ன விஷயம்?"
“சார் உங்கள ரூமுக்கு வரச் சொல்றாரு."
“ஓ அப்படியா? இதோ வாரேன்."
கையில் இருந்த வேலையை அருகில் இருந்த பெண்ணிடம் ஒப்படைத்துவிட்டு, எம்டி அறைக் கதவை தட்டி விட்டு அறைக்குள் செல்லவும்,
ஜீன்ஸ், லாங் டாப் அணிந்திருந்த அவள் ஜீன்ஸ் பாக்கெட்டில் வைத்திருந்த சாத்விகாவின் செல்ஃபோன்...
“ராட்சச மாமனே
ராத்திரியின் சூரியனே!
கோவைப்பழம் போல
நீ கோபம் கொள்ளாதே!
உன் ஆறாம் புத்தி
சேர புத்திதான்!"
டிரென்டுக்காக வைத்திருந்த ரிங் டோனுடன் அவள் செல்ஃபோன் இசைக்கவே, எம்டி சீட்டில் அலட்சிய தோரணையோடு அமர்ந்திருந்த அவனைக் கண்டவள், ஒளிர்ந்த பாடலில் திகைத்தாள் எனில், அதுவரை நார்மல் மூடில் இருந்தவன் முகம், அப் நார்மல் மூடுக்கு மாற, பொங்கிய சினத்தை எதைக்கொண்டு அடித்து நொறுக்கி அடைப்பது எனும் நிலையில் அமர்ந்திருக்க,
பதட்டத்தில் பாக்கெட்டில் கைவிட்டு அலை பேசியை எடுத்தவள், தட்டுத்தடுமாறி சத்தத்தை அணைத்து சைலண்டில் போட்டாள்.
வரவழைத்த சிறு தைரியத்தோடு,
“சார் என்னை கூப்பிட்டீங்களா? நீங்க வர சொன்னிங்கன்னு சொன்னாங்க."
“வெல் மிஸ் சாத்விகா! முத, முதல்ல கம்பெனிக்கு வந்திருக்க எம்டிய இப்படித்தான் வெல்கம் பண்ணுவீங்களா? இதுதான் உங்க லோவர் கிளாஸோட நற்பண்புகளோ?"
அவள் போட்ட அம்பை அவளுக்கே திருப்பிச் செலுத்த, சுறுசுறுவென மூக்கின் நுனியை, தொடப் பார்த்த கோபத்தை இடம் பொருள் ஏவல் கருதி அடக்கிக் கொண்டவள், தன் பிழையும் உண்டெனக் கண்டு..
“சாரி சார்!" அமைதியாகச் சொல்லவும்,
வெகு அலட்சியமாக,
“ஓகே இதுவரைக்கும் நீங்க செஞ்ச வேர்க் எல்லாம் எக்ஸ்பிலைன் பண்ணுங்க. இனி என்ன செய்யணும்னு நான் சொல்றேன்."
என்றவன் தோரணையாக கால் மீது கால் போட்டு அமர, அவள் ஒவ்வொரு வேலையாக முன்னே அடுக்கி வைக்கப்பட்டிருந்த கோப்புகளை கொண்டு விளக்கவும்,
வெள்ளை நிற லாங் டேப், நீல நிற ஜீன்ஸ், இரு காதுகளிலும் அழகாக மலர்ந்திருந்த பிளாஸ்டிக் தோடுகள், சின்ன மூக்குத்தி, அவளது சற்றே பெருத்த கீழ் உதடு, பேசும் போது வெட்டி வைத்த ப்ளம்ஸ் பழத்தை போல் சிவந்து பிதுங்கி இருக்க, அசையும் அந்த உதட்டை இழுத்து வைத்து எச்சிலோடு உறிஞ்சி எடுத்தால் என்ன எனும் எண்ணம் அவனுக்குள் வெறியாகக் கிளம்பவே, தன் மனபோகும் போக்கில் அதிர்ந்தவன்,
மனம் வேண்டாத ஒரு முகத்தை நெஞ்சின் கசப்போடு நினைத்துக் கொள்ள, அந்த முகம் தந்த ஞாபகங்கள், ஸ்பரிசங்களின் நினைவில் தன் உடலை கூறாக அறுத்தெறிந்தால் என்ன எனும் அளவுக்கு, அவன் நெஞ்சம் நெருப்பாகத் தகித்தது.
நொடிப் பொழுதில் உடல் எல்லாம் அருவருக்க, இத்தனை நாள் தன் சிந்தையை கட்டுப்படுத்த கடைபிடித்த மருத்துவ ஆலோசனை கூட கை கொடுக்கவில்லை. அவன் கொண்ட அதே வருத்தம், அதே வடு, அதே ரணம், அவன் மனநிலையை மாற்றவே, அந்த ஏசி அறையில் முகமெல்லாம் வியர்த்து ஒரு மாதிரி உடல் எல்லாம் லேசாக நடுக்கம் காண, அவனை ஓரவிழியால் கவனித்துக் கொண்டிருந்தவள், அந்த ஆறடி ராட்சச உருவத்துக்குள், அடிபட்ட ஆறு வயதுக் குழந்தையின் தோற்றத்தை பெண்மையின் தாய்மை இனம் கண்டு கொள்ளவே,
மெதுவான குரலில், “சார், ஆர் யூ ஓகே?"
“ஹம்.. எ..ஸ் எஸ், ஓகே"
குரல் இறுக்கமாக வந்தாலும், அவன் முகம் மேலும் வியர்க்கவும்,
“சார்.. காபி கொண்டு வந்து தரட்டுமா?"
“நோ வேணா. உன் வேலைய பாரு"
மனம் கேட்காதவள், கண்ணாடி ஜாருக்குள் இருந்த நீரை எடுத்து,
“கொஞ்சம் குடிங்க, ஓகே ஆயிடும்."
கொடுக்கவும் மெதுவாக வாங்கியவன் தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டு நிமிரவே, பதட்டத்தோடும் பரிதவிப்போடும் தன்னையே பார்த்துக் கொண்டிருந்த சாத்வியின் சாந்தமான முகத்தில் அவனைத் தொலைத்தவன், கொதிக்கும் உணர்வுகளைக் கட்டுப்படுத்த முடியாது, தனக்கு என்னவோ எனும் எண்ணத்தில் மூழ்கி இருந்த பெண்ணை இழுத்து அணைத்துக் கொண்டான்.
அவளை இழுத்து அணைத்துக் கொண்டவனின் உடல் லேசாக நடுங்கவும்,
முதலில் திடீரென்ற அவன் அணைப்பு கோபத்தை கொடுக்க, பின்பு ஒரு வித கூச்சத்தையும், பயத்தையும் உண்டு பண்ண, இறுதியில் ஆறடி உருவத்துக்குள், லேசான ஒரு நடுக்கத்தைக் கண்டு கொண்டவள், தன்னை அறியாமல் அவன் முதுகை மெதுவாக தடவிக் கொடுத்து,
“ப்ளீஸ்.. டென்ஷன் ஆகாதீங்க. உங்களுக்கு என்னமோ பண்ணுது.. அது ஏன்னு எனக்கு புரியலைங்க. ஆனா.. எதுவா இருந்தாலும் சரியாப் போயிரும். கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக்கோங்க."
அவள் விரல்கள் அவன் முதுகை வருட, மேலும், மேலும் அவளை அழுத்தமாக அணைத்துக் கொண்டவன், சாத்விகா மேனியில் எழுந்த வாசத்தை ஆள உறிஞ்சி நுரையீரல் வரை நிரப்பி, அவனுக்குள் இருந்த வேண்டாத குப்பை எண்ணங்களை மெது மெதுவாக கலைக்கும் முயற்சியில் இறங்கச் தொடங்கினான்.
எத்தனை நேரம் அப்படியே இருந்தார்களோ தெரியவில்லை, அவன் அமர்ந்து இருந்த இருக்கையில் இருந்த படி, சாத்வியை அணைத்த வாறு அவன் மடிக்கு மாற்றி இருந்தான்.
முதலில் தன்னிலை கலைந்தவள் பதறி, துடித்து விலகவும், அவள் பதட்டத்தில் சர்வேஷ் அவளை நோக்கி வாய் திறந்து பேச நினைக்கவே, கலங்கிய விழிகளோடு..
“ப்ளீஸ்.. எதுவும் அசிங்கமா பேசிராதீங்க. நீ.ங்க.. நீங்க கொஞ்சம் நேவர்ஸ் ஆயிட்டீங்க.
எனக்கு ஒன்னும் புரியல. அது தான் என்னை அறியாமல் அப்படி செஞ்சிட்டேன். ப்ளீஸ்.. அன்னைக்கு மாதிரி எதுவும் உங்களை நான் மயக்க பார்க்கிற மீன்ல அசிங்கமா பேசுறாதிங்க!"
அவள் தேம்பிக் கொண்டே பேசவும்,
“யூ டேமிட்!" அமர்ந்திருந்த இருக்கையை பின் தள்ளி எழுந்தவன்.
“என்னைப் பார்த்தா உனக்கு எப்படி தெரியுது. அவ்வளவு அசிங்கமானவன்னா? சாக்கடைக்கும், சந்தனத்துக்கும் வித்தியாசம் தெரியாதவனில்ல. இவதான் பெரிய இவ மாதிரி, எக்ஸ்ப்ளைன் பண்ண வந்துட்டா!" என்றவன் உடல் கோபத்தில் மீண்டும் நடுங்க,
அவன் தோற்றத்தில் இதுவரை பயம் கொண்டவள், மீண்டும் அவன் உடல் நிலையில் ஏதேனும் தவறு நடந்து விடுமோ என்ற பதட்டத்தில் தைரியத்தை வரவழைத்து கொண்டு அவனை மெதுவாக நெருங்கி,
“இல்லங்க. நான் அப்படி சொல்லல. நீங்க கோவத்துல ஏதும் பேசிட்டீங்கன்னா, என்னால தாங்க முடியாது. அதான்..! ப்ளீஸ் டென்ஷன் ஆகாதீங்க. உங்களுக்கு உடம்பு முடியலன்னு நினைக்கிறேன்."
ஏனோ தனக்கான அவள் தவிப்பு இதயத்தில் சில்லென்ற உணர்வை ஏற்படுத்த, அவன் கட்டுப்பாட்டில் அடங்காத அவன் நாவோ,
“ஆயிரம் பெண்களைக் கடந்து இருந்தாலும் ராவணன் தேசத்துக்கு மண்டோதரி தான் மகாராணியாம். ராவணன் மண்டோதரிக்கு மட்டும் எப்பவுமே ராமன் தான். ராவணனுக்காக மண்டோதரி மட்டும் தான் உடன்கட்டை ஏறுவாளாம். ஏன்னா மரணத்தில் கூட ராவணன் அகம் பிடித்து முன்னேறும் உரிமை மண்டோதரிக்கு மட்டும் தான்!"
நிறுத்தி, நிதானமாக அவள் முகம் நோக்கி அழுத்தி ஆழமாக வேதாந்தம் கூறியவன், தலையை கோதிக் கொண்டு, அந்த இடம் விட்டு அகல, முதலில் அவன் கூறியதன் பொருள் விளங்காதவள், பொருள் விளங்கிய பின்...
‘என்ன இவரு இப்படி பேசிட்டு போறார்?'
சாத்விகா அதிர்ந்து போனாள். அதே நேரம் அவள் இன்னொரு மனமோ,
‘ரகுவரன் உன்கிட்ட உரிமை எடுத்துக்க நினைக்கும் போது, அவனை உன்னை விட்டு எட்ட நிறுத்தத் தெரிந்த உனக்கு, பல நாள் போஸ்டரில் பார்த்து, ஒரே ஒரு நாள் நேரில் பேசி அறிமுகமான இவருக்கு ஒன்னுனதும், எப்படி உன் தோளில் சாய்கிற உரிமையைக் கொடுத்த சாத்விகா? அந்த அளவுக்கு இந்த ஹல்க் மேல உன் மனம் சாய்ந்திருச்சா?
இல்ல இல்ல, அப்படி எல்லாம் இல்ல, அது ஏனோ என்னை அறியாமல் நடந்துச்சு'
உன் மனம் அப்படி சொல்லலையே சாத்விகா. அவர் சொன்ன மாதிரி அவரோட மண்டோதரியா, ராவணன் தேசத்து ராணியா மாறப் போறியா?'
அவள் இரு மனங்களும் அவளுடனே போராட, காலைப் பொழுதே இப்படி போராட்டமான நேரமாக மாறிவிட்டதில் நொந்து போனவள், அவன் அறையிலிருந்து வெளியேற,
அவள் வெளியேறவும் லாபியிலிருந்து அவளைப் பார்த்துக் கொண்டே இருந்தவன் மனமோ,
‘ஏய்! சர்வேஷ்! பொண்ணுங்கள எட்ட நிறுத்தினவன் நீ. பெண் மாயப் பேய்னு சொல்றவன் நீ. ஒரே நாள்ல ஒரு பெண் கிட்ட மனதை கொடுக்க முடியுமா? அவளை யாரு என்னன்னு ஒரு அறிக்கையில் அறிஞ்சவன், உன் காயங்கள் ரணங்களை மறந்து, மறுபடியும் காயப்படப் போறியா?’
‘நெவர்! ஒருமுறை பாசத்துல, புத்தியிருந்தும் இந்த சர்வேஷ் முட்டாளாப் போயிட்டான். இனியும் அப்படி நடக்க மாட்டேன்!'
‘அப்படியா அப்போ அவளை விட்டு விலகுறியா? முடியுமா?'
‘ஹம்.. தெரியலை சாத்விகாவோட நிமிர்வு பிடிச்சிருக்கு'