இதிலிருந்து சரியாக ஒரு வாரம் கழித்து இலங்கையில் பெட்ரோல் பதுக்கல், தட்டுப்பாடு என திடீரென நாடெங்கும் கலவரம் வெடிக்க, வீதியெல்லாம் அடைத்து வைத்து எங்கும் போராட்டங்கள் வலுக்கத் தொடங்கியது. பதவியில் இருப்பவர்கள் பொதுமக்களால் பந்தாடப்பட்டனர். வீதிகள் போர்க்களமானது. வாகனங்கள் எரிக்கப் பட்டன. நிறுவனங்கள் முடக்கப்பட்டன.
இங்கு திடீரென ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலையில் எதிர்பாராத விதமாக ஸ்டோரில் மாட்டிக்கொண்ட சாத்விகாவும், மன வலியை போக்க தனிமையில் தவித்த சர்வேஷும் மட்டுமே ஏஜே கார்மெண்டில் மிஞ்சி இருக்க,
உயிர்விடும் தருவாயில் சத்தமிட்ட அவள் தொலைபேசியைக் காதில் வைத்து செவிமடுத்தவள்,
“என்ன ரம்யா? எதுக்கு கால் பண்ற? வரும் போது ஏதாவது வாங்கிட்டு வரணுமா?"
“சாத்வி!" என்றவளின் பதட்டமான குரலில் புருவங்கள் இரண்டும் முடிச்சிட
“ஏன் என்ன ஆச்சு?"
“இப்ப நீ எங்க இருக்க?"
“நான் நம்ம ஸ்டோர்ல ஸ்டாக் கவுன்டிங் எடுத்துட்டு இருக்கேன்."
“பைத்தியம்!"
“என்னடி? சர்வேஷ் சார் கொஞ்சம் டீடைல் கேட்டாங்க. எடுத்துட்டு இருக்கேன்."
“லூசே! ஆபீஸ்குள்ள யார், யார் இருக்காங்க, போறாங்கனு எல்லாம் பார்க்க மாட்டியா? வேலைன்னு வந்துட்டா இவ பெரிய வெள்ளைக்காரினு நினைப்பு. நாடு இருக்க நிலைமையில, ஸ்டாக் கிளியர் பண்றது ரொம்ப முக்கியம்!"
“ஏன்? என்ன ஆச்சுனு இவ்வளவு சத்தமா பேசுற"
“என்ன ஆச்சா? பெட்ரோல் இல்லாம ரோடு எல்லாம் ஒரே கலவரமா இருக்கு. நிட்டம்புவ மந்திரிய வேற பொதுமக்கள் கொன்னுட்டாங்களாம். அதுவும் இல்லாம பெரிய, பெரிய தலைங்க வீட்டில எல்லாம் பெட்ரோல் பதுக்கி வைச்சிருக்கிறதா பொதுமக்கள் வீடு புகுந்து நெருப்பு வச்சுக்கிட்டு இருக்காங்களாம். இங்க ரோடு எல்லாம் ஒரே ப்ளோக்கா இருக்குடி. நான் எப்படியோ ஹாஸ்டல் வந்துட்டேன். நீ இந்த டைம்ல வெளிய வராத. அவ்வளவு சேஃப்டி இல்ல சாத்வி.
எப்படியும் நீ நம்ம ஆபீஸ்ல தானே இருக்கப் போற? வெளியே செக்யூரிட்டி இருப்பாரு. நீ அங்கேயே இரு. எக்காரணத்தைக் கொண்டும் லைட் எல்லாம் போட்டு, வெளிச்சமா காட்டிடாதீங்க. உள்ள ஆள் இருக்கிற மாதிரி தெரிஞ்சா, மே பி கலவரக்காரவங்க உள்ள புகுந்து வம்பு பண்ண வாய்ப்பு அதிகம்!"
பயத்தில் தொண்டையில் மீன் முள் சிக்கியதைப் போல் வார்த்தைகள் சிக்கிக் கொள்ளத் தடுமாறியவள்,
“என்ன சொல்ற? நான் எப்படி இங்க தனியா?"
“சொல்றதை கேளு சாத்வி. அங்கேயே இரு"
“ரம்யா, என் ஃபோன் பேட்ரி லோ, ஆஃப் ஆகப் போகுது."
என்றவள் குரல் அழுகைக்கு மாற,
“லூசு அவ்வளோ பெரிய ஆபீஸ்ல ஒரு லேண்ட்லைனுமா இல்லை. இந்த உலகத்தில தானேடி இருக்க?
போ! போய் ஆபீஸ் ரூம்ல இரு வேற யாராவது ஸ்டாப்ஸ் உள்ள இருக்காங்களா பாரு"
பயம், கலவரம், அதிர்ச்சி இதையெல்லாம் கடந்து தனிமையில் இருக்கும் தன்னை கலவரக்காரர்கள் அத்திமீது ஏதேனும் செய்து விட்டால், தன்னைக் காப்பது யார்? இல்லை தனக்கே ஏதேனும் நடந்து விட்டால், எனக்கென ஒரு துளி கண்ணீர் வடிக்கவும் உறவென்று சொல்லி அள்ளிப் புதைக்கவும் யார் இருக்கிறார்கள் என்ற எண்ணம் மட்டுமே நெஞ்சமெல்லாம் உறைந்து போய் வலித்துக் கொண்டிருந்தது.
வலித்த நெஞ்சை புடவையோடு இறுக்கிப் பிடித்தவள் தடதடவென படிகளில் ஏறி மெயின் ஸ்டாப் ரூமை அடைய எம்டியின் அறையில் மட்டும் லைட் எரிந்து கொண்டிருந்தது. அவளுக்கு யோசிக்க ஒன்றும் இருக்கவில்லை புயல் வேகத்தில் உள்ளே நுழைந்தவள், எம்டி சீட்டில் அமர்ந்திருந்த சர்வாவை பார்த்ததும், நெஞ்சாங்கூடு பதட்டத்தோடு பட பட என ஏறி இறங்கியது.
உடலெல்லாம் வலு இழந்தது போல், விழி நீர் ஒரு புறம் வடிய, அவனைப் பார்த்துக் கொண்டே இருக்க, அவனும் நிலைமையின் தீவிரம் கேள்விப்பட்டான் தான், ஆனால் இவள் ஒருத்தி ஆஃபீஸில் இருக்கிறாள் என்பதை மறந்து போனான்.
நீருக்கு தவித்த அன்னப்பறவையை போல் தவித்து, துடித்து, பரிதவித்து, அனாதரவான தோற்றத்தில் இருந்தவளைப் பார்த்தவன் பறவையின் சிறகுகளாக தன் கைகளை விரித்து பிடித்துக் கொள்ள, எதைப்பற்றியும் யோசிக்கவில்லை, ஓடிச் சென்று அவனைப் பாய்ந்து அணைத்துக் கொள்ள, அவள் ஐந்தடி உயரத்துக்குக் குனிந்தவன் கழுத்தை, அவள் இரு கரம் இறுக்கி வளைத்துக் கொள்ளவும், அவள் புட்டத்தில் இரு கைகளால் இறுக்கிப் பிடித்தவன், அப்படியே தூக்கி அணைத்துக் கொண்டான்.
“பயந்துட்டேன் தெரியுமா. நா.. நான்.. எனக்கு எதுனா யாரு.."
“மூச்!" சத்தம் வர கூடாது. ஜஸ்ட் ஃபீல் மீ அண்ட் மை ப்ரசன்ஸ்."
அவளை மேலும் தன்னோடு இறுக்கிக் கொள்ள, அவள் வியர்வையோடு பெண்மேனி தந்த வாசத்தில், பெண்ணை ஆதி முதல் அந்தம் வரை புணராமலேயே புத்துணர்ச்சி பெற்றான். கழுத்து வளைவில் மூக்கை நுழைத்து, ஆழ அவள் வாசத்தை சுவாசத்தில் நிரப்பத் தொடங்கினான். அன்று போல் இன்றும் தழும்பிய மன நிலைக்கு இடம் விட்டு நின்றவன்,
“ஏய் மண்டோதரி! போதும் அழாத. ம்ச்.. அழாதடி!"
“பயந்துட்டேன் தெரியுமா?"
“நீ இங்க இருக்கறது தெரியாதுடி, மண்டோதரி"
அவன் உணர்வுகள் தழும்பும் போது..
தானாக உச்சரித்த அந்தச் செல்ல அழைப்பை அவள் கவனிக்கவில்லை.
“தெரிஞ்சிருந்தா என்ன செஞ்சி இருப்பீங்க? உங்க நாக்கை வச்சு வார்த்தையால குத்தி இருப்பீங்க."
அதில் ஒரு கணம் அவள் இடையில் ஒரு கரத்தை கொண்டு வலிக்க பெண் இடையை கசக்கினான்.
“ஆஆஆ! ராட்சச ராவணா!"
அவள் வலியில் அலறவே.
“அது என்னடி? என்னை நல்லாவே நினைக்கத் தோனாதா?"
“நல்லா நினைக்கிற மாதிரி நீங்க எதுவும் செய்யலையே. உங்களுக்கு தான் என்னைப் பிடிக்காதே. என்னை திட்டிட்டே தான் இருப்பீங்க. நான் லோ கிளாஸ் தானே?"
“ஆமா, லோ கிளாஸ் தான். இப்ப அதுக்கு என்னவாம்?"
“எனக்கு ஒன்னும் இல்லையாம்."
“இல்லையே! உனக்கு தான் ஏதோ பிரச்சனையாம்."
இத்தனைக்கும் இருவரும் நின்ற நிலையை மாற்றிக் கொள்ளவில்லை. ஆண் ஸ்பரிசம் அவனைத் தவிர வேறு யாரிலும் உணர்ந்திடாதவளும், கூச்சத்தோடு அவனில் ஒன்ற, பல இரவுகளில் பெண்ணை புசித்தவனின் உணர்வுகள் காமத்தால் அன்றி, அவளிடம் சொல்லப் படாத, உணரப்படாத காதலால் ஒன்றியது.
நொடிக்குள் மாறும் காலநிலையைப் போல் திடீரென தழும்பிய சர்வாவின் உணர்வுகளில் அவன் பழைய ரணங்கள் மீண்டும் காந்தத் தொடங்கவும், பட்டென்று அவளை கீழே விட்டான்.
அதில் விழப்போனவள் மேசையை பிடித்துக் கொண்டு தன் கை முட்டியை தேய்த்துக் கொண்டே,
“வலிக்குதுங்க!" அவன் விழிகளை பார்க்கவும்,
தாய் பசுவாக தன்னை அணைத்துக் கொண்டவனின் விழிகளில் இருந்த அன்புக்கு பதில், அவளை தேள் கொடுக்காக மாறிக் கொட்டும் போது கண்களில் தோன்றும் வெறியைக் கண்டவள் உணர்வுகள்,
‘சர்வேஷ் வார்த்தைகளை வாங்கிக் கொள்ள தன்னை தயார்படுத்திக் கொள் என்று சொல்லும் போதே..'
“ஆம்பளய அணைச்சு பிடிச்சா ஒரேடியா ஒத்த அணைப்புல கவுத்துறலானு நினைக்கிறாயா? அந்த அளவுக்கு உன் உடம்பும், உணர்வும் அடங்க மாட்டேங்குதோ. ஏதோ பயந்துட்டன்னு ஆதரவா நினைச்சா, என் உணர்ச்சிகளை தூண்டலாம்னு நினைப்போ. பொம்பளைகளுக்கு ஆம்பளைய அடக்க ஈஸியான வழி இந்த உடம்பு தானே? அங்கங்க வளைவு, நெளிவும், கொஞ்சம் கலரும் இருந்தா போதும்னு நினைக்கிறீங்க இல்ல. அட்ஜஸ்ட்மெண்ட் இஸ் எ பேட் அப்ரிசியேஷன்!"
கொட்டிய வார்த்தைகளை அள்ள முடியாது என்பதை மறந்து போனான் போலும். அப்படி இல்லை, அதன் வினையை உடனே அடையலாம் என்பதைப் போல், அமைதியான சாத்வி ஆங்கார காளியாக மாறி, நொடியில் தன் நுனி காலால் எட்டி அவன் கன்னத்தில் தன் வேகத்தை, கோபத்தை, அவன் வார்த்தை கொடுத்த வலியை அத்தனையும் ஒன்று திரட்டி.. “பளார்!" என ஒரு அறை விட,
சிறு முள் குத்தி சிங்கம் நடுங்குமா? ஆனால் அந்த ஆறடி சிங்கம் சிறு முயலின் எதிர்பாராத தாக்குதலில் அதிர அந்த விழிகளில் ஆக்ரோஷத்துக்கு பதில் ஒரு விரிந்த புன்னகை. அவன் ஒரு விடையில்லா கேள்வி!
அடித்த பின் செய்த வினையின் வீரியமறிந்தவள், தன் சிவந்த கரத்தை முகத்துக்கு நேரே தூக்கிப் பார்த்தவள், தாடி அடர்ந்த அவன் கன்னத்தை திரும்பிப் பார்த்தாள். கை சிவந்த அளவு கன்னத்து முடிக்குள் இருந்த அவன் சதை சிவந்ததா என்று இனம் காண முடியவில்லை. அடிக்கும் வரை இருந்த ஆக்ரோஷம், அடித்த பின் அமைதியான மனநிலை, ஒரு வித பயத்தை கொடுக்க இரண்டடி பின்னே நடந்தவள்,
“இல்ல.. நீங்க, நீங்க அப்படி பேசவும் ஒரு கோபத்தில் அடிச்சிட்டேன். என்னை மன்னிச்சிடுங்க ப்ளீஸ். ஏதும் பண்ணிடாதீங்க."
அவள் பதறவே அடித்த போது கூட அவள் நிமிர்வும், தைரியமும் அவனுக்குள் களிப்பை கொடுத்தது. ஆனால் தன்னை ஒரு பொறுக்கி போல் அவள் பாவிப்பதில் ரௌத்திரம் பெருக,
“ஏய்! ஓவரா சீன் கிரியேட் பண்ணாத. உன்னோட லோ கிளாஸ் ட்ராமா எல்லாம் உன்னோட நிறுத்திக்க. உண்மைய சொன்னா கோபம் வருதா? என்னை அடிச்சதும் இல்லாம ஒரு ஸ்ரேஞ்சர பார்க்கிற மாதிரி ட்ரீட் பண்ணுற.
பொண்ணுங்க எல்லாம் நாலு சுவத்துக்குள்ள எப்படி இருப்பாங்க வெளியில எப்படி இருப்பாங்கன்னு எனக்குத் தெரியாதுனு நினைச்சியா?"
“ச்சீ! உங்க வார்த்தை ஒன்னுமே சரியில்ல. குணமும் சரியில்லை. உங்க பேச்சு சரியில்ல. ஒரு பொம்பள பொறுக்கிய மாதிரி தான் உங்க நடவடிக்கை இருக்கு."
“இவ்வளவு நேரமும் நான் பொறுக்கியா இல்லாததாலே தானே திமிராப் பேசுற. பொறுக்கி என்ன செய்வான் தெரியுமா?"
சர்வேஷ் தன் நிதானமிழந்து மூர்க்கத்தை கையில் எடுத்தவன், அவள் கையை பின்பறம் பிடித்து வலிக்க முறுக்கினான். இந்தக் கோபம் தான் சர்வேஷை வெகுவான சமயங்களில் தன்னிலை இழக்கச் செய்யும். கோபம் வந்தால் அவன் அச்சு அசல் ராட்சசனே. ஆண், பெண் பேதம் பார்ப்பதில்லை. சிறுதுளி கோபமும் அவன் மூர்க்கத்துக்கு பெரும் வித்தாகும்.
“ஆ...ஆவ்! வலிக்குது ராவணா!"
கோபத்தில் தன்னிலை இழந்தவன் அவள் முந்தானையில் கை வைத்து சடாரென இழுத்து விட்டான். பல முறை பாவிக்கப்பட்ட அந்த பழைய சேலை இடப்பக்க ஜாக்கெட்டில் பின் செய்யப்பட்ட பகுதியோடு கிழிந்து அவன் கையோடு வந்தது. சாத்விகாவோ தன் இதயம் கவர்ந்தவன் ஆயினும் அத்துமீறி அவன் செய்யும் செயலிருந்து தன் மானத்தை காக்க எண்ணியவளாக கண்ணிமைக்கும் நேரத்தில் மீண்டும் பளாரென அந்த ஆறடி உயர ஆண்மகனின் கன்னத்தில் கால்களால் எம்பி நின்று அறைந்தாள்.
“பொறுக்கினு நிரூபிச்சுட்டிங்கல்ல?"
அவள் கண்களில் தேங்கி நின்ற மரண வேதனை அவனுக்கே மரண அடியாக திரும்பி விழ தன் முரட்டுத்தனமும், மூர்க்கத்தனத்தால் எழும் முட்டாள்தனமும் தன் மனதுக்கு இனியவளை இத்தனை கலங்கப்படுத்தி விட்டதே என்று தன் மீதே கோபம் கொண்டவனுக்கு ஏனோ ‘பொறுக்கி' எனும் அழைப்பு அவன் கரும்பக்கத்தை மீட்டி காட்ட,
“இன்னும் உன் வாய் அடங்குவதா இல்ல தானே!"
அதற்கு பதில் பேச, அவள் இதழ்களுக்கு அவன் விடுதலை அளிக்கவில்லை.
இதழோடு இதழ் பொருத்தி முத்தத்தால் அவளை மூர்ச்சை ஆக்க நினைத்தானோ?
அல்லது அவள் இறுதி மூச்சி வரை தன் நினைவுகளை கலக்க நினைத்தானோ, வன்மையாக, ஆழமாக, அழுத்தமாக, வெறியோடு அவள் இதழை ஸ்பரிசித்தவன், அந்த இதழின் ரத்தத்தை சுவைத்த பின்னே அதற்கு விடுதலை அளித்தான்.
அவனுக்கு என்னவோ அத்தனை ஆக்ரோஷத்திலும் ராஜ போதையை உண்ட களிப்பு! உள்ளத்தின் ஓரத்தில் உண்டானது. ஆனால் சாத்வியோ தன் வாழ்வில் தீண்டத்தகாத துன்பத்தை உடலில் தீண்டியது போல் உடலெல்லாம் எரிய துடித்து நின்றாள்.
ஊன் உயிர் உறக்கம் மறந்து ஒருவரில் ஒருவர் நிலைத்திருக்க வேண்டிய இதழ் முத்தம் இருவருக்கும் கோபம், வெறி யார் யாரில் ஆதிக்கம், கர்வம் என அதன் சுவையை பாவற்காயின் கசப்பாக மாற்றிக் கொண்டிருந்தனர். அவனின் வேட்கையால் அவளின் வெட்கத்தால் உயிர் கரைய வேண்டிய இதழ் முத்தம், கோபத்தின் சாயலில் வேதனையின் வடுவாக மாறிக்கொண்டிருந்தது.
சில நொடிகள் அவளும் விழி மூடி அவன் கைகளுக்குள் தன்னையும், தன் உணர்வுகளையும் கரைத்து நொடியில் அதை மீட்டு, மீண்டும் அவனில் ஆத்திரம் கொண்டு தன்னிலிருந்து அவனை வெறி கொண்டு பிரித்தவள், எப்பொழுதும் சாந்த முகத்தோடு என்ன திட்டினாலும் சிரித்துக் கொண்டு கடந்த போகும் சாத்வி,
எல்லையை மீறிய அவன் செயலில் அசுரனை வதம் செய்த மகிஷாசுரமர்தினியாக அவதாரமெடுத்து அவன் முன் நின்றாள்.
“ஏழைகள்னா அவ்வளவு இளப்பமா? உங்க ஆம்பள திமிரக் காட்ட நான் தான் கிடைச்சேனா? என்ன முத்தம் கொடுத்து உணர்வுகளத் தூண்டுனா பொம்பள என்னை மடக்கி மடியில போடலாம்னு நினைப்பா?"
என்றவள் தளர்ந்து விழுந்த தன் முந்தானையை இழுத்து, அவள் பெண்மையை மறைத்தவளாக, ஆழ மூச்சடுத்து எச்சிலோடு தன் வேதனையையும் விழுங்கி..
“என் மீது அத்துமீறி உங்க அதிகாரத்தச் செலுத்த நினைச்சீங்கன்னா.." என்றவள் அவனை உறுத்து விழித்து ஒற்றை விரல் நீட்டி, “தொலைச்சி விடுவேன்"
அந்தப் பாவனையில், அவன் இதழ்கள் லேசாக விரிந்தது. இருந்தும் பிழை செய்த குறுகுறுப்பு அவனை அமைதி காக்க வைக்க,
சாத்விகாவோ, “ஒரு ஆம்பளைக்கு பொம்பளைய அடிக்கணும்னு நினைச்சா வார்த்தையை விட ஈசியா அவ ஒழுக்கத்துல கல் எரிஞ்சுருறீங்க தானே. உருவம் மட்டும் தான் அரக்கன மாதிரி இருக்கு. பேச்சும் அப்பப்ப கொட்டுமே ஒழிய, மத்தபடி உங்களை என்னமோ நினைச்சேன். நீங்களும் சராசரி ஆம்பளன்னு காட்டிட்டீங்கல்ல இப்பதான் ரொம்ப வலிக்குது."
அவள் கண்ணெல்லாம் சிவந்து வேதனையும், வன்மமாக ‘நீ தந்த வார்த்தையை திருப்பி தருகையில் அதன் வலியை பார்!' என்ற நினைப்போடு, அவள் வார்த்தையால் திருப்பி அடிக்கையில் சர்வேஷின் கசங்கும் முகம் திருப்தியை மட்டுமல்ல, தீரா துயரத்தையும் கொடுத்தது.
கொக்கென்று நினைத்து என்னை சாம்பலாக்க நினைத்தாயா? நான் தினமும் என் பதிக்கு தர்மத்தோடு கடமை செய்யும் பத்தினி தேவதை என நெஞ்சுரத்தோடு கற்பு நெறியை பறைசாற்றும் கற்புக்கரசிகள் இன்னும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள் என அவனுக்கு சொல்லால் சொல்லிவிட்டாள்.
சர்வேஷ் வலிக்க வாங்கிய வார்த்தையோடு, அவளை ஆழப் பார்த்தவன், அடுத்த நொடி அவள் அணைப்புக்குள் தன்னைக் குழந்தையாக்கி அதில் சுகமாக குளிர் காயத் தொடங்க, முள்ளாக, மலராக, நெருப்பாக, மழையாக சுழன்றடிக்கும், இவன் மனநிலையில் துவண்டது என்னமோ சாத்விகா தான். இத்தனை நின்று துவைத்து எடுத்தவன்,
“அடிச்ச இல்ல, அடிச்சது வலிக்குது, நீயே ஆறுதல் சொல்லு!"
என்ற சொல்லோடு அவளில் புதைந்து கொண்டான். அவள் வேதமாகினால் அவன் விந்தையாகிறான்.