எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

அத்தியாயம் 08

அத்தியாயம் 08

“இந்த செயின் நல்லா இருக்கு. இன்னும் கொஞ்சம் டிசைன் காட்டுறீங்களா?” என்று நகை கடை ஊழியரிடம் கேட்டாள் ப்ரியா.

“கொஞ்சம் வெயிட் பண்ணுங்க மேம்” என்று கூறிவிட்டு உள்ளே சென்றான் நகைக்கடை ஊழியன்.

“இது நல்லா தான் இருக்கு ஆனாலும் இன்னும் ரெண்டு மூனு ஆப்ஷன்ஸ் பாத்துக்கலாம்” என்று பக்கத்தில் அமர்ந்து இருந்த கௌதமிடம் கூறிவிட்டு நகைகளை பார்வையிட்டாள்.

அவள் கையில் இருந்த செயினை பார்த்த வண்ணம் கௌதம், “உனக்கு இந்த செய்கூலி சேதாரம் எல்லாம் பார்த்து நகை வாங்க தெரியுமா?” என்று கேட்டான்.

உதட்டைப் பிதுக்கி, “தெரியாதே. உங்களுக்கு தெரியுமா?” எனக் கேட்டாள்.

“எனக்கும் தெரியாது” என்றான் நகைத்துக் கொண்டு.

“சரியான ரெண்டு பேர் தான் நகை வாங்க வந்திருக்கோம்” என்று அவள் கூறிக் கொண்டிருக்க, கையில் நகை ட்ரேயோடு வந்து நின்றான் கடை ஊழியன்.

எல்லா நகைகளையும் ஒப்பிட்டு பார்த்து பின் முதல் தேர்வு செய்து வைத்த நகையையே வாங்க திட்டமிட்டனர் இருவரும்.

“மேடம் வேற ஏதாவது நகை பாக்கறீங்களா?லேடீஸ் டைமண்ட் ரிங்க்ஸ் வந்திருக்கு நான் அது காட்டட்டுமா?” என்று தன் விற்பனையை கூட்ட பேசிக் கொண்டிருந்தான் கடை ஊழியன்.

“அதெல்லாம் வேண்டாம்” என்று அவள் மறுக்க,

கௌதமோ, “எடுத்துட்டு வாங்க” என்று கூறினான்.

“இப்போ எதுக்கு டைமண்ட் ரிங் எனக்கு. அதுதான் நிச்சயத்துக்கு ரிங் வாங்க போறோம்ல” என்றாள் ப்ரியா.

“சும்மா தான்” என்று கண்களை சிமிட்டி கூறியவன் அவள் கைகளை பற்றி கொண்டான்.

சுற்றி ஆள் நடமாட்டம் இருப்பதால் அவள் வெட்கத்தோடு கையை அவன் பிடியிலிருந்து எடுக்க முயற்சி செய்ய கையை இறுக்கி பிடித்துக்கொண்டான்.

நெளிந்து கொண்டே, “சும்மா யாராவது நகை வாங்குவாங்களா?” என்று அவள் கேட்டதும், “நான் வாங்குவேன்” என்று கூறியவன் கடையின் விற்பனையாளர் வரவும் பாவம் பார்த்து ப்ரியாவின் கையை விடுவித்தான்.

அவன் சில்மிஷங்களை ரசித்தாலும் போலியாக அவனை முறைத்து விட்டு. நகை ட்ரேயில் இருக்கும் மோதிரங்களை எடுத்து பார்க்க தொடங்கினாள்.

அவளை வற்புறுத்தி இருவருக்கும் பிடித்த மோதிரத்தை தேர்ந்தெடுத்ததும் கடை ஊழியன் “உங்க மோதிரத்தில் சார் பெயரை பிரிண்ட் பண்ணிடலாமா மேடம்” என்றான்.

ப்ரியா சம்மதமாக தலையசைக்க, அவளுக்கு மட்டும் கேட்கும் குரலில் கௌதம், “இவன் கண்ணுக்கு நான் தெரியவே மாட்டேங்குறேன் போல. எப்ப பாத்தாலும் மேடம், மேடமுன்னு உன்னையே கூப்பிட்டு இருக்கான்” என்று கூற சிரிப்போடு அவன் புஜத்தில் தட்டியவள், “ஜென்ட்ஸ்க்கு போடுற மாதிரி பிரேஸ்லெட் எடுத்துட்டு வரீங்களா” என்று விற்பனையாளரிடம் கேட்டாள்.

“ஏய் இப்ப யாருக்கு பிரேஸ்லெட்?” என்று குழப்பமாக கேட்டான் கெளதம்.

“உங்களுக்கு தான். எனக்கு மட்டும் வாங்கி கொடுக்குறீங்க. நான் உங்களுக்கு வாங்கி கொடுக்க கூடாதா” என்றாள்.

“அப்படி இல்ல. ஏன் சும்மா பணத்த வேஸ்ட் பண்ணிக்கிட்டு” என்று அவன் கூறிட,

“அப்போ எனக்கு வாங்கி கொடுத்தது மட்டும் என்னவாம். அண்ட் நாங்களும் வேலைக்கு போறோம். எங்களுக்கும் பணத்தோட அருமை தெரியும்” என்று கூறிவிட்டு பிரேஸ்லெட்டுகளை பார்க்க தொடங்கினாள்.

கௌதமுக்கு பிரேஸ்லெட்டை தானே தேர்ந்தெடுத்தவள் அதை தனியாக பில் போடும்படி கேட்டுக்கொண்டாள்.

பிரேஸ்லெட்டுக்கும் பணத்தை அவளே கொடுத்துவிட கௌதமோ மோதிரம் மற்றும் செயினுக்கு பணத்தை செலுத்தினான்.

நகைகள் அனைத்தும் வழமையாக நகைக் கடையில் தரும் பெட்டிகளில் வர, இருவரும் மற்றவருக்கு தாம் வாங்கிய நகையை பெட்டியில் இருந்து எடுத்து மற்றவருக்கு போட்டு ரசித்தனர்.

பேபி செயினையும் பிரியா நகை பெட்டியில் இருந்து எடுக்க, “ஏய் அதை ஏன் எடுக்கிற அப்படியே கொண்டு போயிடலாம்” என்றான் கௌதம்.

“உங்களுக்கு விவரமே பத்தல. இப்போலாம் அடிக்கடி நகைக்கடை வெளியில திருட்டு நடக்குது தெரியுமா? இப்படி பேகோட கொண்டு போனா அப்படியே நம்ம கையில் இருந்து புடுங்கி எடுத்துட்டு ஓடிருவாங்க” என்றாள் கண்களை அகல விரித்துக்கொண்டு.

அவளது முக பாவனையை ரசித்துக்கொண்டே, “சரி அதுக்கு என்ன பண்ணலாமுன்னு சொல்ற” என்று அவன் கேட்டதும், “நம்ம ஹேண்ட் பேக்லையோ இல்ல வோலட்லையோ பத்திரமா வச்சுக்கணும்” என்றாள் முகத்தை தீவிரமாக வைத்துக் கொண்டு.

“அப்போ திருடன் ஹேண்ட் பேக் வாலட் எல்லாம் திருட மாட்டான்ற” நக்கலாக கூறியவன், “இவ்ளோ ஒரு அறிவாளியான ஐடியா உனக்கு யார் கொடுத்தா?” என்று கேட்டான்.

அவன் தன்னை கிண்டல் அடிக்கிறான் என்று தெரிந்ததும் முகத்தை தூக்கி வைத்துக் கொண்டு, “என்னோட அம்மா” என்றாள்.

“சரி மூஞ்சிய தூக்கி வைக்காதே. உங்க அம்மா சொன்ன மாதிரி பத்திரமா ஹேண்ட் பேக்லயே வை. பெயர் வைக்குற பங்ஷன்ல ரெண்டு பேரும் சேர்ந்து ஒன்னா போடுவோம்” என்று கூறிவிட்டு எழுந்துக் கொண்டான்.

காலியான நகை பெட்டிகளை நகைக்கடை பையில் போட்டு விட்டு கௌதம் அதை எடுத்துக்கொண்டு செல்ல அவளும் அவனோடு சேர்ந்து கடையை விட்டு வெளியேறினாள்.

ப்ரியாவை கடையின் வாசலில் நிற்க சொன்னவன் பார்க்கிங்கில் இருந்து காரை எடுத்து வர செல்லும் வேளையில் அவன் கையில் இருந்த பையை பறித்துக்கொண்டு ஒருவன் ஓட முதலில் திகைத்தாலும் பிறகு ப்ரியாவைப் பார்த்து சூப்பர் என்று காட்டி சிரிக்க அவளும் அடக்க முடியாமல் சிரித்து விட்டாள்.

நகை கடை வாசலில் இருந்து செக்யூரிட்டி இவர்களை விசித்திரமாக பார்த்து, சார் பைய எடுத்துட்டு ஓடுறான் நீங்க என்ன சிரிக்கிறீங்க” என்றார்.

“அந்தப் பையில ஒன்னும் இல்ல. வெறும் பாக்ஸ் தான்” என்று அவரிடம் கூறிவிட்டு இருவரும் காரில் ஏறிக்கொண்டனர்.

“ப்ரியா உனக்கு தீர்க்கதரிசி என்று பெயர் வைக்கலாம்னு இருக்கேன். நீ என்ன நினைக்கிற?” என்று கூறி அவளை அவன் வம்பு செய்ய,

“ஹலோ என்னால தான் நகை இன்னைக்கு பத்திரமா இருக்கு” என்று கூறி இல்லாத காலரை தூக்கிவிட்டாள்.

அவளை மெச்சும் ஒரு பார்வை பார்த்துவிட்டு, “சரி இப்ப எங்க சாப்பிட போகலாம்?” எனக் கேட்டவன் காரை செலுத்துவதில் கவனமாக இருந்தான்.

“அதெல்லாம் எங்கேயும் போக வேணாம். நான் டயட்ல இருக்கேன். கல்யாணத்துக்கு இன்னும் முழுசா டூ மன்த்ஸ் கூட இல்லை” என்றாள் வருத்தமாக,

“டயட் என்ற பெயரில் பட்டினியா இருக்காத. நியூட்ரிஷயன் ஆன ஃபுட் சாப்பிடு ஒர்க் அவுட் பண்ணு. அத விட்டுட்டு. கண்ட கண்ட வீடியோ பார்த்து டயட் இருக்காத” என்றான் கண்டிப்பாக.

“நானும் வொர்க் அவுட் பண்றதுக்கு நல்ல ஒரு ஜிம் தேடிக்கிட்டு இருக்கேன் ஆனா எதுவுமே செட் ஆகல”

“நான் போய்கிட்டு இருக்க ஜிம்முக்கு வரியா. அங்க லேடீஸ் இருப்பாங்க. நல்ல ஜிம் தான்” என்ன சொல்ற என்று புருவத்தை தூக்கி வினவினான்.

“என்ன சார் டெய்லி பாக்குறதுக்கு சாக்கு வேணுமேனு சொல்லிட்டு உங்க ஜிம்மிலேயே என்ன சேர்த்து விட பார்க்கிறீர்களா”

“அதுவும் ஒரு காரணம் தான். பட் கல்யாணத்துக்கு அப்புறமும் நீ கண்டினியூ பண்ணலாம் உனக்கு ஈஸியா இருக்குமேன்னு சொன்னேன். இட்ஸ் யூர் விஷ்” என்று கூறியவன் அவள் ஸ்கூட்டி நிறுத்தி வைத்திருந்த இடத்தின் அருகில் காரை நிறுத்தினான்.

கடிகாரத்தில் நேரத்தை பார்த்தவள், “எனக்கு இன்னும் டூ ஹவர்ஸ் டைம் இருக்கு. அந்த ஜிம் ல போய் பேசிட்டு வரலாமா?” என்று அவள் கேட்டதும் காரை ஜிம்மை நோக்கி செலுத்தினான்.

ஜிம்மின் உள்ளே நுழைந்ததுமே கௌதமின் கோச் ஸ்ரீனி இருவரையும் கண்டு அவர்களின் அருகே வந்தார்.

“என்ன கௌதம் இன்னிக்கு ஜிம் வருவீங்கன்னு சொல்லவே இல்ல. நான் வேற வீட்டுக்கு கிளம்பிட்டு இருக்கேன்” என்று கூறினார்.

சில நேரங்களில் கௌதம் ஹாஸ்பிடலில் இருந்து நேராக ஜிம்முக்கு வந்துவிடுவான். அப்படியான தருணங்களில் ஒன்று மருத்துவமனையில் குளித்து சாதாரண உடையை மாற்றி விட்டு ஜிம்முக்கு வந்த பிறகு ஜிம்முக்கு ஏற்ற உடைகளை மாற்றிக் கொள்வான். அல்லது ஜிம்மில் இருக்கும் குளியலறையை பயன்படுத்திக் கொள்வான்.

மேல் தட்டு வகுப்பினர் அதிகமாக வரும் ஜிம் என்பதால் விசாலமாகவே இருந்தது. ஒவ்வொருவருக்கும் தனித்தனி லாக்கர் மற்றும் குளியலறைகள். அனைத்தையும் தவறாமல் அரை மணி நேரத்துக்கு ஒருமுறை சுத்தம் செய்வதனால் பெரும்பாலானோர் அங்கேயே குளிப்பது வழக்கம்.

நகை கடைக்கு செல்வதால் சாதாரண ஜீன்ஸ் டி ஷர்ட் அணிந்திருந்த கௌதமை கண்டதும் ஸ்ரீனி அவ்வாறு கேட்டார்.

“இல்ல ஸ்ரீனி. இன்னைக்கு நான் ட்ரைனிங்க்கு வரல” என்றவன் அருகில் நின்று கொண்டிருக்கும் ப்ரியாவை காட்டி, “திஸ் ஐஸ் மை பியான்சே ப்ரியா. இவங்களும் இந்த ஜிம்ல ஜாயின் பண்ணனும்” என்று கூறினான்.

“அதுக்கென்ன தாராளமா ஜாயின் பண்ணட்டும். நானே அவங்களுக்கும் சேர்த்து கோச்சா இருக்கேன்” என்று கூறி ஜிம்மில் சேர்வதற்கான ஃபோர்ம் கொடுத்தவர் கட்டணம் சார்ந்த விபரங்களையும் கூறினார்.

கட்டண தொகையை கேட்டதும் ப்ரியாவுக்கு மயக்கம் வராத குறை, “ஒரு மாசத்துக்கு இருபதாயிரமா?” என்று ஆச்சரியமாக வாயில் கையை வைத்துக் கொண்டாள்.

“நான் இங்க ரொம்ப வருஷமா ப்ரீமியம் மெம்பர். என் வீட்டிலிருந்து யாரு ஜாயின் பண்ணாலும் பிஃப்டி பெர்ஸன்ட் ஆஃப் இருக்கு. அண்ட் இதுக்கு நான் தான் பே பண்ண போறேன். சோ சைலன்டா இரு” என்று கூறி அவளின் வாயை அடைத்தவன் தானே ஃபோர்மையும் நிரப்பினான்.

கட்டணத்தை செலுத்தியதும் ஸ்ரீனி இருவரையும் அழைத்து சென்று ஜிம்மை சுற்றி காட்ட அதன் வசதிகளை பார்த்து மலைத்து போனாள் பெண்.

அனைத்தும் திருப்தியாக இருக்கிறதா என்று அவளிடம் கேட்டு உறுதி செய்த பின்னரே கௌதம் அவளை அழைத்துக்கொண்டு வெளியேறினான்.

இருவரும் ஜிம் சுற்றி பார்த்துக் கொண்டிருக்கும் போதே ஒருவனின் விழிகள் இவர்களையே வட்டமிட்டு கொண்டிருந்தன.

அவனின் கையில் பெரிய டம்பள்ஸ் வைத்து மேலும் கீழும் மெதுவாய் ஏற்றி இறக்கியவனின் புஜங்கள் இரண்டிலும் நரம்பு வெளியே தெரிந்தது.

முகத்தில் தாடி புதர் போல் இருந்தது. கௌதமை யார் என்று அவனுக்கு தெரியாவிடினும் ப்ரியாவை அவனுக்கு நன்கு தெரிந்திருந்தது. ஜிம்மை விட்டு அவர்கள் வெளியே செல்லும் வரை பார்வையை அகற்றாமல் அவளேயே இமைக்க மறந்து பார்த்தவனின் கண்களில் ரசனை நிரம்பி வழிந்தது.

அருகில் இருந்த குட்டி துவாலை ஒன்றை எடுத்து முகத்தை துடைத்தவன், இதழில் சிரிப்போடு, “ கிலட் டுமீட் யூ அகைன் ப்ரியா” என்று மனதுக்குள் கூறிக்கொண்டான்.

ரசனையானா பார்வையின் சொந்தக்காரன் யார்?

காமுகனா அல்லது காதலனா?

தொடரும்...
 
Top