எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

அத்தியாயம் 23

அத்தியாயம் 23

“ப்ரியா சத்தியமா நான் உங்க அப்பா போட்டோவ மார்ஃபிங் பண்ணல” என்று அழுத்தம் திருத்தமாக கூறினான் அருண்.

“நீ சொல்றத நான் எப்படி நம்புறது?” என்றாள் கண்களில் கனலோடு.

“ப்ரியா அவன் தப்பு பண்ணி இருந்தா கான்ஸ்டபிள் கூப்பிடும்போது அவரோட வந்திருப்பானா. உன் வாழ்க்கையை கெடுக்கிற மாதிரி ஒரு விஷயத்தை பண்ணிட்டு அதுக்கப்புறம் உன் மூஞ்ச அவனால எப்படி பார்க்க முடிஞ்சிருக்கும்?” என்றான் கௌதம் அருணுக்கு ஆதரவாக.

“உங்களுக்கு அவனை பத்தி தெரியல. அவனுக்கு நல்லா நடிக்க வரும். என்கிட்ட வேற பொண்ண லவ் பண்றேன்னு சொல்லிட்டு இப்போ என்ன லவ் பண்றேன்னு அவங்க சித்தப்பா கிட்ட சொல்லி இருக்கான்” கௌதமின் முகத்தைப் பார்த்து கூறியவள் திரும்பி அருணை பார்த்து, “இல்லைன்னு சொல்ல சொல்லுங்க” என்று கூறினாள்.

அருண் தலையை கீழே குனிந்து கொண்டு நிற்பதை கண்ட கௌதம், “சரி அதுக்காக மார்ஃபிங் பண்ற அளவுக்கு அவன் கேவலமா நடந்து இருக்க மாட்டான்” என்றவன், “நீ வீட்டுக்கு போ. ஆர்த்தி இவள வீட்டுக்கு கூட்டிட்டு போங்க” என்று கார் சாவியை ஆர்த்தியிடம் கொடுத்தான்.

“நான் வீட்டுக்கு போக மாட்டேன். எனக்கு என்ன நடந்துச்சுன்னு தெரிஞ்சாகணும்” என்றாள் வீம்பாக.

“நாங்க அருணை பிராப்பரா விசாரிச்சுட்டுஉங்களுக்கு என்ன நடந்துச்சுன்னு சொல்றோம் ப்ரியா. இப்ப ரொம்ப எமோஷனலா இருக்கீங்க. இந்த நேரத்துல நீங்க இங்க இருக்க வேணாம்” என்று ஆதித்யனும் கூற

அருணை முறைத்து பார்த்தவள் கௌதமிடம் திரும்பி, “உங்களை நம்பி தான் போறேன். விசாரணை முடிஞ்சதும் எனக்கு கால் பண்ணுங்க” என்று கூறினாள்.

அருணை கதிரையில் அமர சொல்லிவிட்டு அவன் எதிரில் இருக்கும் கதிரையில் அமர்ந்தான் ஆதித்யன்.

“போன சண்டே நைட் எட்டரைக்கு நீங்க எங்க இருந்தீங்க அருண்” என்று கேட்டு விசாரணையை ஆரம்பித்தான் ஆதித்யன்.

“இங்கதான் இருந்தேன்”

“அன்னைக்கு சூப்பர் மார்க்கெட் எத்தனை மணிக்கு மூடினீங்க?”

“சித்தி ஹாஸ்பிடல்ல இருந்தனால அன்னை ஒன்பது மணிக்கு எல்லாம் க்ளோஸ் பண்ணிட்டேன்”

“அதுக்கு ப்ரூப் இருக்கா. அதாவது நீங்க இங்கதான் இருந்தீங்கன்றதுக்கான ஏதாவது ப்ரூப் இருக்கா”


“சிசிடிவி இருக்கு சார்”

“அப்போ அந்த ஃபுட்டேஜ் கொஞ்சம் ப்ளே பண்றீங்களா 8 லிருந்து 9 வரைக்கும்”

“ஓகே சார்” என்றவன் தன் அலைபேசியில் இருந்த சிசிடிவி வீடியோவை எடுத்து காட்டினான்.

அதில் எட்டரை மணி ஆகும் போது அருண் கிருஷ்ணாவிடம் ஏதோ வேலை சொல்லி கொண்டிருந்தவன் பின் அவனும் கிருஷ்ணாவும் சேர்ந்து ஒன்றாக பில் போடும் இடத்துக்கு வந்தவர்கள் வாடிக்கையாளர்களுக்கு பில் போட தொடங்கினர்.

இதில் எந்த இடத்திலும் அருண் கையில் கைபேசி தென்படவில்லை.

மறுபடியும் வேறொரு சிசிடிவி வீடியோவை அதே நேரத்துக்கு ஓட விட அது வேறொரு இடத்தில் பொருத்தப்பட்டு இருந்ததால் காட்சிகள் மாறி இருந்தன.

வாடிக்கையாளர்கள் பொருள் எடுப்பதும் வைப்பதும் வருவதும் போவதுமாக இருந்தது.

அதில் ஒருவன் மட்டும் வித்தியாசமாக தொப்பி அணிந்து கொண்டு கையில் அலைபேசி வைத்து குறுஞ்செய்தி அனுப்புவது போல் இருக்க அவன் முகத்தை ஜூம் செய்ய தொப்பி போட்டு இருந்ததால் அவனின் முகம் தெளிவாக பதியவில்லை.

தொப்பி போட்டு இருந்த நபரை சுட்டிக்காட்டி “இவர் யாருன்னு தெரியுதா?” என்று அருண்னிடம் கேட்க, “அன்னைக்கு நான் கொஞ்சம் மூட் ஆஃ அதனால எனக்கு சரியா ஞாபகம் இல்ல” என்றான்.

அவன் அருகில் நின்ற கௌதமோ “கொஞ்சம் யோசிச்சு பாரு” என்று கூறினான்.

எவ்வளவு யோசித்தும் அருணுக்கு அது யார் என்று பிடிபடவில்லை, “தெரியல” என்றான்.

அப்போது அறைக்குள் நுழைந்த கிருஷ்ணா, “சார் எங்க போய்ட்டீங்க. உங்கள எவ்வளவு நேரமா தேடிட்டு இருக்கேன். வாங்க நிறைய வேலை இருக்கு” என்றான்.

அவனை கௌதம், ஆதித்யன், அருண், ஏன் கான்ஸ்டபிள் கூட முறைத்து பார்த்தனர்.

‘இப்ப நாம என்ன சொல்லிட்டோம்னு இவங்க எல்லாம் முறைச்சு பார்க்கிறாங்க’ என்று மனதுக்குள் கூறிக் கொண்டவன் வெளியே சிரித்துக் கொண்டு, “நீங்க வர லேட் ஆகும்னு புரியுது சார் நானே பாத்துக்கிறேன்” என்று அறையில் இருந்து வெளியேற முற்பட,

“ஹே ஹே நில்லு” என்று அவனை தடுத்து நிறுத்திய கௌதம், “இங்க வா” என்று அழைத்து அவனுக்கு அந்த சிசிடிவி காட்சியை போட்டு காட்டியவன், “அந்தத் தொப்பி போட்டு இருக்குறவன் யார் என்று உனக்கு தெரியுதா?” என்று கேட்டான்.

“இந்த தொப்பியை எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கே” என்று நாடியில் கைவைத்து யோசித்தவன், “இது நம்ம கஞ்ச கோபாலு சார்”என்று கூறினான்.

“அது என்னடா கஞ்ச கோபாலு” என்று அருண் கேட்க.

“அதுதான் சார். அந்த பாக்கெட் ஷாம்பு கேட்டு ஒவ்வொரு வாட்டி நம்மல டார்ச்சர் பண்ணுவானே” என்றான்.

“ஏய் உனக்கு சரியா தெரியுமா. அவன் தானா?”உற்சாகமாய் கௌதம் கேட்க,

“சார் இவ்வளவு கேவலமான தொப்பிய அவனைத் தவிர எவனும் போடவே மாட்டான் சார். நானே அவனை கலாய்ச்சி இருக்கேன்னா யோசிச்சு பாருங்க” என்று கூறினான்.

“இவன் அட்ரஸ் எங்க இருக்குனு உனக்கு தெரியுமா?” ஆதித்யன் கேட்க விளையாட்டுத்தனமாக பேசுவதை நிறுத்திவிட்டு, “தெரியும் சார். ஹோம் டெலிவரிக்கு எல்லாம் போயிருக்கேன். இங்க பக்கத்துல தான் இருக்கான்” என்று அவனின் அட்ரஸை கொடுத்தான்.

அந்த வேலை முடிந்தவுடன் கிளம்ப தயாரானவர்கள் அருண் மற்றும் கிருஷ்ணாவையும் சேர்த்து அழைத்து செல்ல முடிவெடுத்தனர்.

அதே நேரம் கௌதமுக்கு ப்ரியாவிடமிருந்து கைபேசியில் அழைப்பு வரவும், “ஹலோ, ப்ரியா...”என்று பேச தொடங்கியவன் அவளின் அழுகை சத்தம் கேட்கவும், “ஏய் என்ன ஆச்சு?”என்று கேட்டான்.

“கௌதம்….கௌதம்…” என்றாளே தவிர வேறு எதுவும் பேச முடியாமல் அழுது கொண்டே இருந்தாள்.

“ப்ரியா மா. நீ அழுறத நிப்பாட்டினா தான் எனக்கு என்ன நடந்துச்சுன்னு உன்னால சொல்ல முடியும்” என்று பொறுமையாக எடுத்துக் கூறினான்.

“கௌதம்… அது… அப்பா… அப்பாக்கு ஹார்ட் அட்டாக்னு சொல்லுறாங்க. எனக்கு ஒண்ணுமே புரியல. ப்ளீஸ் சீக்கிரம் வாங்க” என்று அழுகையோடு கூறினாள்.

“மாமாக்கு ஹார்ட் அட்டாக்கா எப்போ? சரி எந்த ஹாஸ்பிடல்ல இருக்க சொல்லு?” என்று பதட்டத்தோடு கேட்டான்.

“நீங்க வொர்க் பண்ற ஹாஸ்பிடல் தான். சீக்கிரம் வந்துருங்க. எனக்கு ரொம்ப பயமா இருக்கு”என்றாள்.

“ஆர்த்தி பக்கத்துல இருந்தா அவ கிட்ட போன் குடு” என்று கூறினான்.

“சரி” என்று அலைபேசியை ஆர்த்தியிடம் கொடுக்க, “ஆர்த்தி அங்க இருக்க நர்ஸ் கிட்ட டாக்டர் கௌதம் நம்பருக்கு ரிப்போர்ட் அனுப்ப சொல்லுங்க. அவங்க எனக்கு அனுப்பிடுவாங்க. அண்ட் ப்ரியாவை கொஞ்சம் அழாமல் பாத்துக்கோங்க நான் சீக்கிரம் வந்துடுறேன்”என்று கூறி அழைப்பை துண்டித்தான்.

அவன் பதட்டமாக பேசுவதை அவதானித்த ஆதித்யனும் அருணும் ஏதோ பிரச்சனை என்று புரிய, “நாங்க பாத்துக்கிறோம் நீ கிளம்பு” என்று கூறினர்.

எவ்வளவு வேகமாக வர முடியுமோ அவ்வளவு வேகமாக மருத்துவமனை வந்தடைந்த கௌதம் ரிப்போர்ட்டையும் அலைபேசியில் பார்த்துக்கொண்டே மருத்துவமனைக்குள் நுழைந்தான்.

தூரத்தில் கௌதம் வருவதை கண்டதும் வில்லிலிருந்து புறப்பட்ட அம்பு போல ஓடி சென்று அவனை அணைத்துக் கொண்டாள்.

கௌதமை அணைத்துக் கொண்டு குலுங்கி குலுங்கி அழுதவள் வாய் திறந்து ஒன்றும் பேசவில்லை.

அவளின் நிலைமையை நன்றாக புரிந்து கொண்ட கௌதம் முதுகை தடவி கொடுத்து அவளை ஆறுதல் படுத்தினான்.

அவனுடன் வேலை பார்க்கும் தாதி ஒருவர் அவனைக் கண்டு விட்டு, “சார் ரிப்போர்ட்ஸ் எல்லாம் பாத்தீங்களா?” என்று கேட்டார்.

ஆம் என்று கூறியவன் ஆர்த்தியின் பொறுப்பில் ப்ரியாவை விட்டுவிட்டு உள்ளே சென்று சிவகுமாரை பரிசோதித்தான்.

சிவகுமார் காலையில் மருத்துவமனையில் பூஜாவை பார்த்து விட்டு வீட்டுக்கு வந்ததும் லேசாக நெஞ்சு வலிப்பது போல் இருக்க அதை பெருசாக எடுத்துக் கொள்ளாமல் இருந்தார். நேரம் செல்ல செல்ல வலிகூடவும் மனைவியிடம் மட்டும் சொல்லி அவரை அழைத்துக் கொண்டு மருத்துவமனைக்கு வந்து விட்டார்.

வந்த இடத்தில் அவரை பரிசோதித்த மருத்துவர் சில பரிசோதனைகளை செய்ய சொல்ல எல்லா பரிசோதனைகளை செய்து முடித்து பரிசோதனை முடிவை மருத்துவரிடம் காட்ட அவருக்கு மாரடைப்பு வந்திருப்பதாக கூறி உறுதி படுத்தினார்.

பிள்ளைகளுக்கு சொல்லாமல் மருத்துவமனைக்கு வந்த தாரணி சிவகுமாருக்கு மாரடைப்பு என்று தெரிந்ததும் உடனே இருவருக்கும் அழைத்து கூறிவிட்டார்.

கௌதம் கூறியதால் வீட்டுக்கு வந்து கொண்டிருந்தவள் வழியில் தாரணி அழைத்து விஷயத்தை கூறவும் மருத்துவமனைக்கு ஆர்த்தியுடன் வந்து சேர்ந்துவிட்டாள்.

தாயைப் பார்த்ததும் அவரின் அருகில் சென்று அமர்ந்தவளுக்கு உடனே கணவனின் நினைவு வர அலைபேசியில் அழைத்து அழுகையுடனே விஷயத்தை கூறிவிட்டாள்.

அரவிந்த், தாரணி, ப்ரியா மூவரும் இடிந்து போய் அமர்ந்திருக்க யாரை தேற்றுவது என்று புரியாமல் அவர்களுடன் சேர்ந்து ஆர்த்தியுமே கண்கலங்கி விட்டாள்.

கௌதமின் வரவு தான் அவர்களின் மனநிலையை கொஞ்சம் சாந்தி படுத்தியது.

சிவகுமாருக்கு வந்திருப்பது ஸ்ட்ரெஸ் கார்டியோமையோபதி (Stress Cardiomyopathy)

ஸ்ட்ரெஸ் கார்டியோமயோபதி என்பது விரைவான மற்றும் கடுமையான மீளக்கூடிய இதய செயலிழப்புக்கு வழிவகுக்கும் தீவிர உணர்ச்சி அல்லது உடல் அழுத்தத்தால் ஏற்படும் ஒரு நிலை. இது எலெக்ட்ரோ கார்டியோகிராம் மற்றும் எக்கோ கார்டியோகிராம் ஆகியவற்றில் ஏற்படும் மாற்றங்களுடன் மாரடைப்பைப் பிரதிபலிக்கிறது, ஆனால் எந்த தடையான கரோனரி தமனி நோய் இல்லாமல்.

மாமனாரை பரிசோதித்து விட்டு வெளியே வந்தவன் குடும்பத்தினரிடம் அவருக்கு வந்திருக்கும் மாரடைப்பை பற்றி விவரித்து கூறினான் கௌதம்.

கிருஷ்ணா சொன்ன விலாசத்துக்கு வந்தவர்கள் கதவை தட்டவும் கொட்டாவி விட்டபடி வந்து கதவை திறந்தான் கோபால்.

கோபால் வேறு யாரும் இல்லை சிவக்குமார் வேலை செய்யும் பேங்கில் தான் கேஷியர் ஆக இருக்கின்றான்.

அவனை உள்ளே தள்ளிக்கொண்டு வீட்டுக்குள் நுழைந்தனர் மூவரும். கூடம் மற்றும் ஒரே ஒரு அறை அவ்வளவுதான் அவன் வீடு.

அவனைத் தள்ளி சோபாவில் அமர வைத்தவர்கள் வீடு முழுக்க அலசி அவனின் கைபேசியை தேடி எடுத்தனர்.

அவன் சிசிடிவி வீடியோவில் அணிந்து இருந்த தொப்பியும் அந்த இடத்தில் கிடக்க அதை எடுத்துக்கொண்டு வந்த ஆதித்யன் அவன் முன் நிற்க வேர்த்து வடிய தொடங்கியது கோபாலுக்கு.

“அந்த ஃபேன் ஆஹ் போடு கிருஷ்ணா சாருக்கு வேர்க்குது” என்று நக்கலாக கூறியவன், “ஏண்டா இப்படி பண்ண?” என்று கேட்டு அவன் செவியோடு சேர்த்து கன்னத்தில் பளார் என்று ஒன்றுவிட்டான் ஆதித்யன்.

தொடரும்...
 
Top