“வேற என்ன தோனுதாம்?”
“முரண்டு பிடிக்கிற இந்த பிடரி முடிய, வலிக்க பிடிச்சு ஆட்டணும்னு தோனுதாம். உங்க விரல்கள் வருடிவிடும் சுகத்தை அடிக்கடி அனுபவிச்சிட்டு, திமிரா இருக்கிற இந்தத் தாடியை வலிக்கப் பிடித்து இழுக்கணும்னு தோனுதாம்.
இந்த தாடி மீசைக்குள்ள தேடிப் பிடிக்கிற மாதிரி ஒளிஞ்சிருக்க இந்த உதடுகளை வலிக்க, வலிக்க கடிச்சு வைக்கணும்னு தோனுதாம். கோபம் வந்தா சிவக்கிற இந்த காது நுனியை பிடிச்சிக் கிள்ளணும்னு தோனுதாம். கோபத்திலும், கர்வத்திலும் குத்திக் கிழிக்கும் இந்தக் கண்களை எனக்கே, எனக்காக யாசிக்க விடனும்னு தோனுதாம்.
இதுவரையும் என்னை அணைக்காமல் இருக்கும் இந்தக் கைகளை வலிக்கும் அளவுக்கு, என்னை இறுக்கி அணைக்க வைக்கணும்னு தோனுதாம்.
என் புருஷனோட பார்வையில, எங்கேயோ ஒரு மூலையில் நிர்வாணம் அசிங்கமா அருவருப்பா, திகட்டலா பதிஞ்சிருக்கு. அந்த நினைப்பை மாற்றி, நிர்வாணம் என்பது நம்ம ரெண்டு பேருக்குமான ரகசிய அந்தரங்க உலகம். அங்க இரு உடல்கள் மட்டுமல்ல, உள்ளமும் எந்த காழ்ப்பும், கயமையும் இல்லாம நிர்வாணமா இணையும் தெய்வீகத் தருணம்.
அந்தத் தருணத்தில் இருளுக்கும் இரவுக்கும், காற்றுக்கும் கானலுக்கும், நிலவுக்கும் நிழலுக்கும் கூட உரிமை இல்லைனு, கத்தி சொல்லத் தோனுதாம். இப்படி என் புருஷன் விழிகளை பார்த்து, உங்களோட வலிகளை வலிக்க, வலிக்க வாங்கி, அதே வலிகளை நான் உங்களுக்கு வலிக்க, வலிக்க கொடுக்கிறேன் வாங்கிக்க தயாரானு திருப்பி கேட்கத் தோனுதாம்.
இப்படி என்னை உன்னால தாங்க முடியாதுனு திமிரா சொன்ன அந்தக் கண்களில், இவள் உன்னைத் தாங்கலைனா வேறு யார் உன்னை தாங்குவாங்கனு பெருமையா கர்வமா கேட்டா, அந்த கண்ணுக்குள்ள ஒரு ஸ்பார்க் வருமே, அதை பார்க்கணும்னு தோனுதாம். பார்ப்பேனா?”
ஆசையாக, நேசமாக, வீம்பாக, கர்வமாக, ஆங்காரமாக ஒரு யாசகம். அப்படி ஒரு யாசகம் இயலுமா? இதோ இயலும் எனும் வேதாந்தத்தை மாற்றிய சித்தாந்தம், அவள். யாசகம் கேட்டதோ வரம் தரும் தேவதை. கொடுக்கப் போவதோ வரம் தரவல்ல யாசகன்.
சாத்விகா பட்டென்று திரும்ப, தடுமாறியவளை வலிக்க, வலிக்க இறுக்கி அணைத்தவன்.
“வலியை வாங்கிக்கிறேன் விரும்பியே வாங்கிக்கிறேன். தர்றது நீயாக இருந்தா, என்னோட உயிரையும் வலிக்க, வலிக்க நீ கடிச்சு தின்னாக் கூட சந்தோஷமா அதை உனக்கு கொடுக்கிறேன். பட்.. ஒருமுறை தொட்டா, மறுமுறை உன்னைத் தொடாமல் இருக்க முடியாது.
இந்த ஒற்றை இரவு இதோடு முடிந்து விடாது. ஒவ்வொரு இரவிலும் என் தேடல் உண்டு. என் தவிப்பு உண்டு. வலிகளும் உண்டு. உனக்கு சம்மதமா?”
“ஹம்..” அவள் சம்மதிக்கவே, அவளை தன் இரு கைகளில் ஏந்தியவன், பால்கனி கதவை காலால் அடித்துச் சாற்றிவிட்டு, தன் மஞ்சத்தில் அந்தப் பஞ்சணையில் அவளை அன்னப்பறவை ஆக்கினான்.
அவளை விரல்களால் தொட்டுத் தீண்ட வில்லை. ஆனால் விழிகளால் தொட்டுத் தீண்டினான். விழிகளால் துகிலுரிந்தான். காதல் பாடம் கற்றுக் கொடுத்தான். காமத்தின் பாதையை காட்டிக் கொடுத்தான். தாம்பத்திய நெளிவு, சுளிவுகளை சொல்லாமல் சொல்லிக் கொடுத்தான். இருவரும் இதுவரை காதலை சொல்லிக் கொள்ளவில்லை. நெஞ்சம் நிறைய நேசம் இருந்தும், இருவரின் குணமும் அதைக் கூறுமா என்பதும் தெரியவில்லை.
முதல் முறை ஒருத்தி அவன் நெஞ்சத்தை ஆகர்ஷிக்க வந்து விட்டாள். முதல் முறை ஒருத்தி அவன் நிர்வாணத்தை, ஆராதிக்க வந்து விட்டாள். முதல் முறை ஒருத்தி, அவன் உடலை தீண்டி சர்வேஷ் எனும் ஆண்மகனுக்குள் ஒளிந்திருக்கும் அருவருப்பை துகிலுரிவிக்க வந்து விட்டாள். முதல் முறை ஒருத்தி சர்வேஷ் எனும் வீரனின் ஆண்மையில் படிந்திருக்கும் அசிங்கத்தை துடைக்க வந்து விட்டாள்.
தாங்கிக் கொள்வாயா என்றவனின் பார்வையில் தயக்கம் என்றால், தயங்கியவளின் பார்வையில் இப்போது மித மிஞ்சிய சவால். அவன் தயக்கத்தை மனைவியின் சவால் ஜெயித்த தருணமது.
மெதுவாக அவளோடு மஞ்சத்தில் சரிந்தவன் மனதுக்குள் ஏக தயக்கம்! எங்கே ‘வலியை விரும்பிக் கேட்ட நாமே, வலியை கொடுத்து விடுவோமோ’ என்ற எண்ணம் ஒரு புறம் என்றால், தன் வலிமையின் முன் அவள் மலர் தேகம் தாங்குமோ என்ற கேள்வி ஒருபுறம். அவன் தயக்கத்தில், சாத்வியின் ஒற்றை புருவம் ஏறி இறங்கி, என்னவென்று கேள்வி கேட்டது.
“முடியுமாடி! தாங்கிப்பியாடி!” மீண்டும் கேள்வி எழுப்ப, அதில் கடுப்பான சாத்விகா,
“போயா!” எழும்பப் போகவும், அவளை இறுக்கிப் பிடித்துக் கொண்டு, அவளோடு மஞ்சத்தில் சரிந்தான்.
அவன் சொன்னதைப் போல் இறுக்கி அணைத்தான், அவளுக்கு வலித்தது. கழுத்து வளைவில் அழுத்தக் கடித்தான், அது சுக வேதனை. சாத்வியின் முகத்தில் சர்வேஷின் விரல்கள் கோலம் போட, அவள் விழிகளில் வெட்கம், கூச்சம், சிலிர்ப்பும் மாறி, மாறி தோன்றவே, அவள் வாசத்தை நுகர்ந்து மேலும் தன்னுள் நிரப்பிக் கொண்டு, அவள் விழிகளின் மொழி படித்து, அவள் முகத்தோடு தன் முகத்தைப் புதைத்தவன், மிக மெதுவாக,
“தாடி மீசைகுள்ள மறைஞ்சி இருக்கும் இந்த உதட்ட கடிக்கத் தோனுதாம்னு சொன்ன என் பொண்டாட்டிக்கு, இந்த உதட்டை அவளுக்கே முழுசா கொடுக்கணும்னு தோனுதாம்..”
என்றவன் அவளை நெருங்கி மீண்டும் பட்டென்று விலகவே, சாத்வியின் புருவங்கள் நெறிந்தன.
“ம்ச்.. ஸ்மோக் பண்ணி இருக்கேன்டி!”
“ஹூக்கும்.. ஒரு முறை பாவ மன்னிப்பு கொடுக்கலாம்.”
“வாட்?”
“காதல் சுத்த பத்தம் பார்ப்பதில்லையாமே. ஒரு முறை அதை உண்மையானு தெரிஞ்சுக்கலாமா?”
அவள் இதழ்கள் அந்த வார்த்தையை முடிக்கும் முன், இருவர் இதழ்களும் ஒன்றோடு ஒன்று புதைந்து கொண்டன. அவனில் இவள் தொலைய, இவளில் அவன் தொலைந்தான். இதழ் முத்தம் இருவரையும் அழகிய தாம்பத்யம் நோக்கித் தொலைய, பாதை அமைத்துக் கொடுத்தது. அவள் சொன்னதைப் போல, அந்த இதழ் முத்தம் சுத்த பத்தம் பார்க்கவில்லை.
‘என் ஒற்றை இதழ் முத்தம் என் கசடுகளை உன்னை மறைக்க செய்யும்’ என்றவன், அந்த ஒற்றை முத்தத்தில் சொன்னதை செய்து காட்டினான். அவன் கசடுகளை மறக்க வைத்தான். அவளை தன்னிலை இழக்க வைத்தான்.
அவனுக்கே அவனுக்காக அவளை கரைய வைத்தான். ‘லப்’ என்ற சத்தத்தோடு அவள் இதழில் இதழை பிரித்தவன், பெண் முகத்தோடு முகமுரசி,
“ஐ வாண்ட் டு, ஃபீல் யூ!”
அவள் வெட்கி முகம் திருப்ப, தன்னை நோக்கி மீண்டும் அவள் முகத்தைத் திருப்பியவன்,
“உன்னை உணர வைடி, ப்ளீஸ்...”
அவன் கெஞ்சவும், அவள் கண்களில் தோன்றிய வியப்பில்...
“பொண்டாட்டி கிட்ட கொஞ்சலாம், கெஞ்சலாம், மிஞ்சலாம் தப்பு இல்ல...”
“போயா!” மேலும் அவள் முகம் வெட்கத்தில் சிவக்க, ஒற்றை விரலில் அவள் கன்னத்தை வருடியவன்...
“அழகா இருக்கடி. எப்படி சிவக்குது பார். இந்த வெட்கத்தையும் நான் ஃபீல் பண்ணனும்...”
மயக்கம் நிறைந்த குரலில்...
“பீல் பண்ணனும்னா எப்படி? நீ பீல் பண்ண வை!”
வார்த்தைகள் இரண்டும் போர் தொடுத்துக் கொண்டிருந்தாலும், அவன் கைகளோ அவளை களைத்து, அவனும் களைந்தான்.
“என்னோட இரவுகள் அழகா இருந்ததில்ல. அதில் எனக்காக, ஒரு தேடலை நான் உணர்ந்ததில்லை. ஏன் எனக்கான தேவை கூட இருந்ததில்லை. அதில் இருந்தது எல்லாம் வெறுப்பு. என்னை, இந்த உடலை நான் வெறுத்த வெறுப்பு!”
அவனை அவளுக்கு உணர்த்திக் கொண்டே இருந்தவன், வாய்மொழியில் ‘சாத்விகா’ என்பவள் எத்தனை முக்கியத்துவம் என்பதை சொல்லாமல் சொல்லிக் கொண்டிருந்தான்.
“இந்த உடல் இன்னைக்கு பரவசத்துல சிலிர்க்கணும். உன்னை உணரனும். என் மனசுக்குள் ஒரு தேடல் இருக்கு, அந்தத் தேடலுக்கு நீ பதில் கொடுக்கணும். கொடுப்பாயா?”
கணவன் யாசிப்பில் தன் வெட்கம் துறந்தவள்,
“நான் கொடுக்கிற பதில தாங்குற அளவுக்கு இங்கே...”
என்றவள் அவன் நெஞ்சில் விரல் சுட்டி, “இங்க வலு இருக்கா தெரியலையே!”
“ஹம்.. அங்க நீ இருக்கியே தாங்கிப்பேன்” அந்த வசீகரப் புன்னகையில் மொத்தமும் வீழ்ந்தவள், தன்னோடு அவனை இறுக்கிப் பிணைத்துக் கொண்டு, அவன் இதழோடு இதழ் முத்தம் தானாகத் தந்தாள். அதில் சொக்கிப் போனான். இருவரும் ஒருவராகினர். இருவுடல் ஓர் உயிர் ஆகியது.
உணர்வுகள் தழும்பி தாளமிட்டன. உயிரோ நாதம் பிடித்து இசையமைத்தது. அந்த அறை எங்கும் அவர்கள் தாபம் நிறைந்த ஒலி வீணையின் மீட்டலாக, கெஞ்சல்கள் புல்லாங்குழல் நாதமாக, இருவரின் ஊடலும் அதில் திளைத்த கூடலும் சங்கீத ஸ்வரங்களாக, இன்னிசை படித்த ஒரு இனிமையான உணர்வு.
“வலிக்க வேணும்டி!” என்றவனை பார்த்துக் கொண்டே, வலிக்க வலிக்க காயம் கொடுத்தாள்.
“நிறைய தழும்புகள் வேணும்டி. அது என்னோட கருப்புப் பக்கத்தை மறைத்து, இந்த இரவையும் உன்னோடு நான் கழித்த பொழுதையும் ஞாபக வச்சுக்கணும்.”
“தழும்பு மட்டும் போதுமா? நான் வேணாமா?”
“நீ இல்லைனா, நானும் இல்லையே!”
அவளோடு புதைந்தான். அவள் கொடுத்த தழும்புகளை, செல்லமாக உடலெங்கும் வாங்கிக் கொண்டான்.
“முரடா! மெதுவா பிடிங்க மூச்சு முட்டுது.” என்றவள் செல்லச் சிணுங்களுக்கு,
“தாங்கிக்கோடி. என்னைத் தாங்குவேன்னு சொன்ன?”
அவன் ஆணவத்தில் பதில் சொல்ல. ஆணுக்கு பெண் எனும் சமத்துவம் கொண்டவள் வலிக்கச் செய்தாள்.
“முடிஞ்சா நீங்க தாங்கிக் கொள்ளுங்க புருஷ்” திமிரால் பதில் தந்தாள். அவன் ஆணவம் அவள் திமிரில் கரைந்து காணாமல் சென்ற ஒரு இனிமையான இரவு.
மீளா இரவில் அவன் வாய் பேசினான். அவள் பதில் கூறினாள். காதலிலும், காமத்திலும் மௌனம் சாதிப்பது ஒரு வகை என்றால் வார்த்தைகள் கொண்டு சத்தமிட்டு, சத்தமிட்டே காதல் செய்வது இன்னொரு வகை. உள்ளங்கள் மௌனம் சாதித்தன. உடல்களில் உணர்வு தீ பற்றிக் கொண்டது. அவளைக் களைத்து அவளில் கலந்து, கரைந்து, களைத்த நொடி...
“மண்டோதரி!” அன்பை ஒற்றை வார்த்தையில் கூறியவன், அவள் நெற்றியில் இதழ் முத்தமிட்டான். அவளும் அவனை வலிக்கச் செய்து வலிகளை வாங்கி, சோர்ந்து ஆழ மூச்செடுத்து,
அவனில் பிரிந்தவள் இதழ்கள், “ராட்சச ராவணா!” மெதுவாக அசைந்தன.
எந்த ராட்சச ராவணாவில் அவன் மூர்க்கனாகி, முரடனாகி, பித்தாகி சுற்றினானோ, அதே வார்த்தையில் இன்று மோகித்து, சுகித்து, மீண்டும் ஒரு மீளா உறவுக்கு, அவளை இறுக்கிப் பிடித்துக் கொண்டு, அவளோடு பயணிக்கச் சித்தமானான்.
விடியும் வரை வார்த்தையால், உணர்வுகளால் வதம் செய்தவன், விடிந்த பின் தன் வாயால் கன்னி வெடியில் கால் வைக்கப் போவதை அறியாது, அவள் வயிற்றில் தலை வைத்து இடையோடு இறுக்கிக் கொண்டு ஆழ்ந்த நித்திரைக்குச் சென்றான். விரும்பிப் கேட்டதை எல்லாம் கொடுத்தவள் விழிகளால் கேட்ட தூக்கத்தையும் கொடுத்துவிட்டு கண்ணசந்தாள், அவன் வேதங்களுக்கெல்லாம் விந்தையானவள்.