எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

வேதம் -16

admin

Administrator
Staff member

அத்தியாயம் - 16​

மறையும் சூரியனின் மந்த ஒளி, சுடும் மணல், பரந்து விரிந்த பூமி, நீலக்கடல் இப்படி தன்னைச் சுற்றி உள்ள வித்யாசங்களை, சாத்வி பல மணி நேரமாக ரசித்துக் கொண்டிருக்கிறாள். ஒரே நாளில் ஹனிமூன் செல்ல வேண்டும் எனத் திட்டமிட்டவன், இரவோடு, இரவாக இருவருக்குமான உடைகள், பிளைட் டிக்கெட், பிரைவேட் ஹைலேண்ட் என அத்தனையையும் தயார் பண்ணி, புக்கிங் செய்து விட்டு, விடி காலை விமானத்தில் சாத்வியை ஏற்றிக் கொண்டு நான்கரை மணித்தியாலப் பயணத்தில் மாலைதீவுக்கு கடத்திவிட்டான்.​

இது, அவள் முதல் தூரப் பயணம், தூரதேசப் பயணம், விமானப் பயணம். அஞ்சியவளுக்கு நெஞ்சம் தந்தான்.​

“வாமிட் வார மாதிரி இருக்குங்க, புருஷ்!”​

“அதெல்லாம் வராதுடி! இப்படியே நெஞ்சில சாய்ந்து கண்ணை மூடிக்கோ! பெருசா ஒன்னும் தெரியாது.”​

மனைவியை தாங்கிக் கொள்ள.. அந்த பிசினஸ் கிளாஸ் பயணச்சீட்டு வெகுவாக உதவியது.​

ஒரு மாதத் தேன் நிலவுப் பயணம். இதை கேட்டவுடன் மலைத்துப் போனாள். அவனோ..​

“உன்னை நான் நிறைய தெரிஞ்சுக்கணும். இன்னும் ஆழமா தெரிஞ்சுக்கணும். அதுக்கு இந்த தனிமை நமக்குத் தேவை.”​

ஒற்றை வார்த்தையில் முடித்துக் கொண்டவன், மாலத் தீவில் உள்ள குறமதி (Kuramathi Island) பிரைவேட் தீவினை, தங்களுக்காக புக்கிங் செய்து விட்டான். கடலுக்கு நடுவே லக்சரி ஹவுஸ், வாலிபால் கோட், ஸ்விம்மிங் பூல். அதிலிருந்து இறங்கிச் சென்றால், நீலக்கடல் என அத்தனை ரம்யமான சுற்றம். அவர்கள் அறைக்கு வந்து சில மணி நேரத்தில், அவளின் தலையை வருடிக் கொடுத்தவன், உடையை மாற்றி விட்டு...​

“சாத்வி! எனக்கு முக்கியமான ஆபிஸ் ஒர்க் இருக்கு. நான் முடிச்சிட்டு வாரேன். அதுவரை தூங்கி ரெஸ்ட் எடு.”​

“ஹூம்.. இல்லைங்க. இங்க எல்லாம் ரொம்ப அழகா இருக்கு. நான் வெளிய போய் பார்க்கட்டுமா.”​

அவன் முகத்தில் தோன்றிய யோசனையில்...​

“வேணாம்னா விடுங்க.”​

“நோ! நோ! இங்க ஏதும் பயமில்லை. இட்ஸ் ஹவர் பிரைவேட் ப்ளேஸ்.”​

இதோ அவனின் அனுமதியோடு வந்து கடலை ரசிக்க ஆரம்பித்து ஒன்றரை மணி நேரம். தன் உடையை கீழே குனிந்து பார்த்து அதை வருடிக் கொடுத்தவள், மெதுவாக புன்னகைத்து கொண்டாள். முட்டியை தொட முயன்ற டெனிம் ஷார்ட்ஸ், கையில்லாத ஹார்ம் கட் டி-ஷர்ட். அவளுக்கோ அது வினோதமான ஆடை.​

‘முரடு, அப்படி என்ன பிடிவாதம்? இதை நான் போட்டே ஆகணும்னு. ச்சோ! நல்லாவே இல்ல.’​

மனோதோடு புலம்பிக் கொண்டிருந்தவளின் இடையோடு ஒரு கரம் ஊற, தன்னை அத்தனை நெருக்கத்தில் இறுக்கி பிடித்து இருந்தவனின் வாசம் அவள் நாசிக்குள் நுழைந்து, நேற்றைய இரவு தந்த நினைவுகளை மீட்டுக் கொண்டு வந்தது. அதில் நாணி முகம் சிவந்தவள், தலையை திருப்பிப் பார்க்க.​

படர்ந்த சிகை, அடர்ந்த தாடி மீசை, அவனது உயரமும், ஆஜானுபாகுவான அவனது தேகமும், அவளை சுற்றி ஆக்கிரமித்த அவன் தோரணையும், கண்களில் மித மிஞ்சிய கிறக்கமும், நேற்றைய இரவு அவன் விழிகளில் தோன்றிய அதே மயக்கத்திற்கு சற்றும் குறையாத மயக்கத்தோடு, அவன் மார்பில் துஞ்சிய நினைவுகளை தட்டி எழுப்ப, மேலும் முகம் நாணிச் சிவந்தாள்.​

“இப்படி சிவக்காதடி. உன் கன்னத்து சிவப்பும், மூக்குத்தி ஜொலிப்பும் என்னை என்னமோ பண்ணுது. அப்புறம் திறந்த வெளியில பிறந்த மேனியா, இருக்க வேண்டி வரும்.”​

“ச்சீ.. போயா! வெட்கம் கெட்ட மனுஷன்.” என்றவள் நாக்கை கடிக்க..​

“அந்த ச்சீக்கு.. உன்னை வதைக்கணும்னு வெறி வந்துச்சுடி. இந்த ச்சீக்கு.”​

அவளை மேலும் நெருங்கி...​

“உன்னை ஆண்டு அனுபவிக்கணும்னு வெறி வருதுடி. இப்போவும் வதைக்கத் தோணுது. உன் விரல் நுனி கூட வலிக்காத வண்ணம், சுகவதை கொடுக்கணும்னு தோணுது.”​

“புருஷ்!” என்றவள் வெட்கத்தோடு அவன் மார்பில் தஞ்சம் புக.​

“இந்த ட்ரெஸ் எல்லாத்துக்கும் ரொம்ப வசதியா இருக்குடி.”​

அவள் கட்டுப்பாட்டை தகர்க்கும், அவன் கரத்தை தடுத்துக் கொண்டே.​

“இந்த ட்ரெஸ் எனக்கு நல்லாவே இல்ல, புருஷ்.”​

அவளை ரசனையாகப் பார்த்தவன்.​

“எனக்கு ரொம்ப நல்லா இருக்குடி.”​

அவன் விஷமப் புன்னகையில் முறைத்தாள் சாத்விகா.​

“ஹா.. ஹா..” வாய் விட்டுச் சிரித்தவன். இரு கரத்தையும் மேலே தூக்கி..​

“ஓகே சரண்டர்.”​

அவளும் உடன் சேர்ந்து சிரிக்க...​

“சாத்வி சர்ஃபிங் (surfing) போகப் போறேன். ஹோப் யூ என்ஜாய்.”​

அதில் முழித்தவள்...​

“கேள்விப் பட்டு இருக்கேன். இந்த வேர்ட, பட் அப்படினா என்னங்க புருஷ்.”​

வெளிப்படையான அவள் பேச்சில் தோன்றிய மென்மையோடு...​

“இதுவொரு நீண்ட, வெற்று, ஆழமற்ற நீர் பரப்பில் செய்யக் கூடிய, டைப் ஆஃப் சீ ட்ரைவ்.”​

“ஓஓ!” அவள் உதடு குவிக்கவே, அதில் உதட்டோடு உதட்டை புதைத்து தேன் பருகி, அந்த சுவையில் அவன் கிறங்கி விலக.​

“யோவ் ராவணா! நீ சரில.”​

சாத்வி சர்வேஷை பிடித்துத் தள்ளிவிட மோகனப் புன்னகையோடு, ஒற்றை கையில் சார்ஃபிங் கியரை(surfing gear) பிடித்துக் கொண்டு எழுந்தவன், மற்ற கையால் தலைவலியே டி-ஷர்டை கழட்டி அவள் முகம்மீது வீசிவிட்டு, வெறும் ஷார்ட்சுடன்...​

“ஊஊவ்!” என்ற உற்சாகக் கூச்சலோடு கடலை நோக்கிப் போனான். அவனுக்கு அவனை நினைத்தே பிரமிப்பு. ஒன்றா இரண்டா எத்தனை வருடங்களுக்குப் பின், அவன் சந்தோஷ ஆர்ப்பரிப்பு மீண்டிருக்கிறது.​

அவன் கழட்டி எரிந்த டி-ஷர்ட்டை நாசியில் வைத்து ஆழ சுவாசித்தவள், அவன் ஆண் வாசத்தில் கிறங்கி, அது கொடுத்த புத்துணர்ச்சியோடு.​

“என்னங்க பார்த்து.” அவள் சத்தம் காற்றில் கரைந்தது.​

சர்ஃபிங் கியரை காலில் பொருத்தியவன், கடலுக்குள் இறங்கி கைகள் ரெண்டையும் விரித்த கடலை ஆளும் திமிங்கிலத்தைப் போல காற்றையும், கடலையும் கிழித்துச் செல்ல,​

அது தந்த முதல் அனுபவத்தில் சாத்வியோ...​

“ஐயையோ ராவணா!”​

பதறி எழுந்து கடல் கரையை நோக்கி ஓடத் தொடங்கினாள்.​

அந்த சாகச விளையாட்டைக் கண்டவள், நொடியில் உருக்குலைந்து விட்டாள். ‘அவனுக்கு ஏதோ ஆகிவிடுமோ? இல்லை, தவறி கடலில் விழுந்து விடுவானோ’? என்றே அவள் எண்ணங்கள் பலவாறு சுற்றி வர.​

“பயமா இருக்கு புருஷ், பார்த்து மெதுவா.”​

“ஐ அம் பைன் மை டியர் மண்டோதரி!”​

கடல் அலையை கிழித்துக்கொண்டு, அவன் சத்தம் கடல் கரையை அடைந்தது.​

கடல் காற்றில் அசைந்து, கலைந்த அவன் கேசம் கடலலையை கிழித்துக்கொண்டு வந்த அவன் நெடிய உருவம், திண்ணிய அவன் புஜங்கள் என அவள் பிரமித்த அவன் உருவம் காற்றிலும், கடல் அலையிலும் கிழித்து, தவழ்ந்து, சுழன்று வர, இவள் நெஞ்சில் தோன்றிய பயம் சற்றே மட்டுப்பட அவன் வீரத்தை, துணிச்சலை அதில் தொக்கி நின்ற ஆளுமையை, கர்வத்தை வெகுவாக ரசித்தாள்.​

நீண்ட நேர விளையாட்டுக்குப் பின் முழுதாக நனைந்த தன் உடலை லேசாக உதறி, கேசத்தை விரல்களால் தண்ணீர் வடிய கோதிவிட்டு கரைக்கு வரவும், அதுவரை உயிரை கையில் பிடித்துக் கொண்டிருந்தவள், கணவனை நெருங்கி அவனை இடையோடு கட்டிக் கொண்டாள். அப்படியே அவள் இடையில் கை கொடுத்து குரங்கு குட்டியை போல் தன்னோடு தூக்கிக் கொண்டவன், மணலில் அவளோடு விழுந்தான்.​

“என் மண்டோதரிக்கு, என்ன பயமாம்.”​

“ராவணா!” அவள் உடல் நடுங்கவே, தன்னோடு இறுக்கிக் கொண்டவன்.​

“என் மண்டோதரி!” துளிகள் மௌனத்தில் கரைய.​

“சிதையில் விழுந்தாலும், அவள் ராவணனோடு சேர்ந்து தான் விழனும்னு ரொம்ப பயமாம்.”​

ஒரு வரி காவியத்தை அந்த ஒற்றை வரியில் காதலாகச் சொல்லிவிட முடியுமா? இதோ சொல்லி விட்டாள். நெகிழ்ந்தவன் அவளை அணைத்துக் கொண்டே முகம் நோக்கி நெருங்கி...​

“இப்படி எல்லாம் அட்வென்ஞ்சர்ஸ் பண்ணுறது எனக்கு ஒன்னும் புதுசு இல்லை. ஆனா.. எனக்கு தான் இப்ப ரொம்ப பயமா இருக்குதுடி.”​

“சர்வேஷ் அக்கண்யனுக்கு பயமா?” அவள் கேலியில்.​

“ஒற்றை இரவில் இப்படி என் உயிரோட கலந்துட்டியே! இந்த ஆழத்தை என்னால தாங்கிக்க முடியுமானு பயமா இருக்குடி. இந்த கண்ணு எங்கிருந்தாலும் என்னை சுத்தி, சுத்தி வருதே, ஒரு நொடி நான் திடீர்னு மறைஞ்சுட்டா! இந்தக் கண்கள் தாங்கிக்குமானு பயமா இருக்குடி.​

உள்ளுக்குள்ள பதட்டம் கொட்டிக் கிடந்தாலும், நடுங்குற உன் கைகள் கூட என்னை அணைக்கும் போது, அதை காட்டிக் கொடுக்கக் கூடாதுன்னு நினைக்கிறியே? இந்த நேசத்தை நினைத்தால் பயமா இருக்குடி!​

இது எல்லாத்தையும் விட இந்த விளையாட்டுக்கே இப்படி பயப்படுறியே! நான் யூஎஃப் டோர்னமண்ட்னு வந்துட்டா, நிதானமா இருக்க மாட்டேன். என் பொறுமை தொலைந்து போய் விடும். எண்ணங்கள் எல்லாம் ரிங்க்குள்ள இருக்க எதிரி மேலே தான் இருக்கும். அப்போ எதிராளிக்கு காயங்களை கொடுக்கிற மாதிரி, திரும்ப காயங்களை வாங்கும் நிலைமையும் வரும். காயங்கள் வேதனையை கொடுக்கும். இந்த உடல் குருதில கூட நனையும், அப்போ அந்த வலியை அந்த பயத்தை, அந்த ரணத்தை நீ தாங்குவியான்னு, இப்ப நினைச்சா ரொம்ப பயமா இருக்குடி..!”​

மொத்த உயிரையும் இரு விழிகளில் தேக்கி, அவனைப் பார்த்தவள்.​

“தெரியலை! இந்த பயத்துக்கு எல்லாம் என்னிடம் பதில் இல்லை. உங்க விஷயத்துல நிறைய பயம் இருக்கு, பதில் இல்லை. சாத்வி மத்தவங்களைப் பொறுத்தளவு மௌனமானவள். ஆனால் உங்களுக்கு அப்படி இல்லை. ஏன்னா உங்களுக்கு நான் சாத்விகாவா தான் இருக்கேன்.​

கண்டிப்பா நீங்க நேசிக்கிற உங்க விளையாட்ட, நான் நேசிக்க முயற்சி செய்வேன். அந்த விளையாட்டில் நீங்க வாங்குற காயங்களை வீரத் தழும்பா நீங்க நினைக்கலாம். அது எனக்கு மரண வலியைத் தரும். அந்த வலியை தாங்கிக் கொள்வேனான்னு தெரியலை. அதை நினைச்சா இப்பவும் பயமா இருக்கு. ஆனா.. அந்த பயத்தை, அந்த ரணத்தை அந்த க்ஷனத்தை உங்களுக்காக தாங்கிக்கணும்னு தோணுது.”​

இருவருக்குள்ளும் மௌனம் பாஷையாகிப் போனால், வார்த்தை பஞ்சம் ஆகும். இதுவே வார்த்தைகள் பாஷையாகி போனால், மௌனம் பஞ்சமாகிவிடும். வாய்கள் பேசிக் கொள்ளவில்லை வார்த்தைகள் வாதாட வில்லை. மௌனம் பேசியது.​

அவளை அப்படியே கைகளில் அள்ளியவன் தன்னோடு இறுக்கி அணைத்துக் கொண்டு தனது அறைக்குச் சென்று, மலரோடு மது உண்ண மஞ்சத்தில் சரிந்தான். இது இரு இதயம் இணைந்த இரண்டாவது இரவு..​

அவள் கழுத்து வளைவில் முகம் புதைத்து..​

“ஹம்.. லவ் திஸ் அரோமா. இட்ஸ் சோ நேச்சுரல்.”​

வியர்வையில் குளித்திருந்த அவள் இயற்கை மனதை விரும்பும், இந்த பித்துப் பிடித்தவனின் காதல், அவளையும் பித்துப் பிடிக்க வைத்தது. நேற்றைய பொழுது அவன் தன்னை நுகர்ந்து புணைந்த பொழுதுகள், நினைவில் தோன்றிச் சிவக்க..​

“அச்சோ!” விலகப் பார்த்தாள்.​

“ப்ளீஸ்.. விடுங்க புருஷ். கு..குளிக்கணும் வியர்வை மணக்குது.”​

“காதல் சுத்த பத்தம் பார்ப்பதில்லைனு என் மனைவி சொன்னா. அது உண்மையானு நானும் தெரிந்து கொள்ள வேண்டாமா?”​

ஒருவர் மற்றவரில் ஒழித்து வைத்திருந்த காதலை மௌனத்தில் தேடியவர்கள், வார்த்தையிலும் செயல் வடிவிலும் தேடத் தொடங்கினர்.​

“உங்ககிட்ட என்னோட சுயத்தை கொஞ்சம் கொஞ்சமா கொடுத்துக்கிட்டு இருக்கேன்.”​

“ஏன் கொஞ்சமா கொடுப்பானே! மொத்தமா கொடுத்து தான் பாரேன்டி.”​

“இந்த சுயத்தை மொத்தமா உங்ககிட்ட தொலைக்கிறதுக்காகவே, நீங்க என்கிட்ட யாசகம் கேட்டா என்னனு ஆசையா இருக்கு.”​

“என் பொண்டாட்டி விரிந்த கூந்தலுக்குள் முகம் புதைத்து காலமெல்லாம் யாசித்து வாழச் சொன்னாலும், ஆசையா வாழ்ந்து பார்ப்பேன். என்னடி வாழ்ந்து பார்க்கட்டுமா...?”​

சர்வேஷ் கண்களின் மயக்கம், அவளை மயக்கியது. மேலும் முன்னேறியவன், அவள் சொற்ப ஆடையை களைந்து, தான் அணிந்திருந்த ஒற்றை ஆடையையும் துறந்தான். கொஞ்சம் கொஞ்சமாக தன்னையும் தன் காதலையும் அவளுக்கு உள்ளத்தாலும் உடலாலும் உணர்த்தியவன் சர்வமும் சாத்விகாவே. அங்கே கிறங்கி, நெகிழ்ந்து, தவித்த அவள் இதழ்களோ..​

“யூ எஃப் அட்ரிக் சாம்பியன், டைம்ஸ் பத்திரிக்கையோட தி மோஸ்ட் செலிபிரிட்டி, இளைஞர்களின் ரோல் மாடல், சர்வேஷ் குரூப் ஆப் கம்பெனிஸோட சேர்மன். ஏஜே அக்கண்யனோட செல்ல புள்ள, தன் பொண்டாட்டி கூந்தலில் முகம் புதைத்து காலம் முழுக்க யாசித்து இருக்குறேன்னு சொல்றாரே, நடக்கிற காரியமா.”​

“நீ சொல்ற சாம்பியன்ஷிப், மூன்று முறை வாங்குன அட்ரிக் வேர்ல்ட் கப், மெடல்ஸ், உலகம் முழுக்க எனக்கு இருக்க ரசிகர்கள், எனக்கு இருக்க மீடியா பவர், என் மீது இருக்க செலிபிரிட்டி கிரஷ், இதன் மீது அவங்களுக்கு இருக்கும் போதை, ஏன் எனக்கான அவங்களோட துடிப்பு, ஆர்ப்பாட்டம், இந்த ப்ரைம்ங்கிற அந்தஸ்து, இது எதுவுமே தராத போதையை, நிம்மதியை உன் ஒற்றை ஸ்பரிசம் தரும். அதை விட பெருசு பல வருஷமா தூக்கமே வராமல் தவித்த அரக்கனோட உணர்வுகள் ஆழ்ந்து உறங்கினதே உன் மேனியில் கவிழ்ந்த வாசத்தில், அந்த உன் தொடுகையிலும் தான்.”​

என்றவன் புயலாக மாறி அவளை சுழற்றி எடுத்தான். அவனால் முடிந்து இருந்தால் சாத்விகாவை சுருட்டி தன் உயிருக்குள் புதைத்து இருப்பான். அத்தனை நெருங்கினான். முத்தமிட்டே அவளை மூச்சுக்கு ஏங்க வைத்தான். தொடுகையில் சிவந்தாள்.​

அவன் வியர்வை வாசம் கூட பெண்ணை கிறங்க வைத்தது. உணர்வுகள் அவனாகியினால் அவன் உயிர் அவளாகிப் போனாள். தொட்ட இடமெல்லாம் தீப்பற்றிக் கொண்டது.​

அவள் இதழ் பட்ட இடமெல்லாம் அவன் பாவம் கரைவதை உணர்ந்தான். எத்தனை முறை கூடிக் களைத்தானோ அவனே அறியவில்லை. கூடலின் பொழுது அவனில் ஒரு திருப்தி!​

கூடல் முடித்ததும் அவளில் மீண்டும் ஒரு தேடல். உதடுகள் புண்ணாகின, அவன் வேகத்தை தடுக்கும் போதெல்லாம்.​

“என்னைத் தடுக்காத, உன்கிட்ட தோற்றுப் போகணும்னு நினைக்கிறேன். தோற்கவாடி..!”​

“ஹம்.. ஒரு முறை என்னிடம் நீங்கள் தோற்றால், மறுமுறை என்னை ஜெயிக்க நினைக்கக் கூடாது.”​

“ஆல்வேஷ்!”​

என்றவன் தாம்பத்யத்தின் வெற்றியே தன் இணையிடம் தோற்பது என்று, ஒற்றை வார்த்தையில் காதலின் முதல் எதிரியான ஈகோவை தீயிட்டுக் கொளுத்தினான். அவளில் முத்துக் குளித்து ஓய்ந்து போனவன், சோர்ந்து போனவளை தன் மீது சாய்த்துக் கொண்டு..​

“ஒரு தேடல் என்ன செஞ்சிடும்னு நினைச்சேன்! ஆனா ஒரு தேடல் எனக்குள்ள இருக்க மனுஷனை தட்டி எழுப்புதுடி. ஒரு தேடல் எனக்குள்ள இதயம் இருக்குதுன்னு சொல்லுதுடி. ஒரு தேடல் என்னையும் ஆண்ணு முதல் முறை சத்தமா கத்திச் சொல்லுதுடி.​

 

admin

Administrator
Staff member

ஒரு தேடல் உன் ஆண்மையை வென்றவளே உன் ஆண்மைக்கு சாட்சின்னு, உன் கண்களைப் பார்த்து கத்தி சொல்ல சொல்லுதுடி.”​

அவள் நெற்றியில் முத்தமிட..​

“எனக்கான தேடல் இவ்வளவு சொல்லுமா தெரியல. ஆனா ஒன்னே ஒன்னு சொல்லுது. வாழ்க்கை முழுக்க உங்களை என்கிட்ட சலிப்பே இல்லாம தேட வைக்கச் சொல்லுது. அப்படி தேடும் போதெல்லாம், உன் புருஷன உன்னோட இறுக்கி பிடிச்சுக்கோன்னு சொல்லுது.”​

இன்று தானாக முன் வந்து அவனுக்கு ஆழ்ந்த இதழ் முத்தமிட்டு, சர்வேஷ் நெஞ்சில் சாய்ந்து கொண்டாள். கடற்கரை காற்றும், களங்கமில்லா நிலவின் ஒளியும், அவர்களை சூழ்ந்து இருந்த அமைதியும், அந்த உறவுக்கு அர்த்தம் சேர்த்தது..​

அடுத்து வந்த நாட்களும், அவர்கள் காதல் வானில் கரையத் தொடங்கினார்கள்.​

முறையான பாதுகாப்போடும், கைகளின் துணையோடும் அவளை தயார் படுத்தி நீருக்கு அடியில் ஸ்குபா டைவிங்(scuba diving) அழைத்துச் சென்றான். அவள் நீச்சல் அறிந்து இருந்ததால், கொஞ்சம் சிரமபட்டாலும் கடலுக்கு அடியில் இருக்கும் உலகைக் காண ஆவலோடே சென்றாள்.​

அவன் ஆசைக்காக சிறிது நேரம் அந்த அனுபவத்தைக் கண்டவளை தகுந்த துணையோடு கடலுக்கு மேல் அனுப்பி விட்டு, மீண்டும் அந்த தருணங்களை ரசித்தான்.​

அடுத்த நாளே ஸ்நோர்கெலிங் (snorkeling) சென்றனர்.​

ஸ்நோர்கெலிங் என்பது டைவிங் முகமூடி, ஸ்நோர்கெல் எனப்படும் வடிவ சுவாசக் குழாய் என்பவற்றின் துணையுடன் கடலுக்கு ஆழத்தில் நீச்சலடிப்பது அல்லது நீரின் வழியாக நீந்துவது. குளிர்ந்த நீரில், ஒரு வெட்சூட் அணிந்து கொண்டு இந்த உபகரணத்தைப் பயன்படுத்துவதால், ஸ்நோர்கெலர் நீருக்கடியில் உள்ள இடங்களை ஒப்பீட்டளவில் சிறிய முயற்சியுடன் நீண்ட நேரம் அவதானிக்கவும், மேற்பரப்பில் முகம்-கீழாக சுவாசிக்கவும் முடியுமானதாக இருக்கும்.​

இப்படி தான் இணையுடன் என்ன செய்ய வேண்டும், எப்படி வாழவேண்டும், எதை எல்லாம் அனுபவிக்க வேண்டும் என்று எண்ணினானோ, அதை அனுபவித்து வாழ்ந்தான். அனைத்து சாகசங்களிலும் அவன் ஆசை அறிந்து, விழி அசைவறிந்து, கால் தடம் அறிந்து உடன் செல்ல அவள் தயங்கவில்லை. இயன்ற அளவு ஈடுகொடுத்தாள். முடியாத போதெல்லாம் தாங்கிக் கொண்டான்.​

இப்படி பகலெல்லாம் அவளையும் தன்னோடு இணைத்துக் கொண்டு திகிலடையச் செய்பவன்...​

அடுத்து வந்த நாட்கள் எல்லாம் அவனின் வேட்கையால், வேட்கையில் தெரிந்த காதலால், அவள் பகலையும் இரவாக்கினான். அவள் இரவுகளையும் தூங்கா பகலாக்கினான்.​

அவளோ தன் நேசத்தால் அவன் விரும்பும் அவள் திமிரால் காதல் பொழுதுகளை தெய்வீகமாக ஆக்கினாள்.​

அவனுக்குள் இருக்கும் வெறுப்பையும், அருவருப்பையும் அவனே அறியாமல் களையச் செய்தாள்.​

இப்படியே ஒரு மாதத்தை கழித்தவர்கள் மீண்டும் இலங்கை திரும்பி, அன்றாட வேலையில் ஈடுபடத் தொடங்கினர். கோபம் வந்தால் கடிப்பான். காதல் பொழுதில் கால் பிடிப்பான். மூர்க்கத்தில் எதையேனும் போட்டு உடைத்து அருகில் இருப்பவரை தெறிக்க விடுவான்.​

சாத்விகாவின் ‘புருஷ்’ என்ற ஒற்றை சொல்லுக்கு, பொட்டிப் பாம்பாக மாறி, அவள் காலை சுற்றிக் கொள்ளுவான். சாத்விகாவும் அவன் வெறுத்த அவன் நிர்வாணத்தை, தன் தொடுகையால் நேசத்தால் காதல் பொழுதில் தன் இணைக்கு அவள் கொடுத்த ஆராதனையில் அவளோடு இருக்கும் பொழுதில் அந்த நிர்வாணத்தை விரும்பும் படி செய்தாள்.​

ஜனனி அக்கன்யணின் கூட்டுக்குள், சாத்விகா இன்றியமையாதவளாகப் பொருந்திக் கொண்டாள். ராகவியும் ஆத்விக்கும் இன்னொரு தாய் தகப்பனாக அரவணைக்கத் தவறவில்லை. ஒற்றைக் குழந்தையின் குறும்பில் மலர்ந்திருக்கும் அந்த வீட்டில், இன்னொரு மழலைச் சத்தம் கேட்காதா என்று, திருமணம் ஆன நான்கு மாதங்களில் ஜனனி மௌனமாக கடவுளிடம் கோரிக்கை வைத்தாள் என்றால், சாத்விகாவோ கடவுளிடம் வாய் விட்டு கோரிக்கை வைக்கத் தொடங்கி விட்டாள்.​

அவன் காதலைத் தந்தான்.​

அவன் வேட்கையை அவளுக்கு மட்டுமே சொந்தமாக்கினான். சர்வமும் சாத்விகாவாகினான் ஆனால் சாத்விகாவுக்கும் அது மட்டும் போத வில்லை. அன்றொரு நாள் ரகுவரன் சொன்ன ‘உங்க ஹீரோ ஆண்மை இல்லாதவன்.’ என்ற சொல் நெஞ்சில் முள்ளாகக் குத்தியது. அதை கலைய வேண்டும் என்ற வெறி, அவளை அறியாமல் அவளுக்குள் கொழுந்து விட்டு எறிந்தது. மாதவிடாய் சமயங்களில், இதை நினைத்து மேலும் சோர்ந்து போவாள். மாதங்களை எதிர்பார்ப்போடு கடந்தாள்.​

இன்று இவ்வளவு நாள் இருந்ததை விட மேலும் ஒரு படி அதிகமாக...​

கலவையான உணர்வோடு அகலிகையாக மாறி அமர்ந்திருந்தாள். இப்படி தன் நினைவுகளில் ஆழ்ந்திருந்தவளை, அவளுக்கு மிக அருகில் தோன்றிய தன்னவன் வாசனை கலைக்க, புன்னகையோடு திரும்பியவள்...​

“ராவணா!” கூச்சலோடு அவனை கட்டிக் கொள்ள.​

“என்னவாம் என் மண்டோதரிக்கு, கார் சத்தம் கேட்டும் வாசலுக்கு வராமல் யோசனையில் இருக்காங்களே.”​

“இஇ..ல்ல இல்லைங்க..”​

அவளைப் புருவம் சுருக்கிப் பார்த்தவன்.​

“இப்படி தயங்குறனா... ஏதோ வேண்டாத யோசன, இந்த மண்டைக்குள்ள சுத்துதுனு அர்த்தமே.”​

“ம்ச்..” அவள் சலித்துக் கொண்டு அமைதியாக இருக்க.​

“இல்லையே! இங்கொன்னு என்னமோ சத்தமிடுதே.”​

சாத்விகாவின் முடியை பிடித்து லேசாக ஆட்டவும், அவன் கையை தட்டி விட்டவள், கலங்கிய கண்களோடு...​

“பயமா இருக்கு புருஷ்!”​

அவளின் ஆதி முதல் அந்தம் வரை அறிந்தவனுக்கு, இந்த பயம் எதனால் என்று தெரியாதா என்ன? அதில் துளிர்த்த கோபத்தோடு..​

“சாத்விகா!”​

அதட்டலாக அழைக்கவே,​

ஒற்றைக் கோடாக கண்ணில் இருந்து கண்ணீர் சர்ரென்று வடியத் தொடங்கியது. அதில் கையில் வைத்திருந்த செல்போனை தூக்கி கீழே அடித்தவன்..​

“மூச்! கண்ணீர் கொட்டுனுச்சி. உன்னை எதுவும் பண்ண மாட்டேன்! என்னை நானே ஏதாவது பண்ணிப்பேன்.”​

மீண்டும் ஒரு முறை ஆண்மைக்கு புதுவிலக்கணம் படித்தவன்.​

“ஏன்? ஏண்டி! உனக்கு புது பேய் ஏதாவது பிடிச்சிருக்கா?”​

“புருஷ் கத்தாதீங்களே! பயமா இருக்கு.”​

“கத்தத் தாண்டி செய்வேன். பத்து நாளா பார்த்துகிட்டே இருக்கேன். பைத்தியம் புடிச்சவ மாதிரியே, அங்க நின்னு பேசுறது, இங்க நின்னு பேசுறது. காத்துல கோலம் போடுற. காலண்டரை தூக்கி வச்சிட்டு கணக்குப் போட்டுக்கிட்டு இருக்க.”​

அவன் கடினக் குரலில் நரம்புகள் புடைக்கக் கத்தவும், அப்போதுதான் வீட்டுக்குள் நுழைந்த ஆத்விக்கும், ராகவியும் பதட்டத்தோடு நின்று கொண்டிருந்த ஜனனியைக் கண்டு அருகில் நெருங்கவே, சர்வேஷ் சத்தம் அதிகமாகக் கேட்க...​

“என்னம்மா.”​

“தெரியல ஆது! நானும் இப்போ தான் ஹோம்ல இருந்து வந்து ப்ரஷ்ஷாகிட்டு வாரேன். மேல ஒரே சத்தம்.”​

“சண்ட போடுறாங்களோ.”​

“இருக்காது அத்து. சாத்வி அடிச்சா தான் உண்டு. உங்க தம்பி பேரு தான் பெத்த பேரு, ஆன்ட்டி ஹீரோன்னு. எனக்கு என்னமோ ரியல் ஆன்டி ஹீரோ நீங்கனு தான் தோணுது.”​

“அடியேய்!”​

ஜனனி சன்னமான சிரிப்போடு...​

“ராகவி விட்டுருமா. என் புள்ள பாவம், பிழைச்சு போகட்டும்.”​

எனும் போது, மேலே சர்வேஷின் சத்தம் அதிகமாக கேட்க, மூவரும் என்னமோ ஏதோ என்று மேலே செல்ல,​

மூவரையும் கண்ட சர்வேஷ் தலையை அழுந்தக் கோதிக் கொண்டு, தன் டென்ஷனை குறைக்க முயன்றான். சர்வேஷின் முகத்தில் தென்பட்ட மிதமிஞ்சிய கோபமும், சாத்விகாவின் முகத்தில் இருந்த தயக்கமும், பதட்டமும் ஜனனியை அதிரச் செய்ய.​

உண்டான படபடப்போடு..​

“சர்வா எதுக்கு உனக்கு இவ்வளவு கோபம்?”​

அவனிடம் மௌனம்..​

“சாத்வி என்னைச்சுமா.”​

“ஜனனிமா நா..நா..ன்.. நான் தான். நான் இப்..” அவள் சொல்ல முனையவும்.​

“சாத்வி!”​

அவன் கடுமையில் சாத்வி முகத்தில் பயரேகைகள்.​

“கொஞ்சம் சாப்ட்டா தான் பேசேண்டா! காட்டான்..”​

ஆத்விக்கின் திட்டலுக்கு முறைப்பும் மௌனமும் மட்டுமே அவனிடம் பதில்.​

“என்னாச்சு? போனை வேற உடைச்சு வச்சி இருக்க, சர்வா! அந்த பெண்ணைப் பாரு உன்னையே ஏக்கமா பாத்துக்கிட்டு இருக்கா, நீ இப்படி நடந்துக்கிட்டா, என்ன அர்த்தம்டா.”​

அண்ணனின் ஆதங்கத்தில் மூவரின் முகங்களில் துளிர்த்த கவலையில், மீண்டும் கோபமானவன்..​

“என்ன அர்த்தம்னு என்கிட்ட கேட்கிறிங்க. அந்தக் கேள்வியை அவகிட்ட கேளுங்க. எங்க மேரேஜ் ஆகி இந்த நாலு மாசமா, ஒவ்வொரு மாசமும் வர்ற மூணு நால நினைச்சு, இதோ இந்த பைத்தியக்காரி செத்துகிட்டு இருக்கா. என்னையும் கொல்லாம கொன்னுக்கிட்டு இருக்கா.” என்றதும்,​

“ராவணா!” என்ற கதறலோடு சாத்வி அவனை கட்டி அணைத்துக் கொள்ள, அவளை வலிக்க ஒற்றை கையில் பிடித்து அணைத்தவன்..​

“என்ன, என்னன்னு கேட்டீங்களே அம்மா, உங்களோட கிறுக்கு மருமக முகத்தைப் பார்த்துமா கண்டுபிடிக்க முடியல.”​

“என்னன்னு கண்டுபிடிக்க முடியல, சர்வா. ஆனா, நாலு நாளா சாத்வி சரியில்லை.”​

“நாலு நாளா நடக்கிறது இல்லம்மா. நாலு மாசமா நடக்குது. எவனோ ஒரு ****”​

கெட்ட வார்த்தையில் திட்ட.​

“சர்வா, அம்மா இருக்காங்க.”​

அண்ணன் கண்டிக்கவே...​

“சாரி!” மீண்டும் தலையை அழுந்தக் கோதிக் கொண்டு...​

“என்ன ஒரு நாய் கேனு சொல்லிட்டான். ஆம்பளையானு கேட்டுட்டான். அதுக்கு என் புருஷன, எப்படி நீ அப்படி கேட்கலாம் அவர் குழந்தைக்கு நான் அம்மாவாகி நிரூபித்து காட்டுகிறேன்னு, மேடம் கங்கணம் கட்டிகிட்டு தன்னை தானே வருத்திக்கிறாங்க.​

அன்னைக்கு அவன்கிட்ட அவரு ஆம்பளையா இல்லையானு, அவரோட வாழ்ந்து நிரூபிக்கிறேன்னு சவால் எல்லாம் விட்டுட்டு வந்தாங்க. அதை உண்மையாக்கனும்னு இவ லூசாகி என்னையும் லூசாக்குறா. இதுல நடு ஜாமத்துல எழும்பி, அசந்து தூங்குற என்னையும் எழுப்பி ஹார்ட் வேர்க் போத..”​

“அச்சோ புருஷ்!”​

“டேய் தடியா! எங்க காது அவிஞ்சிரும் நிறுத்து.”​

சாத்விகாவும், ராகவியும் அவனை மேலும் தொடர விடாது ஒரு சேர நிறுத்தவே. ஆத்விக்கும் ஜனனியும் சங்கடப் புன்னகையோடு நின்று கொண்டிருந்தனர். அதில் சர்வேஷ் நாக்கைக் கடித்து, மீண்டும் தலையை அழுந்தக் கோதி, பேச வந்ததை நிறுத்தியவன்.​

“உப்!” என வாயில் காற்றை ஊதியவன், குரலை செருமிக்கொண்டு..​

“அந்த வரத்தை கடவுள் நாலு மாசமா எங்களுக்கு கொடுக்கல.” அவன் குரல் லேசாகக் கமறியது.​

“அதை நினைச்சு, ஒவ்வொரு மாதமும் இவ துடிச்சுக்கிட்டு இருக்கா.” என்றதும் நடுமண்டையில் அழுந்தக் கொட்டியதைப் போல், பட்டென்று அவனைத் திரும்பிப் பார்க்க.​

“என்னடி வாயத் திறந்து சொல்லலைன்னா எனக்கு தெரியாதுனு நினைச்சிட்டியா? நீ இங்க இருக்க.” என்று அவன் நெஞ்சை குத்திக் காட்ட.​

“ஆஆ..” என்ற லேசான அனத்தலோடு, சத்விகா அவனில் மேலும் புதைந்து கொள்ள.​

“எவனோ ஒருத்தன் என்னை ஆம்பளையான்னு கேட்டது, இவளால தாங்கிக்க முடியல. இந்த உலகமே ஒரு காலத்துல என்னை கேலிப் பொருளா, நான் ஆம்பளையா இல்லையான்னு விவாதிச்சுட்டு இருந்து இருக்கு. அதையெல்லாம் தாங்கிக்கிட்டு உயிரோட தான் இருக்கேன். ஆனா.. என்னை நிரூபிக்கணும்னு இவ துடிக்கிறா பார்த்தீங்களா? அதைத்தான் தாங்க முடியல.”​

இங்கிருந்தவர்களில் யார் பலமான உயிர் அடியை அனுபவித்ததனர் என்று கேட்டால், பதில் இல்லை. நால்வரும் ஒவ்வொரு வகையில் துடிக்க, சாத்விகாவே..​

“இஇ..இனி.... தாங்கிக்க வேணாம்.” அழுகையில் குரல் நலிந்து மெதுவாக வர, அவள் அழுகை மொழி புரியாதவன்...​

“வாட்?”​

“இனி உங்களை யாரும் ஆம்பளையான்னு கேட்க மாட்டாங்க. அன்னைக்கு சொன்னதே தான் இன்னைக்கும். அவரோட வாழ்ந்து நான் நிரூபிச்சுக்கிறேன். வாழப் போற எனக்கு மட்டும் நீங்க நிரூபித்தா போதும். நிரூபிச்சுட்டிங்க புரூஷ்!”​

அவன் கலவையான உணர்வோடு, அவளைப் பார்த்துக் கொண்டிருந்தான். உடலெல்லாம் சில்லிட்டு உள்ளம் படபடத்துப் போயிற்று. வெளிப்படையாக நடுங்கி விடுடாதே என்ற மனசாட்சியின் குரல் கேட்ட அவன் ஈகோ, அவனை வெகுவாக இறுக்கிப் பிடித்தது..​

சாத்விகா சர்வேஷின் விழிகளோடு தன் விழிகளைக் கலந்து..​

“உண்மை தான், தலையணை பந்தத்தில் நிரூபிக்கக் கூடியது இல்லை, ஒரு ஆணின் ஆண்மை. அதை என்னோட வாழ்ந்து பார்த்து நீங்க நிரூபிச்சிட்டீங்க. அதுக்கு கடவுள் வரம் தந்துட்டாரு.”​

என்றவள் தன் இடை ஓரம் சேலை மடிப்பில் மறைத்து வைத்திருந்த பிரக்னன்சி கிட்டை எடுத்து கணவனுக்குக் காட்ட.​

இத்தனை நேரம்.. அவள் தவித்த தவிப்புக்கான அர்த்தத்தை புரிந்து கொண்டான்.​

அவன் வாழ்வில் முதல் முறை, வாழும் போதே மோட்சம் அடைந்ததை உணர்ந்த தருணமது. அதுவரை அவன் உணர்வுகளை பிடித்து நிறுத்தித் தடுத்த ஈகோவை உடைத்துக் கொண்டு உணர்வுகள் வெடிக்க, உடல் நடுங்கியது.​

தூக்கிப்போட்ட போனிடைலில் இருந்து, தாடி மீசை வரை சிலிர்த்துக்கொண்டன. அவனுக்குள் வெடித்த எரிமலையின் தாக்கத்தில் நெற்றியோர வியர்வை சுரப்பிகள் அதிகமாகச் சுரந்து வடிய, அவன் உணர்வுகளோடு போராடிக் கொண்டிருக்கிறான் என்பதை வெளிச்சமாக்கியது.​

ஜனனியோ வெளிப்படையாகவே..​

“அம்மா தாயே! வரம் கொடுத்துட்ட. என் பிள்ளையோட வாழ்க்கை வசந்தம் இல்லாமல் போயிடும்னு நினைச்சி மடிப்பிச்சை கேட்ட எனக்கு வரம் கொடுத்துட்ட.”​

தன் மகிழ்ச்சியை எப்படி வெளிப்படுத்துவது என்று அறியாதவள்...​

“ஆஆ.. அம்மா!” என்ற கேவலுடன் அப்படியே மண்டியிட்டு அமர்ந்து ஓலமிட்டு கதறத் தொடங்கினாள். மூன்று வருடங்களாக மனதுக்குள் புதைத்து வைத்த வேதனை எல்லாம் கண்ணீராகக் கரைந்தது. எந்த மகனின் வாழ்க்கை பட்டு போயிருமோ, எந்த மகனின் வாழ்க்கை பாலைவனமாய் ஆகிவிடுமோ, எந்த மகனின் வாழ்க்கை தன்னால் பாழாய் போனதோ என நொந்து தவித்தவளின், மகனின் வாழ்க்கை பூத்துக் குலுங்கிய தருணமது.​

தன் வேதனைக்கெல்லாம் தேவதை ஒருத்தியின் மூலம் கடவுள் வரம் தந்து விட்டார். ஒரு புறம் நெஞ்சாங்குழி ஏறி இறங்க அழுது கொண்டிருந்த மனைவியையும், இன்னொரு புறம் தரையில் மண்டியிட்டு கதறும் தாயையும், ஒரு சேர தூக்கி தன்னோடு இறுக்கி அணைத்துக்கொண்டான், சர்வேஷ்.​

ஒரு ஆண் மகனுக்கு என்ன வேண்டும். இதைவிட கடவுள் என்ன கொடுத்து விட முடியும். அவனை இதுவரை தாங்கிய தாய், இன்றுவரை தாங்குகின்ற மனைவி, இனிவரும் காலமெல்லாம் தாங்கப் போகின்ற வாரிசு. இந்த மூன்று உயிர்களையும் ஒரு சேர நெஞ்சில் சுமந்தான். தாயின் மறுபுறம் ஆத்விக்கும் ராகவியும் வந்து ஜனனியை தாங்கிக் கொண்டனர்.​

தம்பியின் தலையை, ஆதுரமாகத் தடவி விட்ட ஆத்விக்..​

“என்னம்மா? நீங்க இவ்வளவு நாள் தவிச்சிட்டு இருந்தீங்க. கடவுள் அந்த தவிப்பை நீக்கிட்டாரு, சந்தோஷமா இருக்காமல் அழுதா எப்படி.”​

“என்னால இதை எப்படி எக்ஸ்பிரஸ் பண்ணுறதுனே தெரியலையே, கண்ணா!. எத்தனை நாள் தூங்காம இருந்திருக்கேன் தெரியுமா? என் புள்ள நிலமைக்கு நானே காரணம்னு தவிச்சுக்கிட்டு இருந்திருக்கேன். என்னால, என்னோட தீராத வற்புறுத்தலால அவன் வாழ்க்கை நரகமா மாறிப் போச்சு. என் புள்ள ஊர் உலகத்துக்கு முன்னால கூனிக் குறுகிப் போய் நின்னான். நம்ம சொந்தமே உன் புள்ள ஆம்பளையோடு உறவு வச்சிருக்கானே, அதான் ஒரு பொண்ண கட்டிக்கிட்டு வாழ முடியாமப் போச்சு. இவனுக்கு குழந்தை பெத்துக்க முடியுமானு தெரியல, ஜனனி அஞ்சு புள்ள பெத்தா அஞ்சுல ஒன்னுக்கு வாரிசே இல்லாம போகப் போகுதுன்னு என் காது கூச பேசி இருக்காங்க. தாங்கிட்டு உயிரோட இருந்தனே நான்..”​

 

admin

Administrator
Staff member

ஜனனி வாய் விட்டுக் கதற, சர்வேஷ் தாயின் கதறலில் தன் கட்டுப்பாட்டை மீறி கண்ணீர் சிந்தி விடக் கூடாது என வைராக்கியமாக இருந்தான் என்றால், மென்மையான ஆத்விக் கண்ணீர் சிந்தி விட்டான்.​

சாத்வியோ..​

“அழாதீங்க ஜனனிமா. அவ.. அவர புரிஞ்சுக்க நம்ம குடும்பம் இருக்கோம். இப்போ உங்க கண்ணீருக்கு கடவுள் பலன் கொடுத்துட்டாரு.”​

என்றவளும் உடன் சேர்ந்து அழ, ராகவியும்..​

“அழாதீங்க அத்தை. உங்க கண்ணீரைத் தாங்க முடியல.” அவளும் அழுகையில் கரைந்தாள்.​

“அழனும் தங்கங்களே! நான் கத்தி அழனும். இத்தனை நாள், என் அத்தானோட நெஞ்சமும், என்னோட தலையணையும் மட்டுமே என் கண்ணீரை தாங்கி இருக்கு. இன்னைக்கு என் மகனோட நெஞ்சமும் தாங்கட்டுமே.”​

“ஜனனிமா!” அவள் அன்பில் சாத்விகா தடுமாறவே.​

“சாத்விமா, உன் புருஷன் தல குனிஞ்சிடக் கூடாதுன்னு, கவிதா அண்ணி அன்னைக்கு இங்க வந்து பேசும் போது, ‘குனியக் கூடாதுனு’ அப்படி மிரட்டினியே, அன்னைக்கு உன்னோட ஜனனிமா வானத்துல பறந்தேன்.”​

ஜனனியின் குரல் குலைந்து வர, சாத்விகா அழுகையோடு, சிவந்து சிரிக்க.​

“ஆமான்டா! கர்வமா இருந்துச்சுடா. என் பிள்ளையை நான் பெத்தத விட, எத்தனையோ முறை அவன் ஜெயிச்சதை பார்த்ததை விட, என் புள்ள உலகமெல்லாம் பிசினஸ் பண்ணி கோடி கோடியா சம்பாதிச்சதை விட, அவனைப் பார்த்து நீ தலை குனியாதனு சொல்லி மிரட்டின பார்த்தியா, அந்த நொடி உன் பேச்சுக்கு கட்டுப்பட்டு நிமிர்ந்து நின்னானே என் மகன், அப்போதான் சர்வேஷோட அம்மானு என் நெஞ்சம் கர்வத்துல நிமிர்ந்து நின்னுச்சுடா.​

அவன் தலை குனியக் கூடாதுன்னு நீ நினைச்ச. ஆனா.. என் மகன் கூனிக் குறுகி, தல குனிஞ்சு, கையாலாகாத தனத்தோட நின்னதை நான் பார்த்தேன்டா! அன்னைக்கு தாயா தல குனியாத கண்ணானு கத்திச் சொல்லவோ, என் பிள்ளை தலைய நிமிர்த்தி நிற்க வைக்கவும் முடியாமல் போச்சே! அதை நினைச்சு எம் புள்ளை அளவு துடிச்சேன்டா. ஆனால், அதை நீ செஞ்சடா. அந்த ஒன்னு எனக்கு வாழ்நாள் முழுசும் போதும். இவன் என்ன வாழ்ந்துறப் போறான்னு கேட்டாங்க. நீ வாழ வச்சே காட்டிட்ட.”​

அவள் விட்ட கதறலை மீண்டும் தொடர, அதைத் தாங்க முடியாதவன், தாயையும், மனைவியையும் அணைத்த வண்ணம், அப்படியே கட்டிலில் அமர்ந்து விட்டான்.​

சர்வேஷின் கண்களுக்குத்! தான் வைராக்கியம் இதயத்துக்கு இல்லை போலும். இதயம் அன்னையை எண்ணி கண்ணீர் விட்டது, கதறியது. தாயுடைய மௌனத்திற்கு பின், அமைதிக்குப் பின், பொறுமைக்குப் பின், நிதானத்திற்கு பின், இப்படி ஒரு வலியை இரு மகன்களும் எதிர்பார்க்கவில்லை. ஒரு வேலை இதை அறிந்ததால் தான், ஆதவ் அன்னையின் வலியைக் காண முடியாது தூரச் சென்றானோ என்று, சரியான காரணத்தை இரு மகன்களும் அன்று கண்டு கொண்டனர்.​

“ப்ளீஸ்மா அழாதீங்க. உங்க புள்ள தல குனியக் கூடாதுன்னு நினைச்சு, நீங்களே உங்க புள்ள கண்ணுல இருந்து கண்ணீர் வர வைக்கப் போறீங்களா?”​

“சர்வா!” அதில் துடித்து நிமிர்ந்தவள்.​

“என் பிள்ளை கலங்கக்கூடாது. அப்படி ஒரு சூழல் வந்தா, அதுக்கு பதிலா இந்த அம்மா அழுதுட்டுப் போறேன்.”​

தன் இரு கைகளாலும் கண்ணீரைத் துடைக்க.​

“இனி நீங்க அழவே கூடாது. என் அம்மா அழற மாதிரி நடந்துக்கவும் மாட்டேன். தப்பு தான். என்னோட பிரச்சனைல உங்களை நான் விட்டது தப்புதான். எனக்கு என் அம்மா மாதிரி என் மனைவியை மாதிரி அழகான ரெண்டு பெண் குழந்தைகள் தான், வந்து பிறக்கப் போறாங்க பாருங்களேன்.”​

அவன் தாயை தேற்றச் சொல்லவும், தேவதைகளின் ததாஸ்து அந்த கனம் அவ்வாறே என்றது.​

அதில் விரிந்த புன்னகையோடு, மகனின் கன்னத்தை வருடிய ஜனனி.​

“என்னை மாதிரி இருக்க வேணாம். என் பிள்ளையை மாதிரி மூக்கும் முழியுமா செக்க செவேன்னு அழகா இருந்தாப் போதும்.”​

அன்னையின் நெற்றியோடு நெற்றி முட்டி...​

“நான் அழகுன்னு உங்க அழகை கம்மி பண்ணி காட்டுறிங்களே! இதை உங்க அத்தான் பார்த்தாருனு வைங்களேன், கண்ணாலயே சுட்டுருவார்.”​

அதில் அவர்கள் முகங்களில் விரிந்த புன்னகை தோன்ற, இது அத்தனையையும் அரைவாசல் கதவில் சாய்ந்து நின்று கேட்டுக் கொண்டிருந்த அக்கன்யணின் நெஞ்சம் மனைவியின் கதறலில் தானும் கதறி கண்ணீர் விட்டு, அவள் சிரிப்பில் சிரித்து, அவள் மௌனத்தில் மௌனித்து, அவள் சந்தோஷத்தில் முகம் விசிக்க நின்றிருந்தான்.​

அக்கன்யணின் ஜனனம் ஜனனி என்பதை மீண்டுமொறு முறை, அந்தக் கணம் நிரூபித்தான்.​

“எக்ஸாக்ட்லி! என் பொண்டாட்டியை விடவுமா ஒரு அழகு இருந்துடப் போகுது.”​

என்றவன் விரிந்த சிரிப்போடு வந்து மனைவியை நின்றவாறு, இடையோடு அணைத்துக் கொண்டவன்,​

மகன் மற்றும் மருமகளின் தலையை வருடி விட்டு.​

“தேங்க் யூ ஃபேர் கிவ்விங் மீ த மூவ்மண்ட் டூ பீ அ கிராண்ஃபாதர்.. (Thank you for giving me the moment to be a grandfather..) இட்ஸ் யுவர் டைம் என்ஜாய்.”​

அவன் மனைவியோடு அகல, ஆத்விக்கும் ராகவியை அழைத்துக்கொண்டு அங்கிருந்து சென்றான்.​

மௌனம் இருவருக்குள்ளும் அசாத்திய மௌனம். அதை யார் கலைப்பது, மௌனத்தின் பெருமொழியை யார் புரிவது. தயங்கி தவித்து நிற்க,​

அதை கலைத்த சர்வேஷ்..​

“ஹம்.. நான் அப்பாவாகிட்டேன்.”​

அவன் உணர்ச்சிக் கடலாகக் கொதிக்க.​

“ஹூம்.. நாம அப்பா அம்மா ஆகிட்டோம்.”​

அதில் மெல்லிய புன்னகையோடு.​

“எப்போ தெரியும்...?”​

“நாலு நாளா ஒரு சந்தேகம், இன்னைக்கு தான் கன்பார்ம் செய்தேன்.”​

“வயிற்ற தொட்டுப் பார்க்கட்டுமா?”​

‘ஏன்?’ அனுமதி என அவனை புருவம் தூக்கிப் பார்க்க.​

“வலிச்சுடுமோனு பதட்டமா இருக்குடி.”​

அதில் அழுகையில் நனைந்த இமையோடு, சர்வேஷை முறைத்தவள்.​

“அப்போ எனக்கு வலிக்கலாமா...?”​

அதில் அவன் புன்னகை மேலும் விரிய...​

“எனக்கு வலிக்கணும்னா, உன்னை வலிக்க, வலிக்க வைக்கலாம்.”​

அவனை திமிரான பார்வை பார்க்க...​

“அந்த வலி சுகமான வலி. என்னோட சுமை எல்லாம் கலைத்து காணாமச் செய்த வலி.”​

என்றவன் அவள் வயிற்றை வருடிக் கொண்டே...​

“எனக்காக ஒரு உயிரை, ஒரு உறவை, ஒரு உரிமையை வரமாகக் கொடுத்தவ, இந்த வலியை வாங்கிறானா, அப்படிபட்ட பொண்டாட்டிகிட்ட இந்த சர்வேஷ் அடிமையாக இருக்கலாம்.”​

அவனை சாத்விகா பிரமிப்பாகப் பார்க்க, அவள் ஆழிலை வயிற்றை சற்றே அழுத்தமாக வருடிக் கொண்டே...​

“பொண்டாட்டிக்கு மட்டுமே வலிக்கணும் அவள் வலியை புருஷன் தாங்கிக்க கூடாதுன்னு நினைக்கிற ஆணாதிக்க தீண்டாமை எனக்கு வேண்டாம். அவளுக்கு ஒன்னு வலிச்சா, அத எனக்கு நூறு மடங்கா அவ திருப்பித் தரணும். அப்படி தரும் போது என்னோட மீசை முடி கூட கர்வமா, திமிரா அதை வாங்கிக்கணும். இதோ ஆயுசு முழுக்க, அப்படி நான் வாங்கிக்க, என்னோட ஆம்பளத் தனத்துக்கு கடவுள் வரம் தந்துட்டாரு.”​

என்றவன், அவள் முகத்தில் கோடி முத்தங்களைக் கொடுத்தான். அவள் புடவை கலைந்தவன், வெற்று வயிற்றில் எத்தனை முத்தம் கொடுத்தான் என்பதை அவனே அறியான்.​

“ம்ச்.. கூசுது புருஷ்! டிரஸ்ஸ போட விடுங்களேன், ப்ளீஸ்.”​

“நோ! இப்படியே இரு. எனக்கு உன்னை உணரனும். நம்ம.. குழந்தையை உணரனும். நமக்கான இந்த நேரத்தை உணரனும். துளித்துளியாக ரசித்து உணரத் தடையாக, இந்த ஆடைகள் வேண்டாம். தடையாயிருக்கும் இந்த கூச்சம் வேண்டாம். நீ வேணும். நீயே எனக்கு நம் குழந்தையை, உன்னை உணர வைக்கணும்.​

அவள் வயிற்றில் மீண்டும் முகம் புதைத்து இடையோடு இறுக்கிக் கொண்டு, கடவுள் கொடுத்த அழகிய தருணத்தை இதயத்தில் சேர்க்கத் தொடங்கியவன் இதழ்கள்..​

“நீ என் வேதமாக வருவனு நினைக்கல.”​

“நீங்களும் எனக்கு விந்தையானவர்னு நினைக்கல.”​

சன்னமான புன்னகையோடு..​

“வேதம் தாண்டி நீ எனக்கு.”​

“விந்தை தான் புருஷ் நீங்களும் எனக்கு.”​

“மண்டோதரி!”​

சர்வேஷ் அவள் வயிற்றில் காற்றை குவித்து ஊதி அழுந்த முத்தமிட..​

“ராவணா!”​

என்றவள் அவன் பிடரி முடியோடு வலிக்க இழுத்தாள்.​

இங்கே புதிய வேதாந்தம் உருவாகி, காதல் விந்தையானது என்றது.​

அதே நேரம் இந்தியாவில் பெங்களூர் நகரத்தில் உள்ள லக்சரி அப்பார்ட்மெண்டில் இருவருக்குள்ளும் விவாதம் அனல் பறந்தது.​

“சோ.. ஃபைனலி என்ன சொல்ற சயத்தா?”​

“ப்ளீஸ் பாவா! நான் எப்படி அவரு, அவர்கிட்ட திரும்பிப் போவேன்.”​

“வாவ்... இவ்வளவு மரியாதை வேற இருக்கா அவன் மேல.”​

“இப்ப.. அது ரொம்ப முக்கியமா? ஏன் உங்களுக்கு இவ்வளவு பிடிவாதம். நீங்க சொல்றதெல்லாம் தயங்காம செய்றேனே பாவா.​

அப்படியும் என் காதல் மேல நம்பிக்கை இல்லையா?”​

அவள் இரு கன்னத்தில் கை வைத்து நெற்றியில் ஆழ முத்தமிட்டவன்...​

“அப்போ.. நான் உனக்காக எதுவும் பண்றது இல்லன்னு சொல்றியா?”​

“ஹூம்..” மறுத்தவள்.​

“உயிரையே கொடுப்பிங்க. எனக்குனா உருகுறீங்க. இதை விட ஒரு பெண்ணுக்கு என்ன வேணும்.”​

“சயத்தா! அப்போ எதுக்கு நீ தயங்குற. உனக்கு ஒரு அங்கீகாரம் வேணும். நமக்குனு ஒரு வாரிசு வேணும்.”​

“ஆஆஅ.. அதுக்கு... இந்த வழி சரி தானா?”​

அவள் குரல் கலங்க.​

“எவ்ரிதிங் இஸ் ஃபேர் இன் லவ். என் மீது உனக்கு இருக்க காதலுக்கு, உன் மீது எனக்கு இருக்க காதலுக்கு, எதுவும் எல்லை இல்லை. அந்த காதலுக்காக நாம் எதுவும் செய்யலாம்.”​

இருவர் கண்களிலும் அப்படி ஒரு காதல் வெறி. காதல் சாமி சிலையை அலங்கரிக்கும் மலரைப் போல புனிதமானது என்றால். சில சமயம் அதே காதல் சாக்கடையில் விழுந்த சந்தனமாகும்.​

அவர்கள் இருவரின் காதல் ஆராதனைக்கு உரியதா? இல்லை.. அசிங்கமானதா என்பதை காலம் தான் தீர்மானிக்கணும்.​

தன் இணையை ஆதுரமாகப் பார்த்த சயத்தாவோ...​

“உங்களுக்காக, உங்களுக்காக மட்டும் இன்னும் கொஞ்ச நாள்ல நான் அங்க போறேன். ஆனா... அவரை நினைச்சா தான் என்ன நடக்குமோனு பயமா இருக்கு.”​

சயத்தா கண்களில் மலை என உயர்ந்த சர்வேஷின் தோற்றம், ஒரு நொடி வந்து மிரட்டியது.​

“மை டியர்! நீ பயப்பட வேண்டிய அவசியமே இல்லை. அவன் உன்னை அவ்வளவு சீக்கிரம் நெருங்க மாட்டான். பிகாஸ் நீ கொடுத்த அடியும், அவமானமும் இந்த ஜென்மம் முழுக்க போதும் அவனுக்கு. அவன் உயிரோட இருக்கும் வரைக்கும் அந்த அவமானத்தை மறக்க மாட்டான். நீ போய் நில்லு. ஊரே உன் மேல பரிதாபப்பட்டு பேசும். அவன் மேல கரியப் பூசுனதை பயன்படுத்திக்கோ.​

அண்ட் உங்க அம்மாவை கொஞ்சம் சென்டிமென்ட்டால அடிச்சா போதும், நம்ம காரியத்தை நல்லபடியா சாதிக்கலாம்.”​

புன்னகையோடு தலையசைத்தவள் இதழ்கள்..​

“எவ்ரி திங் இஸ் ஃபேர் இன் லவ்.”​

அசைந்த மறுகணம் தன் இணையோடு இணைந்தது.​

காத்திருக்கும் காலம்,​

அவன் காதலுக்கான வேள்விக்காலம்.​

கர்வம் தந்தேன்!​

திமிரை தந்தேன்!​

ஆணவம் தந்தேன்!​

வைராக்கியம் தந்தேன்! - இனி​

வலியைத் தருவேன்!​

ரணங்களைத் தருவேன்!​

தாங்குமோ நெஞ்சம்.​

காத்திருக்கும் காலமோ - நான்​

காவியம் படைக்கப் போகிறேன் என்றது..​

 

Shamugasree

Well-known member
Ippo tha santhoshama news sollirukanga. Atha kolaikane vara veena ponava. Vanthu ivalum kavithavum nalla vandi kattatum. Sarva 🥺🥺🥺
 

santhinagaraj

Well-known member
ஒவ்வொரு எபிலையும் சர்வேஷ் சாத்விகா காதலை நினைக்கிறப்போ ரொம்ப பிரம்மிப்பா இருக்கு 😍😍

இந்த சயத்தா அடுத்து என்ன பிரச்சனையை கிளப்ப வரப்போறா?
அப்படியே அவ பிரச்சனை பண்ண வந்தாலும் சாத்வி கிட்ட நல்லா வாங்கிக்கிட்டு தான் போவ அவளோட காதலன் அவளை உண்மையா காதலிக்கிற மாதிரி தெரியலையே?
 
Top