priya pandees
Moderator
அத்தியாயம் 2
கோபத்தில் கையிலிருந்த பாப்கார்னில் ஒன்றை கூட அவனை எடுக்க விடாமல் அவ்வளவையும் தனியாகவே விழுங்கி விட்டாள்.
படம் முடியவும் பட்டென்று எழுந்து வேகமாக அவனை கடந்த செல்ல இருந்தவளை, அவளின் சட்டை நுனியை பிடித்து நிறுத்தி, "எங்க ஓடுற?" என தானும் கூடவே எழுந்தான்.
"நா எங்க வேணா போவேன். வந்த எனக்கு போகவும் தெரியும். நீங்க வந்த வேலை முடிஞ்சதுன்னா கிளம்பிட்டே இருக்கலாம் மிஸ்டர் யாஷ்"
"முடியலயேடி. உன்ன அபேஸ் பண்ண தானே வந்தேன்?"
பல்லை கடித்து முறைத்தவள், "மல்டிபிள் பெர்சனாலிட்டி டிஸ்ஸார்டர் இருக்கா உனக்கு? காலைல போ போ ன்னு விரட்டுன, இப்ப வா வா ன்ற? என்ன பாத்தா அ'னா லூ'னா மாதிரி இருக்கா?" என கண்ணை உருட்டி முறைத்தவளை, ரசிக்கவே செய்தது அவன் கண்கள். வெள்ளை உடையும் சுருட்டை முடியும், அவளின் பால் நிறமும் அந்த தியேட்டரின் மங்கிய வெளிச்சத்திலும் அவனுக்கு பளிச்சென்று தான் தெரிந்தது.
காதோரத்தில் ஒதுங்க வேண்டிய முடி பிரண்டு முன்னெற்றியில் விழுந்து கண்ணில் விழ முயன்று ஆடி கொண்டிருக்க, அதை ஒதுக்க கூட நேரமில்லாதவளாக அவனை திட்டுவதில் மும்முரமாக இருப்பவளை, கொள்ளையாய் ரசித்து நின்றான் அந்த மருத்துவன்.
"அதுல உனக்கு டவுட்லாம் வர கூடாது வருணி குட்டி. எக்ஸாக்ட்லி அரை லூசு தான் நீ. மல்டிபிள் டிஸ்ஸார்டர் எனக்கில்ல உனக்கு தான். ப்ரஃபஸ்ஸன்ல ப்ரஃபஸ்ஸன்னா இருக்கணும். வீட்ல பொண்டாட்டியா இருக்கணும். எல்லா இடத்துலயும் பேக்கு மாதிரி இருந்துட்ருந்தா, நா திட்ட தான் செய்வேன். புருஷனாவும் சரி உன் டாக்டர் ஹெட்டாவும் சரி போன்னும் சொல்லுவேன் வான்னும் சொல்லுவேன் நீ கேட்டு தான் ஆகணும் புரியுதா?" என்றவாறு அங்கு தொந்தரவு தந்து கொண்டிருக்கும் முடியை விலக்கி அவளின் காதின் பின் நிறுத்த, அது அவளை போலவே அடங்க மாட்டேன் என அடுத்த நொடி சிலிப்பிக் கொண்டு முன் வந்து நின்றது.
சுருட்டை முடி நில் என்று நிறுத்தும் இடத்தில் நிற்குமா? அவளும் அதைப்போல தான் அவனிடம் பாய்ந்து வந்தாள்.
"கேட்க மாட்டேன்டா கேட்கவே மாட்டேன். என்னடா பண்ணுவ? என்ன பண்ணுவ? எவளோ இருக்கான்னு சொன்னியாமே அவள கூட்டிட்டு போய் குடும்பம் நடத்திக்கோ" அவள் அவனிடம் எகிறி கொண்டு வர, கைக்கு ஏதுவாக வந்தவளை அப்படியே தூக்கி தோளில் போட்டு நடக்க துவங்கி விட்டான்.
"விடுடா விடு. போலீஸ் வர போகுது மாமா விடு. உன்ன நான் புருஷனுலாம் சொல்லி காப்பாத்தவே மாட்டேன் பாத்துக்கோ" என்றவள் அவன் முதுகில் குத்தியவாறு நிமிர்ந்து பார்க்கும் போதே இவர்களை நோக்கி அவர்கள் வந்து கொண்டிருப்பது தெரிந்தது. தியேட்டர் காவலுக்கு இருக்கும் அதிகாரிகள் படம் முடியவும் ரோந்து வந்தனர். இவர்கள் செய்கையை கண்டுவிட்டு இவர்களிடம் விசாரிக்க வர, சுதாரித்தாள் வருணி.
"லூசு மாமா போலீஸ் வருது இறக்கி விடு" என காலை உதறி, கொஞ்சம் கீழிறங்கி அவன் தோளுக்கு வந்தவள், அவன் கழுத்தோடு இறுக கட்டி கொண்டாள்.
அதில் சிரித்தவன், அப்போதும் அப்படியே தூக்கி கொண்டு தான் நடந்தான், இறக்கி விடவில்லை. அவனை காப்பாற்ற மாட்டேன் என்றவள் அவன் கைக்குள் அவளாகவே வந்து நின்று அவனை சொந்தமாக காட்ட முயல்கிறாள். இப்படி இருந்தால் அவன் வச்சு செய்யத்தானே செய்வான். லேசாக திரும்பி மிக அருகில் இருந்த அவள் இடது கன்னத்தில் லேசாக பல் பதித்து கடிக்க, "கொன்றுவேன் மாமா" என அவன் சட்டையிலேயே துடைத்து அவன் தோள்பட்டையில் கடித்து விட்டாள்.
அந்த மாலின் காவலர்களுக்கு இப்போது அவர்கள் காதலர்கள் தான் என ஊர்ஜிதம் ஆகிவிட வேறு எங்கும் ஏதும் பிரச்சனை நடக்கிறதா என பார்த்தவாறு நகர்ந்து விட்டனர்.
கார் நிறுத்துமிடம் வந்து, முன்பக்கம் தான் இறக்கிவிட போகிறான் என அவள் நினைத்திருக்க, பொத்தென்று பின்பக்க சீட்டில் போட்டு அவனும் அவள் மேல் விழவும் தான் பதறி, "லூசு மாமா என்ன பண்ற?" என அவனை தள்ளிக்கொண்டு எழ முயன்றாள்.
"கடிச்சல்ல? நா திருப்பி தர வேணாம்?" என நிதானமாக தான் இருந்தது அவன் செயல்கள்.
"அப்பப்ப அரகிறுக்காகிடு. பார்க்கிங்ல நின்னுட்டு? படம் முடிஞ்சு எல்லாவனும் கார் எடுக்க வருவான் ஃப்ரீ ஷோ காட்ட போறியா? இறங்கு மேன் முதல்ல" என பட் பட்டென்று அடித்து அவனை வெளியே தள்ளுவதில் தான் குறியாக இருந்தாள்.
"அதெப்படி எவளையோ கூட்டிட்டு போய் குடும்பம் நடத்தணுமா நானு?உன் கை உன் வாய்னா என்ன வேணும்னாலும் செய்யலாம் பேசலாம்னு நினைப்பா? அதுக்கு லாக் போடாம கிளம்பினா ஒன்னவர் ட்ராவல்ல என்ன காத்துல கரைய வச்சுட மாட்ட நீ" என்றவன் அவளின் இருகையையும் அடக்கி பிடித்து, தன் கால்களுக்கு இடையிலும் அவளை துள்ள விடாமல் இறுக்கி பிடிக்க, நிஜமாகவே பயந்துவிட்டாள். அங்கு அதெல்லாம் சகஜம் தான், பார்த்தாலும் பார்க்காதது போல் கடந்து விடுவார்கள் தான், ஆனால் அவளுக்கு அசிங்கம் தானே! மனதுக்கு நெருக்கமானவன் தான் அதற்காக பொது இடத்தில் வரைமுறையை இழக்க எப்படி முடியும்?
"டேய் மாமா ஒழுங்கா எந்திச்சுரு. எனக்கு பிள்ளை பாக்கியமே வேணாம்னு முடிவெடுத்தேன்னா நீ மொத்தமா பஞ்சர் ஆகிடுவ பாத்துக்கோ. அப்றம் ஐயோ போச்சே அம்மா போச்சேன்னாலும் திரும்பி வராது. இந்தியாவுல சொல்லி வச்சுருக்கியே ஏதோ ரகசிய காதலி கூட எங்கையும் போ முடியலன்னு. அவ கூடயும் எங்கையுமே போக முடியாம தான் ஆக்கிடுவேன். ஒழுங்கா எந்திச்சுரு" என்றவளின் பேச்சில் இன்னுமே சிரிப்பு தான் அவனுக்கு. அவனுக்கு சரிக்கு சரியாக முரண்டு கொண்டிருந்தாள்.
வீட்டில் என்றால் இவ்வளவு முரண்டு பிடிக்க மாட்டாள், என்னவும் செய்துகொள் என விட்டுவிட்டு அவனுடன் காதல் மல்யுத்தத்தில் தான் அவளும் இருப்பாள், வெளியிடம் என்பதும் அன்று அவன் பேசியதாக அவள் அறிந்த விஷயமும் தான் அவளை இவ்வளவு முரண்டு பிடிக்க வைக்கிறது என புரிந்தே சிரித்திருந்தான்.
"கொஞ்ச நேரமாது வாய மூடுறியாடி நீ? உன் கூட குடும்பம் நடத்தாமலா இருக்கேன்? அவங்கட்ட ஏன் சொன்னேன்னு தெரிஞ்சும் திரும்ப திரும்ப பேசுற நீ?" என்க,
"எப்படினாலும் நீ அப்படி சொன்னது நிஜம் தான? அவங்கட்ட என்ன போனா போகுதுன்ற மாதிரி எப்படிலாம் சொல்லி வச்சுருக்க நீ?" என முகத்தை சுருக்கியவளை கண்டு சிரித்தான் அவன்.
"மானாவாரியா திட்றேன் பல்ல காட்ற? இங்க ஒன்னுமே நடக்கல ஆனா அங்க பாரு அந்த வெள்ளைக்காரன் நம்ம கார நக்கலா பாத்துட்டு போறான். வெளியே போ எரும. அவ்வளவு அவசரம்னா வீட்டுக்கு போய் தொலைவோம்" என்றதில் வெடித்து சிரித்து கொண்டே அவள் மேலேயே விழுந்து விட்டான். கார் கதவு திறந்திருக்க இருவர் காலும் வெளியே தான் மற்றவர் பார்வையில் படும்படி ஒன்றின் மேல் ஒன்றாக தொங்கி கொண்டிருந்தது.
"காட்சில்லா, பண்ணிமாடு எழுந்திருக்க சொன்னா மேலேயே விழுந்துட்டான்" என்றவளின் மேல் அவன் ஊர்ந்து அழுத்தம் கொடுத்து பதிந்ததில், "வீட்டுக்கு போலாம் மாமா ப்ளீஸ்" என குரல் கம்மிவிட்டது.
"இப்ப எப்படி பொறுமையா வருது வாய்ஸ்?" என்றவன் சிரித்துக் கொண்டே அவள் உதட்டிலும் பதிந்து நிமிர்ந்து சட்டையை நேராக்கி கொண்டு அவளையும் தூக்கி உட்கார வைத்து வெளியே இறங்க, நமநமவென திட்ட வரும் வாயை இழுத்து மூடிக்கொண்டதால் அது அதிவேக காற்றாக மாறி மூக்கிலும் காதிலும் வெளியே வந்து கொண்டிருந்தது.
"முன்ன போய் உட்காரு" என வெளியே நின்றே அவன் சொல்ல,
"முடியாது வரமாட்டேன் அப்படின்னு சொல்லி மறுபடியும் உனக்கு சான்ஸ் தர நா தயாரா இல்ல" என்றவள் காரினுள்ளிருந்தே முன் சீட்டிற்கு வந்து ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்து கொண்டாள்.
"மாறு வருணி. இங்க ரைட் சைட் ட்ரைவிங் உனக்கு சரிபட்டு வராது" என்றவன் பின்னால் கதவை பூட்டிவிட்டு முன்னால் வர,
"நாந்தான் ட்ரைவ் பண்ணுவேன், கூட வர்றதுனா வாங்க, இல்லனா நா இதுல போறேன் நீங்க டேக்ஸி பிடிச்சு வாங்க" என காரை சாவியை கொடுத்து திருக்கிவிட,
"எவன் மேலையாவது கொண்டு ஏத்துனனா இந்திய பிரதமர் மகள்னுலாம் பாக்க மாட்டாங்க இங்க, ஆறு மாசம் கம்பி தான் சொல்லிட்டேன்"
"அது என்னோட எங்க அப்பாவோட பிரச்சினை நீ கவலைப்பட தேவையில்லை"
பட்டென்று அவள் தலையில் அடித்தவன், "ஓட்டி தொலை" என தனக்கான இருக்கை பெல்ட்டை மாட்டிக்கொண்டு சாய்ந்து அமர்ந்தான். அவளுக்கு கார் ஓட்ட தெரியும், சர்வதேச உரிமம் எடுத்தும் வைத்துள்ளாள் என்றும் தெரியும். ஆனால் இங்கு வந்த இந்த ஆறு மாதத்தில் வண்டியை ஓட்ட எடுப்பது இதுவே முதல் முறை. அதற்காகவே எச்சரிக்கை செய்தான். கேட்கும் ரகமா அவன் மனைவி! அதுதான் அவள் போக்கில் விட்டுவிட்டான்.
ஆனால் அதுவும் அவளுக்கு பொறுமையை தரவில்லை. அவனை ஓரக்கண்ணால் பார்த்துக்கொண்டே தான் காரை செலுத்தினாள். வளைவில் வேகம் எடுப்பதும், திடீரென்று நிறுத்தத்தை மிதிப்பதும், முன் செல்லும் வாகனத்தை இடித்துக்கொண்டு முந்துவது போல போவதும், இன்டிகேட்டர் போடாமல் வளைந்துவிட்டு, சாரி என்பதும். ஆளே இல்லாத இடங்களில் ஒலிப்பானை விடாமல் அழுத்துவதுமாக தான் வந்தாள்.
அவனுக்கு தெரிந்தே இருந்தது, தன்னை பேச வைத்து அதற்கு பதிலாக அவள் நான்கு பக்கம் பேச வேண்டும் என்பதற்காக தான் அனைத்தும் செய்கிறாள் என்று, அதனால் ரோட்டை பார்த்த பார்வையை திருப்பாமல் நல்லபிள்ளையாக வந்தான் அவன்.
திடீரென வழியில் வந்த ஒரு உணவகத்தில் கொண்டு காரை நிறுத்தி விட்டு, "எனக்கு பசிக்குது சாப்பிடணும்" என இறங்கிச் சென்றுவிட்டாள். இவன் இறங்கவில்லை. வெளியே பார்க்க நன்கு இருட்டி இருந்தது. இரவு உணவிற்கான நேரம் தான் என நேரத்தையும் பார்த்தவன் பாட்டை ஒலிக்க விட்டுவிட்டு சாய்ந்து கண்களை மூடி அமர்ந்து கொண்டான்.
வேகமாக இறங்கிச் சென்றவள், உள்ளே சென்று ஆர்டரும் கொடுத்து விட்டு அமர்ந்து விட்டாள், ஆனால் நேரம் செல்ல செல்லவே அவன் வரமாட்டான் என தெரிந்தது. என்ன ஆனாலும் மூன்று வேளை உணவும் இருவரும் சேர்ந்து உண்பது தான் வழக்கம். அடித்தாலும் பிடித்தாலும், அவன் எது உண்டாலும் அதில் ஒரு வாய் அவளுக்கு கொடுக்காமல் உண்டதில்லை. அவள் தான் இஷ்டம் வந்தால் கொடுப்பாள் கடுப்பிலிருந்தாள் என்றால் அவனுக்கானதையும் சேர்த்து உண்டுவிடுவாள்.
அவள் பின்னவே வந்திருந்தால் நிச்சயம் கொஞ்சம் அலட்சியம் காண்பித்திருப்பாள், அவன் இப்படி வராததும் கடுப்பாக இருக்க, "இந்த மலகுரங்க கட்டிட்டு படாத பாடு தான் படுறேன் நானு. ஒரு மாத்திரை ஒரே மாத்திரைல வேலை முடிஞ்சுருக்கும் அதை செய்யாம வேணும் வேணும்னு கட்டுனேன்ல எனக்கு கண்டிப்பா இது வேணும் தான்" என புலம்பி கொண்டிருக்க, சாப்பாடு வந்திருந்தது.
வாசலில் நின்ற காரையும் அதில் கண்ணை திறக்காமல் சயனித்திருந்தவனையும், கண் முன்னிருந்த ஆவி பறந்த சாப்பாடையும் மாற்றி மாற்றி பார்த்தாள், பின் கடுப்புடன் எழுந்து விறுவிறுவென செல்ல, "மேம் யுவர் ஃபுட்" என்றான் பணியாள் வேகமாக.
"இருய்யா என் ஆள கூட்டிட்டு வந்துடுறேன். விட்டுட்டும் சாப்பிட முடியல, கூட்டிட்டு வந்து மடில வச்சுக்கவும் எரிச்சலா இருக்கு. இதெல்லாம் அந்த நோயோட அறிகுறி தான். ச்சை" என கடுப்பாக சென்று கதவை திறக்க,
"மனச மடிச்சி நீ தான், உன் இடுப்பில் சொருகுற, உதட்ட கடிச்சி நீ தான் என் உசுப்பு ஏத்துற"
காரையே நிறைத்தவாறு பாட்டு அலறிக்கொண்டிருக்க, கண்ணை மூடி இருந்து அதற்கு பின் பாட்டு பாடிக்கொண்டிருந்தவனை அனலை கக்கும் பார்வை பார்த்தவள், வேகமாக பாட்டை நிறுத்தினாள்.
ஒரு கண்ணை மட்டும் திறந்து பார்த்தவன், "என்னடி?" என பாட்டை மீண்டும் ஓடவிட, அவள் மறுபடியும் நிறுத்தினாள்.
"ம்ச் வருணி!" என்றான் அதட்டலாக.
"ஒருத்தி சாப்பிட வானுட்டு போனாளே, போய் பிடிச்சத வாங்கி குடுப்போம்னு இல்லாம கண்ண மூடி சயனத்துல இருந்து பாட்டு வேற கேக்குற?"
"நா படுத்திட்டும் கேட்பேன் சீட்ல ஏறி நின்னுட்டும் கேட்பேன்டி. வான்னு கூப்பிட்டேன் வாய் கூசாம பொய் பேசுறவலாம் என்ன பேசுறதுக்கு ரைட்ஸ் கிடையாது"
"கூப்பிட்டா தான் வருவியோ? பொண்டாட்டி போனா எழுந்து வரணும்னு தெரியாதா?"
"ஏன் நின்னு வாங்க மாமான்னு கூட்டிட்டு போனா உனக்குத் தெரியாதா?"
"மொத ட்ரென்ட்ல இருக்க பாட்ட கேளு, அப்பதான் எனக்கு மேட்சா இருக்க முடியும், கரென்ட்ல இருக்க பாய்ஸ் கேர்ள்ஸ் ரிலேஷன்ஷிப் தெரியும். இல்லனா இப்படி தான் தாத்தா மாதிரி பேசிட்ருப்ப. எங்கப்பா கூட இப்ப சண்டைல தான இருக்க, ஆனா அவர் ப்ளே லிஸ்ட்ட கேக்குற வெக்கமா இல்ல?"
"ஹே நிறுத்து மொதல்ல, லபோ திபோன்னு கத்துவா உடனே. இந்த பாட்டு எஸ்பிபி சார் பாட்டு யாருவேணா கேட்கலாம். உங்கப்பா பாட்டாம்ல? எழுதியா குடுத்துட்டாங்க உங்கப்பாக்குன்னு? போடி ரசனை இல்லாதவலாம் ட்ரென்ட்ட பத்தி பேச வந்துட்டா" என்றவன் மீண்டும் போட, அதை நிறுத்தி அவன் கையை பிடித்து வெளியே இழுத்து விட்டவள், கார் சாவியால் காரை பூட்டிவிட்டு, அவன் கையையும் இழுத்து கொண்டு உள்ளே நடந்தாள்.
"மொத பெரிய இவளாட்டம் போன? இப்ப மட்டும் என்னடி? எல்லாத்தையும் நினைச்சு நினைச்சு செய்யிறது"
"மொத வளவளன்னு இப்படி பேசுறத நிறுத்து. டாக்டர் தான நீ? அப்படி நடந்துக்கோ" என்றவளை, பாவமே பார்க்காமல் இரண்டு கொட்டு வைத்துவிட்டு தான் அவள் எதிரில் அமர்ந்தான்.
அதன்பின் நிமிர்ந்தே பார்க்காமல் உண்டு கொண்டிருந்தவளை கண்டு, "உனக்கு வருணின்னு பேரு வச்சுதுக்கு பதிலா அரவை மிஷின்னு வச்சுருக்கலாம் உன் அப்பா" என்றவனின் பேச்சில் மீண்டும் முறைத்து,
"எப்டி முடியுது மாமா உன்னால? மாமா மாமான்னு அவர் பின்ன தான சுத்திட்டு திரிஞ்ச இப்ப இப்படி பேச எப்படி முடியுது?" என இன்னும் கண்ணை சுருக்கி முறைக்க,
"மாமா மாமான்னு பாசமா நா இருந்தேன், அவர் இருந்தாரா? பொண்ணு தான்னு கேட்டப்ப குடுக்க முடியாதுன்னுட்டாரே அத்தோட போச்சு அந்த பாசம் பாயாசமெல்லாம்"
"அது நீயாவா கேட்ட? நா உன்ன கல்யாணம் பண்ணிக்க கேட்டேன்னு நீ கேட்ட, ஏதோ நீயா கேட்டு அவர் மறுத்த மாதிரி இவ்வளவு சீன் தேவையில்ல ஓகே?"
"எப்டினாலும் அவர்ட்ட நா கேட்டேன்ல ஏன் மறுத்தாரு அவரு? அவரோட அரைவேக்காடு பொண்ணுக்கு என்ன விட நல்ல மாப்பிள்ளை க்யூல நிக்றான்னு பேசுறாரு? உன்னையலாம் என்ன தவிர யாராலயாது மேய்க்க முடியுமாடி? நீயே நியாயமா சொல்லு" என கேட்டவனை, கையிலிருந்த ஃபோர்க்கால் குத்த வர, தடுத்து தன் கைக்குள் மாற்றிக் கொண்டான்.
"சரிரிரி" என பல்லை கடித்து முள்கரண்டியை திரும்ப வாங்கியவள், "அதான் அந்த கோவத்தை ஆறுமாசமா என்கூட பிடிக்காம குடும்ப நடத்துற மாதிரி காண்பிச்சு வெறுப்பேத்திட்ருக்கல்ல? இன்னமு எதுக்கு அந்த ட்ராமா? எங்க அப்பா இப்ப டிவோர்ஸ் பண்ண சொல்றாரு"
"ஓ! டிவோர்ஸ் வேற பண்ண சொல்லுறாரா?"
"டேய் லூசு மாமா. நீ பிடிக்காத மாதிரி பேசுவ, இங்க உனக்கு கள்ள காதலி இருக்கா அவ கூட டேஷ் பண்ண முடியலன்னு சொல்லுவ, அவர் எல்லாத்தையும் கேட்டுட்டு என் பொண்ணுக்கு வாழ்க்க குடுங்க மாப்ளன்னு உன்ட்ட கெஞ்சணுமோ?"
"ஆமா குடுக்க மாட்டேன்னு வேகமா சொல்ல வந்ததுல? அதேமாதிரி இப்ப பொண்ணுக்கு வாழ்க்கை குடு யாஷ்னும் வேகமா கேட்க வரணும்ல? பொண்ணு மேலயும் அக்கரை இல்ல பையன் மாதிரி வளர்த்த இந்த மருமகன் மேலயும் பாசமில்லையே?"
"உன்ன பத்தி அவருக்கு நல்லா தெரியும்டா மாமா. அதான் உன் நோஸ கட் பண்ற மாதிரி என்னைய டிவோர்ஸ் பண்ண சொல்றாரு. எங்கப்பாவ என்னன்னு நினைச்ச உன்ன மாதிரி எத்தன பேர பாத்திருப்பாரு?"
"ரொம்ப பேசாதடி. உன்னையும் அவரையும் சேர்த்து அலற விடல நா அந்த ஆரோன் மருமகன் யாஷ் இல்ல. அவர இன்னும் கெஞ்ச விடுறேனா இல்லையான்னு பாரு" என்றவனிடம் நிச்சயம் உண்மையான ஆவேசம் இல்லை. ஆனால் அதை உணராமல் பேசிக் கொண்டிருந்தாள் வருணி.
"அவ்வளவு ரோஷம் இருக்குன்னா அதுக்கு நீ அவர் பொண்ண அவர் பொண்ணாவே இருக்க விட்ருக்கணும் மாமா"
"உன்ன எவன்டி என் பின்னயே கிளம்பி வந்து உசுப்பேத்த சொன்னது?"
"நம்பி தொலைச்சுட்டேன். அந்த ப்யூலா பெத்த மகன் அந்த அத்தைய மாதிரியே இருந்துருவ என்னைய தங்கமா தாங்கிருவன்னு நம்பி வந்தேன். நீ பேஸ்கட் பால் விளையாடுற என் ஃபேட் அப்டி" என பேசியவளை கண்டுகொள்ளவில்லை அவன்.
"சீக்கிரம் சாப்பிட்டு வா. இன்னும் ஒன் அவர் போகணும். இனி இப்படிலாம் கிளம்பி வந்தனா, நிஜமா இந்தியாவிற்கு தான் பார்சல் பண்ணிடுவேன் சொல்லிட்டேன்" என்றவன் அவன் தட்டில் கடைசியாக இருந்த பாஸ்தாவை ஒரே கரண்டியில் எடுத்து அவள் வாயில் திணித்து விட்டு ட்ஷுயூவால் கையையும் வாயையும் துடைத்து கொண்டான்.
"ஒரு நோய்வாய்ப்பட்டவட்ட பேசுற மாதிரியா பேசுற நீ? சாக போறவன்ற பாசம் கூட இல்லையே உன்ட்ட? என்ன டாக்டர் இல்ல என்ன புருஷன் நீ எல்லாம்?"
"இப்படியே உளறிட்டிருந்தன்னா நானே உன் கழுத்த நெறிச்சு கொன்றுவேன். பேசாம எந்துச்சு வந்துரு" என்றவன் முதலில் எழுந்து சென்று விட்டான்.
"ஹப்பா இப்பதான் நிம்மதியா இருக்கு. கொஞ்சம் பாசம் இருக்கு. அதான் நா சாக போற விஷயத்த பத்தி பேசுனதும் எந்துச்சு போய்ட்டாங்க. பாசம்லாம் இருக்கு ஆனா அத துக்ளியோண்டு காண்பிச்சா அவங்க கௌரவம் குறைஞ்சுடும் போல" என இப்போது மொத்த கோபமும் வடிந்து நிம்மதியாக சாப்பிட்டு முடித்து கட்டணத்தையும் செலுத்திவிட்டு வெளியே வந்தாள்.
இப்படி தான் பொழுது விடிந்து ஆரம்பிக்கும் சண்டையை பொழுது சாய முடித்துக்கொண்டு கட்டிபிடித்து தூங்கிவிடுவர். இடையில் இந்தியாவில் இருப்பவர்களையும் ஆளுக்கொரு விதமாக பேசி குழப்பிவிட்டுவிடுவர். மொத்தத்தில் அக்மார்க் கணவன் மனைவியாக வாழ்ந்து கொண்டிருந்தனர்.
அதன்பின் வெகு சாதாரணமாக வீடு வந்து உறங்கி, மறுநாள் பரபரப்போடு மருத்துவமனையும் கிளம்பிவிட்டனர். யாஷ் அங்கு வேலையில் இருக்கும் அறுவை சிகிச்சை நிபுணர்களில் ஒருவன். அவ்வப்போது பயிற்சி பெற வரும் இளைய மருத்துவர்களுக்கு பாடமும் எடுப்பான். அது மொத்தமும் அவன் கட்டுப்பாட்டில் இருந்தது.
அன்றும் ஒரு குழந்தைக்கான அறுவை சிகிச்சை இருக்க, அதற்கு தயாராகி கொண்டிருந்தவனிடம், "டாக்டர் எல்லாம் ரெடி" என வந்து நின்றார் செவிலி.
"போய் தேர்ட் ஃப்ளோர்ல இருக்குற வார்ட் செக்ஷ்ன் கன்ட்ரோல் ட்யூட்டி டாக்டர் வருணிய ஆப்ரேஷன் அசிஸ்ட் சப்ஸ்ட்டியூட்டுன்னு சொல்லி கூட்டிட்டு வந்திடுங்க" என ஆங்கிலத்தில் சொல்லி அவரை அனுப்பி விட்டு இவன் அறுவை சிகிச்சைக்கான உடையை அணிந்து கொண்டு வெளியே வந்தான்.
அவன் இரண்டாம் மாடி ஏறி வந்திருக்க, அந்நேரம் மூன்றாம் மாடியிலிருந்து, "டாக்டர்!" என அறக்கபறக்க ஓடிவந்து அவனுடன் நடந்தவள், "என்னையா கூப்டீங்க?" என்க,
"எஸ் நீங்க தான வருணிக்ஷா?"
"ம்ச் நீங்க ஆப்ரேஷன் பண்றதுக்கு நா எதுக்கு?"
"சாக போறேன் சாக போறேன்னு சொல்றவ ஒரு ப்ளட் டெஸ்ட் எடுக்க பயப்படுறல்ல? உள்ள வந்து பாரு எவ்வளவு சின்ன பையன் ஆபரேஷனுக்கு ரெடின்னு தைரியமா வந்து படுத்துருக்கான்னு" என்றவன் அறுவை சிகிச்சைக்கான அறைக்குள் நுழைய, 'அடேங்கப்பா!' என்றவள் சாதாரணமாக தோளை குலுக்கிக் கொண்டு மெல்ல கதவை திறந்து தானும் உள்ளே நுழைந்தாள் வருணி.
பத்து வயது பையன் கால் முட்டியில் சதை வளர்ச்சி காரணமாக அதை அறுவை சிகிச்சையில் அகற்றி கொள்ள வந்திருப்பது அங்கு நடந்த பேச்சுவார்த்தையில் அவளுக்கு புரிந்தது.
அவளிடம் எந்த வேலையும் யாஷ் கொடுக்க முயலவில்லை, அவன் போக்கில் அந்த சிறுவனிடம் பேசிக் கொண்டே சிகிச்சையில் தான் கவனமாக இருந்தான். பார்த்தது பார்த்தபடி அமைதியாக நின்றிருந்தாள் வருணி. அவளுக்கு இதுவரை லைசன்ஸ் கிடையாது அதனால் இதுபோன்ற பரிசோதனைகளை அவளை வைத்து அவன் அங்கு செய்தது கிடையாது.
ஆனால் வருணி மருத்துவராக கிட்டத்தட்ட ஏழு ஆண்டுகளாக அந்த சூழலில் இருப்பவள். அவளுக்கு மற்றவர்களுக்கு ஊசி போடவோ, அவசர சிகிச்சை அளிக்கவோ கூட பயம் தயக்கம் இருந்ததில்லை. அதனால் அந்த சிறுவனுக்கு நடக்கும் சிகிச்சையை சாதாரணமாக பார்க்க முடிந்தது. அவளுக்கு அவளை பரிசோதனை செய்து கொள்ள மட்டுமே பயம்.
தன்னுடலின் பிரச்சினை என்று வருகையில், எதுவுமே தெரியாதவர்கள் அந்த விஷயத்தை அனுக யோசிக்க மாட்டார்கள், சரி செய்ய மட்டுமே முயல்வர். ஆனால் எல்லாம் தெரிந்தவர்கள் அதும் தனக்கு என்று வருகையில் அதைப்பற்றி அதிகமாக யோசித்து குழப்பி கொள்வர். இங்கும் வருணி அப்படி தான் இருந்தாள். அவளுக்கு மருத்துவத்துறை அத்துப்படி அதனாலேயே சுய பரிசோதனை செய்ய அவ்வளவு பயம். தனக்குள் ஏதோ பிரச்சினை இருக்கிறது என தெரிந்தும் அதை ஆராயவே பயந்து ஒதுக்கி நாட்களை கடத்திக் கொண்டு வருகிறாள்.
"குட் இட்ஸ் கம்ப்ளீட்டட். ரெஸ்ட் எடுங்க நா ஈவ்னிங் வந்து பார்க்கறேன்" என அந்த பையனிடம் சொல்லியவன், "ரூமுக்கு ஷிப்ட் பண்ணிடுங்க. அவங்க பேரன்ட்ஸ என்ன மீட் பண்ண வர சொல்லுங்க" என செவிலியரிடம் சொல்லி வெளி வர, கூடவே வந்தவள் அவன் அறைக்குள்ளும் வந்து அவன் கை கால் கழுவி வேறு உடைக்கு மாறி வரும் வரை வேடிக்கை பார்த்து நின்றாள்.
"என்ன பண்ண போறீங்க வருணி?"
"நல்லா பார்த்துட்டேன் டாக்டர். சர்ஜரி ஈசி தான் பண்ணிடலாம்"
"நா உங்கள டெஸ்ட் பண்றத பத்தி கேட்டேன்?"
"அதான் நல்லா பண்றீங்களே வீட்ல?"
"மைண்ட் யுவர் வேர்ட்ஸ் வருணி!" என அதட்ட,
"ம்க்கும்!" என்றாள் வாயை சுழித்து காண்பித்து.
"நீயா பண்றியா இல்ல உன் அப்பாட்ட இதான் பிரச்சினைன்னு சொல்லிடட்டுமா?"
"சாகுற நாள் தெரியாம நிம்மதியா இருந்துட்டு போகணும்னு நினைக்கிறேன். அத சொல்லி தினம் தினம் என்ன சாகடிக்கலாம்னு ப்ளான் பண்றியா நீ? இனி அதுஇதுன்னு சொல்லி பயமுறுத்துன? என்னை யாரும் தேட வேண்டாம்னு லெட்டர் எழுதி வச்சுட்டா ஓடி போயிடுவேன் பாத்துக்கோ" என மிரட்டி விட்டு வெளியேறிவிட்டாள்.
"பிள்ளைய பாரு. இவளாம் டாக்டருக்கு படிக்கலன்னு எவன் அழுதான்? இருக்கவன் உசுரெலாம் இவ வாங்கிட்டு இவள சாகடிக்க நா ப்ளான் பண்றேனாம். மூளை இல்லாம வளர்த்த என் மாமாவ சொல்லணும்" என தலையில் தட்டி கொண்டவன், அந்த சிறுவனுக்கான மருத்துவ அறிக்கை எழுதுவதில் மும்மரமானான்.