அதே நேரம் ஆதவ்...
“சாத்வி, ஆர் யூ...”
“ஓகே, ஓகே அத்தான். நான் நல்லா இருக்கேன்.”
ஆத்விக்கோ..
“எதுவும்னா சொல்லுமா. உடனே ஹாஸ்பிடலுக்கு போயிடலாம்மா. ஏதாச்சு எசகு பிசகு ஆச்சுன்னு வச்சுக்கோ, ரிங்ல பாக்ஸிங் விளையாடுறவன், வெளியே வந்து கதகளி ஆடத் தொடங்கிடுவான்.”
சன்னமான சரிப்போடு...
“சரிங்க அத்தான்.”
ஆத்விக்கும் அதே மாறா புன்னகையோடு அமர்ந்திருக்க, நர்மதாவும், ராகவியும் ஒருவரை ஒருவர் பார்த்து, தலையை ஆட்டிக் கொண்டு சாத்விகா புறம் திரும்ப...
“என்ன அக்கா, அப்படி பார்க்கிறீங்க?”
“இல்ல தங்கமே! இந்த கொழுந்தோட சேர்ந்து, சேர்ந்து நீயும் அப்பப்ப அவன மாதிரி மாறிருற.”
“ஏன் அண்ணி? என் தம்பிக்கு என்ன குறைச்சல்?”
“ம்ச்.. அந்த தாடி மீசைகுள்ள மூஞ்சி தான் கொஞ்சம் குறைச்சலா தெரியுது. அது சரி, நீ மட்டும் தானா, இல்ல.. உன் குடும்பமே இப்படியாடா ஆதவா!”
“உங்களுக்கு தில்லு ஜாஸ்தி தான். அண்ணனை பக்கத்துல வச்சுக்கிட்டே பேசுறீங்களே.”
கணவனை நக்கலாகப் பார்த்தவள்...
“உங்க அண்ணன் கிடக்குறாரு, பட்டர் பிஸ்கட்!”
ஆத்விக் புன்னகையோடு மனைவியை பார்த்துக் கொண்டிருக்க, ராகவியோ ஆதவ்விடம்.
“நீ நியூராலஜிஸ்ட். உன் பொண்டாட்டி அனஸ்தீஷியனா இருக்கா, நான் சாதாரண பல்லு புடுங்குற டாக்டர்டா! என்னை ஏன்..டா குண்டா தூக்கிட்டு வந்து அண்ணனும், தம்பியும் இங்க உக்கார வச்சிருக்கீங்க.”
“இட்ஸ் ஆல் ஃபேட் அக்கா. அக்கண்யன் குடும்பத்தில் வாக்கப்பட்டா, அப்படியே துடைச்சு கிட்டு போயிறணும்.”
என்ற இரட்டையர்களான அர்ஜுன், அஜெய் கிண்டலில், ராகவி வாய்விட்டு சிரிக்க,
சாத்விகாவின் முதுகுத் தண்டில் “பளீர்” என ஒரு வலி தோன்றி மறைந்தது. அதில் அருகில் அமர்ந்திருந்த ராகவியின் கையை அவள் இறுக்கிப் பற்றி விடுவிக்கவும்,
அவளைக் கவனித்த ராகவி.
“தங்கமே! என்ன செய்து.”
“ஒன்னும் இல்ல, அக்கா.”
“உண்மையச் சொல்லு! அடி வாங்கப் போற. இப்போ என் கையை இறுக்கி புடிச்ச. அதுலயே உனக்கு வலிக்குதுனு எனக்கு புரியுது. பெயின் வந்திருச்சா.”
“அக்கா கத்தாதிங்க, ப்ளீஸ்.”
“ம்ச்.. உன்ன, நர்மதா கொஞ்சம் தண்ணி கொடு.”
நீரை வாங்கிக் கொடுக்க...
“சாத்விமா! தங்கப் புள்ளல. உண்மைய சொல்லு, என்னடா பண்ணுது. அத்தையே கூப்பிடட்டுமா?”
“ப்ளீஸ் நர்மி அக்கா.. கொஞ்ச நேரம் கூப்பிடாம இருங்களேன். இது அவரோட கனவு. அவரோட இத்தனை வருஷ உழைப்பு. நொடியில் கானல் ஆகிறக் கூடாது.”
சர்வேஷ் இவள் புறம் திரும்பவும், பட்டென்று முகத்தை மலர்வாக மாற்றிக் கொண்டாள். பிள்ளைப் பேற்றின் வலியை நன்கு அறிந்த அந்த இரண்டு பெண்களும், பிரமித்து விட்டனர். என்ன மாதிரியான காதல். இருவரும் அவளுக்கு இரு புறம் துணையாக அமர்ந்திருக்க..
முகத்தில் சிறு, சிறு காயங்களும் அதில் இரத்த கசிவுகளுமாக சண்டையிட்டுக் கொண்டிருந்த சர்வேஷ், கையை முகத்தை மறைத்தது போல் வைத்துக் கொண்டு, இறுதி நிமிடங்களுக்கு தயாராகினான். அனௌன்சரோ..
“தி லாஸ்ட் மினிட்ஸ்!
60 செகண்ட்ல தி பெஸ்ட் கெளன் மஹாபாவை(Kellan Mahaba) தொடர்ந்து, நாலு முறை யூஎஃப் சாம்பியனா டைட்டில் வின் செய்த, தி கிரேட் சேம்பியன் சர்வேஷ் அக்கண்யன் மூன்று முறை முகத்தில் பஞ்ச் செய்தால், ஐந்தாவது முறையாக தி கிரேட் சாம்பியன் சர்வேஷ் அக்கண்யன், மீண்டும் யூஎஃப் சாம்பியன்ஷிப்பை வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு இருக்கிறது.
நம் ஆதர்ஷ நாயகன் சர்வேஷ் அக்கண்யன் கெளன் மஹாபாவை எதிர்த்து தொடர்ந்து ஜந்தாவது முறையும் வெற்றி பெறுவாரா?”
என்னும் போதே, முதல் இரண்டு பஞ்சுகளை எதிரில் இருந்த தென்னாப்பிரிக்கா வீரன் கெளன் மஹாபாக்கு கொடுத்தான், சர்வேஷ். மூன்றாவது பஞ்சை கொடுக்க, சற்றே திணறவே செய்தான். காரணம், அவன் சர்வேஷை விட 0.8 இன்ச் அதிக உயரத்தில் இருந்த காரணத்தால், அவனை தாக்குவது ஒன்றும் அத்தனை சாத்தியமானதாக இருக்கவில்லை. அறுபது வினாடிகளில் 50 வினாடிகள் கடந்து விட்ட நிலையில், மீதம் 10 வினாடிகளில் ஒரு பஞ்சை அவன் கொடுக்கவில்லை என்றால், அவன் கனவு பலிக்காது எனும் போதே, இங்கு சாத்விக்கு முதுகுத்தண்டில் மீண்டும் “சுளீர்!” என ஒரு மின்னல் வெட்டு கிளம்ப...
“சர்வேஷ் பஞ்ச்! சர்வேஷ் பஞ்ச்! வீட் நீட் ஒன் பஞ்ச்!”
ரசிகர்கள் உற்சாகக் கூச்சலிட, அவன் விழிகள் நொடியில் மனைவியை நோக்கவும், அவன் மனைவியோ விழிகளை மூடித் திறந்து சம்மதம் கொடுக்க, தன்னை நோக்கி நீண்ட சவுத் ஆப்பிரிக்கா வீரனின் கரத்தை இடக்கையில் தடுத்தவன், கடைசி மூன்று வினாடிகளில் அவனின் முகம் நோக்கி பஞ்ச் கொடுக்க, சர்வேஷ் வலக் கையை வீசவே, அது அழகாக அவன் முகத்தை தொட்டுச் செல்லவும், வெற்றிக்கனியை சர்வேஷ் தட்டிப் பறித்தான்.
அந்த கணம், அரங்கமே “சர்வேஷ்! சர்வேஷ்!” என கோஷம் எழுப்ப, மீண்டும் முதுகெலும்பில் “சுளிர்” என ஒரு வலி தோன்றவும்.
“ஆஆ.. அம்மா..” சாத்வி லேசாக சத்தத்தில் முனங்கவே, குடும்பமே அவளைச் சூழ்ந்து கொண்டது. அவர்களை தடுத்தவள்...
“அகிப்பா! ஸ்.. ஆ...”
“ஹாப்பிடல் போயிரலாம்டா.”
“வேணம் அகிப்பா! எனக்காக. ப்ளீஸ் அவருக்காக, கொஞ்ச நேரம் அமைதியா இருங்களேன். இந்த வெற்றி மூமென்ட்ட அவர் முழுசா கொண்டாடிடட்டுமே. இல்லனா.. அவர் த்ரோபி வாங்குவதை, இந்த உலகம் பார்க்காமல் போய்விடும்.”
“சாத்விமா, உனக்கு வலி வந்துருச்சு.”
“ப்ளீஸ் அகிப்பா. என் பசங்க அவங்க அப்பா மாதிரியே. அவங்க அப்பா வின் பண்றத பார்க்காம வெளிய வர மாட்டாங்க. சர்வேஷ் அக்கண்யன்யனோட ரத்தம், அவருக்குக் கொஞ்சமும் குறைந்தது இல்லையே!”
அவள் கண்களில் மித மிஞ்சிய கர்வம். குடும்பமே, அவர்கள் காதலில் மெய்மறந்து போனது. சாத்வியை தாங்கிப் பிடித்து பக்குவமாக மீண்டும் அமர வைக்கவே,
சர்வேஷூம் அவளை திரும்பிப் பார்த்தான். அதில் முகத்தில் வலியை காட்டாது பிடிவாதமாக அமர்ந்துக் கொண்டாள்.
அதே நேரம், அவன் கைகளில் வெற்றி கோப்பையும், கழுத்தில் அவன் நான்கு தங்க மெடலுடன் இந்த ஐந்தாவது தங்க மெடலும் போடப்பட்டு, அவன் மற்ற கையில் மைக்கை கொடுக்கவும்.
“லேடிஸ் அண்ட் ஜெண்டில்மேன்!”
“சர்வேஷ்! சர்வேஷ்! சர்வேஷ்!”
கோஷம் எழுப்ப, அனைவரையும் பார்த்து மென்முறுவல் பூத்தவன்...
“உங்களோட அன்புக்கு நன்றி. இந்த சப்போர்ட்டுக்கு ஒரு லவ் யூ!”
தன் கழுத்தில் இருந்த ஐந்து தங்க மெடல்களையும் கழட்டி கையில் வைத்துக் கொண்டவன், அனைவருக்கும் தூக்கிக் காட்டி விட்டு.
“இதில் என்னுடைய அஞ்சு தங்கப்பதக்கமும் இருக்கு. இந்த அஞ்சையும் நான் வாங்கக் காரணம் உங்கள் எல்லோருடைய சப்போர்ட்.”
என்றவன் மனைவி புறம் திரும்பி ஒற்றை காலை முட்டி போட்டு அவளை நோக்கி அந்த மெடல்களை தூக்கிப் பிடிக்க, பிடரி முடி சிலிர்க்க வேட்டையாடிய சிங்கம் ஒன்று, திடீரென ஒரு பொன்மான் முன்னே மண்டியிட்டது போல், அவன் மண்டியிட்ட தோற்றம் அத்தனை ரம்யமாக இருக்க..
அரங்கமே.
“வாவ்! ஓஓஓ..” ஆரவாரத்தோடு கத்தவும்,
அத்தனை வலியிலும் அவள் முகம் செங்கொழுந்தாகச் சிவந்தது. அதை ரசனையாகப் பார்த்தவன்.
“மொத்தம் மூன்று மெடலும், நான் வாங்க நீங்க எல்லோரும் காரணம். இந்த கடைசி ரெண்டும் என் மண்டோதரி! உனக்காக, உனக்காக மட்டும்.”
சர்வேஷ் மனைவியின் முகத்தை ஆழப் பார்த்து...
“கண்டிப்பாக, ஐ லவ் யூனு ப்ரபோஸ் பண்ண மாட்டேன்.”
“பண்ண வேண்டாம்.”
அவள் மெதுவாக இதழ் அசைக்க...
“எஸ், எப்பவும் பண்ண மாட்டேன். என் காதல அந்த மூனு வார்த்தை சொல்லிராது. இந்த சர்வேஷோட காதலுக்கு முன்னால், அந்த மூன்று வார்த்தை நத்திங்.”
அன்று அவள் கூறியதை பல மடங்கு கர்வத்தோடு அவன் கூற.
“போயா!”
அவள் இதழ்கள் அசைந்தது. அவனோ புன் முறுவலோடு....
“உனக்காக ஒன்னு, உனக்கே உனக்காக மட்டும் ஒன்னு.” என்றவன் நிறுத்தி.
“இதுதான் என்னோட லாஸ்ட் யூஎஃப் சாம்பியன்ஷிப் மேச்.”
“ஓஓஓஓ.. நோ!”
அரங்கமே சோகமாகிவிட, அவன் குடும்பம் அவனைப் புரியாமல் பார்க்கவே, சாத்வியின் முகத்தில் மின்னல் தெறித்தது.
அதை விழிகளுக்குள் சந்தோஷமாக வாங்கியவன்,
“எஸ்! இனி நான் யூ எஃப் சாம்பியன்ஷிப் விளையாட மாட்டேன்.”
“நோ சர்வா! நோ! நோ! நோ!” ரசிகர்களின் கூச்சலுக்கு.
“இந்த அன்புக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் போதாது. பட்.. நான் விளையாட மாட்டேன்னு சொல்லும் போது, என் மனைவியோட கண்களில் தெறிச்ச மின்னலுக்காக, இதை விடலாம்னு, டீப்பா தோணுது.”
அப்போதே அவர்கள் அனைவருக்கும் புரிந்தது, இது மனைவிக்கானது என்று.
குடும்பத்தினர் அனைவரும் பெருமையோடு பார்த்துக் கொண்டிருக்க...
“என்னோட வைஃப் சாத்விகா சர்வேஷ்! என் குழந்தைகளோட அம்மா. எங்க அம்மா அப்பாவுக்கு செல்லப் பொண்ணு. என்னோட குடும்பத்துக்கு செல்லமான மருமகள். பட்.. எனக்கு, எவர் அண்ட் எவர், என் காதல் மனைவி. அவளுக்காக மட்டும் இது.”
“நோ.. ஓ..ஓ... சர்வேஷ்!”
மீண்டும் ரசிகர்கள் கூச்சலிடவும். அவர்களை பார்த்து ஆறுதலான புன்னகை புரிந்தவன்.
“என் மனைவிக்கு, எனக்குப் பிடித்ததை நான் செய்வதில் மகிழ்ச்சி தான். ஆனால், நான் வலிக்க அடி வாங்குறதும், என் உடம்பில் காயங்களை வாங்கிக் கொள்வதும், அவளுக்கு ரொம்ப வலிக்கும். ஆனால், அந்த வலியை அவள் காட்டிட்டா, எனக்கு வலிக்குங்கறதுக்காக அவ காட்டிக் கொள்ள மாட்டா. எனக்கு அவளுக்கு வலிக்கிறது பிடிக்காது. பட்.. என் மனைவியை நான் வலிக்க வைக்கிற சந்தர்ப்பங்களும் உண்டு.”
மனைவியை மோகன புன்னகையோடு பார்க்க, அவள் முகம் நாணிச் சிவந்தது. அதில் மீண்டும் ரசிகர்கள் உற்சாகக் கூச்சலிட.
“நோ! அது எங்க ரெண்டு பேருக்கும் வெரி பர்சனல்.”
ரசிகர்களை நோக்கிக் கண்ணடித்தவன்...
“பட் யூஎஃப் சாம்பியன்ஸ் மேட்சுக்கு நான் கோச் பண்ணுவேன். அவங்களுக்கு கோச்சா, இனி மேச்சஸ்ல என்னைப் பார்க்கலாம்.”
அவன் விலகியதில் வருந்தியவர்களின் மனம் குளிர்ந்தது. மனைவி புறம் திரும்பி மீண்டும்.
“ப்ரபோஸ் எல்லாம் பண்ணத் தெரியாதுடி. இந்த ரோஸ் கொடுத்து ஐ லவ் யூ சொல்ல முடியாதுடி. இதுதான் என்னோட லவ். லவ்வ வேற எப்படியும் சொல்ல முடியாது. லைஃப் லாங் என்னை வலிக்க வைக்கிறியா?” என்றவன் மனைவியைப் பார்க்க,