எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

அவனோடு இனி நானா 7

Lufa Novels

Moderator
அன்று ராகவேந்திரா இல்லம் முழுவதும் விழாக்கோலமாக இருந்தது. வீடு முழுவதும் வண்ண மலர்களால் அலங்கரித்து, சீரியல் விளங்குகளால் ஜொலித்து, வீடு முழுவதும் உறவினர்களால் நிறைந்திருந்தது. ஏனெனில் அன்று தான் அவ்வீட்டின் குட்டி இளவரசி முதன்முதலாக அவ்வில்லம் வர இருக்கிறாள்.


நிஹாரிகா அஃஷரா பிறந்ததும் மருத்துவமனையிலிருந்து நேராகக் கவின் இல்லம் சென்றவள் இந்த ஆறு மாத காலமாக அங்குத் தான் இருக்கின்றனர். இன்று தான் முதன் முதலாக அவள் வீட்டுக்கு வர இருக்கிறாள். அதைக் கொண்டாடாமல் இருப்பார்களா? மொத்த வீடும் அல்ல அல்ல மொத்த மாளிகையும் விழாக்கோலம் பூண்டுள்ளது.


உறவினர்கள் தவிற கட்சி சம்பந்தமான யாருக்கும் அழைப்பு இல்லை. அவர்களுக்குத் தனியாக நாளை மண்டபத்தில் விருந்துக்கு ஏற்பாடாகி இருந்தது. முதல்வரின் முதல் பேத்தி அதுவும் செல்லப் பேத்தி அவள் வரவைக் கொண்டாடி தீர்க்க முடிவெடுத்துவிட்டார்.


காலை முதலே பரபரப்பாக வேலைகள் எல்லாம் செய்து கொண்டிருந்தனர். வாயில் கதவிலிருந்து வீட்டை அடையும் அந்தக் கால்கிலோமீட்டர் தூரமும் பந்தல் போட்டது அறைவட்ட வடிவில் வண்ணவிளக்குகளால் அலங்கரித்தும், தரை முழுவதும் பூக்கள் தூவியும், ஆங்காங்க ‘வெல்லம் ஹோம் அஃஷரா’ என்ற பதாகைகளும் நிறைந்திருந்தது.


வீட்டிற்குள் பூக்களாலும், பலூன்களாலும் அலங்கரித்து உள்ளும் ‘வெல்கம் ஹோம் அஃஷரா” என்ற பலகையும் வைத்திருந்தனர். அவள் வரும் வழி முழுவதும் வண்ணப்பூக்கள் தூவப்பட்டிருந்தது.


இங்குக் கவின் இல்லத்திலோ நிஹாரிகா அழகான ரோஜா வண்ணத்தாலான பட்டுப்புடவை உடுத்தி வானத்து தேவதைபோல் வந்தாள் என்றால் அவளுக்கு நிகராக அழகு பதுமை போல் கிளம்பியிருந்தனர் சாத்விகாவும், பிரணவிகாவும். இவர்களே இப்படி என்றால் இன்றைய நாயகி எப்படி கிளம்பியிருப்பாள்?


அழகான பேபி பிங்க் நிற கவுனில் பொம்மையோ என நினைக்கும் அளவுக்கு இருந்தாள் அஃஷரா குட்டி. அவளை ஆழைத்து வர ஷிம்ரித்தும், கல்பனாவும் உடன் கல்பனாவின் ஒன்றுவிட்ட ஓரகத்தி ஒருவரும் வந்திருந்தனர்.


ஷிம்ரித்தின் காரிலும், கவினின் காரிலும் அனைவரும் ராகவேந்திரா இல்லத்துக்குக் கிளம்பினர். அரைமணி நேரத்தில் ராகவேந்திரா இல்லம் வந்துவிட குடும்பமே வாயில் கதவுக்கு வெளியேவே நிற்க, அனைவருக்குமே ஆச்சரியம் தான். ஏனெனில் வெளியவே அவ்வளவு அலங்காரம்.


துள்ளிக் குதித்து முதலில் இறங்கினாள் பிரணவிகா, “வாவ்” என அலங்கராத்தைப் பார்த்து வியந்தபடியே ஆனால் அவள் முன் நின்றதோ விஹான்.


“என்னைப் பார்த்து தான வாவ்னு சொன்ன?” என அவளை இடித்துக்கொண்டு வந்து நிற்க, மொத்த உற்சாகமும் வடிந்து, பயம் வந்தமர்ந்து கொண்டது. வேகமாக நகர்ந்து கவின் அருகில் நின்று கொண்டாள். வழக்கம்போல் இதயம் படபடவென அடித்தது.


அடுத்தப்பக்கம் இறங்கினாள் பிரணவிகா, அவள் அருகில் நின்றதோ விராஜ். அவனைப் பார்த்ததும் நேற்று நடந்த முத்தயுத்தம் ஞாபகம்வர வெட்கப்பட்டு தலைகுணிய, அவளைப் பார்த்தவனோ மீண்டும் மீண்டும் தனக்குள் எழும் உணர்வுகளை அடக்கமுடியாமல் அடக்கிக் கொண்டிருந்தவன் அவளருகில் வந்து அவள் கைகளில் ஒரு சாக்லெட்டை தினித்துவிட்டு மற்றவர்களைக் கவனிக்க சென்றுவிட்டான்.


அனைவரும் கீழே இறங்கிய பிறகு, இன்றைய நாயகிகள் இருவரும் காரை விட்டு இறங்கும் போதே ஆயிரம்வாலா வெடி வெடித்தது. வெடியைப் பார்த்துப் பயந்து அழுவாளோ என இவர்கள் பயப்பட அஃஷரா குட்டியோ பொக்கை வாயைக் காட்டி சிரித்தது. அஃஷராவை தூக்கிக்கொண்டு இறங்க ஏகப்பட்ட ஆராத்திகளை எடுத்தனர் வீட்டிலிருந்த உறவினர்கள். அனைவருக்கும் சலைக்காமல் பரிசுகளைக் கொடுத்தான் ஷிம்ரித்.


கிட்டத்தட்ட முப்பத்திமூனு வகையான ஆரத்திகளை எடுத்து முடிவதற்குள் அனைவரும் களைத்துவிட்டது. பின் உள்ளிருந்து வந்தது அந்த அழகிய ப்ரம் அல்லது ட்ரோலி என அழைக்கப்படும் குழந்தைகளை அமரவைத்து தள்ளிக்கொண்டு செல்லும் வண்டி.


அவ்வண்டி முழுவதும் அழகிய வேலைப்பாடு, முன்னால் பின்னால் எல்லாம் பலூன்களால் அலங்கரித்து இருந்தது. அதில் அஃஷராவை அமர வைக்க, முதலில் பயந்து நழுவியவளை அதிலிருக்கும் பெல்ட்டுகளை மாட்டி அமர வைத்து, வண்ணக்காகிதம் பறக்கும் வெடியை வெடிக்க, அதிலிருந்து கொட்டும் வண்ணக்காகிதங்களைப் பார்த்துச் சிரிக்க ஆரம்பித்துவிட்டாள் குட்டி.


பின் இருபுறமும் பப்பிள்ஸ் எனப்படும் காற்று குமிழிகளை ஊத, அதுவோ குட்டி குட்டி முட்டை முட்டையாக அவ்விடம் முழுக்க பறக்க, ஷிம்ரித்தும் நிஹாரிகாவும் அந்த வண்டியைத் தள்ளிக்கொண்டு பூக்கள் தூவப்பட்ட நடைபாதையில் நடக்க அவர்களுக்குப் பின் அனைவரும் வந்தனர்.


இதை எல்லாம் இரசித்த படியே வந்த சாத்விகாவிடம் “நாளைக்கு நம்ம பிள்ளைக்கு இத விட பிரமாண்டமா செய்யலாம்” என விராஜ் கூற,


“அதுக்கு நீ முதல்ல அரியர் கிளியர் பண்ணனும்” எனப் பதிலுரைக்க,


“எங்க சுத்தினாலும் அங்கயே வராத. இன்னைக்கு பங்ஷன எஞ்சாய் பண்ணு”


“நான் சொன்னத செய்யாம எதுவும் நடக்காது”


“நேத்து நடந்தது மறந்துடுச்சா பேப்.. அதுபோல எல்லாமே சுபமா நடக்கும்”


“ம்ம்ம் கனவுல தான்”


“நான் யாருனு தெரியாம சீண்டாத.. அப்புறம் நீ கிரகபிரவேஷம் பண்ண முன்ன என் புள்ள பண்ணிடும்” எனக்கூற, பட்டென அடித்தாள்.


இவர்கள் இருவரும் காதலும் ஊடலுமாக நடந்து வர, கவின் பின்னாலே ஆடுபோலச் சென்ற பிரணவிகாவை யாரும் அறியாமல் கையைப் பிடித்து இழுத்திருந்தான் விஹான். பதறியவள் மலங்க மலங்க விழித்தபடி,


“என்ன?” எனக் கேட்க,


“நேத்து என்னை எப்படி கரெக்ட் பண்ணனு சொல்லவே இல்லையே.. எக்ஸ்கேப் ஆயிட்ட”


“நான் யாரையும் கரெக்ட் பண்ணல.. என்னை விடுங்க” என அவனிடமிருந்து விலகப் பார்க்க,


“இல்லையே கரெக்ட் பண்ணிட்டியே! யார் கிட்டயும் தேவைக்குகூட அளவா பேசுற என்னைய இப்படி உன்னோட இவ்ளோ பேச வச்சிருக்கியே! அப்போ கரெக்ட் பண்ணிட்டனு தான அர்த்தம்”


“அய்யோ என்னை விடுங்க.. அப்பா தேடுவார்”


“விடுறேன் ஆனா எப்படி கரெக்ட் பண்ணினனு சொல்லிட்டு போ” எனக்கேட்க, அவளுக்கு இதென்னடா வம்பா போச்சு என நினைத்தவள்,


“கைய விடுங்களேன் சொல்றேன்..” என்றதும் கையைச் சிரித்துக்கொண்டே விட்டான். அவன் சிரிப்பதை ‘ஆ’ எனப்பார்த்தவள்,


“நான் உண்மைய சொல்லிடுவேன் ஆனா இத வச்சி காலேஜ்ல கூப்பிட்டு திட்டக் கூடாது. இப்போ நான் உங்க காலெஜ் ஸ்டூடண்டும் இல்ல நீங்க மேனேஜ்மெண்டும் இல்ல.. சரியா?” எனக்கேட்கும் போதே அவனுக்குப் புரிந்துவிட்டது. அவள் விவகாரமாக எதையே சொல்லப் போகிறாளென, அதில் அவன் புன்னகை மேலும் விரிந்தது.


“சொல்லு.. நீ தான் தைரியமான ஆள் ஆச்சே சொல்லு”


“அது நான் கரெக்ட் பண்ணல.. லூஸ் பண்ணிட்டேன் போல.. அதான் நட்டு கலண்டுறுச்சு.. நாளைக்கு எனக்குச் சைக்காலஜி செக்சன்ல தான் டியூட்டி அங்க வாங்க கரெக்ட் பண்ணி விடுறேன்” என ஓட்டம் எடுக்க,


“சண்டிக்கழுதை என்னைப் பைத்தியம்னா சொல்லிட்டு போற.. கைல சிக்குவல அப்போ பைத்தியம் என்ன பண்ணும்னு காட்டுறேன்” என அவனும் சிரித்தபடி உள்ளே சென்றான்.


உள்ளே அவ்வளவு பிரமாண்டமாக ஏற்பாடு செய்திருந்தார் முதல்வர். அவர் விட்டின் அடுத்த தலைமுறையின் முதல் வாரிசை அவ்வளவு கொண்டாடி தீர்த்தனர் அனைவரும். கவிதா மட்டும் அங்கில்லை. அன்று வேலை இருப்பதாகக் கூறி எப்போதும் போலச் சென்றுவிட்டார். அதை யாரும் பெரிதுபடுத்தவும் இல்லை.


கேக் வெட்டி, வெடி வெடித்து, புதிதாகத் தன் பேத்திக்காகத் தங்கத்தில் செய்திருந்த தொட்டிலில் குழந்தையைப் போட்டனர். அன்னபிரஷனையும் செய்யத் தங்க தட்டில் மிகக் குழைவான சிறிதளவு சாதம் தங்க கரண்டியால் ஊட்டினர். பார்ன் வித் சில்வர் ஸ்பூன் சொல்லுவாங்க இங்கு அஃஷரா பார்ன் வித் கோல்டன் ஸ்பூன் தான்.


அனைத்து சடங்கு, சம்பிரதாயமும் முடித்து, சாப்பாடு பரிமாறப்படது. விஹான் தான் அதை மேற்பார்வை பார்த்துக்கொண்டிருந்தான்.


பிரணவிகா “சாத்வி வாடி வயிறு கிய்யோ மிய்யோனு கத்துது, சாப்பிட்டு வரலாம்”


சாத்விகா “ஏய் இது நம்ம வீட்டு ஃபங்ஷன் கேர்ள்.. முதல்ல வந்த கெஸ்ட் எல்லாம் சாப்பிடட்டும், நாம அப்பறமா சாப்பிடலாம்”


“அட பைத்தியமே.. பந்திக்கு முந்து படைக்குப் பிந்துனு பழமொழியே இருக்கு.. வா முதல்ல பத்திய பார்ப்போம்”


“அதுக்கு மீனிங் அதில்ல கேர்ள்” என அவள் எதோ கூற வரும் முன்,


“எம்மா பேராசியரே! தயவு செய்சு லெக்ச்சர் குடுக்காத.. பசில எனக்குக் காது கூடக் கேட்கல. முதல்ல வா வயித்த கவனிச்சுட்டு வரலாம்”


“உனக்குப் பசிச்சா நீ போய்ச் சாப்பிடு.. நான் நிஹாக்கா கூடச் சாப்பிட்டுக்கிறேன்”


“க்கூம் போகத் தெரியாமயா உன்னைக் கெஞ்சுறேன்.. அங்க அந்தச் சிடுமூஞ்சி நிக்கிறாண்டி.. அதான் துணைக்கு கூப்பிட்டேன்”


“அவர கண்டா ஏண்டா இப்படி பயப்படுறியோ?”


“நீயும் தான பயப்படுவ.. சும்மா நடிக்காத”


“முன்னாடி சின்னதுல பயந்தது இப்பவும் அப்படியா இருப்பாங்க. தப்பு செஞ்சா பயப்படலாம் நாம எதுக்கு பயப்படனும்?” எனக்கேட்டாள்.


“தப்பு பண்ணிருக்கேனே” என முழித்துக்கொண்டு கூற, பக்கெனச் சிரித்த சாத்விகா,


“அட அத மறந்துட்டேன் பாரு. நீதான் வாரம் இரு தரம் அவர் கிட்ட வாங்கி கட்டுவள.. இந்த வாரக் கோட்டா முடிஞ்சதா?”


“ஹ்ம்ம். அதெல்லாம் கூப்பிட்டு மிரட்டியாச்சு”


“ஆனாலும் நீ அடங்க மாட்ட”


“பசிக்குதுடி” என்றாள் அழுவதுபோல.


“வந்து தொலைக்கிறேன் அழாத” என இருவரும் பந்தி நடக்கும் இடத்துக்குச் சென்று ஒரு இடம் பார்த்துச் சாப்பிட அமர்ந்தனர். பரிமாறுபவர்களும் வரிசையாக வந்து பரிமாற, இருவரும் சாப்பிட்டுக் கொண்டிருந்தனர்.


திடீரென ஒரு பணியாளர் மீண்டும் வந்து காலிஃபிளவர் பக்கோடாவை இருவருக்கு மட்டும் வைத்துவிட்டு சென்றார்.


“என்னடி கேட்காமயே காலிஃபிளவர் ஃபிரை எக்ஸ்ட்ராவா வருது” எனப் பிரணவிகா கூறிக் கொண்டிருக்கும்போது இன்னொருவர் வந்து, இன்னுமொரு சப்பாத்தியும், பன்னீர் கோஃப்தாவும் வைக்க?


“அட என்னடி அதிசயமா இருக்கு” எனக்கூறிக்கொண்டே பிரணவிகா சாப்பிட, சாத்விகாவுக்கு புரிந்துவிட்டது இது விஹானின் வேலையென ஆனால் காட்டிக் கொள்ளவில்லை.


கடைசியாக அனைவருக்கும் வெண்ணிலா ஐஸ்கிரீம் வைத்தனர். அதைப்பார்த்த பிரணவிகா முகத்தைச் சுளிக்கும் போதே, ஒரு பணியாளர் வந்து அவளுக்கு வைத்த வெண்ணிலா ஐஸ்கிரீமையும் சேர்த்து சார்விகாவுக்கு வைத்துவிட்டு இவளுக்கு மட்டும் பட்டர்ஸ்காச் ஐஸ்கிரீம் பெரிய டப்பாவை வைக்க இப்போது அவள் கண்கள் பெரிதாக விரிந்தது.


விரிந்த கண்களில் விரும்பியே வீழ்ந்தான் விஹான். ‘ப்பா என்ன கண்ணுடா.. கண்ணாலயே இழுக்குறா.. அந்தக் கண்ணு என்னென்ன எக்ஸ்பிரஸன் எல்லாம் குடுக்குது.. எல்லாத்தையும் விடத் தப்பு பண்ணிட்டு திருட்டு முழி முழிப்ப பாரு அதுல விழுந்தவன் தான் இன்னும் எழும்ப முடியல’ என மனதில் நினைத்து, அவளை விழுங்குவது போலப் பார்த்துக்கொண்டிருந்தான்.


பிரணவிகா “என்னடி அதிசியம். எனக்குப் பிடிச்சதெல்லாம் வரிசையா வருது”


“அப்போ உனக்குப் பிடிச்சதெல்லாம் யாருக்கோ தெரியுதுனு அர்த்தம்” எனக்கூற,


“அதான பார்த்தேன் அப்பாதான் பண்ணாரா..” என அங்கு நின்றிருந்த கவினைப்பார்த்துக்கூற, அவள் தலையைப் பிடித்து விஹான் இருந்த பக்கம் வம்படியாகத் திருப்ப, அவன் வேறு பக்கம் பார்க்க ஆரம்பித்தான்.


“அவரா கூட இருக்கலாம்” என சாத்விகா கூற,


“போடி.. அந்தச் சிடுமூஞ்சிக்கு எனக்குப் பிடிச்ச ஐட்டம் எல்லாம் தெரியுதாக்கும். அவனுக்கு என் பேரே தெரியுமா தெரியாதானு தெரியல.. எப்ப பார்த்தாலும் வா.. போனு மொட்டையா தான் சொல்லுவான்”


“உனக்கு எல்லாம் எத்தனை கியூப்பிட் சேர்ந்து வந்து அம்பு விட டிரை பண்ணினாலும் வேலை முடிக்க முடியாம தோத்துதான் போகனும்”


“அதுக்கு அந்த கியூப்பிட் சரியான ஆள காட்டனும். காட்டான காட்டினா கட்டிக்க முடியுமா? உனக்கு மட்டும் ஜோவியலா, ரொமாண்ட்டிக்கா என் டார்லி வேணும்.. என்னை மட்டும் இந்தச் சிடுமூஞ்சிக்கிட்ட மாட்டிவிட பார்க்குற.. சிக்க மாட்டா இந்தப் பிரணி” எனக்கூறி கைகழுவ செல்ல, விஹானை பாவமாகப் பார்த்துச் சென்றாள் சாத்விகா.


நல்ல வேலையாக இவள் பேசியது அனைத்தும் கேட்காத தூரத்தில் இருந்தான் விஹான். இவ பேசியது மட்டும் கேட்டிருந்தாள் அவன் மனம் என்ன பாடு பட்டு இருக்கும் என வார்த்தையால் வடிக்க இயலாது.


*******


லாரா அழகு சாதன நிறுவனத்தின் அவனது அலுவலக அறையில் அவனது நார்காழியில் அமர்ந்து அவன் முன் இருக்கும் திரையே வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தான் சூர்யான்ஷ்.


அதில் அங்கு சந்தோஷ் ராகவேந்திரா இல்லத்தில் நடக்கும் விஷேசத்தை ஒளிபரப்பிக்கொண்டிருந்தான் அவனால் நியமிக்கப்பட்டிருந்த உளவாளி. நிகழ்ச்சியைப் படமெடுக்க வந்திருந்த காமெராமேனிடம் காசைக் கொடுத்து ஒரு காப்பி வாங்கி கொண்டுவந்ததை ஒளிபரப்பிக் கொண்டே அவர்களைப் பற்றிய விபரங்களை ஒவ்வொன்றாகக் கூறிக் கொண்டிருந்தான்.


அப்போது தான் பொழுதுபோக்கு நிகழ்ச்சியாக சாத்விகா, பிரணவிகாவின் நடன நிகழ்ச்சி வந்தது. இருவரும் பரதம் முறையாகப் பயின்றவர்கள் அல்லவா! ஒரு பாடலுக்கு இருவரும் அழகான நடனம் ஆடினர். அதில் பிரணவிகாவைப் பார்த்த நொடி அவள் அழகிலும், ஆட்டத்திலும் மயங்கிவிட்டான் சூர்யான்ஷ்.


“இது யாரு?” எனப் பிரணவிகாவைப் பார்த்துக் கேட்க,


“இவங்க இரண்டு பேரும் விஹானின் தாய்மாமா மகள்கள்” எனக்கூற, ‘என்ன அழகா இருக்கா.. அப்படியே தூக்கிட்டு வந்து’ எனப் பலான பலான யோசனை எல்லாம் அவன் மனதில் ஓட ஆரம்பித்தது நொடியில். அவன் மனம் செல்லும் பாதை அவனுக்கே ஆச்சரியம் தான்.


அவன் பெண்களைப் பார்க்காதவனல்ல, பல பெண்களுடன் சல்லாபித்த கேடுகெட்டவன் தான். ஆனால் அவர்கள் எல்லாம் இவன் அழகில், பணத்தில் மயங்கித் தானாக இவன் மஞ்சத்தை அலங்கரித்தவர்கள். ஆனால் அவன் மனம் தானாக ஒருத்தியை சல்லாபிக்க நினைத்தது பிரணவிகாவை மட்டும் தான். அது தான் அவன் ஆச்சரியத்திற்கு காரணம்.


இதுவரை அந்த வீடியோவில் தனக்கு சாதகமாக எதுவும் கிடைக்குதா என அலசி ஆராய்ந்தவன், இப்போது அவள் எங்கேனும் தென்படுகிறாளா என அவளைத் தேட ஆரம்பித்துவிட்டான்.


அப்போது தான் அந்த வீடியோவில் மீண்டும் அவள் ஒரு ஓரமாக நடந்து வருவது தெரிந்தது அவளையே பார்த்துக்கொண்டிருந்தான். அழகான கருநீல நிற லெஹங்காவில் அழகுபதுமையாக நடந்து வந்தவள் திடீரென எதோ வழுக்கி விழப்போக, இங்கிருந்தபடியே “ஏய் பார்த்து” என இவன் கத்த, அதற்குள் வீடியோவில் அவளைக் கீழே விழ விடாமல் பிடித்திருந்தான் விஹான்.


பிடிக்கும்போது அவன் கைகளோ ஆடைமறைக்காத அவள் வெளீரென இருந்த இடையில் அழுத்தமாகப் பதிந்திருக்க, இங்கே அமர்ந்திருந்தவனுக்கு இரத்த அழுத்தம் அதிகமானது. “டேமிட்” என அங்கிருந்த மேஜையில் குத்தினான்.


மீண்டும் வீடியோவைப் பார்க்க, வழுக்கி விழுந்த பிரணவிகாவை பிடித்திருந்த விஹான் கண்களில் தெரிந்த அவளுக்கான மயக்கமும், ஏக்கமும், காதலும், நேசமும் ஏன் காமமும் கூட இங்கே அமர்ந்திருந்த சூர்யான்ஷ் கண்களில் அப்பட்டமாகப் பட,


“ஓஹ்.. உனக்கும் அவ மேல் மயக்கமா? விடமாட்டாண்டா இந்தச் சூர்யான்ஷ். அவள உன்கிட்ட இருந்து பிரிச்சு எனக்குச் சொந்தமானவளா மாத்துவேண்டா.. உன் நிழல் கூட என் குயின் மேல பட விடமாட்டாண்டா இந்தச் சூர்யான்ஷ்” என மனதில் சபதம் எடுத்தவன், அதை நிறைவேற்ற எந்த எல்லைக்கும் செல்லத் தயாராக இருந்தான்.


இருவரின் பார்வையும் ஒருத்தி மேல். ஆனால் அவளோ அவள் கனவு காதலனுடன் கற்பனையில் இருக்க, நிஜமான காதலன் ஆகப் போவது யாரோ? பொருத்திருந்து பார்க்கலாம்.
 

Nandhaki

Moderator
யப்பா இந்த பிரணியை கல்யாணம் செய்யும் வரை யாரவது இந்த விஹானுக்கு நட்டை கொஞ்சம் இறுக்கி விடுங்கப்பா, அந்த சூரியவன்ச்சட்ட இருந்து அவளை காப்பத்தனும். இவளை எப்ப கரெக்ட் பண்ணி கல்யாணம் முடித்து இது ஆகுறதில்ல பேசாம கல்யாணம் பண்ணிட்டு கரெக்ட் பண்ணுட விஹான்

உனக்கு போய் இவளை கேட்டனே என்னை சொல்லணும் 🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️
 

Lufa Novels

Moderator
யப்பா இந்த பிரணியை கல்யாணம் செய்யும் வரை யாரவது இந்த விஹானுக்கு நட்டை கொஞ்சம் இறுக்கி விடுங்கப்பா, அந்த சூரியவன்ச்சட்ட இருந்து அவளை காப்பத்தனும். இவளை எப்ப கரெக்ட் பண்ணி கல்யாணம் முடித்து இது ஆகுறதில்ல பேசாம கல்யாணம் பண்ணிட்டு கரெக்ட் பண்ணுட விஹான்

உனக்கு போய் இவளை கேட்டனே என்னை சொல்லணும் 🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️
அது தான் நடக்கனும்னு இருந்தா நான் என்ன பண்ண முடியும்🤣🤣🤣
 
Top