பகுதி - 1
"உனக்கு என்ன தான் டா, பிரச்சினை". என்று உயர்ந்த இரத்த அழுத்தத்தில் கத்திய தருணை, முகத்தில் எந்த வித உணர்வும் இல்லாமல் பார்த்தான் கதிர் என்றழைக்கப்படும் கதிர் வேந்தன்.
சொந்தம் தங்கையின் திருமணத்திற்கும், முகர்த்தப்பந்தல் நடும் விழாவிற்கும் வரமாட்டேன் என்ற தருணிடம், போக வேண்டும் என்று சண்டைப் போட்டுக் கொண்டு இருந்தான் கதிர் வேந்தன்.
"இது நம்ம வீட்டு விசேஷம் டா, எப்படிப் போகமான இருக்க முடியும்?" என்றான்.
குரலில் எந்த விதமான சலனமும் இல்லாமல்.
" நான் இந்தக் கல்யாணத்துக்கே போகனுமா யோசிக்கிறேன்? நீ என்னடா என்றால், இந்த விஷேசத்திற்குப் போகனும் சொல்லற” என்றவன், "இந்தக் கல்யாணம் யாருக்கு என்று தெரியுமா? உன்னைத் திருமணம் பண்ண வேண்டிய உன் அத்தை மகளுக்கு டா , அவள் கல்யாணத்துக்குப் போக எப்படி டா உனக்கு மனசு வருது, எங்கிருந்தாலும் வாழ்க என வாழ்தி விட்டு, விருந்துச் சாப்பிட்டு மொய் வைக்கப் போறியா?" என்று உச்சக்கட்டக் கோபத்தில் கேட்டான் தருண்.
தருணின் இந்தக் கோபம் தனக்கான நட்பு மட்டும் அல்ல, சகோதரப் பாசமும் அதில் இழையோடியிருப்பதை உணர்ந்து அவனை அணைத்தான்.
" வாடா, தருண் போலாம். நான் மட்டும் இல்லை, நீயும் இந்தக் கல்யாணத்துக்கு வந்தே ஆகணும்" என்றான் உறுதியான குரலில்.
தன் நண்பன் மேல் சந்தேகம் வந்தவனாய். "என்னடா ஒரு படத்தில் வருமே அதுப்போல , காதலிக்குக் கல்யாணம் நடப்பதைப் பார்க்கும் ஹீரோ வாடா நீ. கல்யாணம் பார்க்க வந்த உன் மேல வரும் கோபத்தில், அவள் காதல் மீண்டும் துளிர்குமே அப்படி எதாவது பண்ணற ஐடியா வா".
"ஆனால் ஒரு விஷயம் மறந்துட்ட , அவளோடது காதல் கல்யாணம்”
என்றான் தன் சினத்தைக் கட்டுப்படுத்தியபடி .
இப்படித் தன் சினத்தையும் , பிடித்தமின்னமையும் வெளிப்படுத்தும் நண்பனிடம்
"எதுக்கு இவ்வளவு கோபம் உனக்கு, அவள் எனக்கு அத்தைப்பெண் மட்டுமல்ல, உன்னோட தங்கச்சி என்பதை மறந்து வார்த்தைகளை விடாதே சொல்லிட்டேன்".
"என் தங்கை என்றதால் தான், எனக்கு இவ்வளவு கோபம்” கதிர் என்றான் தருண்.
“இந்தக் கல்யாணத்தில் எனக்கும் எந்தப் பிரச்சனையும் இல்லை, அதே போல் அவங்களுக்கும் எந்தப் பிரச்சனையும் இல்லை . அப்பறம் உனக்கு ஏன்டா இவ்வளவு கோபமும் டென்ஷனும். இது தேவையில்லாதது தருண். இந்தக் கல்யாணம் நடக்கணும் சொல்லப் போனால். உனக்குத் தான் எதுவும் புரியவில்லை" என்றான் ஆழ்ந்த அமைதியான குரலில்.
அதன் பேதம் உணர்ந்தவன்.
"அவள் வேற ஒருத்தனைக் காதலிக்கிறேன் சொல்லி , இந்தக் கல்யாணம் நிறுத்தி இருந்தால் கூட எனக்கு இவ்வளவு கோபம் வந்திருக்காது , வேண்டாம் சொன்னது கூட ஒகே தான் டா ,ஆனால் அதுக்கு ஒரு காரணம் சொன்னாப்பாரு, அது தான் என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை கதிர் ".
இதைக் கேட்டதும் " ஓ, அது தான் உனக்கு இவ்வளவு கோபமா ? " . என்றவாறே சத்தமாகச் சிரித்த கதிர் வேந்தன் . "விடுடா மச்சான் பார்த்துக்கலாம்" என்றான்.
"எப்படி , கல்யாணம் பண்ணி ஹனிமூன் எங்கே போறாங்க என்பதையா " . என்ற தருணின் குரலில் எரிச்சல் நிறைந்திருந்தது.
அதைக் கேட்டதும் கதிருக்குத் பழைய நினைவுகள் மெல்ல ஆனந்த ராகம் மீட்டியது.
'கலைந்த உடையோடு, தன் உணர்வுகளை ஏற்க முடியாமல், கண்களில் நீரோடு தன்னிடம் போராடியவளின் உருவம் மனக்கண்ணில் தோன்றியது.
தன்னிடம் எதிர்த்துப் போராடியவளின் செயல் , கூடலின் அழைப்பாகத் தான் அவனுக்குத் தோன்றியது.
ஒரு கட்டத்தில் அவளின் நிலையை உணர்ந்து இதழில் புன்னகையோடு அவளை விட்டவனிடம், அவள் கூறிச் சென்ற வார்த்தைகள் இன்னும் காதில் எதிரொலிக்கிறது.
'இதற்குத் தானடி இத்தனை நாளாகக் காத்திருந்தேன். இனி என்னிடம் இருந்து எப்படித் தப்பிக்கிறாய் என்று நானும் பார்க்கிறேன்' என முணு முணுத்தவன் செயலில்.
"என்னடா , எதாவது ப்ளான் இருக்கோ கல்யாணத்தை நிறுத்த" என்றான் தருண்.
'இவன் வேற', என்று மனதில் நினைத்தவன், "ஏன்டா" என்றபடி "நாம நாளைக்குக்கிளம்பறோம் அவ்வளவுதான்" என்று பேச்சுக்கு முற்றுப் புள்ளி வைத்தான் கதிர் வேந்தன்.
மனதில் பல எண்ணங்களின் அலைகள் மோத, நாளைய விடியலுக்காகக் காத்திருந்தான், நம் நாயகன் கதிர்வேந்தன்.
எல்லோருடைய வாழ்க்கையிலும் ஒரு மாற்றத்தை உருவாக்குவது காதல். அவனைப் புதிய மனிதனாக உருவாக்கியது அவளும், மனதில் அவளுக்கான காதலும் தான். காதலியின் நினைவுகள் மனதில் வலம் வந்தது.
குற்றாலச்சாரல் போல் தோன்றியச் சில்லென்ற உணர்வுகளை அனுபவித்தவாறே, தன் இடபக்க மார்பைத் தடவியவன், ' என்னை நியாபகம் இருக்குமாடி உனக்கு? மறந்து இருக்க வாய்ப்பில்லை தான், நமக்குள் நடந்த விஷயம் அப்படி, இல்லை என்னிடம் சொன்னது போல மறந்துப் புதிய வாழ்க்கையைத் தேர்தெடுத்திருப்பாயோ?' என்று தனக்குள்ளே பல கேள்விகளைக் கேட்டான்.
பின் மெதுவாக அதற்கான பதிலாக , 'அதெப்படி மறப்பாய்' என்ற புன்னகையோடு படுக்கையில் அவள் நினைவுகளோடு புரண்டான். கண்களிலிருந்து உறக்கம் விலகிச்செல்ல, காதல் மயக்கம் அவனை ஆட்கொண்டது.
தொழில் கைக்கூடாது என்ற எத்தனையோ ப்ராஜெக்ட்கள் பலவற்றைத் தனதாக்கி இருக்கும், தொழிலில் அசகாயச் சூரனாகிய கதிர்வேந்தன் காதலில் தினறிக்கொண்டிருக்கிறான்....
கல்யாண வீட்டில் தன் நண்பன் தருணிற்கு ஏற்படும் அதிர்ச்சியில் அவன் முகத்தில் வந்து போக இருக்கும் உணர்வுகளைக் காண மிகவும் ஆவல் அவன் மனதில் வலம் வந்தது...
'இவ்வளவு விஷயமும் நீ வந்தால் தானடி நடக்கும் , நீ வருவாயா? என்று மனதில் இருக்கும் பெண்ணவளிடம் ஆயிரம் தடவைக் கேட்டு விட்டான்... 'நீ கண்டிப்பாக வருவாய், உன் தோழிக்காகவே நீ வருவாய் ... இந்த விஷயத்தில் என் நம்பிக்கை வீண் போகாது' ... என்றவாறே விடியலுக்காகக் காத்திருந்தான் …
அவள் வருவாள் தான்.. அதற்கான காரணம் அவனுக்குத் தெரிய வரும் போது அவளை ஏற்றுக்கொள்ள, இந்தக் காதல் அவனைச் சம்மதிக்க வைக்குமா, இல்லை சினத்தால் தண்டிக்குமா? என்று காலம் தான் பதில் சொல்லும்…
தன் காதலுக்கான விடியலும் இந்த ஆதவனின் உதயத்தில் இருப்பதை உணர்ந்தான் கதிர் வேந்தன் ...
இன்றைய நாள் மிகவும் பரபரப்பாக இருப்பது போல் தோன்றியது கதிர்வேந்தனுக்கு ...
எப்பொழுதும் போன்றே முதலில் தயாரானவன் தருணை எழுப்பினான் ...
"தரு எழுந்திரு , ம்ம் நேரமாகுது , சீக்கிரம் டா , விடியும் முன்னே வரேன் சொல்லிட்டேன் டா , சீக்கிரம் எந்திரிச்சு ரெடியாகு " என்றவனிடம் , ம்ம் மட்டுமே பதிலாகத் தந்தக் கொண்டிருந்தவனின் முதுகில் ஒன்று போட்டான் கதிர்வேந்தன்.
"நான் போறதை விட நீ தான் டா அங்கே இருக்கனும் … அப்பறம் உன்னோட மாமா என் உயிரை எடுப்பாரு , நான் தான் காரணம் எல்லாத்துக்கும் என்று … நீ, பண்ணறதும் தப்பு டா, அவளோட அண்ணாவாக உன் கடமையை எல்லாம் செய்தாலும், அவள் உடன் இருப்பது தான் முக்கியம் டா , இந்த நேரத்தில் அங்கே நீ இல்லை என்றால் அவளுக்கும் வேதனுயைத் தரும், நீ இப்படிப் பண்றது "
என்றவன்…
“ உன்னால எனக்கும் திட்டு விழுகும்" என்றான் …கதிர்
"புரியுது டா " என்றவன் வேகமாகத் தயாராகிறான்…
தன் நண்பனும் மாமன் மகன் கதிரை அவமானப்படுத்தியது, அவனால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை…
அவனை வேண்டாம் என்று நிராகரித்ததை விட அதற்கு அவள் கூறியக் காரணத்தை , தருணால் ஏற்றுக்கொள்ள முடியாமல் , அவளிடம் அன்றைக்குச் சண்டையிட்டுப் பேசாமல் இருந்தவன் இன்னும் பேசவில்லை…
இது தவறு என்று பல முறைத் தருணிடம் பேசிப் பார்த்தான், அவன் கோபம் குறைந்த பாடில்லை … கதிரால் தன் நண்பனின் கோபத்தைக் குறைக்க முடியவில்லை ...
அவள் திருமணமாகி வேறு வீட்டிற்குச் செல்ல இருக்கும், இந்தச் சமயத்தில் கூட அவளுக்காக யோசிக்காத இவனை என்ன பண்ண? என்று புரியவில்லை கதிருக்கு…
உண்மையைத் தெரிந்து கொண்டால் நண்பனின் கோபம் தன் மேல் திரும்பி விடுமோ என்ற பயமும் அவனுக்கு இருந்தது…
முதுகில் வாங்கிய அடியின் வலியில் தருணிற்கு உறக்கம் பறந்து போன திசை அறியவில்லை…
வேக வேகமாகத் தயாராகி வந்தான் ... முகத்தில் மட்டும் அடி வாங்கிய கோபம் இருந்தது…
காரை நோக்கி வந்த கதிரவேந்தன் டிரைவர் இருக்கையில் அமர்ந்ததும், இந்தக் காலை வேளையின் சுகந்தம் அவனைச் சுகமாகத் தாலாட்ட, மனதில் இருந்த வருத்தம் மாறி ஆனந்தத்தைத் தத்தெடுத்து இருந்தான்.
இன்று அவன் நினைத்த காரியங்கள் நடக்கப் போகிறது , அவன் தருணிடம் கூடப் பகிராமல் மிகவும் ரகசியமாக வைத்திருக்கிறான் ...
என்ன நடக்கப் போகுதோ? ஆனால் நடப்பது எல்லாம் நல்லதாக மட்டுமே நடக்கும் என்பதில் உறுதியாக இருந்தான் கதிர் வேந்தன்.
அவளிடையின் வரி வடிவம் கவிதையென அவன் நினைவினை அலைகளாக உள்ளிழுக்க... அதில் குதியாட்டம் போட்டு விளையாடும் அவன் மனதின் சிறுப்பிள்ளைத் தனம் தனக்கே ஆச்சரியத்தைத் தர , தன்னை நிலைநிறுத்திக் கொள்ளவும், தருண் காரில் ஏறி அமரவும் சரியாக இருந்தது…
தருணின் முகம் பார்த்தவன்… “எதுக்குடா இப்படி எட்டூருக்கு நீட்டி வைத்திருக்காய் இந்த முகத்தை" … என்றவன் காரில் பாடலை ஒளிபரப்பினான் …
புலராதக் காலைத் தனிலே … என்ற பாடல் வரிகள் பாடகரின் குரலின் இனிமையும் அவனுக்குச் சொர்க்கம் இது தான் என்று உணர்த்தியது....
இந்த நேரத்தில் அவள் மட்டும் என் பக்கத்தில் இருந்தா எவ்வளவு நல்லா இருக்கும் … என்ற அவன் காதல் ஏக்கம் மனதின் ஓரம் ஒரு வலியை உண்டாக்கியது ... ' இன்னும் எவ்வளவு நாட்கள் நீ இப்படி என் இளமை உணர்வுகளைச் சோதிப்பாயடி , ஆனாலும் உனக்கு இவ்வளவு அழுத்தம்
ஆகாது டி , எப்போழுதும் நீ மட்டுமே சரி என்ற எண்ணம், உன் ஆழ் மனதில்பதிந்ததால், உன் தவறு உனக்குப் புரியவே இல்லை. அது தான் நான் சொன்ன எந்த ஒரு விஷயமும் உன் காதில் ஏறவில்லை போல ...
இனி சொல் இல்லை செயல் தான். என் காதல் உன்னை என்ன பாடு படுத்திகிறது என்று மட்டும் பாரு என்றவாறே காரைச் செலுத்தினான் கதிர் …
"உலகத்திலேயே தன்னோட மாமன் மகளின் கல்யாணத்திற்கு இவ்வளவு அழகா ஆனந்தமாகக் கலந்துக்கப் போகும் அறிய வகை ஜீவன் நீ , தானடா "...
" வருங்காலத்தில் வரலாறு உன்னைப் பேசும் கதிர் " என்றான்
அதற்கு அவன் அழகான ஒரு புன்னகையுடன் தன் ஒற்றைக்கண் அடித்து "அப்பறம் நம்ம எப்பவும் கொஞ்சம் வித்தியாசமாக இருக்கனும் தருண் " … என்றான்.
" ஆமா ரேணுகாவின் தோழிகள்
எல்லாம் வராங்களா விசாரித்தாயா? தருண் " என்று கேட்டான் கதிர்வேந்தன்.
"ம்ம் வராங்க நினைக்கிறேன் டா ... ஆனால் , மதுமிதா என்ன ஸ்டேட்ஸ் தெரியலை டா" என்றான்....
கதிர் புருவம் சுருங்க "அப்படியா ? " என்று கேட்டான்.
பின்னர் " ரேணுவின் உயிர் தோழி அவள், கண்டிப்பாக வருவாடா" என்றவன் மீண்டும் " ஆமா ரேணுகாவின் காண்டெக்டில் இருக்காளா இல்லையா " ... என்றவனின் கேள்விக்கு
" நான் என் தங்கச்சிக் கூடவே காண்டெக்டில் இல்லை … அப்பறம் எப்படி அவள் பிரெண்ட்ஸ் பத்தித் தெரிஞ்சுக்க " என்றான் …
" இந்தப் பொண்ணுங்க மனசு ரொம்ப ஆபத்தானப் பிளாக் ஹோல் டா.. அதுல இருக்கிறது நாம் கண்டு பிடிக்க முயற்சிச்செஞ்சோம் வை , நம்மைச் சுழல் போல இழுத்துட்டுப் போயிரும் , அப்பறம் நம்ம வாழ்க்கை எதுலையும் பிடிப்பு இல்லாமல் போயிரும்” என்று வலியோடு சிரித்தான் தருண்.
" இப்போ நீ பேசிய கருத்து ரொம்பக் கேவலமாக இருந்துச்சு" ... என்ற கதிரின் பதிலுக்கு ...
"ஆமாம் இல்ல நானும் நினைச்சேன்" என்ற படி ஜன்னல் பக்கம் தன் பார்வையைத் திருப்பித் தன்னைச் சமம் செய்யும் நண்பனின் வலியை உணர்ந்தவன் .."தருண் எல்லாம் நல்லதுக்கு நினைச்சுக்கோ … விடுடா வருத்த படாதே" என்றான்.
"ஆமா டா இனி வருத்த பட என்ன இருக்கு, ஆனா உன்னைப் பார்க்கும் போது, என் வலி எல்லாம் பெரியது இல்ல டா "என்றான்.
தங்கள் பயணத்தை இனிமையாகத் தொடங்கினர்.... கதிரவேந்தனின் நினைவுகள் வேகத்தடை இன்றிப் பயணித்தது …
தினமும் காலையில் தன் அறையில் இருக்கும் ஜன்னலில் இருந்து பார்த்தால் வாசலில் கோலமிடும் அவள்… அவனின் அவள்…
மதுமிதா…
இணைக்கும் புள்ளிகள்
எல்லாம் உன் விரல்
தொட்டு அழகிய கோலங்களாய் !!!
மெய்யிணைந்து என்றும்
காதலே நம் வாழ்வில்
நீயிடும் கோலங்களாய் !!!
தொடரும் …