எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

அத்தியாயம் 1

Privi

Moderator

சஷ்டியை நோக்க சரவணா பவனார்…
சிஷ்டருக் குதவும்செங்கதிர் வேலோன்….
பாதமிரண்டில் பன்மணிச் சதங்கை….
கீதம் பாட கிண்கிணி ஆட…​

எனும் பக்தி காவியமான சஷ்டி கவசத்தை யூடுபில் ஒளிரவிட்டு தனது காலை பணிகலை செவ்வென செய்தாள் நம் கதையின் நாயகி உமையாள்.​

“அக்கா... அக்கா.... அக்கா….”​

என அந்த வீடே அதிரும் வண்ணம் உமையலை அலைத்து கொண்டிருந்தான் நீலன் என்னும் நீலகண்டன். அவளும் " என்னடா வேணும் இப்போ உனக்கு நான் வீட்டு வேலை செய்யறதை பாக்குற தான அப்பறமும் ஏன் கத்திட்டு இருக்க" என சலித்து கொண்டு கேட்டாள் உமையாள்​

அவனோ “என்னோட வேதியல்(Chemistry) புக்க பார்த்தியா” என கேட்டான். அதற்கு அவள் “என்னை கேட்டா எனக்கு என்ன தெரியும் எங்க வச்சியோ அங்க தேடு” என்றாள். இதன் நடுவே “அம்மா எனக்கு பசிக்கிது ப்றேக்பாச்ட் வேணும்.” என்று உமையாளின் சின்னச்சிறு மொட்டு வந்து நின்றது.​

மகிழினி உமையாளின் தவ புதல்வி நான்கு வயது நிரம்பிய குழந்தை. உமையாளின் உயிர்ப்பை இன்னும் தக்க வைத்துக் கொண்டிருப்பது இவளுக்காகத்தான்.​

நீலகண்டன் மருத்துவம் கடைசி வருடம் படித்துக்கொண்டு இருக்கிறான். நாள் தோறும் இதே ஒரு பிரச்சனை அவனுக்கு காலையில் பல்கலைக்கழகம் புறப்படுவதற்கு முன் வீடு கூச்சலிலும் கத்தலிலும் அமர்களப்படும். இந்த மூவர் அணி கொண்டதுதான் இவர்களின் குடும்பம்.​

இவர்களுடன் பயணித்து நாமும் இவர்களின் வாழ்க்கை கதையை தெரிந்துக்கொள்வோம்​

“அப்பாடா ஹ்ம்ம் இப்போதான் கொஞ்சம் பிரீய இருக்கு. யூனிக்கு போய்ட்டான் அடுத்த நம்ம இளவரசி.​

ழிணி…, பட்டு…., அம்மா தங்கம்… சாப்பிடலாமா. இங்க வாங்க அம்மா உங்களுக்கு பீட்ரூட் கஞ்சி செஞ்சிருக்க வாங்க சாப்பிடலாம்” என அவள் மகவை உணவு உண்பதற்கு அழைத்து கொண்டிருந்தாள். அதே சமயம் அவளின் வீட்டின் அழைப்பு மணி ஓசை எழுப்பியது.​

விறைத்து சென்று கதவை திறந்தாள் அங்கு கயல் நின்றுகொண்டிருந்தாள். “உள்ள வா, ப்றேக்பாச்ட் சாப்டியா? " ஆம் சாப்பிட்டேன் அக்கா. “சரி போய் வேலையை ஆரம்பி நான் ழிணிக்கு உணவு குடுத்துட்டு வரேன்." என்றாள்.​

அவளும் சரி என கூறிக்கொண்டு வேலை செய்யும் இடத்திற்கு விரைந்தாள். உமையாள் தனது தம்பிக்காகவும் மகளுக்காகவும் தனக்காகவும் சேர்த்து சுயமாக உழைத்து கொண்டிருக்கிறாள். சுயமாக கைவினை பொருட்கள் செய்து டிக் டொக், இன்ஸ்டாகிராம்,, புலனம் எனும் சமூக வலைத்தளங்களின் மூலம் விற்பனை செய்கின்றாள் , இத்தொழிலின் மூலம் அவர்களின் வாழ்வாதாரத்திற்கு சொற்பமான வருமானம் வருகிறது. உமையாளுக்கு உதவியாக அவள் வேலைக்கு நியமித்தவள்தான் கயல். அவளுக்கும் கணிசமான ஒரு தொகையை மாத வருமானமாக தருகிறாள்.​

"பாப்பா அம்மாவுக்கு வேலை இருக்கு, என் ழிணி குட்டி சமத்து பொண்ண உங்களோட விளையாட்டு பொருளல்ல வைத்து விளையாடுவிங்கள அம்மா அம்மாவோட வேலைய பார்ப்பேனா சரியா" என தனது மகளிடம் கூறினாள்.​

ஓகே அம்மா என்று மகிழினியும் ஒப்புக்கொண்டாள். பின்னர் அவர்களின் வேலை நடக்கும் பகுதிக்கு சென்றாள். உமையாள் தனது வீட்டில் ஒரு அறையை தான் அவளின் வேலைக்காக ஒதுக்கி இருந்தாள்.​

"கயல் எல்லாம் ஓகே தானே". என்று அவள் கேட்டதற்கு "ஹ்ம்ம் ஓகே அக்கா இப்போ வரைக்கும் நமக்கு நாற்பது ஏட்டு ஓர்டர் வந்துருக்கு" என கூறினாள். " "ஹ்ம்ம் சரி நீ வர ஓர்டர்ஸ்ஸ பார்த்து பேக்கிங் வேலைய செய் நான் இன்று செய்ய வேண்டிய கைவினை பொருளை செய்ய ஆரம்பிக்கின்றேன்" என கூறி தன் வேலையை செய்ய போனாள்.​

அப்படி இப்படி என்று அந்த நாள் அவர்களுக்கு சிறப்பாகவே முடிந்தது.​

மறுநாள் சனிக்கிழமை.​

விடுமுறை நாட்களில் நீலன் எப்போதாவது தான் வீட்டில் இருப்பான். அவன் வீட்டில் இருக்கும் சமயங்களில் அவனுக்கும் மகிழினிக்கும் வரும் சண்டைகளை தீர்ப்பதே உமையாளுக்கு பெரும்படாகி போகும்.​

ஆனால் மாமனும் மருமகளும் உணவு என்று வந்து விட்டால் ஒரு கட்சியாகி விடுவார்கள். எவ்வளவுதான் மகிழினியிடம் வம்பு வளர்த்தாலும் அவளுக்கு ஒன்றென்றாள் துடி துடித்து போவான் அந்த பாசக்கார தாய்மாமன்.​

காலை உணவிற்கு இட்லியும் சாம்பாரும் கூடவே நீலனுக்கு புடித்த கார சட்னியும் செய்தாள் உமையாள்.​

ழினிக்கு பொடி இட்லி சின்ன சின்னதாக செய்து வைத்தாள். மாமனும் மருமகளும் சேர்த்து காலை உணவை உண்டனர். வேலைகளை முடித்து உமையாள் உணவருந்த சென்ற நேரம் அவர்களின் வீட்டு அழைப்பு மணி அடித்தது​

"அக்கா நீ அமர்ந்து சாப்பிடு முதல்ல நான் போய் யாருனு பாக்குறேன்" என்று கூறி கதவை திறக்க சென்றான் நீலன் ஆனால் அவனிற்குத்தான் வந்தது யார் என்று தெரியுமே. அவனது இதழில் சிறு புன்னகை ஒன்றை ஓட்ட வைத்து சென்றான், கதவு திறக்கும் வேளையில் அந்த சிரிப்பு மறைத்திருந்தது. கதைவை திறந்தான் வாசலில் கயல் தான் நின்று கொண்டிருந்தாள் அவனை பார்த்ததும் தலையை குனிந்து கொண்டாள் பாவை அவள்.​

வழி விடுவான் என இவள் காத்துக்கொண்டிருக்க நீலனோ இருகைகளையும் மார்பில் கட்டிக்கொண்டு அவளையே பார்த்து கொண்டிருந்தான். சிறிதுநேரத்தில் அவள் வழி விடாததை கண்டு மெல்ல அவள் விழிகளை உயர்த்தி பார்த்தல் அந்நேரம் அவனோ தன் இடது புருவத்தை ஏற்றி என்ன வேண்டும் என்ன விழிகளாலே கேள்வி எழுப்பினான்.​

" ஐயோ இவரு நம்ம வாய் திறந்து கேக்காமல் விடமாட்டார் போலயே" என்று மனதோடு புலம்பினாள். பின் கண்களை இறுக மூடி திறந்து ஒரு பெரும்மூச்சை வெளியேற்றி அவனை பார்த்து " வழி விடுங்க உள்ள போகணும்" என கேட்டேவிட்டால். அவனும் யாரும் அறிய வண்ணம் இதழ்களுக்குள் சிரித்து வழி விட்டு நின்றான்.​

அவளும் சட்டென்று வீட்டினுல் நுழைந்து விட்டாள். அவளுக்கு அப்பாட என இருந்தது. அவள் சென்ற பின் நீலனோ "இவளை பார்த்த மட்டும் இங்க என்னமோ பண்ணுது" என வலது பக்க மார்பகத்தை தொட்டு தடவி விட்டான்.​

இங்கு இவர்கள் வாழ்க்கை இப்படி செல்ல அங்கு ஒருவனோ சூரியனையே சுட்டெரிக்கும் வெப்பத்தில் தகித்து கொண்டிருந்தான்.​

அவன் ருத்திரன்​

தன் பெயருக்கு ஏற்றார் போல கோபத்தை உறவுக்காரனாய் கொண்டவன். அதுவும் கடந்த மூன்றரை வருட காலமாகத்தான்.​

அதற்கு முன் கோபம் என்றல் கிலோ என்ன விலை என கேட்பவன் தான் இவன். இவனின் சிறு வயது அனுபவங்கள் இவனை கோபம் கொள்ள வைப்பதில்லை​

இப்படி சாந்தமாக அமைதியாக யார் என்ன செய்தாலும் மன்னித்து விடுகிறானே என பார்வதி பல சமயங்களில் அவனை நினைத்து வேதனை படுவார்.​

ஆனால் அந்த தாய்க்கு தெரியாது மகனும் கோபம் கொண்டு எழுவான் அதற்க்கு ஒரு வகையில் நாமும் காரணமாவோம் என்று. சாது மிரண்டால் காடு கொள்ளாது என சும்மாவா சொன்னார்கள் பெரியவர்கள்.​

காலையில் உடற்பயிற்சி முடித்து கொண்டு வீட்டுக்கு வந்தவனுக்கு அவன் தாய் இரண்டு பெண்களின் புகை படத்தை காட்டவும் வெகுண்டு எழுந்து விட்டான்.​

" ஒருமுறை என்னை அசிங்க படுத்தியது போதாதா உங்களுக்கு திரும்பவும் அதே தப்பு. போதும் நான் உங்களை நம்பி என் வாழ்க்கையை ஒப்படைத்தது. இனி என் வாழ்க்கையில் கல்யாணம் என்னும் அத்தியாயமே இல்லை. திரும்பவும் பொண்ண பாக்குற மண்ணை பார்க்குறேனு என்கிட்டே போட்டோ எடுத்துட்டு வந்திங்க" என மிரண்ட்டும் விழிகளுடன் தன் அறையை நோக்கி சென்று விட்டான்.​

அறையினுள் வந்தவனுக்கு கோபம் அடங்கவே இல்லை. கோபத்தை கட்டுப்படுத்தவும் அதே நேரம் வேலைக்கு புறப்படவும் ஷாவெரின் கீழ் சென்று நின்று கொண்டான், அந்த குளிர்ந்த நீராலாவது அவனது சூட்டை தனிக்கமுடியுமா என்று. தண்ணீர் முகத்தில் வழிய தம் இரு கண்களையும் மூடிக்கொண்டான். அவன் நினைவலைகள் அவனை இரண்டு வருடம் பின்னோக்கி இழுத்து சென்றது.​

அவனுடன் பயணித்து நாமும் அவன் கடந்து வந்த அவனது கசப்பான நாட்களை தெரிந்து கொள்வோம்​

Privi

Moderator

சஷ்டியை நோக்க சரவணா பவனார்…​

சிஷ்டருக் குதவும்செங்கதிர் வேலோன்….​

பாதமிரண்டில் பன்மணிச் சதங்கை….​

கீதம் பாட கிண்கிணி ஆட…​

எனும் பக்தி காவியமான சஷ்டி கவசத்தை யூடியூப்பில் ஒளிரவிட்டு தனது காலை பணிகளை செவ்வென செய்தாள் நம் கதையின் நாயகி உமையாள்.​

“அக்கா... அக்கா.... அக்கா….”​

என அந்த வீடே அதிரும் வண்ணம் உமையாளை அழைத்து கொண்டிருந்தான் நீலன் என்னும் நீலகண்டன். அவளும் " என்னடா வேணும் இப்போ உனக்கு நான் வீட்டு வேலை செய்வதை பார்த்துக்கொண்டு தானே இருக்கின்றாய் அதன் பிறகும் ஏன்டா கத்திக்கொண்டு இருக்கிறாய்" என சலித்து கொண்டு கேட்டாள் உமையாள்​

அவனோ “என்னுடைய வேதியியல்(Chemistry) புத்தகத்த பார்த்தியா” என கேட்டான். அதற்கு அவள் “என்னை கேட்டா எனக்கு என்ன தெரியும் எங்க வச்சியோ அந்த இடத்தில் தேடு” என்றாள். இதன் நடுவே “அம்மா எனக்கு பசிக்கிது பிரெக்பாஸ்ட் வேண்டும்” என்று உமையாளின் சின்னச்சிறு மொட்டு வந்து நின்றது.​

மகிழினி உமையாளின் தவ புதல்வி நான்கு வயது நிரம்பிய குழந்தை. உமையாளின் உயிர்ப்பை இன்னும் தக்க வைத்துக் கொண்டிருப்பது இவளுக்காகத்தான்.​

நீலகண்டன் மருத்துவம் கடைசி வருடம் படித்துக்கொண்டு இருக்கிறான். நாள் தோறும் இதே ஒரு பிரச்சனை அவனுக்கு காலையில் பல்கலைக்கழகம் புறப்படுவதற்கு முன் வீடு கூச்சலிலும் கத்தலிலும் அமர்களப்படும். இந்த மூவர் அணி கொண்டதுதான் இவர்களின் குடும்பம்.​

இவர்களுடன் பயணித்து நாமும் இவர்களின் வாழ்க்கை கதையை தெரிந்துக்கொள்வோம்​

“அப்பாடா ஹ்ம்ம் இப்போதுதான் கொஞ்சம் பிரீயா இருக்கு. யூனிக்கு போய்ட்டான் அடுத்த நம்ம இளவரசி.​

ழிணி…, பட்டு…., அம்மா தங்கம்… சாப்பிடலாமா. இங்க வாங்க அம்மா உங்களுக்கு பீட்ரூட் கஞ்சி செய்து வைத்துள்ளேன் வாங்க சாப்பிடலாம்” என அவள் மகவை உணவு உண்பதற்கு அழைத்து கொண்டிருந்தாள். அதே சமயம் அவளின் வீட்டின் அழைப்பு மணி ஓசை எழுப்பியது.​

விறைத்து சென்று கதவை திறந்தாள் அங்கு கயல் நின்றுகொண்டிருந்தாள். “உள்ள வா, பிரேக்பாஸ்ட் சாப்டியா? " ஆம் சாப்பிட்டேன் அக்கா. “சரி போய் வேலையை ஆரம்பி நான் ழிணிக்கு உணவு குடுத்துட்டு வரேன்." என்றாள்.​

அவளும் சரி என கூறிக்கொண்டு வேலை செய்யும் இடத்திற்கு விரைந்தாள். உமையாள் தனது தம்பிக்காகவும் மகளுக்காகவும் தனக்காகவும் சேர்த்து சுயமாக உழைத்து கொண்டிருக்கிறாள். சுயமாக கைவினை பொருட்கள் செய்து டிக் டொக், இன்ஸ்டாகிராம்,, புலனம் எனும் சமூக வலைத்தளங்களின் மூலம் விற்பனை செய்கின்றாள் , இத்தொழிலின் மூலம் அவர்களின் வாழ்வாதாரத்திற்கு சொற்பமான வருமானம் வருகிறது. உமையாளுக்கு உதவியாக அவள் வேலைக்கு நியமித்தவள்தான் கயல். அவளுக்கும் கணிசமான ஒரு தொகையை மாத வருமானமாக தருகிறாள்.​

"பாப்பா அம்மாவுக்கு வேலை இருக்கு, என் ழிணி குட்டி சமத்து பெண்ணா உங்களோட விளையாட்டு பொருட்களை வைத்துக்கொண்டு விளையாடுவீங்களாம் அம்மா கயல் அக்காவுடன் சென்று வேலையை பார்ப்பேனாம் சரியா" என தனது மகளிடம் கூறினாள்.​

ஓகே அம்மா என்று மகிழினியும் ஒப்புக்கொண்டாள். பின்னர் அவர்களின் வேலை நடக்கும் பகுதிக்கு சென்றாள். உமையாள் தனது வீட்டில் ஒரு அறையை தான் அவளின் வேலைக்காக ஒதுக்கி இருந்தாள்.​

"கயல் எல்லாம் ஓகே தானே". என்று அவள் கேட்டதற்கு "ஹ்ம்ம் ஓகே அக்கா இப்போ வரைக்கும் நமக்கு நாற்பது ஏட்டு ஓர்டர் வந்துருக்கு" என கூறினாள். " "ஹ்ம்ம் சரி நீ வர ஓர்டர்ஸ்ஸ பார்த்து பேக்கிங் வேலைய செய் நான் இன்று செய்ய வேண்டிய கைவினை பொருளை செய்ய ஆரம்பிக்கின்றேன்" என கூறி தன் வேலையை செய்ய போனாள்.​

அப்படி இப்படி என்று அந்த நாள் அவர்களுக்கு சிறப்பாகவே முடிந்தது.​

மறுநாள் சனிக்கிழமை.​

விடுமுறை நாட்களில் நீலன் எப்போதாவது தான் வீட்டில் இருப்பான். அவன் வீட்டில் இருக்கும் சமயங்களில் அவனுக்கும் மகிழினிக்கும் வரும் சண்டைகளை தீர்ப்பதே உமையாளுக்கு பெரும்படாகி போகும்.​

ஆனால் மாமனும் மருமகளும் உணவு என்று வந்து விட்டால் ஒரு கட்சியாகி விடுவார்கள். எவ்வளவுதான் மகிழினியிடம் வம்பு வளர்த்தாலும் அவளுக்கு ஒன்றென்றாள் துடி துடித்து போவான் அந்த பாசக்கார தாய்மாமன்.​

காலை உணவிற்கு இட்லியும் சாம்பாரும் கூடவே நீலனுக்கு பிடித்த கார சட்னியும் செய்தாள் உமையாள்.​

ழினிக்கு பொடி இட்லி சின்ன சின்னதாக செய்து வைத்தாள். மாமனும் மருமகளும் சேர்த்து காலை உணவை உண்டனர். வேலைகளை முடித்து உமையாள் உணவருந்த சென்ற நேரம் அவர்களின் வீட்டு அழைப்பு மணி அடித்தது.​

"அக்கா நீ அமர்ந்து சாப்பிடு முதல்ல நான் போய் யாருனு பார்க்கிறேன்" என்று கூறி கதவை திறக்க சென்றான் நீலன் ஆனால் அவனிற்குத்தான் வந்தது யார் என்று தெரியுமே. அவனது இதழில் சிறு புன்னகை ஒன்றை ஓட்ட வைத்து சென்றான், கதவு திறக்கும் வேளையில் அந்த சிரிப்பு மறைத்திருந்தது. கதைவை திறந்தான் வாசலில் கயல் தான் நின்று கொண்டிருந்தாள் அவனை பார்த்ததும் தலையை குனிந்து கொண்டாள் பாவை அவள்.​

வழி விடுவான் என இவள் காத்துக்கொண்டிருக்க நீலனோ இருகைகளையும் மார்பில் கட்டிக்கொண்டு அவளையே பார்த்து கொண்டிருந்தான். சிறிதுநேரத்தில் அவள் வழி விடாததை கண்டு மெல்ல அவள் விழிகளை உயர்த்தி பார்த்தாள் அந்நேரம் அவனோ தன் இடது புருவத்தை ஏற்றி என்ன வேண்டும் என விழிகளாலே கேள்வி எழுப்பினான்.​

" ஐயோ இவரு நம்ம வாய் திறந்து கேக்காமல் விடமாட்டார் போலயே" என்று மனதோடு புலம்பினாள். பின் கண்களை இறுக மூடி திறந்து ஒரு பெரும்மூச்சை வெளியேற்றி அவனை பார்த்து " வழி விடுங்க உள்ள போகணும்" என கேட்டேவிட்டாள். அவனும் யாரும் அறிய வண்ணம் இதழ்களுக்குள் சிரித்து வழி விட்டு நின்றான்.​

அவளும் சட்டென்று வீட்டினுள் நுழைந்து விட்டாள். அவளுக்கு அப்பாடா என இருந்தது. அவள் சென்ற பின் நீலனோ "இவளை பார்த்த மட்டும் இங்க என்னமோ பண்ணுது" என வலது பக்க மார்பகத்தை தொட்டு தடவி விட்டான்.​

இங்கு இவர்கள் வாழ்க்கை இப்படி செல்ல அங்கு ஒருவனோ சூரியனையே சுட்டெரிக்கும் வெப்பத்தில் தகித்து கொண்டிருந்தான்.​

அவன் ருத்திரன்​

தன் பெயருக்கு ஏற்றார் போல கோபத்தை உறவுக்காரனாய் கொண்டவன். அதுவும் கடந்த மூன்றரை வருட காலமாகத்தான்.​

அதற்கு முன் கோபம் என்றால் கிலோ என்ன விலை என கேட்பவன் தான் இவன். இவனின் சிறு வயது அனுபவங்கள் இவனை கோபம் கொள்ள வைப்பதில்லை​

இப்படி சாந்தமாக அமைதியாக யார் என்ன செய்தாலும் மன்னித்து விடுகிறானே என பார்வதி பல சமயங்களில் அவனை நினைத்து வேதனை படுவார்.​

ஆனால் அந்த தாய்க்கு தெரியாது மகனும் கோபம் கொண்டு எழுவான் அதற்க்கு ஒரு வகையில் நாமும் காரணமாவோம் என்று. சாது மிரண்டால் காடு கொள்ளாது என சும்மாவா சொன்னார்கள் பெரியவர்கள்.​

காலையில் உடற்பயிற்சி முடித்து கொண்டு வீட்டுக்கு வந்தவனுக்கு அவன் தாய் இரண்டு பெண்களின் புகை படத்தை காட்டவும் வெகுண்டு எழுந்து விட்டான்.​

" ஒருமுறை என்னை அசிங்க படுத்தியது போதாதா உங்களுக்கு திரும்பவும் அதே தப்பு. போதும் நான் உங்களை நம்பி என் வாழ்க்கையை ஒப்படைத்தது. இனி என் வாழ்க்கையில் கல்யாணம் என்னும் அத்தியாயமே இல்லை. திரும்பவும் பெண்ணை பார்க்கிறேன் மண்ணை பார்க்கிறேன் என்று என்கிட்டே போட்டோ எடுத்துட்டு வந்திங்க" என கோபத்தில் வார்த்தைகளை பல் இடுக்கினில் துப்பிவிட்டு சென்றான் தனது அறையை நோக்கி​

அறையினுள் வந்தவனுக்கு கோபம் அடங்கவே இல்லை. கோபத்தை கட்டுப்படுத்தவும் அதே நேரம் வேலைக்கு புறப்படவும் ஷவரின் கீழ் சென்று நின்று கொண்டான், அந்த குளிர்ந்த நீராலாவது அவனது சூட்டை தனிக்கமுடியுமா என்று. தண்ணீர் முகத்தில் வழிய தம் இரு கண்களையும் மூடிக்கொண்டான். அவன் நினைவலைகள் அவனை இரண்டு வருடம் பின்னோக்கி இழுத்து சென்றது.​

அவனுடன் பயணித்து நாமும் அவன் கடந்து வந்த அவனது கசப்பான நாட்களை தெரிந்து கொள்வோம்​

Last edited:
Top