Geethasuba
New member
வர்ணங்கள் 8
வர்ணங்கள் மனிதனின் மனோநிலைக்கு ஒப்பிட்டு கூறுவதற்கு தகுந்தவையே! மனிதனை சுற்றி இருக்கும் ஆரா நிறவட்டம் மனிதனின் குணங்கள்,பண்புகள் அதோடு அவனது மனம் சார்ந்தது என்று கேள்விப் பட்டிருக்கிறேன். அந்த விதத்தில் இப்போது நமது ஸுபா பற்றி சொல்லவேண்டுமென்றால் மனதளவில் கொஞ்சம் அல்ல,நிறையவே துவண்டும் சோர்ந்தும் காணப்படுகிறாள்.
அலுவலகத்தில் அயராத உழைப்பு,அவளது முழு நாளையும் விழுங்கி விடுகிறது. ஓயாத அலைச்சலும் உழைப்பும் அவளுக்கு ஜுரம் வருவது போல் உணர்வு . நிம்மதியாக ஒரு நாளாவது படுத்துத் தூங்க வேண்டும் என தோன்றினாலும் , எதுவும் நடக்காது.மகளுக்கு சத்தியம் செய்து இருக்கிறாள். வாராவாரம் சென்னை-பெங்களூரு பயணம். சீதோஷண நிலை மாறுபாடு.
சென்னையின் வெயிலும், பெங்களூருவின் குளிருமாக நிஜத்தில் ஒருவழியாகிக் கொண்டிருந்தாள் சுபா. இன்னும் மூன்று மாதங்கள் என்று அலுவலகத்தில் சொல்லப் பட்டிருந்தாலும் அவையெல்லாம் நடைமுறையில் சற்றும் சாத்திய படாது என்பதை முழுவதுமாக உணர்ந்திருந்தவளுக்கு ‘எவ்வளவு நாட்களுக்கு உடம்பு தாங்கும்’ என்று புது பயம் பிடித்துக்கொண்டது.
வரும் சம்பளத்தில் குடும்பத்தையும் ,வாராவாரம் பயணச் செலவுகளையும் பார்த்துக்கொண்டு, அவளது இருப்பிடம் ,உணவு என அவளால் எதையும் சற்றும் யோசிக்க முடியாத சூழலுக்கு வலுக்கட்டாயமாக தள்ளப் பட்டாள் அந்த பெண்.
அவளுக்கு இன்னும் ஒன்று நன்றாகவே புரிந்தது.,அது தனது காதல் கணவனை கனவில்தான் பார்க்க முடியும்,நிஜத்தில் அது அவ்வளவு சுலபம் இல்லை. பேசாமல், இங்கே பெங்களூருவில் மாற்றல் வாங்கிக்கொண்டு வந்து விட்டால்தான் என்ன? தியா படிக்கும் பள்ளி மிகப் பெரியது.இந்தியா முழுவதிலும் அந்த பள்ளிக்கு கிளைகள் உண்டு.எந்த மாநிலம் சென்றாலும் படிப்பது கஷ்டமாக இருக்காது.’மாற்றல் கேட்போமா’..என்று அவள் மனம் பாட்டுப் பாட ஆரம்பித்து விட்டது.
ஜெயந்தன் பற்றி பெங்களூரு அலுவலகத்தில் கூட வேலை செய்பவர்களுடன் பேசும்பொழுது அவன் மிகப்பெரிய சாம்ராஜ்யத்தில் மன்னன் என்பதுவும்,அவனது முக்கியத் தொழில்களில் கட்டிடம் கட்டுவதும் ஒன்று என்பதை தெளிவாக தெரிந்து கொண்டவளுக்கு கொண்டவனை தேடுவதை காட்டிலும், வந்த வேலையை முடித்துவிட்டு , திரும்பவும் சிங்கப்பூருக்கு சென்று விடுவதே சரி என்று புரிந்தும் விட்டது.
இரண்டு வருஷங்கள் இந்தியாவில் வேலை செய்வது இப்போது கொஞ்சம் மனதுக்கு நெருடலாக கூட உணர தொடங்கிவிட்டாள் . அலுவலகத்தில்,சென்னை ப்ரொஜெக்ட்டுக்கு பதிலாக பெங்களூரு ப்ரொஜெக்ட்டில் தொடர விண்ணப்பித்தாள் . ஆனால்,’அவள் பயிற்சி கொடுத்து அனுப்பப்பட்டதே சென்னையில் இருக்கும் வேலைகளுக்காகத்தான்,அங்கே வேலை தொடங்க இன்னமும் நான்கு மாதங்கள் வரை ஆகும்.
அதுவரை, இங்கே பெங்களூருவில் இருக்கவேண்டும்.பிறகு சென்னை சென்றே தீர வேண்டும்.மறுக்க எந்த வாய்ப்பும் இல்லை’ என்ற மெயில் மலேசிய அலுவலத்திலிருந்து வரவும் வெறுத்தே போனது சுபாவுக்கு.
இதையெல்லாம் சுபா எதிர்பார்த்திருந்தாள் .ஆனாலும், முயன்று பார்க்கலாம் எனும் எண்ணம். சென்னை சென்றால் மட்டும் என்ன மாறிவிடும்? ஜெயந்தனை பார்க்கும் சூழ்நிலை அவளுக்கு எப்போதும் வராது.அப்படியே வந்தாலும்,'நான் அவனது மனைவி'என்பதுவும் அவனுக்கு தெரிந்து இருக்காது. இதில்,மகள் பற்றி வேறு தெரியுமா என்ன?
சுபாவுக்கு இன்னமும்’ தான்’ என்ன நடக்கவேண்டும் என்று விரும்புகிறோம் என்றும்,எதை நோக்கி செல்கிறோம் என்றும் தெளிவில்லை.அதனால் அவளால் தனது இலக்கு நோக்கி செல்லமுடியாது தவிக்கிறாள். ஜெயந்தன் அவனை அவள் விரும்புகிறாள். கணவன் என்பதால் பிடித்தம் என்பதையும் மீறிய உணர்வு அது. அதோடு அவனுடன் வாழ்ந்தநாட்கள் அவளுக்குள் கணவன் மீதான பிடித்தம் என்ற நிலை தாண்டி காதல் என்ற உணர்வை விதைத்து விட்டது.இதற்க்கு மேல் என்ன செய்யவேண்டும் என்று அவளுக்கு தெரியவில்லை.
அந்த வார இறுதியில் சுபா சென்னை வருவதற்காக பதிவு செய்திருந்த டிக்கெட்டு ஆர் ஏ சி வரை சென்றுவிட்டு திடீரென ரத்தாகிவிட்டது என்று அவளது அலைபேசிக்கு தகவல் வர சுபா வேறு வழி இல்லாமல் பஸ்சில் பிரயாணம் செய்ய தீர்மானம் செய்துக்கொண்டாள்.
பேருந்திலும் டிக்கெட் திடீரென கிடைக்குமா என்ன ? ஓஸுர் வரை ஒரு பேருந்து, அங்கிருந்து சென்னை..அவளிடம் இருக்கும் பணத்திற்கு இப்போதைக்கு வாராவாரம் சென்னை வருவதற்கு இவ்வளவுதான் செலவழிக்க முடியும்.
சென்னை செல்லும் பேருந்து நடுவழியில் பிரேக் டவுன் ஆகி நின்றுவிட ,சுபாவுக்கு அழுகையே வந்துவிட்டது. அவள் மனம்' சிங்கபூருலே எவ்வளவு நல்லா இருந்தேன்.எதுக்கு இப்போ இங்கே வந்து இவ்வ்ளவு பாடு படறேன் 'என்று அங்கலாய்த்துக்கொண்டது.
சனிக்கிழமை மதியத்திற்கு பதிலாக இரவுதான் அவள் சென்னை வந்து சேர்ந்தாள். அம்மாவின் களைப்பை புரிந்து கொள்ளும் அளவில் குழந்தை இல்லை. விளைவு,அம்மா-மகள் இருவருக்கும் ஜுரம். சுபாவால் கண்ணைக்கூட திறக்க முடியவில்லை. அலுவலகத்திற்கு அவளது அம்மாவே அலைபேசி மூலமாக தகவல் சொல்லிவிட்டாள் . அந்த வாரம் இரண்டு நாட்கள் ஓய்வில் இருந்த சுபா,மூன்றாம் நாள் சென்னை அலுவலகம் சென்றுவிட்டாள், அங்கே ப்ராஜெக்ட் வேலைகள் இன்னமும் தொடங்கி இருக்கவில்லை. ஆரம்பகட்ட நிலையில் தான் இருந்தது.
அவளது சீனியர் அவளிடம்,"இப்போ நா நம்ம பார்ட்னர் ஆபீஸ் போறேன். நீயும் என்னோட ஜோஇன் பண்ணிக்கோ. பிறகு உன்கிட்ட வேலைய குடுக்கும் பொழுது யூ பீல் பெட்டெர்"என்று அவளையும் அழைத்துக்கொண்டு அண்ணா சாலையில் இருக்கும் அந்த பத்து மாடிக் கட்டிடத்துக்கு அழைத்துச்சென்றார்.
அங்கே வாசலில் பெரிய பிள்ளையார் சிலை அவர்களை வரவேற்றது. ஆர்.ஜெ கான்ஸ்டருக்ஷன்ஸ் என்று தங்க நிற எழுத்துக்களால் பதிக்கப் பட்டிருந்தது. சுவற்றில் அவளது மாமனாரின் படம் ராஜவர்மன் -நிறுவனர் என்று எழுதி மாட்டி வைக்கப் பட்டிருந்தது.
முதலில் பிள்ளையாரை மட்டும் கவனித்துப் பார்த்தவள் சுவற்றில் இருக்கும் படத்தை கவனிக்கவில்லை. அவர்கள் இருவரும் நேரே இந்த ப்ரொஜெக்ட்டிற்கான மேலாளரை காண்பதற்கு அவரது அறைக்குள் சென்றுவிட்டார்கள்.முறைப்படி சுபாவை அறிமுகம் செய்துவைத்தார் அவளது மேலதிகாரி.
பிறகு சுபா வெறும் பார்வையாளராகிப்போக மற்ற இரு ஆண்களும் வேலை பற்றி வெகுநேரம் பேசினார்கள். சுபா அவற்றை மனதில் குறித்துக்கொண்டாள் .
ஒரு வழியாக பேச்சுவார்த்தைகள் முடியும் நேரம் மதிய உணவுக்கான நேரமாகிப்போக,மூவரும் அலுவலக காண்டீனில் சாப்பிட்டார்கள். சுபாவுக்கு உணவு மிகவும் பிடித்திருந்தது. பெங்களூருவில் அலுவலகத்தில் கான்டீன் வசதி இல்லை. வெளியே சாப்பிட்டு நாக்கு மரத்துப் போனது.
அதோடு ஏனோ அங்கே சாம்பாரில் கூட லேசான தித்திப்பு. சுபாவின் அம்மா ஆந்திரா பார்டரில் பிறந்து வளர்ந்ததாலோ என்னவோ சாப்பாடு கொஞ்சம் காரம் அதிகமாக சமைப்பார்.
அந்த சாப்பாட்டை பழகியவளுக்கு பெங்களூருவில் சாப்பாடு பெரிய பிரச்சனை தான். இங்கே சென்னை ப்ரொஜெக்ட்டுக்கு வந்த பிறகு வீட்டிலிருந்து லன்ச் எடுத்துக் கொண்டு செல்ல வேண்டும் என்று நினைத்துக்கொண்டாள்.
மூவரும் உணவை சாப்பிட்டுக்கொண்டே பொது விஷயங்களையும் பேசினார்கள். ஆர்.ஜெ நிறுவனத்தின் சார்பாக பேசிக்கொண்டிருந்த அந்த நபருக்கு அநேகமாக வயது பின் முப்பதுகளில் இருக்கலாம். அலுவலகத்தின் உள்ளே பேசும்பொழுது வேலையை பற்றி மட்டும் பேசியவருக்கு உணவு சாப்பிடும்பொழுது தன்னுடன் அமர்ந்திருக்கும் பெண்ணின் மீதும் ஈடுபாடு வந்துவிட்டது போலும். அவளது சிங்கப்பூர் வாழ்க்கை முறை பற்றி கேட்டுக்கொண்டிருந்தார்.
இவளுக்கு திருமணம் ஆனது பற்றி யாராலும் அவ்வளவு எளிதாக கணித்து விட முடியாது.அதைப்பற்றி இவளாகவும் யாரிடமும் பேச மாட்டாள் . அவளது சென்னை அலுவலகத்தில் கூட அவள் விவாகரத்து பெற்றவளாக இருக்கலாம் எனும் கணிப்புதான். எதிரில் அமர்ந்து பேசிக்கொண்டிருக்கும் ரஞ்சனுக்கு இவளிடம் சுவாரஸ்யம் தோன்றியதை அவன் முகம் அப்பட்டமாய் காட்டியது.
இவளது மேலதிகாரி சதீஷுக்கும் இவை எல்லாம் புரியாது இல்லை. தன் மகள் வயதிலிருக்கும் பெண். என்னதான் சுதந்திரமாக வாழ எல்லோருக்கும் உரிமை உண்டு எனினும், இவளை பற்றி கேள்விப்பட்டவரை ஆண்களிடம் அதிகம் பேசமாட்டாள். அதிகம் சிரிக்கவும் மாட்டாள்.அவளது வேலையை பொறுத்தவரை இன்று வரை ஒரு குற்றமும் யாரும் சொல்லிவிட முடியாது.
ரஞ்சனின் பேச்சு ரசிக்கவில்லை என்பதை சுபாவின் முகமே காட்டிவிட, ரஞ்சன் அதை பற்றி புரிந்து கொள்ளும் நிலையில் இல்லை. சதீசுக்கு புரிந்துவிட்டது.மெதுவாக ரஞ்சனை வேறு பேச்சுகளில் ஈடுபடுத்த முயன்றார்.அதற்குள் சுபா வேகமாக சாப்பிட்டு முடித்துவிட்டாள் .சதீஷ் முடிக்கும் தருவாயில் இருந்தார். அதற்குள் நல்லவேளையாக ,அலுவலகத்திலிருந்து ஏதோ அழைப்பு வர,பாதி உணவில் மன்னிப்பு கேட்டுவிட்டு,அவசரமாக ஓடினான் ரஞ்சன்.
அவன் சென்றவுடன்,சுபா ஒரு பெருமூச்சை வேகமாக வெளியேற்ற,சதீஷுக்கு சிரிப்பு வந்துவிட்டது.இருவரும் சிரித்தவாறே அங்கிருந்து கிளம்பினார்கள். காரில் செல்லும் பொழுது சுபா சதீஷிடம் நேராகவே சொல்லிவிட்டாள் ,"இந்த வழிசல் கூடவா நா வேலை செய்யணும்னு இருக்கு சதீஷ் சார்..வேறே சாய்ஸ் ஏதாவது இருக்கான்னு யோசிக்கிறேன்"என்று.
அவளை ஆழ்ந்து பார்த்தவர், "ப்ச்..இதுக்காகவெல்லாம் யோசிப்பியா சுபா, நிறைய பேருக்கு நிறைய வீக்னஸ் உண்டு.சமாளிச்சு தானே தீரணும் " அவரது கேள்வியில் நியாயம் உண்டு .சுபா மௌனமானாள் .அவளது மௌனம் கண்டு தானே பேச்சை மாற்றினார்,"நாளைக்கு சென்னை ஆஃபீஸ் வறீயா ,இல்ல பெங்களூருக்கு போகணுமா..என்ன பிளான்?"
சுபா சற்று யோசித்துவிட்டு, "சென்னை தான்.இந்த வீக் எண்ட்ல கிளம்புவேன். லீவு அப்ளை பண்ணியிருக்கேன்.இன்னும் ரிப்ளை வரல"
இருவருக்குள்ளும் பலத்த மௌனம்தான் அதன் பிறகு இருவருக்குள்ளும் ஆட்சி செய்தது. சதீஷ் தனது லப்டோபில் வேலை செய்துகொண்டே வர, சுபா சென்னையை சுற்றிப்பார்க்கும் வேலையை செய்துகொண்டு வந்தாள் .
ஜெயந்தனும் சாயாவும் அண்ணாசாலை அலுவலகத்திற்கு வந்திருந்தார்கள். அதற்காகத்தான் ரஞ்சன் அவசரமாக பாதி உணவில் எழுந்து வந்ததே. ரஞ்சனின் அலுவலக அறைக்குள் நுழைந்த ஜெயந்தனுக்கு வெகு பரிச்சயமான மணம் நாசிக்குள் நுழைந்தது. ஏதோ ஒன்று வெகு அருகில் இருப்பதாக உணர்ந்தான். சுபாவின் மணம் அவனது ஆழ் மனதில் மெள்ள இறங்க, அவள் அமர்ந்திருந்த கதிரையை பிடித்தவாறே,அவளது மணத்தை கண்மூடி ரசித்தான். உள்ளே நுழைந்த சாயாவுக்கு அவனது செய்கை வித்தியாசமாக இருந்தது.
ரஞ்சன்,ஜெயந்தனிடம் புது கட்டிடத்தின் கட்டுமானம் பற்றி பேச, சதீசும் சுபாவும் வந்திருந்ததை தெரிவிக்க,"நீங்க அவங்களையும் உங்களோட கூட்டிட்டு வந்திருக்கலாமே.. என்றுவிட்டான். சுபாவின் ஞாபகத்தில் ரஞ்சனின் முகம் மந்தகாசம் நிறைந்த புன்னகையை சிந்த ஜெயந்தன் அவன் முகத்தை கவனிக்க தவறவில்லை. வாய் மொழியாக ஏதும் சொல்லவில்லை எனினும் ஜெயந்தனது முகம் யோசனைக் காட்டியது.
சாயா இதை கவனித்துவிட்டாள் . இனி...