பகுதி – 4
தருணின் மனமோ சூறாவளியில் சிக்கிய மலராக நைந்து போனது...
தன் காதல் தோற்றாலும் மித்ரா அவள் காதலோடு அழகான வாழ்க்கை வாழ்ந்துக்கொண்டிருப்பாள் என்ற, அவன் எண்ணத்தில மண்ணை அள்ளி இட்ட இந்த விதியைக் கண்டு அவன் கோபம் தான் என்ன செய்ய முடியும் ...
இந்தச் சூழ்நிலையில் என்ன செய்வதென்று புரியவில்லை அவனுக்கு... இவ்வளவு கஷ்டத்திலும் வீட்டிற்குத் திரும்பி வரவேண்டும் என்று அவளுக்குத் தோன்றவில்லை. அதுவே அவள் மனநிலையை உணர்த்தியது.
எப்படியெல்லாம் செல்லமாக வாழ்ந்தப் பெண்... இப்பொழுது அவள் வாழ்க்கை இருண்ட வானாமாகிப்போனதற்கு, இந்த விதியை நோகாமல் என்ன செய்வான் தருண்...
படிக்கும் பருவத்தில் காதல் என்ற எண்ணம் அவளுக்கு மனதில் வர வேண்டாம் என்று, அவளை எந்த வகையிலும் தொந்தரவு செய்யாமல், மௌனமாகக் காதல் ராகம் படித்தவனின் மனதில் இப்பொழுதும் அவளைக்குறைக் கூற மனம் வரவில்லை. அவன் காதல் அதற்கு அனுமதிக்கவில்லை…
அவள் வாழ்க்கையில் தன் அத்தியாயம் முற்றிப்புள்ளியென எண்ணி, வேதனையில் வேகமாகத் தன் அறையை நோக்கி நடந்து வந்தவனின் பார்வையில், மித்ராவின் மகனோடு கொஞ்சிக்கெஞ்சி உறங்க வைக்கப்போராடிக்கொண்டிருக்கும் தன் தாயைப் பார்த்தான் தருண்...
அறை வாயிலில் இருந்து மித்ராவின் மகனையே பார்த்துக்கொண்டிருந்தான் தருண்...
தன் நண்பனும் மாமன் மகனுமான, கதிரவேந்தன் சாயலில் எந்தக் கபடமில்லாத மழலையின் சினுங்கலில் மயங்கி நின்றவன் வாழ்க்கையில் , இனி தனக்கான அன்பு இந்த மழலையின் முகத்தில் இருப்பதை உணர்ந்ததும், பிள்ளையைத் தன்னோடு வைத்துக்கொள்ளத் துடிக்கத் தொடங்கிய எண்ணம் தருண் மனதில் தோன்றியது.
தன் இடப்பக்க மார்ப்பைத் தடவியவாறே நின்றுப் பிள்ளையின் முகத்தையே பார்த்தான். தன் உணர்வைக் கட்டுப்படுத்த முடியாமல், வேகமாக வந்து தாயிடம் இருந்து மித்ராவின் மகனை வாங்கி மார்போடு அணைத்தான் .
பிள்ளையின் அணைப்பில் வேதனையில் ஓலமிடும் மனம் அமைதியடைவதை உணர்ந்தான் தருண்.
அதே நேரம் அழும் பிள்ளையின் அழுகையும் நின்றது... தருணிண் கரங்களில் பாதுக்காப்பை உணர்ந்தானோ என்னமோ... அழுகையை நிறுத்திய பிள்ளையைப் பார்த்த ராதிகா, அதிர்ச்சியில் கண்கள் அகல மகனையும் அவன் கையில் இருக்கும் சின்னவனையும் பார்த்தாள்...
எதற்காகவோ ஏங்கித் தவித்து அலைந்துத் திரிந்த மனமோ தன் இடம் வந்தது சேர்ந்தது தருணிற்கு...
அதிர்ச்சியில் விழியகலப்பார்க்கும் தாயைக் கண்டவன் " என்னம்மா இப்படிப் பார்க்கற, உன் பேரனைத் தூக்க எனக்கு உரிமையில்லையா?, என்று கேட்டவன் மீண்டும் 'என்னைத்தவிர யாருக்கு உரிமை இங்கே' என்ற வார்த்தையை மனதிலும் பேசியவன் " தங்கம் வா டா , நம்ம ரூமிற்குப் போகலாம்" என்று அவனை எடுத்துச்சென்றான் தருண்...
தன் அறைக்கு வந்தவன் மித்ராவின் மகனை மென்மையாகத் தொட்டுத் தன் அருகில் கிடத்தினான்...
அவனிடம் "எதுக்குச் செல்லம் இப்படி அழறீங்க" என்று மெல்லக் குனிந்து அவன் நாசியில் தன் மூக்கை வைத்து உரசியவன் "இனி நம்ம வாழ்க்கையில் யாருக்கும் இடமே இல்லை" என்றான் தருண்…
தந்தையின் பாசமும் அரவணைப்பு உணர்ந்திராத மழலைச்செல்வத்திற்கு, தருணினைக் கண்ட ஆனந்தத்தில் அவன் முகத்தில் தன் எச்சிலால் நனைத்து அன்பை நிறைப்பினான் மித்ராவின் மைந்தன் வேதாந்த்...
யாருக்கும் தெரியாமல் அங்கே தருணுக்கும் மித்ராவின் மகனுக்கும் இடையே தந்தை மகன் உறவு பிறந்தது...
ஐந்து மாதமே ஆன, பச்சிளம் பிள்ளையின் மழலையில் தன் வலியை மறந்தான் தருண்...
மறக்கும் உறவை
மயக்கும் உன் புன்னகையில்
கண்டெடுத்தேனடா
வாழ்வியல் உன்
விழியில் படித்தேனடா
தைரியம் உன்
அணைப்பில்
பெற்றேனடா
என் வாழ்வின்
தத்துவமாய் வந்த
எனக்கே எனக்கான
உறவே நீதானடா…
என்று தங்களுக்கு இடையே அழகான உலகினை நிர்மாணித்தான் தருண்...
வேதாந்த் , தந்தையோடு தனக்கான புதிய அத்தியாயத்தை அன்பின் உறவில் எழுதிக்கொண்டு இருந்தான். அவன் தாய் மித்ராவோ தன் தந்தையின் மடியில் தலையைச் சாய்த்து , தன் தவறுக்கான மன்னிப்பை யாசித்தாள்…
மகளின் வாழ்க்கைத் தொடங்கியதுமே நின்றுவிடும் என்று அவர் நினைக்கவில்லை...
காதலித்து ஒடிய மகளின் மேல் கோபம் கட்டுக்கடங்காமல் இருந்தது தான்.. ஆனால் இப்படி எல்லாம் தொலைத்து, கையில் பிள்ளையோடு இந்தச் சின்னஞ்சிறு வயதில் நிற்கதியாக நிற்கும், அவளின் விதியைக் கண்டு அவரின் சினம் சிதைந்துப் போனது…
தளர்ந்து அமர்ந்து இருந்தார் பாலமுருகன்…
அழகியல் மனிதனின் அகத்தை உருவாக்கிறது... அழகு நம் எண்ணங்களில் வெளிபடும்...
நம் எண்ணங்கள் அனைத்தும் நன்மையைத் தருவதாக இருந்தால் , வாழ்வில் அனைத்தும் நன்மையை ஈட்டித்தரும் என்ற கொள்கையில் வாழ்ந்து வந்தவருக்கு , மகளின் நிலை உருக்குலைத்து விட்டது..
விதி இப்படி வீழ்த்தும் என்று அவர் நினைக்கவே இல்லை ,விதி வலியது என்று வலிக்கக் கற்றுக் கொடுத்திருக்கிறது...
சிறு பெண் காதல் என்ற பெயரில் வீடு விட்டுச் சென்றதும் , கோபத்தில் அவள் என்ன ஆனாள்? என்று தெரிந்துக்கொள்ள முயற்சி பண்ணாமல் இருந்ததும், தன் தங்கையைப் பற்றிஆரம்பத்தில் தன்னிடம் பேச வந்த மகனின் வார்த்தைகளுக்குச் செவி சாய்காததும் தன் கோபத்தால் அதைத் தவிர்த்ததும் எல்லாம் ஒரே நேரத்தில் நினைவில் வந்து தன்னைக் கொல்லாமல் கொன்றது... எவ்வளவு பெரிய தவறு செய்துவிட்டேன் என்று காலதாமதாமாக உணர்ந்து வேதனையில் தவித்தார் பாலமுருகன்...
தன்னால் மனவேதனைக்குள்ளானத் தந்தையைக் கண்டதும் மித்ராவிற்கோ ' நான் ஏன் காதலில் வீழ்ந்தேன், நானும் சந்தோஷமாக இல்லாமல், குடும்பத்தில் இருக்கும் அனைவரையும் கஷ்டப்படுத்தி, ஏன் எனக்குக் காதல் என்ற எண்ணங்கள் எனக்குத் தோன்றியது'... அவளுக்கு விடைத்தான் இல்லை ... ஆனால் தொடர்ந்து வந்த எண்ணலைகள் ஓயாமல் அடித்து அவள் மனதை உடைக்கிறது...
இனி வருந்துவதற்கு ஒன்றுமே இல்லை. இன்று இல்லை என்றால் நாளை மாறும் என்ற நிலை மாறி , என்றுமே இப்படித் தான் என்று உணர்ந்த, இந்த நிமிடம் எல்லாவற்றையும் துறந்து நிற்கும் நிலை...
வாழ்க்கையில் எல்லையா! இல்லை... முடிவுக்கான காத்திருப்பு, இப்பொழுதே என்றாலும் பயமோ , வருத்தமோ சிறிதளவும் இல்லை... என் கூட்டிற்கு வந்துவிட்டேன்! பயமென்ன இனி என்ற தைரியம் பெற்றாள் மித்ரா...
அடுத்த நாள் திருமணம் நடைபெறும் வீடு, இப்படிச் சோகத்தில் மூழ்கியது.
பானுமதிக்கு, தன் மகளின் ஒரு வருட வாழ்க்கையைப்பற்றி அனைத்தும் கேட்டுத் தெரிந்தக்கொண்ட பின் என்ன செய்ய என்று தெரியவில்லை ...
ஆண்களின் கைகளில் முடிவு எடுக்கும் உரிமையைத் தார வார்த்துக்கொடுத்த தன் இயலாமையில் தன் மேலே அவருக்குக் கோபம் வந்தது ... என்ன செய்ய ? ஒரு குடும்பத்தலைவியாக எல்லாம் சரிச்செய்ய வேண்டிய பொறுப்பும் இருந்தது பானுமதிக்கு ...
இவ்வளவு பிரச்சனைக்கு இடையில் தன் மகனின் பிழையைத் திருத்த வேண்டிய கட்டாயமும் அவரை மேலும் பலகீனமாக்கியது ...
சோர்ந்துப்போய் அமர்ந்த , பானுமதியின்அருகில் வந்த மதுமிதா... " அத்தை எல்லாம் சரியாகும் , நீங்க கவலைபடாதீங்க... நாம் இப்பொழுது ரேணுகாவின் திருமணத்தைச் சிறப்பாகச் செய்ய வேண்டும் " என்று தைரியம் கொடுத்தாள்...
தோழியின் திருமணத்தில் , தன் வாழ்க்கையைத் தொலைத்தாலும் , அவள் சந்தோசம் மட்டும் தனக்குப் போதும் என்று தனக்குத் தானே மனதை ஆறுதல் படுத்திக்கொண்டாள் ...
நாளைய திருமணம் தன் கணவனுக்கு என்று நினைத்தவளுக்குக் கண்களில் நீர்ச் சுரந்தப்போதும் எதையும் வெளிக்காட்டிக்கொள்ளவில்லை மதுமிதா...
மதுமிதாவின் கரங்களைத் தன் கரத்தோடு பிடித்த பானுமதி " மது , நீயும் வேந்தனும் தான் இந்தக் கல்யாணத்தை நல்லப்படியாக நடத்தித் தரணும்” என்றார் இரு பொருள் பட, அதை உணர்ந்தம் கதிர் வேந்தனுக்குத் தாயின் புத்திசாலிதனத்தில் இதழில் புன்னகைப் பிறக்க, மதுவிற்கோ 'அவர் கல்யாணத்தை அவரே எப்படி நடத்திப்பாரு' என்ற சந்தேகம் மனதில் தோன்றியது ...
அதற்கு மேல் சிந்திக்க விடாமல் “ இவன் கூப்பிட்டான் அப்படியே வந்துட்டேன், அங்கே அப்பா என்ன பண்ணறார் என்று போய்ப் பார்க்கலாம் வா டா" என்று வீட்டிற்கு வந்தவர்களுக்குத் தந்தை மற்றும் மகளின் நிலையைக் கண்டு உறைந்து நின்றுவிட்டனர்...
தந்தையின் மடியில் தலையைச் சாய்த்து அமர்ந்து இருக்கும் மகளைக் கண்டதும் மனதில் வரித்து வைத்த தைரியம் எல்லாம் வடிந்தே போய்விட்டது பானுமதிக்கு...
கதிர்வேந்தன் வேகமாகத் தங்கையின் அருகே செல்வதற்கு முன்னே “ மித்ரா, உன்னிடம் எவ்வளவு முறைச்சொல்லியிருக்கேன், இப்படிச் சோர்ந்துப் போய் உட்காரக்கூடாது என்று , ம்ம் எங்கே எழுந்திரு... பாரு அப்பாவை, என்று மதுமிதாவின் மிரட்டும் குரலில் தன்னிலை உணர்ந்த மித்ரா
“ சாரி அண்ணி” என்றாள்... இது தங்களுள் வழக்காமாக நடக்கும் செயல் தான் என்று புரிந்தது அனைவருக்கும் ...
மதுமிதாவின் பின் நின்றுக்கொண்டிருக்கும் தன் அண்ணனைக் கண்டதும்...
"அண்ணா"... என்று அவன் காலிலேயே வீழ்ந்தாள் மித்ரா...
தங்கையின் இந்தச் செயலைச் சற்றும் எதிர்பாராத கதிர்வேந்தன் அவளை நிமிரத்தி அணைத்தவனின் கண்களில் கண்ணீர் பெருகியது.
அதிலேயே புரிந்தது.தன் தங்கையை மன்னித்து விட்டான் கதிரவேந்தன் என்று.
"நீங்க சொன்ன ஒவ்வொரு வார்த்தைகளையும் நான் கேட்டு இருக்க வேண்டும். கேட்காமல் போனதற்கு இன்று வாழ்க்கையைத் தொலைத்த விட்டேன் அண்ணா. உண்மையான பாசத்தைச் சந்தேகித்தால் என்ன தண்டனைக் கிடைக்கும் என்று நன்றாக உணர்ந்துக்கொண்டேன். என்னையும் என் பிள்ளையையும் வெறுத்துவிடாதே" என்ற அவளின் வார்த்தைகளைக் கேட்டவன்.
"நீ அழாதே மித்து நான் இருக்கேன்... விடு .. நீ குழந்தை டா.. உனக்கு எதும் தெரியாது என்று நன்றாக எனக்குத் தெரியும்... உன் பிடிவாதமும் எனக்குத் தெரியும்... நான் தான் தவறு செய்திட்டேன்... நீ பேசிய வார்த்தைகளை மனதில் வைத்து உன்னைப்பார்க்க வராமல் இருந்தது என் தப்புத்தான். ஒர் அண்ணானாக நான் தவறு தான்! நீ தான் என்னை மன்னிக்கணும்" என்று கண் சிவக்க, தன் தங்கையை ஆறுதல் படுத்த எல்லாப் பழியும் தன் மேல் போட்டுக்கொண்டான் இந்தப் பாசக்கார அண்ணன் கதிர்வேந்தன்.
"மித்ரா... நீ இப்போ அழறதை நிறுத்தப்போறியா இல்லையா, பாரு உன் அண்ணா அழுதால் பார்க்க முடியுமா?" என்று நடுவில் அவனைச்சீண்டியவள்... பால முருகனைப்பார்த்து
“மாமா நீங்க கொஞ்சமு நேரம் ஓய்வெடுங்கள்” என்றவள் ரேணுகாவிடம் “ வா ரேணு , மித்ராவை உன் அறைக்கு அழைத்துப்போகலாம்” என்றாள் மதுமிதா...
"கண்ணைத் துடை மித்து" என்றாள் மதுமிதா.
"சரி அண்ணி" என்றாள் மித்ரா. பெண்கள் மூவரும் தங்கள் அறைக்குச் சென்றனர்
இப்போது மித்ராவை , தனி அறையில் தங்க வைப்பதும் சரியில்லை என்று எண்ணினர் வீட்டினர்...
தங்கையின் ‘அண்ணி’ என்ற வார்த்தைகளைக் கேட்டதும், துயரத்திலும் கதிர்வேந்தனின் முகம் புன்னகையில் விரிந்ததைப் பார்த்து அவன் அன்னை முறைத்தார்...
அவரின் கோபப்பார்வையில் அவர் அருகே வந்தவன்... “ அம்மா, நீங்க தான் எனக்கு இப்ப உதவும் தெய்வம் .. அது தான் எல்லாம் உங்களிடம் சொல்லிட்டேனே ” .. என்றான் நல்ல பிள்ளையைப் போல...
“ என்னடா ரொம்ப நல்லவன்போலப் பேசற .. உன் பொண்டாட்டி மன்னித்தாலும் நான் உன்னை மன்னிக்கவே மாட்டேன்... அவளும் உன்கையால் தாலியை வாங்கிட்டு அவள் பாட்டிற்குப் போய்ட்டா..என்னடா நினைச்சுட்டு இருக்கீங்க இரண்டு பேரும்... கல்யாணம் எல்லாம்
உங்களுக்கு விளையாட்டாகப் போய் விட்டாதா... உன் தங்கையைப் பார்த்தாயா ? திருமணவாழ்க்கை என்ன என்று தெரிவதற்குள், எல்லாம் இழந்து நிற்கிறாள் ... என்ன தான் நாம அவளுக்கு எல்லாம் தந்தாலும் இந்த ஒரு வருட வாழ்க்கையை அவள் வாழ்நாளில் அழித்துவிடாவா முடியும்... அப்படி என்னடா அவசரம் ” என்று இவ்வளவு நேரமும் பிடித்து வைத்த தன் தைரியத்தைத் தோலைத்து , தன் மகன் கரங்களில் கண்ணீர் வடித்தார்...
"அம்மா சாரி ம்மா.. அன்றைய சூழலில் தவறு செய்துட்டேன்... ஆனால் அவளைப்பற்றி உங்களிடம் சொல்லாம் என்று நான் நினைப்பதற்குள் அவள் வீட்டை விட்டுப் போய் விட்டாள்... அவள் எங்கே போவாள் என்று, நான் யோசித்துத் தேடிய இடத்தில் எல்லாம் அவள் கிடைக்கவில்லை... நான் என்ன செய்ய" என்ற தன் மகனின் வார்த்தைகளைக் கேட்டதும் பானுமதி ... “ இதே போல உன் தங்கையை நீ ஏன் தேட முயலவில்லை வேந்தா” என்று அவர் கேள்விக்கு என்ன பதில் சொல்லுவான் ... தங்கையை நம்பி ஏமாந்ததைச் சொல்ல முடியுமா ? அதன் காரணமாக மதுமிதாவிடம் தான் நடந்துக்கொண்ட கீழ் தரமான செய்கைக்கு நியாயம் வைக்க முடியுமா?.. எல்லாம் இழந்து நிற்கும் தங்கையைக் குற்றம் சுமத்த மனம் வரவில்லை கதிர்வேந்தனுக்கு.
அவன் மௌனத்தைத் தவறாகப் புரிந்துக்கொண்ட பானுமதி...
இது தான் அவர் தன் மகனிடம் பேசிய கடைசி வார்த்தைகள்.. பானுமதி , அதன் பின் அவனிடம் பேசுவதை நிறுத்திக்கொண்டார் ...
தான் தங்கையைத் தேடிப்போனதும் , தனக்குப் பயந்து அவள் தற்கொலைச் செய்துக்கொள்வேன் என மிரட்டல் விட்டதும் , எப்படித் தன் அன்னையிடம் சொல்லுவான் வேந்தன்...
தன்னோட பாசம் எல்லாம் சொத்தை அபகரிக்கப் போடும் வேசம் என்று கூசாமல் முகம் பார்த்து அவள் வீசிய வார்த்தைகளினால் உண்டான ரணம் மனதில் ஓரத்தில் ‘இங்கே தான் இருக்கிறேன்’ என்கிறது.
படிக்கும் வயதில் காதல் என்று பிதற்றுகிறாள் தங்கை என்று அறிந்து, அவளை விசாரித்த போது அவள் கூறியப் பொய்களைக் கண் முடி நம்பியதால், தன்னவள் முன் ஏற்பட்ட தலைகுனிவையும், அதனால் தங்களுக்கு உண்டான பிளவினையும் எப்படிக் கூறுவான்.
அவளைத் தேடிச் சென்ற போது, எங்களை உயிரோடு வாழ விடு என்று திரைப்படத்தில் வரும் முத்துப்பாண்டியாகத் தன்னைச் சித்தரித்தது அவள் பண்ணிய கலாட்டாவில் உண்டான அவமானத்தில் அங்கே இருந்து வந்தது, அவள் அவசரபுத்திக்கு எதாவது செய்துக்கொண்டால் என்ற பயமே அவனை எல்லா வகையிலும் நிறுத்தி வைத்திருந்தது ...
தன் தங்கையைச் சீராட்டியவனின் மனது அவளின் செயலில் அன்றே மரித்தது ..இது எதையும் அறியாமல் தன் மேல் கோபத்தை விதைக்கும் தாயின் செயலில் உள்ளுக்குள்ளே இறுகிப் போனான். இதையெல்லாம் யாரிடமும் பகிராமல் மனதிலேயே வைத்திருந்தான் வேந்தன்...
அவள் சின்னப்பெண் கொஞ்சம் பிடிவாதக்காரி... அது தான் அவனைத் தடுத்திருந்தது...
‘பயம்’ தன் தங்கை பிடிவாதக்குணத்தால் எதாவது செய்துவிடுவாளோ என்ற பயம்...
ஆனால் அவளுக்குத் தெரியாமல் கண்காணித்து இருக்கலாம் என்ற எண்ணம் காலதாமதமாகத் தோன்றி என்ன பயன் ...
இந்த நிலையில் அவள் வந்து நிற்க வேண்டும் என்ற அவள் விதியைத் தடுக்க முடியுமா? என்று தன்னைத் தானே நொந்துக்கொண்டான் வேந்தன்...
வீட்டில் இருக்கும் ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு மனநிலையில் உறங்கச் சென்றனர்...
மித்ராவிற்குக் காதல் வயப்பட்ட பின் தான் செய்த, தில்லு முல்லு எல்லாம் நினைவில் வந்து அவளை வதைக்க, அண்ணனின் முகத்தை ஏறெடுத்துப் பார்க்க முடியாமல் தவித்தாள். அவரை நேருக்கு நேர் எப்படிப் பார்ப்பேன் என்று உள்ளுக்குள்ளே புழுங்கினாள். செய்தவைகள் எல்லாம் பிழையாக , எப்படிச் சரி செய்ய என்று தெரியாமல் தவித்தாள்.
மதிமிதாவிற்கோ நாளை நடைபெறும் திருமணத்தால் மனதளவில் கூட அவனை நினைக்கும் உரிமையும் இழக்கப் போகும் தன் நிலைமையை எண்ணி வருந்தினாள்...
ரேணுகாவிற்கோ தன் திருமணம் பற்றிய கவலை இல்லாமல் தன் அண்ணனைப் பற்றி மட்டுமே மனதில் எண்ணங்கள் ஒடிக்கொண்டிருந்தது... அவன் மனதில் இன்னும் மித்ராக்கான காதல் இருக்குமோ என்ற கேள்வி, அவள் மனதில் குடைந்துக்கொண்டே இருந்தது...
அவன் செய்கையில் ஏதோ இருக்கிறது என்று மனது அடித்துக்கொண்டது... கேட்கவும் பயந்தாள் . இப்போது தான் முகம் பார்த்துப் பேசறான், எதையாவது கேட்டு அவனிடம் மீண்டும் ஒரு மௌன யுத்தத்தை அவள் விரும்பவில்லை. எது எப்படியோ அவன் வாழ்க்கை நல்லதாக மாறினால் போதும் என்று தோன்றியது...
இந்தக் காதல் தான் எவ்வளவு பொல்லாதது ... மித்ராவை, குடும்பத்தை எதிர்த்து ஒட வைத்தது , கதிர்வேந்தனை, கட்டாயத் தாலியைக் கட்ட வைத்தது , மனதிலேயே காதலை மறைத்துத் துன்பத்தில் துடிக்கச் செய்கிறது தருணை... இந்தக் காதல் என் வாழ்க்கையில் என்ன செய்யுமோ என்ற பயமும் வந்தது அவளுக்கு ...
திருமணத்தின் முதல் நாள் இரவில் வண்ணக் கனவுகளைச் சுமக்க வேண்டிய விழிகள் தூக்கத்தைத் தொலைத்துப் பயமேறிக் கனத்த மனதோடு தவித்தவளின் அலைப்பேசி அடித்தது...எடுத்துப்பார்த்தாள் அழைத்தது , அவள் வருங்காலக் கணவன்...
அவள் அழைப்பை ஏற்றதும் ரேணு,என்ற அவன் அழைப்பில் ஒட்டுமொத்தக்காதலையும் உணர்ந்தாள் ரேணுகா...
"ம்ம்" என்ற அவளின் குரலில் இருந்த மாற்றத்தை உணர்ந்ததும் "என்னம்மா ஆச்சு" என்று கேட்டான் அவள் வருங்காலக் கணவன் ...
என்ன கூறுவாள்... காதலியாக இருந்திருந்தாள், தன் வேதனையைப் பகிர்ந்து இருப்பாளோ என்னமோ.. நாளை அவன் கையில் தாலியை வாங்கிய பின் அவள் அந்த வீட்டின் மருமகளன்றோ...
தன் கவலையின் கதையில் தன் குடும்பத்தின் மானமும் அடங்கியிருப்பதால் மெல்லயக் குரலில் ஒன்றுமில்லை என்றாள்...
அவனுக்கும் புரிந்தது.. "நீ எதுவும் சொல்ல வேண்டாம் ரேணு.. ஆனால் கவலைபடாதே, எந்தப் பிரச்சனையாக இருந்தாலும் சரியாகிவிடும்... பிரச்சனை என்றால் வலி இருக்கத்தான் செய்யும், காலம் அதைச் சரி செய்து விடும்" .. என்றான் அவளைத் திருமணம் செய்யும் கதிர்வேந்தனின் உயிர் நண்பன் கதிர்வேலன்...
அவனின் வார்த்தைகளில் மனதில் தெம்புப் பிறக்க ரொம்ப நன்றி என்றாள் காதலோடு...
"எதுக்கு இந்த நன்றி தெரிஞ்சுக்கலாமா?" என்றான் சரசதோடு...
"நான் எதுவும் சொல்ல வில்லை , இருந்தும் கோபடாமல் , என்ன ஏன் என்று துருவிக்கேள்வி கேட்காமல், எனக்கு ஆறுதல் சொன்னதற்குத் தான்" ...
"ஓ அப்படியா... குடும்பம் இருந்தால் எதாவது சச்சரவுகள் இருக்கத்தான் செய்யும் , எல்லாமே நாம் தெரிந்துக்கொள்ள வேண்டும் என்று தேவையில்லை ரேணு " ...
புரியுதுங்க என்றவள் “ ஐ லவ் யூ” என்றாள் காதலோடு...
"பார்ரா எவ்வளவு காலம் காத்திருந்தேன் ... இந்த வார்த்தையைக் கேட்பதற்கு.... நாளைக்குக் கல்யாணம் வைத்துக்கொண்டு, என் பக்கத்திலும் நீ இல்லை ... உன்னை" என்றவனை...
"என்னை"இழுத்தவளின் குறும்பில் ஈர்க்கப்பட்டவன், " இப்போ மட்டும் நேரில் இருந்த வைச்சுக்கோ" என்றான்.
"நேரில் இருந்தால் என்ன பண்ணியிருப்பீங்க" என்றவளிடம்
"அதை நாளைக்கு இந்நேரம் தெரிந்துக்கொள்வாயடி" என்றான்...
அவனின் வார்த்தைகளில் இருந்த காதலும் அதன் உணர்வுகளும், அவன் அருகில் இல்லை என்ற போதும் முகம் சிவந்தாள் வெட்கத்தால்...
காதலின் அடுத்தக் கட்டத்தில் இருக்கும் இருவருக்கும்... திருமணம் வாழ்வில் இரு குடும்பத்திற்குள்ளும் எந்தப் பிளவும் வராமல் இருப்பற்கான புரிதல் அவர்களுக்கு இடையே இருந்தது...
ரேணுவின் திருமணம் அவளுக்கு ஆனந்தம்..அவள் தோழிக்குத் வாழ்க்கையைத் திசைமாற்றும் நிகழ்வு... எப்படியெல்லாம் வாழ்க்கையை மாற்றி அமைக்கிறதோ....
தொடரும்…