எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

5 வான்மழை அமிழ்தம் நீ!

priya pandees

Moderator

அத்தியாயம் 5

அமேசான் காடு, அதன் நாற்பது சதவீதம் தென் அமெரிக்காவில் தான் உள்ளது. மீதம் அறுபது சதவிகிதம் வேறு எட்டு நாடுகளில் பரவி கிடக்கிறது. பிரேசிலில் இருந்து பயணிக்கும் தொலைவு குறைவு என்பதாலேயே அந்த வழியைத் தேர்ந்தெடுத்திருந்தனர். காட்டுப் பாதையில் நுழைந்த பின்னரும் பெரிதாக வித்தியாசமின்றியே இருந்தது.

இவர்களைப் போல் அங்கு சுற்றுலா பயணிகளின் வருகையும் அதிகம் இருந்தது. உலகில் உள்ள காடுகளில் பெரிய ஆக்கிரமிப்பைக் கொண்ட காடு அது தான். அங்கு ஆராய்ச்சி செய்யவும் ஆராய்ந்ததைக் கண்டு வியக்கவும் அனேகம் இருந்தன. அதனால் மக்கள் தலைகள் நாட்டிற்குள் இருப்பது போலவே தான் காட்டின் ஆரம்பத்தில் இருந்தது.

எல்லாமே ஒரு எல்லை வரை மட்டுமே. அதற்கு மேல் காட்டிற்குள் வெளி ஆட்களுக்கு அனுமதி இல்லை. ஆனால் இவர்கள் மலைவாழ் மக்கள் இருப்பிடம் வரை செல்வதால், அரசாங்கத்தின் கட்டுப்பாட்டு இடத்தைத் தாண்டி காட்டிற்குள்ளும் பயணிக்க வேண்டி இருந்தது.

அதற்காகவே பாதி வழியில் அவர்களுடன் காட்டின் பாதுகாப்பு அலுவலர்கள் இருவர் வந்து இணைந்து கொண்டனர். இருவருமே இளைஞர்கள், ஒருவன் பெயர் க்ளாடியன், மற்றவன் ஜனோமி.

அமேசான் காட்டிற்குள் நுழைந்து விட்டோம் என அறியும்படி செல்லும் பாதையின் இரண்டு பக்கமும் அடர்ந்த மரங்கள் சூழத் துவங்கியிருந்தது. திரும்பும் திசை எங்கும் அடர்ந்த மரங்கள் மட்டுமே. பறவைகள், குரங்குகள் அதிகம் காணக் கிடைத்தன. இவர்களின் பஸ் சத்தத்திற்கு எல்லாம் பயந்து சிதறி ஓடின. அதன் பின்னரே காட்டிற்குள் நுழைந்து விட்ட உணர்வை பெற்றனர் அந்த மருத்துவர்கள்.

"பஸ்ல கொஞ்ச தூரம் தான் டாக்டர் போக முடியும். அப்றம் மூணு கிலோமீட்டர் நடக்க தான் செய்யணும். எல்லாம் எடுத்து வச்சு ரெடி ஆகிக்கோங்க" என்றனர் தெளிவான ஆங்கிலத்தில், அந்த அலுவலர்கள்.

"மூணு கிலோமீட்டர் எப்டி நடக்குறது? ஜீப் எதுவும் அரேஞ்ச் பண்ண முடியாதா?" என்றனர் இரண்டு மருத்துவர்கள்.

"நடக்கலாம் இட்ஸ் கொய்ட் இன்ட்ரெஸ்டிங்க்‌" என்றனர் சில மருத்துவர்கள்.

"ஜீப் மாதிரிலாம் கிடையாதுங்க. அதுலாம் ஏர் பொலுயஷன கொடுத்திடும்னு காட்டுல வாழ்ற மக்கள் அத அனுமதிக்றதில்ல" என்றான் கிளாடியன்.

"மேல நிக்றவங்கள கூப்பிடுங்க சில மிருகங்கள் பயப்படும், சிலது தாக்க வரும்"

"எல்லாரும் கீழ வந்திடுங்க. இனி ஓபன் டாப்ல இருக்குறது சேஃப் இல்ல. கம் நாம இறங்க வேண்டிய இடமும் வந்தாச்சு எல்லாரும் அவங்கவங்க பேக்பேக்க பேக் பண்ணிக்கோங்க" என யாஷ் மேலே சென்று அழைத்ததுமே அனைவரும் இறங்கி வந்து விட்டனர்.

"ஏன் மாமா? மரத்து மேல இருந்து அனிமல்ஸ் நம்மள அட்டாக் பண்ணுமா என்ன? செம ஃபீல் இங்க வாயேன் சும்மா ஜில்லுன்னு இருக்குல்ல?" என படியில் நின்றவனை மேலிழுத்து கைகளை பரபரவென்று தேய்த்து அவன் கன்னத்தில் வைத்து காண்பித்துவிட்டு அங்கேயே சுற்றி பார்த்து கொண்டு நின்றாள் அவன் மனைவி.

"நல்லாதான் இருக்கும். உனக்கு எல்லாம் பெமிலியரா இருக்கலாம். பட் எனக்கு அனிமல்ஸ்னா பயம், சோ நா போறேன். நீ நின்னு நலம் விசாரிச்சுட்டு மெல்ல வா" என்றவன் கீழே இறங்க போக.

"நா மட்டும் தனியா ஏன் நிக்கணும்? உன் ஆசை எனக்கு தெரிஞ்சு போச்சு. நா நிக்க மாட்டேன்" என அவனை இடித்து கொண்டு முன்னால் அவள் இறங்க போக, அவனும் கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி அவள் வயிற்றில் கோடிழுத்திருந்தான். இயற்கை பருவசூழல் அவனையும் உசுப்பிவிடும் தானே?

"டாக்டர் யாஷ்!" என இடுப்பில் கை வைத்து அவனிடம் திரும்பி நின்றவளை, "ஆமாடி டாக்டர் தான் இறங்கு முன்ன பாத்து. ஃபீவர் வந்துரும் போல இருக்கு எனக்கு" என பிடித்து தள்ளிவிட, முறைத்து பார்த்தாலும் முன்னே இறங்கிச் சென்றாள்.

யாஷ் கீழே வந்ததும், "இதுக்கு முன்ன இங்க வந்துருக்கீங்களா டாக்டர்?" என மாணவர்களில் ஒருவன் கேட்க.

"இல்ல எங்களுக்கும் இதான் ஃபர்ஸ்ட் டைம். அமேசான் காடு ரொம்ப பெரிய ப்ளேஸ் அண்ட் ரொம்ப டார்கெஸ்ட் ஏரியாவும் கூட. சோ எல்லா ஹாஸ்பிடலையும் அவ்ளோ ஈசியா அக்ஷப்ட் பண்ண மாட்டாங்க. இல்லாம இங்க பிரேசில்ல இருந்து கூப்பிடாம நம்மள அங்க இருந்து கூப்பிடணும்னு என்ன அவசியம்? இங்க யாரும் அக்ஷப்ட் பண்ணிருக்க மாட்டாங்க. அதான் நம்ம வந்துருக்கோம். நீங்க எங்கஸ்டர்ஸ் கூட இருந்தா எங்களுக்கு வேலை கொஞ்சம் ஈசியா முடியும் சோ உங்களையும் கூட்டிட்டு வந்தேன். ப்ளீஸ் கோப்ரேட் பண்ணுங்க. அட்வன்ச்சர என்ஜாய் பண்ணணும்னு என் பெர்மிஷன் இல்லாம காட்டுக்குள்ள எங்கையும் போயிடாதீங்க. நீங்க வந்ததுக்கான அடையாளம் எங்கையும் கிடையாது. சோ கண்டுபிடிக்க கவர்ன்மென்ட்ட கூட ஹெல்ப் கேட்க முடியாது. நா சொல்றது புரியுது தான?" என கேட்டு நிறுத்த, வேகமாக தலையை அசைத்து விட்டனர் அந்த இளம் மருத்துவர்கள். சூட்கேஸாக இருந்ததை தோளில் தூக்கிக்கொண்டு நடப்பதற்கு ஏதுவாக மாற்றும் முயற்சியில் இருந்தது மொத்த பஸ்சும்.

"ஒருவேளை யாராவது காணாம போயிட்டா?" என்றாள் வருணி. அவள் வேலையை தான் யாஷ் பார்த்து கொண்டிருந்தானே!

"அதான் சொன்னேனே நீங்க வந்ததுக்கான அடையாளமே கிடையாதுன்னு. சோ நீங்க வரவே இல்லன்னு சொல்லி நாங்க பத்ரமா இருக்குறவங்க மட்டும் எங்க வேலைய முடிச்சு கிளம்பிடுவோம்" என்றான் உண்மையாகவே, விளையாட்டிற்கு கூட என்றில்லாமல்.

"அடப்பாவி மாமா. நா காணாமல் போனாலுமா?" என்றாள் அதிர்ந்து.

"ஆமா கண்டிப்பா. உன்னதான் உங்கப்பா ஹெலிகாப்டர்லாம் வச்சு தேடுவாரே? அவரே கண்டுபிடிச்சு தரட்டும், நீ காணாம போ"

மெல்ல நெருங்கி வந்தவள், "ஏற்கனவே அந்த ஜெனிலியாக்கு உன் மேல ஒரு கண்ணு. அதுக்காகவே என்ன தொலைக்க நினைப்பியே நீ?" என உருட்டி முழிக்க.

"ஜெனிலியாலாம் வேணாம். அங்க காட்ல பொண்ணுங்க பாத்ததில்லையே நீ. இயற்கை அழகுனா அதான். வந்து பாரு. உன் ஆசைக்கு நீ போனப்றம் அதுல எனக்கு யாரு மேட்சா வருவான்னு இப்பவே நீ செலெக்ட் பண்ணி குடுத்துட்டனா கூட ஓகே தான். நாம வரும்போது கையோட கூட்டிட்டே வந்திடுவோம் வருணி. எங்களுக்குள்ள லேங்குவேஜ் பழக எப்படியும் டைம் எடுக்கும்ல?" என்றவனை எட்டி தோளில் கடித்தே வைத்துவிட்டாள்.

"ஷ்! வருணி!" என அதட்டி மற்றவர்களை கண் காட்டி மிரட்டினான்.

"நா செத்தாலும் வேற யாரையும் பாக்க மாட்டேன் லவ் பண்ண மாட்டேன்னு எனக்கு சத்தியம் பண்ணு" என மல்லுக்கு நின்றாள்.

"அதுக்கு நீ சாகாம இரு" என்றவன் அவன் வேலையில் தான் கவனமாக இருந்தான்.

"மாமா!"

அவளை கண்டுகொள்ளாமல், "இனி இவங்க தான் நம்மள கைட் பண்ண போறாங்க. அங்க உள்ள மக்கள் லாங்குவேஜ் நமக்கு புரியாதில்லையா சோ ட்ரான்ஸ்லேட்டர்ஸ்" யாஷ், க்ளாடியன் மற்றும் ஜனோமியை அவர்களுக்கு அறிமுகம் செய்து வைக்க, மற்றவர்கள் முகமன் தெரிவித்துக் கொண்டனர்.

"உங்களுக்கு எப்படி அவங்க லாங்குவேஜ் தெரியும்? நீங்க ஃபாரஸ்ட் ஆபிசர்ஸ் தானே?" என்றாள் வருணி. அவள் மொழியை மையப்படுத்தி தான் அந்த கேள்வியை கேட்டாள்.

"நாங்களும் யனோமாமி இனத்தைச் சேர்ந்தவங்க தான்" என சிரித்தான் ஜனோமி. அதில் மற்றவர்கள் கேள்வி வேறு புறம் திரும்பி விட, சப்பென்று ஆகிவிட்டது வருணிக்கு.

"அப்றம் எப்படி ஃபாரஸ்ட் ஆபிசர்ஸ்?" என ஆர்வமாக கதை கேட்க துவங்க,

"இறங்குங்க பேசிட்டே நடக்கலாம்" என்றவர்கள் முன்னால் இறங்க, மருத்துவர்களும் அவரவர் பயண பொதிகளுடன் இறங்கி பின் தொடர்ந்தனர். பேருந்து அங்கிருந்து வந்த இடத்திற்கே திரும்பியது.

"அமேசான் காட்லயும் மனுஷங்க வாழ்றாங்கன்னு வெளில இருக்க நம்ம மனுஷங்க கண்டுபுடிச்சதும் முதல்ல என்ன செஞ்சுருப்பாங்க?" என யாஷ் மாணவர்களிடம் கேட்க.

"அதெப்புடுறா காட்ல வாழுறாங்கன்னு ஆராய்ச்சி பண்ண கிளம்பிருப்பாங்க" என்றாள் வருணி.

"எக்ஸாக்ட்லி. அப்படி இங்க அவங்க ஆராய்ச்சி பண்ண வந்தப்போ, நிறைய விஷயங்கள் அவங்க பார்வைக்கு வந்தது. அதுல ஒன்னு தங்கம் கிடைக்கும் இடம். தோண்டினா தங்கம் கிடைக்கும்னு தெரிஞ்சதும். அதுல வாழ்ற மக்கள் மற்ற உயிரினங்கள், மரங்கள் மூலிகைகள்னு எதையும் கேர் பண்ணிக்காம. எகனாமிக் டெவலப்மெண்ட் தான் முக்கியம்னு தங்கச் சுரங்கம் தோண்ட ஆரம்பிச்சாங்க. அதுல மொத்த காடும் பாதிக்கப்பட்டது. தடுக்க வந்த இங்க வாழ்ந்த மக்கள் அதிகம் கொல்லப்பட்டாங்க"

"அப்ப எங்கப்பா இருந்துருக்கணும்" என பல்லை கடித்தாள் வருணி.

"அதுல நிறைய அழிவு ஏற்பட்டது. அத கண்டு சமூக ஆர்வலர்களும் சில ஆட்சியாளர்களும் கண்டனம் சொன்னாங்க. இதனால இந்த காட்ட சுத்தி வாழ்ற நாட்டு மக்களுக்கும் நிறைய பாதிப்பு வரும். காட்ல அதோட ட்ராபிகல் க்ளைமேட் மாறுறதால மொத்தமா காடே அழிஞ்சு போகும். உலகத்துக்கு இருபது சதவீத ஆக்ஸிஜன் இங்கிருந்த மரங்கள்ல இருந்து கிடைக்குது. இந்த காடு அழிஞ்சா உலகத்துக்கே பேரழிவுன்னு மற்ற நாடுகளும் பயங்கரமா எதிர்ப்பு தெரிவிக்க ஆரம்பிச்சாங்க. கூடவே முக்கிய அழிவு அமெரிக்காவும்னு சொன்னதும் தான் பயந்து பின் வாங்குனாங்க"

"தங்கச் சுரங்கம் இன்னுமு இருக்குன்னு சொல்றாங்களே டாக்டர்?" ஒருவன் கேட்க.

"ம்ம் அதெப்படி லாபம் தர்றத விட்டு தரமுடியும்? அந்த இடத்த மட்டும் அரசாங்கத்துக்கு ஒதுக்கிகிட்டாங்க. வேறெதையும் தொட மாட்டோம்னு சும்மா பேருக்கு அக்ரீமென்ட் போட்டுகிட்டாங்க. ஆனா ரொம்ப டேமேஜ் இல்லாமலும் தங்களுக்கும் லாபம் இருக்கமாதிரி பாத்துக்குறாங்க. அதுல ஒன்னு அங்க உள்ள மக்களுக்கு சிலபல நன்மைகள் செய்றது. இதோ நம்மள மாதிரி டாக்டர்ஸ் அனுப்பி மெடிக்கல் ஹெல்ப் பண்றது. அவங்க ஆளுங்கள்ல இருந்தே கொஞ்ச ஆட்கள் செலெக்ட் பண்ணி அவங்களுக்கு மிலிட்டரி ட்ரைனிங் குடுத்து இப்டி காட்லயே வேலை போட்டு குடுக்குறது. அரசாங்க வேலை குடுத்த மாதிரி தான் இதுவும். இதனால கவர்ன்மென்ட்டுக்கும் நல்ல பேரு."

"ஓ!" என மேலும் அதைப் பற்றி கேட்டு பேசிக் கொண்டு வந்தனர்.

"எல்லாமே தெரிஞ்சுட்டு தான் ஒரு காரியத்துல இறங்குவியோ மாமா நீ?" என்றாள் வருணி.

"ஆமா தெரியாம விழுந்த புதக்குழி நீ மட்டும்தான்" என்றான் யாஷ்.

"க்வேமேர்?" என நின்று முறைக்க,

"ஆமாண்டி"

"நா பொதகுழியாடா உனக்கு? சொல்லுவியா அப்படி சொல்லுவியா?" என அவன் சட்டையை பிடித்து இழுக்க, மற்றவர்கள் நின்று திரும்பி பார்க்க.

அவள் கையை எடுத்து ஒரு கைக்குள் பிடித்து பேக்பேக்கை அவள் தோளில் ஒன்றை மாட்டி விட்டான். அவ்வளவு நேரமும் அவனே இரண்டை சுமந்து வந்திருக்க, இப்போது மாட்டிவிட்டிருந்தான்.

"காதலர்களா?" என்ற க்ளாடியனுக்கு, மற்ற மருத்துவர்கள், "ஹஸ்பண்ட் அண்ட் வைஃப்" என்றதும், சிரித்துக் கொண்டே நடக்க துவங்கினர்.

"ஏன் அப்படி சொன்ன நீ? எனக்கு கஷ்டமா இருக்கும்னு யோசிக்கவே இல்லல?" என்றாள் சோகமாக வருணி.

"நீ யோசிக்கிறியா? உன் ஹெல்த் பத்தி கவனமே செய்யாம உனக்கு வலிக்க கூடாதுன்னு மட்டும் பாத்துட்டு செல்ஃபிஷா இருக்கியே? எங்களுக்கு அது எவ்வளவு கஷ்டமா இருக்கும்னு நீ யோசிச்சியா?" என கேட்டவாறே, "முன்னாடி நட. இன்னும் ரொம்ப தூரம் போகணும்" என்றதும், முகத்தை உர்ரென்று வைத்துக்கொண்டே தான் வந்தாள்.

"இங்கலாம் பெரிய பெரிய அனிமல்ஸ் வராதா?" என்றார் ஒரு மருத்துவர்.

"வரும். மொத்த காடும் அவங்களுக்கும் சொந்தம் தானே? ஆனா மக்கள் வசிக்குற பகுதின்னு அதுகளுக்கும் தெரியும். கொஞ்சம் சேட்ட புடிச்ச மிருகங்கள் தான் அத்துமீறி வந்து வம்பிழுத்து பார்க்கும். மத்ததெல்லாம் அததுக்குன்னு இடம் ஒதுக்கி அதுல வாழுறாங்க. உலகத்தில் உள்ள அத்தனை மிருகங்களையும் இங்க பார்க்கலாம். இது அமெரிக்கால மட்டும் தான் இருக்கும். இது ஆப்ரிக்கால மட்டும் தான் இருக்கும்னு சொல்லபடுற வகை மிருகங்கள் கூட இந்த அமேசான் காட்ல பார்க்கலாம். நாம அவங்கள தொந்தரவு பண்ணலனா அவங்களும் நம்மள தொந்தரவு பண்ண மாட்டாங்க" என்றான் ஜனோமி.

கதை கேட்டுக்கொண்டே நடந்ததில் யாருக்கும் அவ்வளவு அலுப்பு தெரியவில்லை. நேரமும் மாலை நான்கு மணியை நெருங்கி கொண்டிருந்தது.

"கொஞ்ச நேரத்துல இருட்டிடும். வேகமா நடந்தா குடிலுக்கு போயிடலாம். இல்லன்னா இருட்டுக்குள்ள நடக்க உங்களுக்கு தான் கஷ்டமா இருக்கும்" ஜனோமி சொல்லியவாறு கொஞ்சம் வேகம் கூட்டி நடக்க, எல்லாரும் பேச்சை நிறுத்திவிட்டு நடப்பதில் கவனமாகினர்.

உம்மென்று வந்தவளை திரும்பி பார்த்தவனுக்கு சிரிப்பு வந்தாலும், அமைதியாக வந்தான். முன்னால் போகமாட்டேன் என அடமாக மெதுவாகவே நடக்க, "வேகமா நட வருணி!" என்றான்.

கோவம் வந்து, வேகமாக நடந்து முன்னால் சென்று கொண்டிருந்த கிளாடியன் அருகில் சென்று விட்டாள். அவனிடம் ஆங்கிலத்தில் எதையோ பேசி கொண்டே செல்பவளை முறைத்து பார்த்தவாறு நடந்தான் யாஷ்.

அடுத்த இரண்டு மணிநேரத்தில் ஒரு வழியாக கிராமத்தை வந்தடைந்தனர். இருட்டிவிட்டதால் மக்கள் அவரவர் குடிலுக்குள் முடங்கியிருந்தனர். மூங்கில் வீடுகளும், மரத்தின் மேல் வீடுகளும், குடிசைகளுமாக இருந்தது. தீப்பந்தங்கள் மட்டுமே அந்த வீடுகளின் இருப்பிடத்தை காண்பித்து கொடுத்து கொண்டிருந்தது.

அதில் ஒரு மரவீட்டின் முன் சென்று நின்றனர், கிளாடியன் எதோ மொழியில் சத்தம் கொடுக்கவும், அந்த வீட்டின் கதவைத் திறந்து கொண்டு வெளியே வந்தார் ஒரு முதியவர். அவர் முகம் தெளிவாக தெரியவில்லை எனினும், கூன் விழுந்த நடை அதிக வயதுடையவர் என்பதை காண்பித்து கொடுத்தது. அவர்தான் அந்த கிராமத்தின் தலைவராக இருக்க வேண்டும் என இவர்களும் பார்த்திருந்தனர்.

அவரிடம் கிளாடியன் இவர்களை காண்பித்து ஏதோ கூறிய நொடி அவர் பயங்கர கோபம் கொண்டு க்ளாடியனை கடிவது அவரின் திடீரென உயர்ந்துவிட்ட குரலை வைத்து இவர்களால் புரிந்து கொள்ள முடிந்தது. கையிலிருந்த கம்பால் இரண்டு அடி கூட வைத்துவிட்டார் க்ளாடியனுக்கு.

அதன்பிறகு அவன் சிலபல சமாதானம் செய்திருக்க வேண்டும், அவர் இவர்கள் புறமே திரும்பாமல் உள்ளே சென்று விட்டார்.

"இங்க எல்லாரையும் ஒத்துக்க வச்சு நீங்க ட்ரீட்மெண்ட் பார்க்குறது கொஞ்சம் கஷ்டம் தான். இருந்தாலும் சேர்ந்து ட்ரை பண்ணுவோம்" என்றான் ஜனோமி.

"நீங்க ஃபர்ஸ்ட்டே சொல்லி வைக்கலயா?" என்றான் யாஷ். ஏனென்றால் அவர்களுக்கு எவ்வாறு அனுமதி கடிதம் வருகிறதோ அதேபோல் இங்கும் ஒரு முன்னறிவிப்பு கடிதம் வந்திருக்கும். அதைக்கொண்டு தான் இவர்கள் இங்கு வரை வரவே முடியும்.

"சொல்லிட்டேன். நீங்க இத பண்ணிக்கலனா எங்களுக்கு வேலை கூட இல்லாம போயிடும்னு கூட சொல்லிட்டேன். கேட்கவே மாட்டேங்குறாங்க. நாங்க இங்கிருந்து வேலைக்கு போறதுக்கும் அவ்வளவு போராட்டம். எங்கள எதாவது செஞ்சுடுவாங்கன்னு பயந்தாங்க. ஆனா அப்படி எதுவும் நடக்காம இப்ப இருநூறு பேர்கிட்ட இந்த காட்ட சுத்தி காவல் வேலைக்கு இருக்கோம். எங்க காட்ட நாங்களே பாதுகாக்குறோம். அதுபோல உங்களையும் ஏத்துப்பாங்க"

"எங்களுக்கு இருக்குறதே பிஃப்டீன் டேய்ஸ் தான்"

"அதுக்குள்ள எவ்வளவு முடியுமோ அவ்வளவு பண்ணுங்க டாக்டர்" என்றான் க்ளாடியன்.

"சரி எங்களுக்கு தங்குறதுக்கு?"

"இன்னைக்கு நைட்டுக்கு மட்டும் நாங்க காட்டுற இடத்துல அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க. விடிஞ்சதும் தனித்தனி டென்ட்டே போட்டுடலாம். இருட்டுல எதையும் செய்ய வேணாம்" என ஜனோமி சொல்லவும், தலையசைத்து கொண்டனர்.

அவ்வளவு நேரமும் வீம்புக்கு தள்ளி நின்றவள் மெல்ல மெல்ல நெருங்கி வந்து மாமன் அருகில் நின்றுகொண்டாள். பிறந்ததில் இருந்து பிரதமர் மாளிகையில் வாழ்ந்தவள் ஆகிற்றே, காடும் இருட்டுமே பயமுறுத்தியது என்றால், இப்போது எங்கு தங்கவேண்டுமோ என சுற்றி சுற்றி அந்த இடத்தை பார்த்து கொண்டு நின்றாள்.

க்ளாடியனும், ஜனோமியும் வேகமாக செயல்பட்டனர். இரு மர வீடுகள் ஆளில்லாமல் கிடந்ததை, சுத்தம் செய்தனர். முப்பத்தி மூன்று பேர் தங்க வேண்டும். தாங்குமா இந்த மர வீடுகள் இரண்டும் என பயந்து தான் பார்த்திருந்தனர் மருத்துவர்கள்.

"ஜென்ட்ஸ் ஒரு வீட்டுக்கு ஏறிடுங்க. லேடீஸ் இந்நொரு வீட்டுக்கு ஏறிடுங்க" என வந்து நின்றனர் இருவரும்.

"பாய்ஸ் இருபது பேர் இருக்கோமே. தாங்குமா அது?" என்றான் யாஷ்.

சிரித்த கிளாடியன், "நூறு பேர் தாராளமா தங்கலாம் அதுல. நீங்க நாட்டுக்குள்ள கட்டுற வீடு மாதிரி கிடையாது இது. புயல் காத்தே அடிச்சாலும் ஸ்டெடியா நிக்கும்"

"லேடீஸ் ரெஸ்ட் ரூம் லாம்?"

"அதுக்கு நீங்க கீழ தான் வரணும். நாங்க இங்கேயே தான் இருப்போம் பயம் கிடையாது. பாத்ரூம் வசதிலாம் அங்க கிடையாது. அது ஒரு அருவருப்பான விஷயம் வீட்டுக்குள்ள வைக்க கூடாத கழிவுன்னு இங்க அத சேர்த்து கட்டவே மாட்டாங்க"

"அப்றம் வெட்டவெளிலயா போகணும்?" என்றாள் வருணி.

"ஆமாவாம்" என்றான் யாஷ்.

"சாப்பிட கிழங்கு வகைகள் ஓகேவா?" என்றான் ஜனோமி. அது அவர்களுக்கு பிரச்சினை இல்லை. இதுவரை சென்ற இடங்களில் காடாக இருந்தாலும் தங்குவதற்கு எல்லா ஏற்பாடும் தயாராக இருக்கும். இவர்கள் ஓரிடத்தில் இருக்க அங்கேயே பழங்குடியினர், மலைவாழ் மக்கள் வந்து பரிசோதனை பெற்று சென்றுவிடுவர். இதுவே முதல் முறை மருத்துவர்களும் விழித்துக் கொண்டு நிற்பது.

இருவரும் சென்று இவர்களுக்கு உணவை எடுத்து வரும்வரை அங்கேயே தான் தோளில் மாட்டியிருந்த பையை கூட கீழே இறக்காமல் நின்றனர்.

"மேல ஏறுங்க. சாப்பிடலாம்" என்றதும், மரவீட்டிற்கு படிகளாக இருந்த இடத்தில் ஒவ்வொருவராக ஏறத்துவங்க, "மாமா நா உங்கூட தான் வருவேன்" என அவன் கையை பிடித்து விடாமல் இழுத்தாள் வருணி.

"நமக்கு தனி ரூம்லாம் குடுக்க மாட்டாங்க" என்றான் அவன்.

"பரவால்ல நா உன் கூட தான் வருவேன்"

"கேர்ள்ஸ் கூட போடி. இங்க உனக்கு கம்ஃபர்டபிளா இருக்காது"

"அதுக்கு தான் நானும் சொல்றேன். புது இடம் எனக்கு தனியா சரிபட்டு வராது"

"வாங்க டாக்டர். இன்னைக்கு மட்டும் தனித்தனியா அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க" என சிரித்தான் கிளாடியன். அவர்கள் இருவரும் கையைப் பிடித்து கொண்டு ரகசியம் பேசிக்கொண்டிருப்பதிலேயே அவன் அவனாகவே வேறெதையோ புரிந்து கொண்டு கூறினான்.

"பாரு அவன் நம்மள நக்கலா பார்த்து சிரிக்கிறான்"

"பரவால்ல நா உன்கூட தான் வருவேன்" சொன்னதையே திரும்ப திரும்ப சொல்லிக் கொண்டிருந்தாள். அவனுடன் சென்றால் அவளுக்கு பிடித்தது போல் அனைத்தையும் அவன் பார்த்து கொள்வான் என்ற நம்பிக்கையில் அவனை விட்டு நகரமாட்டேன் என நின்றாள்.

"அவ்வளவு பயமா இருக்குறவ தான் சாக தைரியமா இருக்கியோ? நாளைக்கு ப்ளட் டெஸ்ட் எடுக்குறேன்னு சொல்லு. யாரு சிரிச்சாலும் பரவால்லன்னு உன்ன தூக்கிட்டு போய் என்கிட்ட வச்சுக்குறேன்" என நேரம் பார்த்து பழி வாங்கினான்.

"மாமா!"

"எஸ் வருணி!"

"போடா பன்னிமாடு" என்றவள், இவர்களை பார்த்தவாறே ஏறிக்கொண்டிருந்த ஜெனிலியாவை முறைத்தவாறு வந்து அவள் பின் ஏறினாள்.


"வரமாட்டன்னு நினைச்சேன்? ஆனா யாஷ் ஜெம் தான்" என்றாள் ஜெனிலியா.

"ஆமா நின்னு நல்லா பாத்துட்டு வேணா வா" என தமிழில் சொல்லிவிட்டு வருணி அவளை கடந்து ஏறிவிட,

"என்ன சொன்ன நீ?" என்றாள் ஜெனிலியா.

"ஆமான்னு சொன்னேன் டாக்டர். எனக்கு என் புருஷன தெரியாதா?" என்றாள் இப்போது ஆங்கிலத்தில்.

"பட் நீயும் ஸ்டூடண்ட் பிஹேவியர்ல இரு அதான் யாஷ்கும் மரியாதை குடுக்கும். கட் யுவர் டீனேஜ் பிஹேவியர்"

"ஓகே டாக்டர்" என்றவளுக்கு அவளிடம் கவனம் இல்லை. ஏறும் படியும், மேல் இருக்கும் வீடும் தான் உள்ளே ஆட்டம் காண்பித்து கொண்டிருந்தது.

அருகருகே இருந்தன அந்த மரவீடுகள். எல்லாரும் மேலே ஏறிய பின்னர், யாஷ் ஏற பின்னர் க்ளாடியன் ஏறினான். ஜனோமி பெண்களுக்கு உணவு கொடுக்க அவர்கள் மரவீடு ஏறினான்.

"நாளைக்கே நாங்க இங்க எல்லாருக்கும் செக்கப் ஆரம்பிக்கணும். இங்க சுத்தி உள்ள அஞ்சு கிராமத்தையும் இங்க வரவச்சுடுங்க. அஞ்சு அஞ்சு கிராமமா முடிச்சா தான் எங்களுக்கு சீக்கிரம் வேலை முடியும்" ஏறிக்கொண்டே யாஷ் சொல்ல,

"காலைல எல்லாம் அவங்களே உங்கள வேடிக்கை பாக்க கூடி வந்துடுவாங்க டாக்டர். அப்போ பேசி சரிகட்டிடலாம்" என்ற கிளாடியன், அவர்கள் சாப்பிட உதவ, ஒரு மருத்துவர் பெண்கள் இருந்த இடத்திற்கும் சென்று அவர்கள் சாப்பிட்டு படுக்க உதவி விட்டு வந்தார். யாஷ் சென்றால் வருணி மறுபடியும் ஆரம்பிப்பாள் என அவன் செல்லவில்லை.

படுப்பதற்கு முன் மொத்த பேரும் கூட்டமாக இறங்கி சென்று இயற்கை உபாதைகளை கழித்து விட்டு வந்தனர். அது அவர்களுக்கு அவ்வளவு சுலபமான விஷயமாக இருக்கவில்லை.

ஜனோமி தான் துணைக்கு சென்றான், அவன் அதற்கெல்லாம் அய்யரவு காட்டவில்லை, ஆனால் பல நாட்டிலிருந்து, (ஒரே இடத்தில் இருந்தாலும், அவர்கள் வேலைக்கென்று, படிக்கவென்று வெவ்வேறு இடத்தில் இருந்து வந்தவர்கள் தான்) அப்படி வந்த பெண்கள் தான், இருட்டு, காடு, தனியறை வசதியின்மை, பூச்சி பட்டைகள் அலர்ஜி, சரசர என்ற காற்றின் சத்தத்தின் அதிர்வு என அணைத்து புலம்பல்களுடன் சென்றுவந்தனர்.

மேலே வீட்டிலும் சிறு சிறு குமிழ் விளக்குகள் தான் எரிந்து கொண்டிருந்தது. பயம் இருந்தாலும் நடந்து வந்த அயர்வு உடம்பு தூக்கத்திற்கு கெஞ்சவே செய்ய, வரிசையாக கொண்டு வந்ததிலிருந்து இருக்கும் போர்வை 'ஏர்' மெத்தை போன்றவைகளை விரித்து படுத்து விட்டனர்.

பாதி ராத்திரியில் தன்மேல் உருண்டு வந்து படுத்தவளை, எப்போதும் போல் இழுத்தணைத்துக் கொண்டான் யாஷ். எப்போது எப்படி அந்த வீட்டிலிருந்து இந்த வீட்டிற்கு வந்து அவனருகில் படுத்தாள் என்பதை விடிந்த பின்னர் தான் தெரிந்து கொள்ள முடியும் போலும்.




 
Last edited:

Mathykarthy

Well-known member
அமேசான் காட்டுக்குள்ள நம்மளும் ட்ரிப் போன மாதிரி இருக்கு 🤩🤩🤩🤩

வருணி க்யூட் 🥰🥰🥰 எப்போவும் அவன் கூடவே ஒட்டிட்டே இருக்குறவ அவனை விட்டுட்டு சாகப் போறாளாமா..😒😒. லூசு ட்ரீட்மெண்ட் எடுத்தா என்ன 🤷‍♀️🤷‍♀️🤷‍♀️
 

priya pandees

Moderator
அமேசான் காட்டுக்குள்ள நம்மளும் ட்ரிப் போன மாதிரி இருக்கு 🤩🤩🤩🤩

வருணி க்யூட் 🥰🥰🥰 எப்போவும் அவன் கூடவே ஒட்டிட்டே இருக்குறவ அவனை விட்டுட்டு சாகப் போறாளாமா..😒😒. லூசு ட்ரீட்மெண்ட் எடுத்தா என்ன 🤷‍♀️🤷‍♀️🤷‍♀️
Loose tane sis tight pana sari ahidum
 
Top