பகுதி - 12
தங்கையின் வாழ்க்கையில் நல்லது நடப்பதைக் கண்டு நிம்மதி அடைந்தாலும் அதில் தன் காதல் பலமாக அடி வாங்கியது. இரவில் அவனுக்கு ஓர் அளவிற்கு ஆறுதல் அடைந்த மனதுக்குள் மீண்டும் ஒரு கீறல் மனைவியால் உண்டானதில் அவள் மேல் இருந்த சிறு காதலும் பற்றப் பிடிப்பில்லாமல் வீழ்ந்து போனது.
எந்த உணர்வும் காட்டாமல் அவனுக்குக் கொடுத்த காஃபியைக் குடித்தவன் "எனக்கு இன்றைக்குக் கொஞ்சம் வேலை இருக்கு, சீக்கிரம் போகணும்" என்றவன் தங்கள் வீட்டிற்கு வந்தான்.
அவனுக்குத் தனிமைத் தேவைப் பட்டது.
ஏன்? எனக்கு மட்டும் இந்தக் காதலில் கிடைக்கும் சந்தோஷம் சில மணித் துளிகள் கூட நிற்பதில்லை.
வாழ்க்கையில் இந்தக் காதலுக்கான யோகம் எனக்கில்லை போல என்று பெருமூச்சு விட்டவன். அலுவலகத்திற்குத் தயாராகினான்.
சமையலறையில் " நாங்கச் சமையலைப் பார்த்துக்கறோம் மது, நீ போய் அவனுக்கு என்ன வேணும் என்று பாரு" சட்டென்ற மகனின் முகத்தில் ஏற்பட்ட மாற்றத்தை உணர்ந்ததால் அவளை அனுப்பி வைத்தார் பானுமதி.
"சரிங்க அத்தை " என்றவள் வேகமாகத் தங்கள் அறைக்கு வந்தாள்.
அங்கே கண்ணாடி முன் நின்றுச் சட்டைப் பட்டனைப் போட்டவன் மனைவியின் வரவை உணர்ந்ததும் திரும்பிப் பார்த்தான்.
அவளுக்கு அவன் பார்வையின் அர்த்தம் புரியாமல்,"என்னங்க எதாவது வேணுமா? நான் போய் உங்களுக்கு"… என்று வார்த்தைகளை முடிக்கும் முன்பே
"முதலில் உன்னோட நடிப்பை நிறுத்துகிறயா, நீ எதற்குத் திரும்பி வந்து இருக்க என்பதை என்னிடம் சொல்லி இருக்கலாம், இல்லை ரேணுகாவிடம் சொல்லி என்னிடம் சொல்லச் சொல்லி இருக்கலாம், நான் உன்னிடம் எதுவுமே கேட்டு இருக்க மாட்டேன், இந்தக் கல்யாணம் பற்றிய ரகசியம் நம்மோடுப் போயிருக்கும், இப்போ பாரு, வேண்டாதத் தலைவலி உனக்கு, என் தங்கையின் வாழ்க்கையில் நல்லது நடக்க உன்னோட வாழ்க்கையைப் பலிக் கொடுத்து விட்டாய், வேறு பெண்ணைத் திருமணம் செய்து கொள்ளுங்கள் என்று நேற்றைக்கு நீ சொன்னதை, நான் தான் அப்பவும் தப்பாக நினைத்துக் கொண்டேன், இப்போதும் ஒன்றும் பெருசாக எதுவுமே நடக்கவில்லை, வீட்டில் இருக்கும் பெரியவர்களிடம் நமக்கு இந்த உறவு எதுவுமே சரிபட்டு வராது என்று நானே சொல்லிறேன், உனக்கு விருப்பம் என்றால் போய்க்கலாம்" என்றவன் அவளின் பதிலை எதிர்பார்க்காமல் கிளம்பி விட்டான்.
இப்படி எல்லாம் பேசக் காரணம் என்ன என்று தெரியவில்லை மதுமிதாவிற்கு.
அண்ணியாக , மித்ராவின் வாழ்க்கைச் சரி செய்வது,என் கடமை இல்லையா?… இதற்கு ஏன் இவ்வளவு கோபம், எல்லாத்துக்கும் இப்படிக் கோபம் வந்தால் என்ன தான் செய்ய, எப்படி அவரைச் சமாதானம் பண்ண என்று சோர்ந்துப் போய் அமர்ந்தவளுக்குக் கண்ணீர் மட்டுமே துணையாகிப் போனது.
அழுது அழுது ஒரு கட்டத்தில் தூங்கியே போனாள் மதுமிதா.
வீட்டில் ஆண்கள் எல்லாம் வேலைக்குச் சென்றதும், எல்லாம் சிறிது நேரம் ஓய்வாக அமர்ந்தனர். அப்பொழுது “மது எங்கே? ரேணு என்று கேட்ட ராதிகாவிடம் "அவள் மாமாவைப் பார்க்கப் போனது, இங்கே வரவே இல்லை, நான் போய்ப் பார்த்து விட்டு வரேன்" என்று மதுமிதாவைத் தேடி வந்தாள் ரேணுகா. கதவு உள்ளே தாழ் இடாமல் சும்மா சாத்தி இருந்தது. கதவைத் திறந்து உள்ளே போய்ப் பார்த்தவள் கண்டதோ , அழுதவாறே உறங்கும் தோழியைத் தான்.
மெதுவாக அவள் அருகில் அமர்ந்தவள்," மது என்னடி, தூங்கிடியா?"… என்று எழுப்பியதும், சட்டென ரேணுகாவின் மடியில் படுத்துக் கதறி அழுதாள் மது மிதா.
"என்ன ஆச்சு ஏன் இப்படி அழற" என்று அவள் முகத்தைத் தூக்கி…"அழுவதை நிறுத்த போறியா?… இல்லையா?"… என்று மிரட்டியதும் அழுகையை நிறுத்த முயற்சிச் செய்தாள் மது.
அவளை அணைத்து ஆறுதல் படுத்தியவள், "என்ன நடந்துச்சு… முதலில் அதைச் சொல்லு" என்று கேட்டாள் ரேணுகா.
"அது"… என்று இழுத்தவளிடம்,
" புரியுது உங்க அந்தரங்கமான விஷயத்தை எப்படிச் சொல்ல என்று யோசிக்கிறியா, நான் சத்தியமா யாரிடமும் சொல்ல மாட்டேன், உன்னோட அம்மாவிடம் சொல்ல மாட்டியா? உன்னோட வேதனையை, அது போல நினைச்சுச் சொல்லுடி, நான் உன்னை என் உயிர் தோழியாகத் தான் நினைச்சு இதெல்லாம் கேட்கிறேன்" என்றதும்…
சொல்லறேன் என்றாள் மதுமிதா.
முதல் இரவில் இருந்து இப்போது நடந்த வரை அனைத்தும் ஒன்று விடாமல் கூறினாள் தன் தோழியிடம்.
" நீ வேந்தன் மாமாவைக் காதலிக்கிறாயா மது, மறைக்காமல் உண்மையைச் சொல், இல்லை கழுத்தில் தாலியைக் கட்டிட்டாரு, வேற வழி இல்லாமல் அவரோடு வாழ முடிவெடுத்தாயா"… என்று கேட்டாள் ரேணுகா.
ரேணுகாவின் கேள்வி மனதில் மிகப்பெரிய ரணத்தை உண்டாகியது, தன் தோழியின் கேள்விக்கு 'ஆமாம் அவரை என் உயிருக்கு மேலாக விரும்புகிறேன்' என்று எப்படிச் சொல்ல, தன் தோழிக்கு இப்படி எல்லாம் எண்ணங்கள் தன்னைப் பற்றித் தோன்றும் போது, அவருக்கு எப்படி என் காதலை உணர வைப்பேன் என்று மிகவும் ஆயாசமாக இருந்தது மதுமிதாவிற்கு.
"தப்பாக நினைக்காதே மது... நீ, சொன்னதை வைத்துக் கேட்கிறேன், இவ்வளவு வெறுப்பையும் வார்த்தைகளில் அவரிடம் கொட்டியதால் தான் அவர் இப்படி நடந்து கொள்கிறார், பிடிக்க வில்லை என்றால் எனக்கு விருப்பம் இல்லை என்று சொல்லி இருக்கலாம் ஆனால், உன்னோட ஒவ்வொரு வார்த்தைகளும் அவரை மிகவும் அவமானப்படுத்தி இருக்கு மது. ஏன் இப்படிப் பண்ணினே, அவருக்குச் சப்போர்ட் பண்ணறேன் தவறாக நினைக்காதே, நடந்ததைப் பார்த்தால் அப்படித் தானே இருக்கு என்றாள் ரேணுகா.
"நீ அவரைப் பற்றி என்ன நினைச்சுட்டு இருக்க என்று தெரியவில்லை, ஆனால் அவரு உன்னை மட்டும் தான் நினைச்சுட்டு இருக்காரு, அதுவும் எவ்வளவு வருஷம் தெரியுமா, நீ இந்த வீட்டிற்குக் குடி வந்த இரண்டு மாதங்களில் இருந்து,யோசி எவ்வளவு வருடக்காதல் அவருடையது" என்றாள் ரேணுகா.
அதிர்ச்சியில் உறைந்துப் போனாள் மதுமிதா.
அவனின் கோபத்திற்கான காரணம் சரியானது தான் என்று உணர்ந்தாள் வேந்தனின் மனைவி.
"அவர் அறையில் போய்ப் பார்… உனக்குப் புரியும்… நான் ஏன் சொல்லறேன் என்று… அப்படிக் காதலை மனதில் வைத்து இருப்பவரை… இப்படி எல்லாம் பேசினா… என்ன தான் பண்ணுவாரு" என்று கேட்டாள் ரேணுகா.
"இதெல்லாம் எனக்குத் தெரியாது ரேணு, அவரோட காதல் இவ்வளவு வருடத்தவம் என்று எனக்குப் தெரியல" என்று அழுதாள், அந்த அழுகையில் அவள் இயலாமை இருந்தது,தவறிழைத்ததன் வலிக் கண்ணீராக வழிந்தது.
"உன்னிடம் அவர் காதலைச் சொல்ல வரவே இல்லையா மது"… என்ற கேள்விக்கு
"வந்தாரு"… என்றாள் உள்ளே போன குரலில்.
"என்ன தான் நடந்தது தெளிவாகச் சொல்லு" என்று மீண்டும் கேட்டாள் ரேணுகா.
"அப்பா இறப்பதற்கு முன்பு இருந்தே என்னிடம் பேச முயற்சிப் பண்ணினாரு, எனக்குப் பயம் உன்னைக் காதலிக்கிறேன் சொல்லி விடுவாரோ, அதனால் முடிந்த வரை அவரிடம் பேசுவதைத் தவிர்த்து வந்தேன், அப்பா இல்லாதது எனக்கு ரொம்ப வேதனையைத் தந்தது, நீயும் ஊருக்குப் போயிருந்த நேரம் அது, ரொம்பத் தனிமை உணர்ந்தேன் எனக்கென யாரும் இல்லாத இந்த உலகம் ரொம்ப வெறுமையாக இருந்தது. அதனால் எனக்கு அரசாங்க வேலைக் கிடைக்கும் வரை எதாவது வேற ஊரில் போய் ஆசிரியர் வேலைச் செய்யலாம் என்று ஒரு விளம்பரம் பார்த்து விண்ணப்பித்து இருந்தேன், அந்த வேலையில் வந்த சேருவதற்கான அழைப்பு வந்திருச்சு, நான் இந்த ஊரை விட்டுப் போயிரணும் என்ற எண்ணத்தில் தான் எல்லாம் பேக் பண்ணிட்டு இருந்தேன், அன்றைக்கு இவரு என்னைப் பார்க்க வந்தாரு, நான் எப்படி வெளியே வைத்துப் பேசி அனுப்பாமல் ,ஏதோ நினைவில் அவரை உள்ளே அழைத்தேன், அப்போது
மதுமிதா "உன்னிடம் கொஞ்சம் பேசணும்" …என்றவன் அவள் பேக் செய்து வைத்ததை எல்லாம் பார்த்து "எங்கே போற"?… என்று கேள்வியைக் கேட்டான்.
"நான் இந்த ஊரை விட்டுப் போறேன்"…
ஆமாம் என்ன பேசணும் உங்களுக்கு"…
சிறிது அமைத்திக்குப் பின்,
"நான் உன்னைக் காதலிக்கிறேன் மிதா… உன்னைக் கல்யாணம் செய்து கொள்கிறேன்" என்று வார்த்தைகளை முடிக்கும் முன்பே அவனை எரித்து விடுவது போலப் பார்த்தாள் மதுமிதா.
"எவ்வளவு தைரியம் உங்களுக்கு... கல்யாணம் செய்து கொள்ள ஒரு பெண், காதலிக்க வேறொருத்தியா,
உங்க ஆம்பளைச் சுகத்திற்கு நான் தான் கிடைத்தேனா?… யாருமே இல்லாத பொண்ணுத் தானே, என்ன வேண்டுமானாலும் பண்ணிக்கலாம் என்று நினைச்சுட்டிங்களோ, உங்க பேராசை எதுவுமே என்னிடம் நடக்காது"…என்றவள்
"மரியாதையாக வெளியே போங்க"…என்றாள்
" மதுமிதா என்ன பேசுறோம் என்று தெரிஞ்சுத் தான் பேசுறியா"…
"ஓ நல்லாவே, தெரிந்தது தான் பேசறேன்"…
"ஒரு பொம்பளப் பொறுக்கியிடம் பேசறேன் தெரிஞ்சுத் தான் பேசறேன்"…
அவளின் இந்த வார்த்தை, தன்னைப் பற்றி எவ்வளவு கீழ் தரமாக நினைத்து இருக்கிறாள், தினம் பார்க்கும் நம்மைப் பத்தி ஏன் இப்படி எல்லாம் நினைத்தாள் என்ற கோபத்தில்
"யாருடிப் பொறுக்கி"… என்றவன் அவளை நெருங்கி வந்தான்.
வேகமாக அவளிடம் இருந்து தள்ளி நின்றதோ அவள் படுக்கை அறையின் வாசலில்.
"இதோ உங்க லட்சணம் தான் தெரியுதே"…
"என்ன என் லட்சணத்தில் என்ன குறையைக் கண்ட"…
"யாருமே இல்லாத நேரத்தில், ஒரு பெண்ணிடம் தவறாக நடக்கப் பார்க்கும் உங்க லட்சணத்தைத் தான் சொல்லறேன்"…
அவளின் அடுக்கு அடுக்கான குற்றச்சாட்டில் பொறுமையின் எல்லையைக் கடந்தான் வேந்தன், ஏன் இவ்வளவு கோபம் அவளுக்கு என் மேல் என்று புரியாமல், தன்னை அவமானப்படுத்தும் படியாக அமையும் அவள் செய்கை எல்லாம் அவன் மனதில் ஒளிந்து இருக்கும் மிருகத்தை மெல்ல மெல்லத் தட்டி எழுப்பியது.
"என்னம்மா, பார்த்த… உன்னிடம் என் காதலைத் தானேடிச் சொல்ல வந்தேன், எதற்கு இப்படி எல்லாம் என்னைத் தரக்குறைவாகப் பேசுகிறாய்" என்று அப்பொழுதும் பொறுமையாகக் கேட்டான்.
"இப்படி எவ்வளவு பெண்களிடம் போய்க் காதலைச் சொன்னீங்களோ, நான் உங்களுக்கு எத்தனையாவது பெண் என்று யாருக்குத் தெரியும்"…
"தப்புப் பண்ணற மதுமிதா" என்று அவன் வார்த்தைகள் எல்லாம் சினத்தில் தெறித்து விழுந்தது.
"இதற்கெல்லாம் நான் பயபட மாட்டேன்… வெளியே போகச் சொன்னேன் உங்கள" … என்றவள் அவன் கையைப் பிடித்து வெளியே தள்ளப் போகவும் அவள் கையை இறுகப் பிடித்தவன் அவளைத் தன் பக்கமாக இழுத்தான்.
அவனிடம் இருந்து இப்படியொரு எதிர் வினையை, சற்றும் எதிர்பாராத மதுமிதா "என்னை விடுங்கள்"… என்றாள் உள்ளே போன குரலில்.
"நீ தான் சொன்னியே... நான் யாரு என்று, அதற்குப் பதில் தரணும் இல்லையா"… என்றவன் அவள் இதழில் தன் இதழ்களைப் பதித்தவன்… அவளை மென்மையாகத் தான் கையாண்டான்.
அவனின் இதழ் முத்ததில், மெல்ல மெல்லக் கரையத்தொடங்கினாள் மதுமிதா.
அவள் ஆழ் மனதில் அவன் மேல் இருக்கும் காதல் மேலேறி வந்து அவளைச் சுருட்டி அவன் கையில் ஒப்படைத்தது. அந்தக் காதலை அவளும் உணர்ந்துக் கொண்டிருந்தாள், அதில் அவளை அறியாமலே அவனுக்கு ஒத்துழைக்க அந்த இதழ் முத்ததம் மெல்ல மெல்ல அவர்களின் கூடலுக்கு வித்திட்டது.
அவளைக் கையில் ஏந்தியவன் அவள் படுக்கையில் கிடத்தி, அவளைத் தனதாக்கும் முயற்சியில் ஈடுப்பட்டான்.
ஒரு கட்டத்திற்கு மேல் தன் நிலைமையை உணர்ந்த மதுமிதா வேகமாக அவனைத் தன்னிடம் இருந்து பிரித்தெடுத்தவள், "கடைசியில் உங்க எண்ணம் என்னவென்று சொல்லாமல் சொல்லிட்டீங்கள் தானே" என்ற அவளின் வார்த்தைகள் தன் தவறை உணர்த்தியது வேந்தனுக்கு.
அவள் கண்களையே பார்த்தவனுக்கு அவள் கண்ணீரில் இருக்கும் இயலாமையை உணர்ந்தான்.
அவள் கையைப் பிடித்து எழப்பியவன், அவளை இழத்து வந்து சாமிப் படம் முன்னே நிறுத்தியவன், கீழே விசி ஏறிந்திருந்த சட்டையில் இருந்து புதுத் தாலிச் செயினை எடுத்தவன், அவள் கண்களைப் துளைத்தபடி அவள் கழுத்தில் கட்டினான்.
அதில் என் வாழ்க்கையில் வேற எந்தப் பெண்ணிற்கும் இடமில்லை என்பதைச் சொல்லாமல் சொல்லியவன் வெளியே போக எத்தனிக்க,
" ஓ, தாலியைக் கட்டிட்டா நாய் போல உங்க பின்னாடியே வந்திருவேன் நினைச்சீங்களா, இதைத் தூக்கி எறிஞ்சுட்டு எனக்கான வாழ்க்கையைப் பார்த்துபேனே தவிர உங்களிடம் வரவே மாட்டேன் என்றாள் கோபமாக.
அவள் கோபமும், தான் கட்டிய தாலியைக் கழுத்தில் தொங்க ஆடைகள் விலகியபடி நிற்கும் அவளைப் பார்க்கும் போது, மீண்டும் அவளைத் தன் கைவளைவுக்குள் கொண்டு வரத்துடித்த மனத்தைக் கட்டுப்படுத்தியவன்,திருப்பி அவளை நேருக்கு நேர்ப் பார்த்தவன்,
"உன்னோட இஷ்டம் தான் மதுமிதா, ஆனால் என் கண் முன்னே நீ வந்து விட்டால் அப்புறம் நீ என் மனைவியாகத் தான் இருப்பாய் அதில் எந்த மாற்றமும் இல்லை, இப்போ இல்லை எப்பொழுதும் உன்னைப் போ என்று மட்டும் சொல்ல மாட்டேன்"…
"கட்டிய பெண்ணைப் போ என்று சொல்வது எனக்கு அவமானமாகத் தான் கருத்துகிறேன்"…என்று நீ இங்கே தான் இருக்க வேண்டும் என்றான் அவள் கணவன்.
" சாரி, நான் பண்ணினது தவறு தான், என் கோபத்தைக் கட்டுப் படுத்தி இருக்க வேண்டும், என்ன பண்ண நானும் மனுஷன் தானே"…
"இப்போ நீ ரொம்பக் கோபமா இருக்கே… இந்த நிலையில் எடுக்கும் முடிவு எப்பவுமே தவறாகத் தான் இருக்கும், கொஞ்சம் பொறுமையா யோசி, நான் போயிட்டு அப்பறம் வரேன், இனி என்ன பண்ண என்று யோசிக்கணும் இல்லையா?… நீயும் என்று பேச்சினை நிறுத்தினான்.
என்ன என்று அவனை ஏறிட்டுப் பார்த்தவளை, போய்ச் சரியாக டிரஸ் பண்ணிக்கோ என்றவன் நிற்காமல் சென்றான்.
இனி என்ன செய்வது என்று தெரியாமல் அப்படியே அமர்ந்தவள் மனதில் ரேணுகாவிற்கு என்ன பதில் சொல்வது என யோசித்தவள்,இனி இங்கே இருந்தாள் சரிவராது என்று வேகமாகத் தயாராகி வீட்டை விட்டு வெளியேறினாள்.
தான் செல்ல வேண்டிய ஊருக்குப் போகாமல் பக்கத்துக் கிராமத்தில் தங்கிக்கொண்டேன். இதைப் பற்றி யாரிடமும் பகிராததால் நான் எங்கே இருக்கேன் என்று யாருக்கும் தெரியவில்லை.
"இனி உன் வாழ்க்கையில் இடைஞ்சலாக இருக்கக் கூடாது … என்று தான் அப்படிச் செய்தேன் ரேணுகா"… என்று நடந்த அனைத்தையும் ஒளிவு மறைவு இல்லாமல் தன் தோழியிடம் பகிரந்தாள் மதுமிதா.
நடந்த அனைத்தையும் கேட்ட ரேணுகா," இவ்வளவு கோபம் உனக்கு வருமா மது… என்னவெல்லாம் பேசி இருக்கச் சாமி… என்றவள்
"இன்னும் என் கேள்விக்குப் பதில் வரவில்லை"…
என்ன கேள்வி என்று பார்த்தவளிடம்
"நீ இங்கே வரக்காரணம் மித்ராவின் நல்லதுக்குத் தானா?… இல்லை உன் கல்யாண வாழ்க்கையைத் தக்க வைத்துக் கொள்ளவா?"… என்ற ரேணுகாவின் கேள்விக்கு
"நான் அவரை உயிருக்கு உயிராகக் காதலிக்கிறேன், அது மட்டும் தான் சொல்லுவேன் "…
"ஆனால் அதைவிட என்னால்…உங்களுடைய வாழ்க்கையில் எந்த விதத்திலும் துன்பம் வந்துவிடக் கூடாது என்று நினைத்தேன்"…
"அது தவறாக எனக்குத் தோன்றவில்லை"…
"அப்போ அது தவறாகப் படவில்லை… இப்போது என்ன நினைக்கிறாய், நீ எடுத்த முடிவு பற்றி... சரி தானா?... சொல்லு மது…
ரொம்பப் புத்திசாலித்தனமான நடந்து கொண்டதாக நினைப்பா உனக்கு… நீயாக ஒன்று நினைத்து… நீயாக ஒரு முடிவு எடுத்து, உன் வாழ்க்கை மட்டும் இல்லாமல்… உன்னோட புருஷன் வாழ்க்கையும் சேர்த்திக் குழப்பி வைச்சு இருக்க… அதனால் தான், நீ என்ன பண்ணினாலும் அவருக்கு நம் குடும்பத்துக்குப் பண்ணுகிறாள் என்ற எண்ணம் வராமல், எல்லாம் தவறாக நினைக்க வைக்குது… நீ தான் பேசிப் புரிய வைக்கனும்…உன்னோட காதலை… உனக்கும் உன்னோட வாழ்க்கையில் அவருடைய துணை எந்த அளவுக்கு வேணும் என்று உணர வைக்கணும்… அது உன் கையில் தான் இருக்கிறது மதுமிதா".
"நன்றாகப் புரியுது ரேணு… ஆனால் அது ரொம்பச் சுலபமாக நடக்காது என்றும் தெரியும்… ஆனால் என்னோட உயிர் இருக்கும் வரைக்கும், நான் என் முயற்சியைக் கை விட மாட்டேன்... கண்டிப்பாக அவரோடு காதலும் அன்பும் நான் பெறுவேன்".
"நீ என்னைத் தவறாக நினைக்க வில்லைத் தானே" என்று கேட்டாள் மதுமிதா.
"இல்லை மது, உன் நிலைமை எனக்குப் புரியுது, பெயர்க் குழப்பம் தான் எல்லாத்துக்கும் காரணம். இதை மாமாவும் உணருவாரு. நம்பிக்கை வை. அவர் காதல் உங்களைச் சேர்த்து வைக்கும்” என்று தன் தோழிக்கு ஆறுதல் கூறியவள் அவளை அணைத்துக்கொண்டாள்.
இந்த அணைப்பும் ஆறுதலும்
மதுமிதாவிற்கு நம்பிக்கைத் தருவதாக இருந்தது.
வீழ்ந்து விடாமல் மரத்தை
தாங்கும் விழுதாய்
மண்ணில் வீழ்ந்தாலும்
முளைக்கும் விதையாய்
நிலவின் அருகே வீற்றிருக்கும்
ஒற்றை நட்சத்திரமாய்
மனதில் மரித்துக் கொண்டு
இருக்கும் நம்பிக்கையை
உயிர்ப்பிக்கும் சக்தியாய்
என்னில் எனக்காய்
உன்னோட காதல் !