எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

நிழல் போலே நீ எனக்கு - 01

IsaiKavi

Moderator
நிழல் - 1




ஜெனனி ஆங்கில அகாடமி ஒன்றிற்கு சென்று, சோர்வான முகத்துடன் கேட்டை திறந்து கொண்டு வீட்டிற்குள் நுழைந்தாள். முதல் நாள் வகுப்பு என்பதால், காலையில் வகுப்பு ஆரம்பித்து, சாயங்காலம் வரை முடிந்து விடும்.

பஸ் ஸ்டேண்டிற்கு நீண்ட தூரம் நடந்து செல்ல வேண்டும் என்பதால், பஸ்ஸில் ஏறி சீட்டில் அமர்ந்தவுடன், பஸ் மெதுவாக நகர்ந்து செல்லும். பஸ் ஒவ்வொரு இடத்தில் நிறுத்தி, பயணிகளை ஏற்றிய பிறகு மட்டுமே, வேகமாக பிரதான சாலையில் செல்லும்.

பஸ் அவளின் பாடசாலைக்கு முன்னால் சரியாக வந்து நிற்கும். பஸ்ஸிலிருந்து பாடசாலைக்கு அருகில் இறங்கி, வீட்டிற்கு தொலைதூரம் நடந்து செல்ல வேண்டும். அதிலே அவள் மிகவும் களைப்படைந்து விடுவாள்.

வீட்டின் குளியலறையில் குளித்துவிட்டு, சிறிய தூக்கத்தை போட்டு சாயங்காலம் ஆறு மணி போல் எழுந்தாள். அப்போது, அலைபேசியை எடுத்துப் பார்த்துவிட்டு, கட்டிலை விட்டு எழுந்து, முகத்தை கழுவி, துவாளையால் துடைத்து, சாமி அறைக்குச் சென்று, சாமியை கும்பிட்டு, திருநீறு பூசி, அறைக்குச் சென்றாள்.

பாடத்தை மீட்டுவதற்கு முன்னர், அலைபேசியில் நண்பிக்கு குறுஞ்செய்தி அனுப்பிக் கொண்டிருந்த போது,

“ ஜெனனி..” அவள் தாய் வசந்தா சமயலறையில் இருந்து சத்தமாக அழைத்தார்.. கதையின் நாயகி ஜெனனி உயர்தர பரீட்சை எழுதி முடிந்து , பரீட்சை முடிவின் தேர்வுகள் வரும் வரைக்கும் காத்துக் கொண்டு இருக்கும் 20 வயது பாவை.. தற்போது ஆங்கிலம் கற்பதற்காக இரண்டு மாத கோர்ஸ்க்கு அகாடமி ஒன்றிற்கு சென்று கொண்டு இருக்கிறாள்...




தாய் வசந்தா தந்தை இராஜேந்திரன் இவர்களின் மூத்த மகள் ஜெனுஷா திருமணம் முடித்து கணவரின் ஊரிற்கே சென்று செட்டில் ஆகிவிட்டாள்..இரண்டாவது மகள் ஜெனனி தற்போது இவர்களுடன் இருப்பதே இவள் ஒருத்தி மட்டுமே..





“ என்னம்மா ?” சோர்ந்த குரலில் அவள் கேட்டாள்..



“ ரூம்ல இருந்து கத்துற குசினிக்கி வா..” என்று அவர் அழைக்க.. உதட்டை சுழித்து ஃபோனை மெத்தையில் வைத்துவிட்டு சமையலறைக்குள் வந்தாள்..



“ என்னத்துக்கு அம்மா கூப்பிடிங்க?..” சிணுங்கி அவள் கேட்க..“ பக்கத்து வீட்டுல ருவணி ஆன்டி உரல் கேட்டாங்க குடுத்துட்டு வாறீயா? ” சின்ன வெங்காயத்தின் தோளை உரித்துக் கொண்டு வசந்தா கேட்டார்.



“ நீங்களே கொண்டு போய் குடுங்க ம்மா..க்ளாஸ்ல படிப்பிச்சத மீட்டணும்..” நிலத்தில் காலை உதைத்து அவள் சொல்ல..



“ உடனே போய் அவங்க வீட்டுல உரலை குடுத்துட்டு வாறதுக்கு உனக்கு என்னடி வருத்தம்..” அவர் அதட்டலாக கேட்க..



“ எதுக்கு கத்துறீங்க கொண்டு போய் குடுத்து தொலையுறேன்.. உரலை தாங்க ..” ஒருவழியாக சரி என்று அவள் கூறியதும் உரலை தூக்கி அவள் கையில் கொடுத்தார்..



“ அதுக்கு ஏன்டி விருப்பம் இல்லாத மாதிரி முகத்த சுருக்கி சொல்லுற “ அவர் கேட்க .. பதில் சொல்லாது “ பாரமா வேற இருக்கு ..அவங்க வந்து எடுத்துட்டு போனா என்னவாம்..நாங்க தான் கொண்டு போய் குடுக்கனுமா ச்சே! ” வாய்க்குள் திட்டி முனங்கி விட்டு..வீட்டை விட்டு வெளியே வந்து ஒற்றை கையால் உரலை பிடித்துக் கொண்டே கேட்டை திறந்து வெளியே சென்றாள்..



ரோட்டிற்கு வந்து ,ருவணி வீட்டை பார்த்து பெரு மூச்சுடன் அவர்கள் வீட்டு கேட்டை திறந்து உள்ளே சென்றாள்..ருவணி வீட்டார் கேட்டை மூடி இருக்கவில்லை, திறந்து வைத்திருந்ததால் அவளுக்கு இலகுவாகப் போனது.. அவர்களின் வீட்டு முற்றத்தில் வலது புறமும் , இடது புறமும் கற்களால் செதுக்கிய குட்டி யானைகள் இரண்டு இருந்தது..பார்க்கவே நிஜ யானைகள் போல் தத்துரூபமாக இருக்கும்..



“ இந்த யானைகள் எவன் வைக்க சொன்னது எப்ப பாரு பயம் காடிட்டே இருக்கு..” யானைகளை முறைத்து விட்டு வீட்டுக்குள் சென்றாள்..



பெரிய ஹால் , ஹாலில் இடது புற சுவற்றில் இரு ஜோடிகளின் திருமணப்படம் இருந்தது.. குமாரசிங்க மற்றும் ருவணியின் மூத்த மகன் சஜித் அவனின் மனைவி இஷானி பிரேம் செய்த புகைப்படம் சுவற்றில் பெரிதாக மாட்டப்பட்டு இருந்தது..அதன் அருகில் சிறிய பிரேம் போட்ட கருப்பும் வெள்ளையும் நிறத்தில் இருந்த திருமண புகைப்படம் குமாரசிங்க, ருவணி தம்பதியர்களே படத்தில் இருந்தார்கள்..



அவற்றை பார்த்துவிட்டு தேக்கு மர இருக்கைகள் அதோடு டைனிங் டேபிள் இருந்தது.. அதனை கடந்து உள்ளே சென்றவள் இரண்டு அறைகளில் வலது பக்கம் அறையோடு மாடிக்கு செல்வதற்கான படிக்கட்டு இருந்தது ..அதனை கடந்து சமயலறைக்கு வந்தபோது ருவணி அடுப்பில் சமைத்துக் கொண்டு இருந்தார்..



அநேகமாக இரவு உணவாக இருக்கும்.. அதுவும் அப்பதாச்சியில் அப்பம் ஊற்றிக் கொண்டு இருந்தார்.. அதன் வாசனை அவள் நாசியை சென்றடைந்து நாக்கில் உமிழ் நீரைச் சுரந்தது..‘ வாவ்..அப்பம் சுடுறாங்க நல்ல வாசம் அம்மாட்ட சொல்லணும் நாளைக்கு அப்பம் சுடச் சொல்லி..’ மனதில் எண்ணிக் கொண்டாள்..



ஜெனனி வந்த அரவம் அவருக்கு தெரியவில்லை போலும், “ ஆன்டி ஒயா அம்மாகேன் வங்கெடி இல்லுவா நேத? ( ஆன்டி நீங்க அம்மாட்ட உரல் கேட்டீங்க தானே..) " அவள் குரல் அவர் முதுகு புறம் இருந்து கேட்டகவும்..



“ அனே! துவே ஒயாம ஆவத மமம ஒயாலகே கெதர என்டமய் ஹிடியே.. ( ஐயோ! மகள் நீங்களே வந்துடீங்களா? நானே உங்கட வீட்ட வரலாம் எண்டு இருந்தன்..” சிறு புன்னகையுடன் சொன்னவர் கையில் ஒட்டி இருந்த அப்பம் மாவினை துணி ஒன்றில் துடைத்துவிட்டு “ தென்ன துவே (தாங்க மகள் ) ”அவள் கையில் இருந்த உரலை வாங்கிக் கொண்டார் ருவணி..



“ ஏகட கமக் நே ஆன்டி மமம கெனாவனெ ( அது பரவாயில்ல அன்டி நானே கொண்டு வந்துட்டன் தானே ” அவரைப் பார்த்து அவள் சொன்னாள்..



நிறைய நேரம் அவருடன் பேசிக் கொண்டு இருக்க முடியாதே இராஜேந்திரன் வீட்டுக்கு வரும் நேரம் அவள் வீட்டுக்கு செல்ல வேண்டும் என்று அவளுக்கு தோன்றவே! “ தாத்தா என வெலாவ அன்டி..மம யன்னம் ( அப்பா வீட்டுக்கு வார நேரம் அன்டி நான் வீட்ட போறன்) " என்றவளை " சுட்டக் இன்ட துவே ( கொஞ்சம் நில்லு மகள் ) " என்றவர் ஐஸ்கிரீம் டப்பாவில் இருந்த ஏதோ ஒன்றை கரண்டியால் எடுத்து பேப்பரில் அதனை வைத்து சுற்றி அவள் கையில் திணித்தார்..



அவரையும் கையில் உள்ளதையும் அவள் மாறி மாறி பார்க்க..“ மேக? ( இது?)"..



“ ஒயா கெமதிம புகுல் தோசி துவ ஒயாட தமய்.. கெதர கிஹின் கன்ன..( உனக்கு விருப்பமான புகுல் தோசி(சிங்களவர்கள் உண்ணும் இனிப்பு வகை ) மகள்.. உனக்கு தான் வீட்ட போய் சாப்பிடு.." அவள் தலையை பாந்தமாக வருடிவிட்டு அவர் சொன்னார்..



" தேங்க்ஸ் அன்டி ஏனம் மம கிஹின் என்னம் ( தேங்க்ஸ் அன்டி..அப்ப நான் போய்ட்டு வாறன் ) " இறுக்கமாக இருந்த அவள் முகம் புன்னகை ததும்பியது..“ ஹரி துவே ( சரி மகள்) " என்றவர் அவர் வேலையை பார்க்க ஆரம்பித்தார்..



சமயலறை கடந்து இரு அறைகள் இருக்கும் வழி நடுவில் அவள் நடை நின்றுவிட..ருவணி கொடுத்ததை ருசித்து பார்க்க நினைத்தாள்..காகிதத்தை பிரித்து அதில் இருந்த புகுல்தோசி ஒன்றினை கையில் எடுத்து, வாயில் வைக்கும் முன்..சிவந்த கை ஒன்று நீண்டு அவள் இரு விரல் இடுக்கில் இருந்ததை பறித்து இருந்தது..



“ ஆஹ்..” கையில் இருந்த புகுல் தோசி காணமல் போனதில் கோபமானவள் நிமிர்ந்து பார்த்தபோது , அவ் வீட்டின் அதாவது ருவணியின் இரண்டாவது மகன் சன்ஜீவ வயது 22 ஆகிறது..பல்கலைகழகம் செல்ல தேர்வாகி இருக்கிறான் அதற்கு முன்னர் ஆங்கிலம் படிப்பதற்கு ஜெனனி செல்லும் அகெடமிக்கு தான் அவனும் செல்கிறான்..



இருவரும் ஒரே வகுப்பில் தான் பயில்கின்றனர்..அவன் தான் கை இல்லாத டி-ஷர்ட் அணிந்து சாரம் ( லுங்கி) கட்டி நின்றிருந்தான் “ ஒயாட பிஸ்சுத மகேன் அரன் கன்னே?( உனக்கு பைத்தியமா என்னட்ட பறிச்சி எடுத்து சாப்பிடுற? ) " சீற்றத்துடன் அவள் சொல்ல..



“ ஆஹ்..ஒயாகே லங்க கொடாக் தியனவானே..அய் மமனே கத்தே மொகடத தரஹா வென்னே ஜெனி( உன்கிட்ட நிறைய இருக்கு தானே..ஏன் நான் தானே எடுத்தன் என்னதுக்கு கோவபடுற ஜெனி " அவனின் விழிகள் அவளின் கோபத்தை ரசித்தது.தன்னை ஒருவன் ரசிப்பதை தெரியாமல்..

அவனின் சிவந்த உதடுகள் சிறு புன்னகையுடன் அவளிடம் சொன்னது..




“ ஒயா நங் ஹரிம நரகய் சன்ஜீவ ( நீங்க சரியான மோசம் சன்ஜீவ)" முறைப்புடன் சொல்லிவிட்டு நகர போனவளை “ ஜெனி ஒஹம இன்ட ஹெட்ட ஒயா பந்தி எனவனே ( ஜெனி அப்படியே நில்லு நாளைக்கு நீ க்ளாஸ் வருவ தானே ) " ஒரு ஆர்வத்துடன் அவளிடம் அவன் கேட்க..



மூக்கை சுருக்கிய ஜெனனி “ ஒயாட மொகோ மம பந்தி ஆவாத் நேதத்..( உனக்கென்ன நான் க்ளாஸ் வந்தா சரி வராட்டி சரி ) ” கோபமாகவே அவள் சொல்ல..



“ ஹாஹா..லஸ்ன பூசா மமவ தெக்கம பணின்டமய் பலங் இன்னே ( ஹாஹா.. வடிவான பூனை என்னை பார்த்தாலே பாயதான் பார்த்துட்டு இருக்கு)" சிரிப்பின் ஒலியுடன் அவன் சொல்ல..



அவனை நின்று திரும்பிப் பார்த்து முகத்தை திருப்பி விட்டுச் சென்றாள் அவள்..



கதவின் நிலையில் சாய்ந்து கையை கட்டிக் கொண்டு போகும் அவளை கண்களில் காதலை தேக்கி வைத்து பார்த்துக் கொண்டு இருந்தான் சன்ஜீவ...“ மகே ஹிதே ஒயா விதரமய் இன்னே ஜெனி..கவதாவத் காடவத் ஒயாவ அத்ஹரின்னம நே ( என் மனசில் நீ மட்டும் தான் இருப்ப ஜெனி.. ஒருநாளும் யாரு
க்கும் உன்ன விட்டு குடுக்க மாட்டன்) ” இடது பக்க நெஞ்சை தடவிக் கொண்டு அவனுக்கு மட்டும் கேட்க அவன் சொல்லிக் கொண்டான்..



நீர் பூசணி ( இலங்கையில் சிங்களவர்கள் புகுல் கெடி என்று சொல்வார்கள்)👇

Wax-Gourd.jpg

நீர் பூசணியால் செய்யப்படும் இனிப்பு வகை புகுல் தோசி 👇
big_petha-11410.jpg
 
Top