எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

வான்மழை 11

வான்மழையே 11

காதலிக்கும் காலத்திலும் பரணி இது போல் தங்கத்தை எல்லாம் பரிசளித்தது இல்லை தான். அன்று எதுவும் வித்தியாசமாக தெரியவில்லை‌ சுபாவிற்கு.

ஆனால் இன்று, வருணா முகிலனிற்கு அளித்த ப்ரெஸ்லெட்டை கண்டு முதல் முறையாக அவள்‌ மனதில் வேற்றுமை உண்டானது.

காலையில் கணவன்‌ கொடுத்த புடவையையும், மூக்குத்தியையும் அத்தனை மகிழ்வுடன் வாங்கியவளுக்கு, இப்போது அந்த மகிழ்ச்சி சுத்தமாக இல்லை அவளிடம்.
கணவனின் மேல் சிறு‌மனத்தாங்கல் கூட வந்திருந்தது அவள்‌ மனதில்.

“முகிலா, பத்திரிக்கை அடிக்க கொடுக்கணும். எப்புடி நீ தனியா அடிச்சிக்கிறியா? இல்லை நாங்க சேர்த்து அடிச்சிடவா” இரவு உணவு முடித்த பின் அனைவரும் ஹாலில் அமர்ந்திருக்க, கேட்டார் மகாலிங்கம்.

‘வருணாக்ஷியின் விருப்பம் எதுவென்று தெரியாத போது, என்னவென்று கூறுவான்’.

“நான் வருணாக்ஷிக்கிட்ட பேசிட்டு சொல்றேன் ப்பா. அவ ப்ரண்ட்ஸ்க்கு தனியா கொடுக்க விரும்புறாளான்னா? தெரியலை” என,

“சரி முகிலா, எதுனாலும் பேசிட்டு சீக்கிரம் சொல்லு, கல்யாணத்துக்கு நாள்‌ கம்மியா இருக்கு, நாளைக்கு பத்திரிக்கை‌ அடிக்க கொடுக்கணும்” என்றவர் எழுந்து சென்றிருந்தார்.

“இன்னைக்கு‌ குதிரையாறு அருவிப் பக்கம் உன் காத்து அடிச்சிச்சுப் போலயே முகிலு!” என‌ பரணி இழுத்துக் கூற,

அண்ணனின் காதிற்கு விசயம் போய் இருக்கிறது, என்பதை கண்டுக் கொண்டவன்,

“போடா, போடா‌ நானாவது குதிரையாறு தான், நீயெல்லாம் குற்றாலம்‌ வர‌ போய்ட்டு வந்தவனாச்சே” என சிரிப்புடன் முகிலன் கூற,

“ஹி ஹி ஹி!” என அசட்டு சிரிப்பு சிரித்து வைத்தான் பரணி. ஏனெனில் சுபாவும், அவனும் காதலித்த காலங்களில் காலேஜ்‌ டூர் என‌ பொய் சொல்லி விட்டு குற்றாலம் வரை‌சென்று வந்திருக்கின்றனர். அதைத் தான் முகிலன் கூறுகிறான்.

அந்த காதல் நினைவுகளில் மனம் இந்த பரணி சுபாவை பார்க்க, அவளோ‌ அங்கே பேசியதற்கும் தனக்கும் சம்பந்தமே இல்லாதது போல் இருந்தாள். அவள்‌‌ மனமெல்லாம் முகிலனின் ப்ரெஸ்லெட்டையே சுற்றி வந்தது.

மனைவியின் முகத்தை கவனித்தவன், பிறகு பேசிக் கொள்ளலாம் என அப்போதைக்கு விட்டு விட்டான்.

இங்கே, அறைக்கு வந்த முகிலன் வருணாக்ஷிக்கு‌ அழைத்தான்.

“ஹலோ!”

“பிசியா?”

“இல்லை, சொல்லுங்க நானே கூப்படனும்னு‌ இருந்தேன்” வருணா கூற,

“என்ன விசயம் வருணா?”

“இங்கே, கல்யாணப் பத்திரிகை அடிக்க பேசிட்டு இருக்காங்க, என்னை கேட்டாங்க நமக்கு‌ தனியா எதுவும் வேணுமாம்னு, நான்‌ உங்ககிட்டே பேசிட்டு சொல்றேன், சொல்லிட்டேன்”

“நானும் அதுக்குத் தான்‌‌ கூப்பிட்டேன் வருணா, இங்கேயும் பத்திரிக்கை பத்தி தான் பேச்சு!”

“ஓஹோ சரிங்க! என்ன பண்ணலாம்?”

“உனக்கு எப்புடி விருப்பம், சொல்லு”

“எனக்கு, தனியா கார்ட் சின்னதா அடிக்க ஆசை. ஃப்ரெண்ட்ஸ்க்கு எல்லாம் அதை கொடுத்துக்கலாம்”.

“சரி, அப்போ நாளைக்கு ஈவ்னிங்‌ ரெடியா இரு, நம்ம போய் இன்விடேசன் டிசைன் பாத்துட்டு பிரிண்ட் கொடுத்திட்டு வந்திடலாம்.”

“பார்றா! நாளைக்கு உங்களுக்கு எதுவும் வேலை இல்லையா‌ என்ன?” என்றவள் இழுக்க,

“இதுக்கு நான் என்ன பதில் சொல்லனும்னு எதிர்பார்க்குற‌ வருணா நீ?” என்றவன் பொறுமையாய் கேட்க,

“இல்லை‌ சாரி, சும்மா விளையாட்டுக்குத்தான் கேட்டேன்”

“இனி, இந்த மாதிரி விளையாட்டுப் பேச்சு நமக்கிடையில வேண்டாம் வருணாக்ஷி!” என்றவன் அதட்டலாய் கூறிட,

“சரிங்க!” என்றவளுக்கு தனது தவறு‌ புரிய, அமைதியாகி விட்டாள்.

“நாளைக்கு ஈவ்னிங் நானே உங்க வீட்டுல வந்து பிக்கப் பண்ணிக்கிறேன். குட்நைட்” என,

“என் மேல் கோபமா?” அவன் பேச்சினைக் கண்டு அவள் கேட்க,

“இல்லைன்னு சொல்ல மாட்டேன். போய் தூங்கு லேட்டாச்சு” என்றவன் போனை கட் செய்திட,

“ச்சு‌, அதான் சாரி கேட்டேனே, கோபம் இல்லைன்னு ஒரு பேச்சுக்கு சொன்ன் என்னவாம்” என்றவள் புலம்பிய படியே உறங்க செல்ல,

“சேட்டைக்காரி, அப்பப்ப அப்புடி மண்டையில கொட்டுனா தான் அடங்குவா, சட்டுசட்டுன்னு யோசிக்காம பேசிட வேண்டியது. கொஞ்சம் இப்புடி ஸ்ட்ரிக்ட்டா இருந்தா தான் வாயை அடக்குவா” என அவளைத் திட்டியபடியே உறங்க சென்றிருந்தான் முகிலன்.

சாத்விகாவை தூங்க வைத்து விட்டு சுபாவின் வருகைக்காக காத்திருந்தான் பரணி.

சற்றுமுன் அவன் கண்ட மனைவியின் முகமாற்றம் அவனிற்கு நெருடலை ஏற்படுத்த, அவளிடம் பேசுவதற்காக காத்திருந்தான்.

இரவு சமையல்கட்டினை ஒதுங்க வைத்துவிட்டு வந்தாள் அறையினுள் வந்தாள் சுபா.

“துங்கலையாங்க, லைட் ஆஃப் பண்ணிடவா?” என கேட்டப்படி அவள் வர,

“சுபா, இங்க வா உன்கிட்ட கொஞ்ச பேசணும்” பரணி அழைக்க,

“என்னங்க? என்ன பேசணும்?” என்றபடி அவள் கட்டிலில் அவனருகே வந்தமர,

“உனக்கு என்னாச்சு சுபா? கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி ஏன் உன் மொகம் வாட்டமாக இருந்துச்சு?”

“இல்லையேங்க, நான் நல்லத்தானே இருந்தேன்”

“சுபா, உன்னை எனகாகு தெரியாதா? எது உன் மண்டைக்குள்ள கொடையுது?” என்க,

‘எல்லாம் உங்கள் தம்பியின் வருங்கால மனைவி வாங்கிக் கொடுத்த ப்ரெஸ்லெட்டை பற்றித்தான் என சொல்லவா முடியும்’ என நினைத்தவள்,

“எதுவும் இல்லைங்க” என சமாளிக்கப் பார்க்க,

பரணி எதுவும் கூறாது அவளை ஆழ்ந்துப் பார்க்க,
‘இனி, கணவன் தன்னிடம் இருந்து பதிலை வாங்காமல் விட மாட்டான்’ என்பதை உணர்ந்தவள் வாய்த் திறக்கலானாள்.

“இல்லைங்க, இன்னைக்கு முகிலன் தம்பிக்கு வருணாக்ஷி ப்ரெஸ்லெட் கிஃப்ட் பண்ணியிருக்கால” என்க,

“ஆமாம், அதுக்கென்ன?”

“இன்னும் கல்யாணமே ஆகலை, அதுக்குள்ள கோலட் எல்லாம் கிஃப்ட் பண்றா, ஆனா நான் உங்களுக்கு எதுவுமே கொடுக்கலையேங்க” என்றவள் தான் மனதில் நினௌத்த விசயத்தை உல்டாவாக திருப்பி போட்டு பேசி கணவனின் மனதை அறிய முயல,

“அட, சுபா இது எல்லாம் ஒரு விசயமா? அந்தப் பொண்ணு செஞ்சா, நீயும் செய்யனும்னு இருக்கா என்ன? நான் உன்கிட்ட எதுவும் எதிர்பாக்கலை, என்னோட அன்பைத் தான் வெளிப்படுத்துனேன். பதிலுக்கு நீயும் இப்புடித்தான் வெளிப்படுத்தனும்னு நான் சொன்னா அதுக்கு பேரு வாழ்க்கையா என்ன?”

“நீங்க எதிர்பாக்கலை தான்ங்க, ஆனா வருடா விசயம் அப்புடி இல்லை, இதுவரைக்கும் நான் உங்க ஆளுங்க இல்லைன்ற விசயம், அவ்வளவா யாரும் பெருசா எடுத்துக்கலை, ஆனா இனி அப்புடி இல்லைங்க,

ஒவ்வொரு விசயத்துலயும் இனி என்னையும், வருணாவையும் கம்பேர் பண்ணி பாப்பாங்க, ஏன்னா வருணா உங்க ஆளுங்க, பத்தாதுக்கு நல்ல வசதி வேற, அப்போ எல்லாரும் இயல்பா மூத்த மருகளையும் இரண்டாவது மருமகளையும், வச்சுப் பாப்பாங்க.” என்க,

“நீ இவ்வளவு குழப்பிக்க வேண்டாம் சுபா. யார் என்ன பேசினாலும் நம்ம குடும்பத்துக்கு தெரியும் உன்னைப் பத்தி, அப்புடி இருக்கும்போது வீணா உனக்கு ஏன் டென்சன்?”

“இருந்தாலும், வருணா வீட்டாருக்கு வசதியானவங்க, ஆனா நான்!” என்றவள் இழுத்து முடிக்க,

“இங்க வந்த இத்தனை வருசத்துல யாராச்சும், உங்க வீட்டைப்ப பத்தி பேசிருங்காங்களா சுபா, தேவையில்லாத மண்டையில் ஏத்திக்காத, எதுனாலும் நான் இருக்கேன், நம்ம குடும்பம் இருக்கும். நீ தூக்கு நான் லைட் ஆஃப் பண்ணிட்டு வரேன்” என்றவர் எழுந்து செல்ல,

‘இதுவரை என்னை பற்றி பேசவில்லை தான், ஆனால் இனி பேசுவார்களே! நிச்சயம் தன்னை வருணாவோடு பொருத்தி தான் பார்ப்பார்கள் அதில் சந்தேகமில்லை. இந்த விசயத்தில் கணவன் அவளிற்கு உதவப் போவதில்லை. ஆக, அவள் தான் அந்த வீட்டில் அவளை முன்னிறுத்திக் கொள்வதற்கான வேலைகளைய செய்ய வேண்டும்’ என நினைத்தப்படி உறங்கிக் போனாள் சுபா.

அடுத்த நாள் வேலை முடித்து, வருணாவின் வீட்டிற்கு சென்றான் முகிலன். அவன் கிளம்பும் முன்னே வருணாவிற்கு அழைத்துக் கூறியிருந்தான்.

பைக்கில் சென்றவனிற்கு அவளின் வீட்டிற்கு சென்றடைய சற்றே நேரம் எடுத்தது. அவளது வீட்டு வாயிலில் பைக்கை நிறுத்தியவன், அவளை காணாது, பைக்கில் சாய்ந்தமரந்தவாறே அவளிற்கு அழைப்பு விடுக்க,

“இதோ வந்துட்டேன்ங்க!” என போனை காதில் பிடித்தவாறே வந்து கதவினை திறந்தாள் வருணாக்ஷி.

வாயிலில் நின்றவை கண்டு புன்னகைத்தாள் அவனை நோக்கி வர,

வைல்ட் கலர் சுடிதாரில், இன்றும் பூத்த பூவாய் மலர்ந்து சிரித்தவாறு வைத்துக் கொண்டிருந்தவளை ரசித்து படம் பிடித்தன அவனது விழிகள்.

அவளின் பின்னே, அவளது அம்மாவும் பாட்டியும் வர அதுவரை அவளை ரசித்த வண்ணம் நின்றிருந்தவன் சட்டென அட்டென்சன் மோடில் மாறி நேராக நின்றான்.

“வாங்க, தம்பி வீட்டுல எல்லாரும் செளங்கியாங்களா?” மல்லி கேட்க,

“எல்லாரும் நல்லாருக்கோம் அத்தை, நீங்க எப்புடி இருக்கீங்க? பாட்டி உடம்பு நல்லாயிருக்கா?” என் அவரை நலம் விசாரிக்க,

“நாங்க நல்லாருக்கோம் தம்பி, வீட்டுக்கு வாங்க காபி சாப்பிட்டு போவீங்களாம். இப்புதிய வாசலோட நின்னுட்டு இருக்கீங்க”

“இல்லை இருக்கட்டும் பாட்டி, இப்பவே லேட் ஆகிடுச்சு. இப்போ போனா தான் சீக்கிரம் திரும்ப முடியும்.” என அவன் கூறிட,

சரியென்று கூறி இருவரையும் வழியனுப்பி வைத்தனர் மல்லிகாவும் முனிஸ்வரியும்.

பழனியில் இருக்க கூடிய, புகழ்பெற்ற‌ ப்ரிண்டிங்‌ கடைக்கு சென்றும் கொண்டிருந்தனர் இருவரும்.

வந்ததிலிருந்தே‌ முகிலன்‌‌ எதுவும் பேசாமல் வர, அவனிற்கு இன்னும் கோபம் போகவில்லை போல என் நினைத்து அமைதிக் காத்த வருணாவிற்கு‌ ஒருக் கட்டத்தில் முடியாமல் போக,

மெல்ல அவளது தோளை சுரண்டினாள் அவள். அவள்‌ சுரண்டலில் இதழ் பிரித்தவன்,
“என்ன?” என்பதாக திரும்பி பார்க்க,

“இன்னும்‌ கோபம் போகலையா சாரிங்க! இனி அப்புடி பேசமாட்டேன்” என வாக்கு கொடுக்க,

வெறுமேன தலையசைத்தவன், அடுத்து சாலையில் கவனமாகி விட,
‘என்ன? வெறுமனே‌ தலையை‌ மட்டும் அசைச்சிட்டு அமைதியாகிட்டாரு’ என‌ உள்ளுற புலம்பிய வள், அடுத்து அவனை தொந்தரவு செய்யாது அமைதியாகிட,

அவளது அமைதியை‌ உணர்ந்தவன், பைக் கம்பியை பிடித்தபடி வந்த அவளின் ஒற்றைக் கையை தேடிப் பிடித்தவன், அதனை எடுத்து தன்னை சுற்றி போட்டுக் கொள்ள,

அவனது நொடி செய்கையில் திகைத்தவள், பின் சிவந்து விட, அவளது சிவந்த முகத்தை கண்ணாடியூடே பார்த்து ரசித்தவன் மெல்ல அவளது கைகளை வருடி, அழுத்தி விட்டு சாலையில் கவனமாகிட,
உள்ளூர பூத்த மகிழ்வுடன், அவன் எடுத்து சுற்றிக் கொண்டு கையை எடுக்காமல் அவனுடன் பயணமானாள்.

தங்கள் முன் ரகரகமாய் கடைப்‌பரப்ப பட்டிருந்த இன்விடேசனை‌ பார்வையிட்டபடி இருந்தனர் இருவரும்.

எல்லாமே அம்சமாக இருந்ததில் எதை எடுக்கவென சற்று தடுமாறிக் தான் போயினர் இருவரும்.

நீண்ட நிமிடங்களுக்கு பின், பிஸ்தா க்ரின்‌ கலரில் சிவப்பு பார்டர் வைத்த, பத்திரிக்கை இருவர் மனதினையும் கவர, ஒருமித்த மனதாக அதனை தேர்வு செய்திருந்தனர்.

பின் பத்திரிக்கையின் உள்ளே அச்சடிக்கப்பட வேண்டிய தகவல்களை கொடுத்து விட்டு, அதில்‌ சில திருத்தங்களை‌ கூறிவிட்டு அவர்கள்‌ கடையில் இருந்து வெளியேறிய தருணம் மேலும் ஒரு மணி நேரம் கடந்திருந்தது.

இத்தனை தூரம் வந்துவிட்டு, பழனி‌ மலை முருகனை தரிசிக்காது செல்வதில் அவளிற்கு விருப்பம் இல்லாமல் இருக்க,

“ஏங்க, மலை ஏறிட்டு போவோமா?” என ஆவலாய் அவள்‌‌ கேட்க,

கடிகாரத்தை அவளிற்கு தூக்கி காட்டியவன்,
“மணி இப்பவே ஆறு‌ வருணா, இனி உன்னை வீட்டுல இறக்கி விட‌ ஒரு மணி நேரம் ஆகிடும். இதுல நீ மலை ஏற‌ கேக்குற? இருண்ட முன்ன வீடு போய் சேர வேண்டாமா?”

“ப்ச், இவ்வளவு தூரம் வந்துட்டு அவரை பாக்காம போன நல்லாவா இருக்கும்” அவள் முணங்க,

“இன்னொரு நாள் பாத்துக்கலாம்” அவன் முடிக்க,

“அட்லீஸ்ட், மலை அடிவாரமாச்சம் போய் பிள்ளையாரா பாத்திட்டு போவோம்ங்க” அவள் சிணுங்க,

அவன் முறைக்க! அவள் கெஞ்ச! கடைசியாய் அவன் தான் இறங்கி வர வேண்டியதாயிற்று.

அவள் கேட்டது போல், மலை ஏறும் இடத்திற்கு கீழே நின்று திருஆவினான் கோயிலை தரிசித்து விட்டு, அன்று ஒரு நாள் டீ குடித்த தாத்தா இன்றும் நின்றுருந்ததில், வருணாவின் ப்ளீஸில் இருவரும் டீயை‌ குடித்து விட்டு திரும்ப பயணியின் கண்ணில் சிக்கினர்.

“வாம்மா! நல்லாயிருக்கியா?” என இரண்டொரு வார்த்தைகள் வருணாவிடம் பேசியவர், பின் தமையனின் புறம் திரும்பி கண்ணடித்து விட்டு,
“நீ நடந்து ராசா, நேத்து அருவி! இன்னைக்கு கோயில்” என்றவன் சிரிக்க,

“கார்ட் செலக்ட் பண்ண வந்தோம் அண்ணா, அதோட இவ கேட்டாளேன்னு‌ கூட்டிட்டு வந்தேன். உடனே கற்பனை குதிரைய தட்டி விடாத” என்றவன் இடிக்க,

“ஓ…செலக்ட் பண்ணிட்டீங்களா, நானும் அப்பாவும் பத்திரிக்கைக்கு அடிக்க கொடுத்துட்டோம். நீ செலக்ட் பண்ண கார்ட்டோ சாம்பலில் கொடு” என‌ கேட்டு வாங்கி கொண்டவன்,
“சரி நேரமாகிடுச்சு, போய் விட்டுட்டு வா” என கூறி விடைக் கொடுக்க,

இம்முறை அவன்‌ கூறாமலயே அவன் இடுப்பை சுற்றி கையை போட்டுக் கொண்டாள்‌ வருணாக்ஷி.

தன் முன் கிடந்த திருமண பத்திரிக்கையை‌ வெறித்துப் பார்த்தப்படி அமர்ந்திருந்தாள்‌ சுபா.

திருமண பத்திரிக்கையை‌ பார்க்கும் போதே தெரிந்தது விலை உயர்ந்தது என்று.

கார்முகிலனும் - வருணாக்ஷியும் சேர்த்து செலக்ட் செய்து திருமண பத்திரிக்கையும் அதில் இருக்க, இரண்டுமே பார்த்ததும் மனதை பறித்தன.

எப்புடியும் இரண்டுமே ஆயிரத்திற்கு மேல் தான் வந்திருக்கும். திருமண பத்திரிக்கையை‌ பார்த்த சுபாவின் காதில் எதிரொளித்தது மகாலிங்கத்தின் குரல்.

அவர்கள் வீட்டை விட்டுச் சென்று திருமண செய்து கொண்டு வந்த நாள் மகாலிங்கம் ருத்ர தாண்டவம் ஆடினாலும் அவர்களை ஏற்றுக் கொள்ள தயங்கவில்லை.

“ஏங்க, இரண்டு பேருக்கும் ஒரு ரிசப்ஷன் மாதிரி வச்சு ஊருக்கு சொல்லிடலாமா?” என‌ முத்துப் பேச்சி கேட்டிற்க,

“காசைக் கொடுத்து செலவளிச்சு, அவமானத்தை தேடிக்க சொல்லுறியா?”
பரணி சொந்த விசயத்தால் ஊரார் முன்னும் பஞ்சாயத்திலும் அவமானப்பட்டு வந்திருந்த மகாலிங்கம் அன்றைய கோபத்தில் வார்த்தைகளை தீயாய் இறைக்க, தந்தையின் மனம் புரிந்த பரணியும் அதனைப் பற்றி எதுவும்‌ பேசாது அமைதியாகியிருந்தான்.

அன்றைய மகாலிங்கத்தின் வார்த்தைகள், இன்றைக்கு அவளின்‌ காதில் எதிரொலித்தன.

‘எங்களுக்கு ரிசப்ஷன் வைக்க யோசிச்சவரு! இன்னைக்கு கல்யாண பத்திரிக்கையே ஆயிரத்துல எடுத்துருக்காரு’ என‌‌ நினைத்தவளின் மனம்‌ காரணமின்றியே வருணாவின் மீது கசப்பை பூசிக் கொண்டது‌.
 

Mathykarthy

Well-known member
சுபா இப்படி compare பண்ணிட்டே இருந்தா அவ நிம்மதி தான் போகும் கூட இருக்கிறவங்களுக்கும் கஷ்டம் 😐😐😐

காதலிச்சு ஓடிப் போய் கல்யாணம் பண்ணிக்கும் போது யோசிச்சு இருக்கணும் இப்போ பெத்தவங்க பார்த்து பார்த்து செய்ற கல்யாணத்தை பார்த்து பொறாமைப் படுறவ 😤😤😤😠😠😠😠
 
சுபா இப்படி compare பண்ணிட்டே இருந்தா அவ நிம்மதி தான் போகும் கூட இருக்கிறவங்களுக்கும் கஷ்டம் 😐😐😐

காதலிச்சு ஓடிப் போய் கல்யாணம் பண்ணிக்கும் போது யோசிச்சு இருக்கணும் இப்போ பெத்தவங்க பார்த்து பார்த்து செய்ற கல்யாணத்தை பார்த்து பொறாமைப் படுறவ 😤😤😤😠😠😠😠
இன்னும் இன்னும் கம்பேர் பண்ணி எல்லாரையும் கஷ்டப்படுத்துவ சிஸ்
 
Top