IsaiKavi
Moderator
நிழல் - 2
வகுப்பறையின் சுவர் அகலமான சதுர வடிவ கண்ணாடி ஜன்னல்களால் அமைக்கப்பட்டிருந்தது. நாற்காலியின் பின் வரிசைக்கு மேலே சுவற்றில் ஏசி பூட்டப்பட்டிருந்தது.
வரிசையாக போடப்பட்ட நவீன நாற்காலிகள், வெள்ளை கரும்பலகை அதன் அருகே சற்று தள்ளி, சுவற்றோடு தொலைக்காட்சி ஒன்று பொருத்தி வைக்கப்பட்டிருந்தது.
வகுப்பறையில் மாணவர்கள் இல்லை என்று சொல்ல முடியாது. இரண்டு பேர் நாற்காலியில் அமர்ந்து பகல் நேர இடை வேளைக்கான உணவை உண்டு கொண்டு இருந்தனர். அதில் ஒருத்தியாக ஜெனனியும் அடக்கம்.
ஜெனனியும் அவளை விட இரண்டு வருட சின்னவளான சிங்கள பிள்ளை கருப்பும் வெள்ளையும் கலந்த சிறிய கை வைத்த ஷர்ட் அணிந்து, முட்டி வரை சிவப்பு நிற பாவாடை அணிந்து, போனி டெயில் முடி, என அழகாக இருந்தாள்.
படிப்பை பற்றி இருவருமே பேசிக் கொள்வார்களே தவிர வேறு எந்தவிதமான பேச்சும் இருவருக்கும் இடையே இருக்காது. அவர்களின் வகுப்பில் தமிழ் பிள்ளையில் ஜெனனி ஒருத்தி மட்டுமே, மற்ற அனைவரும் சிங்களவர்கள்.
பகல் நேர உணவாக அவளுக்கு இலகுவாக சாப்பிட கூடிய வகையில் சாக்லேட் பிஸ்கட் கொண்டு வந்து சாப்பிட்டு கொண்டு இருந்தாள் என்றால் அவளின் சிறிய தோழி பனிஸ் சாப்பிட்டு கொண்டு இருந்தாள்.
அதே சமயம் அறையின் கதவை தள்ளிக் கொண்டு உள்ளே வந்தான் சன்ஜீவ். அவன் கையில் சாப்பிட்டதற்கு அடையாளமாக பார்சலின் தாள் கையில் சுருண்டு கிடந்தது.
அவனை ஜெனனி கடை ஓர கண்ணால் பார்த்து விட்டு பிஸ்கட்டை சாப்பிட்டாள்.
இவள் பகல் உணவாக பிஸ்கட் சாப்பிடுவதை கண்ட அவனின் ஒற்றை புருவம் நெற்றியை நோக்கி உயர்ந்தது.
அவன் கை செவ்வனே தோள் பையின் சிப்பை மூடி இருந்தது. அவனின் கால்களோ அவள் நாற்காலியின் பக்கத்தில் இருந்த நாற்காலியில் அமர்ந்து அவளையே அவன் பார்க்க.
முதுகும் புறம் காட்டி அமர்ந்துக் கொண்டாள். குரலை செருமினான். அவன் தான் வந்து இருப்பதை அவளுக்கு உணர்த்த வேண்டும் அல்லவா?
அவன் தான் அவள் பக்கத்தில் இருக்கும் நாற்காலியில் அமர்ந்து இருக்கிறான் என்று தெரிந்தும், அதனாலயே அவள் அவன் பக்கம் திரும்பியும் பார்க்கவில்லை.
சிங்கள பிள்ளையோ இவளைப் பார்க்க.. அவனோ “நங்கி ஏயாட்ட கதா கரண்ட பேரித கியலா அஹன்டகோ (தங்கச்சி அவளால கதைக்க முடியாதா எண்டு கேளுங்க..)” அவளிடம் சொல்ல.. “ஜெனனி” சிங்கள பிள்ளை அழைக்க.. கை நீட்டி தான் பார்த்து கொள்வதாக சைகையால் காட்டிவிட்டு தலையை திருப்பி “மொகத ? (என்ன?)” என்று எரிச்சலை முகத்தில் காட்டி அவள் கேட்க.
“தவல் கேம பத் கன்ன நேத்துவ பிஸ்கட் கன்னே..கெதர ஆன்டி கேம இவ்வே நேத்த? (பகல் சாப்பாடு சோறு சாப்பிடாம பிஸ்கட் சாப்ற..வீட்டுல ஆன்டி சோறு சமைக்கல்லையா?)” அவள் மீது அக்கறையில் அவன் கேட்க. அவளின் எரிச்சலான பேச்சை கூட அவன் பெரிதாக எண்ணவில்லை.
அவனின் அவள் மேல் இருக்கும் அளவில்லாத உறுதியான காதல் அவனிடத்தில் சாந்தத்தை கடைப்பிடித்தது. வெறும் 22 வயதில் இருக்கும் அவனுக்கு அதற்கு பின் வயது ஏறும் போது அவனுள்ளே மாற்றங்கள் நிகழலாம். அவை அவன் அறியாமலேயே அவளிடம் மட்டும் வெளிப்படும் என்று சன்ஜீவ் நினைத்து இருப்பானா? ஆனால் அவள் மேல் இருக்கும் காதலை கூற முடியாமல் போகும் நிலை வரும் என்று அன்றைக்கு நினைத்தும் இருக்க மாட்டான். அப்படியான ஒரு சூழல் அமைந்துவிடும்..
“நே சன்ஜீவ அய்யே ஹதரட்ட பந்தி இவர வுணாம கெதர கிஹில்லா கேம கனவா..(இல்ல சன்ஜீவ அண்ணா நாளு மணிக்கு க்ளாஸ் விட்டதும் வீட்டுக்கு போய் சாப்பிடுவேன்..)” அவனிடம் பதிலை சொல்லிவிட்டு தலையை திருப்பி மீதம் இருந்த பிஸ்கடை சாப்பிட்டாள் அவள்.
அவளின் பேச்சு அவன் காதில் சென்றடைந்ததோ இல்லை, குறிப்பாக ‘அய்யே (அண்ணா)’ என்ற சொல் அவன் இதயத்தை அதிர்வடையச் செய்தது.
‘ஏயா மாவ அய்யா கியலத ஹிதாகென இன்னே..அனே மட்டம வெச்ச தெயக் கோஹம ஹரி மகே ஆதரே ஜெனி லங்க கியன்டம ஓனே ஹம்..(அவ என்னைய அண்ணா எண்டா நினைச்சிட்டு இருக்கா..ஐயோ எனக்கு எண்டு நடக்குதே! எப்படி சரி என் காதலை ஜெனி கிட்ட சொல்லியே ஆகணும் ஹம்..) ’ மனதில் திடமான உறுதி ஒன்றினை எடுத்ததன் பிறகு மற்றவர்கள் வரும் முன்னே அவன் இடத்தில் சென்று அமர்ந்து கொண்டான்.
அதன் பின்னர் பின்னேரம் நான்கு மணி ஆகும் வரைக்கும் அவர்களுக்கு பாடம் நடந்துக் கொண்டு இருந்தது.
வகுப்பு முடியும் தருவாயில் எல்லோரும் எழுந்து வரிசையாக ஒருவர் பின் ஒருவராக செல்ல.. ஒவ்வொருவரும் கற்பித்த ஆசிரியரின் காலைத் தொட்டு கும்பிட்டு “புது சரணய் புதே” என்று அவரும் ஆசிர்வாதம் வழங்க அதனை அவர்கள் மகிழ்வாக பெற்றுக் கொண்டு அகெடமியை விட்டு அனைவரும் வெளியேறினர்.
சிங்களவர்களின் ஒரு நல்ல பழக்கங்களில் ஒன்று கற்பிக்கும் ஆசிரியரை குருவாக நினைத்து அவர்களின் ஆசிர்வாதத்தை பெற்றுக் கொள்வது தான். இது ஜெனனிக்கு புதிது என்றால் அகெடமிக்கு சேர்ந்த உடன் அவர்களுடனே அவளும் கடைபிடித்து கொண்டாள்.
சிறிய தோழியிடம் விடைபெற்று பிரதான சாலையின் ஓரத்தில் நடந்தாள் பஸ் தரிப்பிடம் வரும் வரைக்கும் நடக்க வேண்டுமே!.
கையில் கட்டி இருக்கும் கைக்கடிகாரத்தை பார்த்துக் கொண்டே நடந்தாள். அவள் பின்னால் நண்பர்களுடன் பேசிக் கொண்டு வந்தான் சன்ஜீவ. அவனின் பேச்சு நண்பர்களிடம் இருந்தாலும் அவனின் பார்வை என்னவோ ஜெனனியை தான் பின் தொடர்ந்தது.
பஸ் தரிப்பிடத்திற்கு வந்து பஸ்ஸிலும் ஏறி ஜன்னல் ஓர சீட்டில் அமர்ந்தும் கொண்டாள்.
பஸ் மெதுவாக நகர்ந்தது. பையை திறந்து பாட்டிலை எடுத்து தாகம் தீர நீரையும் அருந்தி கொண்டாள். நீரும் தீர்ந்து போனது. பையில் பாட்டிலை வைத்துவிட்டு ஜன்னல் வழியாக வெளியே வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்தபோது , அவள் மடியில் குளிரான பொருள் ஒன்று வந்து விழுந்தது.
மடியில் வந்து விழுந்ததை என்னவென்று அவள் குனிந்து பார்க்க , அது மைலோ பாக்கெட், அவள் மடியில் போட்டது யார் என்று அறிவாளே! அவள் அமர்ந்து இருக்கும் சீட்டிற்கு முன் சீட்டில் சன்ஜீவனின் தலை தெரிந்தது.
கையில் கொடுத்தால் வாங்கிக் கொள்ள மாட்டாள் என அவன் நன்கு அறிந்ததே அவள் மடியில் போட்டுவிட்டு சீட்டில் தான் செய்யாதது போல் அமர்ந்து கொண்டான்.
கையில் எடுத்தவள் அவனை அழைத்து கொடுக்கலாமா வேண்டாமா என்று சிந்தித்து விட்டு பஸ்ஸில் இருந்து இறங்கியதும் கொடுத்துவிடலாம் என்று நினைத்தவள் பையை திறந்து வைத்துக் கொண்டாள். பஸ் கன்டெக்டரிடம் டிக்கெட்டையும் வாங்கிக் கொண்டனர்.
பஸ் அவர்கள் வர வேண்டிய இடத்திற்கு வந்து நிற்கவும் இருவரும் இறங்கிக் கொண்டார்கள்.
பஸ்சை விட்டு இறங்கியதும் தன் நடையின் வேகத்தை கூட்டினாள் ஜெனனி... அவனிடம் பாக்கெட் வாங்கி கொடுத்தது ஏன் என்று கேட்க நினைத்தவள் மறந்தும் இருந்தாள்.
வலது பக்கத்தில் தோளில் பை தொங்கிக்கொண்டு இருக்க , இரு கரங்களும் பேன்ட் பாக்கெட்டில் இருந்தது..அவளை பிடிப்பதற்கு அவனின் நடையின் வேகம் கூடியது.
இரு புறமும் வயல் இருக்க , சிலுசிலுவென காற்று வேற வீசியது கூடவே முகத்தில் வழிந்த வியர்வையை துளிகள் காய்ந்து , அதன் மேல் பட்டதும் ஜில்லென்று இருந்தது..நாசியால் காற்றை ஆழ சுவாசித்து அவள் நடக்க , நடையின் வேகம் குறைந்ததும் அவனால் அவளை பிடித்துக் கொள்ள முடிந்தது.
“ஜெனி மம துன்ன கிரி பெக்கெட் எக ஒயா பிவ்வே நேத்த? (ஜெனி நான் குடுத்த பால் பெக்கெட் ஆ..நீ குடிக்கல்லையா?)” என்று அவன் கேட்க. அதற்கு அவள் பால் பாக்கெட்டை அவனிடம் திருப்பி கொடுக்க வேண்டும் என்று அப்போது தான் அவளுக்கு ஞாபகம் வந்தது..
பையின் சிப்பை திறந்து மைலோ பால்பெக்ட்டை எடுத்து வயல்வெளி பக்கம் அது சாலையில் இவர்கள் இருவரையும் தவிர வேறு யாரும் இல்லை..“ நீங்க குடுத்தது தானே எனக்கு வேணாம்.. ” என்று அவனிடம் நீட்டினாள்...
பிஸ்கெட் சாப்பிட்டு இருக்கிறாள் வீட்டுக்கு வரும் வரைக்கும் பசியோடு செல்ல வேண்டுமே, நடந்து செல்வதற்கு உடலுக்கு பலம் வேண்டாமா ?அதற்காக தானே அவன் வாங்கி கொடுத்தது..அதனை வேண்டாம் என்று கொடுக்கிறாளே இவளை என்ன செய்வது என்று அவளிடம் கோபத்தையும் அவனால் காட்ட முடியவில்லை ...
“ எய் ஒயா ஓஹம கரன்னே..ஒயாலாகே கெதர தென கேம கன்ன நேதுவ துன்னொத் ஒயால மொனவத ஹிதென்னே? ( ஏன் நீ இப்படி செய்ற..உங்கட வீட்டுல தர்ற சாப்பாடு எடுக்காம குடுத்தா நீங்க என்ன நினைப்பீங்க?) ” என்று அவன் கேட்கவும்.. அவளுக்கும் அவன் சொன்னது உள்ளத்தை தாக்க தான் செய்தது.. உண்மையை தானே சொல்கிறான் அவர்கள் பாசத்திலோ அக்கறையிலோ கொடுக்கும் உணவாக இருக்கட்டும் இல்லை பொருளாக இருக்கட்டும் வேண்டாம் என்று திருப்பிக் கொடுத்தால் முகத்தில் அடித்தது போல் ஆகி விடுமே!
அவர் மனதில் வலியின் சாயல் கூட உடனே முகத்தில் பிரதிபலிக்கலாம்..
கையை பின்னால் இழுத்துக் கொண்டாள்..“ சொறி சன்ஜீவ ” அவனிடம் மன்னிப்பை கேட்டுவிட்டு நடந்தாள்.. கையில் உள்ள மைலோ பாக்கெட்டை வீட்டிற்கு கொண்டு சென்றால் வசந்தா கேள்வி கேட்டு துளைப்பார் என்றே தெருவில் வைத்தே உடைத்து குடித்துவிட்டு புட்கள் நிறைந்த பற்றை பக்கமாக வீசிவிட்டு மெல்ல நடந்தாள்..
மைலோ பாக்கெட்டை குடித்ததும் தொண்டைக்கு இதமாக ஜில்லென்று இருக்க.. தாகமும் தீர்ந்து புது தெம்பு வந்ததை போல் உணர்ந்தாள்..நடந்து செல்லும் ரோடு மேடாக இருக்க..அதில் மேல்நோக்கி ஏறி செல்வதற்குள் இருவருக்குமே மூச்சு வாங்கியது..
சன்ஜீவிற்கு அவள் உடுத்தும் சல்வாரை விட புடவையில் எப்படி இருப்பாள் என்ற எண்ணமே மனம் முழுவதும் சுழன்று கொண்டு இருந்தது..அதற்கான சந்தர்ப்பம் அவளுக்கு அமைந்தால் தானே அதற்கான நேரமும் அவளுக்கு வரும்..அவனும் அவளை கண்டால் எந்த நிலையில் இருப்பானோ?
அவளை பற்றிய நினைப்புடன் மெலிதாக புன்னகைத்தபடி , ஒருவாறு இருவரும் வீட்டிற்கு வந்து சேர்ந்து விட்டனர்..