எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

அத்தியாயம் 10

Privi

Moderator

உல்லாசமாக விசில் அடித்துக்கொண்டே வீட்டிற்குள் வந்தான் நீலன். அவன் வருவதை பார்த்து சின்ன புன்னகையுடன் "என்ன தம்பி விசில் எல்லாம் பலமாக உள்ளது?" என கேட்டாள் உமையாள்.​

"தெரியாத மாதிரியே பேசுறது" என நொடிந்து கொண்டான் நீலன்.​

"என்ன பச்சை கோடி காட்டிட்டா போலயே!" என வினவினாள்.​

சிறு புன்னகை ஒன்றை பதிலாக கொடுத்தான் நீலன். "எப்படியோ சம்மதிக்க வைத்துவிட்டேன். முதலில் முடியவே முடியாதுனு சொல்லிட்டா. பிறகு பேசி பேசி எப்படியோ சம்மதிக்க வைத்துவிட்டேன்" என்றான்.​

அவளும் சிரித்துக்கொண்டு அங்கிருந்து சென்று விட்டாள். மூன்று வாரங்கள் கடந்திருந்தது மருத்துவமனையில் ருத்ரனும் உடல் நிலையில் கொஞ்சம் முன்னேறி இருந்தான். அவனுக்கும் பார்வதிக்கும் உள்ள விரிசல் குறைந்திருந்தது.​

முகம் கொடுத்து பேச ஆரம்பித்திருந்தான். நீலன் அவ்வப்போது வந்து உடல் நிலையை விசாரித்துவிட்டு செல்வான். அவன் வரவில்லை என்றாலும் பார்வதி அழைத்து விடுவார். அவருக்கு ஏனோ நீலனையும், உமையாளையும் பிடித்திருந்தது. காரணமே தெரியாமல் சிலருக்கு சிலரை பிடிப்பது போல்.​

"இன்னும் எத்தனை நாள் இங்கு இருப்பது. இங்கு இருப்பதற்கே பிடிக்கவில்லை. எப்போது என்னை டிஸ்சார்ஜ் செய்கிறார்கள்" என கேட்டான் ருத்ரன்.​

"இருப்பா இப்பொழுது மருத்துவர் உன்னை பரிசோதிக்க வருவார். நான் அவரை விசாரிக்கிறேன்" என கூறினார் பார்வதி.​

மருத்துவரும் அச்சமயம் அங்கு வர "ஹாய் ருத்ரன் ஹொவ் ஆர் யு அண்ட் யுவர் ஹெல்த் நௌவ்?" என கேட்டார் மருத்துவர்.​

கேட்டுக்கொண்டே அவன் கைகளை பிடித்தவர் மேலும் கீழும் அசைத்து பார்த்தார்.​

அவர் கேட்ட கேள்விக்கு ருத்ரனோ "நௌவ் ஐ பீல் பெட்டெர் டாக்டர்" என பதிலளித்தான்.​

"வெரி கு, யுவர் ரிப்போர்ட்ஸ் ஷோவ்ஸ் யுவர் இம்ப்ரூவ்மென்ட், யு மே டிஸ்சார்ஜ் டுமோரோ மோர்னிங்" என கூறி சென்றார். பார்வதிக்குத்தான் அவர்கள் பேசியது புரியவில்லை. அவரின் முகத்தை பார்த்து அவருக்கு புரியவில்லை என்பதை உணர்ந்துக்கொண்டான் ருத்திரன்.​

அவருக்கு புரிய வைக்க தமிழில் விளக்கம் கொடுத்தான். "என் உடல் நல்லபடியாக முன்னேறி உள்ளதாம். நாளைக்கு வீட்டிற்கு போகலாம் என கூறியுள்ளார் மருத்துவர்" என விளக்கம் கொடுத்தான்.​

இதனை கேட்ட பிறகுதான் அவருக்கும் நிம்மதியாக இருந்தது. மனதில் ஒரு சின்ன வருத்தம் இனி எப்படி நீலனையும் உமையாளையும் பார்ப்பது என்பதே. போலியான உறவுகள் மத்தியில் யாரென்றே தெரியாது என்றாலும் உண்மையாய் ஒரு உறவு, ஏனோ அவர்களை அந்நியமாய் நினைக்க தோன்றவில்லை.​

எல்லோரும் சொல்வதைப்போல கேட்டதில் ஒரு நல்லது நீலன் உமையாள் பழக்கம் பார்வதிக்கு கிடைத்தது.​

ட்ரிங்.... ட்ரிங் .... ட்ரிங்.... ட்ரிங்...​

என நீலனின் திறன்பேசி அவனுக்கு அழைத்து கொண்டு இருந்தது. திறன் பேசி திரையில் 'பாரு பேபி' என பெயர் விழுந்தது.​

"அட நம்ம பாரு பேபி என்ன இப்போ அழைத்திருக்காங்க" என நினைத்துக்கொண்டே திறன்பேசியை உயிர்ப்பித்து காதில் வைத்தான்​

"சொல்லுங்க பாரு பேபி என்ன இப்போ எடுத்துருக்கீங்க? எல்லாம் ஓகே தானே ? பிரச்சனை ஏதும் இல்லையே?" என அடுக்கடுக்க கேள்விகளை கேட்டுக்கொண்டே போனான்.​

" நீலா கொஞ்சம் மூச்சி விடுடா" என சிரித்துக்கொண்டே தான் எதற்கு அழைத்தார் என்னும் விபரத்தை விவரித்தாள்.​

"நீலா நாளை காலையில் ருத்ரனை டிஸ்சார்ஜ் செய்யலாம் என கூறிவிட்டார்கள்" என மகிழ்ச்சியாகவே கூறினாள்.​

"நல்ல விஷயம் தானே அம்மா. ஹ்ம்ம் அப்பாடா இப்போது தான் என் பாரு பேபி முகத்துல சிரிப்பே வந்துருக்கும். அந்த சிரிப்பை பார்க்க எனக்கு தான் கொடுத்து வைக்கவில்லை" என கூறினான்.​

"எப்போப்பா உனக்கு விடுமுறை?" என கேட்டார் பார்வதி,​

அதற்கு அவனோ "எப்படியும் இன்னும் ஒரு மாதம் இருக்கு அம்மா" என கூறினான்.​

"சரி விடுமுறை கிடைத்தவுடன் சொல்லு. நான் உன்னை, உமையாளை, குட்டி வாண்டை, கயலை எல்லோரையும் நம்ம வீட்டிற்கு அழைத்து ஒரு குட்டி விருந்து குடுக்க போறேன்" என்றார்.​

அதற்கு நீலனோ " என்ன பாரு பேபி செய்த உதவிக்கு கைம்மாறா?" என கேட்டான்.​

அதற்கு பார்வதி "ஐயோ அப்படிலாம் இல்லப்பா. நீங்க செய்ததற்கு கைம்மாறு இந்த ஜென்மத்தில் என்னால செய்ய முடியாது. இந்த விருந்து வெறும் என் மன மகிழ்ச்சிக்கு" என கூறினார்.​

"ஹ்ம்ம் ஓகே பேபி வேலைக்கு போகணும் நான் உங்களிடம் பிறகு உரையாடுகிறேன்" என கூறினான்.​

அதற்கு பார்வதி "அம்மா மேல கோவமோ?" என வினாவினார்.​

"அப்படிலாம் ஒன்னும் இல்லமா. கண்டிப்பா என்னோட அடுத்த விடுமுறையப்போ எல்லோரையும் கூட்டிட்டு நம்ம வீட்டுக்கு விருந்து சாப்பிட வரேன். இப்போ சந்தோஷமா?" என சிரித்துக்கொண்டே கேட்டான் நீலன்.​

அவரும் ஆம் என கூறி திறன்பேசி தொடர்பை துண்டித்தார்.​

மறுநாள் யாருக்கும் காத்திராமல் சூரியன் அவன் பணிகளை செய்ய செவ்வனே உதித்தான். காலையிலேயே மருத்துவர் வந்து ருத்ரனை பரிசோதித்து அவனுக்கான மருந்து மாத்திரைகளை குடுத்து அவனை டிஸ்சார்ஜ் செய்தார்.​

நடக்க கொஞ்சம் சிரம பட்டான். ஊன்றுகோல் குச்சியை பயன்படுத்திதான் நடக்கிறான், ஆனாலும் வீட்டிற்கு செல்ல வேண்டும் என்ற முனைப்புதான் அதிகமாக இருந்தது.​

பார்வதியை பார்த்து "நீங்க இந்த வண்டியில் முதலில் வீட்டிற்கு போங்க. நான் பின்னாடியே என் தனிப்பட்ட உதவியாளருடன் வருகிறேன்" என கூறினான்.​

அவர் அவனையே கொஞ்ச நேரம் பார்த்து சரி என தலை அசைத்து புறப்பட்டு விட்டார். அவர் சென்று பத்து நிமிடம் கழித்தே அவனின் தனிப்பட்ட உதவியாளர் காரை எடுத்துக்கொண்டு வந்தார்.​

"சாரி சார் கொஞ்சம் டிராபிக் அதான் தாமதம் ஆகி விட்டது" என கூறினார். “தட்ஸ் பைன் விமல்” என கூறி மோட்டார் வாகனத்தில் அமர்ந்தான்.​

"என்னை மோதிய கார் யாருடையது னு கண்டு பிடித்து விட்டீர்களா?"​

"சார் அது வந்து" என தடுமாறினார் விமல்.​

"எனக்கு இந்த தடுமாற்றமான பதில் வேண்டாம். உனக்கு என்னை பற்றி தெரியும் தானே" என கோவமாக கூறினான் ருத்ரன்.​

"சார் அது ராஜ் தான் இந்த விபத்தை ஏற்பாடு பண்ணிருக்காரு" என கூறினார்.​

"ஷீட் நான் அப்போவே சந்தேகப்பட்டேன்" என ஆத்திரமாய் கூறினான் ருத்ரன்.​

ஆம் அது விபத்து இல்லை கொலை முயற்சி.​

ஆர் ஜே கான்ஸ்ரக்க்ஷன் ராஜ் தந்தை ஜெயபாலன் உருவாக்கியது அதனை தொடர்ந்து ராஜ் வழிநடத்தி வருகிறான். ராஜ் கட்டுமான துறையில் பிரட்சியமான ஒரு ஆள். அவருடை வேலை நேர்த்தியாக இருக்கும் அழகாக இருக்கும் ஆனாலும் அதே பழைய வடிவமைப்பு முறையில் தான் இருக்கும்.​

வீடு கட்டுபவர்கள் ஆசைப்பட்டு கொஞ்சம் புது முறையில் வடிவமைத்து இருந்தாலும் அதை அவர் ஏற்றுக்கொள்ளாமல் தன் விருப்பத்திற்கு தான் கட்டி தருவார்.​

இது வாடிக்கையாளர்களுக்கு பிடிக்கவில்லை என்றாலும் பதில் கருத்து சொல்ல மாட்டார்கள். ஏன் என்றால் அவரின் வேலை சுத்தம் விளையும் மற்ற கட்டமைப்பாளர்களை விட குறைவு. அதனால் பெரும்பாலானோர் அமைதியாகவே இருப்பார்கள். அப்படியே ஒன்று இரண்டு பேர் கேள்வி கேட்டாலும் தன் வாய் திறமையால் அவர்களை சமாளித்து விடுவார்.​

அவர் வண்டி இப்படி ஓட திடீரென முளைத்தவன் தான் ருத்ரன். நவீன முறையில் வீடு கட்டிகொடுத்தான். முடியாது என நினைக்கும் வடிவமைப்பை கூட சுலபமாக செய்தான். அவன் வேலையின் திறன், கடின உழைப்பு அவனை புகழின் உச்சிக்கே கொண்டு சென்றது அனால் இதில் பாதிக்க பட்டவர் ராஜ் தான்.​

அவரின் வாடிக்கை எல்லோருமே ருத்ரனை தேடி சென்றனர். அதன் பிறகு அவர் பல புதிய டிசைன்களை அறிமுகம் செய்தார் ஆனால் யாரும் அதனை சட்டை செய்ய வில்லை இதனால் அவள் தொழிலில் பல சரிவுகள்.​

பல தடவை மறைமுகமாகவே ருத்ரனை எச்சரித்தார். ஆனால் அவன் எதற்கும் பயப்படவில்லை. பின் நேரிடையாகவே பேச்சுவார்த்தை நடத்தினார், பல சலுகைகள் தந்தார் , கூட்டணிகள் போடாத ஒப்பந்தமும் போட்டார். எதற்குமே ருத்ரன் வளைந்து கொடுக்க வில்லை. அதில் கோபம் அடைந்தவர் தான் அவனை லாரி மூலம் கொலை செய்ய முயற்சி செய்திருந்தார். லாரி ஒன்று மோதித்தான் சமநிலை இழந்து ருத்ரன் அவன் காரை நீலன் மேல் மோத வந்தான்.​

இதனை எல்லாம் யோசனை செய்து வந்தவன் திடீரென ஒரு சத்தம் கேட்டு, சத்தம் கேட்ட திசையை நோக்கி திரும்பினான். விமல் தவறுதலாக அவர் வாகனத்தை இரு சக்கர வண்டியின் மீது மோதியிருந்தார்.​

பதறிக்கொண்டு கீழே இறங்கினார். ருத்ரனும் இறங்க முற்படும் போது "சார் நீங்க இருங்க நான் பார்த்துட்டு வருகிறேன்" என கூறி கார் கதவை திறந்து வெளியேரினான்.​

ருத்ரனும் காரினுள் அமர்ந்து கார் கண்ணாடி வழியே வெளியே நடப்பதை பார்த்தான். அங்கு ஒரு பெண் நின்று கொண்டிருந்தாள். பெண்களுக்கே இருக்கும் அளவான உயரம் கொஞ்சம் கொலு கொலு உடம்பு. குண்டுன்னும் கூறமுடியாது மெலிவுன்னும் சொல்லமுடியாது.​

அவனை சட்டென்று ஈர்த்தது என்னவோ அவளது கண்கள் தான் மீன்விழியாள். ஏனோ அவனுக்கு அவள் கண்கள் பல நூறு கதைகள் பேசுகின்ற உணர்வு. அதே கண்கள் கோபத்தையும் கொப்பளித்தது.​

கடினப்பட்டு அவள் கண்களை தாண்டி அவள் பேசுவதை கேட்க ஆரம்பித்தான்.​

"அறிவில்லை உங்களுக்கு? கண்ணு இருக்கா இல்லையா? இப்படி வந்து வண்டிய மோதியிருக்கீங்க. போச்சி போச்சி என்னோட பொருட்கள் எல்லாம் போச்சு” என வானத்துக்கும் பூமிக்கும் குதித்து கொண்டு இருந்தாள்.​

ருத்ரன் கீழே விழுந்து கிடந்த பொருட்களை பார்த்தான். அவனுக்கோ இதற்காக தான் அவள் இவ்வளவு கூச்சல் போடுகிறாளா என இருந்தது. காரை விட்டு கீழே இறங்கியவன் “விமல்” என அழைத்தான். விமலும் அவளிடம் மல்லுக்கட்டுவதை நிறுத்தி விட்டு ருத்ரனிடம் வந்தான்.​

"ஆகிய நஷ்டத்துக்கு பணம் குடுத்துவிடு விமல். பணத்துக்குத்தானே இவ்வளவு பேச்சு இப்போ. பணம் என்றால் பிணம் கூட வாயை பிளக்குமாம் இவள் சாதாரண பெண் தானே" என்றான். இதனை கேட்ட உமையாளுக்கு கோபம் தலைக்கு ஏறியது. ஆம் அவர்கள் வண்டி மோதியது என்னவோ உமையாளைத்தான். அவளது கைவினை பொருட்களைத்தான் இடித்து கீழே தள்ளியிருந்தார்கள்.​

உமையாள் ருத்ரனை ஆழ்ந்து பார்த்தாள். கிட்டத்தட்ட முறைத்தாள் என்றே கூற வேண்டும். விமல் ருத்ரனின் சொல்படி அவளிடம் சென்று "இந்தாங்க இதை புடிங்க இதுக்குதான் இவ்வளவு கூச்சலும் கத்தலும்" என கூறி அவள் கையில் சில நூறுகளை திணித்தான்.​

அவள் அவன் கொடுத்த பணத்தை பார்த்து அமைதியாக கீழே விழுந்து கிடந்த அவள் பொருட்களை எடுத்து கொண்டு வந்த பெட்டியில் அடுக்கினாள். பின் வண்டியை கவனமாக நிறுத்தி வைத்தாள்.​

அவள் பணம் வாங்கியது ஏனோ ருத்ரனுக்கு சற்று ஏமாற்றமாக இருந்தது. அதன் விளைவால் சற்று எரிச்சல் அடைந்தவன் “எல்லா பெண்களை போல்தான் இவளும். இவள் மட்டும் என்ன விதி விலக்கா? பெண்களை பற்றி தெரிந்தும் நீ அவளிடம் என்ன எதிர்பார்த்தாய்?” என அவன் புத்தி அவனை கேள்வி கேட்க, அதை ஏமாற்றமாகவும் கோபமாகவும் உணர்ந்தவன் அவளை அவன் நாக்கு என்னும் தேளால் கொட்ட ஆரம்பித்தான்.​

"நான் சொல்லல விமல் இவர்களுக்கு பணம் இருந்தால் போதும் வேறு ஒன்றுமே வேண்டாம் என்று. பணத்துக்காக எதையும் செய்ய துணியும் ஆசாமிகள் தானே. ச்சே நினைத்தாலே அருவருக்குது" என அந்த அருவருப்பை அவன் முகத்தில் காட்டி அவளை பார்த்து கூறினான்.​

அவளும் இவ்வார்த்தைகளை கேட்டு அமைதியாக தான் இருந்தாள். அவள் வேலைகளை முடித்துவிட்டு அவனை நோக்கி சென்றவள். அவன் முன் நின்று அவன் கண்களை பார்த்து,​

"நீங்க சொல்றதும் உண்மைதான் பணம் தானே எல்லாமே, பணத்துக்காங்கதான் இந்த கைவினை பொருட்களை செய்து விற்று கொண்டு இருக்கிறேன்.​

நீங்களும் அப்படிதான் என்று நினைக்கிறேன். விலை உயர்ந்த வாகனம், அதற்கென்றொரு சாரதி, கண்டிப்பாக நீங்களும் பணத்துக்காகத்தானே சம்பாதிப்பீர்கள். நாங்களும் அப்படிதான். ஆனால் உங்களுக்கு எங்களை போன்ற நடுத்தரவர்க்கத்தை பார்த்தால் மட்டும் அப்படி என்ன சார் அருவருப்பு கூடி போகுது?​

இன்று என் பிழைப்பு போனது. ஆனால் சுயமரியாதை இன்னும் போகவில்லை. இப்பொழுது நீங்கள் கொடுக்கும் பணத்தை நான் எடுத்தால் அதனை விற்றதற்கு சமம். எனக்கு சுய மரியாதை ரொம்ப முக்கியம் சார்" என கூறி அவள் கையில் உள்ள பணத்தை அவன் முகத்தில் விட்டெறிந்தாள்.​

“இன்னொரு முறை உங்களை எங்கயும் நான் சந்திக்கவே கூடாது என்று என் அப்பனை வேண்டிக்கொள்கிறேன்” என்றாள். நிதானமும் நிமிர்வும் சற்று அதிகமாகவே இருந்தது. அதற்கு மாறாக அவள் கண்கள் கனலை கக்கியது. இவை அனைத்தையும் கூறி விட்டு அங்கிருந்து அவள் இரு சக்கர வண்டியை எடுத்து கொண்டு சென்று விட்டாள்.​

விமல் பேய் அறைந்தது போல் நின்றான். ருத்ரனுக்குமே அவள் முகத்தில் பணத்தை விட்டெறிந்து ஆத்திரத்தை வரவழைத்தது. மனதிற்குள் திமிர் பிடித்தவள் என்று திட்டி கொண்டான். இன்னும் பல வார்த்தைகளில் அர்ச்சித்தான் தான் ஆனால் அவை யாவும் அவனுக்கே வெளிச்சம்.​

எப்போதும் தென்றல் தான் அனலை அணைக்கும் இங்கு என்னவோ தென்றல் அனலை எரித்து விட்டது.​

 
Top