எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

8 வான்மழை அமிழ்தம் நீ!

priya pandees

Moderator

அத்தியாயம் 8

தன்னை அணைத்து நின்றவளை தட்டிக் கொடுத்து சமாதானம் செய்தவன், "நாந்தான் சொன்னேனேடா இவங்களாம் கேட்டுக்குற கேட்டகரி கிடையாது. அதைவிட சொல்லி புரிய வைக்க முடியாத அளவுக்கு நமக்கும் அவங்களுக்கும் இடைல லேங்குவேஜ் பேரியர் இருக்கு. அதையும் மீறி சொன்னாலும் அவங்க ப்ளட்ல ஊறிப்போன விஷயத்த அவ்வளவு சீக்கிரம் மாத்திக்க மாட்டாங்க" என அவள் காதில் மெல்ல பேச்சு கொடுத்து அந்த இடத்திலிருந்து விலகி அழைத்துக் கொண்டு நடந்தான் யாஷ்.

அங்கிருந்த பெண்கள் மறுபடியும் அந்த அறைக்குள் நுழைய போக, "ஹே இந்த பொண்ண இவங்கட்ட விட்டுட்டு போனா மறுபடியும் இவங்க என்ன செய்வாங்கன்னு தெரியாது! பெட்டர் நம்மள்ல ரெண்டு மூணு பேர் இங்கேயே இருக்கலாம்" என்றாள் ஜெனிலியா.

"ஸ்டிட்ச்சிங் தேவையான இடத்துக்கு நாங்க போட்டாச்சு. இன்னும் நீங்களும் போய் அந்த இடத்துல உங்க கை மருந்துகள வச்சீங்கனா" என பெரு மூச்சுடன் தலை அசைத்து, "பாவம் அந்த பொண்ணு புரிஞ்சுக்கோங்க" என்றார் அந்த பெண்களிடம் மற்றொரு மருத்துவ பெண்மணி.

"நீங்க ப்ளீஸ் எடுத்து சொல்லுங்க ஜனோமி" என பிஸ்மத் கெஞ்சலாகவே கேட்டார். ஜனோமிக்கும், க்ளாடியனுக்கும் தர்ம சங்கடமான நிலை தான் அது.

ஜனோமி திரும்பி அந்த பெண்களிடம், அவர்கள் மருத்துவத்தோடு நம் மருந்துகள் சேர கூடாது என்றும் சேர்ந்தால் உள்ளிருக்கும் பெண்ணின் உயிருக்கே ஆபத்து என்றும் சொல்லிவிட, "இதுக்கு தான் நாங்களே பாத்துக்குறோம்னு சொன்னோம். அதையும் தடுத்து இப்ப இப்படி சொல்ற?" என புலம்பினர் அந்த பெண்கள்.

"இனி செய்ய மாட்டாங்க. நீங்க காலைல வந்து பாருங்க" என ஜனோமி இவர்களிடம் திரும்பி சொல்ல, மனமே இல்லை என்றாலும் மெல்ல நகர்ந்தனர்.

"நாளைக்கு நம்மள கிளம்ப சொல்லிட்டாங்களே என்ன செய்ய போறோம்?" என்றார் யோசனையாக பிஸ்மத்.

"அதெப்படி பாதில போ முடியும்? நாம பாத்துட்ருக்க பேஷன்ட்ஸும் இதால பாதிக்க படுவாங்களே?" என்றான் முன்னால் சென்ற யாஷ் தலையை மட்டும் திருப்பி.

"அதான் என்ன செய்ய போறோம்?"

"கவர்ன்மென்ட் எங்கள பாதில கிளம்ப அனுமதிக்க மாட்டாங்கன்னு தான் சொல்லணும். இனி நாங்க எதுலயும் தலையிட மாட்டோம்னு தான் பேசி பாக்கணும்" என்றான் யாஷ்.

அவர்களுடன் வந்த ஜனோமி, க்ளாடியன் இருவரும் அனைத்தையும் கேட்டாலும் அமைதியாக நடந்து வந்தனர். அவர்களுக்கு இருபக்கமும் புரிந்தது, இருபக்கமும் நிற்க முயன்று முட்டிக் கொண்டிருந்தனர்.

மரவீடு வரை யோசனையில் அமைதியாக வந்த வருணி, யாஷின் கைக்குள் இருந்து விலகி திரும்பி, "க்ளாடியன்!" என அவனை அழைத்து நிற்க, அவள் முன் வந்து நின்றான் அவன்.

"உங்களுக்கு ஏஜ் என்ன?"

"ட்வன்டி டூ"

"நீங்க மேரேஜ் பண்ண பொண்ணுக்கு?"

"ட்வல்வ்"

"ஓகே!" என்றவள் திரும்பி யாஷை பார்த்து கொண்டாள் அவளுக்கும் அவனுக்கும் கூட பத்து வயது வித்தியாசம் உண்டே! மெலிதாக சிரித்தான் அவன். ஆனால் அவள் அவனை திருமணம் செய்தது அவளின் இருபத்திநாளில் தான்.

"பனிரெண்டு வயசு குட்டி பொண்ணுகிட்ட உங்களுக்கு லவ், லஸ்ட் ஃபீலிங் வருமா? அதிகமா வேணாம் கொஞ்சம் வெயிட் பண்ணி உங்களுக்கு ஒரு தேர்ட்டி அவளுக்கு ஒரு ட்வன்டி ஆகும் போது மேரேஜ் பண்ணிருக்கலாமே?" என்றாள்.

"இங்க எங்களோட அதாவது ஆண்களோட வயசுலாம் முக்கியம் இல்ல, ஒரு பொண்ணு வயசுக்கு வந்துட்டானா, மூணாவது நாள் அவளுக்கு அப்பாவோட வழில இருக்குற முறை பசங்க யாரையாவது கல்யாணம் பண்ணி வச்சுடுவாங்க. இத நா பண்ண மாட்டேன்னு சொல்லிருந்தாலும் வேற யாரோடவாது இன்னைக்கு அவளுக்கு கல்யாணம் நடந்துருக்கும். மறுத்த என்னத்தான் ஊரைவிட்டு ஒதுக்கி வச்சுருப்பாங்க. நா அவ சீக்கிரம் வயசுக்கு வராம இருக்க எதாவது மருந்து இருக்குமான்னு தான் டாக்டர்கிட்ட கேட்க நினைச்சேன். ஆனாலும் கேட்க பயமா இருந்தது. நா நினைச்ச நேரமோ என்னமோ மறுநாளே வயசுக்கு வந்துட்டா அவ" என்றான் அவன் பாவமாக.

முகத்தை அழுந்த துடைத்து கொண்டவள், "சரி ஓகே. கல்யாணம் இப்ப நடந்தது நடந்ததாவே இருக்கட்டும். நீங்க வெயிட் பண்ணுங்க. அந்த பொண்ணுக்கு எடுத்து சொல்லுங்க. இருபது வயசு தாண்டட்டும் அப்றம் பேபி பெத்துக்கலாம்னு சொல்லுங்க. அவங்கள பாத்து மத்த பொண்ணுங்களும் மாறுவாங்க. புரியுதா நா என்ன சொல்றேன்னு?" என தெளிவாகவே கேட்டாள்.

"எனக்கு புரியுது டாக்டர். ஆனா இங்க ஏன் தெரியுமா ஏஜ் அட்டன் பண்ணதும் கல்யாணம் பண்ணி வைக்குறாங்க?" என்றான் அடுத்த கேள்வியாக. இன்னும் என்ன வருமோ என அயர்ந்து தான் பார்த்தனர்.

"வெளி பசங்கள லவ் எதும்ன்னு பண்ணிட கூடாதுன்னு இருக்கலாம். ரேப் மாதிரி எதுவும் நடந்திடுமோன்னு பயமா இருக்கலாம்?"

சிரித்த க்ளாடியன், "இங்க உள்ள பொண்ணுங்களுக்கு லவ்வுன்னா என்னன்னே தெரியாது டாக்டர். வெளி ஆளுங்கன்னு உங்கள மாதிரி ஆட்கள் வந்து போறதே இப்ப ரெண்டு மூணு வருஷமா தான். அதுக்கு முன்ன எங்க ஆளுங்கள தவிர அவங்க வேற யாரையும் பார்த்தது என்ன, வேற ஒரு உலகம் அந்த பக்கம் இருக்குறதே தெரியாதுங்க. அப்றம் ரேப்? அதெல்லாம் உடம்பு கொழுப்பெடுத்தவனுங்க செய்யிறது, அதுவும் இங்க இருக்க மக்கள் சாமிக்கு, பெரியவங்க தண்டனைக்கு பயந்தவங்க, அவங்களுக்கு அதெல்லாம் என்னன்னு தெரியாது. தங்க சுரங்கத்த தோன்றோம்னு வெளில இருந்து உள்ள வந்தவங்களால தான் பல கிராமங்கள் அழிஞ்சது அதுல சில பொண்ணுங்க ரேப் பண்ணி கொள்ள பட்டாங்கன்றத வச்சு தான் நாங்களே அந்த வார்த்தைய தெரிஞ்சுகிட்டோம்"

"ஓ! ஆனா அதை தான் கல்யாணம்ன்ற பேர்ல நீங்களே பண்ணுறீங்களே?"

"இருக்கலாம் டாக்டர். ஆனா இங்க இருக்க பொண்ணுங்களுக்கு அது பழக்கமான ஒன்னு தான். கட்டாயபடுத்தி துன்பபடுத்தி நாங்க எதையும் செய்யலயே? புரிஞ்சுக்குற வயசுல நாங்களும் வெளி உலகத்த பாக்கலனா இப்ப நீங்க பேசுறதுக்கு இவ்வளவு பொறுமையா கூட நாங்க பதில் சொல்லிட்ருக்க மாட்டோம். நாங்க எங்க சமூக கோட்பாட்டுக்குள்ள சரியா தான் இருக்கோம். உங்கள மாதிரி கிடைச்ச சுதந்திரத்த சுயநலமா வீணாக்கல" என்றுவிட்டான் பட்டென்று.

"சரி நீங்க உங்க கல்ச்சர்லயே இருங்க. ஆனா பொண்ணுங்களுக்கும் வலிக்கும்னு கொஞ்சம் புரிஞ்சுக்கோங்க"

"நீங்க சுத்தி வளைச்சு எதுக்கு வர்றீங்கன்னு எனக்கு புரியாம இல்ல. எங்க ஆட்கள் பிறப்பு எல்லாமே பெண்கள் பூப்படைஞ்ச முதல் உதிரத்துலயே நின்னவங்களாதான் இருப்போம். அது எங்க இனத்துக்குக்கான பெருமை" என்றான்.

அதிர்ந்து பார்த்தனர் மருத்துவர்கள், வருணிக்கும் அடுத்து பேச பேச்சு வரவில்லை.

"உண்மை டாக்டர். அப்படி தான் இங்க பிறந்துருக்கோம் நாங்க எல்லாரும்"

"ஒருவேளை குழந்தை பிறக்கலைனா? ஐ மீன் அடுத்த மாசமும் அந்த பொண்ணு ப்ரீயட் ஆகிடுச்சுன்னா?" என்றாள் ஜெனிலியா.

"அப்படி இதுவரை நடந்ததே இல்ல. ஆனா ரெண்டு மூணு சந்ததியினருக்கு முன்ன வாழ்ந்தவங்கள்ல ஒரு குடும்பத்துல அப்படி நடந்ததாகவும், அதுக்கு தண்டனையா அவங்க ரெண்டு பேருமே காவல் தெய்வம் முன்ன தீயில இறங்கிட்டதாவும் சொல்லி கேட்ருக்கேன். தெய்வம் ஒருத்தங்க மூலமா அடுத்த சந்ததிய வேணாம்னு நினைச்சுட்டா தான் குழந்தைய தரமாட்டாங்கன்னு இங்க உள்ள ஐதீகம். அப்படி பட்டவங்க வாழ்ந்தா தெய்வம் இன்னும் கோவம் ஆகும்னு தான் அவங்கள அவங்களே பலி குடுத்துக்குவாங்கன்னு சொல்ல பட்ருக்கு"

"வாட் ரப்பிஷ்?" மருத்துவர்கள் எரிச்சலடைய,

"ஓமைகாட் அப்ப அடுத்த மாசமே அந்த பொண்ணு கன்சீவ்னு வந்து நிக்கணுமா? இல்லனா உங்க ரெண்டு பேரையும் அப்படிதான் பண்ணுவாங்களா?" என்றாள் வருணி.

"நா உங்க பேச்ச கேட்டு பத்து வருஷம் வெயிட் பண்ண முடிவெடுத்தா எங்களுக்கும் அதான் நடக்கும்"

"சுத்த இடியட் கூஸ் போங்கடா என்னன்னும். இன்னும் இங்க இருந்து இவங்க கல்ச்சர தெரிஞ்சுட்டோம்னா நாம தான் சைகோவ மாறி திரியணும். சரியான காட்டுமிராண்டி கூட்டம்" என தமிழில் திட்டிவிட்டு ஆற்று பாதையை நோக்கி நகர்ந்துச் சென்று விட்டாள் வருணி.

"நில்லுடி வருணி!" என அழைத்தான் யாஷ், அவள் வாய்க்குள் திட்டிக்கொண்டே வேகவேகமாக நடந்துவிட்டாள்.

"கொஞ்சம் உங்க மக்கள சேஞ்ச் பண்ண ட்ரை பண்ணுங்க க்ளாடியன். நாடு எங்கையோ போயிட்ருக்கு நீங்க அவ்ளோ பேக்ல நிக்றீங்க" என்றான் திரும்பி இவனிடம்.

"இன்னும் ரெண்டு மூணு ஜெனேரேஷன் போனா எதாவது மாற்றம் வரலாம்னு நாங்களும் நம்புறோம் டாக்டர்" என்க,

"நாளைக்கு உங்க தலைவர்ட்ட பேசுங்க. நாங்க இன்னும் மத்த கிராமமும் பாக்கணும் பாதில விட்டுட்டு போக முடியாது"

"பேசி பார்ப்போம் டாக்டர்" என விடைபெற்றனர் இருவரும்.

மற்றவர்களும் சோர்வுடன் படுக்க செல்ல, யாஷ் அவன் மனைவியை தேடிச் சென்றான். அவர்கள் அங்கு தான் படுக்கின்றனர் என இத்தனை நாட்களில் மற்றவர்களும் தெரிந்திருக்க, அவரவர் வீடு சென்று முடங்கி விட்டனர். நூற்றி ஐம்பது கிராமங்கள், இவர்கள் இதுவரை இருபத்தைந்து கிராமங்கள் மட்டுமே முடித்திருந்தனர். அதிலும் சிலவற்றிற்கு இன்னும் ரத்த பரிசோதனை முடிவுகள் வரவில்லை. சிலருக்கு மருத்துவம் பாதியில் நிற்கின்றது. இதெல்லாம் முடிக்கவே குத்துமதிப்பாக இன்னும் ஒருவாரம் மேல் ஆகிவிடும். அடுத்து தான் மற்ற கிராமங்களை என்ன செய்வதென்றே அவர்கள் யோசிக்க வேண்டும். இவ்வளவு குழப்பத்தில் அவர்களின் செயல்களும் சேர்ந்து கொள்ள சோர்ந்தனர் மருத்துவர்கள்.

ஆற்றின் கரையில் இவர்களுக்காகவே ஆங்காங்கே தீப்பந்தம் எரிந்து கொண்டிருந்தது. அதனாலேயே மிருகங்கள் பயமின்றி இருந்தனர் மருத்துவர்கள். கரை ஏற்றத்தில் சோகமாக அமர்ந்திருந்தவளை பார்த்து சிரித்துக் கொண்டு அவளிடம் விரைந்தான் யாஷ்.

"வரு குட்டி" என அவளை இடித்து கொண்டு அருகில் அமர,

"மாமா கண்டிப்பா ஏதாச்சும் பண்ணணும். நானும் யோசிக்றேன் ஐடியாவே வரல" என்றவள் முகத்தில் அவ்வளவு தீவிரம், அவன் மாமனை பார்ப்பது போலிருந்தது. அவன் வெளியே ஆலோசிக்க மாட்டான் அவனே புருவ முடிச்சுடன் யோசித்திருப்பான் ஆனால் அதன் தீவிரத்தை எதிரில் உள்ளவர்களால் உணர முடியும். அப்படிதான் இருந்தது வருணி முகமும். ஏதாவது செய்தே ஆகவேண்டும் என்ற வெறியுடன்.

"ரிலாக்ஸ்டி. மாமாவ வச்சு இத கொண்டு போகலாம். ஆனா ரெண்டு நாட்டு பிரச்சினை ஆகுறதுக்கு கூட வாய்ப்பிருக்கு"

"ம்ம் வேற நாட்ல இருந்து யாராவது வந்து நம்ம நாட்டுல இந்த மாதிரி இத இத மாத்துங்கன்னு அப்பாட்ட சொன்னா அப்பா மட்டும் கேட்பாரா என்ன? அது நல்லதா இருந்தாலாவது அப்பா யோசிப்பாரு ஆனா அதையே எல்லா நாட்டு பிரதமர்களும் செய்வாங்கன்னு எதிர்பார்க்க முடியாது. பெர்சனல் ஈகோவா எடுத்துட்டு இது வேற மாதிரி பிரச்சினை ஆகிட கூடாது" என்றாள்.

அதிலேயே அதையும் யோசித்திருக்கிறாள் என புரிந்தது அவனுக்கு, "நாம வந்த வேலைய மட்டும் பாப்போம்டா. அதுவே நமக்கு இங்க பெரிய பிரச்சினையா இருக்கு இதுல அவங்கள திருத்துற வேலைலாம் வேணாம். அதை கவர்ன்மென்ட் பாத்துக்கும்"

"எப்படி மாமா? பொண்ணுங்களுக்கு தான் நடக்கதுன்னு ஈசியா பேசுறியா நீயும்?"

"லூசாடி நீ? உன்னையே உன்னால காப்பாத்திக்க முடியல இதுல நீ இத்தன பொண்ணுங்கள காப்பாத்த போறியா? போடி" என கோபத்தில் திரும்பி கொண்டான்.

ஆழ்ந்து மூச்செடுத்து நிதானமாக்கினாள், அவனையும் சேர்த்து கடித்து வைப்பதில் ப்ரோயஜனம் இல்லை என மூளை எடுத்து சொல்ல, மனதையும் அமைதியாக்க முயன்றாள். சற்றுநேரம் இருவருமே அமைதியாக இருந்துவிட்டனர். அதீத கோபம், எரிச்சல் வரும் நேரங்களில் அமைதியாக அமர்ந்து விடுவது பல இழப்புகளை தவிர்த்துவிடும் என்பது அவர்கள் ஆரோனிடமிருந்து கற்றுக் கொண்ட பாடம்.

"கரெக்ட் மாமா! யாரோ எப்படியோ போறதுக்கு நம்ம என்ன பண்ண முடியும். நாமளே ரெடியாகி வந்த பிஃப்டீன் டேய்ஸ்குள்ள அவ்வளவு பேரையும் செக்கப் பண்ணி முடிக்காம தான் திரும்ப போறோம். நல்லா பார்த்தா இன்னும் ஒன் வீக், எக்ஸ்டென் பண்ணா கூட ஒன் வீக் அப்புறம் கிளம்பியே ஆகணும். அதுக்குள்ள இதை மண்டைக்குள்ள ஏத்திட்டு எதுக்காக கஷ்டபடணும்? நம்ம ஹனிமூன ஏன் ஸ்பாயில் பண்ணிக்கணும்? விட்ரலாம்" என அவள் பேசி முடிக்கையில் அவள் பின்னங்கழுத்தை பிடித்து குனிய வைத்து முதுகில் ரெண்டு மொத்து மொத்திவிட்டான்.

"ஏன்டா அடிக்கிற?" தள்ளிவிட்டு நிமிர்ந்து முறைத்தவளை, தானும் முறைத்தவன், "அவங்களுக்கு சாதகமா பேசுனா நம்மளையே டெஸ்ட் பண்ண சொல்லுதானேன்னு உடனே உன் முடிவு மாத்திக்கிட்ட பாரு உன்னைய மொத்தாம என்னடி செய்ய?"

"ம்ச் அப்டிலாம் இல்ல. நா யோசிச்சுட்டேன் எனக்கு ஐடியாவே வரல, போதாததுக்கு இங்கேயே இருந்து அவங்கள மாத்தவும் முடியாத நம்ம சிட்யுவேஷன். வேற என்ன முடிவுக்கு வர சொல்ற என்னைய?"

"அவங்களாவே நம்மள மாதிரி ஆளுங்கள பாக்க பாக்க மாறுவாங்கடி. படிக்கணும் இவங்கள மாதிரி சொல்லி தரணும், டாக்டர் ஆகணும், போலீஸ் ஆகணும்னு ஆசைபடுவாங்க. அப்ப‌ அவங்களே ஸ்டெப் எடுப்பாங்க தானே? அன்னைக்கு மாற்றம் வர ஆரம்பிக்கும்" என பொறுமையாக அவன் சொல்லவும் தலையை ஆட்டிக் கேட்டு கொண்டாள்.

"நா ஏன் உன்ன கல்யாணம் பண்ணிக்க கேட்டேன்னு தெரியுமா மாமா?"

"லவ் பண்ணல்லடி?"

"ஆமா பத்து வயசு மூத்த கிழவன் நீ உன்ன லவ்வு வேற பண்ணுறாங்க லவ்வு"

"அடிப்பாவி கிழவன் மாதிரியா தெரியிறேன் உனக்கு?"

"இப்ப இல்ல தான். ஆனா அப்ப என்னோட ட்வன்டீஸ்ல தேர்ட்டீஸ் இருக்க நீ அங்கில் தான?"

"பின்ன எதுக்குடி அங்கில வாவான்னு வரவச்சு கல்யாணம் பண்ண? அப்பாக்கும் மகளுக்கும் ஆளுங்கள அசிங்கபடுத்தணும்னா அவ்வளவு இஷ்டம்"

"அப்பாவ இழுத்தனா அவ்வளவு தான் சொல்லிட்டேன்"

"என் மாமாவ நா என்னவும் பேசுவேன் போடி. உங்க எல்லாருக்கும் முதல்ல, நான்சி அத்தைக்கே முன்னாடி அவரோட முதல் பிள்ளை நாந்தான் தெரிஞ்சுக்கோ"

"அப்றம் எதுக்கு நீ கேட்டதும் கட்டி தர மாட்டேன்னு சொன்னாராம்?" என்றாள். எப்போதும் அதை தானே அவன் பாட்டாக பாடிக்கொண்டிருக்கிறான்.

"அது நீ ஒரு அரலூசு உன்ன கட்டிட்டு நா கஷ்டப்படகூடாதுன்னு நினைச்சு தடுத்துருப்பாருடி"

"வெண்ண மவனே. உன்ன?" என அவன் மேல் பாய்ந்து விட, அவன் மல்லாக்க மண்ணில் விழ, அவன்மீது படர்ந்து விட்டாள் வருணி.

"விடுறி. நீ அங்கில் சொன்னதுக்கும் இதுக்கும் சரியா போச்சு" என அவள் கையிலிருந்த சட்டையை இவன் விடுவிக்க, சட்டையை விட்டுவிட்டு கழுத்தை பிடித்து நெறித்தாள்.

"நா போனா போகுதுன்னு உன்ன கல்யாணம் பண்ணா, என்னையே அரலூசு, வாழ்க்கை குடுத்தேனுல்லாம் பேசுவியா நீ? கொன்னுறேன் இரு இன்னைக்கு"

"ஆ நெறிச்சு தொலையாதடி வலிக்குது" என அவள் கையை தட்டிவிட, அவள் மல்லுக்கு நின்று பிடிக்க, என இருவரும் அடிபிடியில் உருண்டனர்.

அவன் அவளின் அபாயகரமான இடங்களில் கைகளால் வட்டம் சூழ துவங்க, "நேர்மையா சண்டை போடுறா எரும" என அப்போதும் பின்வாங்கவில்லை அவள்.

சிலநிமிட சண்டைக்கு பிறகு, இருவருக்குமே மூச்சு வாங்கியது, அவன் அப்படியே படுத்துவிட, அவன் மேலேயே அவளும் படுத்துவிட்டாள்.
 

priya pandees

Moderator
"சரி இப்ப சொல்லு. எதுக்கு என்ன கல்யாணம் பண்ணிக்க வந்து அப்பாகிட்ட கேளுன்னு என்னை வர சொன்ன?"

"உனக்கு நிஜமாவே சுத்தமா எதுவும் ஞாபகம் இல்லையா?" என்றாள் தலையை மட்டும் தூக்கி.

'நாம அவள சைட் அடிச்சுட்டு வேணாம்னு அமெரிக்கா ஓடி வந்தத கேட்காளோ?' என பார்த்தவன், "நா உன்ன லவ் பண்ணேம்னு சொல்ல போறியா?" என கேட்டுவிட்டு குறுகுறுவென பார்த்தான்.

"அதை இல்லன்னு வேற சொல்லுவியா?" என முறைத்தாள் அவள்.

"இல்லையே!"

"டேய்!" என கிண்டலாக சிரித்து, சுருட்டை முடியை இழுத்து கொண்டையாக சுருட்டியவாறு அவன் காலிலேயே எழுந்து அமர்ந்து கொண்டு அவனை நக்கலாக பார்த்தாள்.

"என்ன?" என்றான் கெத்தாக.

"என்னோட பதினாறு வயசுல என்ன பாத்து ஜொல்லு விடல நீ?"

"ச்சி இல்லவே இல்ல"

"நா காலேஜ் சேர்ந்தப்றம் என்ன முழுசா ஸ்கேன் பண்ணல நீ?"

"லூசு போடி எந்திரி மொத" என எழ முயன்றவனை தடுத்து மீண்டும் மல்லாக்க தள்ளியவள், அவன் காலில் இன்னும் அழுத்தமாக அமர்ந்து கொண்டாள்.

"உளறாம வா, நீ எதையும் சொல்ல வேணாம். வா போய் படுப்போம்" என எழ‌ முயன்றவனை மீண்டும் மீண்டும் தள்ளிவிட்டாள்.

"என்ட்ட தலைகுப்புற விழுந்துட்டு, பத்து வருஷம் சின்ன புள்ளைய அசிங்கமா பாக்க கூடாதுன்னு அமெரிக்கா ஓடி வரவே இல்லையா நீ?"

"என்னடி கதை விடுற? யார் சொன்னா இதெல்லாம் உனக்கு?"

"நீ செஞ்சதையும் மறச்சதையும் உன்ன தவிர வேற யாரு எரும எனக்கு சொல்ல முடியும்?"

"நா சொன்னேனா?" என்றான் யோசிக்க முயன்று, சரியாக எல்லாவற்றையும் சொல்கிறாள் என்றால் அவனை தவிர வேறு யாரு உளறியிருக்க முடியும்.

"நீயே தான் உன் வாயால அவ்வளவையும் ஒப்பிச்ச"

"எப்ப?"

"நா உன்ன வந்து பொண்ணு கேளுன்னு சொன்னேனே அதுக்கு ஒரு வாரம் முன்ன"

"எனக்கு எதுவுமே ஞாபகம் இல்லையே?"

"அப்படி மொடா குடி குடிச்சுருந்துருக்க அன்னைக்கு. அதனால தான நீ எவ்வளவு பொறுக்கின்னு கூட நா தெரிஞ்சுக்கிட்டேன்"

"ம்கூம் வாய்ப்பே இல்ல"

"ஓ! ப்ரூஃப் காட்டணுமோ?" என்றவள் போட்டிருந்த வெங்காய நிற குர்தாவை தூக்க,

"என்னடி தழும்பா காட்ட போற? இத்தனை மாசமா பாக்கலையே நானு?" என்றான் அவன்.

"ஆமா ரொம்ப ஆசை. அமெரிக்கால இருந்து இந்தியால இருந்த எனக்கு தலும்பு தர்ற அளவுக்கு வித்தகாரனா நீ?"

"நீதானடி டாப்ப தூக்குன? பொறுக்கின்னுலாம் சொன்ன" என முறைத்தான் அவன்.

"பேன்ட்ல இருந்த போனெடுக்க போனேன். மூஞ்சிலயே குத்துவேன். நீ பொறுக்கி மாதிரி தான் பேசுன அன்னைக்கு" என்றவள் அன்று வீடியோ பதிவாக பதிந்து வைத்திருந்ததை ஓடவிட்டு அவன் அருகிலேயே சரிந்து படுத்தாள்.

அதில், வெள்ளை சட்டை, கருநீல ப்ளேஷர் வலது பக்க தோளில் தொங்கி கொண்டிருக்க, டை தாறுமாறாக இறங்கி இருக்க, சேரில் ஒருபக்கமாக சாய்ந்து அமர்ந்திருந்தான் யாஷ். கண்ணின் சிவப்பும், அவன் அமர்ந்திருந்த தோரணையுமே அவனை முழு குடிகாரனாக அடையாளம் காட்டியது.

"நா மறுநாள் எக்ஸாம்னு டவுட் கேட்க எப்பையும் போல கால் பண்ணேன். அப்பதான் வீட்டுக்குள்ள நுழைஞ்ச நீ, முதல்ல மொபைல கைல வச்சு தான் பேசிட்டு வந்த, வரு குட்டி, மை டார்லிங் உன்ன தாண்டி இவ்வளவு நேரமு நினைச்சுட்ருந்தேன். கண்ட்ரோலே இல்லடி என்னென்னமோ தோணுது வரு குட்டின்னு, நீ ஆரம்பிச்சதுல தூக்கி வாரி போட்ருச்சு. மவனே நல்லவன் வேஷமா போடுற நாளைக்கு இத அப்பாட்ட காமிச்சு டண்டனக்கா டணக்குணக்கான்னு நா ஆடல என் பேரு வரு குட்டி இல்லடின்னு சொல்லி தான் ரெக்கார்ட் பண்ணேன். அதுக்கு ஏத்த மாதிரி நீயும் உன் காதல சொல்ல மொபைல பொசிஷனா வச்சுட்டு உட்கார்ந்துருக்க, வீடியோ அதுல இருந்து தான் ஸ்டார்ட் ஆகுது" என வருணி சொல்ல, இப்போது முறைத்து பார்த்தான் யாஷ்.

அவளை பார்த்தது, ரசித்தது, வியந்தது, பயந்தது, ஓடி வந்தது, என அனைத்தையும் மனதிலிருந்து கொட்டியிருந்தான் அதில். கடைசியில் அவளை திருமணம் செய்ய முடியவே முடியாது, அவன் காதலை கூறினால் வீம்புக்கென்றே மறுப்பாள், வயதையும் அழகையும் காரணமாக காட்டுவாள், என்றெல்லாம் புலம்பி இருந்ததை கண்டு, இப்போது தலையிலேயே அடித்து கொண்டான்.

அவன் அப்படியே சொக்கியிருக்க, இவள் தான் மொபைலை அணைத்து விட்டு அதிகமாக யோசித்தாள். மறுநாள் அவனே அழைத்து, "நைட் கால் பண்ணியா?" என சிடுமூஞ்சியாக கேட்ட போது, "ஆமா டவுட் கேட்டேன், நீ உளறி கொட்டுன, எனக்கு அதுல ஒரு மண்ணும் புரியல, இன்னைக்கு நா ஃபெயிலா போனா நீ தான் காரணம் பாத்துக்கோ. மனுஷி இருக்க பரிட்சை டென்ஷன் தெரியாம வந்துட்டான் போடா" என சமாளித்து ஃபோனை வைத்திருந்தாள். அவன் முந்தைய தினம் அவர்கள் கான்ப்ரன்ஸ் முடிந்த பார்ட்டியில் கலந்து கொண்டிருக்க, பலவகை திரவங்களை உள்ளே தள்ளியதன் விளைவு மொத்தமும் மறந்துவிட்டிருந்தது.

"நா உளறுனதுக்காக கல்யாணம் பண்ணிக்கிட்டீங்களாக்கும்?" என இப்போது அவன் கேட்டதும் குதித்து எழுந்தவள்,

"பின்ன? ஒரு இன்ட்ரோவெர்ட், திமிர் பிடிச்சவன், அகம் பிடிச்சவன், என்ன லவ் பண்றானாம். அதும் தன்ன மறந்த நிலைலயும் நாந்தான் நினைப்புல இருக்கேன்னா, உன்ன எப்டுறா விட முடியும். செத்தாலும் பரவால்ல அதுவரை உன்கூட வாழ்ந்துடுறதுன்னு முடிவு பண்ணேன். அதுக்கு தான் வந்து கேட்கவும் சொன்னேன். அப்பா வேணான்னு சொல்லவும், உன்ன புடிச்சுருக்குன்னு நானே சொல்ல வேண்டியதா போச்சு"

"ஓஹோ! சாக போறோம் அதுவரை இவன் தலைல மிளகா அரைச்சுக்கலாம்னு ப்ளான் பண்ணிருக்க?"

"நீ விட்ட ஜொள்ளுக்கு பாவம் பார்த்து கட்டிகிட்டேன்டா மாமா" என்றவளின் வாயிலேயே கடித்து வைத்துவிட்டான். மறுபடியும் ஒரு ஆர்ப்பாட்டமான சிரிப்புடனான சண்டையுடன் இன்று ஈர மண்ணிலேயே உறக்கத்தை தழுவினர்.

மறுநாள் காலையில் எப்போதும் போல் அவர்களுக்கான ‌தனிமை ரகசியங்களுடன் தான் அன்றைய நாளும் தொடங்கியது. ஊர்த் தலைவரிடம் ஒருமணி நேரம் பேசி, பாதி மருத்துவத்தில் விட்டுச் சென்றால் அது மற்றவர்களுக்கும் பரவும் நோய் தொற்றாகும் என்றெல்லாம் பயமுறுத்தி தான் அவர்களை ஒத்துக் கொள்ள வைக்க முடிந்தது.

அன்றைய முதல் நோயாளியாக யாஷ் முன் போய் அமர்ந்தது வருணி தான்.

"என்ன திடீர் ஞானோதயம்?"

"சும்மா தான் நீ பொழுதனைக்கும் சொல்லி காட்ற?"

"ரோஷக்காரி தான்டி நீ!" என்றவன், ரத்த பரிசோதனை, சிறுநீர், சிறு தேவைகளுக்கென கொண்டு வரப்பட்ட ஸ்கேன் மெஷின் வைத்து வயிற்றில் ஸ்கேன் வரை எடுத்துவிட்டான்.

அதன்பிறகு மருத்துவர்கள் அவர்கள் வேலையை மட்டும் தான் பார்த்தனர், மற்றதை தெரிந்து கொண்டால் தானே தலைவலி, அவர்கள் அறியாமை அவர்களுடனே இருக்கட்டும் என இருந்துவிட்டனர்.

ஆனால் காட்டுவாசி பெண்கள் அந்த பிரசவித்த பெண், வலியில்லாமல் இரண்டு நாளில் எழுந்து நடந்ததை கண்டு வாயை பிளந்து விட்டனர். மூன்று மாதங்கள் ஆகும் அவர்கள் போடும் தையலால் அந்த பெண்கள் படும் அவதியை ஒருவருக்கு ஒருவர் கண்டிருக்கின்றனரே. அதனால் அதிசயமாக அவளை கண்டு, "வலி இல்லையா? புண்ணாகவில்லையா?" என மனதார சந்தோஷித்து ஆர்ப்பரித்தனர். மருத்துவர்கள் மருந்து விரைவாக நம்மளை நடமாட வைத்து விடும் என அவர்கள் மனம் பலமாக நம்ப துவங்கியது.

அந்த பெண் தானாகவே, க்ளாடியனின் மனைவியான அந்த சிறிய பெண்ணையும் அழைத்துக் கொண்டு மருத்துவர்கள் இருக்கும் இடத்திற்கு வந்தாள்.

உடம்புக்கு உண்டான விசாரணையை முடித்த பின்னர் தயங்கி நின்றாள், எப்படியாயினும் ஜனோமி, க்ளாடியன் மூலமாக தானே அவர்களுக்கு தெரிய வைக்க முடியும். அதனால் அவள் அப்படி நிற்க, அந்த சிறிய பெண் வெட்கப்பட்டு கொண்டே விஷயத்தை க்ளாடியனிடம் சொல்ல, அவன் தலையை சொறிந்தான். சொன்னால் மருத்துவர்கள் திட்டத்தானே செய்வார்கள் என்றெண்ணி அவன் விழித்து நிற்க.

"என்ன கேட்குறாங்கன்னு சொல்லுங்க க்ளாடியன்?" என ஜெனிலியா கேட்க,

"நீங்க பிரசவம் பார்த்ததால தான் சீக்கிரமா எழுந்து நடமாடுறாளாம். ஆனா மறுபடியும் புள்ள உண்டாகாம இருக்க நீங்க மருந்து வச்சு கட்டலன்னு ஊர்ல பெரியவங்க எல்லாம் அத நினைச்சு பயப்படுறாங்களாம். அடுத்த புள்ள ஒரு வருஷத்துக்கு வர கூடாது. அதுக்கு எதாவது மருந்து தர்றீங்களான்னு கேட்குறா" க்ளாடியன் நல்ல முறையில் அதை மொழிபெயர்த்துவிட்டான்.

"பொண்ணுங்க வலிலாம் முக்கியமே இல்ல, சீக்கிரம் எந்துச்சு வந்துட்டா ரொம்ப வசதியா போச்சுன்னு அவ புருஷன் நினைச்சுருவானோ?" என்றாள் வருணி.

"அடிப்பாவி!" என்றான் யாஷ்.

"மருந்து இருக்கா டாக்டர்?" என்றான் க்ளாடியன்.

"நாளைக்கு வாங்க சின்ன தையல் போட்டுடலாம். அப்றம் பிள்ளையே வராது" என்றார் மற்றொரு பெண்மணி.

"ஃபேமிலி ப்ளானிங்கா டாக்டர்?" என்றாள் ஜெனிலியா மெதுவாக.

"ஆமா இனி பிள்ளை வரலைனா தீயில இறக்க மாட்டானுங்கள்ல? அந்த புள்ளையாது நிம்மதியா இருந்துட்டு போட்டும்" என சிடுசிடுத்தார்.

க்ளாடியனுக்கும், ஜனோமிக்கும் புரிந்தது. ஆனால் வாயே திறக்கவில்லை. அந்த பெண்ணிடம் மறுநாள் வரச்சொல்லி அனுப்பி வைத்துவிட்டனர்.

அடுத்த ஒருவாரம் தங்கள் பொறுப்பில் வைத்திருந்த அனைவருக்கும் மருந்து கொடுத்து எத்தனை நாட்கள் கணக்கிற்கு சாப்பிட வேண்டும் என அனைத்தும் சொல்லி ஒவ்வொருவராக அனுப்பிவிட தொடங்கினர் மருத்துவர்கள்.

அன்று மிச்சமிருக்கும் அனைவரின் பரிசோதனை தீர்வுகளும் வரவிருக்கின்றது. அதில் வருணியோடதும் அடக்கம். இத்தோடு இருப்பத்தைந்து கிராமங்களின் பரிசோதனை முடிகிறது. அடுத்த கிராமங்களுக்கு செல்வதா வேணாமா என மருத்துவமனையிலிருந்து இன்று வரும் தகவல் மூலம் தான் முடிவுக்கு வர முடியும். அந்த மெயிலையும் நகல் எடுத்து வர க்ளாடியன் செல்லவிருக்கிறான்.

அவர்கள் அந்த பரபரப்பில் இருக்க, அங்குள்ள மக்கள் வேறு பரபரப்பில் இருந்தனர். இன்று என்னவோ என இவர்கள் அவர்களை புரியாமல் பார்த்திருக்க, தலையில் தொப்பியுடன் வேட்டைக்கு செல்லும் உடையில் அவர்கள் முன் வந்து நின்றார் ஒருவர்.

"ஹாய் டாக்டர்ஸ்" என்றதிலேயே மேல்நாட்டு ஆங்கிலம் தெறித்தது. அங்கு பாடம் எடுக்க பதினைந்து நாட்களுக்கு ஒருமுறை வரும் வாத்தியார் அவர் என அவரே அறிமுகம் செய்துகொண்டு கலகலவென சிறிது நேரம் பேசியிருந்துவிட்டு சென்றார்.

அவர் பாடம் எடுக்கவென ஒதுக்கப்பட்ட இடத்தில் இருந்து பாடம் எடுக்க துவங்கிவிட, இவர்களும் மருத்துவ வேலையை துவங்கிவிட்டனர். சிறிது நேரத்திற்கு பிறகு மெல்ல அந்த இடத்திற்கு நடந்து சென்றாள் வருணி.

அங்கு யாரெல்லாம் படிக்கிறார்கள் என தெரிந்து கொள்ளவே அவள் சென்றது, நோட்டம் விட என மறைந்து மறைந்து சென்றதால் அங்கு இவளை போலவே மறைந்து நின்ற மூன்று பெண்களை கண்டு கொண்டாள். ஒருத்தி அன்று பிரசவித்தவள், மற்றவள் க்ளாடியனின் மனைவி, மற்றவள் வருணிக்கு புதியவள்.

மெதுவாக சென்று அவர்கள் தோளை தொட, பயந்து பதறி கத்த போனவர்கள் இவளை கண்டதும், கப்பென்று வாயை மூடிக்கொண்டனர்.

'இங்க என்ன பண்றீங்க?' என வருணி செய்கையில் கேட்க,

'படிப்பதை பார்க்க வந்தோம். யாரிடமும் சொல்லி விடாதீர்கள் அடி கிடைக்கும்' என அவர்களும் செய்கை முறையில் பதிலளித்தனர்.

'உங்களுக்கும் படிக்கணுமா?' என்றாள் வருணி, ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டு இல்லை ஆமா என எல்லா பக்கமும் தலையை உருட்டினர். சிரித்துக் கொண்டாள் வருணி. நினைத்ததை சாதித்துக் கொள்ள எந்த எல்லைக்கும் போகும் யாஷின் மனைவி வருணியின் பிரத்யேக சிரிப்பது.


 
Top