எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

அத்தியாயம் 11

Privi

Moderator

கோபத்துடன் வீட்டிற்கு வந்தாள் உமையாள். கையில் தூக்கிக்கொண்டு வந்த பெட்டியை டமார் என வீடே அதிரும் வண்ணம் கீழே போட்டாள். சத்தம் கேட்டு வந்த கயலோ அவள் முகத்தை பார்த்து அவள் மிகுந்த கோபத்தில் இருப்பதை அறிந்து கொண்டாள்.​

"என்ன ஆச்சி அண்ணி? ஏன் இவ்வளவு கோபமாக இருக்குறீர்கள்?" என வினாவினாள்.​

நீலனின் காதலுக்கு சம்மதம் சொன்ன மறுநாள் ஒருவித பயத்துடன் தான் வேலைக்கு வந்தாள் கயல். அவளின் பயத்தையும் பதட்டத்தையும் பார்த்து சிரிப்பு வந்தாலும் அமைதியாகவே இருந்தாள் உமையாள். பின் எதோ கேட்பதற்காக "அக்கா" என அழைத்தாள் கயல். அதற்கு உமையாளோ "அண்ணி" என திருத்தி இருந்தாள்.​

கயல் அதிர்ச்சியாக உமையாளை பார்க்க, உமையாளோ "அதுதானே முறை. தம்பி மனைவி என்னை அண்ணின்னுதானே கூப்பிடணும்" என கூறினாள்.​

கயலுக்கு கண்கள் கலங்கி விட்டது என்னதான் அக்காவுக்கு தெரியும் என்று நீலன் சொல்லியிருந்தாலும் அவளுக்குள் ஒரு பயம், படபடப்பு இருக்கத்தான் செய்தது எங்கே உமையாள் அவளை ஏற்றுக்கொள்ள மாட்டாளோ என்று. வேலைக்கு வந்ததிலிருந்து உமையாள் கயலிடம் சரியாக பேசவும் இல்லை. அதுவும் சேர்த்து அவளை வருத்தியது இப்போது உமையாள் அண்ணி என அழைக்க சொன்ன பிறகுதான் அவள் நிம்மதியாக உணர்ந்தாள். இப்படித்தான் கயலின் அக்கா எனும் அழைப்பு அண்ணியாக மாறிய கதை.​

கயல் கேட்ட கேள்விக்கு பொருமி தள்ளினாள் உமையாள். "ஒரு திமிர்பிடிச்சவன், சரியான அறிவுகெட்டவன் என் வண்டிய இடித்து தள்ளிவிட்டுட்டான். தள்ளிவிட்டது மட்டும் இல்லாமல் அதற்காக ஒரு மன்னிப்பு கூட கேட்கல. செய்த சேதாரத்துக்கு பணத்தை கையில் திணிக்கிறான்.​

எவ்வளவு தைரியம் இருக்கும்! அதனால தான் அவனுக்கு அறிவு வரட்டும் என்று அவன் மொழியிலே அவனுக்கு பாடம் எடுத்துட்டு அவன் குடுத்த பணத்தை அவன் முகத்தில் விட்டெறிந்துட்டு வந்துட்டேன்" என்றாள்.​

"தெரியாதவர்கள் கூட ஏன் அண்ணி பிரச்சனை? பேசாமல் வந்திருக்கலாமே" என கேட்டாள் கயல்.​

அதற்கு உமையாளோ "அதெப்படி முடியும், கொஞ்சமா பேசினான் அவன்? அவன் பேசியதற்கு நான் குடுத்த பதில் குறைவுதான்" என கூறினாள்.​

"பதில் கொடுக்காமல் வந்திருந்தால்தான் நான் வருத்தப்பட்டிருப்பேன்" என்றும் சேர்த்து சொன்னாள்.​

"சரி சரி நீ போய் வேலையை பாரு" என கூறினாள்.​

கயலும் சரி என வேலை செய்யும் இடத்திற்கு சென்று விட்டாள். இங்கு ருத்ரனுக்கு கோபத்தில் காது சிவந்து போய் இருந்தது. அவனிடம் என்ன பேசுவதென்று தெரியாமலும் பயத்துடனும் இருந்தான் விமல்.​

அவன் விபத்துக்கு காரணமான ராஜை சென்று சந்திப்பதுதான் அவர்களது திட்டம். போகும் வழியில் இந்த பிரச்சனை வந்து இப்போது என்ன செய்வதென்று தெரியாமல் இருந்தான் விமல். எவ்வளவு நேரம் இப்படியே இருப்பது என்று யோசித்து கொஞ்சமே கொஞ்சம் தைரியத்தை வரவழைத்து கொண்டு ருத்ரனை பார்த்து கேட்டான்​

"சார் இப்போ மிஸ்டர் ராஜை சென்று பார்க்கலாமா?"​

அதற்கு ருத்ரன் அவனை கனலை காக்கும் விழிகளில் நோக்கி​

"இது எனக்கு தேவையா, வண்டியை பார்த்து ஓட்டியிருந்தால் இவ்வளவு பிரச்சனை வந்துருக்குமா முட்டாள்?" என வார்த்தைகளை துப்பினான்.​

அவனின் திட்டுகளை அமைதியாக வாங்கிக்கொண்ட விமலோ மனதிற்குள் 'அது சரி இதை நான் சொல்லணும். சிவனேனு அந்த பொண்ணு திட்டுவதை வாங்கிக்கொண்டு அந்த பெண்ணை எப்படியாவது சமாதானம் செய்து மன்னிப்பும் கேட்டிருப்பேன். நடுவிலே நாட்டாமையாக வந்து அந்த பெண்ணிற்கு நன்றாக கோபத்தை ஏற்றி விட்டு எல்லா குழப்பத்தையும் செய்து விட்டு இப்போ நான் முட்டாள். ஹ்ம்ம்ம்.. சரிதான்' என நினைத்து கொண்டான்.​

சிறு அமைதிக்கு பின் விமல் ருத்ரனை ஏறிட்டு பார்த்தான்.​

"என் வீட்டிற்கு போ. அவள் என் மூடையே கெடுத்து விட்டாள். திமிர்பிடிச்சவள்" என அவளை வாய்க்குள் வறுத்து எடுத்து கொண்டிருந்தான்.​

வீட்டிற்கு சென்றும் கூட அவன் ஆத்திரம் அடங்க வில்லை. 'இன்னொரு முறை அவளை பார்த்தால் அப்புறம் அவளுக்கு நான் யார் என்று காட்டுகிறேன்' என நினைத்துக்கொண்டான்.​

வீட்டில் இருந்த படியே அவன் தொழிலை பார்த்துக்கொண்டு இருந்தான். அவனின் உடலும் கொஞ்சம் கொஞ்சமாக தேறி கொண்டு இருந்தது. வீட்டில் இருந்தவனுக்கு கொஞ்சம் சோம்பலாகவும் செழிப்பாகவும் இருந்தது. என்ன பண்ணுவதென்று தெரியாமல் பொழுதை போக்க பக்கத்தில் உள்ள பூங்காவிற்கு சென்றான்.​

அவன் வாழ்வை மாற்றிய பூங்கா. அவனுக்கு எப்போதெல்லாம் மனசு சரி இல்லையோ, இல்லை சலிப்பாக தோன்றுகிறதோ அப்போதெல்லாம் இங்கே வருவான். அங்கு போடப்பட்டிருக்கும் நீண்ட இருக்கையில் அமர்ந்து அங்கு விளையாடும் குழந்தைகளை பார்த்தால் போதும் அவன் மனம் லேசாகிவிடும். அன்றும் அதே எண்ணத்தில் தான் அங்கு சென்றான்.​

அங்கு சென்று அமர்ந்தவன் அங்கு விளையாடும் குழந்தைகளை பார்த்து கொண்டிருந்தான் அப்போது ஊஞ்சலில் ஒரு குழந்தை விளையாடிக்கொண்டிருந்தது. திடிரென்று அந்த குழந்தை ஊஞ்சலில் இருந்து விழுந்து விட்டது. பதறிக்கொண்டு ஓடி அந்த குழந்தையை தூக்கினான். தூக்கியவன், அந்த குழந்தையை சமாதானம் செய்துகொண்டே சுற்றும் முற்றும் பார்த்தான்.​

பின் அந்த குழந்தையிடம் "பாப்பா யாருடன் இங்கு வந்தாய்?" என விசாரித்தான்.​

அதற்கு அக்குழந்தை " என்... என்... என்னோட மா…மா… மாமா" என்று தேம்பி கொண்டே கூறியது.​

அவளை தூக்கிச்சென்று நீண்ட இருக்கையில் நிற்க வைத்து காலில் உள்ள மண்ணை தட்டி விட்டான். கைகளிலும் கால்களிலும் விழுந்ததால் காயங்கள் ஏதேனும் இருக்கிறதா என்று பார்த்தான்.​

"பாப்பா அழ கூடாது சரியா? இதோ இப்பவே சென்று நான் அந்த ஊஞ்சலை அடிக்கிறேன்" என அவளை சமாதானம் படுத்த அவன் வாய்க்கு வந்ததை கூறினான். குழந்தையோ அவனை விசித்திரமாக பார்த்து,​

"அங்கிள் இது.... ஊ...ஊஞ்சல் மிஸ்டேக் இல்ல... மை மிஸ்டேக்" என மழலையில் அழுத குரலுடன் பேசியது. ருத்ரனுக்கோ ஆச்சரியம் தான்.​

"என்னடா இந்த வயசில் இப்படி ஒரு பக்குவமா! பொதுவாக ஊஞ்சல் என்னை தள்ளிவிட்டது என்று சொல்லும் குழந்தைகள் மத்தியில் நான் விழுந்து விட்டேன் என் மேல் தவறு என ஒப்பு கொள்ளும் ஒரு குழந்தை. நல்ல வளர்ப்பு" என்று தான் நினைத்தான்.​

அப்போது மகிழ் என்று ஒரு குரல் அவன் பின்னால் இருந்து வந்தது. அந்த குரலை கேட்டதுமே அக்குழந்தை எட்டி எட்டி அவனுக்கு பின்னால் பார்த்தது அவனும் இதனை கவனித்து யார் என்று பார்க்க திரும்பும் சமயம் அந்த இடத்துக்கு நீலனும் வந்திருந்தான். நீலன் அவனை பார்த்து "சார் நீங்களா?" என கேள்வி எழுப்பினான். அவன் கண்கள் சுருங்கியது. அவனுக்குத்தான் நீலனை தெரியுமே.​

நீலனும் அவனது பதிலை எதிர் பாராமல் மகிழினியை அணைத்து கொண்டான்.​

"என்னாச்சி மகிழ்? மாமா உன்னை காணாமல் பதறி விட்டேன். கொஞ்ச நேரம் ஊஞ்சலில் உக்கார்ந்து விளையாட சொன்னேன். வந்து பார்த்தால் உன்னை அங்கு காணும். என்ன ஆனது ஏன் இங்கு வந்தாய்?" என நான்கு வயது குழந்தையிடம் கேட்டுக்கொண்டிருந்தான்.​

"ஹே ப்ரோ ரிலாக்ஸ், ஒன்னும் இல்ல பாப்பா கீழே விழுந்துட்டா, அதான் நான் தூக்கிட்டு வந்து அவளை சமாதானம் செய்து அவளின் கை கால்களில் உள்ள மன்களை தட்டி விட்டுட்டு இருந்தேன்" என்றான்.​

"கீழே விழுந்துட்டாளா?" அவனும் அவள் கை கால்களை பார்த்தான்.​

அதற்குள் ருத்ரனோ "அப்படி ஒன்றும் இல்லை ப்ரோ, ஷி இஸ் பைன்" என்று கூறினான்.​

"மகிழ் ஆர் யு ஓகே நொவ்?" என மகிழிடம் கேட்டான்.​

"யா! ஐ ஆம் பெட்டெர் நொவ்" என்றாள். ருத்ரன் அவள் பேசிய ஆங்கிலத்தை பிரமிப்பாக பார்த்தான்.​

"மை ஐஸ் கிரீம்" என கேட்டாள்.​

"அதானே உன் காரியத்தில் கண்ணாய் இரு" என கூறி அவளுக்காக வாங்கி வந்த ஐஸ் கிரீமை அவளிடம் கொடுத்தான். உடனே அவளும் அதனை ரசித்து உண்ண ஆரம்பித்து விட்டாள்.​

பின் ருத்ரனிடம் திரும்பி "சாரி சார் உங்களுக்கு சிரமம் கொடுத்து விட்டேன்" என கூறினான்.​

அதற்கு ருத்ரனோ "அப்படி எல்லாம் இல்லை நீலன் ஐ அம் பைன்" என்று கூறினான்.​

"சார் எல்லாம் வேண்டாம் ஜஸ்ட் கால் மீ ருத்ரன்" என்று கூறியவன், "நான் இன்று தான் இந்த பார்க்ல உங்களையும் இந்த வாண்டையும் பார்க்கிறேன்" என்று கூறினான்.​

அதற்கு நீலனோ "எப்போதுமே என்னுடைய விடுமுறை நாட்களில் நான் பாப்பாவை இங்கு தான் அழைத்து வருவேன்" என பதில் கொடுத்தான்.​

"பாப்பா பெயர் என்ன?" என்று கேட்டான் ருத்ரன்.​

அதற்கு நீலனோ "மகிழினி" என்றான்.​

"நல்ல அழகான தமிழ் பெயர்" என்றான் ருத்ரன்.​

"நன்றி ருத்ரன். அக்காவுக்கு தமிழ் பற்று அதிகம் அதான்" என்றான்.​

"அக்கா பொண்ணா?" என்று கேட்டான் ருத்ரன்.​

"ஹ்ம்ம் ஆமாம். சரியான சுட்டி" என அவளை பற்றி சில கதைகளை அவனிடம் கூறிக்கொண்டிருந்தான்.​

"அக்கா வரலையா?” என கேட்டான் ருத்ரன்.​

அதற்கு நீலனோ "இல்லை நான் தான் இவளை மட்டும் அழைத்து வந்தேன்" என கூறினான்.​

"உங்க அக்கா தான் எனக்கு ரத்ததானம் செய்ததாக கேள்விப்பட்டேன், அதான் அவங்களை பார்த்து ஒரு நன்றி சொல்லலாம் என நினைத்தேன் ஆனால் சந்திக்கும் வாய்ப்புதான் இன்னும் அமையவில்லை" என கூறினான்.​

அதற்கு நீலனோ "அம்மா எங்களை வீட்டிற்கு அழைப்பதாக கூறியிருந்தார். அப்படி வருவதாக இருந்தால் கண்டிப்பாக அக்காவை அழைத்து வருகிறேன்" என கூறினான்.​

"வருவதாக இருந்தால் இல்லை கண்டிப்பா வரணும்" என கட்டளையாகவே கூறியிருந்தார் ருத்ரன்.​

இப்படியே இருவரும் பேசிக்கொண்டு இருக்க சிறிது நேரத்தில் பாப்பாவை அழைத்துக்கொண்டு நீலன் புறப்பட தயாரானான்.​

அப்போது மகிழினி "அங்கிள்" என அழைத்தாள் ருத்ரனை. ருத்ரனும் அவள் உயரத்திற்கு குனிந்து என்ன என்று கேட்டான். அதற்கு மகிழ் அவன் கன்னத்தில் முத்தம் ஒன்று பதித்து விட்டு "எங்க அம்மா சொன்னாங்க நமக்கு யாரவது உதவி செய்தால் அவர்களுக்கு நாம் தேங்க்ஸ் சொல்ல வேண்டும் என்று அதனால் தேங்க்ஸ் அங்கிள்" என்றாள்.​

அவனும் அவளுக்கு பதில் முத்தம் ஒன்று கொடுத்து விட்டு நீலனிடம் இருந்து விடை பெற்றான். ஆனால் எனோ தெரியவில்லை மகிழை திரும்பி பார்க்க தோன்றியது. அவனுக்கு மகிழை மிகவும் பிடித்திருந்தது. அவளிடம் எதோ ஒரு உணர்வு அவனை சுண்டி இழுத்து.​

திரும்பி செல்லும் முன் நீலனை பார்த்து "மகிழ் அம்மா அவளை நன்றாக வளர்த்திருக்காங்க" என கூறி விட்டு மனசே இல்லாமல் அவ்விடம் விட்டு சென்றான். வீட்டிற்கு வந்தவன் மனதில் ஏனோ மகிழ் முகமே அச்சடித்து இருந்தது. குழந்தைகள் எப்போதுமே வரம் தானே.​

ஆடு பகை குட்டி உறவு என்பது போல இங்கு அம்மாவிடம் ருத்ரனுக்கு பகை ஆனால் மகள் மீது இனம் புரிய உணர்வு.​

 
Top