உமா கார்த்திக்
Moderator
தீராத டி நான் கொண்ட ஏக்கம் - 03
பழைய காதல் நினைவின் சுழலில் சிக்கிக் கொண்டவள் சுவற்றை வெறிக்க..
" பவி... என்ன அங்கேயே பாக்குறீங்க.?" அவள் தோள் மீது கை வைத்து உசுப்பியவாறு கேட்டாள்.. பிரதி.
சுயநினைவு வந்து, கண்களில் கோடிட்ட நீரை அடக்கி.. புன்னகைத்தாள் பவித்ரா.
" ஒன்னும் இல்லை. அம்மா பத்தி சொன்னதும். எமோஷனல் ஆகிட்டேன். "
" ம்... காஃபியை பருகியவாறு பவித்ராவின் தோளோடு சேர்த்து அணைத்து .. கவலைப்படாதிங்க.. பவி. " என தேற்றினாள்.
"பிரதி.. எனக்கு ப்ரீத்.. எப்படி னு தெரியும். அவன் எப்படி உங்களை ப்ரொபோஸ் பண்ணினான்.?
இல்ல நீங்க பண்ணீங்களா?
என்ன தாங்க உங்க லவ் ஸ்டோரி. ?
மர்மமான முறையில் வந்து திடீர்னு உங்கள லவ்வர் னு சொல்றான்.!
வீட்டுக்கு அழைச்சிட்டு வர்றான். என்னால நம்ப முடியலை.
நம்பாமவும் இருக்க முடியலை.
ஒருத்தன் மேல இவ்வளவு சீக்கிரம் எப்படி லவ் வரும்..! தப்பா நினைச்சுக்காதீங்க ப்ளீஸ்..
புரியாத புதிராகவே இருக்கு அதான்."என்று புது காதலியின் முகத்தை ஆராய்ந்து பார்த்து. துளி கூட கள்ளம் இல்லா அவள் முகம் சந்தேகத்திற்க்கு இடமளிக்காமல் பவித்ராவை நம்ப சொல்லி தடுத்தது.
" இந்த அற்புத விளக்கு தேச்சா பூதம் வரும் கதை சொல்லுவாங்க இல்ல,
அது மாதிரி தான் .
என்ன கல்யாணம் பண்ணிக்க னு
சொல்லி, நான் கேட்ட உடனே
அவனுக்கு ஒரு காதலி வந்துட்டாங்க. சந்தேகப்படுறேன் னு நினைக்காதீங்க ஆச்சரியமா இருக்கு .!
ப்ரீத் எப்படி காதலிக்கிறான்.
அதைவிட என்ன ஆச்சர்யம் னா
ப்ரீத் அ எப்படி ஒருத்தவங்க காதலிக்குறாங்க.!
ஆக்சன் ஹீரோ என் மாமா, ரொமாண்டிக் ஹீரோ கிடையாது. காதல்னா என்னன்னு புரியாத ஒருத்தவன எப்படி காதலிக்கிற நீ.?"
லேசான கோபத்தோடு "அப்படின்னா நீங்க எப்படி அவர காதலிச்சீங்க? " என அழுத்தமாக கேட்டாள் பிரதிக்ஷா .
பதட்டத்தை கசிய விடாமல் புன்னகையில் மறைத்து." ம்... என் அம்மாவோட ஆசை. கல்யாணம் பண்ணிக்க ஆசைப்பட்டேன். காதலிக்கலாம் இல்ல. ' பொய் சொல்றா..இவள நம்பாத ' என மனசாட்சி குரல் விட, மனசாட்சியை கடிந்தவாறு"அம்மா இறந்து ஒரு வருஷம் ஆகுது.வீட்ல வயசுக்கு வந்து பொண்ணும் வயசு பையனும் இருக்காங்க, நீங்களே சொல்லுங்க.. இவன கட்டிக்கிறது தான் எனக்கு பஸ்ட் ஆப்ஷனாவே இருந்தது.
ஏன்னா பல பிரச்சனை இதுக்குள்ள இருக்கு. ஒரு பொண்ணா யோசிச்சா என் கஷ்டம் புரியும்.இப்ப தான் நீங்க வந்துட்டீங்களே. உங்களுக்கு கல்யாணம் ஆகிட்டா, எனக்கு பிரச்சனை இல்லை.. அதை விடுங்க,
ஏன் அவன லவ் பண்ணீங்க காரணத்தை சொல்லுங்க? அவன் ரொமாண்டிக் இல்லைனு வருத்தமா இல்லையா?
மென் முறுவல் பூக்க "ரொமான்ஸ் ஒன்னும் லைஃப் இல்லங்க..
வாழ்க்கையில நெறைய அன்பு கிடைச்சவங்களுக்கு நெறைய எதிர்பார்ப்பு இருக்கும். எனக்காக அவர் இருந்தாலே போதும்." ஆழ்ந்த யோசனைக்கு பிறகு." பவி..இந்த சீரியல்ல தான் ரொமான்டிக்கான ஹீரோ இருப்பாங்க. அதுவும் இப்ப ரெண்டு ஹீரோயின் சப்ஜெக்ட்டா தான் இருக்கு."
விஷமமாக " இங்க மட்டும் என்னங்க.. இரண்டு ஹீரோயின் சப்ஜெக்ட் தான். " கண் அடித்துக் கொண்டு கூறினாள் பவி.
கைகளால் வாயை மூடியவாறு திகைத்தே போனால் பிரதி.
அவளின் முகபாவனை பார்த்து வீடு அதிர சிரித்தால் பவித்ரா , "விட்டுக் கொடுத்து போறது தான் வாழ்க்கை." 'ஏமாளியாக விட்டுக்கொடுத்து விட்டேனே.. என மனதில் விம்மியவாறு விரக்தியில் இன்னும் வேகமாக சிரித்தாள்.
தோளை உலுக்கி விட்டு" எனக்கு ஒன்னும் பிரச்சனை இல்லை.பச்.."பெருமூச்சு விட்டவாறு "ம்.... அவர் தான் பாவம்.. "
"அவன் ஏன் பாவம். ஜாலியா இருப்பான். ம்..ம்.. ம்கும்.. மறை பொருளோடு, புருவம் உயர்த்தினால் பவி.
" ஆமா.. ராஜா மாதிரி ரெண்டு சமையல், நீயும் நானும் போட்டி போட்டுட்டு சேவை செய்வோம். "
பாவமான முகத்தோடு " பச்.. ஒரே ஒரு பிரச்சனை தான். " என்ன ? என்பதை போல் பவியை நோக்கினாள் பிரதி. "நைய்ட் ??" என கூறி... முகம் மூடிசிரித்துக்
கொண்டே சோபாவில் விழுந்தால் பவித்ரா.
" ஏய். பவி.." வலிக்காமல் பட்டுடன காலில் அடித்து,சிரித்துக் கொண்டே ..தவிர்க்க முடியாமல் 'இருவருக்கும் நடுவில் அவன் இருப்பதைப் போல கற்பனை செய்து இவளும் மீண்டும் அதிர சிரித்துக் கொண்டே சோபாவில் விழுந்தாள் .
இருவரின் சிரிப்பு சத்தத்தில்
எரிச்சலான ப்ரீத். அறையில் தன் லேப்டாப் ஐ மூடிவிட்டு ஹாலின் உள் வந்தான்.
"பவி ஏன் இப்படி பேய் மாதிரி சிரிச்சிட்டு இருக்க ?" காட்டமாக கத்தி பேச,
அவனைக் கண்ட நொடி பொழுது தான் தாமதம் இருவரும். அந்த வீடே இடியும் அளவு ஹா..ஹா.. ஹா.. என பேய் சிரிப்பு சிரித்தனர். பெண்கள் இருவரின் சிரிப்பொலியில் ஹாலே அதிர்த்து.!
ஒன்றும் விளங்காதவனாய் நாயகன் " எதுக்கு என்ன பார்த்ததும் இப்படி சிரிக்குறீங்க.. ?"
"ஒன்னும் இல்லையே மாமா " சிரிப்பை அடக்க முடியாமல் உதட்டை கடித்துக் கொண்டு சொன்னால் பவி.
"ஏய் சொல்லு."பவியின் காதை திருகிக் கொண்டு கேட்டான் மாமன்.
"ஸ்.. ஆ.. அம்மா.. வலிக்குதுடா.. பொறுக்கி விடு, ஸ்..ஆ.. " கையை உதற பார்க்க.
மேலும் திருகினான் "சொல்லுடி.. ஏன் சிரிச்ச. ?"
" விடு..டா.. மாமா. விடு..அது வா.. சின்ன பையன் நீ.. உன்கிட்ட எல்லாம் சொல்ல கூடாது. " அமர்தலாக நிற்க, அவனது திருக்களின் அழுத்தம் கூடியது "ஆ.."என்று பவித்ரா கத்தியவாறு சொல்றேன்.. சொல்றேன்.. காத விடுடா.. "பவியும் பிரதியும் சேர்ந்து உன்ன கல்யாணம் பண்ணிக்கிட்டா எப்படி இருக்கும் நினைச்சமா அதான் சிரிப்பு சிரிப்பா வந்துச்சு. "
" ரெண்டு பேர் ஆ.!!" என வாயை பிளந்தவன்.
கற்பனை குதிரை அவிழ்க்கும் முன் கன்னத்தில் அறைந்தால் பவித்ரா.
"டேய்... கற்பனை பண்ணாத."என்று விரலை நீட்டி மிரட்டவும்.
வெட்கம் கலந்து புன்னகையோடு தலையை குனிந்து கொண்டான் ப்ரீத்.
" அவ்ளோ வெறி .. மாப்பிள்ளைக்கு. " என்று பவி அவனை அளந்து பார்த்து கூற,
ஆளை விட்டால் போதும் என்று தலை தெறிக்க ஓடி ரூமுக்குள் பதுங்கி கொண்டான் ப்ரீத்.
"பொண்ணுங்களா இவளுக , ம்.. ரெண்டு பொண்டாட்டி இருந்தா நல்லா தானே இருக்கும். " என்று பெருமூச்சு விட்டவாறு லேப்டாப் ஐ ஆன் செய்து அலுவலக வேலையை தொடர்ந்தான் நம் நாயகன்.
இங்கே தோழிகள் திரும்பவும் தங்கள் சிரிப்பை தொடர்ந்தார்கள்.
"போதும்.. பிரதி.. ரொம்ப சிரிக்க கூடாது. "மிகவும் சீரியஸான முகபாவனையோடு " காலையில உனக்கு. நைய்ட் எனக்கு. " என்ன என்பது புரியாமலே பிரதிக்ஷா அப்பாவியாய் பார்க்க. " மாமாவ காலையில நீ வைச்சிக்கோ. நைய்ட் நான்.. டீலா " என கையை நீட்ட .. பட்டென தள்ளிவிட்டாள் பிரதி.
" நோ... டீல்... ஏமாத்தாத பவி. என்று எட்டும் வரை கையால் லேசாக அடித்தாள். பதிலுக்கு பவியும் அடிக்க மாறி.. மாறி. செல்லமாய் அடித்து கொண்டனர். வளர்ந்த குழந்தைகள்.!
இல்லாத புருஷனுக்காக ஏன் நம்ம அடிச்சிக்கிறோம். ? என்று பிரதி கூற.
"பவி ... ஆமால்ல... மறுபடியும் விழுந்து விழுந்து சிரிக்க ஆரம்பித்தனர் இருவரும்.
பிரதியின் கையை அழுத்தாம பிடித்து " உன்கிட்ட அன்பு காட்ட யாருமே இல்லையா? பிரதி. " தந்தை இல்லாமல் இளமையில் பட்ட வேதனைகள் பல, இருவரும் இல்லாமல் வளர்ந்தவளுக்கு எத்தனை சொல்ல முடியாது எத்தனை ஏக்கம் இருக்கும்.
வெகுளியான புன்னகையுடன் " முன்ன யாரும் இல்ல. இப்ப அவர் இருக்காரு. "
" ஒ.. அவரு..ம்.. ம்..அவ்வளவு மரியாதை என் மாமா மேல. " என கிண்டலாக கேட்டாள் பவி.
" ம்...கும். "என்று குரலை செருமிக்
கொண்டு வந்தான் ப்ரீத் " என்ன?என் பேர் அடிபடுது. பவி தண்ணி வேணும்.
"ம்.." சிறு தலை அசைப்போடு சந்தேகத்திற்குரிய பார்வை மாமனை பார்த்தவாறு கிட்சன் உள் நுழைந்தாள் பவித்ரா.
சோபாவின் மீது அமர்ந்தவன். மெல்ல மெல்ல நகர்ந்து..ஓரமாய் ஒட்டி இருக்கும்..
பிரதியை நெருங்கி அவள் தோள்கள் உரசிட அமர்ந்தான்.
பதட்டம் எடுக்க "என்ன பண்ணுறிங்க? ப்ரீத் .. தள்ளி உட்காருங்க. " என சிணுங்கி..சோஃபா முனையில் சிக்கியதால் நகர முடியாமல் தவிக்க.
" ம்.." என்று இன்னும் நெருங்கி தோள் மீது தோள் அணைத்து கொண்டான்.
"பச்..ப்ளீஸ்.. பவி இருக்கா. தப்பா நெனைப்பா.. "என்று விலக முயன்றவளை கோபமாய் முறைத்தவன்
அவள் கைகளை அழுத்தமாக பற்றினான்.
ஆசையாக அவள் முகம் பருகி " பிரதி.. பிரதி..தி..தி என்னடி பண்ண என்ன.. நீ இல்லாம நிமிஷம் கூட இருக்க முடியலை. "
பிரதி "ம்." அப்படியா என்பதை போல் நாணத்துடன் "நான் என்ன பண்ணேன்.?" என்ற
கேள்வியின் பதிலாய்.. அவள் கண்ணம் பற்றி கண்ணோடு கண்களை மோத.!தன்நிலை மறந்து இருவரும் உறைந்து போய்விட, மயங்கி தெளிந்து சுதாரித்தவன். " உன் கண்ணு தான் டி என்ன என்னமோ பண்ணுது. போதை மாதிரி ஏறுற டி நீ.. இங்க " அவள் கையை எடுத்து தன் இதயத்தை வருடித் தர .. காதல் மயக்கத்தின் உறைநிலை.
தண்ணீரோ பவித்ரா கிட்சன் விட்டு வரும் போது நடப்பதை கண்ட மனமோ சகுதியில் கொதி நிலையில்." பாவி பய.. இப்படி எல்லாம் இவன் பேசுவானா ? நம்ம கண்ணு தான் தப்பா தெரியுதோ ..! " இரு கண்களை கையால் கசக்கி விழி விரிய பார்த்தாள். முன்னால காதலி.
" பிரதி.. பிரதி.. " இரக்கமான குரலில் கெஞ்சும் விழியோடு அசையாமல் பிடித்து. அவளின் இதழ்.. நெருக்கியவனை கண்ட அதிர்ச்சியில்
பவித்ரா." கிஸ் ஆ.. என் ப்ரீத் இப்டி பண்ணுவானா? நடு வீட்டுல , உனக்கு என்னடா ஆச்சி.." சம்பவம் நிகழும் முன் வேகமாக சென்று ஒரு செருமல் .
ம்..ம்..கும். என்று அவன் அருகில் வந்தவள் முறைப்போடு " இந்தா தண்ணி.."என்று மாமன் கையில் தினித்துவிட்டு வேகமாக அவன் முகம் பாராமல் தனது அறையை நோக்கி சென்றாள். நடப்பது நிஜமா என்று நம்ப முடியாமல் குழம்பி போனால் பவி. காதல் கசிந்துரு கல் எல்லாம் நிகழ்த்துவது மாமா தானா.? ஏற்க்கவே முடியாமல் தவித்தாள் அத்தை மகள்.
அவள் போனதும் "ம்... அப்பாடா. " என்று நிம்மதி பெருமூச்சு விட்டவன் உடனே பத்தடி தள்ளி அமர்ந்தான். நான் சரியா பேசுனனாங்க.?" பேச்சுப் போட்டியில் பேசும் குழந்தை ஆசிரியரிடம் கேட்பதை போல கேட்கும், இவனை புன்னகையுடன் பார்த்தாள் பெண்.
பிரதி (காதல்) டீச்சர் "ஏன் சார் ஒப்பிக்குற மாதிரி பேசுறீங்க.? உணர்வுகள் தான் வார்த்தைக்கு உயிர் கொடுக்கும் போங்க சார். நல்லா உணர்ந்து பேசுங்க. " என கிளாஸ் எடுத்தாள்.
முகம் கோணலாக பல்லை கடித்து " ஃபீல் பண்ணனுமா.? நான் என்ன உன்ன லவ்வா பண்றேன். ?லவ் பண்ணா தான் ஃபீல் ஆகும். " என்றவனை நக்கலாக பார்த்து ஒரு புருவம் நெரித்து " ஒ.. அப்டினா லவ் பண்ணுங்க, ஃபீல் ஆகட்டும். "என அவனையே பார்வையால் அளக்க..! 'பையத்தியமா இவ' என எண்ணியவன். நடிப்புக்கு இது போதும். என்ன அவார்டா வாங்க போறேன்.. அவ நம்புனா போதும்." முறைப்போடு சென்றான்.
பவித்ரா இந்த காட்சியை கண்டுவிட்டு காலையில் அறையினுள் சென்றவள். மதியம் வரை அறையை விட்டு வெளிய வரவில்லை. உணவும் வேண்டாம் என்று விட்டாள்,
கண்ணீரை கொட்டி தீர்த்தாள்.
" ஏம்மா... அவன கல்யாணம் பண்ண சொல்லி சத்யம் வாங்குன ?
அவன் கிட்ட ஏம்மா என்ன கல்யாணம் பண்ணிக்க சொல்லலை நீ..
என்னால அவன் பிரதிய நெருங்குறத ஏத்துக்க முடியலை மா. எனக்கு அவன் வேணும்..ம்மா.. அவன் என்ன விட்டு விலகி போறாம்மா.. என்ன ஏன்மா பிடிக்கலை. ?" புலம்பினாள் காதல் வலியில் .
கண்ணீர் காதலை கரைக்காது என்று புரியாமல் அழுகையில் ஆறுதல் தேடினால் அவள்.!
காதல் நாடகம் தொடங்கி மாதம் இரண்டு கடந்தது.
உண்மையை விட பொய் அழகானது அல்லவோ ! இவள் ஆட்டி வைக்கும். பொம்மை ஆனான் ப்ரீத்.தனக்கான பொய் காதலை உருவாக்கி, மெய் என்பது போல் எண்ணினாள் அவள்.
காதல் மொழிகள், அணைப்பு, நெருக்கம் என பவி இல்லாத போதும் இருக்கிறாள் என்று பொய் கூறி,அவனை ஆட்டு வித்தாள். செயற்கையான மழை போல.! அவன் செயற்கை காதலில் நனைந்தாள். மொத்தமாக கரைந்து உருகியே போனாள் பிரதி. என்னவன் என்று இல்லாமல் எல்லாமும் அவன் என ஆனான் ப்ரீத்.
நாயகன் மார்போடு சேர்ந்து ஒட்டி கொண்டாள் அவள்.. " பவி தான் இங்க இல்லையே. என்ன பண்ணுற " சுற்றி பவி தென்படுகிறாளா என்று ஆராய்ந்து சட்டென பிரதியை விலக்கி தள்ளினான் ப்ரீத்.
அவன் செயலை கண்டு பயத்தில் நடுக்கம் வரவே.. "என்ன ஆச்சு சார் .. " என்று இயல்பாக பேச முயன்றவளை "நீ நிழல நிஜம்னு நெனைச்சு கனவு காணுற, இந்த நாடகத்தை இதோட நிறுத்திகளாம். " சீற்றத்தோடு விலகி நடக்க.
" இல்லை.. சார்.. பவி நம்பனும்னு தான்.."என்று பிரதி நடுக்கத்தோடு சொல்லவும்.
அடங்கா சினம் கொண்டு "ஸ்.." என்றவன். " நீ சரி இல்லை. உன் பார்வை.. .வார்த்தை.. காதல் பொய் இல்லை. நீ சொல்லுறத நான் சொல்லுறது. அதை கேட்குறத வச்சு கற்பனை பன்னிகாத, இது எல்லாம்மே பொய்.. நிஜத்துல நான் யார்னு உனக்கு தெரியாது. என்ன விட்டு விலகுறது தான் உனக்கு நல்லது. " என கோபமாக எச்சரித்தான்.
பயத்தில் எச்சில் விழுங்கி "அப்படி எல்லாம் இல்ல நான் சும்மா நடிக்கிற தான் சார்."
" இனிமே நடிக்க வேண்டாம். என்னைக்கு ஊருக்கு கிளம்புறேன் னு முடிவு பண்ணிட்டு சொல்லு.." பதிலுக்காக முகம் பார்க்க.
"ஏன் சார்..என்று திணறியவள் பவித்ரா கேட்டா என்ன சொல்வீங்க?"
" எல்லாம் முடிஞ்சிடுச்சுனு சொல்லிடுறேன். அதானே உண்மை,லவ் பண்ணுற மாதிரி நடிக்கிற தானே " அழுத்தமான குரலில் கேட்க,
"ம்..ஆமா.." என்று அவள் இதழ்கள் கூறினாலும். இல்லை என்றது அவளின் மனது.
முதல் காதல் அல்லவா பொய் என்றாலும் பிடித்து அவளுக்கு. எல்லாம் முடிந்து விட்டது என்று அவனது சொல் ஈட்டியாக இறங்கியது அவள் இதயத்தில்,முகத்தில் சோகம் படர ஏக்கத்தோடு அவனை நோக்கினாள் பிரதி. அதை துளியும் சட்டை செய்யாதவனாய் அறைக்குள் சென்று கதவை ஓங்கி அடித்தான். அடித்தத வேகத்தினால் இரண்டு நிமிடங்கள் வரை கதவுகள் அதிர்ந்து கொண்டே இருந்தது. அடித்ததால் திடீரென்று எழுந்த சத்தத்தால் உடல் முழுவதும் நடுங்கி பயந்து நின்றாள் பெண் அவள். என்னை நெருங்காதே என்று கர்ஜனை போல் இருந்தது அந்தகதவின் சத்தம்.!!
முதல் முதலாய் ஒரு பெண்ணின் நெருக்கம். இரும்பல்லவே அவன் இதயம்.
மனங்களை இறுக்கிக் கொள்ளலாம் ஆனால் உணர்வுகளை
என்ன செய்வது.!
பிரீத் ஐ லவ் யூ.. என்று பெண் அவள் கூறும் போது பொய்யும் போதையாக தான் இருந்தது. நரம்புக்குள் பூக்கள் பூக்கும். அத்தையின் இறப்பிற்க்கு பின் அன்பில் அனாதையாக இவன். தேவதை தந்த வரம் அவள் அவன் மேல் காட்டும் அளவில்லா காதல்.
அவளின் நெருக்கத்துக்கு இதயம் பழகுகிறது என்று உண்மை தெரிந்ததும், தன்னைத்தானே விலக்கிக் கொள்கிறான். அவளின் காதலிடமிருந்து, எப்படி தப்பிப்பான் அவன் அவள் அன்பின் பிடியில் இருந்து.!
இத்தனை நாள் இந்த நாடகங்கள் நடந்து முடிந்த பிறகு பிரதி இயல்பாக இருப்பாள். ஆனால் அவளின் பொய் காதலனோ நடந்த அத்தனையும் கண்களால் படம் பிடித்து இதயத்தில் சேகரித்து வைப்பான்.!!
தனது பூட்டிய அறையில் அவள் பேசிய அத்தனையும் மனத்திரையில் படமாக பார்த்து ரசிப்பான்.
" ஒரு ஆண் காதலிப்பதை விட .. ஒரு பெண்ணால் காதலிக்கப்படுவது வாழும் சொர்க்கம்.! "
அவளின் அணைப்பையும் , மென்மையையும், அவளின் வாசத்தையும் கற்பனையில் எண்ணிக்கொண்டு தலையணை கட்டி முத்தமிடுவான்.
ஒரு தலை காதல் தந்த காயத்தில் காதல் ஊற்றி காயம் ஆற்றினாள் இந்த தேவதை பெண்.!!
" பேபி ஹக் தான்.. ப்ரீத் என்று அவள் மென்மையாக பட்டும் படாமல் அணைக்க, ஆடவனோ அவளே அவனுள் மூழ்கும் அளவு இறுக்கி அணைத்துக் கொள்வான். பயம் கொண்ட குழந்தை போல.. இவளுக்கு மூச்சு முட்ட சரியான காஞ்ச மாடா இருப்பான் போல என்று பெண் எண்ணினாலும் பிடித்தவன் என்பதாலும். வன்மையில் மிருகத்தை போல் தெரிந்தாலும்.. இந்த பெண்மையை தவிர யாரையும் தீண்டாதவன் என்று அவன் தொடுதல் உணர்ந்து தெய்வம் போல எண்ணினாள்.இறுக்கத்தின் வலியும் பொறுத்துக் கொண்டாள். அவனுடன் பழகிய தோஷமோ .. இன்னும் இறுக அவனை பற்றிக் (கட்டிக்)கொண்டாள்.
பொய் காதலனுக்கு அவளின் சின்ன சின்ன முக பாவனை கூட அத்துபடி என்று கூறலாம். அவன் பெயரை இவள் கூறும் அழுத்த உச்சரிப்பை கூட ரசிப்பான். இருந்தும் ஏன் விலகினான் விலகப் பார்க்கிறான் போகப் போக பார்க்கலாம்.
நன்றிகள்
கோடி

Last edited: