எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

varnangal 16

Geethasuba

New member
வர்ணங்கள் 16
சுபாவைத் திருமணம் செய்துகொள்ளும் எண்ணம் பிரணாவின் மனதில் தீவிரமாக ஊன்றி விட்டதாலோ என்னவோ அவனால் தொடர்ந்து சிங்கப்பூரில் வேலை செய்ய முடியவில்லை.அவனுக்கு சுபாவின் பெண் குழந்தை தியா மீது சிறிதும் விருப்பம் கிடையாது.இன்னும் கேட்டால் பாரம் தான்.

முதலில் சுபாவை திருமணம் முடித்து விடலாம். தங்கள் இருவருக்குமான குழந்தை பிறந்த பிறகு தியாவை ஏதாவது ஹோஸ்டேலில் போட்டு வளர்த்துக்கொள்ளலாம்.எப்படியும், சுபா திறமைசாலி.வேலையை விட்டுவிட்டு இருக்கமாட்டாள் என்பது நிச்சயம். பிறகு,அவளது அம்மா. அவர்களும் பாரம்தான். அவர்களை மூட்டை முடிச்சுகளுடன் இந்தியாவுக்கு கிளப்ப வேண்டும். முடிந்தால் தியாவையுமே ஏதாவது காரணம் சொல்லி அவள் பாட்டியுடன் பேக் செய்துவிட்டால்,பிறகு அதிகம் மெனக்கெட வேண்டியதில்லை.

அந்த கர்வமும்,அழகும் கூடிய சந்தன பெட்டகம் முழுவதுமாய் என் கைகளில் சேர்ந்துவிடும் என்று மனதில் கணக்கு போட்டிருப்பவனால் எப்படி அமைதியாக வேலை செய்ய முடியும்!

இதெல்லாம் தெரியாமலேயே சுபா இவனை தூர நிறுத்திவைத்திருப்பது அவளது நல்ல நேரம் தான். முதலில் நான் சாயா ஏதாவது பிரச்னையை உருவாக்கக் கூடும் என்றுதான் நினைத்திருந்தேன். ஆனால் ,பிரணவ்! அவனை நிச்சயம் இப்படி நான் யோசித்திருக்கவில்லை. இதனால்தானே மனித மனம் பல வர்ணங்களைக் கொண்டது என்று குறிப்பிடுகிறார்கள். பிரணவின் எண்ணங்கள் அவை முழுவதும் கருப்பு.

அவனது எண்ணங்கள் மூலம் நான் புரிந்துகொள்வது அவனது ஈடுபாடு அதற்கு காதல் என்று யாரேனும் பெயர் வைத்தால் அவர்கள் முட்டாள்கள். காமத்துடன் கூடிய கணக்கீடு அவனது மனம். அலுவலகத்தில் மேலதிகாரியை பிடித்து எப்படியோ சென்னைவர ஏற்பாடு செய்துக்கொண்டான். ஆனால் ,தளத்தில் வேலை செய்ய அவனுக்கு பயிற்சி எதுவும் கிடையாது.

அதை எவ்வளவோ எடுத்து சொல்லியும் அவன் கேட்பதாக இல்லை. நிறுவனத் தலைவரின் தூரத்து உறவினன்.எப்படி அவனைத் தடுக்க முடியும்? வேறு வழி இல்லாமல் இந்த முறை அவனை மலேசியாவுக்கு ஒரு மாதப் பயிற்சிக்கு அனுப்பி ,பயிற்சி பெற செய்து அரைகுறை பயிற்சியுடன்,மீதத்தை இந்தியாவில் முடிக்கும் கட்டளையுடன் ஒருவழியாக சென்னை வந்து சேர்ந்தான் பிரணவ்.

அவன் மனம் முழுவதும் சுபாவைக் காணப்போகும் ஆனந்தம் நிரம்பி வழிந்தது. நிறுவனம் அவனுக்காக ஈஞ்சம்பாக்கத்தில் ஒற்றைப் படுக்கை அறையுடன் கூடிய பிளாட்டை அவன் தங்குவதற்கென ஒதுக்கிக் கொடுத்தது. அவனுக்கு அது பெரிய அதிர்ச்சி தான். சுபா தங்கியிருக்கும் இடத்திலேயே தனக்கும் இடம் வேண்டும் என்று கேட்டிருந்தான்.அதே அடுக்ககத்தில் தான் அவன் நிறுவனத்திலிருந்து சென்னை வந்திருக்கும் மற்றவர்களும் தங்கியிருக்கிறார்கள். அவர்களுக்கு தளத்தில் வேலை கிடையாது.அலுவலகத்திலிருந்து வேலை செய்யவேண்டும்.

இவனை மட்டும் தனியே தங்க இடம் கொடுக்கப்பட்டது ஒரு விஷயம் என்றால் மற்றவர்களுக்கு இரட்டை படுக்கையறையுடன் கூடிய தங்குமிடம்.இவனுக்கு ஒற்றை படுக்கையறை. தானாக கேட்டுக்கொண்டு தாமதமாக வெந்திருக்கிறோம். தான் இந்த வேலைக்கு அதிகப்படி என்பதை அவன் எங்கேனும் உணர்ந்திருந்தால் தானே,இவையெல்லாம் உறைக்கும் ?

போதாதகுறைக்கு அவனுக்கும் வேலை அலுவலகத்தில் கொடுக்கப்பட்டது.களப்பணி கொடுக்கப் படவில்லை.பயிற்சி போதாது,வேலை ஆரம்பித்து பத்துநாட்கள் ஆகிவிட்டது. ஆட்களை நியமனம் செய்து,ஒப்பந்த நிறுவனத்திடமும் ஒப்புதல் வாங்கிவிட்டாகியது.இனி எதையும் மாற்றுவதற்கு இல்லை என்று தீர்மானமாக சொன்ன நிறுவனத்திடம் ஒன்றும் சொல்லவும்,செய்யவும் முடியாமல் கைகள் கட்டப்பட்ட நிலைக்கு உள்ளானான் பிரணவ்.

இன்னொரு பக்கம் சுபாவின் மனதில் எவ்வளவு தூரம் ஜெயந்தன் அமர்ந்திருந்தானோ,அதைவிட அதிகமாக சுபாவினை பற்றிய எண்ணலைகளால் தாக்குதலுக்கு உள்ளானான் ஜெயந்தன்.அவளை விடுத்து வேறொன்றும் அவனால் சிந்திக்க முடியவில்லை. எதேச்சையாக, சதீஷுடன் காணொளி வாயிலாக வேலை தளத்திலிருந்து பேசிக்கொண்டிருக்கும் பொழுது,பின்னால் அமர்ந்துகொண்டு ஏதோ வேலை செய்து கொண்டிருந்த சுபாவை பார்த்த ஜெயந்தனுக்கு தனது கண்களை நம்பமுடியவில்லை.

இத்தனை நாட்களாக இவள் நம்முடன்,நமது கனவு ப்ரொஜெக்ட்டில் வேலை செய்துக்கொண்டிருக்க,கவனிக்காமல் விட்டோமே!இனி,அவள் யார்,அவளது விவரங்கள் எல்லாவற்றையும் தெரிந்துகொள்வது ஒன்றும் கஷ்டமில்லை என்று லேசாக மனதில் விசில் அடித்துக்கொண்டவன்,தனது மனது விரும்பும் பெண்ணை சுவாரஸ்யமாய் பார்த்தவாறே பேசி முடித்தான்.

பிரணவ் இன்னொருபுறம் வேலை தளத்தில் வேலை கொடுங்கள் .இங்கு அலுவலகத்தில் வேண்டாம்.நான் சுபா அவர்களிடம் வேலை கற்றுக்கொள்கிறேன் என்று தலைமை அலுவலகத்திற்கு மெயில் அனுப்ப,அவர்களிடமிருந்து,'நிச்சயம் தளத்தில் தான் வேலை வேண்டுமென்றால்,பெங்களூரு ப்ரொஜெக்ட்டில் இருப்பவர் மீண்டும் மலேசிய திரும்ப விரும்புகிறார். இரண்டு மாதங்கள் அவருடன் பணி செய்து வேலையை கற்றுக்கொள்ள வாய்ப்பளிக்கிறோம் என்று பதில் வந்தது. அதோடு,அன்று இரவே சம்மந்தப்பட்ட நபர் இவனை அழைத்து,எப்போது வருகிறீர்கள் ?' என்று கேட்கவும் பிரணவின் இரத்தக் கொதிப்பு ஏகத்துக்கும் ஏறியது.

தானே வலிய வந்து சிக்கிவிட்டோமோ என்று யோசிக்கத் தொடங்கிவிட்டான். தலைமையகம் இவனுக்கு தக்க நேரத்தில் பாடம் சொல்லிக்கொடுக்க நினைத்திருப்பதை அவன் இன்னமும் உணரவில்லை.

சுபாவின் வீட்டில் தியா அநேகமாக ஜெயந்தன் பற்றி பேசத் தொடங்கியிருந்தாள். அவனை பார்க்கவேண்டும்.அவனுடன் நேரம் செலவழிக்கவேண்டும் என்றெல்லாம் குழந்தையின் மனம் ஏங்கியது. அவனது தோள்களில் சாய்ந்திருந்த நேரங்களில் தோன்றிய கதகதப்பு குட்டி தியாவுக்குள் ஒரு பாதுகாப்பு உணர்வை ஏற்படுத்தத் தவறவில்லை. அதனாலேயே அவனைக் காண ஏங்கினாள்.

பெரியவர்களுக்கு அவளது தேடல் புரியாது இல்லை. அவனாகத் தான் வரவேண்டும் பிரச்சனைகள் . எல்லாவற்றிற்கும் ஒரு முற்றுப்புள்ளி வைத்தாக வேண்டும் என்பதில் சுபாவின் அம்மா தீர்மானமாக இருந்தார்.எந்த காரணத்தைக்கொண்டும் மீண்டும் அவனுடன் தொடர்பை ஏற்படுத்திக்கொள்ள வேண்டாம். அவனது பெற்றவர்களால் குழந்தைக்கு ஏதாவது ஆபத்து வரக்கூடும்.குழந்தையாவது எனக்கு நிலைக்கட்டும் எண்டு சுபா அவளும் அமைதியாக இருந்தாள் . சுபாவை பொறுத்தவரை,குழந்தை கொஞ்ச நாட்கள் ஜெயந்தனை மனதில் ஞாபகம் வைத்திருக்கக் கூடும்.பிறகு மறந்து விடுவாள் என்று யோசனை.

அவள் யோசிக்காமல் விடுத்த ஒரு விஷயம், ஞாபகம் வைத்துக்கொள்ளவும்,மறக்கவுமான உறவு அல்ல ஜெயந்தனுக்கும் தியாவுக்குமான உறவு. இருவருக்கும் தெரியாவிட்டாலும்,அப்பா-மகள் இருவருக்குமான நெருக்கமான உணர்வை இருவரும் உணர்கிறார்கள். சொன்னாலும் சொல்லாவிட்டாலும், சுபாவாவது மூன்றாவது மனுஷி.தியா அவனது சொந்த ரத்தம். அந்த பிணைப்பு இல்லாமல் இருக்குமா என்ன/

அதோடு,சுபவையே அவள் எங்கிருந்தாலும் உணரும் ஜெயந்தன், அவள் மகளை எப்படி அவ்வளவு சீக்கிரம் மறப்பான் ?இதெல்லாம் சுபாவுக்கு புரியாது.ஆனால் ,அதிக அனுபவம் கொண்ட அவளது அம்மாவுக்கு ஜெயந்தனது தேடுதல் தெளிவாகப் புரிகிறது.

சுபாவை வேலைத்தளத்தில் பார்த்த ஜெயந்தனுக்கு சந்தோசம் கரைபுரண்டது. அவள் அம்மா சொல்வதுபோல் அவள் அருகே நெருங்காமலேயே அவளை நெருங்க முடியும். மற்றவர் கண்களுக்கு,குறிப்பாக மீடியாவின் கண்களுக்கு மண்ணைத்தூவி விட்டு அவளை பார்க்கவும், முடிந்ததால் பேசிப் பழகவும் வாய்ப்பு இருக்கும் பொழுது அதை ஏன் தவற விடவேண்டும்?

வேலை சம்மந்தமாக அவளிடம் பேசினால் அவளும் தனது முகத்தை திருப்பிக்கொண்டு செல்ல இயலாதுதானே என்று யோசித்தவன் ,சதீஷிடம் வேலைத் தளத்தில் ஸுபா எப்படி வேலை செய்வாள் என்று கேட்டு அறிந்துகொண்டான். கொஞ்ச நாட்கள் அமைதியாக வேலைப் பார்த்தவன் மீண்டும் 'சுபாவை தள வேலைகளில் தனது காரிய தரிசியாக வேலை செய்ய அனுமதிக்க முடியுமா..என்னால் தினமும் வர இயலாது. அதோடு வந்தாலும் எனக்கு உதவி செய்ய யாராவது வேண்டும். இதுவரை கூர்ந்து கவனித்ததில் சுபா சரியாக இருப்பார் என்று தோன்றுகிறது' என்று நயமாகவேக் கேட்டான்.

சதீஷால் சட்டென பதில் சொல்ல முடியவில்லை. சுபாவை ஜெயந்தனுக்கு உதவியாளராக அனுப்பிவைக்க அவன் தயார்தான். இன்னும் சொல்லப் போனால் அவளது கரியரில் இது இன்னும் அடுத்த நிலைக்குச் செல்ல பெரிய உதவிகள் செய்யும்.அவளுக்கு நிறைய கற்றுக்கொள்ளும் வாய்ப்புகள் கிடைக்கும்.ஆனால் ,தலைமை நிர்வாகத்தின் அனுமதி இல்லாமல் இவ்வாறான முடிவுகளை அவனால் எடுக்க இயலாது. இதை ஜெயந்தந்தனிடம் சொன்னவன், அன்று மாலை ரிப்போர்ட் அனுப்பும் பொழுது, நீங்கள் கேட்டதையும் நிர்வாகத்துக்கு மெயில் மூலமாக தெரியப் படுத்துகிறேன் சார்" என்றுவிட்டான் பணிவாகவே.
ஜெயந்தன் லேசாக நட்புப் புன்னகை பூத்தவன்,"செய்யுங்கள் சதீஷ்.நானுமே அவர்களுக்கு மெயில் அனுப்புகிறேன்"என்று முடித்துக்கொண்டான். ஜெயந்தனனிடம் பேசி முடித்த பிறகு சதீஷின் நெற்றி யோசனையில் சுருங்கியது. ஜெயந்தனது பேச்சில் சுபாமீதான அதிகப்படியான ஆர்வத்தை சதிஷ் உணர்ந்திருந்தான்.

அவனுக்குள் குழப்பம்.இருந்தாலும் இத்தனை மாதங்களாக உடன் வேலை செய்ததில் சுபா மீது ஒரு பிடிப்பு அவனுக்கு வந்திருந்தது.அவளது நேர்கொண்ட பார்வையும்,வேலையில் காட்டும் ஆர்வமும்,அவளுக்குள் இயல்பாகவே இருக்கும் நேர்மையும் அவனை ஈர்த்தது. அவள் எந்த ஆபத்திலும் சிக்கிக் கொள்ளாமல் இருக்க வேண்டும் என்று அவன் உள்ளூர விரும்பினான்.

இதுவரை,சுபா எந்த ஆணிடமும் வேலை விஷயம் தவிர வேறு எதுவும் பேசியோ,சிரித்தோ நேரம் செலவிட்டோ அவன் கண்டது இல்லை.அவள் ஆண் துணை இன்றி தனது அம்மாவின் பாதுகாப்பில் மகளுடன் இருக்கிறாள் என்பது வரை அவன் அறிந்துவைத்திருந்தான். அவளைப் பற்றி தவறாக சிந்திக்கக்கூட அவனால் முடியாது.

இருந்தாலும்,எப்படியும் ஜெயந்தன்தனது கோரிக்கையை தலைமை அலுவலகத்துக்கு தெரியப் படுத்தாமல் விடமாட்டான். அவர்களும் அவனது விருப்பத்தை நிறைவேற்றாமல் விடமாட்டார்கள். எவ்வளவு பணத்தை முதலீடு செய்திருக்கிறான்?அதோடு இந்த வேலைக்காக ஜயானது மெனக்கெடல்கள் அதுவும் சதீஷ் அறிந்ததே.

சதீஷிடமிருந்து ஒரு பெருமூச்சு வெளிப்பட்டது.தனது லேப்டாப்பில் அன்றைய வேலைகளை பற்றிய அறிக்கையுடன்,ஜெயந்தனது விருப்பம் பற்றியும் குறிப்பிட்டு ,தலைமை அலுவலகத்துக்கும், ஜெயந்தனுக்கும் மெயில் அனுப்பிவைத்தவன் தனது இருக்கையில் சாய்ந்து கொண்டு கண்களை மூடிக்கொண்டான்
.
 
Top