பகுதி - 16
கல்லூரி முடிந்தது அனைவரும் வீட்டிற்குத் திரும்பினர்.
வீட்டிற்குச் செல்வதற்கு வெளியே வந்து மித்ரா, தன் புதிய தோழி ஜோதியோடு நடந்து வந்தாள்.
கல்லூரியின் வாசலுக்கு அருகே காரில், தன் மகனோடு கொஞ்சி விளையாடிக் கொண்டிருந்தான் தருண். அவர்கள் இடையே இருக்கும் பிணைப்புப் பார்ப்பதற்கு அவ்வளவு அழகாக இருந்தது
காற்றில் கேசங்கள் கலைய, மகனைக் காரின் முன்னில் அமர்த்தி, அவனுடன் கொஞ்சி விளையாடிக் கொண்டிருந்த தருண் மற்றும் வேதாந்தையும் ஒன்றாகக் காணும் காட்சி தந்தை மகன் உறவினைப்பிரதிபலித்தது.
அவ்வளவு அழகாக இருந்தது. மித்ராவிற்கு அதைப் பார்க்கப் பார்க்க அவள் மனதில் ஏக்கங்கள் தோன்றியது. அவள் எண்ணங்களின் பயணம் உடலில் நடுக்கத்தினை உண்டாக்கியது. என்ன மாதிரியான சிந்தனை இது... ச்ச நான் ஏன் இப்படி நினைக்கிறேன் என்று தன்னைத்தானே கடிந்தவள், நிகழ்காலத்திற்கு வந்தாள்.
ஜோதியும் அவளும் அவர்களை நெருங்கிப் போது, தன்னுடன் வரும் மித்ராவைப் பார்த்து அம்மா என்று பாயும் வேதாந்தைக் கண்டு அதிர்ச்சி அடைந்தாள் ஜோதி.
ஜோதியின் அதிர்ச்சி உணர்ந்த மித்ராவோதிரும்பி அவளைப் பார்த்து, “என் பிள்ளைத் தான்” என்று மட்டுமே கூறினாளே, தவிரத் தருண் யார் என்று கூறவில்லை …
மித்ராவும் ஜோதியும் இணைந்து நடந்து வருவதைப் பார்த்ததும் , வேகமாகக் காரின் மேல் அமர்ந்து கொண்டிருந்த வேதாந்தைத் தன் கைகளில் எடுத்துக் கொண்டான் தருண்.
தருண் கையில் மித்ராவின் பிள்ளை இருப்பதைக் கண்டு, தருண் அவளுடைய கணவன் என்று நினைத்துக் கொண்டாள் ஜோதி.
அதனால் மேற்கொண்டு எதுவும் அவள் கேட்கவில்லை. முதல் நாள் என்பதால் அவளுக்குத் தருணிடம் பேசத் தயங்கினாள்.
“சரி மித்ரா நாளைக்குப் பாக்கலாம் எனக்கு நேரமாச்சு” என்று விடைப் பெற்ற ஜோதி அங்கிருந்துச் சென்றாள்.
ஜோதி, சென்றதும் தன் மகன் அருகில் வந்தாள் மித்ரா.
மித்ரா அவன் அருகில் வந்ததும் வேகமாகத் தாயின் மேல் ஏறிக்கொண்டான் வேதாந்த்.
மகனின் ஆர்ப்பரிப்புக் கண்டு தருணின் முன்னால் என்ன செய்வது என்று அறியாமல் மௌனமாக அவனை எடுத்து அணைத்துக் கொண்டாள் மித்ரா.
தருணோ. எதுவுமே பேசவில்லை, வேகமாக டிரைவர் இருக்கையில் சென்று அமர்ந்தான்.
மித்ராவும் உள்ளே ஏறி அமர்ந்ததும், அவள் ஆடையைப் பிடித்து இழுக்கத் தொடங்கினான் வேதாந்த்.
மகனினோ பால் குடிக்கத் தாவினான், அவன் எண்ணம் புரிந்து கொண்ட மித்ரா, “வீட்டுக்குப் போகலாம் பொறுமையா இரு குட்டி”என்று அவனைச் செல்லம் கொஞ்சியவளுக்கு, தருணின் முன்னே சங்கடமான சூழ்நிலையில், தன்னைத் தள்ளும் மகனை என்ன செய்ய என்று தெரியவில்லை.
அம்மாவின் பேச்சுக்கள் எதுவும் காதில் வாங்காதவன், அவள் சுடிதாரின் சாலைப் பிடித்து இழுக்கத் தொடங்கினான்.
அவனைத் திசைத்திருப்ப என்ன என்னமோ விளையாட்டுகள் எல்லாம் காட்டியும், அவன் அமைதி அடையவில்லை.. காலையில் இருந்து தாயைப் பிரிந்து இருந்தவனுக்கு, தாயின் அரவணைப்பும் தேவையாக இருந்தது.
அவன் செய்கையின் அர்த்தம் புரிந்ததும், இதழில் தோன்றியப் புன்னகையை மறைத்துக் கொண்டே தருண், அவளிடம் நேரடியாகவே "அவனுக்கு பசிக்குது நினைக்கிறேன், நான் வேண்டுமென்றால் காரை ஓரமாக நிறுத்தவா, நீ அவனுக்குப் பசியாத்து" என்றான்.
இதைச் சற்றும் எதிர்பாராத மித்ரா அதிர்ச்சியோடு தருணின் முகத்தைப் பார்த்தாள்.
“இல்ல எனக்குப் புரியது... என்ன பண்ண, குட்டியையும் பார்க்கணும் தானே, காலையில் இருந்து ரொம்ப நேரம் அழுதான், போகப்போகப் பழகிருவான் ... நீ வேண்டுமானால் பின்னாடிப் போய் உட்கார்ந்துக்கொள்... அவனுக்கு என்ன வேணுமோ அதைபாரு, நான் வெளியே நிற்கிறேன்” என்றான் .
“இல்லை, வீட்டிற்குப் போலாம்” என்று உள்ளே போன குரலில் பதில் கூறிய மித்ராவைப் பார்த்தான் தருண்…
“எப்படியும் வீட்டிற்குப் போய்ச் சேர அரை மணிநேரத்திற்கு மேல ஆகும் அதுவரை அவனை ஆழவிடப் போறையா” என்றான்.
குரலில் கடுமை இருந்ததோ!
அவள் கூறிய எதுவுமே அவன் காதில் வாங்காமல், ஆள் அரவமற்ற பகுதியில், ஓரமாகக் காரை நிறுத்தினான்.
நீ என்ன சொன்னாலும், நான் கேட்கப் போவதில்லை, நான் சொல்வதைத் தான் நீ கேட்க வேண்டும் என்ற செய்தி அவன் செய்கையில் இருந்தது.
அவளைச் சங்கடப்படுத்தாமல் வெளியே சென்று நின்றான்… அவளின் தயக்கம், பயம் போன்ற அவளின் உணர்வுகள் அவனை வேதனைப் படுத்தியது.
அவளின் முகத்தைப் பார்க்கப் பாவமாக இருந்தது. என்ன இருந்தாலும் அவளுக்கு நான் அந்நியவன் தானே...
அவள் வாழ்க்கையின் எல்லையில் தன்னை நிறுத்தி வைத்திருக்கும் அவள் பார்வையின் அந்நியதன்மை, தன் காதல் மனதைக் கீறிப் பதம் பார்த்தது. அவள் வேதனைப் புரிந்தது தான். அவள் சூழ்நிலையும் உணர்கிறது. ஆனால் காதல் கொண்டு அவன் மனமோ அதை ஏற்றுக் கொள்ள முடியாது தவிக்கிறது.
இதையெல்லாம் விரல்களில் புதிதாக முளைத்த ஆறாம் விரலைப் பற்ற வைத்து, தன் வேதனையைப் புகைய விட்டு, காற்றை மாசுப்படுத்தினான்.
சிறிது நேரம் கழித்து வெளியே வந்த மித்ராவைப் பார்த்தும், கையில் இருந்த சிகரெட்டைக் கீழே வீசி அதைக் காலால் அணைத்தான்.
அவன் செய்கையில் ‘ புகைப்பிடிப்பாரா! இதென்ன கெட்டப் பழக்கம், எப்பொழுதிலிந்து அதுவும் குழந்தை இருக்கும் இடத்தில்’ என்ற அவனையும் கீழே கிடந்த சிகரெட் எச்சத்தையும் பார்த்தாள்.
அவள் பார்வையின் அர்த்தம் புரிந்ததும், “ சாரி, ஏதோ டென்ஷன், இனி குட்டி இருக்கும் போது இப்படி ஆகாமல் பார்த்துக் கொள்கிறேன்” என்றவன், வந்து அமைதியாகக் காரை எடுத்தான் வீட்டை நோக்கி.
ஓ... இனி பண்ணமாட்டேன் என்று சொல்லமாட்டாரு? என்று மனதில் தோன்றியதும் தன் சிந்தனைப்போகும் திசையைப்பார்த்து அவளுக்குப் பயம் வந்தது.
தருணின் செயல்களையெல்லாம் எப்படி எடுத்துக் கொள்வது என்று புரியவில்லை மித்ராவிற்கு. மனதில் ஏன் இவர் இப்படிப் பேசினாரு… என்று கூச்சமும் நடுக்கமும் உண்டானது.
அவள் மனதில் ஆயிரம் குழப்பங்கள் இருந்த போதும், அதைப் பற்றி எதுவும் கவலை இல்லாமல் வேகமாக வீட்டை நோக்கி வண்டியைத் திருப்பினான் தருண்.
வீட்டிற்கு வந்ததும் வேகமாகத் தன்னறைக்குச் சென்றாள் மித்ரா.
ஏன் இவ்வளவு வேகமாகச் செல்கிறாள் என்று யாரும் எதுவும் கேட்கவில்லை.
உல்லாசமாகச் சோபாவில் வந்த அமர்ந்தவன், ராதிகாவைப் பார்த்து “எனக்கு ஒரு டீ, போட்டுத் தாங்கம்மா” என்று கேட்டேன்.
மித்ராவின் செயலும் தருணின் செய்கையும் இரண்டும் வித்தியாசமாக இருந்தது அனைவருக்கும்.
வீட்டிற்கு வந்து தன் மகனை உடன் படுத்து அவனைத் தூங்க வைத்தவள். மனதிலோ தருணின் வார்த்தைகளில் உடலில் நடுக்கம் தோன்றியது, தேவையில்லாத பிரச்சினைகள் வாழ்க்கையில் மீண்டும் வருமோ! என்று.
தன் மனதை எதிலும் திசைத் திருப்பவும் குழப்பிக்கொள்ளவும் கூடாது என்பதில் தெளிவாக இருந்தால் மித்ரா. எதுவாயிருந்தாலும், வரும் போது பார்த்துக் கொள்ளலாம் என்று மனதில் ஒரு தைரியத்தைக் கொண்டு வந்தாள்.
அன்று போல் இன்று ‘தான் ஒரு சிறிய பெண் அல்ல… ஒரு குழந்தைக்குத் தாய்… அந்தப் பக்குவம் என்னிடம் இருக்கிறது… என்று தன்னைத்தானே மேலும் மேலும் உறுதிப்படுத்திக் கொண்டாள்… மித்ரா.
அவனுக்குத் தந்த டீயை ரசித்துக் குடித்தான் தருண்.
அன்றைய நாள் அவனுக்கு மிகவும் அழகாக இருந்ததாக உணர்ந்தான்.
இவ்வளவு நாட்களும் பாலைவனமாக இருந்த தன் வாழ்க்கையில்… இப்பொழுதுத் தான் துளிர் விடுகிறது… என்ற நம்பிக்கை அவன் மனதில் தோன்றியது… அதற்கு முழு முழுக் காரணம் வேதாந்த் மட்டுமே… என்பதை அவன் ஆழமாக நம்பினான்…
மனதில் பிடித்த பாட்டு ஒன்றை முணுமுணுத்துப்படியே காரை எடுத்துக்கொண்டு வேகமாக அலுவலகத்திற்குச் சென்றான்…
கதிர் வெளியூருக்குச் சென்றதும் அவனைப் பற்றி மட்டுமே நினைத்துக் கொண்டே மதுமிதா அன்றைய நாளை கழித்தாள்... தன்னுடைய வேலை விஷயமாக, எப்படி வீட்டில் பேசுவது என்பதைப் பற்றியும் யோசித்துக் கொண்டிருந்தாள்.
ஏதோ யோசனையோடு இருக்கும் மதுமிதாவைப் பார்த்தப் பானுமதி “என்ன யோசிக்கிற மதுமிதா”
“ஒன்னும் இல்ல அத்தை நம்ம ஊர்ல இருக்கிற ஸ்கூல்ல எனக்கு டீச்சர் வேலைக் கிடைச்சிருக்கு… அதுக்கு ஜாயின் பண்ணச் சொல்லி லெட்டர் வந்திருக்கு… அவரிடம் சொல்ல எனக்குச் சந்தர்ப்பம் கிடைக்கவே இல்லை, அது தான் என்ன பண்ண என்று தெரியவில்லை” என்று தயங்கினாள் மதுமிதா.
அவளின் நிலையைக் கண்டு மனதினுள் பாவம் தோன்றியது அவளுடைய மாமியாருக்கு.
“எப்போ உனக்கு வேலையில் போய்ச் சேரணும்” என்று கேட்டாள் பானுமதி.
“இன்னும் நாலு நாள் இருக்கு அத்தை”.
“இதைச் சொல்ல, எதுக்கு நீ தயங்குற மதுமிதா, ஒரு பெண்ணுக்கு வேலை ரொம்ப முக்கியம் என்பது எனக்குத் தெரியும், பழைய காலத்து ஆளா என்னை யோசிக்காதே" என்றார்ப் பானுமதி.
“வேலைக்குப் போகணும் நீ, உனக்கு எதாவது வாங்கணுமா? இன்னும் நாலு நாள் தான் இருக்கு, ஏதாவது வேணுமா? என்று அக்கறையாகக் கேட்டார் அவள் மாமியார்.
“இல்லை அத்தை, எல்லாம் இருக்கு" என்றாள் மதுமிதா.
அவள் மனதை மாற்ற “என்ன இருக்கு வா, போய் உனக்குப் புது டிரஸ் வாங்கலாம்” என்றார்ப் பானுமதி.
"புதுசா வேலைக்குப் போகும் பொண்ணு, புதுப் புடவையை உடுத்திக்க வேண்டாமா! என்ன பேசற, ரேணுகா நீயும் வா, நம்ம மூன்று பேரும் சேர்ந்து இன்னைக்குச் சாயந்தரம் கடை வீதிக்குப் போலாம், உங்களுக்கும்,மித்ராக்கும் சில ஆடைகள் எல்லாம் வாங்கலாம்” என்று பானுமதிக் கூறினார்.
அவள் பேசுவதைக் கேட்டப்படியே வந்த பால முருகன், “ எனக்கென்னவோ பிள்ளைகளுக்கு வாங்கப் போற மாதிரித் தெரியவில்லை, அவங்கப் பேரைச் சொல்லி நீ தான் புடவைகளை எடுத்து வரப்போற நினைக்கிறேன். உனக்குப் புடவை வாங்க என் பிள்ளைகளைச் சாக்கு" என்று மனைவியைச் சீண்டினார்.
"ஆமாம் ஆமாம் வாங்கி அப்படியே, நாங்க அடிக்கிட்டோம் பாரு” என்று கணவனை முறைத்தார் பானுமதி.
“அத்தை உங்க ஊடலை அப்பறம் வச்சுக்கோங்க…அவள் மனசு மாறுவதற்குள்ள கிளம்பலாம், நாளைக்கு என்றால்… என்னால் வர முடியாது… நான் என் மாமியார் வீட்டிற்குச் சென்று விடுவேன்”… என்றாள் ரேணுகா.
“பஸ் பிடித்துப் போகணும் பாரு இவள் மாமியார் வீட்டிற்கு”… என்று மகளை வம்பிழுத்தாள் ராதிகா.
“அம்மா உங்களுக்கு எனக்கும் பேச்சே இல்லை… வரவர உங்களுக்கு என் மேல் பாசமே இல்லை, அந்தத் தடியன் மேல் தான் பாசம் பாயாசம் எல்லாம்” என்று சிலிர்த்தாள் சண்டைக் கோழி போல.
“சரி சரி விடுங்க நாம் போகலாம்” என்று பானுமதி மதுமிதா, ரேணுகா மூவரும் சேர்ந்துக் கடைவீதிக்குச் சென்று அனைத்தும் வாங்கி வந்தனர். அன்றைய மாலைப்பொழுது அவர்களுக்கு
இனிமையாகக் கழிந்தது.
வேலைக்கு செல்ல வேண்டிய தினத்தை மிகவும் பரபரப்போடு எதிர்நோக்கினாள் மதுமிதா .
மித்ராவோ தன் மனதில் ஏற்படும் குழப்பங்களுக்கு நல்ல தீர்வாக இந்தப் படிப்பு அமையும் என்ற நம்பிக்கையை உருவாக்கிக் கொண்டாள்.
ஆனால் தருணோ! இனிவரும் காலம் எல்லாம், தான் நினைத்தது மட்டுமே நடக்க வேண்டும் என்ற எண்ணத்தில் உறுதியாக இருந்தான்.
இப்படி ஒவ்வொருவரின் மனமும் ஒவ்வொரு மாதிரி இருக்க விடியல் அழகாக இருந்தது.
நல்ல ஆசிரியராக மிளர வேண்டும் என்று தெய்வத்துப் பிராத்தித்துக் கொண்டு வேலைக்குப் புறப்பட்டுச் சென்றாள் மதுமிதா.
மருமகள் வேலைக்குச் செல்வதைப் பார்த்தப் பாலமுருகனும் இந்தப் பொண்ணாவது நல்லவிதமாகத் தன் வாழ்க்கையின் அடுத்தக்கட்டத்தைத் தொடங்கி வைத்திருக்காளே என்று சந்தோசம் அவர் மனதில் இருந்தது. மகன் வந்து எதாவதுக்கூறுவிடுவானோ என்ற எண்ணமும் அவருக்கு இருந்தது.
கணவனிடம் இன்னும் இதைப்பற்றி எதுவும் பேசவில்லை என்று கூறியிருந்தாள் வீட்டில் இருக்கும் பெரியவர்களிடம். இதனால் அவர்கள் இருவருக்கும் இடையேயான திருமணப் பந்தத்தில் எந்த ஒரு விரிசலும் ஏற்படக்கூடாது என்பதை மனமாற இறைவனை வேண்டினர் பாலமுருகன்.
அந்த அளவுக்குப் பிற்போக்குவாதி அல்ல, அவர் மகன் என்பதில் உறுதியாக இருந்தார் பாலமுருகன்.
தைரியமாக வேலைக்குச் செல்ல ஆயுத்தமானவள், பள்ளிக்குச் செல்லும் வழியில் தன் கணவனுக்கு அழைப்பு விடுத்தாள். அவன் அழைப்பை ஏற்கவில்லை. மனதில் வருத்தமும் வேதனையும் ஒருங்கே எழுந்தது. இருந்தபோதும் அவனுக்கு வாட்ஸ் அப்பில் ‘முதல் நாள் வேலைக்குச் செல்வதாகவும் …அதற்கு அவனோட வாழ்த்துக்கள் வேண்டும்’ என்று மிகவும் உருகி உருகிக் காதலோடு செய்தியை அனுப்பி இருந்தாள்.
இந்தக் காதல் ஒரு மானங்கெட்டது என்பது மதுமிதாவால் உணர முடிந்தது. அதை நினைத்தபோது இதழோரம் ஒரு மெல்லிய புன்னகையும் தோன்றி மறைந்தது.
அவள் எவ்வளவு முயன்றும் மனதில் ஓரமாக வலி உண்டாகியது அவன் அலட்சியத்தில். ஆனால் அதில் நியாயம் இருப்பதாக அவளுடைய காதல் மனது உணர்ந்திருந்தது. தன் கணவனுக்காக அவளிடம் அவளே போராடிக் கொண்டிருந்தாள்.
அன்றைய நாள் அவளுக்கு இனிமையாகக் கழிந்தது.
முதல் நாள் வேலை, அதுவும் அவளுக்குப் பிடித்த துறையில் மிகவும் மன நிறைவோடுஅன்றைய நாள் அவளுக்கு இனிமையாகக் கழிந்தது. பேருந்து நிலையத்தில் காத்திருந்தாள் மதுமிதா.
அப்பொழுது அங்கே வெளியே சென்று வீட்டிற்குத் திரும்பிக் கொண்டிருந்த பாலமுருகன் பேருந்து நிலையத்தில் மருமகள் காத்திருப்பது பார்த்தார். அவளைப் பார்த்துக்கொண்டே அவள் அருகில் காரைக் கொண்டு போய் நிறுத்துவதற்கு முன்னதாகவே அவள் கஷ்டப்பட்டு அங்கு வந்த பேருந்து ஏறி வீட்டிற்குச் சென்று விட்டாள்.
இவ்வளவு கஷ்டப்பட்டு மருமகள் செல்வதைப் பார்த்து உடனே அவளுக்கு, இருசக்கர வாகனம் வாங்கிக் கொடுக்க வேண்டும் என்று மனதில் நினைத்தவர், வேகமாக வீடு நோக்கி வந்தார்.
அவள் வருவதற்கு முன்னதாகவே வீட்டில் வந்தவர் தன் மனைவியிடம் “பானு, மது வந்துட்டாளா”
“இல்லையே ஏன் கேக்குறீங்க?” என்றாள் பானுமதி…
"நான் வரும்போது மதுமிதாவை, பஸ் ஸ்டாண்டில் பார்த்தேன், அவள் அருகில் செல்வதற்குள், அவள் பஸ் ஏறிவிட்டாள், பஸ்சும் ரொம்பக் கூட்டமா இருந்தது, அதுதான் வந்துட்டாளா? கேட்டேன் என்றார்…
“அவளுக்கு வண்டி ஓட்டத் தெரியுமா? பானு".
“அவளுக்கு வண்டி ஓட்டுவாளா என்று … எனக்கு எப்படித் தெரியும்… அவள் வருவாள், வந்தா நீங்களே கேளுங்க” என்றபடி அவருக்கு டீ எடுக்கச் சென்றாள் சமையலறைக்கு.
‘வர வர இவளுக்குப் புருஷன் என்ற மதிப்பே இல்லாமல் போச்சு, பாத்துக்குறேன்’ என்றவர் மருமகளுக்காகக் காத்திருந்தார்.
அப்பொழுதுதான் களைத்துப் போய் வீட்டிற்குள் வந்தாள் மதுமிதா…
மதுமிதா வந்த அரவம் கேட்டதும், அவளுக்குச் சேர்த்தி டீயைக் கொண்டு வந்தாள் பானுமதி.
இன்றைய நாள் உனக்கு எப்படிப் போச்சு என்று அவளைப் பார்த்துக்கேட்டார், பாலமுருகன்.
" நன்றாகப் போனது மாமா" என்ற அவளின் வார்த்தைகளில் மட்டுமே இருந்த மகிழ்ச்சி முகத்தில் இல்லை.
"என்ன ஆச்சும்மா, ஏன் முகம் ஒரு மாதிரி இருக்கு" என்று கேட்டார்.
"இல்ல மாமா, எல்லாம் கரெக்டா இருக்கு. ஆனால் சில மாணவர்கள் தான் ஏதோ பிரச்சினைப் பண்ணுவாங்களோனு, மனசுக்குள்ள தோணுது. இதெல்லாம் முதல் நாளே என் மனசுல ஆழமாகப் பதிஞ்சதுத் தான் ரொம்பச் சங்கடமா இருக்கு" என்று தன் மனதில் இருக்கும் குழப்பத்தைத் தன் மாமனாரிடம் பகிர்ந்தாள் மதுமிதா.
"சின்னப் பிள்ளைகள் தானே, சொல்லிக் கொடுத்தால் புரிந்துக் கொள்வார்கள்" என்றார்ப் பாலமுருகன்.
"பன்னிரெண்டாம் கிளாஸ் படிக்கிற பசங்க, சின்னப் பசங்களா மாமா" என்றாள் மதுமிதா.
"புரியுது மதுமிதா, என்ன செய்ய? இந்தக் உலகம் பிள்ளைகளை இப்படி மாற்றிவிட்டது. முரட்டுத்தனமாகவும் குறும்பு உள்ளவர்களாகவும் இந்தச் சமூகம் அவர்களை உருவாக்கிக் கொண்டிருக்கிறது. என்ன பண்ண ஒர் ஆசிரியராக நம்முடைய கடமையை நாம் செய்யத்தான் வேண்டும். இல்லையென்றால் இளைய சமுதாயம் சீரழிந்துப் போய்விடும் என்று சமூக அக்கறையோடு பாலமுருகன் கூறினார்.
இதைத்தான் மாமா நானும் மனசுல நினைத்தேன். ஆனால் மனதில் பயம் இருந்து கொண்டே இருக்கு . என்னால் இதெல்லாம் பண்ண முடியுமா? என்ற கேள்வியும் தயக்கமும் இருக்கு" என்றாள் மதுமிதா.
"தயக்கமும் பயமும் தான் மது, நம் முதல் எதிர், நீ தைரியமா உன் கடமையைச் செய், கண்டிப்பாக நல்லதாவே நடக்கும்" என்று தைரியம் கொடுத்தார் அவளுடைய மாமனார்.
மனக்குழப்பமாக இருக்கும் நேரத்தில் கணவனின் அரவணைப்பும், ஆறுதல் வார்த்தைகளுக்காவும் ஆழ்மனதில் ஏங்கினாள் மதுமிதா.
தன்னுடைய தவறுதான், தன்னையும் கணவனையும் பிரித்து வைத்திருக்கிறது என்று தன் மேலே அவளுக்குக் கோபம் வந்தது.
மனம் கேட்காமல் தன்னுடைய அலைப்பேசியை எடுத்து, தன்னுடைய மெசேஜைப் பார்த்தானா என்று நோக்கினாள்.
அவன் தான் தகவலைப் பார்க்கவும் இல்லை, அதற்குப் பதிலும் தரவில்லை. ஆனால் அவன் நிறைய நேரம் ஆன்லைனில் இருப்பதைக் காட்டியது. அந்த இரண்டு டிக் வேதனையில் மனதைக் கீறியது. அதை வெளிக்காட்டாமல் அத்தையிடம் வந்தவள், "நான் போய் முகம் கழுவிட்டு ஆடை மாற்றிக் கொண்டு வருகிறேன். சாயந்திரம் என்ன டிபன் பண்ணலாம்னு, இரண்டு பேரும் பேசி முடிவுப் பண்ணி வையுங்கள்" என்ற அவள் தன் அறையை நோக்கிச் சென்றாள்.
கதிவேந்தன் வெளியூருக்குச் சென்றதால், அவளைத் தனியாக அனுப்பாமல், தங்களுடன் தங்க வைத்துக் கொண்டனர். தங்கள் கான்பௌண்டில் இருக்கும் கீழ்தளம் தான் மதுமிதாவின் வீடு, அவளை அங்கே தனியே தங்க விடவில்லை பாலமுருகன். அவன் வந்ததுக்கப்புறம் பார்த்துக் கொள்ளலாம் என்று அவன் அறையிலேயே அவளைத் தங்க வைத்திருந்தனர். அதனால் அவன் அறையை நோக்கிச் சென்றாள் மதுமிதா.
மருமகள் சென்றதும் கணவனை "நோக்கி என்னிடம் கேட்டீங்க, அவளுக்கு வண்டி ஓட்டத் தெரியுமானு, அதைத்தவிர எல்லாப் பேச்சையும் பேசிட்டு இருக்கீங்க" என்று நொடித்தால் தன் கணவனைப் பார்த்துப் பானுமதி.
"அடடா, கேக்க மறந்துட்டேன், சரி நீ அவளிடம் கேட்டு எனக்குச் சொல்லு, நான் அவளுக்கு இருசக்கர வாகனத்தை வாங்கிக் கொடுக்கிறேன். அவள் சும்மா பஸ்ஸில் போயிட்டு அலைஞ்சிட்டு இருக்க வேண்டாம்" என்றார்ப் பாலமுருகன்.
"ஆமா இதுவும் நல்ல யோசனையாகத் தான் இருக்கு, அவள் வரட்டும் நான் கேட்கிறேன்" என்றவர் சமையறையை நோக்கிச் சென்றார்.
ரேணுகாவோ தன் தாயுடன், அவளுடைய புகுந்த வீட்டிற்குச் செல்வதற்காகரெடியாகி வந்தாள். அருகே இருக்கும் தெருவில் தான் அவள் வீடு இருக்கிறது. அவளைத் தனியாக அனுப்ப மனமில்லை ராதிகாவிற்கு, பாலமுருகன் இடம் வந்து "நான் அவளைக் கொண்டு போய், அவள் வீட்டில் விட்டுவிட்டு வருகிறேன் அண்ணா" என்று கூறியவர் தன் அண்ணியிடவும் செய்தியைச் சொல்லிவிட்டு இருவரும் அவள் புகுந்து வீட்டில் கிளம்பிச் சென்றனர்.
தொடரும்…