உமா கார்த்திக்
Moderator
தீராத டி - 04
அவன் நெருக்கம் இல்லாத நிமிடம் எல்லாம் கண்ணாடி சில்களின் கூர் ஆக இதயத்தை கிழிக்க.! நெருங்கவும் முடியாமல் விலகவும் முடியாமல்..
தனிமை சிறை பூட்டி, தனக்கு தானே தண்டனை தந்து கொண்டாள் பிரதி..
அன்பன் அவனின் மௌனம் பேதைக்கு மரணத்தை போல..! விழாத அவன் ஒரு பார்வைக்காக தவம் செய்கிறாள். விழுகிற அவள் காண்ணீரில் தினம் ஆராதனை செய்கிறாள்..
அவன் மீதான தன் முதல் காதலை காட்ட எண்ணியவள்.
அவனின் பாராமுகம் கண்டதும், செய்வது அறியாது பிரிவு தரும் வலியில் சிதைந்து தான் போனாள்.!
ஒரு வாரமாக நிகழும் விலகல் மற்றும் ப்ரீத் பிரதியை கண்டாலே ஒதுங்கி நடப்பதை பார்த்து பொறுக்காமல் மாமனிடம் நேராய் கேட்டாள்
பவித்ரா " என்ன ஆச்சி... டா... ஏன் நீ அவள அவாய்ட் பண்ணுற. "
கேள்வியாக முகம் நோக்க?
அவள் முகம்
காணமல் தலை குனிந்து கொண்டே " ஒன்னும் இல்லை. " எனக் கூறி அந்த இடத்தை விட்டு அவன் நகர முற்பட, அவனுக்காக நெடுநேரம் காத்திருந்த பிரதி. மாடி படி வழியே இறங்கி வருபவனை .. பயத்தோடு நோக்கிறாள்..!
"முருகா. அவர்கிட்ட பேச தைரியத்தை எனக்கு கொடு " இஷ்ட தெய்வத்தை வேண்டி நிற்க.
அவன் நெருங்கி அருகில் வர, இதயம் இயங்க மறுக்க, மூச்சடைத்தது ஒரு கணம். " சா..சா.." வாய் மட்டும் அசைய வார்த்தை வராது அடைத்தது .
கைபேசியின் திரையை நோக்கி கொண்டே " என்ன.? எதாவது சொல்லனுமா.?" தானாய் ப்ரீத் கேட்டதும் ஆமாம் என்று தலை அசைத்தாள் பிரதி.
" என்ன சொல்லு. ?" போனையே நோக்கியது பார்வை.
" தனியா பேசணும் "என பிரதி அவளது அறையை கை காட்டி செல்ல.. அவள் பின்னே வந்தவன். கதவை முடி.. தாழிட்டான்.
பிரிவு பேச வைத்தது காதல் தாக்கம் இது. முதல் காதல் புழுவை கூட போர் செய்ய வைக்கும்.!
" சார்... நான் நடிக்க தான் இங்க வந்தேன். ஆனா என்னால நடிக்க முடியலை. உங்கள எனக்கு ஏன் பிடிக்கும்னு காரணம் சொல்ல தெரியல..?
சலனமே இல்லாத உங்களுடைய பார்வை.இந்த மௌனம்.. உங்க கூட இருந்தா ரொம்ப பாதுகாப்பா இருக்கும். வேற யார்கிட்டயும் நான் அதை உணர்ந்தது இல்லை. சேஃப் ஆ இருக்கிற மாதிரி ஃபீலிங், முன்ன எல்லாம் பயமாவே இருக்கும் சார். இவர் இருக்காரு.. நம்மல பார்த்துப்பாருன் னு ரொம்ப தைரியமா இருக்கு சார்.. இதுக்கு பேர் காதல்னு தோனுது. ஐ லவ் யூ.. ஐ லவ் யூ.. மேட்லி.. லவ் யூ.." முச்சை பிடித்து பேசி நிமிர .
" அப்டியா? சரி.. உனக்கு காதல் வர்றது உன் பிரச்சனை.என் டைம் ஏன் வேஸ்ட் பண்ணுற..பிரதி. "அவள் மீது அலட்சியமாக ஒரு பார்வை வீச,
"பொய்.. சொல்லுறீங்க. உங்களுக்கு என்ன பிடிக்கும். நீங்க என்ன அப்படி பாப்பிங்க.
குறுகுறு னு , எனக்கு தெரியும். " கண்ட காட்சியின் சாட்சியோடு வாதம் செய்ய,
கோணலாய் தலை சாய்த்து குறுகுறுக்க மீண்டும் அவளை பார்த்து." இல்லைனு நான் சொல்லலையே. இந்த கண்ணு..உன் உதடு.. அதுக்கு கீழே மச்சம்,
கடவுளே உன் அழகுக்கு திருஷ்டி பொட்டு வச்ச மாதிரி இருக்கும்.. " கிறக்கமான குரலில் பேச
அதிர்ச்சியில் உறைந்து போனவள். "பிரதி.." என்ற அவனின் குரல் கேட்டதும சுயத்திற்கு வந்தாள்.
நீயா பேசியது என் அன்பே .. பாடல்
மனதுக்குள் ஓட அவனை ஏறிட்டவள்.
"செட் ஆகாது.. பிரதி .. சந்தோஷம் நிம்மதி, இந்த சிரிச்ச முகம்..
நான் உன் வாழ்க்கைகுள்ள வந்தா இருக்காது. " பழைய காதல் தந்த வலிகள் கண்ணில் விரிய சோகமாக அவள் முகம் பார்த்தான்.
" அய்யய்யோ.. பயமா இருக்கு. " என சிரித்தவள். " ஐ லவ் யூ..ப்ரீத். " என்று அவனை இறுக அணைத்து கொண்டு மார்பில் முகம் புதைத்தாள்.
அவனோ.. " ஏய் என்ன பண்ணுற.? மார்பில் அவள் கைகள் ஊற.. அவன் நெளிந்து விலக இறுக பற்றினாள். "விடு பிரதி.. என்ன பண்ணுற.? இதெல்லாம் தப்பு "
கண்கள் மூடி அவன் வாசத்தை சுவாசித்து தன்னவன் மார்பின் வெப்பத்தை தனக்குள்ளே கடத்தினாள் பிரதி. அவள் கூந்தல் வாசம் கிளர்ச்சியை தர, அனிச்சையாக அணைக்க தொடங்கினான் அவளை.
திடீரென அவனது கைபேசி அலற.. சுதாரித்தவன். நகரு பிரதி.. இல்லை அறை விழும். என்றவனை புன்னகை மாறாமல் " எங்க அறைங்க பாக்கலாம். " என வாய் வார்தையில் சொன்னது தான் தாமதம்.. பளார் என்று அவன் அறை விட, நிற்க நிலைக்க.. முடியாது கீழே விழுந்து சரிந்தால் பெண்.!
தீயாய் கோபம் தெறிக்க "எனக்கு உன்ன பிடிக்கலை டி. நீ முதல்ல ஊருக்கு கிளம்பு போய் வேற எவனயாவது லவ் பண்ணு " கன்னத்தில் விரல் பதிய அறைவிட்டு அனல் பறக்க வெளியே சென்றான் நாயகன்.
"காதல் முறிய, தனிமையை கட்டிக் கொண்டு அழுதால் பிரதி. " என்ன புடிக்கலைன்னு நீங்க சொல்லலாம். எவன வேணா லவ் பண்ண எப்படி நீங்க சொல்லலாம். ? உங்க காதல ஏன் இப்படி மறைக்கிறீங்க..நான் இல்லாம நீங்க நல்லா இருப்பீங்கனா . நான் போய்டுறேன். ஆனா நீங்க இல்லாமே என்னால இருக்க முடியுமா எனக்கு தெரியலை? வேதனையை விழியின் வழியே வடித்தாள்."
ஆபிஸில் எந்த வேலையிலும் கவனம் செலுத்த முடியாமல் தவித்தான் ப்ரீத். போனில் அவள் நம்பரை பார்த்து வெறித்து கொண்டே இருக்க.. பவி டார்லிங் என்று அழைப்பு வர, அவசரமாக ஏற்றான்.
கொதிப்போடு " நீ.. ஆரம்பிச்சுட்டியா? இவ்ளோ சீக்கிரம் அடிக்க ஆரம்பிச்சுட்ட, ஒரு பொண்ண இப்படி அழ வைக்க வெட்கமா இல்லை. அவ இன்னும் சாப்பிடலை..டா.. கூப்பிட்டாலும் வர மாட்டேன்னு சொல்றா.. அவ அழுகையை என்னால பாக்க முடியலை.. டா கன்னம் அப்படி வீங்கி இருக்கு. நீ வந்தா தான் சாப்டுவா போல, வாடா..நம்பி வந்த பொண்ண கை நீட்டாத.. மாமா " உரிமையில் கோரிக்கை விடுத்தாள்.
"பவிமா.. இனிமே இப்படி பண்ணலை.
நான் வர்றேன்.. தப்பு தான் சாரி.." என்றிட, "என்கிட்ட சொல்ல வேணாம் அவகிட்ட போய் சொல்லு.. உன் சாரி.. பைத்தியகாரன லவ் பன்னா இப்படி தான் ஆகும். அவளுக்கு தான் புத்தி இல்லை. "அவன் காதில் கேட்க்கும் வகையில் முணுமுணுக்க .
ப்ரீத்" பைத்தியமா நான்?" கோபமாக கேட்க.
"ஆமாங்க பைத்தியம்"
" அப்பறம் ஏன் நீங்க. .லவ்.. பண்ணிங்க.?"
" தெரியாம பண்ணிட்டேன்.. அவதான் மாட்டிகிட்டா..
ஒரு வழி ஆக்கிருவ , நல்ல பொண்ணு டா காயப்படுத்தாத
பாவம் டா, யாரும் இல்லை.. நீயே எல்லாம் னு நம்பி இருக்கவள கஷ்டப் படுத்துனா தாங்க மாட்டா,ரொம்ப சென்சிடிவ் ஆ இருக்கா.. உன் முரட்டு தனத்தை எல்லாம கொஞ்சம் மூட்டை கட்டி வை ..ப்ளீஸ்.." எனும் கெஞ்சலோடு முடித்தாள்.
" முறைப்படி பார்த்தா நீ தான் சண்டை போடனும். இவ்ளோ நல்லவளா இருக்காத பவி " நக்கலடித்தான்.
" உண்மையான அன்பு காயப்படும் காயப்படுத்தாது. " அழுத்தமாக பவித்ரா கூற, தவறை உணர்ந்து
" ம்.. "என்று அழைப்பை துண்டித்தான் ப்ரீத்.
பவி அவளை தேற்ற முயன்று தோற்றே போனாள் " ஏய்.. சீ.. அழாத, ரக்கட் பாய்ய லவ் பன்னுறதுக்கு
முன்னாடி யோசிக்கனும்."
விம்மியவாறு " பவி யாருமே என்ன அடிச்சது இல்லை தெரியுமா.?" அழுகை ஆர்பட்டம் கொள்ள ஆதங்கப்பட்டாள்.
தோழியின் வழியும் கண்ணீரை கைகளில் துடைத்துவிட்டு "பிரதி பழகிக்கோ..
நானும் நெறைய அடி வாங்கி இருக்கேன். " சாதரணமாக சொல்லி, " ப்ரீத் ரொம்ப கோவப்படுவான். சண்டை போடுவான். சந்தேகப்படுவான். கொடுமை படுத்துவான். அவன் நெனைக்குறத நீ செய்யனும்னு நெனைப்பான். ஆனாலும் பாசமா இருப்பான்.சின்ன குழந்தை கையில மாட்டுன குட்டி பறவை மாதிரி இறுக்கி கொல்லுறோம்னு புரியாம.. நம்மல இறுக்க பிடிச்சு பத்தரமா வைச்சுகிறேன்.. அப்டி நினைப்பான். அது நமக்கு வலிக்கும்னு புரியாது. "
"சந்தேகப்படுவாரா.?" பயந்தவாறு கேட்க.
"ஆமா".. என்ன லவ் பண்ணலை, இருந்தும் என்ன பாடு படுத்துவான் தெரியுமா? எந்த பையன் கூடவும் பேச முடியாது. என்ன கேட்கவே மாட்டான். அவனுங்க காலி. என்னால யாரும் அடி வாங்க கூடாதுனு யார் கிட்டயும் பேச மாட்டேன். வேற வழியே இல்லை. இவன கல்யாணம் பண்ணலாம்னு நான் தப்பா யோசிக்க ஆரபிச்சப்ப..
யார் பெத்த புள்ளயோ மகராசி.. நீ வந்து என்ன காப்பாத்திட்ட " நெஞ்சில் நிம்மதியாய் கை வைக்க. அதிர்ச்சி விலகாமல் அவளையே பார்த்தாள் பிரதி.
" நீ அழுதா அதிகமா அழவைச்சுட்டு இருப்பான். தைரியமா இரு"
பிரதி - " நீ சொல்றத பார்த்தா.. எல்லாமே தப்பா இருக்கே பவி. "
குறுநகை பூக்க "நல்லவன் தான். அவன் சொல்ற எல்லாத்தையும் நீ கேட்கும் வரை, உன் காதலுக்காக உன்னயே நீ தியாகம் பண்ணனும் அவ்ளவு தான். ஆமா சாமி போடனும், தயவு செய்து என்கிட்ட எதையும் மறைக்காத பிரதி. அம்மாவுக்கு அப்புறம் அவன் கொஞ்சம் என் பேச்சை கேட்பான்.
ஈகோ அதிகம்.நீ என்ன சொல்ற நான் என் கேட்கிறது தான் அவன் குணம். "
மறுப்பாக"இல்ல பவி. அவர் அப்டி இல்லை. "
" என் அம்மா குணம். அப்படியே இருக்கு மாமாவுக்கு, ஆம்பள புள்ள அதுவும் என்ன அவன் தான் கல்யாணம் பண்ணிக்க போறானு தாங்கு தாங்குனு தங்க தட்டுல வைச்சி தாங்குவாங்க. அவ்ளோ திட்டு வாங்குவேன். வாங்க போங்க பேசலை, பேர சொல்லி கூட்டுறேன். பிள..பிள பிளா.. அத்தனை ரூல்ஸ், இப்டி அம்மா ஃபோர்ஸ் பண்ண வெறுப்பு தான் வந்துச்சி. அப்படி சண்டை வரும் அவன அடிச்சுருக்கேன். அதனால அம்மாகிட்ட வாங்குன அடி அப்போ. " நினைவு தாயுடன் வாழ்ந்த நாட்களுக்கு பயணிக்க.. தன் கதையை பிரதியிடம் சொன்னாள் பவித்ரா.
பவித்ரா தாய் சுமதியிடம் மரண அடி வாங்கிய மோமன்ட்ஸ் பிறகு..
பரிதவித்து குரலில் கவலை வடிய "அத்தை ஏன் .. அவள இப்படி அடிச்சிங்க.? " அவளை அடித்தால் துளியும் பிடிக்காது இருந்தும் அத்தை மீது உள்ள மரியாதையால் நிதனமாக கேட்டான்.
கம்பீரமான குரலில் " அகமெடுத்த கழுத ஆம்பளைய அடிக்குறதா ? நீ அவள வைக்க வேண்டிய இடத்துல வைச்சா.. இப்டி பண்ணுவாளா.. கட்டிக்க போறவனை கை நீட்டலாமா? முதல்ல பேர் சொன்னா.. அப்பறம் வாடா போடா னா.. இப்ப கை நீட்டுறா.." ஆதங்க பேச்சில் மூச்சு வாங்கியது சுமதிக்கு . மருமகன் என்றால் மகளை விட ஒரு படி மேல்..! சிறு வயதில் இருந்து அதிக பொறுப்போடு அவன் இளமை ஆசைகளை கூட தியாகம் செய்து தனக்காக உழைத்தவன். சுமதியை தன் சொந்த கணவன், மகள் பிறந்ததால் மருத்துவமனையிலேயே கைவிட்ட நிலையில் சிறு பாலகனாய் அத்தையை தேற்றி நம்பிக்கை தந்து அன்றிலிருந்து உறக்கம் தொலைத்து, இரவு நேர வேலை.. எத்தனையோ இன்னல்கள் பட்டு குடும்பம் காத்த மருமகன். அவன் இளமை எல்லாம் வயதிற்க்கு மீறிய சுமையும் வறுமையும் சுமந்தான் ப்ரீத்.. அந்த நன்றி உணர்வு.. குற்ற உணர்வை ஏற்படுத்தும் அத்தைக்கு, ப்ரீத்.. இன்று பெரிய கம்பெனியை நிர்வாகம் செய்தாலும். சிறுவயதில் அவன் செய்யாத வேலை இல்லை.பவித்ராவிற்க்கு வறுமையின் நிழல் படாமல் .. தந்தை இல்லாத குறை உணராமல் தன்னை உருக்கி மெழுகாக ஒளி தந்தவன். அவனுக்கு மகளை திருமணம் செய்து அவன் வாழ்வை நிறைவாக்க வேண்டும். இது சுமதியின் ஆசை. இதை சொல்லி சொல்லி புத்தியில் ஏற்றி தான் இருவரும் வளர்க்கப் பட்டனர்.
ப்ரீத் -" அவ விளையாட்டுக்கு தான் அடிச்சா.. என் மேல தான் தப்பு அத்தை. " மீண்டும் அடிக்காமல் இருக்க பொய் சொன்னான்.
"ப்ரீத்... காரணம் இல்லாம நான் அவள அடிச்சிருக்க மாட்டேன்.. அவங்க அப்பா இவள பொண்ணா பெத்துட்டேனு விட்டுட்டு போனதோட சரி, சின்ன வயசுல இருந்தே குடும்பத்தை தாங்குறது நீ தான் டா.. எவ்ளோ கஷ்டப்பட்ட அவனோட கைகளை பற்றி. எவ்வளவு உழைச்ச, எத்தனை காயம்.. இவ வாழுற ஆடம்பர வாழ்க்கை யாரால?அதுக்கு கைமாறு செய்ய வேணாமா.? " கண் கலங்கியது. "ஏன் அவ இப்டி மாறிட்டா? சின்ன வயசுல.. உன் மேல உயிரா இருப்பா. நான் ஒரு வார்த்தை உன்னை திட்டினா மல்லுக்கு வருவா.. "
" அவ என் மேல பாசமா தான் இருக்கா. ஆனா உங்களுக்கு அது பத்தாம அவள நெறைய காட்டு னு ஃபோர்ஸ் பண்ணதால தான் வெறுப்பு வருது. யார்கிட்டயும் பேச விடாம என்கிட்ட தான் பேசி ஆகனும்னு சொன்னா.. எப்டி அவ பேசுவா.?"
" நம்ம பொருள நாம தான் பாதுகாக்கனும்.
மனசு சுலபமா திருட்டு பொய்டும்.
பொய்ப்பான வார்த்தை இந்த வயசுல இனிக்கும். தடுமாறிடாம நாம தான் பார்த்துகனும். நீ சொன்னதால மட்டும் தான் அவள கோயட் காலேஜ் அனுப்புறேன். அவ பிடிக்காம வெறுத்தாலும் இதை பழக்கட்டும். உன்ன புரியும் போது.. அவளே மனசு மாறிடுவா,
பின்னால மயக்க சுத்துற எவனும் சோறு போட மாட்டான்.. புரியும்படி சொன்னா தான் புரியும் அவளுக்கு. அடியாத மாடு படியாது.. நீ...போ.. " விரட்டும் குரலில் நடுக்கம் வந்தாலும்
" சாப்டாம அழுறா அத்தை.. "
சுமதி - " அத்தனையும் நடிப்பு.. வேணும்னு வேகமா கத்தி அழறா.. பாரு.. இவள.. " என
அவள் அறையை நோக்கி நடந்தவாறு பவி என்று கத்த..
நடுகத்துடனே நடிப்பை தொடர்ந்தாள்.. பவி மூக்கை உறிஞ்சி... தேமி..தேமி .. கண்ணீர் நடிக்க ... சீ.. வடிக்க... தாய் அறியா சூல் இல்லை.
" என்ன .. ? அவன அடிச்சுட்டு நீ ஏன்டி..அழுவுற? "
" ஒரு அடி நான் அடிச்சதுக்கு நூறு அடி நீ அடிக்குற.. " ம்..ம்.. ம்..தேம.. "உன் பொண்ணு தான நான்.. இரக்கமே இல்லாம இந்த அடி அடிக்குற.. ஒன்னு உடைஞ்சா விடாம.. அடிஸ்னல் குச்சி வைச்சுகிட்டு அடிக்குற.. பாவமா இல்லையா மா...? வலி உயிர் போகுது தெரியுமா. " நிஜமாக வலித்தது.
அவள் வலியை பொறுட்படுத்தாமல்" என்னடி.. ஆச்சு உனக்கு... உன் மாமன் மேல எவ்ளோ பாசமா இருப்ப. " என்று கேட்டதும்.
கண்ணீர் துளிர்க்க "என் அம்மா நீங்க.. என்ன விட அவன தான் உங்களுக்கு பிடிக்கும். " என்று குழந்தை போல குறைபடவும்.
" போட்டி... போடாத பவி. நீயும் அவனும் ஒன்னா? அவன் வாழ்கைய அவன் வாழவே இல்லை. நன்றி கொஞ்சமாவது இருக்கா "
வெறுப்போடு " நன்றிய காட்ட நான் தான்
கிடைச்சேனா ? எனக்கு மனசு இல்ல.. நீங்களா உருவாக்குறது உறவு ஆகிடாது மா..எனக்கு அவன பிடிக்கலை. "
" அவன் உன் கூடவே நிழலாட்டம் நிக்குற வரை அவன் அருமை தெரியாது.. விலகி போவான். அப்ப வேதனை படுவ நீ , இது நடக்கும் பவி.
அவன அடிச்சதுக்கு உன்ன அடிக்கலை.அது உனக்கும் தெரியும். மனச அலைபாய விடாத பவி. " திருதிருவென விழிக்கும் அவளது பார்வையின் கள்ளத் தனம் உணர்ந்து.. "இவன் தான் உன் புருஷன்னு முடிவான அப்றம் மனசால யாரையும் நினைச்சாலும் கூட அதுவும் துரோகம் தான்.. " அழுத்தமாக அவளையே பார்த்தார்.
பதறி மறுத்தாள் "அப்டி எல்லாம் ஒன்னுமே இல்லைமா..
நம்புங்கமா.. நான் யாரையுமே லவ் பண்ணலை.. மாமாவ கூட நான் லவ் பண்ணலை.. பண்ணவும் மாட்டேன். "
" கல்யாணத்துக்கு காதல் அவசியம் இல்ல பவி. அன்பு தான் வேணும். அது அவன் மேல உனக்கு நிறைய இருக்கு. அம்மா இல்லாதவன் பவி எல்லாமுமா நீ இருக்க வேண்டாமா..? புரிஞ்சுக்கோ ப்ரீத் அ சாப்பாடு கொண்டு வந்து தர சொல்லுறேன். என்று சொல்லி சுமதி அறையை விட்டு வெளியேற..
தட்டில் உணவோடு வெளியே காத்திருந்த ப்ரீத் (மாப்பிளை ) ஐ கண்டு புன்னகைத்தபடி சென்றது தான் தாமதம். " வேகமாக உள்ளே சென்று அவள் அருகில் நின்ற நிலையில் அழைத்தான்.
" ஏய் பொண்டாட்டி வலிக்குதா? மை பொண்டாட்டி ரொம்ப வலக்குதா?" உணவு தட்டோடு நின்று நலந்தானா.. விசாரிக்க.?
கோபமாக " இல்லைங்க.. வலிக்கவே இல்லை. உங்கள பார்த்து வெட்கத்துல அப்டியே சிவந்துட்டேன்.." கண்ணிப் போய் இருக்கும் கைகளை தடவியவாறு "மாட்டிவிட்டு அடிவாங்க வைச்சுட்டு, நல்லவன் வேஷம் போடுற.. ?"
" வலிக்குதாடி.. பவி. அடி வாங்கி.. வாங்கி.. வரி குதிரை மாதிரி ஆகிட்ட போல "என கேளியாக சிரித்தவனை முறைத்தவள். அருகில் உள்ள தலையனையை அவன் மீது தூக்கி எரிய.. லாவகமாக விலகியவன்.
"அத்தை அடிக்குறா என்று அலற.. "
" டேய்.டேய்... கத்தாதடா.. இன்னொரு ரவுண்ட் தாங்க மாட்டேன்டா... உன் அத்தை வந்தா பேய் அடி அடிக்கும் "
ப்ரீத் " கத்தாத டா..டா.. சொன்ன மாதிரி.. இருந்தது. "
புருவம் உயர்த்தி கேட்க.
தலையை இடம் வலம் ஆட்டி
"இல்லை மாமா காத்தாதிங்க.. மாமானு சொன்னேன் மாமா.." 'எப்டி சிக்கி இருக்கேன்.. பாத்தீங்களா?'
பவி -" என்ன நாய்.. பேய்னு கூட கூப்டுங்க மாமா காலேஜ்ல என்ன பொண்டாட்டினு கூப்பிடாதிங்க மாமா ப்ளீஸ். "
"ஏன்டி.. செல்லம்.. கிண்டல் பண்றது யாருனு சொல்லு " கையை முறுக்கி காட்ட
" அய்யோ.. சாமி யாரையும் அடிச்சி தொலைக்காத, அதோட பாவம் மொத்தம் என் தலையில விழும்.
கல்யாணம் பண்ணாம தாலி கட்டாம பொண்டாட்டி னு ஏன் கூப்பிடுறான் னு மேம் கேட்கும்
போது என்ன நான் சொல்லுறது. மாமா. " என்று குற்றம் சாட்டும் குரலில் சொல்ல,
" தாலியே தேவயில்ல…நீதான் என் பொஞ்சாதி…தாம்பூலம் தேவயில்ல…நீதான் என் சரிபாதி…
உறவோடு பிறந்தது பிறந்தது…உசுரோடு கலந்தது கலந்தது…மாமா மக நீதான் நீதானே.. "
என்ற பாடல் வரியை பாடி
பதில் கூற புன்னகைத்தவள் அவன் அருகே வர, என்ன செய்ய போறானோ.. என்ற உதறலுடன் கைகள் நடுங்க, கலவரத்தை முகத்தில் காட்டாது அமர்ந்து இருந்தாள் பவித்ரா.
அருகே வந்தவன் பட்டென அணைப்பது போல அவள் காது அருகே சென்று .. ஹஸ்கி குரலில்
"அடி சிறுக்கி…நீ தாய்மாமன் சீதனமே…உன்ன நெனச்சு நான் முழுசாக தேயணுமேஎன்ன உருக்கி..ஓஓஓ.. "
என பாடலை முணுமுணுத்து செவியில் இதழ் உரசி கீழே பயணிக்க. உடனே தடுத்தாள் பவி. சட்டையை காலரோடு சேர்த்து பிடித்து மேலே இழுக்க பாவமாக ஒரு பார்வை பார்த்தான் ப்ரீத்.
எதிர் எதிரே பார்வை தீண்டிட"ஏன் பவிமா.."அவன் பார்வையில் காமம் தூக்கலா தெரிய
'ஐயோ.. மாமானு கூப்டா ஒரு மார்கமா ஆகுறான் இவன் என மனதுக்குள் எண்ணியவள்.'
" டேய்.. ப்ரீத்.. என்ன.. ம்.. " பவித்ரா முறைத்து கேட்டதும்.ஒன்னும் இல்லை என இடம் வலமாக மாமன் தலை அசைக்க.
" பவி.. சாரி.. நான் உன்ன வேணும்னு அடிக்கலை. நீ ஏன்டி இடையில வந்த.. " கண்ணத்தை வருடியவாறு " வலிக்குதா டி? "
" ம்...கும்.. இல்லை டா .. " அவள் கை தடம்.. சுவடுகளாய் அவன் கன்னத்தில தெரிய .. " சாரி டா.." நினைவு தெரிந்த நாள் முதல் .. மாமனிடம் பொய்யாக கூட சண்டை போடாதவள் பவி. இன்று அறைந்ததை எண்ணி மனம் வருந்தியது.
" பவி... உனக்கு நியாபகம் இருக்கா.. சின்ன வயசுல நான் வேலைக்கு போவேன்."
"ம்.. இருக்கு"
"குப்பைய ரீசைக்கிள் பண்ணுற மிஷின்க்கு கண்ணாடி பாட்டில் அள்ளி கொண்டு போய் கொட்டனும். வேகமா அள்ளி கொண்டு போய் கொட்டனும்.. இல்லைனா அடுத்த நாள் வேலைக்கு கூப்பிட மாட்டாங்க. இரத்தம் வழிய.. வழிய தூக்குவேன். மருந்து வாங்க கூட பணம் இருக்காது. " பழைய வறுமை நிலையில் பட்டது நினைவு வர,
பவித்ராவோ மனம் கனத்து அவன் தோளில் சாய, பிரியத்தனப்பட்டு கண்ணீரை தடுக்க முயல, கட்டுப்படுத்த முடியாமல் கன்னம் தொட்டு மாமன் சட்டையில் வழிந்தது விழி நீர்.
செருமியவாறு பேசலானான்.. "
பேனா பிடிக்க முடியாது. சாதம் அள்ளி திங்க முடியாது. எரியும் எனக்காக ஒரு குட்டி பொண்ணு காத்திருப்பா. என் காயத்துக்கு கண்ணீரை மருந்தா போடுவா.. சாப்பாடு ஊட்டி விடுவா.. போர்வை போர்த்தி தூங்க வைய்ப்பா..
அம்மா அப்பா எல்லாம் என்னனு கூட எனக்கு தெரியாது.. டி.
நீ தான் பவி எல்லாமே எனக்கு.
" ப்ரீத் அழாத நான் முத்தம் கொடுத்தா உன் காயம் எல்லாமே ஆறிடும்னு சொல்லுவா "
இப்படி சொன்னவளயே
இன்னைக்கு அடிச்சுட்டேன்.நீ என்ன வெறுக்குற பவி.
உனக்கு என்ன பிடிக்கலை.
பேசாம நான் செத்துப் பொய்டவா?
என கூறிய கணமே அவன் கன்னத்தில் பலமாக அறை விழ.
மறு கன்னத்தை அவளிடம் காட்டினான் ப்ரீத்.
"உன்ன.. " அவன் காட்டிய கன்னத்தில் கையால்
அழுத்தி தள்ளிவிட்டாள். மறுகன்னத்தை மீண்டும் காட்ட..
முறைத்து பார்க்கும் அத்தை மகள் முன் மீண்டும் கழுத்தை உயர்த்தி இதழை குவிக்க.." டேய் " என்று அதட்டி பவி அடிக்க கை ஓங்க.. அவன் கண்களை மூடி பொய்யாக பயம் கொல்ல, அவளது நெற்றியால் ஒற்றி எடுத்தாள் அவன் இதழை.!!
அவனது இரு கரங்களை பற்றி முத்தமிட்டவள். கண்ணீர் வழிய முத்தத்தை தொடர..எண்ண முடியாமல் ப்ரீத் தடுமாற, இதழ் வலிக்கும் வரை முத்தம் தந்து நிமிர்ந்தாள்.. பவி.
" டேய்... மாமா... அப்படி அறைஞ்ச இல்லை. ரொம்ப வலிக்குது.. உன் அத்தையும் என் உடம்புல செஞ்சுரி அடிச்சுட்டாங்க. நீதான எல்லாத்துக்கும் காரணம்.. மருந்து போட்டு விடு..டா. "
" நிஜமாவா எங்க இருந்து ஆரம்பிக்க " ஆவலாய் ஆராய்ந்து பார்த்தான். கால் முதல் காது நுனிவரை எல்லா இடத்திலும் காயம் இருக்க மனதில் மாமனுக்கு கொண்டாட்டம் தான்.
" டேய் பொறுக்கி.. ஒரே ஒரு காயத்துக்கு மட்டும் தான் பர்மிஷன்.
நீ தான் எங்கனு பார்த்து கொடுக்கனும். "
"அய்யய்யோ.. என்ன உதட்டுல இரத்தம் வருது வலிக்குதாடி.."
"ஆமான்டா.. பிடிக்காதுனு தான் டா.. சொன்னேன் ப்ரீத்." பேசியபடி நிமிர மார்க்கமாகும் அவன் முகத்தின் மாற்றம் உணர்ந்து.டேய் கிட்ட வராத..ஆமை போல மெதுவாய் பின்னே பவி நகர..
" உதட்டை குவித்து முத்த அம்பை காற்றில் வீசி..அவள் அருகே வந்தான். மாமன் அவளின் உதட்டை நெருங்க. கண்களை இறுக முடி..முத்தத்திற்க்கு பாவை தயார் ஆக.. என் லொக்கேஷன் வேற மேடம்..என அவன் அறைந்த கண்ணத்தை அழுத்தி முத்தமிட்டு மாமன் விலக.!
"பவி " பாவி பய.. முத்தமிட்ட இடத்தை கைகளால் வருடி.. டேய்.. ப்ரீத்.. நல்லவனே.. புஷ்..னு பல்பு குடுத்திடியே டா. "
" நான் கொடுத்த காயத்துக்கு தான் நான் மருந்து போடனும். அத்தை கொடுத்ததுக்கு அவங்கள போட சொல்லு என நாயகன் நகர்ந்து போக.!
" டேய்..மாமா" என்ற அழைப்பில் அவன் திருப்பியதும்.. "சாச்சி புட்ட மச்சான்.. " இரண்டு கைகளாலும் காற்றில் அள்ளி முத்தமிட,
பதிலுக்கு பறக்கும் முத்தத்தை அவனும் வாரி வழங்க.
" இங்க வாயேன் டா.. அருகில் வந்தவனை ஏறிட்டு பார்த்து. இந்த காதல் காமம் எல்லாம் நம்ம உறவு கிட்ட கூட வர முடியாது.அந்த வானம் மாதிரி நம்ம உறவு.
இந்த அன்பு ரொம்ப புனிதமானது. விட்டுட்டு ஓடி போனவன்.அவன அப்பன் னு சொல்ல கூடாது. நீ தான் அந்த ஸ்தானத்தை ஏத்துக்கிட்டு நின்ன , அங்க மட்டும் இல்லை. இங்கயும் " என அவள் இதயத்தில கை வைக்க. " நான் உன்ன எப்டி வெறுக்க முடியும்.?
அவன கொன்னு போட்டுருப்ப.. நீ.
பயத்துல என்ன பண்ணுறது னு தெரியாலடா. சாரி டா..ஐ லவ் யூ விட பெரிய வார்த்தை உலகத்துல இருந்ததா அது தான் நீ.. என் உயிர் டா நீ."
சந்தோஷத்தில் துள்ளி மனம் குதிக்க.. சின்ன புன்னகையுடன் .. குட் நைய்ட் என கூறி ப்ரீத் நகர "
" டேய்.. மாமா.. உன் அத்தை உன்னால தான அடிச்சாங்க.. மருந்து போட்டு விட்டுட்டு போடா " என்று பவி சீண்ட..
வெட்கத்தில் தலைகுனிந்து "திமிர் தான் டி உனக்கு என நிமிர .. "கண்ணடித்து வா என கை சாடை செய்தவளை பார்த்து எச்சில் விழுங்கி
" ஏய் .மோகினி பிசாசு.. ஒழுங்கா தூங்கு.. என தனது அறைக்கு ப்ரீத் ஓட்டம் பிடிக்க.
" வாடா.மாமா.. என அவன் அறை கேட்க கத்தினாள் பவி.. வலியில் தொடங்கி வெட்கத்தில் நிறைந்தது அந்த இரவு.
நன்றிகள்
கோடி