எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

நிலவாய் பிரிந்தாலும் உயிராய்த் தொடரும்

IsaiKavi

Moderator
உயிர் 01




அர்ஜுன் பைரவ் வெட்ஸ் மீரா சுஜி என்ற பெயருடன் தனித்தனியாக முதுகு புறம் காட்டி நிற்கும் இரு திருமண ஜோடிகளின் பேனர் கட்டப்பட்டு இருந்தது..

திருமண மண்டபம் என்று கூற முடியாத அளவிற்கு அங்கு ஒரு பேரமைதி நிலவியது..குழந்தைகள் சத்தமும், உறவினர்கள் மற்றும் பெரிய விஐபிகளின் பேச்சு சத்தமும் எதுவும் அங்கு கேட்கவில்லை..

ஏதோ கல்லையும் மண்ணையும் பார்ப்பது போல், திருமண மேடையை பார்த்து அனைவரும் அமைதியாக இருந்தனர். மேள தாளமும், நாதஸ்வரமும், பூசாரி உச்சரிக்கும் மந்திரம் மட்டுமே மண்டபம் முழுவதும் எங்கும் எதிரொலித்தது..

மணமகனை அமர்ந்திருந்த இடத்தில் அவனது முகத்தில் மகிழ்ச்சி சிறிதேனும் தெரியவில்லை. அவன் அமைதியாக, திடமாக அமர்ந்திருந்தான். அதே போல, அவனுக்கு இணையாக, மணமகள் தேவதை போன்ற அழகில் மிளிர்ந்திருந்தாள்..அவள் சிவந்த நிறத்திற்கு செயற்கை முகபூச்சும் அவளின் அழகை மேலும் மெருகேற்றியது..

அவளின் அழகை பக்கத்தில் உள்ளவன் பார்த்து ரசிக்கவும் இல்லை விழிகளால் அவள் அழகை அள்ளி பருகவும் இல்லை..

எவ்வளவு நேரம் தான் கற்சிலை போல் அமர்ந்திருப்பது என்று நினைத்தாலே அவளுக்கு ஆயோசமாய் இருந்தது..

அவனை பற்றி நினைத்தவளுக்கு இந்த மணமேடையில் அமரும் முன்பு அதற்கு முன்னர் நடந்தவைக்கு சென்றது.. கிட்டத்தட்ட மூன்று வாரத்திற்கு முன்பு..

அவளிடம் திருமணத்திற்கு சம்பவம் கேட்டு, மாப்பிள்ளை வீட்டாரை வீட்டுக்கு அழைத்து மீராசுஜிக்கு திருமணம் நிச்சயமாகி விட்டது..ஆனால் மாப்பிள்ளை நேரில் பார்க்க முடியாத சூழ்நிலை.. தனக்கு நிச்சயம் செய்த மாப்பிள்ளையை பார்க்க வேண்டும் என்கிற எண்ணம் அவளுக்கு அதிகமாகவே இருந்தது..

இதே சமயம் திருமணம் அடுத்த நாள் என்றால் அதற்கு முதல்நாள் புது எண்ணில் இருந்து அவன் அனுப்பிய குறுஞ்செய்திகள் மட்டும் உத்தரவுகளை போல, அவள் அலைபேசியில் குவிந்தது..

அலைபேசியை எடுத்து பார்த்தவளுக்கு விழிகள் பெரிதாய் விரிந்தது..

" ஹாய்! யு ஆர் மீரா சுஜி , ரைட்? "

" பைன்! ஐ ஆம் யுவர் பியூச்சர் ஹஸ்பண்ட்.."

"சோ டூமாரோ நம்ம ரெண்டு பேருக்கும் மேரேஜ் நடக்க போகுது..தட் யு க்னோ பட் எனக்குன்னு ரெஸ்பெக்ட் ஸ்டேட்ஸ் இருக்கு ஓகே.."

"மணமேடைல உட்காரும் என் மனைவி எனக்கு சமமா இருக்கணும்..நான் என்ன சொல்ல வரேன்னு உனக்கு புரியும்னு நினைக்கிறேன்.. அண்ட் ஆல் சோ தாலி கட்ட முன்ன என்னை பார்க்கக் கூடாது.. "

"கம்பீரமான இருக்கணும்..இது வரைக்கும் போதும்னு நினைக்கிறேன்.."

"மீதி என் வீட்டுக்கு வலது கால் எடுத்து வச்சி நீ மனைவியா நுழைந்ததும் சொல்றேன்.."

" நான் சொன்ன மாதிரி பர்பெக்ட்டா பண்ணனும் ஓகே.. ஆல் தி பெஸ்ட்"

" நோ நீட் டூ ரிப்ளை , ஜஸ்ட் ரிவெம்பர்.."

கூற வேண்டியதை அவளிடம் கூறி ஆயிற்று என்று அவன் ஆப்லைன் சென்றுவிட்டான்..

ஆழமான பெரு மூச்சு இழுத்து தன்னை தானே சமானபடுத்திக் கொண்டாள்..மெத்தையில் அமர்ந்து கொண்டாள் மீரா சுஜி..

"எனக்கு வர போகும் ஹஸ்பண்ட்டை கண்டு நான் கனவே காணல்ல இப்படி ஒரு மெட்டிரியலான ஹஸ்பண்ட்! யாருக்கு நான் குத்தம் சொல்றது? போட்டோ பார்த்து இம்ரஸ் ஆகாத நான் நேரில் பார்த்ததும், ஒரே வார்த்தையில் ஓகே சொல்லிட்டேன்.. பார்ப்போம், மேரேஜ் லைஃப் எப்படி இருக்கும்னு பார்ப்போம்!" அன்றிரவு, அவள் தன் வருங்கால கணவனை எண்ணி கனவு காணாமல் உறங்கினாள்..

விக்டர் தன் மகளுடன் அர்ஜுன் பைரவ்வின் கார் நிறுவனத்திற்கு வந்திருந்தார்.. புதிதாக வந்த Luxury Cars பார்ப்பதற்காக..ஆனால் மீரா, வேறு யாரையோ தேடி கண்களை ஓடச் செய்தாள்..

விக்டர் " சுஜி நீ இங்கேயே இரு, நான் போய் மாப்ள கிட்ட பேசிட்டு வந்துர்றேன்.." என்றவரின் கரத்தை பிடித்து நிறுத்தினாள்..

" டாடி நீங்க மாப்ளன்னு சொல்றீங்க.. நானும் வந்ததில் இருந்து அவரைத்தான் தேடுறேன்..என் கண்ணுக்கு தெரியலையே நீங்களாவது அவரை அடையாளம் தெரிஞ்சா காட்டுங்க டாடி.." சிணுங்கி கொண்டு கேட்கும் தன் செல்ல மகளை சற்று சிரிப்புடன் அவளை நோக்கி,

" அங்க டார்க் ஆரேஞ்ச் கார் பக்கத்துல, அவரோட பிஏ கூட பேசிட்டு இருக்காரே? அவர்தான்.."

மீராவின் கண்கள் பெரிதாகின,

டார்க் ரெட் ஷர்ட், கருப்பு நிற ஃபேன்ட் அணிந்து இருந்தான் , தோள் வரை இருக்கும் சில்கி கேசம் , ஆறடி உயரம், அகலமான தோள்கள்..பனைமரம் போல உயர்ந்த அவன் தோற்றம்!

ஒரு நொடி, அவளது மூச்சே நின்று விட்டது போல இருந்தது..

அவனின் முகம் இன்னும் தெரியவில்லை..அவன் இன்னும் திரும்பவில்லை..ஆனால் அவன் தோற்றம் மட்டுமே அவளுக்கு ஒரு விதமான அதிர்ச்சியை ஏற்படுத்தியது..

"இவர்தானா? இப்படியா இருக்காரு?"

அவள் நினைத்ததற்கு மாறாக, அவன் கவனத்தை ஈர்க்கும் தன்மையானவன்..அந்த முதுகு, அந்த நிமிர்ந்த நடை , அவனை எளிதில் அனைவரையும் திருப்பி பார்க்க வைக்கும்!

அவள் கண்களில் ஆர்வம் தென்பட்டது..

" ஆமா , டார்க் ரெட் ஷர்ட் வேர் பண்ணி இருக்கார் அவரா? "

விக்டர் மெல்ல சிரித்து, "நீ போட்டோ கூட பார்த்தது இல்ல தானே? இப்ப பார்க்கலாம்..ஆனா, மேரேஜ்ல வச்சி தான் நீ அவரை நேர்ல முழுசா பார்க்க முடியும்," என்று சொல்லிவிட்டு அர்ஜுனை நோக்கிச் சென்றுவிட்டார்..

மீரா மட்டும் இன்னும் அதே இடத்தில் உறைந்து நின்றாள்..

அவனின் புகைப்படம் பார்க்காமல் தான் திருமணத்திற்கு சரி என்று சொன்னாள்.. அவன் முகம் தெரியவில்லை என்றாலும் , புறத்தோற்றம் மற்றும் அவனை அவள் ஈர்த்தது போதுமானதாக இருந்தது..

இவற்றையெல்லாம் நினைத்துக் கொண்டு இருந்தவளுக்கு, திருமணம் நடக்க போகிறது என்று உணர்த்தும் விதமாக அவள் கன்னத்தை பதம் பார்த்தது முறுக்கி விட்ட மீசை..

தலைகுனிந்து நின்றிருந்தவள் நிமிர்ந்து அவனைப் பார்த்தாள்.. அடர்த்தியான சில்கி கேசம் ஒரு பக்கமாக வாரி இருந்தான்..அவளுக்கு இணையாக வசீகரிக்கும் தோற்றம், அதை விட அவளை பாதிக்கப் போவது அவன் விழிகள் தான் அதனை அறியாமல் போனாள் பேதையவள்..

தாலி கட்டுவதிலே மும்முரமாக இருப்பவனை இமை சிமிட்டாமல் தன்னை ஒருவள் பார்க்கிறாள் என்ற எண்ணமே அவனுக்கு கிடையாது..

அவள் பாதத்தை தொட்டு மெட்டி அணிவித்த அவன் கரங்களில் மென்மையை உணர்ந்தாள் அவள்..அவன் தான் அவளை திரும்பியும் பார்க்கவில்லையே!

அவளுக்கு அது ஏமாற்றமாக இருந்தாலும், வெளியே சிரித்து சமாளித்தாள்..

திருமணமும் சம்பிரதாயங்கள் அனைத்தும் முடிந்ததும் மணமகளை அழைத்துக் கொண்டு அர்ஜுன் வீட்டார்கள் அழைத்துச் சென்றுவிட்டார்கள்..

அவன் தன்னுடன் வரவில்லை என்பது மனதில் வலித்தாலும் அவனின் குறுஞ்செய்திகளை நினைவில் கொண்டு காரில் இருந்து இறங்கினாள்..

இமை தாழ்த்தி இருந்தவள்,

" வா மா மீரா " அர்ஜுனின் தாய் கோதை அவளை அழைத்தார்..

அவரை ஒரு தடவை நோக்கி விட்டு, நேரே பார்த்தவளுக்கு விழிகள் இரண்டும் வியப்பில் விரிந்தது.." அமேசிங்" அவள் இதழ்கள் உச்சரித்தது..

வீட்டின் அமைப்பை பார்த்தே அவள் கூறினால் , ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட பங்களா போன்ற அமைப்பு முன் தோட்டம் அத்தனை அழகுடன் சுத்தமாக இருந்தது..

" சுஜி உள்ள போகலாம்.." அவளின் தாய் கீதா..

சரியான முறையில் அவளும் நடந்தாள்..அவள் ஒவ்வொரு அடியாக பாதையில் எடுத்து வைக்கும் போது, அங்கு நிறுவனத்தில் அர்ஜுனின் கையால் ஒருவனுக்கு கன்னத்தில் ஒவ்வொரு அடியும் இறங்கியது..

திருமணம் முடிந்த கையோடு அர்ஜுன் பைரவ் தன் நிறுவனத்திற்கு வந்து சேர்ந்தான்..

நிறுவனத்தில் நடக்கும் திருட்டு, குளறுபடிகள் அனைத்தையும் தெரிவிப்பது அர்ஜுனிடமே..

ஆகையால் இவர்களுக்கு தெரிந்திருந்தாலும், அவன் திருமணம் முடிந்துவிட்டது என்றாலும், அவனுக்கு வேறு வழி இல்லாமல் அவன் அலைபேசியில் குறுஞ்செய்தி அனுப்பி விட்டனர்..

அதாவது, அவனின் பி.ஏ நம்பிக்கையான ஒருவன் புதிதாக ஒரு காரை தயாரிப்பதற்கான தொழில்நுட்பம் சம்பந்தமான திட்டங்களை அவன் எதிரியிடம் அதன் விபரங்களை ஒரு சிப் மூலமாக பகிர்ந்தளித்து விட்டான்..

அர்ஜுன்க்கு திருமணம் நடந்ததால், அவன் மாட்டிக் கொள்ள போகாது என்று நினைத்திருந்தாலும், அர்ஜுனின் நம்பிக்கையான ஒருவன் கண்காணித்து இருப்பது அவனுக்கு தெரியாதே..

ரகசிய அறையில் இருந்து எடுக்கப்பட்ட விபரங்களை எடுத்ததற்கு பச்சை நிற விளக்கு, ரங்கன் அறையில் அலாரமாக காட்டியது.. பி.ஏ ரவினின் வேலை என எதிர்பாராத திகைப்பை அவன் முகத்தில் காட்டவில்லை.

உடனே, அர்ஜுன்க்கு அழைத்து கூறிவிட்டான்.. ரவின் எதிரில், அர்ஜுன் இருந்தும், அவன் கத்தி ஆர்பாட்டம் செய்யாமல் இருப்பவனை, மஞ்சள் நிற பூனை கண்களால் கூர்மையாக்கி பார்த்தான்..

அவன் பார்வையை அசையாமல், தன்னை எதிர்கொண்டவனை மனதில் மெச்சிக் கொண்டான்..

"லெட்ஸ் சீ.." என்ற அவனின் வார்த்தை உள்ளுக்குள் பயத்தை கிளப்பினாலும், அவன் அப்படியே இருந்தான்..

"ரங்கன், என் கூடவே இரண்டு வருஷமா பி.ஏ இருந்தவன்..எனக்கே தெரியாம நம்பிக்கை துரோகம் செஞ்சி என் கம்பெனில திருடி இருக்கானானா சோ…" பேச்சை இழுத்து அவன் ரங்கனைப் பார்த்தான்.

"புரியுது, சார்! ஐ வில் பின்னிஷ் இட்."

"ஹம், குட். நெக்ஸ்ட், ரவின் கிட்ட வேலையை ஒப்படைச்சவன் யாருன்னு இன்னைக்குள்ள கண்டு பிடிக்கணும், ரங்கன் காட் இட்.." சீறினான் என்றால் அவனின் கோபத்தை கட்டுக்குள் கொண்டு வர வேண்டிய கட்டாயம் இருந்தது..இதே கோபத்துடன் வீட்டிற்கு செல்ல முடியாது அல்லவா?

"ஓகே, சார்!" என்றான்.

Cheetah Veloce sports car ஆரஞ்சு நிறத்தில் இருந்த காரில் ஏறி, புழுதி பறக்க கிளம்பியவன் கார் சாலையில் பாய்ந்து சென்றது..

மீரா வலது காலை உயர்த்தி பாதத்தை வைக்கும் முன், இன்னொரு பாதம் நீண்டது..

அது எவர் என்று கண்டு கொண்டவளின் இதழில் புன்னகை... சீத்தாவின் வேகத்தில் காரை ஓட்டிக் கொண்டு வந்தவன் தன் பங்களாவிற்கு வந்து சேர்ந்தான்..

தன் புதிய உறவுடன் தன் பாதத்தை வைத்து உள்ளே நுழைந்தான் அர்ஜுன் பைரவ்..

இதனைக் கண்ட பெற்றவர்களுக்கு அத்தனை பூரிப்பாக இருந்தது. இனி மகளை நினைத்து கவலைப்பட வேண்டியதில்லை.. மருமகனே நன்றாக பார்த்துக் கொள்வார் என்ற நம்பிக்கை பிறந்தது..

திருமணம் முடிந்து வீட்டிற்குள் நுழைந்ததும், மணமக்களை அமர வைத்து பாலும் பழமும் கொடுப்பார்கள்.. ஆனால் இங்கு நடந்தது, மீராவின் கரத்தை பிடித்து அவன் அறைக்கு அழைத்துச் சென்றான்..

வந்த சொந்தங்களும், குடும்பத்தினர்களும் அவன் செயலில் அதிர்ந்து நின்றார்கள்.

இதில் பெற்றவர்களுக்கே சங்கடம் உண்டானது..

அறை கதவை மூடிவிட்டு, தன்னை அதிர்ந்து பார்த்துக் கொண்டிருக்கும் மனைவி முன் வந்து நின்றான் அர்ஜுன் பைரவ்..

"ஏங்க…"

அவனின் பூனை கண்கள் அவளை மொத்தமாக சுருட்டி போட்டது..அக்கணம் அவள் அவன் பார்வையில் மயங்கி போயிருந்தாள்..

"மீரா…" அவளை அழைத்தான்.

அடுத்து அவன் கூறியதை கேட்டு, அவளது காதில் இரத்தம் வழியாத குறை தான். அவளவன் அவன் மனையாளுக்கே பேரதிர்ச்சியை கொடுத்திருந்தான்..


 
Last edited:

IsaiKavi

Moderator

உயிர் - 02



" ஷப்பா ஆ..ஒருத்தனை போட்டு தள்ளி தடையம் இல்லாம அழிச்சிட்டு வர்றதுக்குள்ள நானே அழுக்காகிடுவேன் போல..ஹூம்! ஊவேக் என்ன கன்றாவியோ இந்த நாத்தம் நாறுது எனக்கே என் பாடி ஸ்மெல் தாங்க முடியாம வாமிட் பண்ணிருவேன் போல.." என்று வாய்விட்டு புலம்பிக் கொண்டு வரும் அளவிற்கு ஒருவன் வைத்து செய்து விட்டான் என்கிற அர்த்தம் தானே..ரவினை முடித்துவிட சொல்லி ரங்கன் அந்த வேலையை அர்ஜுனின் சகோதரன் சிந்தூரனிடம் ஒப்படைத்திருந்தான்..

அழுக்கு உடையுடன் நுழைந்த மகனை மூக்கை பொத்திக் கொண்டு லிங்கம் மற்றும் கோதை இருவரும் பார்த்தனர்..

அவன் கண்ணிற்கு இவர்கள் நிற்பது ஏற்கனவே தெரியும் என்பதால் நேராகவே தன் பெற்றவர்களை கடந்து தன் அறைக்கு சென்றுவிட்டான்..

" நல்ல வேளை தப்பிச்சேன் இல்ல என்னை பெத்தவங்க ரெண்டு பேரும் ஆயிரத்தெட்டு கேள்வி கேட்டு நா வரண்டு போக வச்சி இருப்பாங்க..டேய் ரங்கன் இந்த வேலைய பண்ண வச்சிட்டல" கோபமாக அவன் சொல்ல , " மூடிட்டு போய் குளி டா! " என்றது யாரும் இல்லை ரங்கன் தான் ப்ளூடூத் வழியாக அவனுடன் தொடர்பில் இருந்து இருக்கிறான்..

அவன் அறை கதவை கார்ட்டை காட்டி திறந்து உள்ளே நுழையும் வரைக்கும் தொடர்பில் இருந்தவன் ப்ளூடூத் தொடர்பை அவன் துண்டித்தான்..

கோதை " என்னங்க " கணவரை அழைத்தார்..

" சொல்லு கோதை"

" அண்ணன் கல்யாணம்னு வேஷ்டி சட்டையில சுத்திட்டு இருந்தான்ல, இப்போ பாருங்க கருப்பு ரப்பர் சட்டை போட்டு இருக்கான்..என்ன கோலம் இது ? " கணவரிடம் பாய்ந்தார்..

" கோதை " என்று அதட்டினார்..

" எனக்கு என்ன தெரியும்.. அண்ணனும் தம்பியும் சேர்ந்து ஏதோ கிறுக்கு தளம் பண்ணி இருக்கானுங்க..மேரேஜ் பங்ஷன கவனிக்குறதா இவனை கவனிக்குறதா? பொண்ணுக்கு தாலி கட்டி முடிஞ்சதும் மண்டபத்தை விட்டு போற அப்பவே நீ யோசிச்சு இருக்கணுமா இல்லையா ? " சினத்துடன் மனைவியிடம் சிடுசிடுத்தார்..

" ஆமா , பாருங்க எனக்கு வேற வேலையே இல்ல இவன் பால்குடி மறவாத பிள்ளை மாதிரி கைக்குள்ளயே வச்சி பார்த்துக்கணும்னு தானே சொல்றீங்க ? நீங்க எதுக்கு அப்பாவா இருக்கீங்க ? இவங்களை பார்த்துக்க தானே‌? " கோதையும் குறையாது கணவருடன் சண்டை போட ஆரம்பித்தார்..

இவர்களை மற்றவர்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்க.. விக்டர், கீதா இருவருக்கும் ' என்னடா இது ' என்று ஒருவர் ஒருவர் தங்கள் முகத்தை பார்த்துக் கொண்டு நின்றனர்..

அறைக்குள் சென்ற இரு ஜோடியும் வெளியே வந்த பாடில்லை..உள்ளே சென்று பத்து நிமிடமும் கடந்து விட்டு இருந்தது..

அர்ஜுன் பைரவ் அவளை அதிர வைக்கவே சிலவற்றை கூறினான்..

" மிஸஸ் மீரா சுஜி அர்ஜுன் பைரவ் இஸ் வாட் ஐ செட் கரெக்ட்?" தனது கனமான குரலில் கேட்டதும், அவன் விழிகளில் இருந்த மயக்கம் முற்றிலுமாய் தெளிந்தது..

" யெஸ்.." பட்டென சொல்லிவிட்டாள்..

" சிட் ஹியர்" தோளை பிடித்து அவளை மெத்தையில் அமர வைத்துவிட்டு, மர நாற்காலியில் காலுக்கு மேல் கால் போட்டு அமர்ந்து, இடது கரத்தை நாடியில் குற்றி அவளை மேலிருந்து கீழ் நோக்கி ஒரு பார்வை பார்த்தான்..

" அதிகப்படியான மேக்கப் பண்ணி இருக்க.." என்றான்..அதற்குள் அவள் முக வடிவை விழிகளாலயே ஸ்கேன் செய்து விட்டான்..

" மேரேஜ்க்கு.." அவன் பார்வை வேறு அவளை தடுமாற்றுவதாய்!

" எனக்கு மேக்கப் பண்ற பொண்ணுங்களே பிடிக்காது , பார்க்க கோஸ்ட் மாதிரி கன்றாவியா இருப்பாங்க ஆனா நீ மை வொய்ப் சோ எனக்கு பிடிச்ச மாதிரி தான் இருக்கணும்..தென் நானும் ஆம்பளை தானே உங்கள மாதிரி மேக்கப் போட்டு இருக்கேனா சொல்லு? " என்று கேட்டதும் , ' மேக்கப் போட்டது குத்தம் போல சொல்றாரே? ' மனதில் எண்ணிக் கொண்டு" ஹ்..பொதுவா பசங்க மேக் போட்டுக்குறது இல்லை தான் " அவனுக்கு சாதகமாகவே பதிலை கூறிவிட்டாள்..

" தட்ஸ் ரைட்..நீ இப்ப என்ன பண்ற உன் முகத்துல இருக்குற மேக்கப் ஃபுல் ஆ.. ரிமூவ் பண்ற ஓகே.. வெளியே போய் நமக்காக காத்திட்டு இருக்குறவங்க கிட்ட பேசிட்டு வர்றதுக்குள்ள நீ பண்ணி இருக்கணும் கோ ரைட் நெள.." அவளுக்கு உத்தரவிட்டான்..

அதன் பின் அவ்வளவு நேரம் மெத்தையில் அமர்ந்திருக்க முட்டாளா என்ன ? அவன் சொன்னதை செய்ய குளியலறைக்குள் ஓடி விட்டாள்..

இவன் நாற்காலியில் இருந்து எழுந்து கதவை திறந்து வெளியே சென்றுவிட்டான்..

குளியலறையில் முகம் பார்க்கும் கண்ணாடி முன்பு நின்று, முகத்தில் போட்டு இருக்கும் மேக்கப்பை வழித்து எடுத்து கொண்டு இருந்தாள்..

" பாவிங்க மேக்கப் அப்பி வச்சி இருக்காளுங்க..நார்மல் மேக்கப்னு தானே நினைச்சேன்..என் முகத்துல எத்தனையோ லேயர் பூசி வச்சிடாளுங்களே!..ஸ்..ஸ்..ஐயோ கண் இமை " என்று அலறிக் கொண்டு கண்கள் சுருங்க , நீண்டிருந்த செயற்கை கண் இமையை கழட்டி குப்பை தொட்டியில் போட்டுவிட்டாள்..


இளம் சிவப்பில் இருந்த உதடுகளையும் தேய்த்தாள்.. ஏற்கனவே மெலிதாக சிவந்த தடிப்பான உதடுகள், மேலும் சிவந்து பளிச்சென்று தெரிந்தன.. முகத்தை கழுவி, வெளியே வந்தாள்..

அறையை விட்டு வெளியே சென்ற அர்ஜுன் இன்னும் உள்ளே வரவில்லை..

அவன் வெளியே வந்து பார்த்தபோது , வந்த சொந்தங்கள் இருக்கவில்லை.. அனைவரையும் லிங்கம் தான் அனுப்பி வைத்திருப்பார் என்று எண்ணியவன், தன் பெற்றவர்களின் முன்பு ,

" பாலும் பழமும் கொடுக்குற சம்பிரதாயம் வேண்டாம்..அடுத்து பர்ஸ்ட் நைட் அதுவும் அவசியம் இல்லாதது ஒண்ணு.." என்றான்..பெண்ணின் தாய் தகப்பன் நிற்பதை கூட அவன் கருத்தில் படவில்லை..

" என்னடா பேசுற? "

" டாட் இவ்ளோ தூரம் நான் மேரேஜ்க்கு சம்மதிச்சதே பெருசு இதுல இதெல்லாம் தேவையா ? " அவர் முன் குரலை உயர்த்தாமல் கூறினான்..

" தம்பி.. பெரியவங்க கட்டாயம் பண்ண வேண்டியது பா.." விக்டர் தன்மையை அவனுக்கு எடுத்துச் சொல்ல முனையும் போது , " நாட் இன்டரஸ்டட் அங்கிள் " 'என் முடிவில் இருந்து நான் இறங்கி வரப் போவதில்லை.. நான் சொன்னதே செய்தே ஆக வேண்டும்' என்று சிறு வார்த்தையில் தனக்கு இதில் பிடித்தம் இல்லை என்பதை காட்டி விட்டான்‌‌..

அவன் சொல்ல வேண்டியதை சபையில் கூறி விட்டு , அறைக்குச் சென்று கதவை அடித்து சாற்றிவிட்டு உள்ளே வந்தவனை கண்டவுடன் மெத்தையில் இருந்து எழுந்து நின்றாள்..

" நான் உள்ள வந்ததும் ஏன் எழுந்து நிக்கிற ?" என்று வினவினான்..

"நீ ஒண்ணும் எனக்கு ரெஸ்பெக்ட் குடுக்க வேண்டாம்..நீ நீயாகவே இரு " என்றான்..

' அப்போ நான் சொன்னது தான் கேட்கணும் சொன்னார் இப்போ நீ நீயாகவே இருன்னு சொல்றாரு ? இவர் பேச்சு கேட்டு நான் தான் மெண்டல் ஆகிட்டேனா? ' அவன் அமர சொல்லியும் அதை செய்யாது சிந்தனையில் மூழ்கியவளை,

அவள் மனதில் ஓடிய எண்ணங்களை அவன் அறியாமல், அவளை நெருங்கி, அவன் நெற்றியில் சுண்டிவிட்டான்.

"ஆவ்…!"

வலித்த இடத்தை தடவிக் கொண்டு, அவனைப் பார்த்தவளின் விழிகள் அகல , அவன் விழிகளில் கோபம் திரண்டது..

அவனின் மஞ்சள் நிற விழிகளில், பழுப்பு நிற கருமணி சுருங்கி விரிந்தது.

"அர்ஜுன்… உங்க கண்?" அவனின் நிறம் மாறிய சிவந்த தீ விழிகளைக் கண்டு வாயை மூடிக்கொண்டாள்..

" நீ பேசுற பேச்சுலதான் ரெஸ்பெக்ட் கொடுக்கணும் மீரா.." அழுத்தமாக அவள் பெயரை உச்சரித்து சொன்னான்..

" அதை விடு , இப்போ மேட்டருக்கு வருவோம்.." என்றவன் நாற்காலியில் அமர்ந்து கொண்டான்..

" நீ இருக்குற ரூம் என்னோடது இல்ல..சோ மாடில பிஃத் ஆவது என்னோட ரூம் இருக்கு அங்க ஸ்டே பண்ணிக்க.. நான் வீட்டுல அதிகமா ஸ்டே பண்ண மாட்டேன்.. வெளியே கம்பெனியோட என்னோட ஃபார்ம் ஹவுஸ் இருக்கு சோ அங்க தான் தங்கிப்பேன்..உன் இஷ்டம் போல இங்க இருக்கலாம், உனக்கு விருப்பம்னு ஒண்ணு இருந்தால் என் கம்பெனிக்கு வொர்க் பண்ண வரலாம்.. இன்னொன்னு நீ வெளில எங்கேயும் போவதாக இருந்தால் பர்ஸ்ட் எனக்கு இன்பார்ம் பண்ணிடு.. அப்புறம் நீ காணாம போய் தேடிட்டு இருக்குற வேலை எல்லாம் என்னோட டைம் தான் வேஸ்ட் ஆகும்..என் ரூம் எப்படி இருக்குமோ அதே போல நீட் ஆ.. இருக்கணும் வேற ம்ம்.. நீ ஏதாவது கேட்கணும்னா கேளு ? " என்றானே பார்க்கலாம்..

அவன் கூறியவற்றை கேட்டு விக்கித்து போய் நின்றாள் பேதை.. இதற்கு இவன் இவளை திருமணம் செய்யாமலே இருந்து இருக்கலாம்..

பார்த்தவுடன் பதிந்து போன இவன் முகம் , வசீகர தோற்றமும் ஆழமாய் பதிந்து விட எதிர்காலத்தை பற்றி எண்ணாதவள் அவனை பார்த்ததில் இருந்து அவனுடன் வாழ ஆசைப்பட்ட பெண்ணிற்கு அவனே பரீட்சை வைத்துவிட்டான்..

அவளின் விழிகளில் இருந்து ஒரு துளி கண்ணீரும் வரவில்லை.. ஆனால், அவள் கண்களின் கீழ் இமைகள் சிவந்து தடித்திருந்தன.. கண்களில் நீராய் வெளிவர முடியாமல், சுவாசத்தில் மட்டும் வலியாக கரைந்து அவள் விழிகள் அவனை வெறித்தன.. அழுத்தம் மனதில் அத்தனை அழுத்தம் ஒரு பெண் எதிர்பார்க்கா விட்டாலும், அவளுக்கும் ஆசைகள் இருக்கிறது என்பதை புரிந்து கொள்ள தவறி விட்டான்..

அவன் சொன்ன வார்த்தைகள் அவளின் உள்ளம் முழுவதும் எரிக்கச் செய்தன..அவன் தாலி கட்டியவளிடம் காதல் கொள்ளவும், வாழ்க்கை வாழவும் ஆசை இல்லை.. அதற்காகத்தான் அவளிடம் இதை சொல்லுகிறான்.. ஆனால், இதை கேட்டவள் என்ன செய்யப் போகிறாள்?

" அமைதியா இருக்கீயே? கேள்வி கேட்க எதுவும் இல்லையா? " இடது கையில் இருக்கும் விலையுயர்ந்த கைக்கடிகாரத்தை திருப்பிக் கொண்டு கேட்டான்.. ஆனால் ஒன்று அவளை அவன் நிமிர்ந்து பார்க்கவில்லை..

அவள் அவனைப் பார்த்தாள். அவன் பார்வையைத் தவிர்த்தான்..

" என் இஷ்டப்படி கிச்சன்ல குக் பண்ண முடியுமா ? " என்று அதை மட்டும் கேட்டாள்..

" தட்ஸ் யுவர் விஷ்" என்றான்..

" என் டிரஸ் பேக் உங்க ரூம்ல தானே"

" ம்ம்.." கதவை திறந்து கொண்டு வெளியேறி விட்டாள்..

போகும் மனைவியின் கோபம் புரிந்தாலும் சிலநாட்களுக்கு அவனையே தயார் படுத்திக் கொள்ள அவகாசம் தேவைப்பட்டது..

" ஊஃப்" இதழ் குவித்து மூச்சை வெளியேற்றினான்..

" ஐ நீட் அ ஃப்யூ டேஸ் டூ அக்செப்ட் யூ.." திருமணம் முடிந்து அவளுடன் வாழ்க்கைக்குள் நுழைய நாட்கள் தேவைப்பட்டது..

இவனின் எண்ணமே மீராவை புரிந்து கொண்டு காதலித்து அடுத்து கட்டத்திற்கு நகர்வது தான்.. எல்லாவற்றுக்கும் சோதனைகள் இடையில் நுழைந்தால் அதில் வென்று தானே வாழ்க்கை நோக்கி செல்ல முடியும்..சில இடறுகள் இவன் வாழ்க்கையையும் புரட்டி போடலாம்..

விறுவிறுவென நடந்து மாடி நோக்கி ஏறிக் கொண்டு இருக்கும் மகளின் பின்னால் விக்டரும் கீதாவும் ஓடினர்..

" சுஜி மா இருடா " கீதா அவள் பின்னே ஓடினார்..

பின்னால் தாயின் குரல் கேட்டதும், தன் நடையின் வேகத்தை குறைத்து , திரும்பிப் பார்த்தாள்..

" சுஜி உன்னோட முகத்துல இருந்த மேக்கப் ஆ.. க்ளீன் பண்ணிடீயா? " அவள் கன்னத்தில் கைவைத்து கேட்டார்..

கண்மூடி ஆழ்ந்த மூச்சை வெளியிட்டு " அவருக்கு மேக்கப் போடுறது பிடிக்காதாம், அதான் க்ளீன் பண்ணிட்டேன்.." என்றாள்..

திருமணமும் முடிந்து விட்டது..இனி தன் கணவன் வீடுதான் அவளுக்கு புகுந்த வீடு..அவர்களை இன்றுடன் பிரிந்து சென்றுவிடுவார்கள்..

தொண்டை விக்கிக் கொண்டு வந்தது..கணவன் பேசும் போது இல்லாத அழுத்தம் தாய் , தந்தையை பார்க்கும் போது தொண்டை நீர் இல்லாமல் அடைத்தது போல இருந்தது..

" சரி மா..மாப்ள சொல்றதை கேளு சுஜி.. எடுத்தெறிந்து பேசாத சரியா..நம்ம வீட்டுக்கு எப்போ வேணும்னாலும் நீ வரலாம் போகலாம்..ஆனா இங்க பார்த்து சூதனமா இருந்துக்கோடா.." மகளை பிரியப்போகிறோம் என்று நினைத்தாலும் அவள் முன் அழவே கூடாது என வைராக்கியமாக இருந்தார் அவர்..

விக்டர் மனைவியின் தோளை தட்டிக் கொடுத்தார்..தன் மனநிலை புரிந்து ஆதரவாக இருக்கும் கணவரை பார்த்து புன்னகைத்தார்..அவர் கண்களில் எப்போதும் அவருக்கான நேசம் சலிக்காமல் இருக்கும்..

விக்டர் மகளை அணைத்துக் கொண்டார்.." எதுவாக இருந்தாலும் டாடி கால் பண்ணு டா.. உனக்கு நானும் அம்மாவும் இருக்கோம்..மாப்ள என்ன சொல்றாரோ எல்லாம் உன் நல்லதுக்கு தான் சுஜி.. வீட்டுக்கு போனதும் பேசுறோம் டா.." மகளின் நெற்றியில் ஆத்மார்த்தமாக முத்தமிட்டு விலக நினைத்தவரின், கரத்தை பிடித்துக் கொண்டாள்..

" டாடி " அவள் குரல் உடைந்து வெளி வந்தது.." இங்க பாரு மா அழக்கூடாது.." சிறு துளியாக வெளிவர துடித்த கண்ணீரை துடைத்து விட்டார்..


" மார்னிங் எர்லியா எந்திருச்சுட்ட இப்ப போய் ரெஸ்ட் எடுடா..நாங்க நைட் போலத்தான் கிளம்புவோம்..போ மா " அவள் தலையை தடவி அறைக்கு அனுப்பி வைத்தார்..
 
Top