பகுதி - 17
மனதின் நேசம் சுற்றிக் இருக்கும் எல்லோரையும் நேசிக்கத் தூண்டும். மதுமிதா நல்ல மருமகளாக வீட்டில் எல்லோர் மனதிலும் இடம் பிடித்தாள். இரண்டாம் நாள் அவளை அவரே, பள்ளியில் கொண்டு போய் விடுவதாகக் கூறினார்ப் பாலமுருகன்.
“உங்களுக்கு எதுக்கு மாமா சிரமம், நான் போய்க் கொள்வேன்” என்றாள் மதுமிதா.
"இதிலென்ன சிரமம் இருக்கும் மது… நீ எதுவும் பேசாமல் கிளம்பும்மா" என்றார். தன் மாமனாரின் அன்பில் நெகிழ்ந்தவள் சரியெனத் தலையை ஆட்டித் தயாராகச் சென்றாள் மதுமிதா.
கல்லூரிக்குத் தயாராகிக் கொண்டிருந்த மித்ராவிற்கு.. இன்றைக்கு என்ன நடக்குமோ என்ற பயம் மனதில்… எவ்வளவு தான் தைரியத்தை மனதில் நிரப்பிக் கொண்டு நின்றாலும் அவனைக் கண்டதும் இருக்கும் இடம் தெரியாமல் மறைந்துவிடுகிறது அவள் தைரியம். மகன் உறக்கத்தில் இருந்து விழித்து விடாமல் இருக்க , முழுக் கவனத்துடன் ஓசையெழுப்பாமல் தயாராகினாள்.
அவளுக்குச் சிரமம் வைக்காமல்…அவளுடைய கவலையைப் போக்கினான் தருண்…
"மாமா, எனக்குக் கொஞ்சம் வேலை இருக்கிறது.. இன்றைக்கு மதுமிதாவுடன், மித்ராவையும் நீங்களே கொண்டு போய் விட்டு விடுங்கள்" என்றான்.
தருணின் செயலில் நிம்மதி உண்டான போதும் மனதின் ஓரத்தில் ஏமாற்றம் மையம் கொண்டது அவளுக்கு. தருணின் மனதிலோ... இன்னும் உறக்கத்தில் இருந்து எழுந்து கொள்ளாமல் இருக்கும் வேதாந்தத் மட்டுமே, பிள்ளை விழித்ததும் அன்னையைத் தான் தேடுவான். அப்போது அவள் இருக்க மாட்டாள். அந்நேரத்தில் தானும் இல்லை என்றால், அவனைச் சமாளிப்பது கஷ்டம் என்று உணர்ந்து இருந்தான்… இதை அவள் அறியவில்லை…
ஒரு தந்தையாக முழுவதும் மாறி இருந்தான் தருண்.
தருணுடன் கல்லூரிக்குப் போகவில்லை என்பதே, மனதில் நிம்மதியைத் தந்தது மித்ராவிற்கு.
மதுமிதாவைப் பள்ளியில் விட்டுவிட்டு நேராகப் பாலமுருகன் மித்ராவையும், அவள் கல்லூரியில் விட்டார். போகும் வழியில் அவளிடம் "உனக்குப் படிக்கப் பிடிச்சிருக்கா மித்து" என்று பாலமுருகன் கேட்டார்.
"இப்போது தான் வாழ்க்கையில நம்பிக்கை வந்து இருக்குப்பா, இனி எல்லாம் நல்லதாக மாறும் என்ற தைரியமும் மனதில் இருக்கு, கண்டிப்பாக உங்கள் நம்பிக்கை நான் நல்லவிதமா இந்தத் தடவைக் காப்பாற்றுவேன், எனக்கு இன்னொரு வாய்ப்பு நீங்கள் கொடுத்து இருக்கீங்க” என்றாள் மித்ரா.
"உனக்கான வாய்ப்பு என்று நீ ஏன் நினைக்கிற, இதுன்னுடைய வாழ்க்கை மித்து. உனக்கு என்ன விருப்பமோ அதுவே செய். நீ லவ் பண்ணிக் கல்யாணம் பண்ணினதைத் தப்பு என்று நான் சொல்லவில்லை. நீ கல்யாணம் செய்த வயது தான் தப்புன்னு சொல்ல வரேன்.
எல்லாத்துக்குமே ஒரு வரைமுறை இருக்கும்மா, , திருமணம் செய்வதற்கான வயசு இருக்கு நீ கல்யாணம் பண்ணின வயது திருமணத்துக்கான வயதே கிடையாது. அது மட்டுமில்லை ஒரு பொண்ணோட வாழ்க்கையில் கல்யாணம் எவ்வளவு முக்கியமோ, அதைவிட ரொம்ப முக்கியம் அவளுடைய படிப்பும், அவளுக்கான ஒரு வேலையும் என்பதை நீ உணரணும்" என்றார்ப் பாலமுருகன்.
"ஒர் ஆண் படிச்சானா அவனுடைய குடும்பம் நல்லா இருக்கும். இதுவே ஒரு பெண் படித்தாள் என்றால் ஒரு தலைமுறையே நல்லா இருக்கும் என்பது பெரியவங்க வார்த்தை. அதனால் தான் பெண்களுக்குக் கல்வி முக்கியம் என்று சொல்லறாங்க" என்றார்ப் பாலமுருகன்.
தந்தைக்குத் தன் மேல் கோபம் இல்லை, வருத்தம் மட்டுமே இருந்தது என்பதை உணர்ந்தாள் மித்ரா. வீட்டில் இருக்கும் அனைவரும் தன்னுடைய தவறைத் திருத்துவதற்கு வாய்ப்பளித்தது, அவளுக்கு மனதில் ஓரம் நிம்மதியைத் தந்தது. ஆனால் மனதில் ஓரத்தில் செய்தத் தவறுகளின் வேதனை அவளைக் குற்றவுணர்வில் தள்ளியது.
அவள் இங்கு இருக்கும் பொழுதுக் காதல் என்று ஒரு பார்வைக் கூடத் தன்னைப் பார்த்திராதத் தருணுக்கு, இப்பொழுதுத்தன் மேல் வந்திருப்பது, என்ன என்ற கேள்வி அவளைக் குடைந்து கொண்டிருந்தது. தன் மேல் இருக்கும் பரிதாபமா? இல்லை தியாக மனப்பான்மையா? என்ற கேள்வி அவளைத் துரத்திக் கொண்டிருந்தது.
மகளைக் கல்லூரியில் விட்டு, வீட்டிற்கு வந்தார் பாலமுருகன். அங்கே வீட்டில் தருண் வேதாந்தைத் தன்னோடு கூட்டிச் செல்வதற்குத் தயார்ப்படுத்திக் கொண்டிருந்தான். இதைப் பார்த்து அதிர்ச்செடைந்த பாலமுருகன் "எங்கடா அவனைக் கூட்டிட்டுப் போற" என்று கேட்டார்.
"வீட்டிலேயே இருக்கான் மாமா, அதனால் தான் கொஞ்சம் வெளியில் கூட்டிட்டுப் போறேன்" என்றான்.
"ஆபீஸ் போக வேண்டாமாடா உனக்கு" என்றார் உரிமையோடு மருமகனிடம்.
"அப்புறம்... போகாமல்... வேதாந்தையும் அங்கதான் கூட்டிட்டுப் போகப் போறேன்" என்றவன், அவரிடம் வேறு எதுவும் சொல்லவில்லை.
வேதாந்திற்குத் தேவையான அனைத்தையும் காரில் ஏற்கனவே வைத்திருந்தான் தருண். அவன் செயல் எதுவும் புரியாமல் பானுமதியைப் பார்த்தப் பாலமுருகன் 'என்ன இதெல்லாம்' என்று சைகையில் கேட்டார்.
"எனக்கும் புரியல" என்றாள் பானுமதி.
அவன் என்ன நினைக்கிறான்... என்ன செய்யறான் என்று எதுவும் தெரியவில்லை, எதிலும் கலந்து கொள்ளாமல் தைக்கும் வேலையைப் பார்த்துக்கொண்டிருந்தார் ராதிகா.
கணவன் இறந்த பிறகு வாழ்க்கையில் எந்த நாட்டமும் இல்லாமல் ஓடிந்துப் போன நேரத்தில்,தையற்கலைக் கற்றுக்கொள்ளச் சேர்த்திவிட்டார்ப் பாலமுருகன். அதுவே ராதிகாவிற்குப் பிடித்ததாக இருக்கவும் இப்போ வரைக்கும் அதைத் தொடர்ந்து கொண்டிருக்கிறார். வீட்டில் உள்ள அனைவருக்கும் ராதிகாவே துணிகளை அனைத்தும் தைத்துக் கொடுப்பார்.
மித்ராவிற்கும் மதுமிதாவிற்கும் வேண்டிய ஆடைகளை அவர் தைத்துக் கொண்டிருந்தார். அதனால் பாலமுருகனும் பானுமதியும் பேசிவதெல்லாம் அவருக்குக் கேட்கவில்லை. தன் மகன் என்ன நினைக்கிறான் என்பது ஓரளவிற்கு யூகித்து வைத்திருந்த ராதிகாவிற்கு, அவனின் எண்ணங்களும் ஆசையும் கண்டுக்கொண்டதால், அவன் காதலுக்கு எந்த எதிர்ப்பும் இல்லை.
அவருக்குப் புரியும் மித்ராவின் வலியும், வேதனையும் அதனால் தன் மகன் செய்வது அவருக்குப் பிடித்தும் இருந்தது. மனதினோரம் தன் ஆசை அண்ணனின் மகள், தன் மருமகளாக வருவதில் அவருக்கு எந்தவிதத் தடையும் இல்லை.
நாட்கள் இப்படியே செல்ல மதுமிதா, தன் பள்ளியில் சிறந்த ஆசிரியராக வலம் வரத் தொடங்கினாள் அங்கே இருக்கும் மாணவர்களுக்கு நல்ல பாடங்களை மட்டுமல்லாது நல்ல ஒழுக்கங்களையும் படிப்பித்துக் கொண்டிருந்தாள்.
அவளை எல்லா மாணவர்களுக்கும் பிடிக்கும் டீச்சர் ஆக உருவாக்கிக் கொண்டிருந்தாள் மதுமிதா. எல்லாம் மாணவர்களும் நல்லவிதமாக இருந்த போது சில கோளாறுகளும் அங்கே இருக்கத்தான் செய்தது. அவர்கள் தலைவலியை அவளுக்கு உண்டாக்கினர்.
அந்த மாணவர்களைச் சரி செய்ய வேண்டும் என்ற எண்ணம், மனதினோரம் இருந்தபோதும் கட்டுக்கடங்காத காளைகளாக 15 மற்றும் 16 வயதில் இருக்கும் பிள்ளைகளைத் திருத்துவது என்பது கடினமான வேலையாகவே மதுமிதாவிற்குத் தோன்றியது. அதெல்லாம் கடந்து வரப் பழகிக்கொண்டாள்.
மித்ராக் கல்லூரியிலும். மதுமிதாத் தன் பள்ளியிலும் தங்கள் வேலையை அழகாகத் திறன் படச் செய்து வந்தனர். மித்ராப் படிப்பதில் சுட்டியாக இருந்தாள். அதனால் அவளுக்குப் படிப்பது சிரமமாக இருக்கவில்லை. மதுமிதா, எந்த வேலையை எடுத்தாலும் அதைத் திறன் படம் செய்யும் திறமை உள்ளதால், அவளும் தன் வேலையைச் செய்து கொண்டிருந்தாள். நாட்கள் அதன்போக்கில் போய்க்கொண்டிருக்கும் பொழுது, தருண் தன் பாதையில் நேர்த்தியாகப் பயணித்துக் கொண்டிருப்பதைப் பானுமதி மட்டுமே உணர்ந்து இருந்தார்.
கதிர்வேந்தனோ தாயிடமும் மட்டுமே அலைபேசியில் பேசிக் கொண்டிருந்தான். அவனுடைய வேலை இன்னும் இரண்டு நாட்களில் முடிந்து வீடு திரும்புவதாக அறிவித்திருந்தான்.
இதெதுவும் தெரியாத மதுமிதா, தன் கணவன் தன்னிடம் காட்டுப் பாராமுகத்தில் அவன் காதலை எண்ணி ஏங்கித் தவித்தாள். அவளுடைய இந்தத் தவிப்பினை அருகில் இருந்து பார்க்க அவள் கணவன் இல்லை.
தன் வேலை முடிந்தது வீட்டிற்கு வந்த கதிர்வேந்தனை அமைதியான வீடே வரவேற்றது.
யாருமில்லாமல் இருப்பதைக் கண்டவன் எதுவும் சொல்லாமல் அமைதியாக வந்து சிறிது நேரம் சோபாவில் அமர்ந்தான். சமையலறையில் இருந்து வேலை முடித்துக் கொண்டு வந்த பானுமதியின் கண்ணில் கதிர்வேந்தன் பட்டான்.
"எப்படா வந்தாய், கூப்பிட்டு இருக்கலாம் இல்லையா?" என்றபடி அவன் அருகில் வந்தவர் அவன் சோர்ந்துப் போன முகத்தைப் பார்த்தார்.
"என்ன டா, உடம்புக்கு முடியலையா?" என்று அன்பாகக் கேட்கவும் ...
"ரொம்ப டயர்டா இருக்குமா, நைட் எல்லாம் தூங்கவே இல்ல... வேலை ரொம்ப ஜாஸ்தி... எப்போது டா வேலை முடியும்... வீட்டுக்கு வரலாம்... என்று இருந்தனால்... ஓய்வு எடுக்காமல் அப்படியே நானே டிரைவ் பண்ணிட்டு வந்துட்டேன்” என்றான்.
"ம்ம நீ கைகால் முகம் கழுவிட்டு வா, சாப்பிட்டுப் பிறகு நீ போய்த் தூங்குவியாமா, எல்லாமே ரெடியாகத் தான் வா” என்றார்ப் பானுமதி.
அம்மா சொன்னதுப்போல் முகம் கழுவி வந்தவனைக் கூட்டிட்டுப் போய் உணவு அளித்தார். நீண்ட நாட்களுக்குப் பிறகு அம்மாவின் கையில் உண்ட உணவு அமிர்தமாக இருந்தது கதிர்வேந்தனுக்கு. “சரி நான் போய்த் தூங்குறேம்மா ரொம்ப டயர்டா இருக்கு” என்று தன்னறைக்குச் சென்று படுத்துக் கொண்டான். நல்ல உறக்கத்தில் இருந்தான் கதிர்வேந்தன்.
தன் வேலையை முடித்துக் கொண்டு வந்துக்கொண்டிருந்தாள் மதுமிதா. வீட்டிற்கு வரும் அவளுக்கு இரண்டு சர்ப்ரைஸ் இருந்தது.. முதலாவது தன் மாமனார் அவளுக்கு இரு சக்கர வாகனம் ஒன்றைப் பரிசளித்தார்... பள்ளிக்குப் போய் வருவதற்கு. இரண்டாவது அவள் கணவனின் வருகை… மகன் அவன் அறைக்குச் சென்ற அடுத்தப் பத்து நிமிடத்தில் வந்தார் பாலமுருகன்.
தன் மனைவியிடம் “மது வந்தாச்சா” என்று கேட்டவாறே வந்தார் பாலமுருகன்.
“இதோ வந்துட்டேன்” என்ற பதில் தந்தபடி அவர் பின்னால் வந்தாள் மதுமிதா.
“உனக்காகத் தான் வெயிட்டிங்” என்றவர் கையோடு அவளை வெளியே கூட்டி வந்தார்..
கணவனின் செயலில் என்னவாக இருக்கும் என்று அவர்களோடு பானுமதியும் வந்து பார்த்தார்.. அங்கே இரு சக்கர வாகனம் நின்று கொண்டு இருந்தது.
அதைப் பார்த்த மதுமிதா “யாருக்கு மாமா” என்றாள்.
"உனக்குத் தான் மது, தினமும் பஸ்ஸில் போய் நீ, கஷ்டப்பட வேண்டாம் என்று வாங்கினேன்” என்றார்..
அவரின் பாசத்தில் கண் கலங்கினாள் மதுமிதா.
“இதுக்கெல்லாம் அழலாமா” என்ற பாலமுருகன் “வா ஒரு ரவுண்டுப் போகலாம்” என்றார்… அவரைப் வைத்து ஒரு ரவுண்டு அடித்தவள் பானுமதியைப் பார்த்து “வாங்க அத்தை” என்றாள்…
“நானா” என்றவரை… “ நீங்களே தான்” என்று அவரையும் ஒரு ரவுண்டு அடித்து வந்தவளை முறைத்த படி நின்றாள் ராதிகா…
“உங்களுக்கு இல்லாததாம்மா.. வாங்க உங்களுக்கு மட்டும் இரண்டு ரவுண்டு” என்றாள்…
இந்தக் களேபரத்தில் கதிர் வேந்தன் வந்ததைச் சொல்ல மறந்து விட்டாள் பானுமதி.
“சரி போய்ப் ஃப்ரெஸாகி வா, நீயும் மாமாவும் கோயிலுக்குப் பொய் வண்டிக்குப் பூஜைப் பண்ணிட்டு வாங்க” என்றாள் பானுமதி.
“சரிங்க அத்தை” என்றவள் வேகமாகத் தங்கள் அறைக்கு வந்திருந்தாள்.
முகம் கழுவிட்டு வந்தவள், அங்கே உறங்கும் கணவனைக் கவனிக்காமல் வேகமாகத் தன் சாரியைக் கழட்டி வைத்தாள்..
மாற்று உடையைத் தேடி அதில் சுடிதார் ஒன்றை எடுத்தாள்.. அதன் துப்பட்டா அங்கே இருந்த பூச்சாடியைத் தள்ளிவிட, அது கீழே விழுந்ததில் உண்டான சத்தத்தில் கண் விழித்தான்.
அவன் கண் திறந்ததும் கண்டது, புடவையில்லாமல் வெறும் ரவிக்கை மற்றும் பாவாடையில் நிற்கும் மனைவியைத் தான். அவள் அழகில் மயங்கியவனுக்குப் பழைய நினைவுகள் எல்லாம் மனதில் வலம் வர, தான் கனவுக்காண்கிறேனோ என்று உரைந்து நின்றான்…
கணவனின் அசைவில் படுக்கையைப் பார்த்தவள்,’ இவர் எப்போது வந்தார், அத்தை எதுவுமே சொல்லவில்லையே’ என்று மனதில் நினைத்தவளுக்கு அப்பொழுதுத் தான் தன் நிலை உணர்ந்தது.
வேகமாக மறைவுப் பகுதிக்குச் செல்ல முயன்றவளின் காலில் பூச்சாடியில் உடைந்த பாகம் பதம் பார்த்தது.மெல்லிய கீறலில் இரத்தம் வடிய அப்படியே ஒரு நிமிடம் நின்றாள்.. அவளின் நிலை உணர்ந்தது வேந்தனுக்கு…
அவள் அருகில் வந்தவன், மெதுவாக அவளைக் கைபிடித்து அழைத்து வந்த அமர வைத்தான். அவள் காலில் இருக்கும் பீங்கான் துண்டை மெதுவாக எடுத்து விட்டு அங்கே இருக்கும் காயத்தைப் பார்த்தான்..
"சின்னக் கீறல் தான்" என்றான் அவள் விழிகளைப் பார்த்து.
என்ன பதில் சொல்ல என்று புரியாமல் கையில் இருக்கும் மாற்று உடையால் தன் மேனியை மறைத்தவளுக்குப் பயத்தில் உடல் நடுங்கியது.
அவனுக்கு அவள் மனம் புரிந்தது. தன் மனதைக் கட்டுப் படுத்தியவன், காயத்திற்கு மருத்துத் தடவியவாறே ... "ரொம்ப வலித்தால் சொல்லு டாக்டரிடம் போகலாம்” என்றான்..
“ம்ம் சரி” என்றவள் “வலிக்கவில்லை” என்று உள்ளே போன குரலில் சொன்னாள்.
சரி என்று அவளுக்குத் தனிமைக் கொடுத்து வெளியே வேகமாக வந்தான். அந்தத் தனிமை அவனுக்கானது என்று அவளிடம் கூற முடியுமா... இதே நிலை அங்கே இருந்தால் தன் கட்டுப்பாட்டில் எதுவும் இருக்காது என்று நினைத்தான்.
கணவனின் செயலில் மனதில் வலி உண்டான போதும் ... தன்னைத் தவறாக நினைத்து விடுவானே என்ற பயமே அவளைக் ஆட்டிப் படைத்தது. அவன் உள்ளே இருப்பது தனக்குத் தெரியாது என்று எப்படிப் புரிய வைப்பாள்.
மனதில் இதையே சிந்தித்துக் கொண்டே தயாராகிக் கீழே வந்தாள் மதுமிதா. அவளும் பாலமுருகனும் புதிய இரு சக்கர வாகனத்தில் கோயிலுக்குச் சென்றனர்…
இதைப் பார்த்த வேந்தனோ "என்ன பானுமதியம்மா..ஆடுபகை ..ஆட்டோட பொண்டாட்டி உறவோ” என்று கேட்டான்…
“போட உனக்கு வேற வேலை இல்லை” என்றவர் அவரோடு வேலையைப் பார்க்கச் சென்றார்…
“வர வர நீங்க என்னைக் கண்டுக்கறதே இல்லைம்மா” என்ற அவன் புலம்பலைக் கேட்டப்படி வந்தனர் மித்ரா, தருண் மற்றும் வேதாந்த்.
கதிர் வேந்தனைப் பார்த்து, “எப்போ வந்த வேந்தா? என்று கேட்டான் தருண்.
"நான் வந்து ஒரு மணி நேரம் ஆச்சு டா"… என்றான்
"வேலை எல்லாம் எப்படிப் போச்சு" என்றவன் தன் மருமகனை எடுத்துக் கொஞ்சினான்.
அதைக் கண்ணில் நீர் வரப் பார்த்த மித்ராவை அழைத்து, "எதுக்கு மித்து அழற, நடந்த எல்லாமே விதி என்று நினைத்துக்கொள், உன்னோட படிப்பில் மட்டும் கவனம் செலுத்துப்போதும்.
ரொம்ப எல்லாம் பயந்து யோசிக்கறளவுக்கு வாழ்க்கை ரொம்பக் கஷ்டம் எல்லாம் இல்லை. சுலபமாக வாழலாம். உன்னோடு நாங்க இருப்போம்" என்றான்.
சத்தமாக "அம்மா எங்களுக்கு டீ " என்றான் கதிர்வைந்தன்.
“இப்போ தானே டா, குடிச்ச” என்ற அவர் குரலுக்கு “எனக்கு இல்லை உங்க மகளுக்கும் மருமகனுக்கும் தான்” என்று அவன் எதார்த்தமாகக் கூறியதில் உள்ளர்த்தம் தருணுக்கு மட்டுமே புரிந்தது.
மித்ராவிற்கோ மின்சாரம் தாக்கியது போல அதிர்ச்சி அடைந்தாள்.
பானுமதிமோ "தருணும் வந்தாச்சா", என்று கேட்டவர் நான்கு டீக் கோப்பையோடு வந்தார்…
தன் மகளைப் பார்த்து "இன்னைக்கு க்ளாஸ் எப்படிப் போச்சு மித்து…
நான் குடுத்த டிஃபன் ஃபாக்ஸை ஜோதிக்குக் குடுத்தியா ... அவளுக்குப் பிடித்ததா" என்று அவளுக்குக் கிடைத்த புதிய தோழியிடம் இவளுக்கும் நெருக்கம் வர, அவர் பக்கம் இருந்து பானுமதியும் உதவினார் …
இப்படித் தனிமையில் இருந்தால், தன்னம்பிக்கை ஆட்டம் காணும் என்பதை உணராதவரா, பானுமதி…
"குடுத்தேன் அம்மா.. எனக்கு அவள் மட்டும் தான் ஒரே தோழி இப்போதைக்கு... அவள் மட்டுமே போதும் எனக்கும்" என்று தன் தோழியைப் பற்றிக் கூறினாள்….
இதெதிலும் பங்கேற்காமல் தருண் மற்றும் கதிர் வேந்தன் தங்கள் தொழில் பற்றிய உரையாடல் இருந்தது. இவ்வளவு நேரமும் வேதாந்த், தருணை விட்டு விலாகாமல் இருந்தான்…
அவனுக்குக் குடிக்கப் பால் எடுத்து வந்தவர் அவனை வாங்கியதும் அழ ஆரம்பித்தான் வேதாந்த் ... தருணை விட்டு இம்மியளவும் பிரிய மனமில்லாமல் அழுதான் குழந்தை…
மித்ராவிவோ பதட்டம் அடைந்தாள்... தன் தாயும் அண்ணனும் தன்னைத் தவறாக நினைத்து விடுவார்களோ என்ற பயம் மனதில் உண்டானது… வேகமாக எழுந்தவள் தருணிடம் இருந்து பிள்ளையைப் பிடுங்காதக்குறையாக வாங்கியவள், சடச்சட என்று தன் அறைக்குச் சென்று கதவை அடைத்தாள்.
தன் மகளின் செயலில் இவளுக்கு என்ன ஆச்சு என்று எண்ணம் மனதில் தோன்றியதும் தருணைதான் பார்த்தனர் அம்மா, மகன் இருவரும்…
எதுவுமே நடக்காதது போல் வேந்தனைப் பார்த்துக் கண் சிமிட்டியவன்.. அத்தையிடம் டீக் கோப்பையைக் கொடுத்து விட்டு, தன் அறைக்கு நிதானமாகச் சென்றான்…
தன் மச்சானின் செயலின் அர்த்தம் புரிந்ததும்…இனி என்ன நடக்கும் என்றுப் புரிந்தது கதிர்வேந்தனுக்கு.
கவலையோடு நின்றிருந்த தாயைப் பார்த்தவன் “எல்லாத்துக்கும் கவலைப் படத் தொடங்கினால், கவலைப்பட மட்டுமே உங்களுக்கு நேரம் பத்தாது… ரொம்ப நாட்களுக்குப் பிறகு மகன் வந்து இருக்கான் எதாவது ருசியாகச் சமைச்சுத் தருவோம் என்ற எண்ணம் இல்லை... புருஷன் ரொம்ப நாட்களுக்குப் பிறகு வந்த இருக்கான் என்ற அக்கறை, உங்கள் மருமகளுக்கும் இல்லை … நல்ல மாமி, நல்ல மருமகள். சரியாக ஜோடிச் சேர்ந்து இருக்கீங்க" என்றான் கதிர்வேந்தன்.
அவள் மாமனாரிடம் நல்ல பிள்ளையெனப் பெயர் எடுத்துட்டுச் சுத்தறா.. நீங்க உங்க மாமியார் பவர் என்ன என்று காட்டுங்கள், அப்போது தான் அவளுக்கு நம்ம மேல் பயம் வரும்” என்றான்…
“ரொம்ப நல்ல எண்ணம் தான்டா... எப்படிப் பேசறான் பாரேன்... பாவம் டா அவள்! கஷ்டப்பட்டு வேலைக்குப் பஸ்ஸில் தொங்கிட்டே வேலைக்குப் போறா என்று, உங்க அப்பா வாங்கிக் குடுத்தாரு வண்டியை”..
“அதுல ஒவ்வொருத்தரையாகக் கோயிலுக்குக் கூட்டிப் போறேன் சொல்லி, இன்றைக்கு அப்பாவைக் கூட்டிப் போயி இருக்கா.. நாளைக்கு ராதிகா, அப்பறம் நான், இப்படிச் சொல்லி இருக்கா”...
இதெல்லாம் நீபண்ணனும்டா… உன் அப்பா பண்ணறாறரு” என்று மகனைத் திட்டினார்…
“என்னடா, கதிர் வேந்தா உன் நிலையை இப்படி ஆகிருச்சு, உனக்கென்று யாருமே இல்லையா" என்று கேலியாகக் கூறியவன், எனக்கு வேலை இருக்கிறது, நான் போறேன்” என்று தன் அறைக்குச் சென்றான்…
கோயிலுக்குச் சென்றவள் வீடு திரும்பினாள். கோயில் பிரசாதத்தைக் கணவனுக்குக் கொடுக்கச் சென்றவள் கண் கலங்கக் காரணமாக இருப்போனோ அவளின் வேந்தன்…
தொடரும்…